பதிவுகள் முகப்பு

வ.ந.கிரிதரன் பாடல்- நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே!

விவரங்கள்
வ.ந.கிரிதரன்
கலை
05 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி. 


நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே!
( இசை & குரல் - AI Suno  ஓவியம் - AI)

 பாடலைக் கேட்டுக் களிக்க


நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே

சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

உன் அன்பின் வலிமை ஆட்கொள்ள
என் நிலை குலையும் ஆனால்
இன்பத்தேன் குடிக்கும் தேனி ஆவேன்
அன்பே .அது போதும் எனக்கு.

நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

எதிர்பார்ப்பு அற்றது தூய அன்பு.
எதிர்பார்ப்பில் தூய்மை எங்கே கூறு?
இருப்பில் இதுபோல் ஓருறவு வரப்பிரசாதம்.
இல்லையா அன்பே நீயே கூறு.

மேலும் படிக்க ...

இந்தியப் பயணத்தொடர்: சாஞ்சியின் தூபிகள் – அசோகனின் கதை, புத்தரின் கலைச்சின்னங்கள்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
04 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


போபால் நகரத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாஞ்சியில், மன்னன் அசோகனால் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த தூபி அமைந்திருக்கிறது. இதைச் சுற்றிப் பல தூபிகள் உள்ளன  இந்த தூபி புத்தரின் எச்சங்களுடன் கட்டப்பட்டதோடு, அதன் ஆடம்பரமான கூம்பு (கிரீடம் போன்ற அமைப்பு) பார்வையாளர்களை கவர்கிறது. தூபியின் நான்கு பக்கங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாசலிலும் வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய சிற்பங்கள், குறிப்பாகப் புத்தரின் ஜாதகக் கதைகள், பிறப்பு முதல் பரிநிர்வாணம் வரை உள்ள நிகழ்வுகள் மற்றும் அசோக மன்னரின் வாழ்க்கைச் சம்பவங்கள் கல்லில் காவியமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

ஒரு சிற்பத்தில், சுத்தோதன மன்னருக்கு வாரிசு கிடையாது என்ற எண்ணத்தில் அவரது மனைவி மாயாதேவி, தங்கையான கவுதமியை மணம் செய்யுமாறு வற்புறுத்துகிறாள். மன்னர் சம்மதிக்காமலிருந்தாலும், பட்டத்துக்கு வாரிசு தேவை என்பதாலேயே அந்த திருமணம் நடைபெறுகிறது. அதன் பின்னர் மாயாதேவியின் கனவில் வெள்ளை யானை தோன்றியதும் , ஜோதிடர்கள் அதனை நல்ல அறிகுறியாக அரசனிடம் கூறுகிறார்கள். இத்தகைய பல புராணக் கூறுகள் தூபியில் சிற்பமாகக் காணப்படுகின்றன.

இந்த தூபியின் வாசல் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதைகள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் புத்தரின் முற்பிறவிக் கதைகள் பிரதானமாக இடம் பெற்றுள்ளன. இவை இந்தியச் சிற்பக் கலையின் தொடக்கமாகவே கருதப்படுகின்றன. அதாவது  மாமல்லபுரத்து சிற்பங்களிலும் 900 வருடங்கள் தொன்மையானது.

தூபியின் சில தூண்களில் அசோக சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிற்பங்களில் இந்தியரல்லாதவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் உடைகள் மற்றும் பாத அணிகளிலிருந்து அவர்கள் கிரேக்கர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். இது கிரேக்கர்களும் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டிருப்பதை காட்டுகிறது. இவற்றின் மூலம், ஒரு கால கட்டத்தில் மவுரியச் சாம்ராஜ்யம் எப்படி இயங்கியது என்ற  வரலாற்றைச் சிற்பங்களினாலேயே நமக்கு அறிய முடிகிறது.

மேலும் படிக்க ...

கவிதை: எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தியாறே வா! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் .... அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் .... அவுஸ்திரேலியா -
கவிதை
04 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

    வெள்ளத்தின் வேதனை போக்கிடவே வா
    பள்ளத்தில் வீழ்ந்தோரை எண்ணியே வா
    உள்ளத்தால் உடைந்தோர்க்கு உயர் மருந்தாய்வா
    எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தி யாறேவா

    மண்ணுக்குள் புதையுண்டு மாண்டோரை நினைக்கும்
    மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா
    மழையாலே அள்ளுண்டு வீடிழந்து நிற்பாரின்
    மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா

    கும்பிட்ட கோவிலெங்கும் குளமாகி நிற்கையிலே
    நம்பிக்கை இழக்காமல் நாடினார் இறையிடமே
    இறைதூதர் வடிவிலே எங்கிருந்தோ வந்து
    உதவினார் குணம்போற்ற ஓடிவா புத்தாண்டே

    விளம்பரம் தோடாமல் விரைந்தோடி வந்து
    வீழ்ந்திருப்பார் இடம்பார்த்து தேவையினை அறிந்து
    உளமுவக்க உவந்திட்டார் உச்சிதொட்டு வாழ்த்துதற்கு
    புத்தாண்டே நீயும் புறப்பட்டு வந்துவிடு

மேலும் படிக்க ...

இளைய பாரதி பற்றி மேலும் சில சிந்தனைகள்! - எல்.ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
03 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



அறிமுகம்

தனது, 23ம் வயதில் சேதுபதி தமிழாசிரியனாய் இருந்த பாரதியை, ஜி.சுப்ரமணிய ஐயர் அழைத்து செல்கின்றார் (பத்திரிகை தொழிலில் ஈடுபடுத்தும் பொருட்டு). இரண்டு வருடங்களில், அவனோ புதுமையாக வலம் வருகின்றான். அவனது வியக்க வைக்கும் மொழிபெயர்ப்பு திறனும், பெண்கள் பொறுத்தும் சாதிய கீழ்நிலையில் ஜீவிக்க கூடியவர்கள் பொறுத்தும், இன ஒற்றுமை பொறுத்தும் அவனுள் கொந்தளிக்கும் எண்ணக்கருக்கள் அறிஞர்களையும் திகைக்க வைக்கின்றது. ஆங்கிலேயரின் ஆட்சியின்பால் சமரசமற்ற வெறுப்பணர்வை உமிழும் அவன், அவர்களின் ஆதிக்கத்தின் சூட்சுமங்களை கண்டுணரும் கூர்மதி படைத்தவனாகவும் இருக்கின்றான். மக்கள் சைன்யத்தை வாஞ்சையுடன் நெருங்கும் அவன், தனது எழுத்தை அவர்களுக்காகவே அர்ப்பணிக்க முடிவு செய்கின்றான். இவ்வளவுமாய் இல்லை என்றால், இல்லை என்பதே உறுதியான விடையாகின்றது. கைலாசபதியின் வார்த்தைகளில் கூறுவதானால்:     “அவனது பார்வை பாயாத இடமே இல்லை” எனலாம்.

 24 வயது இளைஞனாய் பாரதி, பின்வருமாறு எழுதுகின்றான்:

“அனேக நூற்றாண்டுகளாக நித்திரை போய்க் கொண்டிருந்த ஓர் பெருந் தேசமானது இப்போது கண் விழித்து ஏற முயற்சி பண்ணும் சமயத்தில் அமுக்கி விடுவது இலேசான காரியமாகுமா”
(பக்கம்: 280)

இங்கே, மூன்று விடயங்கள் காணக்கிட்டுகின்றன:

1. அனேக நூற்றாண்டுகளாய் நித்திரை கொண்டிருந்த ஒரு தேசம்
2. அது, இப்போது, கண் விழித்து எழும் (அரசியல் உணர்வு பெற்றதாய்).
3. அதனை அமுக்கி விடுவது, அத்தனை இலேசான காரியமாக போவதில்லை என்பது.

