தொடர் : தீவுக்கு ஒரு பயணம் (3 & 4) - கடல்புத்திரன் -
அத்தியாயம் மூன்று - இவாஞ்ஜிலின் கடற்கரை!காலையில் குளித்து விட்டு , நேற்றைய , மிஞ்சிய கோழிக்கறி இருந்தது . அதை அவனுக்கு பாணுடன் சாப்பிடக் கொடுத்து விட்டு , முட்டையையைப் பொரித்து சன்விச் செய்து சாப்பிடுகிறார்கள் . பூமலருக்கு சுமி பிறந்ததிலிருந்து நீரழிவு ஏற்பட்டிருக்கிறது . மாத்திரைகளை எடுப்பவள் . " கிழமையிலொரு தடவை இன்சுலின் வேறு ஏற்றிக் கொள்கிறேன் " என்கிறாள் . குட்டித் தங்கச்சியாக இருந்தவளை காலம் எப்படி மாற்றி விட்டிருக்கிறது . உதயனுக்கும் ( அண்ணர் ) , பானுவுக்கும் ( அக்கா ) ..கூட .. நீரழிவு இருக்கிறது . அவனுக்கும் , குணவதிக்கு... இன்னம் தொந்தரவு கொடுக்கவில்லை . வழக்கம் போல கராஜிலிருந்து காரை சிரமப்பட்டு எடுக்க . இட பக்கக் கண்ணாடியை மடக்கி விடுகிறான் . சுலபமாக வெளியே வர பூமலர் வீட்டைப் பூட்டி விட்டு வருகிறாள் . ஒரு தடவை, வீதியில் குறுகலான லேன் என்ற உணர்வில் கரைக்கு இறக்கி விட . தடபுடல் என ...சத்தம் , அவனையும் குலுக்க . ஏன் ஓரங்களை ... சீர்படுத்தாது விடுகிறார்கள் " என ஒரேயடியாய் பற்றிக் கொண்டு வருகிறது . பார்த்து ஓடு " என்கிறாள் பூமலர் . ரொரொன்ரோவில் இந்த குலுக்கல் இராது . ' வரி குறைப்பு ' .... என்றால் அதற்கேற்ப கஸ்டமும் கொடுக்கிறது . போக்குவரத்து அமைச்சராக ஒரு தேடல் உள்ள பொறியிலாளர் ...தெரிவாக வேண்டும் . இல்லாதது சீரழிவாகவே கிடக்கிறது .
" உன்னைச் சொல்லிக் குற்றமில்லை , என்னைச் சொல்லிக் குற்றமில்லை , காலம் செய்த கோலமடி , கடவுள் செய்த குற்றமடி ...! " . பாட வேண்டியது தான் . வேற என்ன செய்வது ? . பின்னுக்கு .. போற காட்சிகளை ஜெயந்தி பார்த்து வந்தாள் . அவளுக்கு ' தீவை நிறையப் பிடித்திருக்கிறது ! ' . முன்னால் பூமலர் இருந்தாள் . பூமலர் " இப்ப நாம் போறது இவாஞ்ஜிலின் கடற்கரை " என்றவள் . " இவள் , நம்ம ஆச்சி வீட்டுப் பிள்ளைப் போல ...ஒரு ஏழை பிரெஞ்சுப் பெண் . இவள் சிலையுடன் ஒரு அகாடியர் பார்க் கூட இங்கே எங்கையோ கிட்டத்தில் இருக்கிறது . இவளைப்பற்றி ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறது . நாடகம் , சினிமாவாக எடுக்காமல் விட்டிருக்க மாட்டார்கள் . அமைதியாக வாழ்ந்தவளில்லை . அவளுடைய ஆவி ... இங்கே , பழைய ரயில் பாதையில் எல்லாம் அலைகிறது என்று சொல்கிறார்கள் . நம்மைப் போல ...ஒரு பழி வாங்கும் பெண் ... " என்று அடுக்கடுக்காய் கூறி விட்டு சிரிக்கிறாள் . நாங்க நினைக்கிறோம் . குடியுரிமை பறிக்கிற அதிசயம் நம் நாட்டில் மட்டும் தான் நடக்கிறது என்று நினைக்கிறோம் . பதினெட்டாம் நூற்றாண்டுகளில்... (1700 களில்) இங்கே இருந்த பிரெஞ்சுஅகாடியர்களை , யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல , ...ஆனால் நாட்டை விட்டே ஆங்கிலேயர் துரத்தி விட்டிருக்கிறார்கள் . அடிப்படையில் பயம் தான் காரணம் . எந்த உதவியும் செய்யாது உர்ரென இருந்திருக்கிறார்கள் . பிரெஞ்சுக்காரர்கள் மனச்சுமையுடன் அத்திலாந்திக் கடலில் மிதந்த போது அவர்களில் ஆயிரம் பேர்கள் வரையில் ...கடலில் மாண்டும் போய் விட்டிருக்கிறார்கள் .