கவின் கலாலயா நடத்தும் இறுவட்டு வெளியீடு
வணக்கம்! கவின் கலாலயா நடத்தும் இறுவட்டு வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தாங்கள் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

வணக்கம்! கவின் கலாலயா நடத்தும் இறுவட்டு வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தாங்கள் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


இடம்- கொழும்புத் தமிழ் சங்கம்
காலம்- 10. 03. 2012 பி.ப 5.00
தலைமை: பேராசிரியர் சபா ஜெயராசா

*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு ( ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.
புலம்பெயர் எழுத்தாளர்களில் தனது படைப்புக்களினால் உலகளாவிய தமிழ் வாசகர்களின் கவனத்தை ஈர்த்த மிகச்சிலரில் குறிப்பிடக்கூடிய ஒருவர், கனடாவை வாழ்விடமாகக்கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன். சென்ற ஆண்டில் இந்தியாவில் கலைமகள் சஞ்சிகை நடாத்திய குறுநாவல் போட்டியில் “தாயுமானவர்” என்ற இவரது குறுநாவல் விருது பெற்றதின் தொடர்ச்சியாக, கனடாவில் புகழ்பெற்ற “தமிழர் தகவல்” விருது அண்மையில் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாற்றலுக்காக இந்த விருதைப்பெற்ற மிகச்சிலரில் குரு அரவிந்தனும் இடம்பெறுவது பொருத்தமானதே. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பின்னரே எழுத்துப்பணியில் புயலென உருவாகிய இவரது படைப்புகள் உலகின் பலபாகங்களில் வெளிவரும் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஏராளமான வாசகர்களைக்கொண்ட பிரபல சஞ்சிகைளில் அண்மைக்காலத்தில் இவரது படைப்புக்கள் பல வெளிவந்துள்ளன. “ஆனந்தவிகடன்” சஞ்சிகை வெளியிடும் தீபாவளி மலர்களுக்காக இவரது சிறுகதைகளை கோரிப்பெற்று பிரசுரிப்பது பெருமை தரும் சந்தர்ப்பங்களாகும். குறிப்பாக இவர் எழுதிய இருபத்துநான்கு பக்கக் கதையான “நீர் மூழ்கி நீரில் மூழ்கி” ஆனந்தவிகடனின் ஒரே இதழில் முதன்முறையாக ஐந்து புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுடன் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டினைப் பெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் பயிலும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆற்றுகைக் கலையும் கலந்துரையாடலும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. கலாநிதி சி. ஜெயசங்கர் தலைமையிலான கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் விரிவுரையாளர்களும் மாணவர்களும் நிகழ்த்திய மேற்படி நிகழ்வில் கண்டியரசன் தென்மோடிக்கூத்திலிருந்து சில ஆட்டமுறைமைகள், (அரசன் மந்திரி வரவு, தோழிமார் பூப்பறிக்கச் செல்லுதல்) மழைப்பழம் சிறுவர் கூத்துப் பாடல்கள், வடமோடி மற்றும் தென்மோடி அரசர் வருகைப்பாடல் ஆட்டமுறைமைகள் என்பன நிகழ்த்திக் காட்டப்பட்டன.

சயந்தனின் ஆறாவடு நாவல் பற்றிய கலந்துரையாடல் ஒன்று 18.02.2012 சனிக்கிழமை கவிஞர் சத்தியபாலன் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் தபின், நிலாந்தன், கருணாகரன், சசீவன், துவாரகன், சு. ரமேஸ் ஆகியோர் உரையாடலில் பங்கெடுத்தனர். நிலாந்தனின் உரையானது; சயந்தனின் நாவலில் வெளிப்படும் அரசியல் பற்றியதாகவே அமைந்திருந்தது. தமிழரின் காயங்களை உலகளாவிய கூட்டுக்காயங்களுடன் இனங்காண்பதுடன் இந்நாவல் நிறைவு பெறுகின்றது என்றார். ஒப்பீட்டளவில் எல்லாத்தரப்பினரையும் கவனத்தில் எடுக்கும் வகையில் நாவல் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சாத்திரியார், சனாதனன், பா.அகிலன் ஆகியோரின் படைப்புக்களும் உரையில் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. கருணாகரனும் இந்தக் கருத்துக்களை ஒட்டியே மேலும் தனது உரையினை நிகழ்த்தினார். தபின் உரை நிகழ்த்தும்போது சயந்தனுடன் ஒரு நாடகத்தில் நடித்த அனுபவத்துடன் நாவல் பற்றிய உரையினை நிகழ்த்தினார். நாவலில் வரும் சம்பவங்களை, உண்மை நிகழ்வுகளை வாசிக்கும்போது யுத்தத்தினால் எங்களுக்கு ஏற்பட்ட வடுக்களே ஞாபகங்களாக வருகின்றன எனக்குறிப்பிட்டார்.