மேலும் படிக்க ...

ஆய்வு: பெரியாரியம் : மார்க்சியம் - ஒப்பீடு! - செ. சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் – 636011 -

விவரங்கள்
- செ. சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் – 636011 -
ஆய்வு
02 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[முனைவர் பட்ட ஆய்வாளராகவிருந்த செ.செளந்தரி (இப்பொழுது முனைவராகவிருப்பார் என எண்ணுகின்றோம்) பெரியார் பற்றிப் பதிவுகள் இணைய இதழில் எழுதி,  02 ஜனவரி 2020  வெளியான இக் கட்டுரை பெரியாரைப்  பற்றிய முக்கியமான கட்டுரை. தற்போதைய தமிழக அரசியற் சூழலில் இதுபோன்ற கட்டுரைகள் பெரியாரைப்பற்றிய இன்றைய தலைமுறையினரின் புரிதலுக்கு வழி வகுக்கின்றன என்பதால் , இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் -]

பெரியாரின் சிந்தனை முறையியல் நவீனக்கோட்பாடுகளனைத்திற்கும் அடிப்படையாக விளங்கி நிற்கும் மார்க்சியத்துடன் அதன் நீட்சிகள் ஒன்றுபட்டும் முரண்பட்டும் நிற்கின்ற காலச்சூழலில், பெரியாரியச் சிந்தனை முறையியலை மார்க்சியத்துடன் ஒப்பீடு செய்வது கோட்பாட்டு விவாதங்களாக அமைவதுடன், இந்திய அளவில் தனித்தச் சிந்தனை மரபாகப் பெரியாரை உள்வாங்கிக்கொள்ளவும் துணைபுரியும் எனலாம். இந்திய அளவில் மார்க்சியம் என்பது வறட்டுத்தனமான வடிவங்களில் பொருளியல் சார்ந்த அர்த்தப்பாடுடன் புரிந்துகொள்ளப்பட்டுள்ள நிலையில், பெரியாரியம் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கின்ற கருத்தியல்களையும் செயல்பாட்டினையும் கொண்டிருக்கிறது. பெரியாரிடம் மார்க்சியம் பற்றிய கருத்தியல்கள் மிகப் பரந்துப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது எனலாம். “கார்ல் மார்க்ஸ் படைப்புகள், லெனின் படைப்புகள் என இன்னும் சொல்லப்போனால் 1848 இல் மார்க்ஸ், ஏங்கெல்சால் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட்டுக் கட்சி அறிக்கை, பத்து வயதுவரை மட்டுமே பள்ளிக்கூடம் சென்று பயின்ற பெரியாரால் 1931 இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அது முழுமையாக அல்ல ஒரு சிறுபகுதி அளவில் மொழி பெயர்க்கப்பட்டது" (இரா. அறவேந்தன் (ப.ஆ.), இந்தியத் தத்துவ மரபில் பெரியாரியம், 2014, ப. 149) பெரியாரின் இத்தகைய செயல்பாடுகள் மார்க்சியத்தை இந்தியச் சமூகத்தில் பொருத்திப்பார்க்கும் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த்து எனலாம். ரஷ்யா, சீனப் பயணங்களுக்குப் பின்னால் பொதுவுடைமைச் சித்தாந்தங்களும் புரட்சிகளும் இந்தியச் சமூகங்களில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றனவா என்ற விவாதங்களை நிகழ்த்துகிறார். அதன்பின்னணியிலேயே பொதுவுடைமைச் சித்தாந்தங்களை மொழிப்பெயர்த்து வெளியிடுகிறார் என அறியமுடிகிறது.

மேலும் படிக்க ...

பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
02 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!

இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
அது மட்டுமா,
ஆம்! 
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.

மேலும் படிக்க ...

அறிமுகம்: 'வ.ந.கிரிதரனின் பாடல்கள் ' (V.N.Giritharan Songs) 'யு டியூப் சானல்'!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
01 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


என்னுடைய V.N.Giritharan Songs ( வ.ந.கிரிதரன் பாடல்கள்)  என்ற யூடியூப் சேனலில் , தளத்தின் வடிவமைப்புக்குரிய என் பாடல்களின் காணொளிகளை இணைத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.  என் பாடல் வரிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் இணைத்து உருவாக்கப்பட்ட பாடல்கள் இவை. அண்மையில் இணைக்கப்பட்ட பாடல்கள் சில வருமாறு:

1. என் குருமண் காடே! 
2. காலவெளி நாம்
3. இன்று புதிதாய்ப் பிற்ந்தேன் நான்.
4.  இயற்கையைப் பேணுவோம்!
5. மனத்தை மயக்கும் இந்த நிலா!

இவற்றுடன் மேலும் பல தமிழ்ப் பாடல்கள் , அவற்றுடன்  ஆங்கிலப் பாடல்கள் சிலவும் உள்ளன. அவற்றைக் கேட்டுப்பாருங்கள்.  உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி ஆதரவளியுங்கள். இதற்காக நீங்கள் பணமெதுவும் செலுத்த வேண்டியதில்லை. உங்களுடைய ஆதரவும் ஊக்கமும்  மிகவும் அவசியம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மேற்படி  யூடியூப் சேனலுக்குச் சென்று, "Subscribe" பட்டனை அழுத்தி,  பாடல்களுக்கான காணொளிகளைப் பார்த்து மகிழ்வதுடன், உங்கள் கருத்துக்களையும் தெரிவிப்பதுதான்.

இவ்வருடம் மேலும் புதிய பாடல்களுக்கான காணொளிகள் பலவற்றை வெளியிடவுள்ளேன், அதற்கு உங்கள் ஆதரவும், ஆக்கபூர்வமான கருத்துகளும் நிச்சயம் உதவும். என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' என்னும் YouTube  சானலுக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1

சிறுகதை: நிவாரணம்! - டீன் கபூர் -

விவரங்கள்
- டீன் கபூர் -
சிறுகதை
01 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அந்த மழை இரவு, கிராமத்தின் எல்லைகளில் ஓடும் சிறிய ஆற்றின் குரல் முதலில் மெதுவாகக் கேட்டது. பிறகு அது கோபமடைந்த குழந்தையைப் போலக் கர்ஜித்தது. வெள்ள நீர், எச்சரிக்கையின்றி, இரவு இரண்டு மணிக்கு வீடுகளில் புகுந்துகொண்டது.

பள்ளித் தெருவின் கடைசி வீட்டில் வசித்த முஹீத், நனைந்த பாய் மீது தூங்கிக் கொண்டிருந்த மகன் உனைபை தூக்கிக்கொண்டு வெளியில் ஓடியபோது, வீடுகளின் கதவுகள் ஒன்றின் பிறகு ஒன்று திறந்து, மக்கள் தங்களின் குடும்ப மரபைக் கடத்துவது போல, கோப்பைகள், ஆவணங்கள், படுக்கைகள், ஒரு பழைய றங்குப் பெட்டி...... எதை முடியும் என்பதையெல்லாம் கைகளில் பற்றிக்கொண்டு ஒளிந்தார்கள்.

வெள்ளத்தைப் பார்க்க வந்த கிராமத்து வீதி ஒருவேளை நாகரிகத்தின் இதயம் போல இருந்தது; அன்றிரவு, அது எல்லோரினதும் பயத்தை ஏற்றிக்கொண்ட இருண்ட மேடையாக மாறியது. மழை போகும் அறிகுறி எதுவும் இல்லாத அச்சமான இருளில், ஒரே ஒலி நீரின் சத்தம்.

