

ஆய்வுச்சுருக்கம்
கூகிளால் உருவாக்கப்பட்ட பல்துறை திறன் கொண்ட ஜெமினி செயற்கை நுண்ணறிவு (Gemini AI) மாதிரி, தமிழ் மொழி உள்ளடக்க உருவாக்கம், மெருகேற்றுதல் மற்றும் பல்வகைச் செயல்பாடுகளில் (Multimodal) எவ்வாறு பயன்படுகிறது என்பதை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது. மேலும், இந்தத் தொழில்நுட்பத்தின் பரந்த பயன்பாடு தமிழ் சமூகம், கல்வி மற்றும் உழைப்பின் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் (பாதிப்புகள்) மற்றும் சவால்களை ஆராய்வது இதன் பிரதான நோக்கமாகும். ஜெமினி AI-இன் தமிழ் மொழி செயலாக்கத் திறன்களை ஆழமாகப் பகுப்பாய்வு செய்கிறது. இதில் உள்ளடக்க உருவாக்கம், கலாச்சாரச் சூழலுடன் கூடிய மொழிபெயர்ப்பு, கல்விக்கான உதவிகள் (PPT உருவாக்கம்), தரவுத் தேடல் மற்றும் படங்களை விளக்குதல் போன்ற முக்கியப் பணிகள் விளக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தத் தொழில்நுட்பத்தின் சமூகப் பாதிப்புகளை (வேலை இழப்பு, தவறான தகவல் பரவல்) மற்றும் அதன் பயன்பாட்டில் தொடரும் சிக்கல்கள் (பண்பாட்டுச் சூழல் குறைபாடு, வட்டார வழக்குகள், பயிற்சித் தரவுச் சார்பு) ஆகியவற்றை மையமாகக் கொண்டு இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கியச்சொற்கள்
ஜெமினி AI, செயற்கை நுண்ணறிவு, தமிழ் மொழி, உள்ளடக்க உருவாக்கம், பல்வகைச் செயல்பாடு, மொழிபெயர்ப்பு, கல்விக்கான உதவிகள், உழைப்பின் எதிர்காலம், சமூகப் பாதிப்புகள், பண்பாட்டுச் சூழல்.
முன்னுரை
செயற்கை நுண்ணறிவு துறை வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் தமிழில் அவற்றின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை நான் சற்று விரிவாக ஆராய வேண்டியுள்ளது. அதனடிப்படையில் இக்கட்டுரை (Gemini AI) ஜெமினி செயற்கை நுண்ணறிவு மென்பொருள் எவ்வாறு தமிழில் செயல்படுகிறது என்பதை ஆராயவுள்ளது.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு என்பது இயல்பான மனிதன் தன் அறிவைக் கொண்டு செய்யக் கூடிய செயல்களை இயந்திரம் செயற்கையாக மனிதனால் உள்ளிடப்படும் கட்டளைகளை உள்வாக்கி அதன் அடிப்படையிலான செயல்திட்டங்களை மனிதனைவிட பலமடங்கு வேகத்திலும் துல்லியமாகவும் கொடுக்கக் கூடியது. இதனை,
மனிதரின் நுண்ணறிவுத் திறனைச் செயற்கையாக உருவாக்குவதன் வழியாக ஓர் இயந்திரத்துக்கு மனிதரைப் போலவே கற்கும் திறனும் சிந்திக்கும் திறனும் பிரச்சனைகளுக்கு முடிவுகாணும் திறனும் இருந்தால் அந்த இயந்திரம் செயற்கை நுண்ணறிவு இயந்திரமாகக் கருதப்படுகிறது. அது ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு மனிதர்களால் கற்றுக் கொடுக்கும் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்தும் பகுந்தறிந்தும் தமது குறிக்கோளை அடையும். (தி இந்து தமிழ் நாளிதழ், 14.03.2020, ப.6)
முழுமையாக வாசிக்க

பகுதி நான்கு:
'அமெரிக்கா' குறுநாவல்
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' குறுநாவல் ஈழத்து புகலிட இலக்கியப் பரப்பில் ஒரு மிகமுக்கியமான மைல்கல். இது வெறும் ஒரு தனிமனிதனின் பயணக்கதை மட்டுமல்ல; 80-களில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு தலைமுறையின் அரசியல், உளவியல் மற்றும் சமூகப் போராட்டங்களின் ஆவணம்.
இந்தக் குறுநாவலை நவீன ஆய்வணுகு முறையில் பின்வரும் நிலைகளில் பகுப்பாய்வு செய்யலாம்:
1. நனவோடை உத்தி (Stream of Consciousness)
இக்குறுநாவலின் மிகச்சிறந்த அம்சம் அதன் கதை சொல்லும் முறை. கதாநாயகன் இளங்கோ அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்தச் சிறு காலப்பகுதியில், அவனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.
கடந்த காலமும் நிகழ்காலமும்: யாழ்ப்பாணத்து வீதிகளும், கொழும்பு சிறைச்சாலையும், அமெரிக்க விமான நிலையத்தின் தனிமை அறையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து வருகின்றன.

- எழுத்தாளர் முருகபூபதி (டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா) -
கல்வி என்பது ஒரு செயல் முறையாகவும், வாழ்க்கை அனுபவம் என இருந்து, தற்போது உலகைத் தெளிவாகக் காணவும், உண்மையைத் தேடவும், பார்வையை விரிவுபடுத்திக் கொள்ளவும், நாம் மற்றோரில் தங்கியிராது சுயாதீனமடையவும் உதவுகிறது. இப்படியான கல்வியையே நாம் பெற்றோர்களாக, நம் குழந்தைகளுக்கு அளிக்க விரும்புகிறோம். ஆனால் ஏழைக் குடும்பம் ஒன்றில் தந்தை இறந்து விட்டால் என்ன நடக்கும்? குறிப்பாகப் போரின் காலத்தில்?
அத்தகைய குழந்தைகளுக்கு,ஓர் இருண்ட உலகமே காத்திருக்கிறது.
துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு இலங்கையர்கள் எப்போதும் ஆழ்ந்த அனுதாபத்தைக் காட்டி வந்துள்ளனர். 75 ஆண்டுகளுக்கும் மேலாக, நாடு முழுவதும் உள்ள மக்கள், இன்னலுக்குட்பட்டவர்களுக்கு ஆதரவாக நிதி திரட்டியும், அயராது உழைத்தும் வந்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கும் மேலான கொடூரமான உள்நாட்டுப் போரையும், அதைத் தொடர்ந்து சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளையும், தொடர் வெள்ளப் பாதிப்புகளையும் நாம் அனுபவித்துள்ளோம்.
சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. ஒரு அளவுக்குமேல் , அவற்றின் அழிவைத் தவிர்ப்பது கடினம். ஆனால் போர் வித்தியாசமானது. போர் என்பது அரசியல் தோல்வியின் விளைவு. அரசியல்வாதிகள் நாட்டை ஆள்கிறார்கள், நாட்டை வறுமைப்படுத்துகிறார்கள், தங்களைச் செல்வந்தர்களாக்கிக் கொள்கிறார்கள். ஆனாலும் நாம், அதாவது இலங்கை மக்கள், அவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். மீண்டும் மீண்டும், பெரும்பாலும் தயக்கமின்றி. நாம் அரசியல்வாதிகளை மட்டுமே குறை கூறலாமா? இது, ஒருவர் தம் வீட்டுக் கதவைத் திறந்து வைத்து விட்டு, திருட்டு நடந்த பிறகு, திருடனைக் குறை கூறுவது போன்றது.
இக்கட்டுரை எனது நண்பரின் கதையைச் சொல்கிறது. போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு ஆதரவாக 12ஆம் வகுப்பு வரை, "சிலோன் மாணவர் கல்வி நிதி" என்ற குறிப்பிடத்தக்க முயற்சியை அவர் துவக்கினார்.