நிகழ்வை தொடங்கி வைப்பவர்: படத்தொகுப்பாளர் லெனின்
ஆவணப்பட இயக்குனர்: ம. சிவக்குமார்
நாள்: 18-02-2012 & 19-02-2012, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை பத்து மணி முதல் (இரண்டு நாட்களும்)
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் தமிழர் புத்தாண்டுப் பொங்கல் விழாவை 19.02.2012 ஞாயிற்றுக் கிழமைப் பிற்பகல் 14.00 மணிமுதல் 20.00 மணிவரை கொண்டாடுகிறது.

நாள்: 11-02-2012, சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணி.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
வணக்கம், எதிர் வரும் 12.02.2012 ஞாயிறு மாலை 6- மணியளவில் ''ஜீராங் ஈஸ்ட்" (Jurong Regional Library - Jurong East MRT) நூலகத்தில் உயிர்மை பதிப்பக வெளியீடான நண்பர் ஷாநவாஸ் எழுதிய "ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்" புத்தகம் வெளியீடு காணவிருக்கிறது. இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து உயிர்மை பதிப்பாளர் எழுத்தாளர் கவிஞர் மதிப்பிற்குரிய மனுஸ்யபுத்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். விழாவிற்கான அழைப்பிதழ் இணைத்திருக்கிறேன், உங்களின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். புதிய நண்பர்களை அழைத்துவாருங்கள்.
காலம்: மார்ச் 4, 2012 , ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 4.00 மணிக்கு
இடம்: கனடா சிறிசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கலாச்சார மண்டபம், 1 Golden Gate Court , Unit -1 (Brimly/Ellesmere சந்திப்புக்கு அருகாமையில்)
தற்போது சுவிசில் வாழ்ந்து வரும் சயந்தன் எழுதிய முதலாவது நாவலான “ஆறா வடு” நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் பலரதும் வரவேற்பைப் பெற்றிருந்ததை ஊடகங்கள் வாயிலாக அனைவரும் அறிந்திருப்பீர்கள். இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியத் தலையீடு, அதற்குப் பின்னரான இலங்கை அரசின் சமாதானப் பேச்சுவார்த்தை போன்றவை நடைபெற்ற காலகட்டங்களில் நிகழ்ந்த விடயங்கள் இந்நாவலில் பேசப்படுகின்றன. அளம்பில் யுத்தத்தில் ஒரு காலை இழந்த போராளி இளைஞன் பின்னர் அரசியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு புலிகள்-ரணில் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் யாழ்பாணத்திற்கு அரசியல் வேலை செய்யப் போகின்றான். அங்கு அவன் காதலிக்கின்றான் அகிலா என்ற பெண்ணை. பின்னர் இயக்கத்தை விட்டு வெளியேறி நீர்கொழும்பிலிருந்து கடல் பயணம் மூலமாக இத்தாலி புறப்பட்டுச் செல்கிறான். இவற்றுக்கு இடையில் அவன் சந்தித்தவை, கண்டவை, நினைத்தவை என நகர்ந்து செல்கிறது இந் நாவல். இதில் வரும் மொழிபெயர்பாளர் "நேரு ஐயா" என்ற பாத்திரம் யாழ்பாணச் சமூகத்தின் மனோநிலைக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓர் உதாரணம். அண்மைக்காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளை உள்ளடக்கும்விதமாக ஈழத்து எழுத்தாளர்கள் எவருமே நாவல் எதனையும் படைக்கவில்லை. அந்த வகையில் "ஆறா வடு" முக்கியமான ஒரு நாவல். இலக்கிய ஆர்வலர்களை இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம். தொடர்புகளுக்கு -) 647-237-3619
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
புதிய நூலகத்தின் 9 வது மற்றும் 10 வது செய்திமடல்கள் சிறிய இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்துள்ளன. 9 வது இதழில் ‘சிறப்புச் சேகரங்கள் வலைவாசல்கள்’ என்ற செய்தியுடன்; இராகவன் எழுதிய ‘புதிய தரிசனம் ஒரு நினைவோடை’, தீபச்செல்வன் எழுதிய ‘வன்னியில் அழிந்த நூல்கள்’, நற்கீரன் எழுதிய ‘தமிழில் திறந்த தரவுகள் ஏன் எப்படி’ ஆகிய கட்டுரைகளும்; கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயம், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்ற ‘எண்ணிம நூலக அறிமுகம்’ பற்றிய சி.சேரனின் நிகழ்வுக்குறிப்புக்களும், அ.யேசுராசா பற்றிய பதிவும் இடம்பெற்றுள்ளன.
The All Party Parliamentary Group for Tamils (APPGT) in collaboration with the British Tamils Forum (BTF) held an exhibition on 31st January 2012, at the UK Parliament building. The exhibition highlighted the current situation of the Tamils in Sri Lanka; and why, the Lesson Learnt and Reconciliation Commission (LLRC) report recently published by the Sri Lankan Government will not deliver justice to the Tamil civilians for the crimes committed by the Sri Lankan Armed Forces during the final stages of the war in 2009.
The event in portcullis house was well attended by MPs from all the major parties, Members of European parliament, Peers from the House of Lords and diplomats from various foreign missions in London and journalists. Photos, books, publications, documentaries and videos were on display. There were also key eyewitnesses to the bloody war in Sri Lanka present at the event. Over one hundred invited honourable guests attended the event and were given information pack containing reports, documents and photographs. A printed version of Tamil National Alliance (TNA) response to the LLRC was also given to the visitors.

