ஆய்வு: சங்க இலக்கியத்தில் முயலின் வாழ்விடமும் பதிவுகளும்
தமிழகத்தின் நிலவியல், தாவரவியல், விலங்கியல்,கடலியல், அரசியல், சமூகவியல், மானுடவியல், சூழலியல், ஆன்மீகம் என பல தறப்பட்ட கூறுகளையும் உள்ளடக்கினவாகச் சங்க இலக்கியம் திகழ்கின்றது. இச்சங்கப் பிரதி தமிழர் வாழ்வியலையும், விலங்குகள் அவர்தம் மனவெளியிலும், புறவெளியிலும், வாழ்நெறியிலும் உறவு கொண்டு ஊடாடி விளங்குவதையும் காட்சிப் படிமங்களாகக் கண்முன் படைத்துக் காட்டுகின்றது. சங்கப் பாக்கள் முதல், கரு, உரி என்ற முப்பெரும்பிரிவின் அவதானிப்பில் அமைந்துள்ளன. இப்பாடல்களில் முதற்பொருளின் பின்புலத்தில் கருப்பொருளாக மனிதனைச் சுற்றியுள்ள இயற்கைப்பொருட்கள், தாவரங்கள், விலங்குகளின் வாழ்வியல் விளக்கம் பெற்றுள்ளன. பண்டையத் தமிழனின் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப அவனோடு இயைந்து வாழ்ந்த விலங்கினங்களை வேட்டையாடி மாமிசத்தை உண்டு மகிழ்ந்து வந்தான். அந்நிலையில் தாவர உண்ணியாக வாழ்ந்த முயலினை வேட்டையாடி தன் உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்து கொண்டான். சங்கப் பிரதியில் முயலின் வாழ்வியல் சூழல், புலவரின் கற்பனைத் திறன், உவமையாக்கல் போன்ற பல்வேறு நிலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
சங்க இலக்கியத்தில் முயல் பற்றிய பதிவுகள்
சங்க இலக்கியத்தில் முப்பந்தைக்கும் மேற்பட்ட விலங்கு வகைகள் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன. அதில் முயல் பற்றிய பதிவு சங்க இலக்கியத்தில் பதினெழு பாடல்களில் காணப்படுகின்றன. அதைப் பற்றிய அட்டவணை கீழே

மனிதன் ஒரு விலங்கு. விலங்கு நிலையிலிருந்த மனிதனின், விலங்கு குணத்தை வேரறுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல. குறிப்பாக ஒழுக்கம், அன்பு, பண்பாடு, சத்யம் போன்ற ஒழுகலாறுகள் மனிதனை மனிதனாக்க உருவாக்கப்பட்டுக் கடைபிடிக்கப்பட்டன. குறிப்பாகச் சத்யம்; சத்யம் என்றால் உண்மை அல்லது வாய்மை எனலாம். விலங்கு நிலையிலிருந்து மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மனிதனை நல்வழிப்படுத்த, மனிதனிடமிருந்து மனிதனைக் காக்க உருவாக்கப்பட்டதே சத்யம். எனவே ஒவ்வொருவரும் சத்யத்தின் படி வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தாலே அவன் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடலாம் என்று பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்படும் நிலையில், கவிஞர் வெள்ளியங்காட்டானின் சத்யம் தொடர்பான கருத்தாக்கங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
தொடக்கத்தில் தனி மனிதர் வாழ்வில் இதழியல் துறையை ஆச்சர்யத்துடன் பார்த்தவர்ர்கள் அறிவியல் முன்னேற்றத்தால் அவற்றின் மூலம் நாளுக்கு நாள் செய்திகளை அறிய விழைந்தனர். இதழியல் துறையின் முன்னேற்றத்திற்கு அறிவியல் துறை முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. இதன் மூலம் செய்தி பாரிமாற்றமானது எளிதாக மாறியது. அதன் தொடர்ச்சியாக ஒலி, ஒளி (ரேடியோ, தொலைக்காட்சி) மூலமும் பின்பு கணினி தோன்றிய பிறகு அச்சுத்துறையில் மாற்றம் ஏற்பட்டதால் இதழியல் மேலும் பல படிநிலை உருமாற்றம் பெற்றது. இவ்வாறு தோன்றிய இதழ்கள் இணையத்தில் மூலம் உலகத்தினை ஒருகண் சிமிக்கையில் இணைக்கும் இணையம் பாலமாக உள்ளது. இவ்வாறு தோன்றிய இணைய இதழ்களில் நேரடியாக வெளிவந்த இதழ்களும் இணையத்தில் அரங்கேற்றம் பெற்றன. இவ்வாறு தோன்றிய இணைய இதழ்களின் தோற்றத்தையும் , வளர்ச்சியையும் இக்கட்டுரையில் காணலாம்.