2025ம் ஆண்டு ஒரு முடிவுக்கு வருகின்றது. ஆண்டுகள் அல்லது ஆண்டுகளின் இறுதி என்பன, ஒரு வசதி கருதி, ஒரு சுட்டும் புள்ளியாகவே(Reference Point), தொழிற்படுகின்றது. உலக நிகழ்வுகள் ஆண்டு அல்லது ஆண்டு இறுதி என்ற எல்லைப்படுத்தப்படுவன அல்ல. ஆயினும், 2025ம் ஆண்டின் இறுதி பகுதியை விரும்பியோ விரும்பாமலோ அடைந்துவிட்ட நாம் உலக நடப்புகளை ஒருமுறை திரும்பி பார்ப்பது நன்று. அதிலும், வருட இறுதி குறித்து ஊடகங்களும், உலக தலைவர்களும் மொத்தத்தில் உலகமே கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் போது.
எமது, அண்மைக்கால உலகில், உற்பத்தி வலைப்பின்னல்களையும், விநியோக வலைப் பின்னல்களையும், சிதைத்து நாசம் செய்வதற்கூடு, தமது ஆதிக்கங்களை உலகில் என்றென்றைக்கும் நிலைநாட்டிக் கொள்ள, சம்பந்தப்பட்ட நாடுகள் முயல்வதாய் உள்ளன. முக்கியமாக, சீன-ரஷ்ய-இந்தியா போன்ற புதிதாய் வளர்ச்சி காணும் பொருளாதாரங்களின் வளர்ச்சிகளை கணக்கில் எடுத்து நோக்கும் போது இவற்றை கட்டுப்படுத்தும் முறைமை, இந்நாடுகளுக்கு தேவையாகின்றது –தத்தமது உலக ஆதிக்கத்தை நிலைநாட்டி கொள்வதென்றால். (Containment Measures). இது தொடர்பிலேயே, 2025ஆம் ஆண்டானது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள ஓர் ஆண்டாகவே திகழ்கின்றது.
2
கொரோனா பெருந்தொற்றானது உற்பத்தி வலையமைப்புகளையும் விநியோக சங்கிலிகளையும் முற்றாக உடைத்தெறிந்து, ஏற்கனவே இருக்கும் ஆதிக்க சக்திகளுக்கு வாய்ப்பளித்து விடும் என்று நம்பப்பட்டது. ஆனால், கொரோனா கிருமிகள் எல்லைகளைக் கடந்தன. இக்கிருமிகளை உருவாக்கிய நாடுகளே தமது நடவடிக்கையால் மூச்சுவிட முடியாமல் திணரும் காட்சிகளை உலகு கண்டது. அமெரிக்காவில் மாத்திரம் இதனால் ஏற்பட்ட இறப்பு 1,219,487 என மதிப்பிடப்பட்டது. சீனாவில், இதன் இறப்பு 5212 என World Meter கூறியது. இன்னுமொரு பதிவின் படி சீனாவின் இறப்புகள் 2022-2023 காலப்பகுதியில் மாத்திரம் 82,000 என கணிப்பிடப்பட்டது (NLM). (புள்ளிவிபரங்களின் பின்னாலுள்ள அரசியலை ஊகித்து கொள்வது சிறப்பானது).

ஆய்வுச் சுருக்கம் (Abstract)
இக்கட்டுரை, ஈழத்துப் புகலிட எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் படைப்புளில் (மான் ஹோல், அமெரிக்கா) வெளிப்படும் அதிகார மையங்களுக்கும் விளிம்புநிலை மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை பன்முகக் கோணங்களில் ஆராய்கிறது. 'மான் ஹோல்' சிறுகதையில் வரும் பூர்வகுடிச் சாமி மற்றும் 'அமெரிக்கா' குறுநாவலில் வரும் அகதி (இளங்கோ) ஆகிய இரு கதாபாத்திரங்களின் ஊடாக, நவீன அரசுகள் அடையாளங்களை எப்படிச் சிதைக்கின்றன என்பதையும், உலகமயமாக்கல் சூழலில் 'அந்நியமாதல்' (Alienation) எவ்வாறு நிகழ்கிறது என்பதையும் இக்கட்டுரை விவாதிக்கிறது.
பகுதி ஒன்று
ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature)
ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature) என்பது உலக இலக்கியப் பரப்பில் ஒரு தனித்துவமான மற்றும் காத்திரமான கிளை. இது வெறும் இடப்பெயர்வை மட்டும் பேசாமல், போர், இழப்பு, இருத்தலியல் போராட்டம் மற்றும் புதிய நிலப்பரப்பில் அடையாளத்தைத் தேடுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த விரிவான பார்வையை பின்வரும் நிலைகளில் காணலாம்:
1. தோற்றம்: வரலாற்றுப் பின்னணி (1970 - 1983)
ஈழத்து புகலிட இலக்கியத்தின் விதைகள் 1970-களின் இறுதியில் தூவப்பட்டாலும், 1983 கறுப்பு ஜுலை வன்முறையே இதன் பெரும் வெடிப்பிற்கு காரணமாக அமைந்தது.