மேலும் படிக்க ...

சிறுகதை: கனவு மெய்பட வேண்டும்… -பாலமுருகன்.லோ-

விவரங்கள்
-பாலமுருகன்.லோ-
சிறுகதை
01 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“கௌதம், படிப்படி என்று தொண்டைத் தண்ணி வற்றுகிற அளவுக்குக் கத்துறேனே! கொஞ்சமாவது இந்த அம்மா மீது கரிசனை இருக்கா?”

“ம்மா.. ஏம்மா சும்மா இதையே சொல்றீங்க, நான் எப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்ப நீங்க கத்திக்கிட்டே இருக்கீங்க. இந்த அம்மாவுக்கெல்லாம் எங்கிருந்துதான் இந்தக் கடவுள் மூன்றாம் கண்ணைக் கொடுத்தாரோ! இப்பதான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு இந்த மடிக்கணினியை எடுத்து ஃபிரெண்ட்ஸோட வாட்ஸ்அப்பில் பேசிட்டு இருந்தேன். ம்மா, கொஞ்ச நேரம்தான் இப்படிப் பேசுறேன், இது உங்களுக்குப் பொறுக்காதா? இவ்வளவு நேரம்தான் படிச்சுக்கிட்டே இருக்கிறேன். கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் எடுக்கணுமல்ல, அதான்.”

“ஏன்டா, அதுக்குன்னு வாட்ஸ்அப்பில் பேசணுமா? தினமும்தான் ஸ்கூல்ல பேசுறீங்க, திரும்பவும் வீட்டுக்கு வந்து அந்தப் பேச்சு தொடரணுமா? சரி, அப்படி என்னன்னுதான் பேசுவீங்க? எனக்கும் சொன்னா நானும் தெரிஞ்சுக்குவேன்ல.”

"நாங்க சின்னப் பசங்க ஏதாவது பேசிக்கிட்டு இருப்போம்! அதையெல்லாம் எப்படி உங்ககிட்ட சொல்றது? நீங்க சொன்ன மாதிரி ஸ்கூல்ல எல்லாம் நாங்க இந்த மாதிரி பேசுறதெல்லாம் இல்லை. உங்களுக்கு நல்லாவே தெரியும், ஸ்கூல்ல ஆங்கிலம்தான் பேசணும், மீறி நாம தமிழ் பேசினோம்னா பனிஷ்மென்ட்தான். அப்படி இருக்க, எப்படி நீங்க சொல்லலாம் நாங்க ஸ்கூல்ல பேசிக்கிட்டே இருக்கோம்னு? ஏதாவது பேசணும்னு பேசக்கூடாது. நான் இப்போ இதை நிறுத்திட்டு என்னோட புத்தகத்தை எடுத்துக்கிட்டு உட்காரணும், அவ்வளவுதானே?"

“இல்லடா, நான் அப்படிச் சொல்ல வரல. உனக்கு ரெஸ்ட் தேவைதான், நான் இல்லைன்னு மறுக்கலை. உன்னோட கண்ணுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் தேவைதான். அப்படி இருக்க, மீண்டும் நீ மடிக்கணினியை எடுத்துக்கிட்டு அந்த ஸ்கிரீன்ல கேம்ஸ் விளையாடினேன்னா, எப்படி உன்னோட கண்ணுக்கு ரெஸ்ட் கிடைக்கும்? அதான் உன்னை இதை மூடி வைக்கச் சொன்னேன்.”

மேலும் படிக்க ...

அஞ்சலி: ஓவியர் ரமணி ஆற்றல் மிக்க ஓவியக் கலைஞர்! சிற்பியும் கூட! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
30 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஓவியர் ரமணி மறைந்த செய்தியினைத் தாங்கி முகநூல் வெளியானது. ஆழ்ந்த இரங்கல்.

பல தசாப்தங்களாக இலங்கையில் வெளியான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அதிகமாக ஓவியம் வரைந்தவர் இவராக இருக்கக்கூடும். அவ்வப்போது இவரது ஓவியங்கள் தென்பட்டுக்கொண்டேயிருக்கும், எழுத்தாளர் டானியலின் 'பஞ்சமர்' நாவலின் முதற் பதிப்புக்கு அட்டைப்படம் வரைந்தவர் இவரே.  செங்கை ஆழியானின் 'போரே நீ  போய்விடு' நாவலுக்கு அட்டைப்படமும், ஓவியங்களும் வரைந்தவர். பூபாலசிங்கம் வெளியீடாக வெளிவந்த அந்நாவலில் இவர் வரைந்த ஓவியங்கள் பலவற்றைக் காணலாம்.

'தற்காலத்து யாழ்ப்பாணத்து ஓவியர்கள்' என்னும் தனது நூலில் பேராசிரியர் சோ.கிருஷ்ணராசா ஓவியர் ரமணி பற்றி எழுதிய குறிப்பு ஓவியர் ரமணி பற்றிப் பல முக்கிய விபரங்களைத் தருகின்றது. அதில் குறிப்பிடப்படும் ஓவியர் ரமணி பற்றிய முக்கிய விபரங்கள் வருமாறு:

மேலும் படிக்க ...

காரல்யுங்கின் ஆளுமைவகைப்பாடு! - முனைவா் பா.பொன்னி, இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி ( தன்னாட்சி ), சிவகாசி. -

விவரங்கள்
- முனைவா் பா.பொன்னி, இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி ( தன்னாட்சி ), சிவகாசி. -
ஆய்வு
30 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆளுமையைப் பற்றிய விரிவான கருத்துக்களை எடுத்துரைத்தவர்களுள் காரல் யுங் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் பகுப்பு உளவியல் கோட்பாட்டைத் தோற்றுவித்தவர். இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகத்தில் நம்பிக்கை கொண்ட தீவிரமான சமயவாதியாகத் திகழ்ந்தவர். இயல்பான மனித உலகம் அவருக்கு எவ்வளவு உண்மையானதோ, அந்த அளவு அமானுட உலகமும் அவருக்கு உண்மையானது. அந்த நம்பிக்கையை அவருடைய சுயசரிதையும் மற்றும் அவர் எழுதிய உளவியற் புத்தகங்களும் மிகுந்த அக்கறையுடன் வெளிப்படுத்தி உள்ளதை அறிய முடிகின்றது. அவா் குறிப்பிட்டுள்ள ஆளுமை வகைப்பாடுகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

பிராய்டும் யுங்கும்

காரல் கசுதவ் யுங் கெஸ்வில் நகரில் 1875 ஜீலை 26 ஆம் நாள் பால்அக்கிஸ், எமிலி பிரிஸ்வொ்க் தம்பதியின் மகனாகப் பிறந்தார். 1895 இல் University of Basel இல் மருத்துவம் படித்தார். 1900 இல் Zürich நகரில் உள்ள Burghölzli என்ற மருத்துவமனையில் மனநோய் மருத்துவராக Eugen Bleuler என்பவருடன் இணைந்து பணியாற்றினார். அவர் சிக்மண்ட் பிராய்டுடன் ஏற்கனவே தொடா்பு கொண்டிருந்தார். யுங்கின் ஆய்வேடு 1903இல் வெளியிடப்பட்டது. அவரது ஆய்வேட்டின் தலைப்பு On the Psychology and Pathology of So-Called Occult Phenomena.1 1906இல் Studies in Word Association இல் அதனை வெளியிட்டார். அதனுடைய பிரதி ஒன்றினை பிராய்டுக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னா் இருவருக்கும் இடையில் நெருங்கிய தொடா்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க ...

