நிகழ்வு: கருத்துரை கறுப்பு ஜீலை நினைவாக(ஞாயிறு 15.07.2012 மாலை 5 மணி) ...
ஒரு அழைப்பிதழ் கிடைத்தது.பார்த்ததும் நினைவுகள் அலைக்கழிந்தன. மறக்க நினைத்த சம்பவங்கள் தணலாகக் கிடந்து சுடர் வீச முனைந்தது. மூன்று தசாப்தங்களில் கழிந்துவிட்டனவா? நினைக்க ஆச்சரியமாக இல்லை.. வேதனையாகதான் உள்ளது. இனத்துவேசம் கொழுந்துவிட்டெரிய ஒரு தேசம் தனது மக்களில் ஒரு பகுதியினரை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாளில் ஆங்காரமாக இறங்கியது. அதன் வடுக்களைச் சுமந்து திரியும் மக்கள் அதன் வேதனையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை. யுத்தம் வந்தது. அதுவும் முடிந்தது. ஆயினும் வடுக்களின் வேதனையை ஆற்றும் வழி தெரியாது இந்தத் தேசம் இன்னமும் கையறு நிலையிலிருக்கிறது. இங்கு ஒவ்வாரு இனத்திற்கும் தலைவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இந்தத் தேசத்தை ஒவ்வொருவரும் தமது தேசம் என உணரவைக்கக் கூடிய ஒரு தேசியத் தலைவரைத் தேடி இந்தத் தேசம் வடிக்கும் கண்ணீர் வடிக்கிறது.

சனி, ஜூலை 7, 2012 - யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் பாடசாலைச் சிறுவர்களுக்கான அமைதிக் குழு (Peace Gang) நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதிநாளான 07.07.2012 சனிக்கிழமை கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. ஆங்கில நிகழ்ச்சித் திட்டமே இந்த கண்காட்சியின் ஆரம்ப நோக்கமாக அமைந்திருந்தது. குறித்த பயிற்சியாளர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள் சிலரும் கடந்த இரண்டு வாரங்களாக இந்தப் பயிற்சிப்பட்டறையில் பங்காளிகளாக இருந்து வழிப்படுத்தியுள்ளனர். இதில் சிறுவர்களின் ஓவியங்களும் அவர்கள் எடுத்த ஒளிப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஒளிப்படங்கள் யாவும் தொண்டைமானாறு பிரதேசத்தினை மையமாகக் கொண்டதாகவே இருந்தன. வழிகாட்டிகளின் துணையுடன் ஒளிப்படக்கருவிகளை அவர்களிடமே கொடுத்து கிராமத்தின் பலம் பலவீனங்களை இனங்கண்டு அவைபற்றி சில வரிகளையும் எழுதி அவை காட்சிப்படுத்தப்பட்டன. படங்களுக்கான விளக்கம் தமிழிலும்ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தன.
'இசை, பாடல், கதை, நடிப்பு, மேடை, ஓவியம், ஒப்பனை, மரபு போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய தமிழர்களின் பாரம்பரிய கலையாக கூத்துத் திகழ்கின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பருத்தித்துறை மாதனை கிராம மைதானத்தில் விடிய விடிய இடம்பெற்ற நாட்டுக் கூத்துக்களைப் பார்த்து மகிழ்ந்த அனுபவம் இப்போதும் என் நெஞ்சில் பசுமையாய் பதிந்துள்ளது. தச்சுத்தொழில் சார்ந்த சமூகத்தினர் இந்தக் கூத்து மரபை மிகுந்த செழுமையோடும்இ உற்சாகத்தோடும் பருத்தித்துறையில் நிகழ்த்தி வந்தனர். முழுக் கிராமமே ஒன்று திரண்டு இந்தக் கூத்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது கூத்து முழுச் சமூகம் சார்ந்த கலைமரபாகத் திகழ்ந்தது என்பதை காட்டுகிறது' என்று ஓவியர் கே. கிருஷ்ணராஜா ‘தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்’ லண்டனில் ஒழுங்கு செய்திருந்த ‘கூத்து மீளுருவாக்கம்’ பற்றிய கருத்தரங்கில் தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.