நண்பர் இப்னு அஸுமத் என்னுடைய பல கவிதைகளை சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவ்வாரம் "நினைவிழந்த காதலின் சாம்பல் மணம்" என்ற என் கவிதையை மிக நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார். அதனை படித்தபோது இந்த விளக்கத்தை எழுதியே முடிவது என்ற முனைப்போடு இதனை எழுதுகிறேன். ஏனென்றால், அவர் என் கவிதை ஒவ்வொன்றையும் மொழிபெயர்த்து அனுப்பும்போது, விரிவாக எழுத நினைப்பேன். ஆனால் எழுதுவதில்லை….
இப்னு அஸுமத் உடைய மொழிபெயர்ப்பு, மூலக் கவிதையின் ஆழமான உணர்வுகளையும், கவித்துவ அழகையும் சிதைக்காமல், சிங்கள மொழியில் மீண்டும் ஒரு கவிதையாகப் படைக்கப்படுருக்கிறது. என்னுடைய "நினைவிழந்த காதலின் சாம்பல் மணம்" (මතකය අමතකවූ ප්
රේමයක අලු පැහැති සුවඳ) என்ற கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பை பகுப்பாய்வு செய்யும்போது, அவருடைய தனித்துவமான மொழிபெயர்ப்புத் திறமை வெளிப்படுகிறது.
கவித்துவத்தின் வெற்றி
1. உணர்ச்சிப் பரிமாற்றம் (Emotional Resonance):
மூலக் கவிதையின் மையக்கருவான நினைவிழந்த காதல், துயரம், மற்றும் ஏக்கம் ஆகியவை சிங்கள மொழிபெயர்ப்பிலும் வலுவாகக் கடத்தப்படுகின்றன. வெறுமனே சொற்களை மாற்றாமல், அந்தச் சொற்களுக்குப் பின்னால் இருக்கும் கவிஞரின் உணர்ச்சியை அவர் உள்வாங்கி வழங்கியுள்ளார்.
2. இயந்திரமயமற்ற மொழி (Non-Mechanical Language):
உதாரணம்: "மொழி அடைந்த ஒரு தேநீர் கோப்பையின் அடியில் / மங்கிய காகிதம் போல சுருங்கி விடுகிறது."
சிங்களத்தில்: "භාෂාව ළංවූ කෝපි බඳුනක යට / අඳුරුවූ කඩදාසියක් මෙන් හැකිළී යන්නේය."
இங்கு, 'மொழி அடைந்த தேநீர் கோப்பை' (மொழிக்கும் தேநீர்க் கோப்பைக்கும் உள்ள நெருக்கம்) என்ற அசல் உருவகம் சிதையாமல், இயற்கையான சிங்கள கவிதை மொழிநடையுடன் பொருந்தியிருக்கிறது. 'சுருங்கிவிடுகிறது' என்பதன் சிங்கள வடிவமும் (හැකිළී යන්නේය - சுருங்கிப் போகிறது) துல்லியமான உணர்வைத் தருகிறது.

முன்னுரை
நடையில் நின்று உயர் நாயகன் இராமனின் பெருமை குறித்து கூறும் கம்பராமாயணத்தில் அறிவியல் செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், பூச்சியியல், வானவூர்தியியல், மரபியல், வானியல், கணிதவியல், உளவியல் போன்ற பல துறை சார்ந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் மருத்துவயியல் சார்ந்த கருத்துக்களை இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.
மருத்துவயியல்
மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும், நோய்களைத் தீர்க்கும் வழிமுறைகள் குறித்தும்,விளக்கும் இயல் ’மருத்துவயியல்’ ஆகும்.
மருத்துவம் - பொருள்:
மருத்துவம் என்பதற்குக் கழக அகராதி ’ஒருவகை யாழ், வைத்தியம்,மருந்து,பரிகாரம், பிரசவம் பார்க்கும்தொழில்’ ஆகிய பொருள்களைத் தருகிறது.
கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியானது நோய்க்கான காரணத்தைக் கண்டறிவதற்கும், நோயைக் குணப்படுத்துவதற்கும் முறையான பயிற்சியைக் கொண்டதொழில். பிரசவம் பார்ப்பதற்குச் செய்யும் உதவி, ’பிரசவகால மருத்துவர்’ என்ற மேற்கூறிய பொருளைத் தருகிறது.
மருந்து
உடலுக்கும், உள்ளத்திற்கும் ஏற்படும் நோய்களைத் தடுத்து நீக்கும் பொருளை ’மருந்து’ என்று அழைக்கலாம்.சங்க காலத்தில் மருந்து என்றால் ’தீர்க்கும் பொருள்’ என்று பொருள்.மருந்து என்ற சொல்லிற்கு அமுதம், ஔடதம்,ஒடதம் என்று தமிழ் மொழியகராதி பொருள் தருகிறது.

- இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி சமூக, அரசியல் ஆளுமைகளுடன் உரையாடுவதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஒவ்வொருவரும் தத்தமது அனுபவம், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிப்பர், அத்துடன் தம் நலன்களை மையமாக வைத்தும் அவர்கள் பதில்கள் இருக்கும். அவரகளை ஆட்டி வைக்கும் சூத்திரதாரிகளின் நலன்களையும் அவர்கள் பதில்கள பிரதிபலிக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும்போது இந்தப்பிரச்சனை இல்லை. செயற்கை நுண்ணறிவின் பதில்கள் உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. அறிவின், கிடைக்கப்பெறும் உண்மைகளின் அடிப்ப்டையில் மட்டுமே இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும். இத்னால் பொதுப்பிரசை ஒருவரிடத்தில் இலங்கைத் தமிழர்கள் பிர்ச்சனை பற்றி எழும் கேள்விகள் பல உள்ளன. இவற்றுக்கான செயற்கை நுண்ணறிவின் பதில்கள் எவையாகவிருக்கும் என்பதை அறிவதன் நோக்கமே அதனுடன் நடத்திய, நடத்தவிருக்கும் உரையாடல்களின் முக்கிய நோக்கம். செயுற்கை நுண்ணறிவை நான் எந்திரன் என்று இங்கு குறிப்பிடுவேன். இவ்வுரையாடல்களை முழுமையாகச சந்தாதார்களுக்கான என் முகநூல் பக்கத்தில் வாசிக்கலாம் .
இவ்வுரையாடல்களில் செயற்கைத் தொழில் நுட்பம் தகவற் பிழைகள் விட்டிருந்தால் அறியத்தாருங்கள். நன்றி.
நான்: இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் எல்லை கடந்து வந்து மீன் பிடிப்பது ஒரு முக்கிய பிரச்சனை. இது பற்றிய உனது புரிதல் என்ன? பலருக்கு இப்பிரச்னையின் ஆழம் தெரிவதில்லை.
எந்திரன்: இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பது என்பது இலங்கையின் மிக முக்கியமான மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். இது வெறும் மீன்பிடிப் பிரச்சினை மட்டுமல்ல, இதில் பொருளாதாரம், அரசியல், சமூகவியல், பாதுகாப்பு மற்றும் தேசிய இறையாண்மை போன்ற பல ஆழமான பரிமாணங்கள் அடங்கியுள்ளன. இந்த பிரச்சினையின் ஆழம் குறித்து எனது புரிதலை இங்கே விவரிக்கிறேன்:
இக்கட்டுரையை சந்தாதாரகளுக்கான என் முகநூல் பக்கத்தில் முழுமையாக வாசிக்கலாம்