நினைவுக் குளிப்பு: பொன்னம்மா ரீச்சர்! - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
28 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நினைவுகளைத் தேடித் தேடி ‘திகம்பர நினைவுக’ளாகவும், ‘கலாபன் கதை’களாகவும், ‘காலக் கனா’ மற்றும் ‘குருடர்க’ளாகவும் எழுதி தொகுப்புகளாக்கிய பின்னரும், மனத்தின் ஆழவும், அதன் பக்கங்களில் ஒட்டிக்கொண்டும் கிடந்து நினைவுகள் இன்னும் வெடித்தெழவே செய்துகொண்டிருக்கின்றன.  அவை, திகைக்க வைக்கும்படி முக்கியமான, என்னை உருவாக்கிய மூலாதாரமான சம்பவங்களாகவும் இருக்கின்றன. அவை, எவ்வாறு இதுவரை காலத்தில் எனக்குள் தவறிப்போய்க் கிடந்தனவென நானறியேன். அதனால் மேலும் ஒரு நினைவுக்குளிப்பை நடத்த நான் தீர்மானித்தேன். அந்த எழுச்சி முகிழ்ந்த கணம் இது.

பொன்னம்மா ரீச்சர்

முகங்கள், குறிப்பாக அதிலுள்ள கண்கள், உள்ளங்களின் கண்ணாடி எனப்படுகின்றன. எனக்கு மிக அணுக்கமாயிருந்த பழைய முகங்களென்று தேடினால் இரண்டு முகங்களே உடனடியாகத் தோற்றமாகின்றன.
ஒன்று, எனது அம்மாவினுடையது. மற்றது, பொன்னம்மா ரீச்சருடையது.

பொன்னம்மா ரீச்சர் என்னை அரிவரியில் படிப்பித்த ஆசிரியர். நான் அரிவரி படிக்கப் போன காலத்தில், எங்கள் வீட்டுக்கு அண்மையிலிருந்த பள்ளிக்கூடம், நிர்வாக ரீதியாக எப்படி குறிப்பிடப்பட்டிருந்தாலும், கந்தர் மடமென்றே ஊரில் பெயர்பெற்றிருந்தது. அந்த கந்தர் மடம் பள்ளிக்கூடத்தில் விருப்பத்தோடு நான் படிக்கச் செல்லவில்லை. என்னை வில்லங்கமாய்க் கொண்டுபோய்ச் சேர்த்து படிக்கவைத்தார்கள் அங்கே. அவ்வாறு என் விருப்பமின்றி படிக்க நான் சென்ற அரிவரி வகுப்பில் ஆசிரியராக இருந்தவர்தான் பொன்னம்மா ரீச்சர் – என் முதலாவது ஆசிரியர். அங்கே பொன்னம்மா ரீச்சர் நீண்டகாலம் படிப்பித்திருப்பாராக இருக்கும். ஏனெனில் அந்தப் பள்ளியில் எந்த ஆசிரியரையும்விட ஊரவர் தம் பிள்ளைகளைக் கூட்டிவந்து வகுப்பில் விட்டுவிட்டு அவரோடேயே நிறைய கதைத்துப் போனார்கள்.

பொன்னம்மா ரீச்சர் என்று எண்ணும்போதே எனக்கு அவரது முகம்தான் எப்போதும் ஞாபகம் வரும். அது வட்டமான முகம். இரண்டு வட்டக் கண்கள் அதில். நடு வகிடெடுத்து படிய வாரி கொண்டை போட்டிருப்பார். மூக்குத்தி அணிந்திருந்தார். கழுத்திலே சங்கிலியெதுவுமோ, கையிலே காப்பெதுவுமோ நான் கண்டதில்லை. சின்ன முகமுள்ள வெள்ளி நிற மணிக்கூடு கட்டியிருந்தார்.

மேலும் படிக்க ...

“விமர்சனத்தை ஒடுக்கி, பலவீனங்களை ஆயுதமாக்கும் உள்-வட்ட சர்வாதிகாரங்கள்: சமூகத்தை வீழ்த்தும் நவீன அதிகார நிழல்கள்”! - பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் -
சமூகம்
28 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“விமர்சனத்தை ஒடுக்கி, பலவீனங்களை ஆயுதமாக்கும் உள்-வட்ட சர்வாதிகாரங்கள்: சமூகத்தை வீழ்த்தும் நவீன அதிகார நிழல்கள்”

சமூகம் என்பது கருத்துகளின் கூட்டுச் சுவாசம். ஒரு தலைமுறை எழுந்து நிற்க வேண்டுமெனில், அது கேள்விகளால் ஊட்டமளிக்கப்பட வேண்டும்; விமர்சனத்தால் செம்மையாக்கப்பட வேண்டும்; உண்மையால் வழிநடத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில், சில அமைப்புகள் மற்றும் குழுக்கள், சமூக மாற்றத்தின் பெயரில் அதிகார அரசியலை உள்-வட்டமாக நிறுவி, வெளியில் இருந்து வரும் நேர்மையான விமர்சனங்களையும் கூட பகைமை என சித்தரித்து ஒடுக்குகின்றன. இந்த அதிகாரக் கட்டமைப்பு வெளியில் தெரியாத நிழல் போல செயல்பட்டாலும், அதன் தாக்கம் சமூகத்தின் ஆழ வேர்களையே சிதைக்கும் அளவுக்கு வலிமையானது.

1. விமர்சனத்தை ‘எதிரி’ என மாற்றும் உத்தி: அறிவை ஒழிக்கும் முதல் படி

ஆரோக்கியமான அமைப்புகளில் விமர்சனம் ஒரு திருத்தக் கருவி. ஆனால் அதிகாரம் மையமாகிய அமைப்புகளில், விமர்சனம் ஒரு அச்சுறுத்தல். தவறு சொல்பவர்களை எதிரியாக்கும் போக்கு என்பது:   உண்மையை மறைக்க உதவும் உளவியல் ஆயுதம். தலைமையின் பிழைகளை மறைக்கும் பாதுகாப்பு சுவர் மக்களை அச்சத்தின் மூலம்
கட்டுப்படுத்தும் மௌனச் சட்டம்

"நீ எதிரி" என்ற ஒற்றை வரி, ஒரு வாதத்தை உடைக்க அல்ல – ஒரு வாதத்தை பிறக்க விடாமல் கொல்ல பயன்படுத்தப்படுகிறது. இது தர்க்கத்தை மறுக்கும் செயல் அல்ல; தர்க்கமே தேவையில்லை என்று சொல்லும் அதிகார மொழி. இதன் மூலம், சமூகத்தில் வளர வேண்டிய கேள்வி கலாச்சாரம் சிதைக்கப்படுகிறது, சிந்தனையின் இடத்தில் விசுவாசம் மட்டும் நிறுவப்படுகிறது.

2. உள்-வட்டக் கூட்டமைப்பு: வெளிப்படைத்தன்மையற்ற கூட்டு சர்வாதிகாரம்

மேலும் படிக்க ...

