வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி

கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=WjHI9FnBLsM

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

என்று சொன்னான் மகாகவி பாரதி
நன்றாய் நாளைக் கழித்திட வேண்டி.
என்றும் இருப்பில் இன்பம் நாடி.
நன்று சொன்னான் என்று சொல்வேன்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

சிந்தையில் சென்றதை எண்ணிக் குமைதல்
சிந்தையில் இருத்தல் வேண்டாம்  அதனால்
சென்றதை எண்ணி வருந்தாதீர் என்றான்
இன்று இன்பமாய்க் கழிக்கவே அதனால்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

ஒவ்வொரு கணமும் பிறக்கும் கலங்கள்
உள்ள உடம்பில் வாழ்கின்றோம் நாம்.
கணந்தோறும் பிறக்கின்றோம் நாம் அதனையும் 
கூடவே எண்ணுவோம் .நடை பயில்வோம்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

இருக்கும் வரையில் இன்புற்று வாழ்ந்தான்.
இல்லாததை எண்ணி உள்ளதை என்றும்
இழந்தவன் அல்லன் அவன் என்பேன்.
இவன் வழியில் என்வழி தொடரும்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.



வ.ந.கிரிதரன் பாடல் - மழை பொழியும் இரவென்றால்.....

இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி

பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=IAqPDoGOKDs

மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.
 
சட்டச் சடவெ\ன்றே சப்திக்கும்
ஓட்டுக் கூரையின் ஓசையிலே
கட்டுண்டு கிடந்திடுவேன் அப்போது.
களிதரும் பொழுது அதுவாகும்.
 
மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.
 
வான்துளைத்து மின்னல் கோடிழுக்கும்.
பேரிடியோ பெருந்தொலைவு கேட்கும்.
நான் படுக்கையில் புரண்டிருப்பேன்.
நிலைமறந்து மெய் மறப்பேன்.
மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.
 
வயற்புறத்தே தவளைகள் வாய்ப்பாட்டு
விடியும் வரையும் தொடர்ந்திருக்கும்.
வெள்ளம் பெருக்கோடி பாய்ந்திடும்.
வழியெங்கும் நிலங்கழுவிச் சென்றிடும்.
 
மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.
 
மழைவெள்ளம் சொல்லும் அறிவுரையாம்
நிலம் துடைக்குமதன் செயற்பாடு.
ஊருக்கும் நன்மை செய்யும்
மழைவெள்ளம் கண்டு களிப்பேன்.
 
மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.
 
பயிர் வளர்க்க மண்ணை
பதப்படுத்த மழை பெய்யும்.
உயிர் உலகில் இருப்பதற்கு
உதவப் பெய்வது மழையாகும்.
 
மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.
 
மழைபோல நாமும் பொழிவோம்.
மற்றவர்க்குப் பயன் தருவோம்.
இருப்புக்கு அர்த்தம் தரும்
பெருமை மிகு வாழ்வாகும்.
 
*டிஜிட்டல் ஓவியம் - Google Nano Banana by VNG.M


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்