நண்பர்களே! என் முகநூல் பக்கம் இரு பகுதிளைக கொண்டது. ஒன்று வழக்கமான என் பதிவுகளைத் தாங்கி வரும் பகுதி.
இன்னுமொரு பகுதி ஒன்றுண்டு. அது சந்தாதாரர்களுக்கு மட்டுமே உரிய பகுதி. அது சந்தாதாரர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய எழுத்துப் பதிவுகள், காணொளிகள், டிஜிட்டல் ஓவியங்கள் ஆகியவற்றை உள்ளடகிய பகுதி. அதற்கான இணையத்தள முகவரி
https://www.facebook.com/VNGiritharan/subscribe/
ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்க்கவும். இப்புதிய பகுதிக்கான உங்கள் ஆரோக்கியமான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன, எதிர்காலத்தில் மேலும் இப்பகுதி சிறப்புற உங்கள் வருகையும், ஆலோசனைகளும் வழி வகுக்கும்.
ஆரம்பத்தில் இப்பகுதியை இலவசமாகப் பார்க்கலாம். இப்பகுதி பிடித்திருந்தால் தொடர்ந்தும் சந்தாரர்களாக இருக்கலாம்.
இவ்வசதியைத் தந்ததற்காக முகநூல் நிறுவனத்துக்கு என் நன்றி.

[ இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (1) - நேர்காணல் கண்டவர் எழுத்தாள்ர் வ.ந,.கிரிதரன் -
இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி சமூக, அரசியல் ஆளுமைகளுடன் உரையாடுவதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஒவ்வொருவரும் தத்தமது அனுபவம், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிப்பர், அத்துடன் தம் நலன்களை மையமாக வைத்தும் அவர்கள் பதில்கள் இருக்கும். அவரகளை ஆட்டி வைக்கும் சூத்திரதாரிகளின் நலன்களையும் அவர்கள் பதில்கள பிரதிபலிக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும்போது இந்தப்பிரச்சனை இல்லை. செயற்கை நுண்ணறிவின் பதில்கள் உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. அறிவின், கிடைக்கப்பெறும் உண்மைகளின் அடிப்ப்டையில் மட்டுமே இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும். இத்னால் பொதுப்பிரசை ஒருவரிடத்தில் இலங்கைத் தமிழர்கள் பிர்ச்சனை பற்றி எழும் கேள்விகள் பல உள்ளன. இவற்றுக்கான செயற்கை நுண்ணறிவின் பதில்கள் எவையாகவிருக்கும் என்பதை அறிவதன் நோக்கமே அதனுடன் நடத்திய, நடத்தவிருக்கும் உரையாடல்களின் முக்கிய நோக்கம். செயுற்கை நுண்ணறிவை நான் எந்திரன் என்று இங்கு குறிப்பிடுவேன். இதனை ஆணாதிக்க மனப்பான்மை என்று கருத வேண்டாம். ]
இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (1) - நேர்காணல் கண்டவர் எழுத்தாள்ர் வ.ந,.கிரிதரன் -
நான்:
உன்னுடன் இலங்கைப் பிரச்னை பற்றிச் சிறிது உரையாடலாமா?
எந்திரன்:
இலங்கை பிரச்சனை பற்றி பேசலாம். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்? அல்லது குறிப்பிட்ட எந்த தகவலைப் பற்றி பேச வேண்டும்?
நான்:
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு தமிழர்க்ள் சமஷ்டிக் கோரிக்கையை முன் வைத்தார்கள். அது பின் தனிநாட்டுக்கோரிக்கையானது. யுத்தம் மூண்டது. யுத்தம் 2009இல் முடிவுக்கு வந்தது. இன்று போரில் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய தென்னிலங்கைத் தலைவர்களையெல்லாம் மக்கள் துரத்தி விட்டார்கள். இன்று அங்கு புதியதொரு தலைமை, உழைக்கும் மக்கள் மத்தியினைப் பிரதிநிதிப்படுத்தும் ஒருவர் தலைவராகவிருக்கும் சூழல் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல புதிய சூழல் ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தி வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் எல்லாம் தம் ஆதிக்கத்தை விஸ்தரித்துள்ளது. இந்நிலையில் சமூக, ஊடகங்கள், புரிந்துணர்வு எல்லாம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது,. இந்நிலையில் தென்னிலங்கை, வடகிழக்குத் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தைக் கையிலெடுத்து ஆட்சியிலிருக்கும் அநுர அரசைக் கலைப்பதற்கு முயற்சி செய்வதாக நீ உணர்கின்றாயா?

மனித வாழ்க்கை ஒரு விரிந்த வானத்தைப் போன்றது. அந்த வானத்தில் சிலர் விண்மீன்களாக மின்னுகின்றனர்; சிலர் சூரியனைப் போல ஒளி பரப்புகின்றனர்; இன்னும் சிலர் கருமேகங்களாக சூழ்ந்து, ஒளியை மறைக்க முயல்கின்றனர். ஆனால் கருமேகங்கள் எவ்வளவு அடர்த்தியாகச் சூழ்ந்தாலும், ஒளி கொண்டவற்றின் இயல்பை அவை மாற்றிவிட முடியாது. இந்த உண்மையை மிக அழகாக வெளிப்படுத்தும் உவமையே—கரு முகில்களின் நடுவே பேரொளி வீசும் சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது.
சந்திரன் எந்த ஆரவாரமும் இன்றி தன் ஒளியைப் பரப்புகிறான். அவனைப் பார்த்து நாய் குரைப்பது சந்திரனைச் சிதைக்க அல்ல; நாயின் உள்ளார்ந்த கலக்கம் வெளிப்படுவதற்கே. அதுபோலவே, சமூகத்தில் உயர்ந்து நிற்பவர்களைப் பார்த்து வரும் கேலிச்சொற்களும் இழிவுரைகளும், அவர்களின் மதிப்பைக் குறைப்பதற்கல்ல; விமர்சிப்பவர்களின் பொறாமை, தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இருக்கின்றன.
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இந்த உண்மை எங்கும் ஒலிக்கிறது. மகாத்மா காந்தி சத்தியாகிரகத்தைத் தொடங்கியபோது, பலர் அவரை “பலவீனர்”, “கனவு காண்பவர்” என்று இழிவுசெய்தனர். ஆனால் காலம் யாரை உயர்த்தியது? குரைத்த நாவுகள் மறைந்தன; அமைதியாக நடந்த பாதை உலகையே திருப்பியது. அதுபோலவே, திருவள்ளுவரின் குறள்கள் உருவான காலத்தில் அவர் பெரிதாகப் பேசப்படவில்லை; இன்று ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டியும் அவர் சொல்லிய சொற்கள் உலகம் முழுவதும் ஒலிக்கின்றன. குரைத்தவர்கள் யார் என்பதே வரலாற்றில் இல்லை.
இலக்கியமும் இதையே நமக்குக் கற்றுத்தருகிறது. கடலில் பயணிக்கும் பெரும் கப்பல்களைச் சிறு அலைகள் தடுக்க முடியாது. அவை கப்பலின் பயணத்தை அல்ல, அலைகளின் பலவீனத்தையே காட்டுகின்றன. மலை உச்சியில் எரியும் தீபத்தைப் பார்த்து பள்ளத்தாக்கில் இருக்கும் பூச்சி சத்தமிட்டால், தீபத்தின் ஒளி குறையுமா? இல்லை. அந்தச் சத்தம் பள்ளத்தாக்கிலேயே கரைந்துவிடும். உயர்வு என்றால் அமைதியும், நிலைத்தன்மையும்; இழிவு என்றால் ஆரவாரமும், தற்காலிகத்தன்மையும். இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் இந்த நாய் குரைப்பதைப் போலவே செயல்படுகின்றன.

