பதிவுகள் முகப்பு

வெளியீடும் அறிமுக உரைகளும் - பெனடிக்ற் பாலன் படைப்புகள்! - தகவல் - ஜயகரன் (தேடகம்) -

விவரங்கள்
- தகவல் - ஜயகரன் (தேடகம்) -
நிகழ்வுகள்
08 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* - தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு தடவை அழுத்தவும். -

நடேஸ்வரா பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
08 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடா,  நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் 1 – 3 - 2025 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது. மங்கள விளக்கை நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளர்களான எழுத்தாளர் குரு அரவிந்தன், ஊடகவியலாளரான பி. விக்னேஸ்வரன் ஆகியோர் ஏற்றி வைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர்.

அதைத் தொடர்ந்து கனடிய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து நடேஸ்வரக்கல்லூரிக் கீதம் ஆகியன யமுனா சிறீதரன், வாசுகி கோகுலன், சின்னராசா தாசன், கிருஸ்ணபிள்ளை நீலவண்ணன் ஆகியோரால் பாடப் பெற்றன. ஜெனீக்கா டேவிட்சனின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து சங்கத் தலைவர் மார்கண்டு நிர்மலன் அவர்களின் உரை இடம் பெற்றது.

தொடர்ந்து காங்கேசந்துறை நடேஸ்வரக் கல்லூரி அதிபர் திரு. பி. பாலகுமார் அவர்களின் பதிவு செய்யப்பட்ட காணெளி உரை இடம் பெற்றது. அவர்தனது உரையில் அதிபாதுகாப்பு வலயத்தில் இருந்து இடம் பெயர்ந்து மீண்டும் கட்டி எழுப்பப்பட்ட பாடசாலையின் முன்னேற்றம் பற்றியும், இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால் மாணவர்கள் பற்றாக குறை பற்றியும் குறிப்பிட்டு, பாடசாலையைக் கல்வி சார்ந்து முன்னேற்றத் தேவையான அவசர தேவைகள் என்ன என்பதையும் குறிப்பிட்டார். மேலதிக விபரங்களை மகாலிங்கம் குமாரகுலதேவன் தனது உரையில் எடுத்துச் சொன்னார்.

மேலும் படிக்க ...

‘இவள்’ சிறுகதைத் தொகுப்பில் புலம்பெயர் பெண்களின் வாழ்வியல்முறைகள்! - -முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -

விவரங்கள்
-முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -
ஆய்வு
07 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


முன்னுரை:

புலம்பெயர் தமிழ்ப்பெண்கள் தாங்கள் புலம்பெயர்ந்த நாட்டிலும் தமிழர் பண்பாட்டைக் கடைப்பிடித்தனர். தமிழருக்கான வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றினர். தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் இயற்கையைப் பருகினர். அதன் இன்பத்தை அனுபவித்தனர். சங்க கால மக்களது இயற்கையின் நேசிப்பை மணிமாலா மதியழகனின் கதைகளில் காணமுடிகிறது. இயற்கையைச் சார்ந்து வாழ்ந்த பறவைகளின் இயல்புகளையும் அதிலிருந்து மனிதர்கள் கற்றுக்கொண்ட பாடத்தையும் இவள்..? சிறுகதைத் தொகுப்புச் சுட்டுகிறது. மனிதர்களின் சிறுமைத்தனமான எண்ணங்களையும் கதைகள் விளக்குகின்றன. தமிழர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் இச்சிறுகதைகளில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.

மணிமாலா மதியழகன்:

தமிழ்நாட்டின் கடலூரில் பிறந்து சிங்கப்பூரில் குடியேறியவர் மணிமாலா மதியழகன் அவர்கள். முகமூடிகள், தேத்தண்ணி, பெருந்தீ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளோடு இவள் சிறுகதைத் தொகுப்பும் இவரது படைப்புகளாகும். சிங்கையின் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். எளிமையான நடையோட்டத்தாலும் செம்மையான கருத்துகளாலும் தனது எழுத்துகளுக்கு வலுச்சேர்க்கிறார். இக்கட்டுரையில் மணிமாலா மதியழகன் அவர்களின் இவள் சிறுகதைத் தொகுப்பில் வெளிப்படும் புலம்பெயர் பெண்களின் வாழ்வியல்முறைகள் பற்றிக்கூர்ந்து நோக்குவோம்.

மனிதமும் இயற்கையும்:

இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு ஆதிகாலத்திலிருந்தே தமிழர்களிடம் குறிப்பாக பெண்களிடம் இருந்தது. மணிமாலா மதியழகனின் ‘ங்கா...’ சிறுகதை பெண்ணுக்கும் இயற்கைக்கும் இடையிலான நேசிப்பைச் சுமந்து நிற்கிறது. தேன்சிட்டு கூடு கட்டுவதில் ஆரம்பிக்கும் மகிழ்ச்சி, அதன் கூடு கட்டும் நேர்த்தி, சுறுசுறுப்பு, அதனால் ஏற்படும் மனித மனதின் உற்சாகம் மிகுந்து மிகுந்து மழையின் காரணமாக என பலவித காரணங்களால் கூடு களைவதில் வடிந்து போகிறது. தேன்சிட்டு கட்டிய கூட்டை,

“பிடிவாதத்தில் இருந்த பகல் ஊர்ந்து கடக்க, கட்டுக்கடங்கா ஆவலோடு கதவைத் திறந்து கட்டுமானப்பணியைப் பார்த்தவள் அசந்து போய்ட்டேன்! கட்டடக்கலையின் வித்தகர்கள் எனத் தேன்சிட்டுகளுக்குப் பட்டமே கொடுக்கலாமோ? கொடியில் காயவைத்த புடவையைப் போல நீளமாகத் தொங்கியது”(பக்.14)

என்று வர்ணிக்கிறார் மணிமாலா மதியழகன். இறுதியில் அதனைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் குரூரமான புத்தியில் பறவையின் கூடு அழிந்து போகிறது என்பதோடு தற்கால வாழ்வியலில் இயற்கையை அழிப்பது மனிதன்தான் என்பதைப் பூடகமாக உரைக்கிறார்.

மேலும் படிக்க ...

மு.நித்தியானந்தன் எழுதிய ‘இந்திய இலக்கியம்: கைலாசபதியும் அனந்தமூர்த்தியும்’ நூல் குறித்து... - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம்
நூல் அறிமுகம்
07 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

தேர்ந்தெடுத்த படைப்பாளர்களின் ஒவ்வொரு படைப்புக்களையும் நான் வாசிக்கத் தோன்றும்போதெல்லாம் அவை நேராகவே என்னுடன் பேசுவது போலவும், அவை நித்திய ஜீவியாக என்னுடன் இருப்பதுபோலவும் நான் உணர்வதுண்டு. அந்த வகையில் இந்நூலை வாசிக்கும்போது அது என்னைச் சிறைப்படுத்தியது.

    ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியல் கோலங்கள், தமிழ் இலக்கியத்தின் அச்சுப் பண்பாடு, ஓவியம், சாதியம், தமிழ் நிலத்தின் ஆவணச் சிற்பி, தமிழ் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், நாவல், சிறுகதையென பல தகவல்களைத் தாங்கிய பத்துக் கட்டுரைகளை நூற்றி நாற்பத்திமூன்று பக்கங்களில், முதல் தைல வண்ண அட்டை ஓவியத்தோடும் இந்நூலைப் பார்க்க முடிகின்றது.

