முதல் சந்திப்பு - மணிவிழாக் காணும் சிவராசா கருணாகரன் - முருகபூபதி -

 யாழ். தீம்புனல் வார இதழில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நான் எழுதி வருகின்றேனென்றால், அதற்கு வித்திட்டவர்  யார்..? என்பது பற்றி சொல்லியவாறே  இந்த முதல் சந்திப்பு தொடருக்குள் இம்முறை வருகின்றேன். அவரை நான் முதல் முதலில் அவரது எழுத்தின் ஊடாகவே தெரிந்துகொண்டேன்.   நான் வாசிக்கும்  எவரதும்  இலக்கியப் படைப்பு என்னை கவர்ந்துவிட்டால், அதனை எழுதியவரைப்பற்றி மேலதிக தகவல் அறிவதும், தேடிச்செல்வதும் எனது இயல்பு. அவ்வாறுதான் கிளிநொச்சியில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான சிவராசா கருணாகரன் எனக்கு முதலில் அறிமுகமானார். இவர் இலங்கையில் மட்டுமன்றி தமிழகம் மற்றும் தமிழர் புகலிட நாடுகளிலும் இலக்கிய வாசகர்களின் கவனிப்பிற்குள்ளானவர்.  கவிஞராகவே முன்னர் அறியப்பட்டவர். வெளிச்சம் இதழின் ஆசிரியராகவுமிருந்தவர். பத்தி எழுத்தாளர் - ஊடகவியலாளர் - பதிப்பாளர் - இலக்கிய இயக்கச் செயற்பாட்டாளர். கலை , இலக்கிய நண்பர்களின் விசுவாசத்திற்குமுரியவர்.  எனக்கு அவர்  மிகவும் நெருக்கமானதற்கு இக்காரணங்களே போதும்  கருணாகரன் இலக்கியத்தின் ஊடாக எனக்கு அறிமுகமானது 2008 இல்தான்.

முல்லை அமுதன் தொகுத்து வெளியிட்ட இலக்கியப்பூக்கள் தொகுப்பில்,  மறைந்த செம்பியன் செல்வனைப் பற்றி கருணாகரன் எழுதியிருந்த கட்டுரை வித்தியாசமானது. வழக்கமான நினைவுப் பதிவுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு புதியகோணத்தில் எழுதப்பட்டிருந்தது. எனக்கு அந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்தமான அக்கட்டுரையை எழுதிய கருணாகரன் யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்று ஒரு நாள்  லண்டனுக்கு தொலைபேசி தொடர்பெடுத்து முல்லை அமுதனிடம் விசாரித்தேன். கருணாகரன் வன்னியிலிருப்பதாக தகவல் கிடைத்தது. 2009 இல்  நான் வதியும்  மெல்பனில் நடந்த எழுத்தாளர் விழாவில் இலக்கியப்பூக்கள்  அறிமுகப்படுத்தப்பட்டது. பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அறிமுகப்படுத்தினார். இவ்விழாவில் கலந்துகொண்ட ஜெயமோகன்,  தமிழகம் திரும்பியதும் எழுதிய புல்வெளிதேசம் நூலிலும் இந்தத் தகவலை பதிவுசெய்திருந்தார்.

 இன்றைய ஈழத்து இலக்கியப் பரப்பில் ஒரு நடமாடும் வரலாற்று ஆவணமாகத் திகழ்பவர் எழுத்தாளர் முருகபூபதி.  சொல்லப் போனால் கிட்டத்தட்ட ஐம்பது  வருட கால ஈழத்து இலக்கிய மரபின் ஒரே சாட்சியமாக முருகபூபதி விளங்குகின்றார் என்றால் மிகையில்லை.  வாராந்தம் அவர் பகிரும் இலக்கிய மடல்கள், சக எழுத்தாளர்கள், அரசியல் கொண்டோர் குறித்து அவரின் பகிர்வுகள் எல்லாமே முன் சொன்னதை நியாயப்படுத்தும்.  முருகபூபதியின் படைப்புகளும் ஒரு குறுகிய வட்டத்தோடு நின்று விடவில்லை. அதனால்தான் அவை கட்டுரை, நாவல், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், புனைவு சாரா இலக்கியம் என்பவற்றோடு, சிறுகதைகளாகவும் பன்முகப்பட்டு நிற்கின்றன. தமிழக, ஈழத்து இலக்கியவாதிகளின் நட்பையும், பரந்துபட்ட வாசகர் வட்டத்தையும் சம்பாதித்து வைத்திருக்கும் முருகபூபதி, இரண்டு தடவைகள் இலங்கையின் தேசிய சாகித்திய விருது பெற்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டவர்.