அன்புள்ள தமிழ் நண்பர்களே! "மானிட ஜாதியை ஆட்டிவைப்பேன்- அவர் மாண்டுவிட்டாலதைப் பாடிவைப்பேன்- நான் நிரந்தரமானவன் அழிவதில்லை- எந்த நிலையிலுமெனக்கு மரணமில்லை!" இது போன்ற மணியான கருத்து நிறைந்த பாடல்கள் மூலம் நம் மனதில் நிறைந்த கவியரசு கண்ணதாசனின் 85-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வரும் ஜுன் மாதம் 30-ம் நாள் சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பவுமண் அரங்கில் நடைபெறவுள்ள "கவியரசு கண்ணதாசன் கலை விழா"வுக்கு சிட்னி வாழ் தமிழர்கள் அனைவரையும் ஆஸ்திரேலிய தமிழ் சங்கம் அன்புடன் வரவேற்கிறது. "தமிழருவி மணியண் ஐயா அவர்களின் தேன்தமிழ் சொற்பொழிவு" "விறுவிறுப்பான கருத்துமிக்க வழக்காடு மன்றம்" மற்றும் கண்ணதாசனின் சிறந்த திரையிசை பாடலுடன் கூடிய நடன நிகழ்ச்சி! அனைவரும் வருக! தமிழருவியில் நனைக!
Citizenship and Immigration Canada welcomes 26 new Canadians to a special citizenship ceremony at The Regional Municipality of York Administrative Centre in the Town of Newmarket. What: 26 new Canadians and their families will come together for a special citizenship ceremony hosted by Citizenship and Immigration Canada and The Regional Municipality of York. Presiding official: Judge Crist Geronikolos. When: Thursday, June 28, 2012 3:00 p.m. Where: The Regional Municipality of York, Administrative Centre, 17250 Yonge Street, Newmarket, ON Special guests: Lois Brown, MP, Newmarket-Aurora, Honourable Charles Sousa – MPP, Provincial Minister of Citizenship and Immigration (TBC) Bill Fisch, York Region Chairman and CEO Frank Scarpitti, Mayor, Town of Markham and Co-Chair of the Community Partnership Council . Media are invited to attend. Photography and audio-visual equipment are permitted. As part of the event, York Region is also celebrating work that has been done on the York Region Local Immigration Partnership initiative (LIP) including the launch of Leading Change for a Stronger Community: Community Partnership Council Collective Action Plan 2012-2015. This three-year plan identifies actions to support the integration of newcomers and enhance welcoming and inclusive communities.
பாரிஸ் மாநகரில் எதிர்வரும் 15 -ம் திகதி (15 - 07 - 2012 ஞாயிற்றுக் கிழமை பாரிஸ் மார்க்ஸ் டோர்முவா தேவாலயக் கலையரங்கத்தில் (50 Place de Torcy - 75018 Paris) ''இலக்கிய மாலை" நிகழ்வு சிறப்புற நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் புகழ்பெற்ற தமிழகப் படைப்பாளிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம், பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஆகியன ஒன்றிணைந்து நடாத்தவுள்ள இந்நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன. டாக்டர் வி. ரி. இளங்கோவனின் 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா", 'தினக்குரல்" பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கத்தின் 'ஊருக்கு நல்லது சொல்வேன்", நந்தினி சேவியரின் 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்"ää இந்திய சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற எழுத்தாளர் இந்திரனின் 'தோட்டத்து மேசையில் பறவைகள்", இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதியின் 'சங்கம்" நாவல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பான ''''Le Réveil" ஆகிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த யூன் 16, 2012 அன்று ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தது. முக்கியமாக மூன்று தலைப்புகளில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. (1) தாயகத்தில் போரினால் இடப் பெயர்வுக்கு உள்ளாகி மக்களது பொருண்மிய வாழ்வாதாரச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் (2) தமிழர்களின் அரசியல் எதிர்காலம் (3) ஊடகங்கள் வகிக்கும் பாத்திரமும் பங்களிப்பும் ஆகியவையே அந்தத் தலைப்புகளாகும். அரசியல் கைதிகளின் விடுதலை, சிங்களக் குடியேற்றம், சிங்கள இராணுவத்தால் நில அபகரிப்பு, கிழக்கு மாகாண சபைத் தேர்தல், தாயகத்தில் இடம்பெறும் பண்பாட்டுச் சிதைவு ஆகியவை பற்றியும் ஆராயப்பட்டன. அஞ்சப்பர் உணவகத்தில் நடந்த இந்தக் கலந்துரையாடலில் 25 பேர் கலந்து கொண்டார்கள். ததேகூ (கனடா) தலைவர் வே. தங்கவேலு தலைமையில் நடந்த இந்தக் கலந்துரையாடலில் வேறு அமைப்புக்களை சார்ந்த செயற்பாட்டாளர்களும் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கது. தாயகத்தில் நிலப் பறிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு சமாந்தரமாக புலத்திலும் ஆர்ப்பட்டங்களை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இதன் பொருட்டு ரொறன்ரோ மாநகரத்தில் உள்ள ஊர்ச்சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் உட்பட அனைத்து அமைப்புக்களது ஒத்துழைப்பைக் கேட்பது என முடிவாகியது.