   இத்தொகுதியில் ‘பொதுநலவாய நாடுகளின் இலக்கியம்: கைலாசபதியும் அனந்தமூர்த்தியும்’ என்ற கட்டுரை முதல்த்தடவையாக நான் அறிந்திருந்த விடயமாகப்பட்டது. அதாவது அந்தக்காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து க. கைலாசபதி அவர்கள் (1933- 1982) பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கிரேக்க மொழித்துறையில் பேராசிரியர் ஜோர்ஜ் தொம்சனி;ன் மேற்பார்வையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டிருந்ததாகவும், அதே பல்கலைக்கழகத்தில் மைசூர்ப் பல்கலைக்கழகத்திலிருந்து யு.ஆர். அனர்ந்தமூர்த்தியும் (1932 – 2014) ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தார்களாம். அவ்வேளையில் யு.ஆர்.அனந்தமூர்த்தியும், க.கைலாசபதியும் இணைந்து எழுதிய கடிதம் வுiஅநள டுவைநசயசல ளரிpடநஅநவெ செப்டம்பர் 24, 1964 இதழில் ஐனெயைn ஏநசயெஉரடயச றசவைநசள என்ற தலைப்பில் பிரசுரமாகியது. அதில் பலவகையான இலக்கிய விவாதங்களை இக்கட்டுரை மூலம் என்னால் பார்க்க முடிகின்றது.

மேலும் படிக்க ...

பொப்பிசைப் பாடகர் நித்தி கனகரத்தினத்தின் பன்முகம்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
நிகழ்வுகள்
07 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய தமிழ் மொழிச் சாதனை விழாவில் நித்தி கனகரத்தினம் அவர்கள் கெளரவிக்கப்பட்டபோது அதன் தலைவர் கிறிஸ்டி நல்லரெத்தினத்திடமிருந்து சான்றிதழ் பெறும் காட்சி. -

ஒருவரை கௌரவிக்கும் நிகழ்வில்அவரை ஏன் நாங்கள் தெரிவு செய்தோம் என்பது எல்லோருக்கும் புரிய வேண்டும். இல்லையெனில், தெரிந்தவர், முகஸ்துதிக்காக அல்லது எம்மை முக்கியத்துவப்படுத்த, ஏன் சில வேளைகளில் அவரிடம் உதவிபெற என பல காரணங்களை சிலர் ஊகிக்கக்கூடும். நாம் ஒருவரைக் கொண்டாடும் போது அவரை நேரடியாக தெரியாத போதும், அவரது பணிகள் அல்லது படைப்புகள் எமக்கு அறிமுகமாகி இருக்க வேண்டும் . இதைத்தான் திருவள்ளுவர் 2000 வருடங்கள் முன்பு நமக்குச் சொல்லியது.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

இலகுவான குறள் – ஐந்தாம் வகுப்பில் படித்தது.

1968ல் நான் எட்டாம் வகுப்பு இந்துக் கல்லூரியில் படிக்கும்போது “சின்னமாமியே” மற்றும் “கள்ளுக்கடை பக்கம் போகாதே” ஆகிய பாடல் வரிகளை எங்கோ கேட்டேன். அதற்கப்பால் அவற்றின் ரிஷி மூலத்தை அறிந்து கொள்ளவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை.

நித்தியை அறிந்து பின்பே அவரது பாடல்களை அறிந்தால், அட நமக்குத் இங்கு அது நடக்கவில்லை. தெரிந்தவர், நண்பர் அல்லது பழகியவர் இவர் என்பது ஒரு விதத்தில் முகமன் பாராட்டுவது போன்றதாகும்.

பல காலங்கள் கடந்த பின் 1975இல் பொப் இசையைப் பற்றி நான் அறிந்தது பேராதனை பல்கலைக்கழகத்தில்தான். அக்காலத்தில் சிங்கள பாடகர்களுடன் ஏ.ஈ மனோகரன், நித்தி கனகரத்தினம் போன்றவர்களைப் பேரளவுக்கு அறிந்திருந்தேன்.

கடந்த ஒரு மாதம் வரையில் நான் நித்தியை பற்றி அறிந்து கொள்ள முயலவில்லை. அவரது பாட்டை விட அவரது செய்கையே இங்கு முக்கியம் என்பதை சொல்லியாக வேண்டும். எனது இந்துக் கல்லூரி நண்பன் டாக்டர் ரஞ்சித் சிங் ( சாம் ஜெயக்குமார்) சமீபத்தில் நித்திக்கு வரகு (Millet) வாங்கி அனுப்பும் படி பிரித்தானியாவிலிருந்து தொடர்பு கொண்டார்.

மேலும் படிக்க ...

சிறுபாணாற்றுப்படையில் தாவரங்கள்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
ஆய்வு
05 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

இலக்கியமும் அறிவியலும் வெவ்வேறானவை; ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்லது எதிரும் புதிருமானவை எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் இலக்கியத்தில் அறிவியலைத் தேடுவதும், அறிவியலை இலக்கியமாக்குவதும் நிகழ்ந்த வண்ணம்தான் உள்ளன. அவ்வகையில் ஆற்றுப்படை இலக்கியங்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் அறிவியல் கூறுகளில் ஒன்றான தாவரங்களை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

தாவரவியல்

தமிழர்கள் பழங்காலத்தொட்டே தாவரங்களுடன் தங்களின் வாழ்க்கை முறையைப் பிணைத்துக் கொண்டார்கள். 'தாவரவியலின் தந்தை' என்று குறிக்கப்பெறும் 'தியோபிராஸ்டஸ்' தாரவங்களை உயிர்ப்பொருள் அடிப்படையில் ஆராய்ந்தார். கி.மு.2000 ஆண்டுகட்கு முன்பே தொல்காப்பியர் அவற்றை உயிர்ப்பொருளாகக் கொண்டு ஆராய்ந்தர் என்பதை,

‘புல்லும் மரனும் ஓரறி வினவே,
பிறவு உளவே அக்கிளைப் பிறப்பே' (தொல்.பொ. மர.28)

என்னும் தொல்காப்பிய நுாற்பாவால் அறியலாம்.

தொல்காப்பியத்தில் தாவரப் பாகுபாடு

தொல்காப்பியர் தாவரங்கள் அனைத்தையும் புல், மரம் என்னும் இரு பிரிவுகளில் அடக்கியுள்ளார். மேல்புறம் உறுதி உடையவை புல்லினம் எனப்படும். அவை தென்னை, பனை, பாக்கு, மூங்கில் முதலானவை ஆகும். உட்புறம் வயிரமுடையவை மர இனம். இவற்றை,

‘புறக்கா ழனவே புல்லென மொழிப,
அகக்கா ழனவே மரமெனப் படுமே' (தொ.பொ. மர.86)

எனும் தொல்காப்பிய நுாற்பா மூலம் அறியலாம்.

மேலும் படிக்க ...

குவிகம் நடத்தும் லலிதா ஈஸ்வரன் சிறுகதைப்போட்டி 2025!

விவரங்கள்
- குவிகம் -
நிகழ்வுகள்
05 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* தெளிவாகப் பார்க்கப் படத்தை ஒரு தடவை அழுத்தவும்!

எதிர்வினை: பதிவு செய்யப்படாத சில சங்கதிகள்! - ஆசி .கந்தராஜா -

விவரங்கள்
- ஆசி .கந்தராஜா -
இலக்கியம்
05 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மார்ச் 28, 2025 அன்று, சிட்னித் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் ஒழுங்கு செய்யப்பப்ட பவளவிழாவுக்கு முதல்நாள், எழுத்தாளர் நண்பர் முருகபூபதி அவர்கள், மெல்பனிலிருந்து வெளிவரும் அக்கினிக்குஞ்சு இணைய சஞ்சிகையில், பவளவிழாக்காணும் படைப்பிலைக்கியவாதி பேராசிரியர் ஆசி கந்தராஜா என்னும் தலைப்பில் ஒரு விவர்ணக் கட்டுரை எழுதியிருந்தார். அது பின்னர் கனடாவிலிருந்து வெளிவரும் பதிவுகள் இணைய சஞ்சிகையிலும் சிட்னியிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய சஞ்சிகையிலும் பிரசுரமாகியிருந்தது. நண்பர் முருகபூபதிக்கு எனது நன்றிகள்.

எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரையை வாசிக்க விரும்பின் இணைப்பை அழுத்தவும்

கட்டுரையில் எழுதப்பட்ட தகவல்களை முழுமையாக்கும் நோக்கில் சில உண்மைகளை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது. காரணம் வரலாறு மறைக்கப்படவும் திரிவுபடவும் கூடாது என்பதற்காக.

சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் + இலக்கியப் பவர்

இவ் அமைப்பு முதுபெரும் எழுத்தாளர் எஸ்பொ அவர்களால் 1991ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 'பவர்' என்பது ஒரு தூய தமிழ்ச் சொல். ஒரு நோக்கத்தை நிறைவேற்ற, 'கொடி கொண்டு முன்னெடுத்துச் செல்லல்' என்பதைக் குறிப்பது. அறியப்பட்ட இந்திய எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்கள், முன்னாளில் 'பவர்' என்னும் பெயரில் ஒரு அமைப்பை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்னி 'பவர்' அமைப்பில் நானும் ஒரு ஸ்தாபக அங்கத்தவராக அயராது உழைத்தவன் என்பது தற்போது பலருக்கும் தெரியாத உண்மை. இதுபற்றி முருகபூபதி தனது கட்டுரையில் ஏனோ தொட்டுச் சென்றிருக்கிறார். 'பவர்' இன்றுவரை ஒரு பதிவு செய்யப்படாத இலக்கிய அமைப்பு, யாப்பு இல்லாதது. இதனால் தனிப்பட்ட முறையில் இதன் பெயர் எவருக்கும் சொந்தமில்லாதது, உரிமை கோரமுடியாதது.

மேலும் படிக்க ...

மகிழ்ச்சியான ஒரு தீவு(3) - அருபா! - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
பயணங்கள்
02 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                 - Atlantis Submarines Aruba - நீர்மூழ்கிப் பயணம் -

பூகோளரீதியாகத் தென் அமெரிக்காவில் இருக்கும், நெதர்லாந்தின் ஒரு பகுதியான Aruba, One Happy Island என்ற அவர்களின் sloganக்கு ஏற்ப மகிழ்ச்சியான ஒரு தீவாகவே தெரிந்தது. பிச்சைக்காரர்களையோ, வீடற்றவர்களையோ அங்கு காணவில்லை. ஆனாலும், பூமியிலேயே மிகப் பெரிய கடலான கரேபியன் கடலால் சூழப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் தாவரங்களைக் காண்பது அருமையாக இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. கடலிலிருந்து ஆவியாகும் நீருக்கு என்ன நடக்கிறது, ஏன் அது மழையாகப் பொழியவில்லை என்பதே என் கேள்வியாக இருந்தது. பதிலை அறியும் ஆர்வத்தில் இணையத்தில் தேடியபோதே, இங்கு வீசும் காற்று (trade winds) வளியை மேலெழவிடாது கீழேயே வைத்திருப்பதால் அது முகில் உருவாக்கத்தையும் மழையையும் தடைசெய்கிறதென அறிந்தேன். அதேவேளையில் ஈரப்பதனையும் அது அகற்றுவதால், வெக்கையைத் தாங்கமுடியாத நிலை உருவாகாமலும் தடைசெய்கிறது.

வெக்கை மிகுந்த, மழை மிகக் குறைந்த, வேகமான காற்று வீசும் வரட்சியான இந்தக் காலநிலை Arubaஇன் தரைத்தோற்றத்தை மணல் மேடுகளாகவும், மண்ணரிப்பினால் உருவான தட்டையான மேட்டு நிலங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும் கொண்ட தாவரங்களற்ற வெற்றுநிலமாகவும் மாற்றியுள்ளது. எனினும் இதன் தரைத்தோற்றத்துக்கு காலநிலை மட்டுமன்றி, குடியேற்றங்களை மேற்கொண்ட ஸ்பானியர் அங்கிருந்த காடுகளை அதிகளவில் அழித்தமையும், தீவின் வளங்களைச் சுரண்டியமையும்கூடக் காரணம் எனக் கூறப்படுகிறது.

வெய்யிலில் திரிந்தது போதும், ஒரு நாளைக்கு உள்ளகத்திலுள்ள விடயங்களைச் செய்வோமென முடிவெடுத்தோம். அதன்படி அடுத்த நாள் Atlantis Submarines Aruba என்ற அமைப்பினருடன் கடலுக்கு அடியிலுள்ள உயிரினங்களைப் பார்க்கும் பயணத்தை ஆரம்பித்தோம். கப்பல் ஒன்றில் ஆழக்கடல்வரை போய் நீர்மூழ்கிக் கப்பலொன்றில் ஏறினோம். Flamingo Beach அருகே கப்பல் சென்றபோது ஓரிரு Flamingoகளைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால், அந்தக் கடற்கரையின் இளம் சிவப்பு மணலைப் பார்க்கமுடியவில்லை. அந்த இளம்சிவப்பு மணலைப் பார்க்கவிருப்பமிருந்தாலும், Flamingoகளின் செட்டைகளை வெட்டிபோட்டு அங்கு அவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்களாம் என்றபோது, அதைப் போய்ப்பார்ப்பதற்கு எங்களுக்கு மனம் வரவில்லை.

மேலும் படிக்க ...

நதியில் நகரும் பயணம் (13) - புருஜ் (Bruges, Belgium)) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
02 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                         -  காதலர் ஏரி -

அடுத்த நாள் நாங்கள் பஸ்ஸில் ஒல்லாந்தின் பக்கத்து நாடான பெல்ஜியம் சென்றோம் . ஆனால், அங்கு டச்சு மொழி கலந்த ஃபிளாமிஸ் (Flemish)மொழி பேசுவார்கள். சிலமணி நேரத்தில் அங்கு செல்ல முடிந்தது. பெல்ஜியம், நெதர்லாந்திலிருந்து உருவாக்கிய நாடு. அதன் கசப்பு இன்னமும் எங்கள் டச்சு நாட்டின் வழிகாட்டியின் வார்த்தையில் தெரிந்தது. நெப்போலியன் படையெடுப்பின் பின்பாக நெதர்லாந்திலிருந்து   பெல்ஜியம் பிரிந்து உருவாகிறது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான்போல்,

மத்தியகால புரூஜ் நகரின் மத்திய பகுதியில் அழகான சந்தை வெளி (Market square) உள்ளது . இதனை சுற்றி அக்கால நகர மண்டபம், தேவாலயம், கடைகள், மணிகோபுரம் (Bell Tower) உள்ளன. அதனருகே அங்குள்ள ஒரு பெரிய தேவாலயம் உள்ளது. அதன் பலிபீடத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தோய்ந்த துணி, சிறிய கண்ணாடி சீசாவில் வைக்கப்பட்டுள்ளது . அதைக் கேட்டபோது எனக்கு தலையைச் சுற்றியது . மதங்களில் பல நம்பமுடியாத விடயங்கள் உள்ளன என்றாலும் அது கொஞ்சம் கூடுதலாக இருந்தது. சிலுவை யுத்தத்திற்காக ஜெருசலோம் போனவர்கள் கொண்டு வந்து புனித இரத்தத்தை வைப்பதற்காக 12 ஆம் நூற்றாண்டில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது .

மேலும் படிக்க ...