 சென்ற ஞாயிற்றுக்கிழமை 6-11-2022 அன்று ரொறன்ரோவில் உள்ள சீனா கலாச்சார மண்டபத்தில் கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா அரங்கம் நிறைந்த விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வந்த சிறந்த பேச்சாளரான திரு. கலாநிதி கலியமூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கோவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகப் பிற்போடப் பட்டிருந்த இந்தவிழா இம்முறை மிகச் சிறப்பாக நடந்தேறியது.

  வவுனியா மகாவித்தியாலயத்தில் என் பால்ய பருவம் கழிந்தபோது ,ஏழாம் வகுப்பில் என்னுடன் படித்த மாணவர்களில் என்னுடன் நன்கு பழகியவர்களை முகநூல் மீண்டும் என்னுடன் இணைத்துள்ளது. விக்கி (எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஸ்) , திருநாவுக்கரசன் (Thirunavukkarasan Sittampalam) , சண்முகராஜா இவர்களெல்லாரும் இன்று என்னுடன் முகநூலிலுள்ளார்கள். இந்நிலையில் நேற்று திருநாவுக்கரசன் பதிந்திருந்த அஞ்சலிச் செய்தியொன்று என் கவனத்தைக் கவர்ந்தது. அது ஏழாம் வகுப்பில் எம்முடன் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்த நண்பர் மெளலியின் மறைவைப் பற்றியது.  மெளலீஸ்வரன் என்பது முழுப்பெயராக இருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன்.  ஶ்ரீமுருகன் திரையரங்குக்கு அருகிலிருந்த வீதியில் இவரது இல்லமிருந்தது நினைவுக்கு வருகின்றது. சில சமயங்களில் இவருடன் ஶ்ரீ மூருகன் திரையரங்கில் பின் பகுதியில் எரிந்த நிலையில் எறியப்பட்டிருக்கும் திரைப்பட ஃபிலிம் சுருளின் துண்டுகளைத் தேடித்திரிந்ததும் நினைவுக்கு வருகின்றது.

 ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ பிரதி 17 நாவல் பிரதிகளை தன் விமர்சனப் சுழற்சிக்குள் அசைத்துக்காட்டியிருக்கிறது. தேவகாந்தன் பத்து நாவல்களை வெளிக்கொணர்ந்திருப்பவர். 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'கனவுச்சிறை', 'கலிங்கு' முதலான நாவல்கள் அவரது நாவல் ஆக்கும் ஆற்றலை பறைசாற்றுகின்றன. அவரது தேடல் அவரது புனைவுத்திறனை ஆழ அகலப்படுத்தியிருக்கிறது. எனவே தான் அவரே நேர்காணலொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பேச்செல்லாம் நச்சுப் பாவை தொடர் துப்பறியும் நவீனமாக இருந்த நிலையில் மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, கல்கி, அகிலன் போன்றோரது வாசிப்புடன் எழுத வந்தவன் நான். எனது எழுத்தும் போக்கும், நோக்கமும் அப்போது அப்படித்தான் இருந்திருக்கும். இருந்திருக்க முடியும்.  ஆனால் நான் மாறினேன். நீண்டதும் தீவிர மானதுமான வாசிப்புகளின் மூலம் மாறினேன். புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும், கு.அழகிரிசாமியும், ஜானகிராமனும் அறிமுகமாகிறபோது அந்த மாற்றம் தன்னை என்னில் ஊன்றத் தொடங்குகிறது. இதன் அர்த்தம் வாசிப்பை என் தேர்விலிருந்தல்ல, எனக்குள்ள வாய்ப்பிலிருந்தே நான் அடைந்து கொண்டிருந்தேன் என்பதே.  பின்னர்தான் தெரிந்தது வாசக உலகம் பல தளங்களை தனித்தனிக் கோளங்களாய்க் கொண்டிருக்கிறதென்பது. அப்போது என் குறி வெகுஜன வாசகப் பரப்பிலிருந்து தீவிர வாசகப் பரப்பாக மாறுகிறது. அதுவே எனது படைப்புகளின் இலக்காகவும் பின்னர் பரிமாணம் பெறுகிறது.  அப்போதும் விமர்சன உலக அக்கறை என்னில் இருக்கவே செய்தது. ஏனெனில் அந்த விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன்.  என் வளர்ச்சியின் படிகள் இவை. இவையே எப்படைப்பாளியின் படிகளாகவும் இருக்கமுடியும். இல்லை, எனக்கு 'தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி' என்பதுபோல் எடுத்த எடுப்பிலேயே தீவிரமாய் எழுத வந்ததென யாராவது கூறின் அவரை நாம் புரிந்துகொள்ளலாம்”.