நீர்வை பொன்னையன் ஒரு முற்போக்காளர், தளராத கொள்கைப் பிடிப்பாளர். மூத்த எழுத்தாளர். பல தசாப்தங்களாக எழுத்துத் துறையில் தொடர்ந்து ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பவர். இப்பொழுது அவர் தனது வாழ்க்கைப் பயணத்தின் அத்தியாயங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார். ஆம் 'நினைவலைகள்' என்பது அவரது அரசியல், கலை இலக்கிய. சமூகப் பயணத்தின் பதிவாக வெளிவர இருக்கிறது. அப்படியானால் இது அவரது சுயசரிதை எனலாமா? இல்லை என்கிறார்.. " 'நினைவலைகள்' என்ற இந்த நூல் என் சுயசரிதையல்ல. நான் அரசியல்வாதியல்ல. இலக்கியவாதியுமல்ல. அரசியல் இலக்கியச் செயற்பாட்டாளன் நான். சிலர் எழுத்துத்துறையிலிருந்து அரசியலுக்குள் நுழைகிறார்கள். நான் அரசியல் களத்திலிருந்து எழுத்துத்துறைக்குள் பிரவேசித்தவன்......... எனது அரசியல், கலை இலக்கியச் செயற்பாடுகளில் என் நினைவுத்தடத்தில் உள்ளவற்றில் சிலவற்றை இந்த நூலில் தந்துள்ளேன்" என்கிறார். நிச்சயம் படிப்பதற்கு சுவார்ஸத்துடன், நிறையத் தகவல்களையும் உள்ளதாக இருக்கும் என நம்பலாம். ஏனெனில் யாழ்குடாநாட்டின் நீர்வேலியிலுள்ள ஒலிவைக் குறிச்சி எனப்படும், அக்காலத்தில் பின் தங்கியிருந்த பகுதியில் பிறந்தவர். அங்கிருந்து மட்டக்களப்பு, கல்கத்தா, மீண்டும் யாழ்ப்பாணம் கொழும்பு எனப் பல பிரதேசங்களில் வாழ்ந்ததால் கிடைத்த அனுபவங்களால் இந் நூல் சுவாரசியமானதாக இருக்கப் போதில்லை.