கனடாவில் எழுத்தாளர் விமல் பரம் அவர்களின் 'தீதும் நன்றும்' சிறுகதைத்தொகுப்பு வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: விமலாதேவி பரமநாதன். -
நிகழ்வுகள்
27 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தமிழில் (Gemini AI முன் வைத்து) - முனைவர்பீ. பெரியசாமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர்எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம்கலைக்கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317, தமிழ்நாடு, இந்தியா -

விவரங்கள்
- முனைவர்பீ. பெரியசாமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர்எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம்கலைக்கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317, தமிழ்நாடு, இந்தியா -
ஆய்வு
27 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச்சுருக்கம்
கூகிளால் உருவாக்கப்பட்ட பல்துறை திறன் கொண்ட ஜெமினி செயற்கை நுண்ணறிவு (Gemini AI) மாதிரி, தமிழ் மொழி உள்ளடக்க உருவாக்கம், மெருகேற்றுதல் மற்றும் பல்வகைச் செயல்பாடுகளில் (Multimodal) எவ்வாறு பயன்படுகிறது என்பதை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது. மேலும், இந்தத் தொழில்நுட்பத்தின் பரந்த பயன்பாடு தமிழ் சமூகம், கல்வி மற்றும் உழைப்பின் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் (பாதிப்புகள்) மற்றும் சவால்களை ஆராய்வது இதன் பிரதான நோக்கமாகும். ஜெமினி AI-இன் தமிழ் மொழி செயலாக்கத் திறன்களை ஆழமாகப் பகுப்பாய்வு செய்கிறது. இதில் உள்ளடக்க உருவாக்கம், கலாச்சாரச் சூழலுடன் கூடிய மொழிபெயர்ப்பு, கல்விக்கான உதவிகள் (PPT உருவாக்கம்), தரவுத் தேடல் மற்றும் படங்களை விளக்குதல் போன்ற முக்கியப் பணிகள் விளக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தத் தொழில்நுட்பத்தின் சமூகப் பாதிப்புகளை (வேலை இழப்பு, தவறான தகவல் பரவல்) மற்றும் அதன் பயன்பாட்டில் தொடரும் சிக்கல்கள் (பண்பாட்டுச் சூழல் குறைபாடு, வட்டார வழக்குகள், பயிற்சித் தரவுச் சார்பு) ஆகியவற்றை மையமாகக் கொண்டு இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கியச்சொற்கள்
ஜெமினி AI, செயற்கை நுண்ணறிவு, தமிழ் மொழி, உள்ளடக்க உருவாக்கம், பல்வகைச் செயல்பாடு, மொழிபெயர்ப்பு, கல்விக்கான உதவிகள், உழைப்பின் எதிர்காலம், சமூகப் பாதிப்புகள், பண்பாட்டுச் சூழல்.

முன்னுரை

செயற்கை நுண்ணறிவு துறை வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் தமிழில் அவற்றின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை நான் சற்று விரிவாக ஆராய வேண்டியுள்ளது. அதனடிப்படையில் இக்கட்டுரை (Gemini AI) ஜெமினி செயற்கை நுண்ணறிவு மென்பொருள் எவ்வாறு தமிழில் செயல்படுகிறது என்பதை ஆராயவுள்ளது.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு என்பது இயல்பான மனிதன் தன் அறிவைக் கொண்டு செய்யக் கூடிய செயல்களை இயந்திரம் செயற்கையாக மனிதனால் உள்ளிடப்படும் கட்டளைகளை உள்வாக்கி அதன் அடிப்படையிலான செயல்திட்டங்களை மனிதனைவிட பலமடங்கு வேகத்திலும் துல்லியமாகவும் கொடுக்கக் கூடியது. இதனை,

மனிதரின் நுண்ணறிவுத் திறனைச் செயற்கையாக உருவாக்குவதன் வழியாக ஓர் இயந்திரத்துக்கு மனிதரைப் போலவே கற்கும் திறனும் சிந்திக்கும் திறனும் பிரச்சனைகளுக்கு முடிவுகாணும் திறனும் இருந்தால் அந்த இயந்திரம் செயற்கை நுண்ணறிவு இயந்திரமாகக் கருதப்படுகிறது. அது ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு மனிதர்களால் கற்றுக் கொடுக்கும் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்தும் பகுந்தறிந்தும் தமது குறிக்கோளை அடையும். (தி இந்து தமிழ் நாளிதழ், 14.03.2020, ப.6)

முழுமையாக வாசிக்க

புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முக பகுப்பாய்வு! (2) - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
27 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பகுதி நான்கு:

'அமெரிக்கா' குறுநாவல்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' குறுநாவல் ஈழத்து புகலிட இலக்கியப் பரப்பில் ஒரு மிகமுக்கியமான மைல்கல். இது வெறும் ஒரு தனிமனிதனின் பயணக்கதை மட்டுமல்ல; 80-களில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு தலைமுறையின் அரசியல், உளவியல் மற்றும் சமூகப் போராட்டங்களின் ஆவணம்.

இந்தக் குறுநாவலை நவீன ஆய்வணுகு முறையில் பின்வரும் நிலைகளில் பகுப்பாய்வு செய்யலாம்:

1. நனவோடை உத்தி (Stream of Consciousness)

இக்குறுநாவலின் மிகச்சிறந்த அம்சம் அதன் கதை சொல்லும் முறை. கதாநாயகன் இளங்கோ அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்தச் சிறு காலப்பகுதியில், அவனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.

    கடந்த காலமும் நிகழ்காலமும்: யாழ்ப்பாணத்து வீதிகளும், கொழும்பு சிறைச்சாலையும், அமெரிக்க விமான நிலையத்தின் தனிமை அறையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து வருகின்றன.

மேலும் படிக்க ...

கல்விக் கண் திறத்தல்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
25 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

       - எழுத்தாளர் முருகபூபதி (டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா) -

கல்வி என்பது ஒரு செயல் முறையாகவும், வாழ்க்கை அனுபவம் என இருந்து, தற்போது உலகைத் தெளிவாகக் காணவும், உண்மையைத் தேடவும், பார்வையை விரிவுபடுத்திக் கொள்ளவும், நாம் மற்றோரில் தங்கியிராது சுயாதீனமடையவும் உதவுகிறது. இப்படியான கல்வியையே நாம் பெற்றோர்களாக, நம் குழந்தைகளுக்கு அளிக்க விரும்புகிறோம். ஆனால் ஏழைக் குடும்பம் ஒன்றில் தந்தை இறந்து விட்டால் என்ன நடக்கும்? குறிப்பாகப் போரின் காலத்தில்?
அத்தகைய குழந்தைகளுக்கு,ஓர் இருண்ட உலகமே காத்திருக்கிறது.

துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு இலங்கையர்கள் எப்போதும் ஆழ்ந்த அனுதாபத்தைக் காட்டி வந்துள்ளனர். 75 ஆண்டுகளுக்கும் மேலாக, நாடு முழுவதும் உள்ள மக்கள், இன்னலுக்குட்பட்டவர்களுக்கு ஆதரவாக நிதி திரட்டியும், அயராது உழைத்தும் வந்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கும் மேலான கொடூரமான உள்நாட்டுப் போரையும், அதைத் தொடர்ந்து சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளையும், தொடர் வெள்ளப் பாதிப்புகளையும் நாம் அனுபவித்துள்ளோம்.

சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. ஒரு அளவுக்குமேல் , அவற்றின் அழிவைத் தவிர்ப்பது கடினம். ஆனால் போர் வித்தியாசமானது. போர் என்பது அரசியல் தோல்வியின் விளைவு. அரசியல்வாதிகள் நாட்டை ஆள்கிறார்கள், நாட்டை வறுமைப்படுத்துகிறார்கள், தங்களைச் செல்வந்தர்களாக்கிக் கொள்கிறார்கள். ஆனாலும் நாம், அதாவது இலங்கை மக்கள், அவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். மீண்டும் மீண்டும், பெரும்பாலும் தயக்கமின்றி. நாம் அரசியல்வாதிகளை மட்டுமே குறை கூறலாமா? இது, ஒருவர் தம் வீட்டுக் கதவைத் திறந்து வைத்து விட்டு, திருட்டு நடந்த பிறகு, திருடனைக் குறை கூறுவது போன்றது.

இக்கட்டுரை எனது நண்பரின் கதையைச் சொல்கிறது. போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு ஆதரவாக 12ஆம் வகுப்பு வரை, "சிலோன் மாணவர் கல்வி நிதி" என்ற குறிப்பிடத்தக்க முயற்சியை அவர் துவக்கினார்.