புதிய சமுதாயத்தில் மாற்றத்தைக் கோரும் 'கொழுகொம்பு' - சில அவதானிப்புகள் - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
கலாநிதி சு.குணேஸ்வரன் பக்கம்
02 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



அறிமுகம்

'ஈழத்துத் தமிழ் நாவலுக்குக் கிழக்கிலங்கை தன் பணியைச் செய்து வந்துள்ளபொழுதும் அப்பிரதேசத்தைக் களமாகக் கொண்ட நாவல்கள் 1955 வரை எழுந்ததாகத் தெரியவில்லை. மூதூரைச் சார்ந்த வ.அ.இராசரத்தினம் 1955 இல் ஈழகேசரியில் எழுதிய கொழுகொம்பு நாவலே இவ்வகையில் முதல் நாவலாகக் கிடைக்கிறது.' என்று ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தில் நா. சுப்பிரமணியன் எழுதியுள்ளார். கிழக்கிலங்கையைக் களமாகக் கொண்ட வகையில் தனிமனித உணர்வுசார்ந்த காதல், உறவு, தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் கொழுகொம்பு அமைந்திருக்கின்றது.

கதையும் கதைவளர்ச்சியும்

வ.அ.இராசரத்தினம் இந்நாவலை, பிரதேசப் பண்பும் சமூக இயங்கியலும் வெளிப்படும் வண்ணம் எழுதியுள்ளார். இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி எவ்வாறு அவர்தம் சந்ததிகளின் வாழ்வை அலைக்கழித்துச் சிதைத்தது என்பதுதான் மையக்கதையாக அமைந்துள்ளது.

அம்பலவாணர் சமூகத்தில் மிகப் பிரபலமான நபர். நிலபுலம் உள்ள பணக்காரர். சமூக நிகழ்வுகளில் முன்னிற்பவர். கௌரவமும் சமூக அந்தஸ்தும் முக்கியம் என எண்ணுபவர். அவரது ஒரே மகன் நடராசன். ‘அப்போதிக்கரி’க்கு படித்துக் கொண்டிருப்பவன். அம்பலவாணர் பட்டினசபைத் தேர்தலில் கிராமத்தில் இருந்து போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் கிராமமக்கள் அவரை ஆதரிக்காமையினால் தோல்வியடைந்து விடுகிறார். அவரது மைத்துனர் கந்தையரும்கூட தனக்குச் சார்பாகச் செயற்படவில்லை என்பதால் அவர் மீதும் கோபம் கொள்கிறார். அக்கோபம் பெரும்பகையாக மாறிவிடுகிறது. தனது ஒரே மகன் நடராசனை மாமன் வீட்டுப் பக்கம் போகக்கூடாது என்று கட்டுப்பாடு போடுகிறார். நடராசன் தனது முறைமச்சாள் ஆகிய கனகத்தைக் காதலிக்கிறான் அவளைத்தான் திருமணம் செய்யவும் இருக்கிறான். தகப்பனின் கட்டளையால் அவன் மனஞ்சோர்ந்து விடுகிறான். குழப்பமடைகிறான்.

மேலும் படிக்க ...

வி.சந்திரகுமாரின் (தம்பா) சிறுவர் நவீனம் 'கொரில்லா அரக்கன்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சிறுவர் இலக்கியம்
02 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

குழந்தை இலக்கியம் அல்லது சிறுவர் இலக்கியமென்பது குழந்தைகளின் நல்லதோர் எதிர்காலத்துக்கு முக்கியமானதொரு படிக்கட்டு. வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. இலங்கையைப் பொறுத்தவரையில்  சிறுவர் இலக்கியத்துக்குப் பக்கங்கள் ஒதுக்கும் பத்திரிகை, சஞ்சிகைகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கினை ஆற்றி வருகின்றன.

சுதந்திரன், தினகரன், வீரகேசரி , ஈழநாடு (பழைய)  ஆகியவற்றில் வெளியான சிறுவர் பக்கங்கள் முக்கியமானவை. எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய பக்கங்கள் அவை.  சிரித்திர்ன கண்மணி என்னும் சிறுவர் சஞ்சிகையினை வெளியிட்டது.  அழகான ஓவியங்களுடன், குழந்தைகளைக் கவரும் ஆக்கங்களுடன் வெளியான அச்சஞ்சிகை சில இதழ்களே வெளிவந்தது.  கண்மணி நின்ற பின்னர் கண்மணி என்னும் பெயரில் சிரித்திரனில் சிறுவர் பக்கங்கள் வெளிவந்தன. இலங்கைத் தமிழ் இலக்கியத்தைப்  பொறுத்தவரையில் அவ்வப்போது சிறுவர் சஞ்சிகைகள் வெளிவந்தாலும் அவை நிலைத்து நிற்பதில்லை என்பது துரதிருஷ்ட்டமானது.  எழுத்தாளர் கணபதி சர்வானந்தாவும் அண்மையில் அறிந்திரன் என்னும் நல்லதொரு சிறுவர் சஞ்சிகையினை வெளியிட்டார்.அதுவும் நிலைத்து நிற்கவில்லை. மீண்டும் அதனைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றார்.  இம்முறை அவர் வெற்றியடைய அனைவரும்  உதவ வேண்டும்.

மேலும் படிக்க ...

ஆண்டாளும் வைணவ சமய வழிபாடும்! - முனைவர்.ம.சியாமளா , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -

விவரங்கள்
- முனைவர்.ம.சியாமளா , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
ஆய்வு
01 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

திருமாலுக்கு ஆட்பட நினைத்தமையாலும், திருமாலால் ஆட்கொள்ளப்- பட்டமையாலும் ஆண்டாள் என்பர். ஆடித் திங்கள் பூர நட்சத்திரத்தில் தோன்றிய இவர் பூமகள் அம்சம். பின்னர் கோதை நாச்சியார் எனவும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனவும், பெரியாழ்வார் பெற்றெடுத்த பைங்கொடி எனவும் போற்றப்படுபவர். மார்கழி மாதத்தில் திருமாலை அடையும் வகையில் ஆண்டாளின் வழிபாடும் அமைகின்றது. இவ்வகையில் பாவை நோன்பு

பாவைக்குச் செய்யும் கிரிசைகள் (நாச்.திரு.2)    

பாவைக்குச் சாற்றி நீராடினால் (திரு.பா.3)

பிள்ளைகளெல்லோரும் பாவைக் களம்புக்கார் (திரு.பா.13)

பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பழங்காலத் தமிழகத்தில் நடைபெற்ற நோன்புகளில் 'மார்கழி நோன்பும்' ஒன்று. திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் பொய்கைக் கரைக்குச் சென்று நீராடி மண்ணால் செய்த பாவையை வைத்து வழிபாடு நடத்திப்பாடுவது ‘பாவைப் பாட்டாகும்.' திருப்பாவையில் மூன்று இடங்களில் மட்டுமே "பாவை நோன்பு" நோற்றதற்கான குறிப்பு காணப்படுகிறது.

மேலும் படிக்க ...

1700 ரூபாய் வேதனம்? - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
01 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பட்டலந்த படுகொலையின் அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்,  (13.3.2025) மலையக பாராளுமன்ற தலைமைகள் பின்வரும் கூற்றுக்களை கூறினர்:

“எம்மை குறை கூறுவதில் பயனில்லை. மலையக திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள்’’- எனத்  திகாம்பரமும்,  “ இது போதாது, இதனோடு ஜேவி;பி யினரையும் சேர்த்துத்தான் விசாரிக்க வேண்டும்” என மனோ கணேசனும்,  “54 தொழிற்சாலைகளை ஜேவி;பி யினர் எரித்ததை மறப்பதற்கில்லை” என -ஜீவன் தொண்டமானும் தம் உரையில் கருத்து தெரிவித்திருந்தனர்.