[கலாமோகன் புகலிடத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை, குட்டிக்கதை, , நாடகம், மொழிபெயர்ப்பு என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்து பட்டது. பிரெஞ்சு மொழியில் புலமை மிக்கவர். பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகளைச் செய்தவர். கே.எல்.நேசமித்திரன், ஜெயந்தீசன் என்னும் புனைபெயர்களிலும் 'தாயகம் (கனடா) ' சஞ்சிகையில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. எக்ஸில் சஞ்சிகையில் இவரது சிறுகதைகள் பல வெளியாகியுள்ளன. இவரது படைப்புகளைப் பற்றிய எழுத்தாளர் வாசனின் கட்டுரையின் முதற் பகுதியிது. - பதிவுகள் -]
கலாமோகன் ஈழ-புகலிட இலக்கியத் தளத்தில் மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக இயங்கி வரும் ஒரு படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு என்று பல்வேறு தளங்களிலும் பயணிப்பவர். இதுவரை எமது பார்வைக்கு 'நிஷ்டை' என்ற சிறுகதைத் தொகுப்பும் 'ஜெயந்தீசன் கதைகள்' என்ற குறுங்கதைகளின் தொகுப்பும் 'வீடும் வீதியும்' என்ற நாடக நூலும் மட்டுமே கிட்டியுள்ளன. இதனைத் தவிர வேறு ஏதாவது வெளி வந்துள்ளனவா என்று எமக்குத் தெரியவில்லை. அவ்வப்போது இணையத் தளங்களில் இவரது கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பும் கிட்டியிருந்தது. தொடர்ந்தும் பல இதழ்களிலும் இவர் தொடர்ச்சியாக எழுதி வருவதினையும் அவதானிக்க முடிகின்றது. தற்போது பிரான்சில் வசித்து வருகின்ற இவர் மொழிபெயர்ப்புச் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருவதாக எம்மால் அறிய முடிகின்றது. இப்படியாக இவர் தொடர்ச்சியாக எமது சூழலில் இயங்கி வருகின்ற போதிலும் நவீன தமிழ் இலக்கியத் தடத்தில் இவரது இடம் எதுவென நிர்ணயிப்பதில் எமக்கு இன்னமும் பல இடர்ப்பாடுகள் உண்டு. இவரது படைப்புக்கள் குறித்தும் எம்மிடையே பல நேர்மறையான எதிர்மறையான பார்வைகள் உண்டு.

எழுத்தாளர் அநாதரட்சகன் தனது முற்போக்குச் சிந்தனையுடைய எழுத்துக்களால் நன்கு அறியப்பட்ட ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றை நூல்களாகத் தந்துள்ளார். இத்தொகுதியில் ஈழத்தில் இருந்து வெளிவந்த புனைவுகளிலிருந்து தனது கருத்தியலுக்கு மிக நெருக்கமாக வரக்கூடியவற்றையும் தேவையின் பொருட்டு எழுதியவற்றையும் தொகுப்பாக்கியிருக்கிறார்.
மக்கள் எழுத்தாளர் கே. டானியலில் இருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கின்ற சிவ ஆரூரன் வரை அவர்களின் படைப்புகள் குறித்த பார்வையை முன்வைத்திருக்கிறார். ஒவ்வொரு படைப்புகளிலும் தனது வாசிப்பனுபவத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதோடு சமூக முன்னேற்றங் கருதியவற்றையும் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். படைப்புகளின் காலம், அவற்றின் உள்ளடக்கம், அவற்றின் சமூகப்பெறுமதி ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுவதோடல்லாமல் எதிர்காலத்தில் நிவர்த்திக்கவேண்டியவற்றையும் குறித்துரைக்கின்றார்.
இந்நூலில் அகில், மொழிவரதன், ஷெல்லிதாசன், க.நவம், க. சின்னராஜன், கே.ஆர் டேவிட், இ. இராஜேஸ்கண்ணன், மு. சிவலிங்கம், சிவ. ஆரூரன், மூதூர் மொகமட் ராபி, மலைமகள், நெல்லை க. பேரன், ச. முருகானந்தன் ஆகியோரின் சிறுகதைத் தொகுப்புகள் பற்றியும்; கே.டானியல், கோகிலா மகேந்திரன், எஸ். புஸ்பராஜன், நந்தி, ஐ. சாந்தன் ஆகியோரின் நாவல்கள் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.
சிறுகதைத்தொகுதிகள் பற்றிக் குறிப்பிடுகின்றபோது ஒரு சிறுகதையின் வெற்றி என்பது வாசக மனதில் நுட்பமான அதிர்வுகளை எழுப்பி அதன் அனுபவங்களை எல்லையற்று விரித்துச் செல்வது என்ற பொதுவான கருத்துக்கு ஏற்ப படைப்பாளிகளின் கதைத் தொகுதிகளில் தான் கண்டுகொண்ட நல்ல கதைகளைச் சுட்டிக் காட்டுவதோடு அவற்றின் இலக்கியப் பெறுமானங் குறித்தும் உரைத்துள்ளார்.