சலங்கை நர்த்தனாலயா நுண்கலைப் பீடத்தின் அதிபர் நாட்டியக் கலாசாரதி ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் வருடாந்த கலைகளின் சங்கமம் அண்மையில் லண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பல்வேறுபட்ட கலை வல்லுநர்களின் கலைத் திறமைகள் வெளிப்பட்டதோடு பிரதம விருந்தினராக சங்கீத வித்துவான் மணிபல்லவம் கே.சாரங்கன் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


சென்ற ஜனவரி 7ம் திகதி 2012 'சொப்கா' என்று அழைக்கப்படுகின்ற 'ஸ்கிறீன் ஒவ் பீல்' மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் தீபாவளி நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. வருடாவருடம் நடக்கும் இந்தக் கொண்டாட்டம் இம்முறையும் மிகவும் சிறப்பாக பல்கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. மிசசாகாவில் உள்ள ஸ்குயவண் முதியோர் அரங்கில் இந்தப் பல்கலாச்சார நிகழ்ச்சி மண்டபம் நிறைந்த நிகழ்வாக இடம் பெற்றது. பிரதம விருந்தினர்களாக வைத்தியகலாநிதி திரு. திருமதி மோகன் இரட்ணசிங்கம் அவர்கள் கலந்து கொண்டனர். விசேட விருந்தினராக குக்ஸ்வில் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் தீப்பிகா தர்மிலா அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.

வணக்கம்!, மறைந்த மாமேதை பேராசிரியர் கா. சிவதம்பி அவர்களை நினைவுகூரும் இந்த முயற்சிக்குத் தங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன். தோழமையுடன், பேராசிரியர் குறித்த கருத்துரையாடலும், அவரைக் கனம் பண்ணும் ஆய்வுக் கட்டுரைகளின் வெளியீடும்!
க. நவம்
இடம்: ஸ்கார்பரோ 'சிவிக் சென்டர்' (கனடா)
காலம்: மே 20, 2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
மேலதிக விபரங்கள் .... உள்ளே
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அன்புடையீர், எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ந்தேதி மாலை ஆறுமணி அளவில் இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம். இத்துடன் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். நவீன தமிழிலக்கியத்தைச் சார்ந்த மூத்த பெருமக்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். தாங்களும் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். - நா.கிருஷ்ணா, பிரான்சு.
திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்ற நூலில் ஒன்று அ. முத்துலிங்கம் அவர்களின் 'அமெரிக்க உளவாளி'. தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத்தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் எழுத்து புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம்பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச்சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீன தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார்.அவ்வகையில் அவரின் சமீப நூல்களான, ”அமெரிக்க உளவாளி”, 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்” , ”ஒன்றுக்கும் உதவாதவன்”‘, ”அமெரிக்கக்காரி“ ஆகிய நூல்களில் ஏதாவது ஒன்று பற்றிய ஆய்வு, ரசனை சார்ந்த சிறந்த எட்டு கட்டுரைகளுக்கு ரூ4,000 பகிர்ந்தளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட எந்த நூல் பற்றியும் இருக்கலாம். பக்கக் கட்டுப்பாடு இல்லை. தபாலில் அனுப்புதல் சிறந்தது. மின்னஞ்சலிலும் அனுப்பலாம். 31-3-2012க்குள் அனுப்பலாம்.
முகவரி: சுப்ரபாரதிமணியன்,
கனவு காலாண்டிதழ்,
8/2635 பாண்டியன் நகர்,
திருப்பூர் 641 602.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