மொத்தத்தில், பட்டலந்த படுகொலைகளை விமர்சிக்கும் அதே போர்வையில், மலையக மக்களின் பொருளாதார நிலைமைகள் குறித்தும் ஒரு பிடி பிடித்திருந்ததை நாம் அவதானிக்க கூடியதாகத்தான் இருக்கின்றது. இருந்தாலும், இதே தலைமைகள்தாம், ஒருவர் மாறி ஒருவராய் 50 ஆண்டுகள் மலையகத்தை ஆட்சி புரிந்து வந்தவர்கள் என்ற உண்மையையும் நாம் மறப்பதற்கில்லை.

ஏனெனில் மலையக மக்களின் வேதனம் குறித்து அல்லது வீட்டுக் குறைபாடுகள் குறித்து முழக்கமிடும் இதே தலைமைகள், நேற்று வரை, என்ன செய்தனர் என்ற கேள்வி மனதை குடைவதாகத்தான் உள்ளது. ஏனெனில், இவர்கள் பாராளுமன்றம் மாத்திரமில்லாமல் மாகாண சபை, உள்ளுர் அதிகார சபை என எங்கெங்கு அதிகாரங்கள் குவிந்திருந்ததோ அதையெல்லாம் வாரி சுருட்டி விட, இதே தலைமைகள்தாம் கடந்த காலங்களில் பின் நின்றதாயில்லை. நாங்கள்தான், “மலையக மக்கள்” என்றும் சரி அல்லது இதுவே ‘எமது தேசியம்’ என மனோ கணேசன் போன்றோர் கூறினாலும் சரி, இதுவே இவர்களது அரசியலானது. ஆனால் இத்தனை காலமும், இப்படியாக அதிகாரங்களை குவித்து கொண்ட இவர்கள், ஆக மொத்தத்தில், கடந்த காலங்களில் செய்ததுதான் என்ன என்ற கேள்வி மாத்திரம் எஞ்சி நிற்பதாகவே உள்ளது. நிலசீர்திருத்த சட்டமாகட்டும் அல்லது காணியுரிமை சட்டமாகட்டும் அல்லது சம்பள உயர்வுகள் ஆகட்டும், இவர்கள் மலையக மக்களின் ஒட்டுமொத்த விடயங்களில் எதைத்தான் செய்தார்கள் என்பது பிரச்சினையாகின்றது. இக்கேள்வியின் பின்னணியிலேயே, இவர்களின் கடந்த காலங்கள், பற்றிய சந்தேகமும் எழுந்தபடி இருப்பதானது இச்சந்தேகங்களுக்கு பக்கபலம் சேர்ப்பதாக உள்ளது. ஆனால் இன்று இவர்கள், மலையக மக்களின் சார்பிலேயே, நாம் அரசுக்கு முன்வைக்கும் கோரிக்ககைகள் இவை என இவர்கள் ஜேவி;பி அரசுக்கு வைக்கும் சவால்களானது சிரிப்பைத்தான் வரவழைக்கின்றது. இந்த பின்னணியிலேயே, இவர்கள் இன்று “இதைசெய்-அதைசெய்” என்று அரசுக்கு குரல் கொடுக்கும் போது, கடந்த 50 வருடமாய் இவர்கள் செய்ததென்ன என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருக்கின்றது.

மேலும் படிக்க ...

தன் கருத்துகளைச் சுதந்திரமாகக் கூறும் உரிமை சவுக்கு சங்கருக்குண்டு! - நந்திவர்மப் பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப் பல்லவன் -
அரசியல்
01 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் சவுக்கு சங்கரின் அபிமானி அல்லன். அவ்வப்போது அவரது சவுக்கு மீடியாக் காணொளிகளைப் பார்ப்பவன். ஆனால் சனநாயக நாடான இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஊடகவியலாளர்  ஒருவர் தன் கருத்துகளைச் சுயமாக எடுத்துரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. அவரது கருத்துகளை, அவை எவ்வளவு எதிரானவையாக இருந்தாலும் அவற்றைக் கூறும் உரிமை அவருக்குண்டு. கருத்தைக் கருத்தால்தான் எதிர்க்க வேண்டும். வன்முறையால் அல்ல. எம் போராட்ட வரலாற்றில் கருத்துகளை வன்முறை கொண்டு அடக்கினோம். அதன் விளைவுகளை நாம் அறிவோம்.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் சிரஞ்சீவிகள் குறித்த பதிவுகள்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061-

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061-
ஆய்வு
01 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

சிரஞ்சீவி என்றால் சாகா வரம் பெற்றவர்கள் என்று பொருள். பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் இறந்துவிடும் என்பது நியதி. ஆனால் சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்களுக்கு இறப்பு என்பது கிடையாது. சிரஞ்சீவி என்பது சிலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் கிடைக்கின்றது என்பதை இலக்கியங்களின் வழி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள சிரஞ்சீவிகள் குறித்து இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.

கம்பராமாயணத்தில் சிரஞ்சீவிகள்

மகாபலி சக்கரவர்த்தி, அனுமன், வீடணன், பரசுராமர், பிரகலாதன் ஆகியோர் கம்பராமாயணத்தில் சிரஞ்சீவிகள் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

1.மகாபலி சக்கரவர்த்தி

கம்பராமாயணத்தில் மகாபலி சக்கரவர்த்தி குறித்த பதிவுகள் பாலகாண்டம் வேள்விப் படலத்தில் காணப்படுகிறது. வேள்வியைக் காக்கவும், தாடகையை வதம் செய்யவும் விசுவாமித்திரர், இராமலக்ஷ்மணர்களை அழைத்துச் சென்ற போது அவரே, மகாபலி சக்கரவர்த்தி குறித்து பேசுகிறார். அசுர அரசன் மகாபலி விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் வென்று தன்வயப்படுத்திக் கொண்டான். வேள்விகள் செய்து தானம் செய்ய முடிவு செய்தான். தேவர்கள் திருமாலை வணங்கி ’கொடியவனான மகாபலியின் கொடுஞ்செயலை ஒழித்திடுக’ என்று யாசித்தனர். திருமாலும் அவர்களைக் காக்க வேண்டி காசிப முனிவருக்கும், அதிதிக்கும் ஒரு குழந்தையாக பெரிய ஆலமரம் முழுவதும் அடங்கியுள்ள சிறிய ஆலம் விதையைப் போல, மிகக் குறுகிய வடிவத்தோடு அவதரித்தார். மகாபலிடம் சென்று மூன்றடி மண் தானமாகக் கேட்டார். மகாபலியும் நீர் வார்த்து மூன்று அடி மண்ணைத் தர, வாமன அவதார திருமால், விஸ்வரூபம் எடுத்து ஒரு அடியில் பூமி முழுவதையும், மற்றொரு அடியில் வானுலகம் முழுவதையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கு வைக்க என்ற போது, மகாபலி ஆணவம் அழிந்து தன் தலை மேல் வைக்க வேண்டினார். பாதாள உலகின் மன்னன் ஆனார் மகாபலி சக்கரவர்த்தி. இன்னும் அங்கேயே சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார்.

மேலும் படிக்க ...