நகர வடிவமைப்பில் முக்கியமானதோர் அம்சம் போக்குவரத்தால் திணறிக்கொண்டிருக்கும் பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகும். அந்த வகையில் Kottawa நகரில் அமைந்துள்ள மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம் ( Makumbura Multimodal Transport Hub (MMC) முக்கியமானதொரு சாதனை. இவ்வகையில் மேனாடுகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகக் கையாளப்படும் செயற்பாடுகளையெல்லாம் உள்வாங்கி (உதாரணத்துக்கு Park and Ride) , இலங்கையின் காலநிலைக்கேற்ப, மக்களின் பாவனையை மனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிறந்ததொரு கட்டடமாக இதனைக் கருதலாம். இதனை வடிவமைத்த கட்டடக்கலை நிறுவனம் கட்டடக்கலைஞர் முடித ஜெயக்கொடியின் 'Muditha Jayakody Associates (MJA)' நிறுவனமாகும்.
ஶ்ரீலங்காவின் சமகாலக்கட்டடக்கலையில் முக்கியமானதொரு கட்டடமாக மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையத்தை கட்டடக்கலைத் திறனாய்வாளார்கள் கருதுவர். MMC இன் வடிவமைப்பு இயற்கையான ஒளி, காற்றோட்டம் மற்றும் சுற்றுச்சூழலுடனான ஒருங்கிணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இது வெப்பமண்டல நவீனத்துவக் கட்டடக்கலைக் கோட்பாட்டினைப் பிரதிபலிப்பது. அவ்வகையில் MMC சமகால வெப்பமண்டலக் கட்டடக்கலைக்கு நல்லதோர் உதாரணமாக அமையும் கட்டடம். அத்துடன் முடித ஜெயக்கொடி கட்டடக்கலை நிறுவனத்தின், சமகாலக் கட்டட்டக்கலைக்கான முக்கியமானதொரு பங்களிப்பாகவும் கருதப்படும்.

கட்டடக்கலை பற்றி அறிந்த அளவு பொதுவாக நிலவடிமைப்புக் கலை (Landscaoe Architecture) பற்றிப் பலர் அறிந்திருப்பதில்லை. உண்மையில் கட்டடக்கலை, நகர அமைப்புக் கலையுடன் பின்னிப் பிணைந்த இன்னுமொரு கலைதான் நிலவடிவமைப்புக் கலை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் சரித்திரச் சின்னங்கள் நிலவடிவமைப்புக் கலை எவ்வளவுதூரம் நகர அமைப்பில் முக்கிய இடத்தை வகித்தது என்பதை உணர்த்தும் சான்றுகள். உதாரணத்துக்குச் சிகிரியா நகர அமைப்பில் நிலவடிவமைப்புக் கலையின் பங்களிப்பு வெளிப்படை. இது போல் பழமை வாய்ந்த விகாரைகள், அரச முக்கியத்துவம் மிக்க கட்டடங்கள், ஆலயங்கள் இவற்றிலெல்லாம் நிலவடிவமைப்புக் கலையின் தாக்கத்தைக் காணலாம். இன்று இத்துறை ஒரு பட்டப்படிப்பாக மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கபப்ட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் நிலவடிவமைப்புக் கலையில் முன்னோடிகளில் ஒருவரான திருமதி ஹெஸ்ட்ர பஸ்நாயக்க பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்வதே இப்பதிவின் நோக்கம்.

அண்மையில், எமது மனோ கணேசன் அவர்கள், மலையக மக்களுக்கென ஒரு தீர்வு திட்டத்தை முன் வைத்திருந்தார்: “காணி வழங்கப்படாவிடின், மலையக மக்கள், வட-கிழக்கில் குடியேறுவது சிறந்தது”.
நடந்து முடிந்த இயற்கை சீற்றத்தை அடுத்து அன்னாரால் முன்வைக்கப்பட்டுள்ள இத்திட்டம் பலருக்கும் அதிர்ச்சியை உண்டுப் பண்ண கூடியதுதான். “புலம் பெயர் நண்பர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை செயல்படுத்த, அவர் உத்தேசிருப்பதாயும் தெரிவித்துள்ளார்” (சூரியன் செய்தி சேவை: 09.12.2025).
இதனை ஆதரித்து, திரு.சுமந்திரன் அவர்களும் அறிக்கை விட்டிருப்பதாய் தெரிகின்றது. (தமிழ்வின்: 11.12.2025). இது, அண்மைக்காலமாய் வீசத் தொடங்கியுள்ள ஜேவிபியின் அலைகளில், வட-கிழக்கின் தேசியம் அள்ளுண்டு போகாமல் இருக்க தெரிவிக்கப்படும் ஒரு கூற்றாகவும் இருக்கலாம்.
இருப்பினும், இன்று உண்மையாகவே வற்ற தொடங்கிவிட்ட வடக்கின் ஜனத்தொகையை, இப்படி குடியேற்றுவதன் மூலம் பெருபிக்கும் செயல்திட்டமும் இதில், அடங்குவதாகவும் இருக்கலாம். ஆனால், மனோ கணேசனின் அறிக்கையில், இத்தகைய சமூக நலன்கள் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளனவா என்பது கேள்வியாகின்றது. காரணம், அன்னார் அவர்களின் கடந்த கால நிலைப்பாடுகள், பல சந்தர்ப்பங்களில் மிக மோசமான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளதை நாம் கண்ணார கண்டிருக்கின்றோம். (சென்ற கட்டுரையில் கூட, அன்னார் அவர்கள், மரண ஊசி விசாரணை என, ஐயா விக்னேஸவரன் அவர்களுடன், அமெரிக்க படையினருடன் இணைந்தபடி, விமானம் மூலமாக, வடக்குக்கு விரைந்து சென்றது தொடர்பில் சுட்டி காட்டியிருந்தோம்).

- இச்சிறுகதை முதலில் தேடல் (கனடா) சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மற்றும் மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளியான 'அமெரிக்கா'த் தொகுப்பிலும் இச்சிறுகதை பிரசுரமாகியுள்ளது. -
ஜெயகாந்தனின் ரிஷிமூலத்தில் வரும் ராஜாராமனைப் போல்தாடி மீசை வளர்த்திருந்தான். கால்களில் ஒன்றினைச் சப்பணமிட்ட நிலையிலும் மற்றதை உயர்த்தி மடக்கி முழங்காலினை வலது கையினால் பற்றியிருந்தான். இடதுகையை பின்புறமாக நிலத்தில் ஊன்றியிருந்தான். முடிநீண்டு வளர்ந்து கிடந்தது, வாயினில் பாதித்துண்டு சிகரட் புகைந்த படியிருந்தது. கண்களில் மட்டும் ஒரு விதமான ஒளி வீச்சு விரவிக் கிடந்தது. மான் தோலில் அமர்ந்திருக்கும் சாமியாரைப் போல மான் ஹோலின் மேல் அமர்ந்திருந்தவனின் தோற்றமிருந்தது. இவன் நடைபாதை நாயகர்களிலொருவனென்றால் நான் ஒரு நடைபாதை வியாபாரி. "கொட் டோக்" (Hot Dog) விற்பது என் தொழில். வடக்கில்'தொலைவில் ஒண்டாரியோ பாராளுமன்றக் கட்டடம் தெரிந்தது. எமக்குப் பின்புறமாக புகழ்பெற்ற குழந்தைகளிற்கான வைத்தியநிலையம், 'சிக்கிட்ஸ்'ஹாஸ்பிடல் அமைந்து கிடந்தது சிறிது நேரம் சாமியார் ஒண்டாரியோ பாராளுமன்றத்தையே பார்த்தபடியிருந்தான். பிறகு சிரித்தான். 'ஏன் சிரிக்கிறாய்' என்றேன்.
'பார்த்தாயா காலத்தின் கூத்தை. '
'காலத்தின் கூத்தா...'
'காலத்தின் கூத்தில்லாமல் வேறென்ன'
சிறிது நேரம் ஆகாயத்தைப் பார்த்தான், அதில் முழுமதியை ரசித்தான்.
நேரத்துடனேயே இருட்டத் தொடங்கிவிட்டது. இன்னமும் மாநகரத்தின் பரபரப்பு குறையவில்லை. ஆளுக்கு ஆள் அரக்கப் பரக்க நடந்துகொண்டிருந்தார்கள். இதற்கிடையில், எனக்கும் ஒரு சில 'கஸ்டமர்'கள் வந்தார்கள். எனது வாடிக்கையாளர்களில் ஒருவனான நைஜீரியா டாக்ஸி டிரைவர் டாக்ஸியை வீதியோரம்நிறுத்திவிட்டு வந்தான்.