1.கனேடிய சமூக வாழ்வியல் - முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய மரபுகள்
2.ஆக்க இலக்கியங்கள் - மாற்று அழகியல்மரபுகள், தமிழர் இலக்கிய வடிவங்கள், மேடை ஆற்றுகைகள், திரைப்படங்கள்
3.போருக்கு முன்-பின் ஈழத்து நிலை
4.புலப்பெயர்வு வாழ்வியல் - குடிபெயர்வு செயன்முறைகள், புலம்பெயர்வு வரலாற்றுப்பதிவுகளும் இனக்குழுத் தொடர்ச்சிகளும், புலம் பெயர் இலக்கியங்கள் மரபுகள்; மீள்வரையறைகளும் புத்துயிர்ப்புக்களும் 80க்குப்பின்
5.பெண்ணியமும் பெண்கள் விடயங்களும்- கலாசாரங்கள், சம்பிரதாயங்களின் மீள்எழுகை, காலப்பதிவுகள் 80க்குப்பின் புனைவு இலக்கியங்களில் பெண்கள் பங்களிப்பு
6.சமகால உலக ஒழுங்குகள்: அனைத்துலக முற்றுகைப்போராட்டங்கள், அரபுலக போராட்டங்கள்
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் வழங்கும் இசை விழா & இலக்கிய விழா!
இசை விழா நாள்: 24.01.2012 செவ்வாய்க்கிழமை;
இலக்கிய விழா நாள்: 23.01.2012 செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 6 மணி
இடம்: ஸ்ரீ் காமாட்சியம்மன் கல்யாண மண்டபம், பழைய பேருந்து நிலையம் பின்புறம், திருப்பூர் - 4
மேலதிக விபரங்கள் ... உள்ளே
நாள்: 24.01.2012 செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 6 மணி
இடம்: ஸ்ரீ் காமாட்சியம்மன் கல்யாண மண்டபம், பழைய பேருந்து நிலையம் பின்புறம், திருப்பூர் - 4; மேலதிக விபரங்கள் ... உள்ளே

அனைத்துலக நாடுகளிலிருந்து படைக்கப்படும் நூல்களில் தமிழ்மொழிக்கும் இனத்துக்கும் மிகு பயன் விளைவிக்கும் சிறந்த நூலை ஈராண்டுகளுக்கு ஒருமுறை தெரிவு செய்து பரிசளித்தல் [- தகவல் : 'விருபா' து. குமரேசன் ].... விரிவான தகவல்கள் உள்ளே
2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.
அ.ந.க.வின் படைப்புகள் அனைத்தையும் சேகரிப்பதற்குப் பற்பல வழிகளில் 'பதிவுகள்' முயன்று வருகின்றது. தினகரனில் வெளிவந்த 'மனக்கண்' நாவலின் முழு அத்தியாயங்களும் திருமதி கமலினி செல்வராசனிடம் இருந்ததாக அறிந்து தொடர்பு கொண்டோம். ஆனால் அதனைப் பெற முடியாமல் போயிற்று. அதன்பின்னர் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டபோது அவர்கள் நியாயமான கட்டணத்தில் A 4 அளவுத் தாளில் பிரதிகளெடுத்து அனுப்பியிருந்தார்கள். அதற்காக சுவடிகள் திணைக்களத்திற்கு நன்றி கூறவேண்டும். ஆனால் அவர்கள் அனுப்பிய பிரதிகளில் எழுத்துகள் மிகச் சிறியனவாக இருந்த காரணத்தினால் தமிழகத்திற்கு அனுப்பி , நண்பர் 'ஸ்நேகா' பாலாஜி மூலம் நியாயமான கட்டணத்தில் தட்டச்சு செய்து எடுப்பித்தோம்.