மேலும் படிக்க ...

'ஒருமுனை'யிலிருந்து 'பன்முனை' நோக்கி - சரவதேச அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்திய 2025! - எல்.ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
25 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

2025ம் ஆண்டு ஒரு முடிவுக்கு வருகின்றது. ஆண்டுகள் அல்லது ஆண்டுகளின் இறுதி என்பன,  ஒரு  வசதி கருதி,  ஒரு  சுட்டும் புள்ளியாகவே(Reference Point), தொழிற்படுகின்றது. உலக நிகழ்வுகள் ஆண்டு அல்லது ஆண்டு இறுதி என்ற எல்லைப்படுத்தப்படுவன அல்ல. ஆயினும், 2025ம் ஆண்டின் இறுதி பகுதியை விரும்பியோ விரும்பாமலோ அடைந்துவிட்ட நாம் உலக நடப்புகளை ஒருமுறை திரும்பி பார்ப்பது நன்று. அதிலும், வருட இறுதி குறித்து ஊடகங்களும், உலக தலைவர்களும் மொத்தத்தில் உலகமே கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் போது.

எமது, அண்மைக்கால உலகில், உற்பத்தி வலைப்பின்னல்களையும், விநியோக வலைப் பின்னல்களையும், சிதைத்து நாசம் செய்வதற்கூடு, தமது ஆதிக்கங்களை உலகில் என்றென்றைக்கும் நிலைநாட்டிக் கொள்ள, சம்பந்தப்பட்ட நாடுகள் முயல்வதாய் உள்ளன. முக்கியமாக, சீன-ரஷ்ய-இந்தியா போன்ற புதிதாய் வளர்ச்சி காணும் பொருளாதாரங்களின் வளர்ச்சிகளை கணக்கில் எடுத்து நோக்கும் போது இவற்றை கட்டுப்படுத்தும் முறைமை, இந்நாடுகளுக்கு தேவையாகின்றது –தத்தமது உலக ஆதிக்கத்தை நிலைநாட்டி கொள்வதென்றால். (Containment Measures). இது தொடர்பிலேயே, 2025ஆம் ஆண்டானது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள ஓர் ஆண்டாகவே திகழ்கின்றது.

2

கொரோனா பெருந்தொற்றானது உற்பத்தி வலையமைப்புகளையும் விநியோக சங்கிலிகளையும் முற்றாக உடைத்தெறிந்து, ஏற்கனவே இருக்கும் ஆதிக்க சக்திகளுக்கு வாய்ப்பளித்து விடும் என்று நம்பப்பட்டது. ஆனால், கொரோனா கிருமிகள் எல்லைகளைக் கடந்தன. இக்கிருமிகளை உருவாக்கிய நாடுகளே தமது நடவடிக்கையால் மூச்சுவிட முடியாமல் திணரும் காட்சிகளை உலகு கண்டது. அமெரிக்காவில் மாத்திரம் இதனால் ஏற்பட்ட இறப்பு 1,219,487 என மதிப்பிடப்பட்டது. சீனாவில், இதன் இறப்பு 5212 என World Meter கூறியது. இன்னுமொரு பதிவின் படி சீனாவின் இறப்புகள் 2022-2023 காலப்பகுதியில் மாத்திரம் 82,000 என கணிப்பிடப்பட்டது  (NLM). (புள்ளிவிபரங்களின் பின்னாலுள்ள அரசியலை ஊகித்து கொள்வது சிறப்பானது).

மேலும் படிக்க ...

புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முகப் பகுப்பாய்வு!(1) - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
23 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச் சுருக்கம் (Abstract)

இக்கட்டுரை, ஈழத்துப் புகலிட எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் படைப்புளில் (மான் ஹோல், அமெரிக்கா) வெளிப்படும் அதிகார மையங்களுக்கும் விளிம்புநிலை மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை பன்முகக் கோணங்களில் ஆராய்கிறது. 'மான் ஹோல்' சிறுகதையில் வரும் பூர்வகுடிச் சாமி மற்றும் 'அமெரிக்கா' குறுநாவலில் வரும் அகதி (இளங்கோ) ஆகிய இரு கதாபாத்திரங்களின் ஊடாக, நவீன அரசுகள் அடையாளங்களை எப்படிச் சிதைக்கின்றன என்பதையும், உலகமயமாக்கல் சூழலில் 'அந்நியமாதல்' (Alienation) எவ்வாறு நிகழ்கிறது என்பதையும் இக்கட்டுரை விவாதிக்கிறது.

பகுதி ஒன்று

ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature)

ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature) என்பது உலக இலக்கியப் பரப்பில் ஒரு தனித்துவமான மற்றும் காத்திரமான கிளை. இது வெறும் இடப்பெயர்வை மட்டும் பேசாமல், போர், இழப்பு, இருத்தலியல் போராட்டம் மற்றும் புதிய நிலப்பரப்பில் அடையாளத்தைத் தேடுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த விரிவான பார்வையை பின்வரும் நிலைகளில் காணலாம்:

1. தோற்றம்: வரலாற்றுப் பின்னணி (1970 - 1983)

ஈழத்து புகலிட இலக்கியத்தின் விதைகள் 1970-களின் இறுதியில் தூவப்பட்டாலும், 1983 கறுப்பு ஜுலை வன்முறையே இதன் பெரும் வெடிப்பிற்கு காரணமாக அமைந்தது.

மேலும் படிக்க ...

இப்னு அஸுமத்: கவிதை மொழிபெயர்ப்பு பற்றிய விளக்கம்! - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
இலக்கியம்
23 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


நண்பர் இப்னு அஸுமத் என்னுடைய பல கவிதைகளை சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவ்வாரம் "நினைவிழந்த காதலின் சாம்பல் மணம்" என்ற என் கவிதையை மிக நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார். அதனை படித்தபோது இந்த விளக்கத்தை எழுதியே முடிவது என்ற முனைப்போடு இதனை எழுதுகிறேன். ஏனென்றால், அவர் என் கவிதை ஒவ்வொன்றையும் மொழிபெயர்த்து அனுப்பும்போது, விரிவாக எழுத நினைப்பேன். ஆனால் எழுதுவதில்லை….

இப்னு அஸுமத் உடைய மொழிபெயர்ப்பு, மூலக் கவிதையின் ஆழமான உணர்வுகளையும், கவித்துவ அழகையும் சிதைக்காமல், சிங்கள மொழியில் மீண்டும் ஒரு கவிதையாகப் படைக்கப்படுருக்கிறது. என்னுடைய "நினைவிழந்த காதலின் சாம்பல் மணம்" (මතකය අමතකවූ ප්

රේමයක අලු පැහැති සුවඳ) என்ற கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பை பகுப்பாய்வு செய்யும்போது, அவருடைய தனித்துவமான மொழிபெயர்ப்புத் திறமை வெளிப்படுகிறது.

கவித்துவத்தின் வெற்றி

1. உணர்ச்சிப் பரிமாற்றம் (Emotional Resonance):

        மூலக் கவிதையின் மையக்கருவான நினைவிழந்த காதல், துயரம், மற்றும் ஏக்கம் ஆகியவை சிங்கள மொழிபெயர்ப்பிலும் வலுவாகக் கடத்தப்படுகின்றன. வெறுமனே சொற்களை மாற்றாமல், அந்தச் சொற்களுக்குப் பின்னால் இருக்கும் கவிஞரின் உணர்ச்சியை அவர் உள்வாங்கி வழங்கியுள்ளார்.