வேடியப்பன் வாழ்வும் வரலாறும்! - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -

விவரங்கள்
- முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
ஆய்வு
01 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(Ref: SHC/DB/Grant/20234/02)

முன்னுரை

திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்  மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வேடியப்பன் மற்றும் வேண்டியம்மன் வழிபாடு. மக்களால். பரவலாக வழிபட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. தமிழரின் வீரத்தின் எச்சமான நடுகல் வழிபாட்டில் தொடங்கி உள்ள வேடியப்பன் வழிபாடானது இன்றும் மக்களால். முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வேடியப்பன் என்றாலே எல்லோரும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரையை  அடுத்த கல்லாவி என்ற ஊரில் உள்ள வேடியப்பனைத்தான் பொதுவாக அடையாளமாகக் கொள்கின்றனர்.  “கிருஷ்ணகிரி மாவட்டத்து கல்லாவி ஊரில் வேடியப்பன் கோவில் உள்ளது. வன்னிமரம் கோவிலில் உள்ளது. வேடியப்பன் உருவம் கற்பலகையில் செதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கல்லாக இருக்க வேண்டும். இவன் வன்னியர்களின் குலதெய்வம். 500 ஆண்டுகள் பழமை உடையது. நாள் பூசைகள் உண்டு. தைமாதத்தில் 7 நாட்கள் திருவிழா. நடைபெறும். அருகிலுள்ள முனியப்பனுக்கே ஆடுவெட்டி அழைத்து ஏழை எளியவர்களுக்குத் தருமம் செய்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூசைகள் உண்டு. மற்ற சாதியினரும் தற்போது வழிபடுகின்றனர்.”1

ஆனால் நமக்கு நடுகல் வடிவில் கிடைக்கும் வேடியப்பன் பற்றிய தரவுகளைக் கொண்டு பார்க்க கல்லாவியை நோக்கிய அந்தப் போக்கில் மாற்றம் தேவை என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.  இன்றைய நடுகற்கள் மற்றும் மக்கள் வழிபாட்டுப் பின்புலத்திலிருந்து கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் வேடியப்பன் பற்றிய வரலாற்றைப் பற்றிய ஒரு சிறு முன்னெடுப்பை முன்வைக்கிறது இக்கட்டுரை.

வேடியப்பன் வழிபாட்டிட நடுகற்கள்

கி பி. 5ஆம்  நூற்றாண்டு முதல் வேடியப்பன் நடுகல்களுடன் கல்வெட்டுகளும் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றில்  ‘’திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் வட்டத்திற்குட்பட்ட சாத்தனூர் (கி.பி 6. ஆம் நூற்றாண்டு)  எடுத்தனூர் (கி.பி 624) மோத்தகல் (கி.பி. 622)  தண்டம்பட்டு (கி.பி. 608) தொரைப்பாடி கி.பி. 600 படி அக்கரஹாரம் (கி.பி. 587) சின்னையன் பேட்டை (கி.பி 9. ஆம் நூற்றாண்டு) போளூர் வட்டத்திற்குட்பட்ட கடலாடி (கி.பி.6) தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரூர் சின்னகுப்பம் (கி.பி. 6,7) மொண்டுகுழி கி.பி. 604) கதிரம்பட்டி கி.பி. 597 கோரையாறு, கோறையாறு 2  (கி.பி. 568) பாப்பம்பாடி  (கி.பி.5), ஊத்தங்கரை வட்டத்திற்குட்பட்ட நடுப்பட்டி கி.பி.598)  கானம்பட்டி  கி.பி. 581)  புலியானூர் (கி.பி.573)’’2 முதலியன குறிப்பிடத்தக்கன.

மேலும் படிக்க ...

ரமழான் பெருநாள் வாழ்த்து (அறுசீர் விருத்தம்) - செ. சுதர்சன் -

விவரங்கள்
- செ. சுதர்சன் -
கவிதை
31 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இஸ்லாமிய  வாசகர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் 'பதிவுகள்' இணைய இதழின்  இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்!


01)

தலைப்பிறை கண்டார் அன்பர்!
தரணியே அன்பால் பொங்கும்
அலையருள் வீசல் கண்டேன்!
ஆதவன் அல்லாஹ் என்றே
கலைக்குரல் எழுப்பி வானில்
கைகளைக் கூப்பல் கண்டேன்!
விலைமதிப் பில்லா நல்ல
வீரிய விரதம் வாழ்க!

02)

பள்ளியின் வாங்கு வானில்
பாடிய செய்தி கேட்டேன்!
அள்ளியே இன்ப வாழ்த்தை
ஆருயிர்த் தோழருக்கு,
கள்ளதில் வண்டு பாடும்
கவியதில் பந்தி வைத்தேன்!
தள்ளியே தாழ்வு போகத்
தளிர்த்தன உலகு எல்லாம்!

மேலும் படிக்க ...

Adolescence – TV miniseries - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
31 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

NetFlix இல் வெளியாகியிருக்கும் Adolescence என்ற குறுகிய தொலைக்காட்சித் தொடரைப் பதின்மவயதினருடன் தொடர்பாக இருக்கும் அனைவரும் பார்க்கவேண்டும். நான்கு பகுதிகளைக் கொண்ட இதன் முதல் தொடர் தொடர் என் ஆசிரியர் வேலையுடனும், மொழிபெயர்ப்பாளர் வேலையுடனும் தொடர்பானதாகவும், நான் பார்த்திருந்த காட்சிகளைக் கொண்டதாகவும் இருந்ததால், ஒரேயடியாக இருந்து முழுவதையும் பார்த்துமுடித்தேன்.

வன்முறையின் உச்சக்கட்டம்தான் கொலை. ஆனால், வன்முறையாளர்கள் எல்லோரும் கொலைசெய்வதில்லை. கொலைசெய்வதற்கு உளவியல்ரீதியான காரணங்கள்தான் ஏதுவாக இருக்கின்றன என்கின்றனர் உளவியலாளர்கள். சக மாணவி ஒருவரைக் கொலைசெய்வதற்கு ஒரு 13 வயதுச் சிறுவனுக்கு எவை உந்துதலாக இருந்தன என்பதைச் சொல்லும் இந்தத் தொடர் சமூக ஊடகங்களின் செல்வாக்குப் பற்றியும் எச்சரிக்கிறது.

பொதுவில், தன் செயல்களுக்குப் பொறுப்பெடுக்காத, சமூக விரோதக்குணம் கொண்ட psychopathஆக இருப்பவர்கள்தான் கொலைசெய்கிறார்களெனக் கூறப்பட்டாலும்கூட, அந்த மாணவன் அப்படியானவன் என்பதற்கான அறிகுறிகள் இதில் காட்டப்படவில்லை, அப்படியிருந்திருந்தால், அதனைக் குணப்படுத்த முடியாது என்றாலும், நேரத்துடன் கண்டறியப்பட்டால் சிகிச்சைகளால் அதன் தாக்கத்தைக் குறைக்க முடியும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இதில் அச் சிறுவனுக்கு சுயமதிப்பின்மை, தன் உணர்சிகளைக் கையாளத் தெரியாமை என்பன இருந்தமை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இவ்வகையான பிரச்சினைகளுக்கு உதவக்கூடிய தொடர்பாடலைச் சந்ததி இடைவெளி முன்னெப்போதையும்விட அதிகமாக இப்போது தடைசெய்கிறது. அதுவும் ஆண் பிள்ளைகள் பொதுவில் தங்களைப் பற்றிக் கதைப்பதேயில்லை. எனவே உரையாடல்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டியது பெற்றோரின் கடமையாகும் என்பதையும் இது விளங்கவைக்கிறது.

மேலும் படிக்க ...

திரு. செல்லையா பொன்னுச்சாமியின் பிரிவு - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
30 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                      - திரு. எஸ். பி. சாமி -

திரு. எஸ். பி. சாமி என்று பலராலும் அழைக்கப்பட்ட திரு. செல்லையா பொன்னுச்சாமி 19-2-2025 ஆம் ஆண்டு தனது 89 வது வயதில் எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார். தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரும், யாழ்ப்பாணம் சென்ரல் மருத்துவ மனை, நொதேன் பீச் ஹேட்டல் போன்றவற்றின் உரிமையாளருமான இவரது மறைவு எங்கள் தமிழ் சமூகத்திற்குப் பேரிழப்பாகும்.