‘காற்று மரங்களை அசைக்கின்றது’ பிரதி 17 நாவல் பிரதிகளை தன் விமர்சனப் சுழற்சிக்குள் அசைத்துக்காட்டியிருக்கிறது. தேவகாந்தன் பத்து நாவல்களை வெளிக்கொணர்ந்திருப்பவர். 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'கனவுச்சிறை', 'கலிங்கு' முதலான நாவல்கள் அவரது நாவல் ஆக்கும் ஆற்றலை பறைசாற்றுகின்றன. அவரது தேடல் அவரது புனைவுத்திறனை ஆழ அகலப்படுத்தியிருக்கிறது. எனவே தான் அவரே நேர்காணலொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பேச்செல்லாம் நச்சுப் பாவை தொடர் துப்பறியும் நவீனமாக இருந்த நிலையில் மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, கல்கி, அகிலன் போன்றோரது வாசிப்புடன் எழுத வந்தவன் நான். எனது எழுத்தும் போக்கும், நோக்கமும் அப்போது அப்படித்தான் இருந்திருக்கும். இருந்திருக்க முடியும்.  ஆனால் நான் மாறினேன். நீண்டதும் தீவிர மானதுமான வாசிப்புகளின் மூலம் மாறினேன். புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும், கு.அழகிரிசாமியும், ஜானகிராமனும் அறிமுகமாகிறபோது அந்த மாற்றம் தன்னை என்னில் ஊன்றத் தொடங்குகிறது. இதன் அர்த்தம் வாசிப்பை என் தேர்விலிருந்தல்ல, எனக்குள்ள வாய்ப்பிலிருந்தே நான் அடைந்து கொண்டிருந்தேன் என்பதே.  பின்னர்தான் தெரிந்தது வாசக உலகம் பல தளங்களை தனித்தனிக் கோளங்களாய்க் கொண்டிருக்கிறதென்பது. அப்போது என் குறி வெகுஜன வாசகப் பரப்பிலிருந்து தீவிர வாசகப் பரப்பாக மாறுகிறது. அதுவே எனது படைப்புகளின் இலக்காகவும் பின்னர் பரிமாணம் பெறுகிறது.  அப்போதும் விமர்சன உலக அக்கறை என்னில் இருக்கவே செய்தது. ஏனெனில் அந்த விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன்.  என் வளர்ச்சியின் படிகள் இவை. இவையே எப்படைப்பாளியின் படிகளாகவும் இருக்கமுடியும். இல்லை, எனக்கு 'தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி' என்பதுபோல் எடுத்த எடுப்பிலேயே தீவிரமாய் எழுத வந்ததென யாராவது கூறின் அவரை நாம் புரிந்துகொள்ளலாம்”. புலம்பெயர்ந்தோரின் இலக்கிய முயற்சிகள் ஆரம்பித்து இற்றைக்கு ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இக்காலத்துள் ஏராளமான புனைவெழுத்துக்களும் புனைவு சாராத எழுத்துக்களும் வந்துள்ளன. இவை எல்லாவற்றிற்கும் ஆரம்பப் படிகளை இட்டவர்கள் சஞ்சிகையாளர்களே. தனிநபர்களின் ஆர்வத்தினாலும்  நண்பர் வட்டங்களின் கூட்டுமுயற்சியினாலும் ஆரம்பிக்கப்பட்ட இதழ்கள் படிப்படியாக அமைப்புகள் சார்ந்து வெளிவரக்கூடியளவுக்கு வளர்ச்சியடைந்தன
புலம்பெயர்ந்தோரின் இலக்கிய முயற்சிகள் ஆரம்பித்து இற்றைக்கு ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இக்காலத்துள் ஏராளமான புனைவெழுத்துக்களும் புனைவு சாராத எழுத்துக்களும் வந்துள்ளன. இவை எல்லாவற்றிற்கும் ஆரம்பப் படிகளை இட்டவர்கள் சஞ்சிகையாளர்களே. தனிநபர்களின் ஆர்வத்தினாலும்  நண்பர் வட்டங்களின் கூட்டுமுயற்சியினாலும் ஆரம்பிக்கப்பட்ட இதழ்கள் படிப்படியாக அமைப்புகள் சார்ந்து வெளிவரக்கூடியளவுக்கு வளர்ச்சியடைந்தன  பூக்கோள உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவாக இயற்கை அளித்த பரிசு உணர்வு. அவ்வுணர்விலும் காதல் உணர்வு சிறப்பிற்குரியது. இவ்வியற்கை அற்புதப் பிறவியாக மனிதனைப் படைத்து காதலைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அக்காதலைப் பரிமாறிக்கொள்ள மொழியையும் கொடுத்துள்ளது. இத்தகைய மொழி காலந்தோறும் மனிதப் பண்பாட்டிற்கேற்ப மாறும் இயல்பினையுடையது. இம்மொழி மாற்றத்தில், காதலர்கள் பயன்படுத்தும் சொற்களில் பாலீற்று விகுதிகள் எவ்வகையில் மாற்றம் பெற்றுள்ளன என்பதனை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பூக்கோள உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவாக இயற்கை அளித்த பரிசு உணர்வு. அவ்வுணர்விலும் காதல் உணர்வு சிறப்பிற்குரியது. இவ்வியற்கை அற்புதப் பிறவியாக மனிதனைப் படைத்து காதலைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அக்காதலைப் பரிமாறிக்கொள்ள மொழியையும் கொடுத்துள்ளது. இத்தகைய மொழி காலந்தோறும் மனிதப் பண்பாட்டிற்கேற்ப மாறும் இயல்பினையுடையது. இம்மொழி மாற்றத்தில், காதலர்கள் பயன்படுத்தும் சொற்களில் பாலீற்று விகுதிகள் எவ்வகையில் மாற்றம் பெற்றுள்ளன என்பதனை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. எழுத்தாளர் தாமரைச்செல்வியை அவர் எழுபதுகளில் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து அறிந்திருக்கின்றேன். நானும் என் பால்ய, பதின்ம வயதுக்ளிலிருந்து எழுதிக்கொண்டுவருவதால் தமிழக, இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளென்று மேய்ந்துகொண்டிருந்தேன். அவ்விதமானதொரு சூழலில் தாமரைச்செல்வியின் எழுத்துகள் அறிமுகமாகின. பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கத்தின் 1980/1981 கால இதழாசிரியர் குழுத்தலைவராகவிருந்த சமயம் வெளியான 'நுட்பம்' வருடாந்த இதழுக்கும் தாமரைச்செல்வி  அவர்கள் 'எதிர்பார்ப்புகள்' என்றொரு சிறுகதையினைத் தந்திருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கின்றார் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல், கட்டுரையென்று பன்முக இலக்கிய ஆளுமை மிக்க படைப்பாளிகளிலொருவரான தாமரைச்செல்வி ஓவியரும் கூட. ஊடகங்களில் வெளியான அவரது கதைகள் பலவற்றுக்கு அவரே ஓவியங்களும் வரைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவருடனான முகநூல் உரையாடலொன்றின்போது குறிப்பிட்டிருக்கின்றார்.