2. இயந்திரமயமற்ற மொழி (Non-Mechanical Language):

        உதாரணம்: "மொழி அடைந்த ஒரு தேநீர் கோப்பையின் அடியில் / மங்கிய காகிதம் போல சுருங்கி விடுகிறது."

       சிங்களத்தில்: "භාෂාව ළංවූ කෝපි බඳුනක යට / අඳුරුවූ කඩදාසියක් මෙන් හැකිළී යන්නේය."

            இங்கு, 'மொழி அடைந்த தேநீர் கோப்பை' (மொழிக்கும் தேநீர்க் கோப்பைக்கும் உள்ள நெருக்கம்) என்ற அசல் உருவகம் சிதையாமல், இயற்கையான சிங்கள கவிதை மொழிநடையுடன் பொருந்தியிருக்கிறது. 'சுருங்கிவிடுகிறது' என்பதன் சிங்கள வடிவமும் (හැකිළී යන්නේය - சுருங்கிப் போகிறது) துல்லியமான உணர்வைத் தருகிறது.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் மருத்துவயியல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
ஆய்வு
23 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

நடையில் நின்று உயர் நாயகன் இராமனின் பெருமை குறித்து கூறும் கம்பராமாயணத்தில் அறிவியல் செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், பூச்சியியல், வானவூர்தியியல், மரபியல், வானியல், கணிதவியல், உளவியல் போன்ற பல துறை சார்ந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் மருத்துவயியல் சார்ந்த கருத்துக்களை இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.

மருத்துவயியல்

மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும், நோய்களைத் தீர்க்கும் வழிமுறைகள் குறித்தும்,விளக்கும் இயல் ’மருத்துவயியல்’ ஆகும்.

மருத்துவம் - பொருள்:

மருத்துவம் என்பதற்குக் கழக அகராதி ’ஒருவகை யாழ், வைத்தியம்,மருந்து,பரிகாரம், பிரசவம் பார்க்கும்தொழில்’ ஆகிய பொருள்களைத் தருகிறது.

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியானது நோய்க்கான காரணத்தைக் கண்டறிவதற்கும், நோயைக் குணப்படுத்துவதற்கும் முறையான பயிற்சியைக் கொண்டதொழில். பிரசவம் பார்ப்பதற்குச் செய்யும் உதவி, ’பிரசவகால மருத்துவர்’ என்ற மேற்கூறிய பொருளைத் தருகிறது.

மருந்து

உடலுக்கும், உள்ளத்திற்கும் ஏற்படும் நோய்களைத் தடுத்து நீக்கும் பொருளை ’மருந்து’ என்று அழைக்கலாம்.சங்க காலத்தில் மருந்து என்றால் ’தீர்க்கும் பொருள்’ என்று பொருள்.மருந்து என்ற சொல்லிற்கு அமுதம், ஔடதம்,ஒடதம் என்று தமிழ் மொழியகராதி பொருள் தருகிறது.

மேலும் படிக்க ...

இந்திய மீனவர் இலங்கைக் கடற்பரப்ப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதால் எழும் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (2) - நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந,.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கி -
சமூகம்
22 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி  சமூக, அரசியல் ஆளுமைகளுடன் உரையாடுவதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஒவ்வொருவரும் தத்தமது அனுபவம், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிப்பர், அத்துடன் தம் நலன்களை மையமாக வைத்தும் அவர்கள் பதில்கள் இருக்கும். அவரகளை ஆட்டி வைக்கும் சூத்திரதாரிகளின் நலன்களையும் அவர்கள்  பதில்கள பிரதிபலிக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும்போது இந்தப்பிரச்சனை இல்லை. செயற்கை நுண்ணறிவின் பதில்கள் உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. அறிவின், கிடைக்கப்பெறும் உண்மைகளின் அடிப்ப்டையில் மட்டுமே இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும். இத்னால் பொதுப்பிரசை ஒருவரிடத்தில் இலங்கைத் தமிழர்கள் பிர்ச்சனை பற்றி எழும் கேள்விகள் பல உள்ளன. இவற்றுக்கான செயற்கை நுண்ணறிவின் பதில்கள் எவையாகவிருக்கும் என்பதை அறிவதன் நோக்கமே அதனுடன் நடத்திய, நடத்தவிருக்கும் உரையாடல்களின் முக்கிய நோக்கம்.  செயுற்கை நுண்ணறிவை நான் எந்திரன் என்று இங்கு குறிப்பிடுவேன்.   இவ்வுரையாடல்களை  முழுமையாகச  சந்தாதார்களுக்கான  என் முகநூல் பக்கத்தில் வாசிக்கலாம் .


இவ்வுரையாடல்களில் செயற்கைத் தொழில் நுட்பம் தகவற் பிழைகள் விட்டிருந்தால் அறியத்தாருங்கள். நன்றி.

நான்: இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் எல்லை கடந்து வந்து மீன் பிடிப்பது ஒரு முக்கிய பிரச்சனை. இது பற்றிய உனது  புரிதல் என்ன? பலருக்கு இப்பிரச்னையின் ஆழம் தெரிவதில்லை.

எந்திரன்: இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பது என்பது இலங்கையின் மிக முக்கியமான மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். இது வெறும் மீன்பிடிப் பிரச்சினை மட்டுமல்ல, இதில் பொருளாதாரம், அரசியல், சமூகவியல், பாதுகாப்பு மற்றும் தேசிய இறையாண்மை போன்ற பல ஆழமான பரிமாணங்கள் அடங்கியுள்ளன. இந்த பிரச்சினையின் ஆழம் குறித்து எனது புரிதலை இங்கே விவரிக்கிறேன்:

இக்கட்டுரையை சந்தாதாரகளுக்கான   என்  முகநூல் பக்கத்தில் முழுமையாக வாசிக்கலாம்
 

நண்பர்களே! என் முகநூலின் இன்னுமொரு பக்கம்! சென்று பாருங்கள்!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
22 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



நண்பர்களே!  என் முகநூல் பக்கம் இரு  பகுதிளைக கொண்டது. ஒன்று வழக்கமான என் பதிவுகளைத்  தாங்கி வரும் பகுதி. 

இன்னுமொரு பகுதி ஒன்றுண்டு. அது சந்தாதாரர்களுக்கு மட்டுமே உரிய பகுதி. அது சந்தாதாரர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய எழுத்துப் பதிவுகள், காணொளிகள், டிஜிட்டல் ஓவியங்கள் ஆகியவற்றை உள்ளடகிய பகுதி.  அதற்கான இணையத்தள முகவரி
https://www.facebook.com/VNGiritharan/subscribe/  

ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்க்கவும்.  இப்புதிய பகுதிக்கான  உங்கள் ஆரோக்கியமான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன, எதிர்காலத்தில் மேலும் இப்பகுதி சிறப்புற உங்கள் வருகையும், ஆலோசனைகளும் வழி வகுக்கும்.

ஆரம்பத்தில் இப்பகுதியை  இலவசமாகப் பார்க்கலாம். இப்பகுதி பிடித்திருந்தால் தொடர்ந்தும் சந்தாரர்களாக இருக்கலாம். 

இவ்வசதியைத் தந்ததற்காக முகநூல் நிறுவனத்துக்கு என் நன்றி.

இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (1) - நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந,.கிரிதரன் -

விவரங்கள்
- நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந,.கிரிதரன் -
நேர்காணல்
20 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ இலங்கைத்  தமிழர் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (1) - நேர்காணல் கண்டவர்  எழுத்தாள்ர் வ.ந,.கிரிதரன் -
இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி  சமூக, அரசியல் ஆளுமைகளுடன் உரையாடுவதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஒவ்வொருவரும் தத்தமது அனுபவம், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிப்பர், அத்துடன் தம் நலன்களை மையமாக வைத்தும் அவர்கள் பதில்கள் இருக்கும். அவரகளை ஆட்டி வைக்கும் சூத்திரதாரிகளின் நலன்களையும் அவர்கள்  பதில்கள பிரதிபலிக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும்போது இந்தப்பிரச்சனை இல்லை. செயற்கை நுண்ணறிவின் பதில்கள் உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. அறிவின், கிடைக்கப்பெறும் உண்மைகளின் அடிப்ப்டையில் மட்டுமே இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும். இத்னால் பொதுப்பிரசை ஒருவரிடத்தில் இலங்கைத் தமிழர்கள் பிர்ச்சனை பற்றி எழும் கேள்விகள் பல உள்ளன. இவற்றுக்கான செயற்கை நுண்ணறிவின் பதில்கள் எவையாகவிருக்கும் என்பதை அறிவதன் நோக்கமே அதனுடன் நடத்திய, நடத்தவிருக்கும் உரையாடல்களின் முக்கிய நோக்கம்.  செயுற்கை நுண்ணறிவை நான் எந்திரன் என்று இங்கு குறிப்பிடுவேன். இதனை ஆணாதிக்க மனப்பான்மை என்று கருத வேண்டாம். ]

இலங்கைத்  தமிழர் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (1) - நேர்காணல் கண்டவர்  எழுத்தாள்ர் வ.ந,.கிரிதரன் -

நான்: 
உன்னுடன் இலங்கைப் பிரச்னை பற்றிச் சிறிது உரையாடலாமா?

எந்திரன்: 
இலங்கை பிரச்சனை பற்றி பேசலாம். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்? அல்லது குறிப்பிட்ட எந்த தகவலைப் பற்றி பேச வேண்டும்?

நான்: 
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு தமிழர்க்ள் சமஷ்டிக் கோரிக்கையை முன் வைத்தார்கள். அது பின் தனிநாட்டுக்கோரிக்கையானது. யுத்தம் மூண்டது. யுத்தம் 2009இல் முடிவுக்கு வந்தது. இன்று போரில் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய தென்னிலங்கைத் தலைவர்களையெல்லாம் மக்கள் துரத்தி விட்டார்கள். இன்று அங்கு புதியதொரு தலைமை, உழைக்கும் மக்கள் மத்தியினைப் பிரதிநிதிப்படுத்தும் ஒருவர் தலைவராகவிருக்கும் சூழல் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல புதிய சூழல் ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தி வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் எல்லாம் தம் ஆதிக்கத்தை விஸ்தரித்துள்ளது. இந்நிலையில் சமூக, ஊடகங்கள், புரிந்துணர்வு எல்லாம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது,. இந்நிலையில் தென்னிலங்கை, வடகிழக்குத் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தைக் கையிலெடுத்து ஆட்சியிலிருக்கும் அநுர அரசைக் கலைப்பதற்கு முயற்சி செய்வதாக நீ உணர்கின்றாயா?

மேலும் படிக்க ...

இந்தியப் பயணத்தொடர்: கான்ஹா புலிகள் சரணாலயம்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
19 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தென்னிந்தியாவில் புலிகள் இருந்ததால் சோழர்கள் தங்கள் கொடியில் புலியை வைத்தனர். ஆனால் இலங்கையில் புலிகள் இல்லை; இங்கு இருந்தது சிறுத்தை. இந்நிலையில் நமது தமிழ் ஈழத்தவர்கள் புலியை அடையாளமாகத் தத்தெடுத்தது ஏன்? அக்காலத்திலேயே நான் எழுப்பிய கேள்வி அது. அதுபோல, சிங்கம் இல்லாத நாட்டில் சிங்கக் கொடி பறப்பதும் முரண்பாட்டான நகையே.

ஆப்பிரிக்காவில் சிறுத்தையும் சிங்கமும் உள்ளன. இந்தியாவில் மட்டுமே சிங்கம், புலி, சிறுத்தை மூன்றும் வாழ்கின்றன. இந்த மூன்று முக்கிய மிருகங்களைக் காண்பதில் ஆர்வமுடைய ஒரு கூட்டத்தில் நானும் ஒருவன். ஏற்கெனவே அசோகனின் வைத்தியசாலையில் மிருகங்களை “காட்சி சாலையில்” வைப்பது எங்களை சிறையில் அடைப்பது போலவே . குற்றம் செய்தால் மனிதர்கள் சிறைக்கு செல்கின்றனர்—அதுவும் எல்லாரும் அல்ல.

ஒருமுறை பெரியார் புலிகள் சரணாலயத்தில் ஒரு நாள் முழுவதும் அலைந்தும் புலியைக் காண முடியவில்லை. அங்குள்ள வழிகாட்டி எங்களுக்கு புலியின் மலத்தை மட்டும் காட்டினார். நேபாளத்திற்குச் சென்றபோதும் புலிகளை காண முடியவில்லை; அங்கே வழிகாட்டி, புலி தனது நகங்களால் கிள்ளிய மரத்தைக் காட்டி, “இங்கே புலி வந்திருக்கவேண்டும்” என்றார். உண்மையில் புலிகள் மரத்தில் நகங்களைப் பிறண்டி ஒழுங்குபடுத்தும் பழக்கம் உண்டு.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. குரைக்கும் குரல்களும் கரையாத ஒளியும்! - பவானி சற்குணசெல்வம் -
  2. கலாமோகன் தோற்கும் இடங்கள் - கலாமோகன் படைப்புக்கள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! (பகுதி 1) - வாசன் (ஐக்கிய இராச்சியம்) -
  3. இருளை விரட்டும் ஒளிப்பொட்டுகள்: மு. அநாதரட்சகனின் "படைப்பியல் நோக்கில் பார்வையும் விமர்சனமும்" என்ற நூல் குறித்த பார்வை! - கலாநிதி சு. குணேஸ்வரன் -
  4. சமகால இலங்கையின் கட்டட, நகர வடிவமைப்புக் கலையின் சிறந்ததோர் எடுத்துக்காட்டு மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம் ( Makumbura Multimodal Transport Hub (MMC) - வ.ந.கிரிதரன் -
  5. இலங்கையின் முன்னோடிப் பெண் நிலவடிவமைப்புக் கலைஞர் ஹெஸ்டர் பஸ்நாயக்கவும் அவரது நிலவடிவமைப்புகலை (Landscaoe Architecture) பற்றிய சிந்தனைகளும்! - வ.ந.கிரிதரன்
  6. மனோ கணேசனின் 'குடியேற்றத்திட்டமும்' , 'துருவப்படுத்தும் அரசியலும்' பற்றிய நோக்கு! - எல். ஜோதிகுமார் -
  7. புகலிடச் சிறுகதை: மான் ஹோல்! - வ.ந.கிரிதரன் -
  8. சிறுகதை: யாதுமானவள்! - ஶ்ரீரஞ்சனி -
  9. பண்டையத் தமிழர் வாணிகத்தில் பூம்புகார்! - முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317 -
  10. தாத்தாவின் உலகம்! - கவிஞர் சாய்சக்தி சர்வி -
  11. ஈழக்கவி கவிதைகள்: புலம்பெயர்வு!
  12. நெஞ்சைத்தொட்ட ஒரு பயண அனுபவம்! - வ.ந.கிரிதரன் -
  13. இந்தியப் பயணத்தொடர்: ஆதிமனிதர்கள் குகைகள் – பீம்பேத்கா (Rock Shelters of Bhimbetka)! - நடேசன் -
  14. இலக்கியமும் விமர்சனமும்! - எஸ் அகஸதியர் -
பக்கம் 1 / 119
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி