கனடாவில் நடந்த சிறார்களின் இசை அர்ப்பணமும் சலங்கைப் பூசையும்.
சென்ற வாரம் 03-11-2011 ரொறன்ரோ பின்ச் அவனியூவில் உள்ள ஜோர்க்வூட் அரங்கத்தில் சிறார்களின் இசை அர்ப்பணமும், சலங்கைப் பூசையும் ஒரே மேடையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. பிரபல பாடகியான இசைக்கலா வித்தகர் கலைமணி பவானி ஆலாலசுந்தரத்தின் மாணவனான ஆகாஷ் கதிர்காமனின் இசை அர்ப்பணமும், பிரபல நாட்டிய தாரகையான லலிதா கதிர்காமனின் மாணவியான அஸ்வினி கதிர்காமனின் சலங்கைப்பூசையும் ஒரே மேடையில் இடம் பெற்றன. ரொறன்ரோவின் பிரபல நடன, சங்கீத, இசைக் கலைஞர்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டது.




வணக்கம் நண்பர்களே, குறும்பட வட்டம் தொடர்ந்து 34 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஒரே மாதிரி இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஒரு புதுப் பகுதி, புதிய எண்ணம், புதிய முயற்சி என போய்க் கொண்டிருந்தது. ஆனால் தொடர்ந்து மூன்று வருடங்கள் ஒரே இடம், அதே நாள், அதே நேரம் என கொஞ்சம் சலிப்பு தட்டத்தான் செய்கிறது. தவிர்த்து தமிழ் ஸ்டுடியோவில் இருந்து ஒரு மாதத்திற்கு நான்கைந்து நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. குறும்பட வட்டம், பௌர்ணமி இரவு, குறுந்திரைப் பயணம், ஆவணப் படங்கள் திரையிடல், இலக்கிய நிகழ்வுகள் என விரிந்துக் கொண்டே செல்கிறது.
தாயகத்தில் தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமைää கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் ஆவணி 28ஆம் நாள் மாலை ஏழு மணியளவில் ஆரம்பமானது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரும், உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்களும் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். ஆகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பொதுக்சுட்டத்தில் முதலில் உரை நிகழ்த்திய அருட்கலாநிதி இம்மானுவேல் அடிகள் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களை ஒன்றிணைப்பதன் மூலம் இப்பேரவையானது 2009 ஆம் ஆண்டு ஆவணி (ஆகஸ்ட்) மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் 14 நாடுகளிலுள்ள அமைப்புகளுடன் பிரதிநிதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, உலகத்தழிழ் பேரவைக்கான அரசியல் யாப்பும் உருவாக்கப்பட்டது. உலகத் தமிழ் பேரவையை சம்பிரதாயபூர்வதாக 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானிய நாடாள மன்றத்தில் பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர், மற்றும் பிரித்தானிய எதிர்க்கட்சிகளின் வெளிநாட்டுக்கொள்கைக்கு பொறுப்பான நாடாளூமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் சர்வதேசமயமான சுயாதீனமான, ஜனநாயகப்பண்புகளோடு அகிம்சாவழியில் இப்பேரவையின் கருத்துருவாக்கம் அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உலகத் தமிழர் பேரவை ஆரம்பிக்கப்பட்டதின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.


எழுத்தாளர் முல்லை அமுதனைத் (இ.மகேந்திரன்) தமிழ் இலக்கிய உலகு நன்கறியும். இலண்டனில் வசிக்கும் அவர் வருடா வருடம் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியினையும் நடாத்தி வருபவர். 'காற்றுவெளி' என்னும் சஞ்சிகையின் ஆசிரியர். மறைந்த ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை அடங்கிய 'இலக்கியப் பூக்கள் (தொகுதி ஒன்று)' நூலினையும் வெளியிட்டவர். நூல்கள் பலவற்றையும் வெளியிட்டவர். தற்போது எழுத்தாளர் விபரத் திரட்டு என்னும் நூலினைத் தொகுத்து வருகின்றார். எதிர்காலத்தில் நூலாக வெளிவரவுள்ள இந்நூல் பற்றிய விபரங்களை 


வணக்கம் நண்பர்களே!, தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரில் "லெனின் விருதை" வழங்கி வருகிறது. இவ்விருது தமிழ் குறும்பட / ஆவணப்பட துறையில் இவ்வூடகங்கள் மூலம் மக்கள் எழுச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கான படைப்பை படைக்கும் கலைஞருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2010 ஆண்டிற்கான லெனின் விருது ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் அவர்களுக்கு வழங்கப்பட விருக்கிறது. காஞ்சனை சீனிவாசன் என்று பரவலாக இத்துறை சார்ந்த மத்தியில் அறியப்படும் திரு. சீனிவாசன் ‘நதியின் மரணம்’ என்ற தன் முதல் ஆவணப்படத்தின் மூலமாக திரை ஊடகத்தை வெறும் பார்வையாளர் தளத்திலிருந்து, சிந்தனை மற்றும் போராட்டம் என்ற தளத்திற்குக் கொண்டு சென்றவர். காட்சி ஊடகத்தை, தன் தொடர்ச் செயல்பாடுகளின் வழியாக, ‘சமூக ஊடகம்‘ என்ற களப்பணிக்கான ஊடகமாக மாற்றியதில் முதன்மையானவர்.
காலம்: ஆகஸ்ட் 27, 2011 – சனிக்கிழமை பிற்பகல் 3மணி – 6 மணி வரை. இடம்: ஸ்காபரோ சிவிக்சென்ரர் மண்டபம் (கனடா) (மக்கோவன் - எல்ஸ்மெயர்) . சிறப்புரை: பிரித்தானியாவிலிருந்து வருகை தரும் மூத்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் “போருக்குப் பின்னரான சமூக மாற்றமும் முற்போக்குவாதிகளின் பங்களிப்பும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: தேவன். ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கும். இந்த விருது பாராட்டுக் கேடயமும், 1500 கனடிய டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வருடம் நடைபெறும் உரைத்தொடருடன் இணைந்து இந்த விருது விழாவும் அரங்கேறும். விருது பெற்றவர் பெயர், வழங்கும் இடம், காலம், நேரம் போன்ற விவரங்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அறிவிக்கப்படும். உலகளாவிய அங்கத்தினர்களைக் கொண்ட விருது நடுவர் குழுவின் முடிவு அறுதியானது. விண்ணப்பம் அனுப்புவதற்கான முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2011.
அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பின்புலம்: ஈழத்துத் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகங்களும் நூலகர்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பே அயோத்தி நூலக சேவை அமைப்பாகும். (யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆனைக்கோட்டையில்,இவ்வமைப்பு கருவுற்று வளர்ச்சிகண்ட இல்லத்தின் பெயரான அயோத்தியே அவ்வமைப்பின்
கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பாக 2011 ஆம் ஆண்டு இலக்கியப்பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள் முதன்மைப் பரிசு ரூபாய் ஐம்ப்பதாயிரமும் – விருது தமிழ் மொழி (பெறுபவர்): 1. வவுனியூர் .இரா.உதயணன் – லண்டன் நூல் – பனிநிலவு; பிறமொழி பின்னர் அறிவிக்கப்படும்.
நண்பர்களுக்கு வணக்கம்! ”தனி” மௌனத்தில் உறைந்துகிடக்கும் தனிமையான தீராத பொழுதுகளை பெரிதுபடுத்தாமல் புறக்கணிப்புக்கு இலக்காகும் பரப்பில் தனியாக (SOLIDARITY) குரல் எழுப்பக்கூடிய வடிவமாக உருவெடுக்க “நாம்” நண்பர்கள் குழுவினரின் புதிய முயற்சியாக தொடர்கிறது. “தனி” இதழ் ஆகஸ்ட் மத்தியில் நண்பர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக அறிமுகப்படுத்த நினைத்திருக்கிறோம். திட்டமிடப்படாத நாள் ஒன்றில் உங்களுக்கு அழைப்பு வரும் கலந்துகொள்ளுங்கள். ”தனி” – அடுத்த இதழுக்கான படைப்புகள் தொகுத்துக்கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 15ற்குள் உங்களின் படைப்புக்களை எனக்கு அனுப்பிவையுங்கள்.
கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பத்தி, ஊடக எழுத்து, ஒளிப்படம், என பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர் தீபச்செல்வனுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சிறந்த புகைப்பட ஊடகவியலாளன் விருது, மற்றும் நெருக்கடி சூழலில் செய்தி தேடலுக்கான விருது ஆகிய இரண்டு விருதுகளை வழங்கிக் கெளரவித்துள்ளது. நெருக்கடிக் காலத்தில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பான அவரது கட்டுரைகள் முக்கியமானவை. ஈழத்து ஊடகங்களிலும், தமிழக சஞ்சிகைகளிலும், அவரது பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
26 July 2011- The longlist for the 2011 Man Booker Prize for Fiction - the ‘Man Booker Dozen' - is announced today, Tuesday 26 July. The 13 books on the list include: one former Man Booker Prize winner; two previously shortlisted writers and one longlisted author; four first time novelists and three Canadian writers. The list also includes three new publishers to the prize - Oneworld, Sandstone Press and Seren Books.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