இதுதான் நான் தனித்துச் செல்லும் முதல் பயணம். விமானத்தின் பின்பகுதியில்தான் என் இருக்கை இருந்தது. சூட்கேசை என்னுடன் இழுத்துக்கொண்டு சென்ற நான் என் இருக்கையில் கைப்பையை வைத்துவிட்டு, சூட்கேசை மேல் இறாக்கையில் வைப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். எட்டக்கூடிய உயரத்தில் அது இல்லையே என எனக்குக் கவலையாக இருந்தது. என் இருக்கையின் பக்கத்தில் இருந்த இளம் பெண் எழுந்து, உதவிவேண்டுமா என ஆங்கிலத்தில் கேட்டபடி உதவிசெய்ய முன்வந்தா. கேட்காமலேயே உதவிசெய்ய முன்வந்த அவவுக்கு வாயாராவும் மனதாரவும் நன்றிகூறியபடி ஆசுவாசத்துடன் அமர்ந்துகொண்டேன்.
சற்றுநேரத்தில், “நீங்க சுவிற்சிலாந்திலா இருக்கிறீங்க?” என அவவிடம் கேட்டேன்.
“ஓம், ஒரு medical conferenceக்காக ரொறன்ரோவுக்கு வந்தனான். நீங்க இங்கையா இருக்கிறீங்க?” அவவும் பேச்சைத் தொடர்ந்தா.
“ஓ, ரொறன்ரோ உங்களுக்குப் பிடிச்சிருந்ததா? 20 வருஷமா நான் இங்கைதான் இருக்கிறன். ஆனா, என்ர சொந்த நாடு, இலங்கை. அங்கை எனக்குப் படிப்பிச்ச ஒரு ரீச்சரின்ர 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக உங்கட நாட்டுக்கு வாறன்.”
“ரொறன்ரோவுக்கு ஒரு wow சொல்லலாமெண்டால், உங்களுக்கு மிகப் பெரிய wow சொல்லலாம். ஆசிரியர்களுடனான உறவை அவ்வளவு தூரத்துக்கு நீங்க பேணுவீங்களா?” முகத்தில் விழுந்த சுருட்டை மயிரைக் காதோரம் ஒதுக்கியவாறு புருவங்களை உயர்த்தினா அவ.
“மிசிஸ் பரம் வித்தியாசமான ஒரு ரீச்சர். அவ என்ர அபிமானத்துக்குரிய ரீச்சர் மட்டுமில்ல, அவ எனக்கொரு role model.”
“ஓ!”
“சின்ன வயசில இலங்கையின்ர தலைநகரான கொழும்பிலதான் நாங்க இருந்தனாங்க. அங்கை அப்பா ஒரு புடவைக் கடை வைச்சிருந்தவர். 77ம் ஆண்டு நடந்ததொரு கலவரத்தில அவர் கொலைசெய்யப்பட்டிட்டார். அதாலை பிறகு நாங்க யாழ்ப்பாணத்துக்குப் போகவேண்டியிருந்தது. அப்ப நான் ஏழாம் வகுப்பு....”

ORCID - https://orcid.org/0000-0002-7395-9699
ஆய்வுச் சுருக்கம்
பூம்புகார் என்பது காவிரிப்பூம்பட்டினத்தின் மற்றொரு பெயர். இது சிறந்த வாணிகத் தலமாகவும், துறைமுகமாகவும் பண்டைய காலத்தில் விளங்கியுள்ளது. இத்துறைமுகத்தின் வழியே நாட்டின் பலபகுதிகளுக்கும் சென்று உள்நாட்டு வாணிகத்தில் வாணிகர்கள் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி சீனா, இலங்கை, சாவகம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றும் வணிகம் செய்துள்ளனர். அதுமட்டுமன்றி அவர்கள் இத்துறைமுகப் பட்டினத்திற்கு வந்து தங்கியும் வாணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு பாய்மரக்கலங்களும், கப்பல்களும் பொருட்களை ஏற்றி வந்தவண்ணம் இருந்துள்ளன. அதுமட்டுமன்றி இந்நகரில் சிறந்த வாணிகர்களுக்கு எட்டி முதலான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான சிறப்புகளை உடையதாக விளங்கிய பூம்புகார் காப்பிய காலத்தில் கடல்சீற்றத்தால் அழிவுக்குள்ளானது. அதன் விளைவால் இன்று சிறிய கிராமமாக திகழ்கின்றது என்பதை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.
முக்கியச்சொற்கள்
வாணிகம், பூம்புகார், உள்நாட்டு வாணிகம், வெளிநாட்டு வாணிகம், காவிரிபூம்பட்டினம், துறைமுகம், கடல்வாணிகம்
முன்னுரை
பண்டைய தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்களின் கடற்கரை பட்டினமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம் எனும் பூம்புகார். இந்நகரில் பல்வேறு வாணிகங்கள் சிறப்பாக நடந்துள்ளன. அதிலும் குறிப்பாக பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்களும் இந்த பட்டினத்திற்கு வந்து தங்கி வாணிகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது. அதனை விரிவான இக்கட்டுரை ஆராய்கின்றது.