போர்;ச் சூழலில் போராளிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே அகப்பட்டு தங்கள் இருப்பைத் தக்க வைப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பது பலருக்குப் புரியும். அப்படி ஒரு சூழலில் நாங்கள் வாழ்ந்ததால், உயிரையே பணயம் வைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம். இக்கால கட்டத்தில் இவர் புறக்கோட்டை வர்த்தக சங்கம், அகில இலங்கை இந்துமாமன்றம், மற்றும் கருணைப்பாலம் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றினார். வேலனை கிழக்கு 3 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்து வந்தார்.

இலங்கை வங்கியில் அதியுயர் முகாமையாளராகப் பணியாற்றிய (AGM & DGM) எனது மூத்த சகோதரர் கே. சிவகணநாதன் மூலம்தான் முதலில் புறக்கோட்டை வர்த்தக சங்கத் தலைவாக இருந்த இவரது அறிமுகம் கிடைத்தது. இவரது காலத்தில் கொழும்பு வர்த்தகர்கள் கொடிகட்டிப் பறந்தது எனக்கு ஞாபகம் இருக்கின்றது, காரணம் வங்கிகளை நம்பியே வர்த்தகம் இருந்தது. அந்தத் தொடர்பை இவர் சிறப்பாகக் கையாண்டார்.  இவரை முதலில் சந்தித்த போதே என் மனதில் இடம் பிடித்து விட்டார். காரணம் எனது தகப்பனார் போலவே வெள்ளை ஆடை, நரைத்ததலை, சிரித்த முகம். எனது தகப்பனார் காங்கேசந்துறை நடேஸ்வராக்கல்லூரியில் கனிஸ்டபாடசாலை அதிபராக இருந்ததால் அவரும் வெள்ளை வேட்டி, வெள்ளை முழு நீளநாசனல் சட்டை அணிந்திருப்பார்.

மேலும் படிக்க ...

புடைமாற்று ஒப்புமைக் கோட்டிபாட்டில் வீரசோழியம் - - முனைவர் ரா.பிரேம்குமார் - உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),திருவானைக்கோவில், திருச்சி-5,

விவரங்கள்
- முனைவர் ரா.பிரேம்குமார் - உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),திருவானைக்கோவில், திருச்சி-5,
ஆய்வு
30 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச்சுருக்கம்:

தமிழகத்தில் வேற்றுநாட்டார் ஆட்சியும், மொழியும், மதங்களும் புகுந்தமையால் சில மாற்றங்கள் ஏற்பட்டன. மொழியில் புதுவாழ்வு தோன்றியது. இவ்வாழ்வு மதச்சார்புடையோரால் மக்களிடையே பரவியது. ஓரளவு இலக்கிய உலகிலும் நிலைபெற்றது. இதனால் இலக்கண ஆசிரியர்கள் மொழியின் நிலை கண்டு புதிய விதிகள் வகுக்க வேண்டிய பொறுப்புடையர் ஆயினர். இச்சூழ்நிலையில் எழுந்த இலக்கணமே வீரசோழியம் ஆகும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எழுதப்படும் இலக்கணம் அக்கால மொழியமைப்பை விளக்கிக் கூறவேண்டும். மொழியில் காலவோட்டத்தில் விளைந்துள்ள மாற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனும் கருத்துகளை இலக்கணத்தின் பண்பாக ஏற்றுக் கொள்வோமேயானால் வீரசோழியம் அக்கால மொழிப்பண்பை விளக்க சிறந்த நூலாகத் திகழ்கிறது.

வீரசோழியம் முழுவதும் இலக்கணக் கூறுகள் வடமொழி மரபின் நோக்கில் வருணனையாகவும் ஒப்புமையாகவும் இடம்பெறுவதால் வடமொழியாளர்க்காக இந்நூல் எழுதப் பட்டிருக்கலாம் எனவும் வடமொழி வல்லோர் தமிழ் மொழியறிவு பெறும் பொருட்டு இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம். வடமொழியாளர்க்கு தமிழ் கற்பிக்கும் நோக்கில் வடமொழி மரபுகளை தமிழ்ப்படுத்தி புடைமாற்று ஒப்புமை இலக்கண அடிப்படையில் அமைத்துள்ளார் எனும் கருத்தாக்கம் பெறப்படுகிறது. இதன் அடிப்படையில் வீரசோழியம் ஆராயப்பட்டு கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன.

முன்னுரை:

உலகில் உருக்கொண்ட ஒவ்வொரு மொழிக்கும் குறிப்பிடத்தக்க நோக்கமும் சிந்தனை மரபும் உண்டு. அதனோடு தொடர்புடைய இலக்கண உருவாக்கமும் அத்தகையதே. மொழி , இலக்கியம் கற்க உதவுதல், மொழிச்சிதைவைத் தடுக்க முனைதல், மொழியில் வளர்ந்துவரும் புதிய பரிணாமங்களை ஏற்று மொழி வளர்ச்சிக்குத் துணைநிற்றல் என உலக அளவில் இலக்கண உருவாக்க நோக்கங்கள் பல்வேறு வகையாக அமைகின்றன. ஒரு மொழியின் கண் உள்ள எழுத்தமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு போன்றவற்றை வரையறை செய்து விளக்குவது இலக்கணமாகும். இவ்விலக்கணத்தினால் மொழியின் வளமை, மரபு, கட்டமைப்பு வரையறைகளை விளக்குவதிலும் இலக்கணம் இன்றியமையாத இடம் வகிக்கிறது. உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்குமே இலக்கணக் கட்டுக்கோப்பும் வரையறையும் உண்டு. அவ்வாறு இல்லாமற்போயின் ஒருவர் பேசுவது இன்னொருவருக்கு புரியாமல் போய்விடும். `

மேலும் படிக்க ...

பவளவிழா காணும் படைப்பிலக்கியவாதி பேராசிரியர் ஆசி. கந்தராஜா! மார்ச் 29 இல் சிட்னியில் பாராட்டு விழா! பல்வேறு இலக்கியவிருதுகளைப்பெற்ற தாவரவியல் அறிஞர்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
30 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தாவரவியல் அறிஞரும், எழுத்தாளருமான பேராசிரியர் ஆசி.கநதராஜா அவர்களின் பவள விழாவினையொட்டி வெளியாகும் எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரை. பதிவுகள் சார்பில்  அவரை இத்தருணத்தில் வாழ்த்துகிறோம். - வ.ந.கிரிதரன் -


எமது தமிழ் சமூகத்தில் தமது தொழில்சார் அனுபவங்களை படைப்பிலக்கியத்தில் வரவாக்கியிருப்பவர்கள் மிகவும் குறைவு. எனினும், தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில், குறிப்பாக அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் வாழும் விலங்கு மருத்துவர் நொயல் நடேசன், மற்றும் தாவரவியல் பேராசிரியர் ஆசி. கந்தராஜா ஆகியோர், தாம் சார்ந்திருந்த தொழில் துறையில் தாம் கற்றதையும், பெற்றதையும் புனைவுசாரா பத்தி எழுத்துக்கள் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வாண்டு தனது பவளவிழாவை கொண்டாடும் பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான ஆசி. கந்தராஜாவுக்கு இம்மாதம் 29 ஆம் திகதி சனிக்கிழமை அவுஸ்திரேலியா சிட்னியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரை வாழ்த்தியவாறே இந்தப் பதிவை எழுதுகின்றேன்.

எனக்கு அவரை கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் நன்கு தெரியும். அவரது எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் அறிந்திருந்திருந்தமையால், 1997ஆம் ஆண்டு எனது எழுத்துலக பிரவேச வெள்ளிவிழாக்காலத்தில் மெல்பனில் நடந்த விழாவுக்கு அவரை தலைமை தாங்குவதற்கு அழைத்திருந்தேன். அந்த விழா மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் அவரது தலைமையில் நடந்தபோது, மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை, கவிஞர் அம்பி, ஓவியர் கே.ரி. செல்வத்துரை, அண்ணாவியார் இளைய பத்மநாதன் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க ...