அகத்தையும் புறத்தையும் பதிவு செய்திருக்கும் சங்க இலக்கியங்கள் பெண்ணுக்கான களவு வெளியை வெகுவாகப் பேசுகின்றன.ஆணுக்கொரு பண்பாட்டையும் பெண்ணுக்கொரு பண்பாட்டையும் கொண்ட தமிழ்ச்சமுதாயத்தில் பெண் தான் மேற்கொண்ட களவு வாழ்வைக் கற்பு வழிப்படுத்தச் சமுதாயம், குடும்பம், சூழல் முதலான அமைப்புகளைக் கடக்கவேண்டியிருக்கிறது.பெண் தான் விரும்பிய வாழ்வை மேற்கொள்ள சில நேரங்களில் உடன்போக்கு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த உடன்போக்கை, உடன்போக்கு உணர்த்தும் மெய்ம்மைகளை அகநானூற்றுப்பாடல்கள் வழியாக ஆய்வுசெய்கிறது இக்கட்டுரை.
ஓட்டோடு ஒட்டிஉறவாட மனமில்லாமல் ஓட்டைவிட்டு ஒதுங்கி நிற்கும் புளியம்பழம் போல் வாழ்க்கையை ஒட்டியும் ஒட்டாமலும் முன்னிறுத்திப் பார்க்கின்றன ந.பிச்சமூர்த்தியின் இன்சுவைக் கவிதைகள். தொலைந்ததைத் தேடும்போதுதான், தொலைத்தும் தேடாத பலவும் கிடைப்பதைப் போல் ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளுக்குள் கவித்துவம்,மனிதம், நம்பிக்கை ஆகியவற்றைத் தேடும்போது நாம் தேடினாலும் கிடைக்காத பல பொக்கிஷங்கள் காணக் கிடைக்கின்றன. காணாமல்போனவனைத் தேடிப்போனவனும் காணாமல்போன கதையாய் ந.பிச்சமூர்த்தியைப் படிக்கும் வாசகன் அவர் கவிதைவெளிக்குள் காணாமல் போகிறான்.அறிமுகமாகாத இடத்திற்குள் நுழைந்துவிட்ட ஒருவன் அந்த இடத்தைவிட்டகல அவசரமாய் நுழைவாயிலைத் தேடித் தவிப்போடும் தயக்கத்தோடும் நகர்கிற உணர்வை ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன.மகாகவி பாரதியின் வசனகவிதை வடிவமுயற்சிகளும், வால்ட்விட்மனின் ‘புல்லின் இதழ்களும்’ ந.பிச்சமூர்த்தியின் புதுமைமுயற்சிகளுக்குக் காரணமாக அமைந்தன. யாப்பின் அழகில் இலயித்துக் கவிதைகள் படைத்த ந.பிச்சமூர்த்தி, வசனகவிதைகள் படைத்தபோதும் அவற்றையும் ஓர் வடிவஒழுங்கோடே படைத்தார்.இருள்மண்டிக்கிடந்த பரந்த வெளியில் திடீரெனக் குறுக்கே பாய்ந்து பரவசப்படுத்தும் மின்மினிப் பூச்சியாய் சிலருக்கு ந.பி.தெரிந்தார்.இடியோடு இணைந்து வந்து வானத்தைக் கீறியபடி சட்டென்று வெட்டிச்செல்லும் மின்னலாய் சிலருக்குத் தெரிந்தார்.உண்மையில் தேடல் மிக்க கலைஞானியவர்.
அருள் ஞானக்கன்று, திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, காழியர்கோன், தமிழாகரர் போன்ற பல சிறப்புப் பெயர்களுக்கு உரியவர் ஞானசம்பந்தர். அவர் தம் திருமுறைப்பாடல்களில் சமுதாய உணர்வு மேலோங்கப் பாடியுள்ளார். ஆன்மா கடைத்தேறுவது என்ற நிலையில் ஓர் உயிர் மட்டும் கடைத்தேறுவது என்பது எவ்வளவுதான் பெருமை பெற்றது என்றாலும், அது சுயநலம் சார்ந்ததாகிவிடுகின்றது. ஆனால் தன்னுடன் இணைந்த அத்தனை பேரையும் சிவகதிக்கு உள்ளாக்கும் வழிகாட்டியாக அமைந்து, குருவாக அமைந்துச் சமுதாயத்தைக் கடைத்தேற்றும் நாயகராக ஞான சம்பந்தப் பெருமான் விளங்குகின்றார்.
அகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