அலமாரியில் ஓரமாக வைக்கப்பட்டிருந்த மூக்கு கண்ணாடியில்
திட்டு திட்டாகப் படிந்திருந்தன
ஞாபக மறதிகள்
இரவில் தவிர்த்த மாத்திரைகளாகவும்
மளிகை கடையில் தவறவிட்ட பாக்கிகளாகவும்
மேஜையில் விட்டுச்சென்ற சாவிகளாகவும் ஆங்காங்கே படிந்திருக்க
கோடுகளாகத் தென்பட்ட நிராகரிப்புகளுக்கும் மறதிகளுக்கும் இடையே
தெரிந்த பார்வையில்
சுழன்று கொண்டிருந்தது
தாத்தாவின் உலகம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banada) உதவி : VNG]

பாகம் 1: அடையாள இழப்பு
நான் இருந்த நாடு ஒரு புகைப்படமாக மட்டும் உள்ளது,
தலைகீழாக பிணையத்தில் மிதந்துவந்தது,
அதனுள் என் பாட்டியின் சீராடை,
ஒரு விழா மேடையில் மறைந்து போன என் நாமம்.
இப்போது என் பெயர் ஒத்த ஒலி,
புதுமொழிகளில் பிறரால் தவறாக உச்சரிக்கப்படும் நினைவுச்சின்னம்.
பாகம் 2: தொழிலின் வேதனை
இங்கே என் கை தொழிலாளியின் கை,
ஆனால் என் கனவுகள் கத்திக்கும் குரல்கள்.
சுத்திகரிக்க வேண்டிய வாடை,
பொதுமுடிச்சுகளுள் சிக்கிக்கொண்ட வரிகளாக.
அந்த நாடு எனக்கு வீடு தரவில்லை,
ஆனால் அந்த அறை எனக்கு அடிமைத்தனம் தந்தது.

படைப்பிலக்கியவாதி ஒருவர் எழுதும் பயண அனுபவங்களுக்கும், சாதாரணமான ஒருவர் எழுதும் பயண அனுபவங்களுக்குமிடையில் அதிக வித்தியாசம் இருக்கும். படைப்பிலக்கியவாதி எழுதும் அனுபவங்களில் இலக்கியச் சுவை இருக்கும். உணர்வுகளின் வெளிப்பாடு இருக்கும். அதனால் அவை இலக்கியத் தரம் மிக்கதாக அமைந்து விடுகின்றன.
உதாரணத்துக்கு எழுத்தாளர் நடேசன் எழுதும் பயண அனுபவங்களைக் குறிப்பிடலாம். தற்போது பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள அவரது இந்தியப் பயணத்தொடரில் இம்முறை மத்திய பிரதேசத்திலுள்ள பீம்பேத்கா (Rock Shelters of Bhimbetka) குகை ஓவியங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆதி மனிதர்களால் பல்வேறு காலகட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்களை உள்ளடக்கிய குகைகள்.
இவ்வோவியங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவருக்கு ஆதி மனிதர்களின் அக்குகை ஓவியங்களைப் பார்ப்பதில் அவ்வளவு ஆர்வமில்லை. இஷ்ட்டமில்லை. ஆனாலும் மனைவிக்கு விருப்பமென்பதால் அவர் அவர் பின்னால் அவர் போன இடமெல்லாம் பின் தொடர்ந்து செல்கின்றார். அவ்விதம் செல்லும் அவரது அந்த நிலை அவருக்குச் சங்கப்பாடலொன்றின் வரிகளை நினைவூட்டுகின்றன.

- எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம் "இலங்கையின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் எம்மை விட்டுப் பிரிந்த நினைவு தினம் டிசம்பர் 8. அவர் எழுதிய இக்கட்டுரை வாசகர்களுக்கு பயனளிக்கும் " என்று குறிப்பிட்டு, எமக்குத் தம் தந்தையாரின் நினைவு தினத்தையொட்டி அனுப்பி வைத்த அமரர் அகஸ்தியரின் கட்டுரையிது. -
சமூகவியற் படைப்பாளிகளும், விமர்சகர்களும், வாசகர்களும் எதிர்பார்த்தவாறு தமிழ் இலக்கியம் பற்றி ஐரோப்பாவிலும் தற்போது பேசப்படுவதற்கு இங்கு வெளிவரும் மாத, முத்திங்கள், வார இரு வாரப் பத்திரிகை சஞ்சிகைகள், சிறு நூல் வெளியீட்டுப் பதிப்பகங்கள், ஆண்டு மலர்கள், கலை இலக்கிய நிகழ்வுகள், நூல் விற்பனை நிலையங்கள் காரணமாக அமைந்தமை மனங் கொள்ளத்தக்கது. ‘ஐரோப்பாவில் தமிழ் இலக்கியம்’ என்ற கட்டுரையில் விரிவாக எழுதியதால் இதில் அவற்றைத் தவர்த்துள்ளேன்.
‘நடை பயில முன் படைப்புகள் பற்றி விமர்சனம் செய்வது இளம் படைப்பாளிகளைச் சோர்வடையச் செய்துவிடும்’ என்று சொல்லப்படுகிறது. இப்படிச் சொல்வதே படைப்பாளிகளை அவமதிப்பதாகும். படைப்பாளி மட்டுமன்றி, வாசகனும், விமர்சனத்திற்குள்ளாக்கப்படும் ஆரம்பப் படைப்பாளியும் இதனால் சிறந்த படைப்பாளர்களாகத் திகழ முடியும். படைப்பாளி படைப்புகள் பற்றி ஏதோ ஒரு வகையிலேனும் தன்னையே விமர்சிப்பதாலும் விமர்சிக்கப்படுவதாலும் படைப்புகள் பட்டை தீட்டப்படும் தங்கம் போலாகின்றன. எனவே, விமர்சனத்தைக் கண்டு, எந்தப் படைப்பாளனும் தன் பேனாவைக் கீழே போடக்கூடாது. மனச்சோர்வு அடையவும் கூடாது. எனெனில், நேர்மையாக விமர்சிக்கின்றவன்தான் படைப்பாளியின் உண்மையான இலக்கிய நண்பனாகத் திகழ்கின்றான். உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடல் பொருத்தம் என்று கருதுகின்றேன்.

டிசம்பர் 11, மகாகவி பாரதியாரின் பிறந்ததின நினைவு தினம்!
"மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்.' - பாரதியார் -
என்னைக் கவர்ந்த, பாதித்த மகாகவிஞர் பாரதியார். தன் குறுகிய இருப்பில் இவர் சாதித்தவை அதிகம். ஆச்சரியமூட்டுபவை. தன் இருப்பைப்பற்றி, தன் பிறந்த மண்ணைப் பற்றி, தன் நாட்டைப்பற்றி, தான் வாழ்ந்த சமுதாயச் சூழல் பற்றி, அதன் சீர்கேடுகள் பற்றி, பெண் விடுதலை பற்றி, தேசிய, வர்க்க, சமூக விடுதலை பற்றி, மானுட விடுதலை பற்றி, மார்க்சிய அரசியல் தத்துவங்கள் பற்றியென்று இவர் சிந்திக்காத விடயமெதுவுமில்லை.