இளம் பாரதி பற்றி மேலும் சில சிந்தனைகள்! - எல்.ஜோதிகுமார் -

23-24 வயதே நிரம்பியிருக்கக்கூடிய இவ்விளைஞனின், சாதியம் பற்றிய உணர்வும், பெண்களின் அடிமைத்தனம் பற்றிய எண்ணமும், இதைவிட மேலாக எலும்பும் தோலுமாய் அன்று தோற்றமளித்திருக்கக்கூடிய தன் மக்கள் பொறுத்த சிந்தனையும், நாடு காலனித்துவ ஆங்கிலேயரிடம் இப்படி அடிமைப்பட்டு போயிருக்கின்றதே என்ற ஆதங்கமும் மேலோங்கி வீசுவதாய் இருந்தது. ஆனால், இவற்றை விட, தம் இன்னுயிரை தியாகம் செய்து வெஞ்சிறையினுள்ளும் தம்மை இருத்திக் கொள்ள துடிக்கும் தன்னிகரற்ற சிங்கங்களையும் அவன் தன் வாழ்நாளில் தரிசிக்க வேண்டி வருகின்றது. இருப்பினும் இவ்விளைஞனின் உணர்வலைகளுக்கு கடிவாளம் போட்ட இரு பெரும் அலைகளும் அன்று வீசாமல் இல்லை.
ஒன்று, நாட்டில் சூல்கொண்டு முளைத்துள்ள விடுதலை இயக்கத்தின் முதிர்ச்சியின்மை. இரண்டாவது, இந்திய சமூகத்தில் அன்று காணப்பட்ட பிற்போக்குத்தன அல்லது ஒரு ஆசிய உற்பத்தி முறை ஏற்படுத்துகின்ற எண்ணற்ற முரண்களின் ஒட்டு மொத்தம்.
இவ்விரு அலைகளும் அவனை ஓயாது திணறடிக்கின்றன. அவனது எழுத்துக்களை அவை ஆழமாக தாக்க முற்படுகின்றன. இவற்றுக்கு எதிராகவெல்லாம், அவன் தன்னையும், தன் எழுத்தையும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்குள் தள்ளப்படுகின்றான். உலக செழுமைகளையெல்லாம் உள்வாங்க முனையும் அவனது உணர்ச்சி பிழம்பான இளம் மனம், சாதியம் பொறுத்தும், பெண்களை உயிருடன் கொளுத்தும் சதி முறைமைகள் பொறுத்தும், இக் கொடுமைகள் யாவற்றையும் மிக கவனமாக காப்பாற்றி வரும் மதம் குறித்தும் கொந்தளிக்கின்றது.இப்புயலின் பின்னணியில்தான் அவன் “துளசிபாயி” (நவம்பர் 1905) என்றும் “பாரத குமரிகள்” (ஜனவரி 1906) என்றும் அற்புதமான சிறுகதைகளை தன் இளவயதில் தீட்டுபவனாக இருக்கின்றான். (1905-1906). ஆனால், இவை அனைத்துமே இவன், சுதேச மித்திரனில், சுப்ரமணிய ஐயரின் ஆசிர்வாதத்துடன் இணைந்த பின்பே நடந்தேறுகின்றது. இதற்கு சற்று முன்னதாக, அவன் ‘இந்துவுக்கு’ எழுதிய கடிதம் மிகவும் அர்த்தமுடையது மாத்திரமல்லாமல், அவனது இளம் மனதில் அன்று முகிழ்த்திருக்கக்கூடிய உயரிய சிந்தனை வீச்சையும் புலப்படுத்துவதாய் இருக்கின்றது (டிசம்பர் 1904). சாதிய ஏற்றத்தாழ்வு குறித்து மேற்படி கடிதம் பின்வருமாறு பேசுகின்றது:


ஏற்கனவே போதிய பராமரிப்பற்ற நிலையில் இருந்த யாழ் மந்திரிமனைக் கட்டடம் அண்மைக்காலப் பெருமழையினால் மேலும் சிதைவுகளுக்கு உள்ளாகியுள்ளது.. அதன் நிலையினை வெளிப்படுத்தும் காட்சிகள் இவை. மந்திரிமனைக்கு இந்நிலை ஏற்படாமல் தடுத்திருக்கும் வல்லமை எமக்கிருந்தது. ஆனால் அதனை நாம் செய்யவில்லை. இது வருந்தத்தக்கது.

பெரும்பாலும் பத்து வயதளவில் பள்ளியில் படிப்பவர்களுக்கு பள்ளிப் புத்தகங்களல்லாத வாசிப்புக்கு ஈர்ப்பு ஏற்படுமென்று எண்ணுகிறேன். அந்த வயதளவில்தான் அது எனக்கும் ஏற்பட்டது.
பதினெட்டாம் திருப்பூர் குறும்பட விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை தாராபுரம் சாலை சேவ்அலுவலக அரங்கில் சுசீலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சமூக ஆய்வாளர் வியாகுல மேரி அவர்கள் விருதுகளை வழங்கினார். அவர் உரையாற்றும் போது இப்படி குறிப்பிட்டார் :





தலைப்பிற்கேற்ப கடலும்,கடல் சார் நிலமும் - கடற்கரையுமாய் - மங்கிய மாலையில்,மஞ்சள் நிறப் பின்னணியில், மங்கலகரமான அட்டைப் படத்துடன் ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் 'நெய்தல் நடை' எனும் அவரின் முதற் படைப்பான இச் சிறுகதைத் தொகுப்புப் பற்றிய எனது பார்வையை மகிழ்வுடன் இங்கு பதிவு செய்ய விழைகின்றேன்.


தமிழர் கண்ட நகர்வில் தொடங்கி புலம் பெயர் வாழ்வின் புதிய தேவைகள் வரை எட்டுத் தலைப்புக்களில், நூற்றியொன்பது பக்ககங்களில் புலம் பெயர் தமிழர்களின் உணர்வுகளையும் , அவர்தம் வாழ்க்கையையும் மிகச்சிறப்பாக உணர்வுபூர்வமாக நூலாசிரியர் இந்நூலில் சித்திரித்துக் காட்டியுள்ளார் .

புதைந்திருக்கும் ஒலி ஒன்று,


கனவுகளில் தோய்ந்து
முன்னுரை


போபால் நகரத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாஞ்சியில், மன்னன் அசோகனால் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த தூபி அமைந்திருக்கிறது. இதைச் சுற்றிப் பல தூபிகள் உள்ளன இந்த தூபி புத்தரின் எச்சங்களுடன் கட்டப்பட்டதோடு, அதன் ஆடம்பரமான கூம்பு (கிரீடம் போன்ற அமைப்பு) பார்வையாளர்களை கவர்கிறது. தூபியின் நான்கு பக்கங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாசலிலும் வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய சிற்பங்கள், குறிப்பாகப் புத்தரின் ஜாதகக் கதைகள், பிறப்பு முதல் பரிநிர்வாணம் வரை உள்ள நிகழ்வுகள் மற்றும் அசோக மன்னரின் வாழ்க்கைச் சம்பவங்கள் கல்லில் காவியமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தின் வேதனை போக்கிடவே வா


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









