''முற்போக்கு இலக்கிய  முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி'

எழுத்தாளர் வி.ரி.இளங்கோவன்  அவர்கள் ஐபிசி தமிழ் பத்திரிகையில் ஈழத்து இலக்கியச் சிற்பிகள் என்னும் தலைப்பில் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில், இலங்கை இலக்கியத்தில் தடம் பதித்த ஆளுமைகள் பற்றி எழுதி வருகின்றார். இதுவரை பெப்ருவரி மாத இதழில் அவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றி 'முற்போக்கு இலக்கிய  முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி' என்னும் தலைப்பில்  எழுதியிருக்கின்றார், அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அதிலெங்கும் அ.ந.க.வின் நினைவு நாள் பெப்ருவரி 14 என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால் பெப்ருவரி மாதம் அ.ந.க.வை நினைவு கூர்ந்திருப்பதும், அம்மாதத்திலேயே அவரது நினைவு தினம் வருவதும் பொருத்தமானது.

 

இளங்கோவன் அவர்கள் இன்றைய தலைமுறைக்கும், ஈழத்து இலக்கியச் சிற்பிகள் பற்றி அறிந்திராத ஏனைய தலைமுறையினருக்கும் அவர்களை நினைவு கூரும் பணியினைச் செய்து வருகின்றார் இளங்கோவன் அவர்கள். வாழ்த்துகள். இத்தொடர் முடிந்தத்தும் இவற்றைத்தொகுத்து நூலாக வெளியிடுவது மிகவும் பயனுள்ளதாகவிருக்கும். இக்கட்டுரை வெளிவந்த ஐபிசிதமிழ்  இணையத்தள முகவரி: https://epaper.ibctamil.com/100039


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்