ஹூஸ்டன்: ஹூஸ்டன் வாழ் இந்தியத் தமிழர்களின் தலைவர் திரு. சாம் கண்ணப்பன் டெக்சாஸ் நிபுணத்துவ பொறியியலாளர்கள் வாரியத்தில் (Texas Professional Engineering Board) நியமிக்கப்பட்டுள்ளார். டெக்சாஸ் மாநில கவர்னர் திரு. ரிக் பெர்ரி அவர்கள் ஹூஸ்டன் தமிழர்களின் அன்புத் தலைவர் திரு. சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் அவர்களையும் திரு. எட்வர்ட் சம்மர்ஸ் அவர்களையும் டெக்சாஸ் நிபுணத்துவ பொறியியலாளர்கள் வாரியத்தில் நியமித்துள்ளார். இந்த வாரியம் மேலும் ஐந்து வருடங்கள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரியம் மூலம் தான் தகுதி பெற்ற பொறியாளர்கள் லைசன்சுகள் வழங்குதல், டெக்சாஸ் பொறியியல் பயிற்சி சட்டம் உறுதி மற்றும் டெக்சாஸ் தொழில்முறை பொறியியல் நடைமுறை சட்டம் இயற்றப்படுகிறது. திரு. சாம் கண்ணப்பன் அவர்கள் தமிழ் நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். இவர் ஹூஸ்டன்ல் SNC-Lavalin ஹைட்ரோகார்பன்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் மூத்த வடிவமைப்பு பொறியியலாளராக உள்ளார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்று மேலும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து இயந்திர பொறியியல் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். இவர் ஹூஸ்டன் தமிழர்களின் இதயம் கனிந்த ஸ்ரீ மீனாக்ஷி கோவிலின் முதன்மை நிறுவனர்களில் ஒருவராவார். “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்; ஒரு மாற்று குறையாத மன்னன் இவனென்று சொல்ல வேண்டும்......” என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு இணங்க டெக்சாஸ் சபைதனில் மாபெரும் பெருமைகளை சுமந்து தமிழர்களின் பெருமைகளை மேலும் தலை நிமரச் செய்த திரு. சாம் கண்ணப்பன் அவர்களுக்கு ஹூஸ்டன் தமிழர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். - 


இன மத பாகு பாடுகள் இன்றி தரமான பெண் கவிஞர்கள் 25 பேர்களின் கவிதைகளை ஒன்று சேர்த்துஒரு கனதியான தொகுப்பாக தடாகம் கலை இலக்கிய வட்டம் (இன்சாஹ் அல்லாஹ் இலங்கையில் நடைபெறும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மா நாட்டின் போது வெளியிடுவதற்காண ஏற்பாடுகளை துரிதமாக செய்து வருகின்றது. எனவே கவிதாயினிகள் தாங்களது தரமான 05கவிதைகளுடன் , உங்களைப்பற்றிய குறிப்புக்களும் , பாஸ்போட் அளவு புகைப் படமும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
ஆறுமுகநாவலர் முதல் மனுஸ்ய புத்திரன் வரை எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் - குறமகள் மேற்கண்டவாறு ரொரண்ரோவில் நடைபெற்ற 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் தெரிவித்திருந்தார். மனுஸ்யபுத்திரன் குஸ்பு விவாகரத்தில் பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியதற்கு மேலும் இச் சந்திப்பில் கண்டனம் தெரிவித்திருந்தார். கைலாசபதி போன்ற விமர்சக மேதைகள் புகழ்ந்த ஆறுமுக நாவலரையே குறமகள் விமர்சித்துள்ளார். “கிறிஸ்தவ அம்மையார்கள் வீடு வீடாகச் சென்று பெண்களோடு உறவாடுவதைக் கண்ட ஆறுமுகநாவலர்கள் அவர்களும், முன்பு இருந்ததை விட மோசமான நிலையில் பெண்களுக்கான விதிமுறைகளைக் கவனத்திற்கு எடுத்தார். குடும்பத்துக்கான பொறுப்புக்களை மாத்திரமல்ல அவளது உணர்வுகளை சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் எழுதிவைத்தார். சாதியத்தைவிடக் கடும்போக்காகப் பெண்களை ஒடுக்கும் வகைகளை எடுத்தியம்பினார்.” என தனது யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு என்ற நூலில் தெரிவித்துள்ளார். பெண்கள் மறுவாழ்விற்காக தனது எழுத்துக்களை சமர்ப்பித்த குறமகளுக்கு இவ் வருடம் 'அகேனம் (ஃ) விருது” வழங்கப்பட்டுள்ளதாக சுயாதீன கலை திரைப்பட கழகத்தின் நிறைவேற்று இயக்குனர் திரு. த. சிவசதாசன் அறிவித்துள்ளார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