வன்னிச் சங்கம் கனடா: 'நிலக்கிளி' அ.பாலமனோகரனின் இரு நூல் அறிமுக விழா!

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
30 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

*அறிவிப்பைத் தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு தடவை அழுத்தவும்.

தமிழ் – மராட்டி தொடர்புகள் - ஒரு பருந்து பார்வை! - முனைவர் க.சக்திவேல், தவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கீழ்ப்பாக்கம், சென்னை – 600010. -

விவரங்கள்
- முனைவர் க.சக்திவேல், தவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கீழ்ப்பாக்கம், சென்னை – 600010. -
ஆய்வு
30 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

              - சரஸ்வதி மஹால் நூல் நிலையம் -

மராட்டி-தமிழ் தொடர்புகள்; வரலாற்றுப்பின்னணி

பண்டைக் காலந்தொட்டே ஆசியக் கண்டத்தின் முக்கிய நிலப்பரப்பாக இந்தியா விளங்கி வருவதால், உலக நாடுகள் பலவும் பல்வேறு நிலைகளில் இந்தியாவுடான உறவுகளைப் பேணுவதில் முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளன. குறிப்பாக வணிகம் செய்தல், சமயத்தைப் பரப்புதல், அரசியல், பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்துதல் போன்றவை அவர்களின் முக்கிய நோக்கங்களாக இன்றளவும் உள்ளன. வெளிநாட்டவர்கள் தாக்கத்தில் இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்களும், குறுநில மன்னர்களும் தங்களின் மேலாதிக்கத்தைச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஒரு மொழிசார் நாகரிகம் பிற மொழிசார் நாகரிகத்திலிருந்து கடன் பெறுவது தொன்றுத்தொட்டு உலக மக்களிடையே காணப்படும் பண்பாட்டுப் பரிமாற்றப் போக்காக அமைகிறது. பொதுவாக வேற்றுநாட்டு அரசர்கள் பிற நாட்டின் மீதான தங்களுடைய ஆதிக்கத்தை, சமயத்தின் வழியாகவும் மொழியின் வழியாகவும் செலுத்திப் பண்பாட்டு மாற்றங்களை நிகழ்த்தினர். இதனை மணவாளன் அவர்கள் பின்வருமாறுக் கூறுகிறார். “கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தே விளைந்த அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டிலும் சமுதாயத்திலும் பல்வேறு பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்தின என்று வரலாற்று வல்லுநர்கள் கருதுகின்றனர். வேற்று அரசர்களின் ஆட்சி, வேற்றுச் சமயத்தின் செல்வாக்கு, வேற்று மொழியின் ஆதிக்கம் போன்றன இம்மாற்றங்களை உண்டு பண்ணின” (அ.அ.மணவாளன்:2009:100) இவரின் கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

மேலும் படிக்க ...

ஏ தாழ்ந்த யாழ்ப்பாணமே! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
28 மார்ச் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஏ தாழ்ந்த யாழ்ப்பாணமே!

தமிழகத்தின் நிலை கண்டு அறிஞர் அண்ணா 'ஏ! தாழ்ந்த தமிழகமே!' என்று மனம் நொந்து நூலெழுதினார். உரைகள் பல ஆற்றினார். மக்களைத் தட்டி எழுப்பினார். விழிப்படைய வைத்தார். என் பிரியத்துக்குரிய யாழ் மண்ணின் அண்மைக்கால நிகழ்வுகள் யாழ்ப்பாணம் தாழ்ந்து விட்டதா என்னும் ஒரு கேள்வியை எழுப்புகின்றன. அல்லது யாழ்ப்பாணத்தின் மேன்மையினை கீழ்மைத்தனமான செய்லகள் சில மூடி மறைத்துவிட்டனவா என்ற கேள்வியையும் எழுப்புகின்றன.

இலங்கையில் தமிழர்கள் வடகிழக்கில் செறிந்து வாழ்கின்றார்கள். ஏனைய பகுதிகளில் நடக்காத பல செயல்கள் யாழ் மாவட்டத்தில் தற்போது நடக்கின்றன. அவை யாழ் மண்ணின் எதிர்காலம் பற்றிக் கேள்விகளை எழுப்புகின்றன.

அடிக்கடி நடக்கும் வாள்வெட்டுச் சம்பவங்கள்! பணம் சம்பாதிகக் வேண்டுமென்ற வெறியில் நிகழும் முறைகேடான நிகழ்வுகள். அடிக்கடி நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள். அண்மையில் வீட்டுச் சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவர் ஒருவரின் வீட்டினுள் அத்துமீறிப்புகுந்த ஒருவன் அவரது தாலிக்கொடியைப்பறித்தெடுத்துச் சென்றிருக்கின்றான். இளம் அரசியல்வாதிகள் சிலர் நடந்து கொள்ளும் அநாகரிக முறை. பெண்களைப்பற்றிய பகிரங்கமான அவதூறுகள். போலி முகநூற் கணக்குகள் மூலம் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரியிறைத்தல். யாழ் பல்கலைகக்ழக மாணவ்ர்கள பட்டமளிப்பு விழாவைக் களியாட்ட விழாவாக மாற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். இது போதாதென்று  யு டியூப் அங்கிள், அன்ரிமாரின் இளம் சமுதாயத்தின் மீதான எதிர்மறையான தாக்கங்கள்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. இலங்கை முன்பள்ளிகள் ஒரு பார்வை ! இளந்தளிர்கள் துளிர்விடட்டும் ! - பவானி சற்குணசெல்வம், நெதர்லாந்து -
  2. நேர்காணல்: கவிஞரை அறிந்துகொள்வோம் – அவருக்கு உதவிக்கரம் நீட்டுவோம்! - லதா ராமகிருஷ்ணன் -
  3. நடந்தாய் வாழி வழுக்கையாறு - பவானி சற்குணசெல்வம், நெதர்லாந்து -
  4. தாமரைச் செல்வியின் 'யாரொடு நோவோம்?" - வ.ந.கிரிதரன் -
  5. படித்தோம் சொல்கின்றோம்: வி.எஸ். கணநாதன் எழுதிய நிம்மதியைத் தேடி ( கதைத்தொகுதி )! வாசகருக்கு புதிய அனுபவங்களைத் தரும் நூல்! - முருகபூபதி -
  6. கவிதை: பாவப்பட்ட இரவு - இக்பால் அலி -
  7. சிறுகதை: தென்புலத்தார் தெய்வமுணர் படலம் - அன்பரசன் அப்பாச்சாமி -
  8. மெல்பன்: அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் தமிழ்மொழிச்சாதனை விழா! - தகவல்:முருகபூபதி -
  9. க்ரியா ராமகிருஷ்ணனும் , ரோஜா முத்தையா நூலகத்துக்கான அவரது பங்களிப்பும், அது பற்றிய பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் உரையும்! - வ.,ந.கிரிதரன் -
  10. மகிழ்ச்சியான ஒரு தீவு! (2) - ஶ்ரீரஞ்சனி -
  11. தமிழின் சொத்து உ.வே. சா(உ. வே. சாமிநாதையர்)! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  12. நதியில் நகரும் பயணம் 12: அம்ஸ்ரடாம்! - நடேசன் -
  13. வாசிப்பும், யோசிப்பும்: நூல் அறிமுகம் - சார்பியல் தத்துவம் என்றால் என்ன? - வ.ந.கிரிதரன் -
  14. விண்வெளி வீரரே! வருக! வருக!
பக்கம் 3 / 104
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி