காலத்தை ஊடறுத்துப் பாயும் நதி – நடேசனின் தாத்தாவின் வீடு நாவல் - சி. ரமேஸ்

இலங்கையின் வட மாகாணத்தின் எழுவைதீவு என்ற பிரதேசத்தில் அம்பலவாணர் சின்னத்தம்பி - ஆனந்தராணி நமச்சிவாயம் இணையருக்கு டிசெம்பர் 23,1954 அன்று மகனாகப் பிறந்த நோயல் சின்னத்தம்பி நடேசன்ஆரம்பக் கல்வியை எழுவைதீவு முருகவேள் பாடசாலையிலும் நயினாதீவு மகாவித்தியாலத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பேராதனை பல்கலைக்கழத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவில் சிட்னி நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணி (முதுகலை) பட்டம் பெற்றவர் நோயல் நடேசன், 1984 - 1987 காலப்பகுதியில் தமிழகத்தில் தங்கியிருந்தபோது, தமிழர் மருத்துவ சேவை என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அந்த நிறுவனத்தில் நோயல் நடேசனுடன் மருத்துவரான அவரது மனைவியும் பணியாற்றினார். 1987-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 40 வருடங்கள் விலங்கு மருத்துவராக பணிபுரிந்து, ஓய்வு பெற்று, தற்போது மெல்பேர்னில் வசித்து வருகிறார். நோயல் நடேசன் ஏப்ரல் 1984-இல் 'உதயம்' மாத இதழை மெல்பேர்னில் ஆரம்பித்தார். 13 வருடங்களாக நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு வரை 'உதயம்' பத்திரிகை ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக வெளியானது. 'உதயம்' பத்திரிகையில் பல பத்திகள், சிறுகதைகள், தொடர்கள், தான் பணிபுரிந்த மிருக வைத்தியத்துறைசார் அனுபவங்கள் என்பவற்றை நோயல் நடேசன் எழுதினார். 1980-1983 ஜூலை வரையான காலத்தில், இலங்கையின் - மதவாச்சி பகுதியில் மிருக வைத்தியராக பணிபுரிந்த காலப் பின்னணியில் எழுதப்பட்ட நடேசனின் வண்ணாத்திக்குளம் என்ற முதலாவது நாவல் 'மித்ர 'பதிப்பகத்தினால் வெளியானது. இந்நாவல் பின்னர் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.
1980-83 கால கட்டத்திலே இலங்கை மக்களின் வாழ்க்கை முறைகளையும் இலங்கையின் அரசியல் பொருளாதார – சமூக நிலை மாற்றங்களையும் எடுத்துரைக்கும் நாவலே வண்ணாத்திக் குளம்.நடேசன் நாவலில் வரும் பதவியாக்குளம் எனப்படுகின்ற வண்ணாத்திக்குளம் தற்போது. இது ஒரு சிங்களக் குடியேற்றப் பிரதேசமாக மாறிப்போயுள்ளது. நடேசனின் சொந்த அனுபவங்களின் பிரதிபலிப்பே இந்நாவல். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் மிருக வைத்தியர் ஒருவர் தொழில் நிமித்தமாக மதவாச்சி சென்று தான் தங்கியிருக்கும் விடுதியில் கூடவே தங்கியிருக்கும் பதவியாவைச் சேர்ந்த சிங்கள இளைஞனின் தங்கையைக்; கண்டு, காதல் கொண்டு பதிவுத் திருமண மூலம் கணவன் மனைவியாக வாழ முற்படும் போது நாட்டு நிலை அவ்விருவரையும் நேர்ந்து வாழ இடமளிக்காது புலம்பெயர்ந்து செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளுகிறது. இதன் வெளிப்பாடே வண்ணாத்திக் குளம்.


அமெரிக்காவின் போர்களை ஈரான் கடந்த இருபது ஆண்டுகளாக உன்னிப்பாகக் கவனித்து, ஆய்வு செய்து வந்துள்ளது என்பதே அதன் வெற்றிக்கான முதல் காரணம். ஈரான் வெறுமனே பார்வையாளராக மட்டும் இருக்கவில்லை; அது ஒரு மாணவனைப் போல, அமெரிக்க இராணுவ வியூகங்களின் பலம் மற்றும் பலவீனங்களை நுட்பமாகப் பகுப்பாய்வு செய்தது.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை நிறுவனமொன்றினை நடத்தும் குடும்பம் கொடுக்கும் விருது ஞானபீட விருது. இது இந்திய அரசின் சாகித்திய அமைப்பு கொடுக்கும் விருதினைப் போன்றது அல்ல. ஆனால் மதிப்புக்குரிய விருதாகக் கருதப்படும் விருது. இதற்கு இம்முறை எழுத்தாளர் வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. அவரது திரைப்பாடல்கள் மூலம் கவிஞர் வைரமுத்துவாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அவர். அவரது இதுவரை கால கலை, இலக்கியப் பங்களிப்புக்காகக் கொடுத்திருக்கின்றார்கள். தனிப்பட்ட அவரது படைப்பு ஒன்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட வில்லை. 
தாகூரின் செல்வாக்கில் இருந்து, கழன்ற சி.வி.வேலுப்பிள்ளையின், நெடுங்கவிதையின் மூன்றாம் பகுதி இங்கே காணக்கிட்டுகின்றது. தமது காலத்தைய, அழுத்தமான மக்கள் குரலை வேலுப்பிள்ளை ஒலித்ததை போன்று, அவருக்கு பின்னால் வந்த எந்த ஒரு கவிஞனும் மலையக சமூகம் பொறுத்து ஒலித்தது கிடையாது எனலாம். ஆழ்ந்த சமூக பற்றுடன் இவரது குரல் ஒலித்தமைக்கான விலையை இவர் தம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொடுத்திருக்க கூடும். இவரது அக்காலத்தைய எழுத்துக்கள், அக்காலத்தைய மலையக அரசியல் சார்ந்த சிந்தனைக்கு மாத்திரமல்ல, பொதுவில் உழைக்கும் மக்களின் சிந்தனைக்குள்ளும் வலை விரிக்க கூடியதே. இனி மீண்டும் கவிதைக்குள் செல்லலாம்:
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் முன்னாள் செயலாளருமான இரா. நல்லகண்ணு அவர்கள் பெப்ருவரி 25, 2026 அன்று, தனது நூறாவது வயதில் மறைந்தார். தனது பதினெட்டாவது வயதிலிரிந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டவர். இந்தியாவில் ஆங்கிலேயருக்கெதிராகப் போராடிய சுதந்திர வீரர். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது நெல்லை சதி வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுச் சிறை வாசம் அனுபவித்தவர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீங்கியபோது விடுதலை செய்யப்பட்டார். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர்.
'காந்தளகம்' மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களை இ துவரை பதிப்பாளராக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் சபையில் பணி புரிந்தவராக, எழுத்தாளராக, சூழலியலில் ஆர்வமுள்ளவராக , அண்மைக்காலமாக ஹிந்துத்துவா நோக்கில் செயற்படுவராக அறிந்திருக்கின்றேன். அண்மையில் இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்துக்காகக் குரல் கொடுத்துவரும் அருண் சித்தார்த் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்த காணொளியொன்றில் தென்பட்ட மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் நேர்காணலொன்று என் கவனத்தை ஈர்த்தது.
பெப்ருவரி 5 அன்று இலங்கைப் பாராளுமன்றத்தில் 'பொதுஜனபெரமுன' கட்சியின் முக்கிய ஆளுமையான நாமல் ராஜபக்ச இனவாதத்தைக் கக்கத் தொடங்கியபோது தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான லக்மாலி ஹேமச்சந்திரா உடனடியாகவே அதற்கெதிராகக் கடுமையான பதிலடி கொடுத்திருக்கின்றார். சுதந்திரதின நிகழ்வில் யுத்தத்தை வென்ற இராணுவத்திற்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லையென்று நாமல் ராஜபக்ச இனவாதத்தைக் கையிலெடுத்தபோதுதான் லக்மாலி ஹேமச்சந்திரா இவ்விதம் பதிலடி கொடுத்தார். 1989இல் பிறந்த லக்மாலில் ஹேமச்சந்திராவின் இவ்வுரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. சிங்கள இளந்தலைமுறையினர் எவ்வளவுதூரம் காலத்துடன் மாறி வந்திருக்கின்றார்கள் என்பது நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையினைத் தருகின்றது. தமிழ் , முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரும் லக்மாலி ஹேமரத்தின போன்று தம் இன அரசியல்வாதிகள் இனவாத்த்தைக் கையில் எடுக்கும் சமயங்களில் அவர்களைத் தட்டி வழி நடத்த வேண்டும். நெறிப்படுத்த வேண்டும். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதில் இனவாதத்தை எந்நேரமும் கையிலெடுப்பதைக் கண்டிக்க வேண்டும்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