எழுத்தாளர் தாமரைச்செல்வியை அவர் எழுபதுகளில் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து அறிந்திருக்கின்றேன். நானும் என் பால்ய, பதின்ம வயதுக்ளிலிருந்து எழுதிக்கொண்டுவருவதால் தமிழக, இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளென்று மேய்ந்துகொண்டிருந்தேன். அவ்விதமானதொரு சூழலில் தாமரைச்செல்வியின் எழுத்துகள் அறிமுகமாகின. பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கத்தின் 1980/1981 கால இதழாசிரியர் குழுத்தலைவராகவிருந்த சமயம் வெளியான 'நுட்பம்' வருடாந்த இதழுக்கும் தாமரைச்செல்வி  அவர்கள் 'எதிர்பார்ப்புகள்' என்றொரு சிறுகதையினைத் தந்திருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கின்றார் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல், கட்டுரையென்று பன்முக இலக்கிய ஆளுமை மிக்க படைப்பாளிகளிலொருவரான தாமரைச்செல்வி ஓவியரும் கூட. ஊடகங்களில் வெளியான அவரது கதைகள் பலவற்றுக்கு அவரே ஓவியங்களும் வரைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவருடனான முகநூல் உரையாடலொன்றின்போது குறிப்பிட்டிருக்கின்றார்.
 - ஜீவநதி சஞ்சிகையின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ் 175இல் வெளியான கட்டுரை. -
- ஜீவநதி சஞ்சிகையின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ் 175இல் வெளியான கட்டுரை. -
 நீடித்த இயற்கை சூழல் என்பது பூஜ்ஜியம் கழிவு மேலாண்மையில் மட்டுமே சாத்தியப்படும் .
நீடித்த இயற்கை சூழல் என்பது பூஜ்ஜியம் கழிவு மேலாண்மையில் மட்டுமே சாத்தியப்படும் .
 வீட்டை அடைந்த பிறகு , தில்லை  மறுபடியும் தேனீர் அருந்தினான் . ஜெயந்திக்கும்  , பூமலருக்கும்  ரிம் கொட்டனே   போதுமாகவிருந்தது .
 வீட்டை அடைந்த பிறகு , தில்லை  மறுபடியும் தேனீர் அருந்தினான் . ஜெயந்திக்கும்  , பூமலருக்கும்  ரிம் கொட்டனே   போதுமாகவிருந்தது . 
 வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (04/11/2022) லண்டன் நேரம் இரவு 08.15இற்கு(இரவு 8.00 மணி பிரதான செய்திக்குப்பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 267 ஒலிபரப்பாகும்.

 தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக விருதுகளுக்கு அடிமையானவர்களாகத்தான் நடந்துகொள்கின்றார்கள். கன்னட எழுத்தாளரான எம்.எம். கல்பூர்கி அவரது சமய மூட நம்பிக்கைகள்  பற்றிய கருத்துகளுக்காகப் படுகொலை செய்யப்பட்டபோது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தாம் பெற்ற சாகித்திய விருதுகளைத் திருப்பிக் கொடுத்தார்கள். ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளர் கூடத் தனது விருதினைத் திருப்பிக் கொடுக்கவில்லை.  இலங்கையில் நீண்ட காலம் தமிழ் மக்கள் மீதான அடக்கு ஒடுக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த போர்ச்சூழலில் கூட ஒருவர் கூட தாம் பெற்ற சாகித்திய விருதினைத் திருப்பிக் கொடுக்கவில்லை.  எழுத்தாளர் நெல்லை க.பேரனின் குடும்பமே இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டது. அப்பொழுதும் யாரும் பெற்ற விருதினைத் திருப்பிக் கொடுக்க எண்ணவில்லை. புதியதை வாங்குவதை நிறுத்தவுமில்லை.  'மாமனிதர்'  சொக்கன் கூடத் தான் பெற்ற சாகித்திய விருதுகளைத் திருப்பிக் கொடுக்கவில்லை.  முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவைத் தொடர்ந்த ஆண்டுகளில் கூட வழக்கம்போல் விருதினை வாங்கிக்கொண்டுதானிருந்தார்கள்.  தேசிய விடுதலைப்போருக்காகக் குரல் கொடுத்துக்கொண்டு, இலங்கை அதிபரிடமிருந்து விருதுகளை தொடர்ந்தும் வாங்கிக்கொண்டுதானிருந்தார்கள்.

 பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்
 பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்  