ஒளிப் பதிவுக் கலை (கவிதை)
- 19.08.2019 உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு, இக் கலையை மதிக்கும், அத்தனை கலைஞர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணமாகிறது. -
பாரதி தாசன்சொல் “உருக்கவர் பெட்டி”யின்
பரிணாம வளர்ச்சியா லே,
பாரினை ஓர்திரை அரங்கிலே கொட்டிடும்
படைப்பாளி ஆகினோம் : நாம் !
ஊரினை பேரினை உறவினை அறியாது,
ஓர்முனை எட்டினோ ரும்….
யாரவர் என்பதைக் கவர்ந்திங்கே சொல்லுவோம்
யாம்செய்யும் தொழிலினா லே !
கனவிலே சுற்றிடும் உலகென்று பேருக்கு
கண்டவர் சொன்னபோதும் : பலர்
கனவினை நனவாக்க கையிலே பணங்கொட்டும்
கடவுளாம் கலையின் கூடம் !
மனதிலே தோன்றியும், தோன்றலுக்கு அன்றியும்
மறைந்திடும் காட்சி முற்றும்,
தனதுளே காட்டுமே தலைசுற்றப் பண்ணுமே
தந்திரக் காட்சி மற்றும் !
“ஏன்.?”என்று கேட்டிட எவரின்றி வீதியில்
இழிநிலை கண்டமா தும்,
“மான்”என்று காட்டிட ஒப்பனைக் கலையினார்
மணியாகச் செய்தபோ தும்,
வான்நின்று சிரிக்கின்ற வண்ணத் தாரகை
“வா.!”என்று ரசிகர்மோ தும்,
நாம்நின்று செய்திடும் நல்லஒளிப் பதிவினால்
நடந்தது அன்றோ ஏதும்..?













“பஞ்சத்தில் உழன்று : பட்டினி கிடந்தாலும்….

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









