Visvasethu book launching on YOUTUBE / Gnanam magazine july 2011 / Kaatruveli / Thangameen
Dear my friends, You can enjoy most of the speeches and events of Visvasethu Book Launching in Toutube. 2 important speeches will be uploaded within next week. Just search by Visvasethu in www.youtube.com. You will easily find it. I have attached herewith Gnanam July 2011 / Karruveli july web magazine http://www.gnanam.info/magazine/76-100/G_134.pdf ; http://kaatruveli-ithazh.blogspot.com/
http://www.thangameen.com/

நாள்: சனிக்கிழமை (09-07-2011); இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது; நேரம்: மாலை நான்கு மணி (4 மணியளவில்) ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம். முதல் பகுதி (3 மணி) : கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்; இரண்டாம் பகுதி (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்
இலங்கையில் படுகொலை - சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தை ஹெட்லைன்ஸ் டுடே கீழ்க்கண்ட நாட்களில் 3 பகுதிகளாக ஒலிபரப்ப இருக்கிறார்கள். பல முயற்சிகளுக்குப் பிறகு விலை கொடுத்து அவர்களை சேனல் 4 லிருந்து வாங்க வைத்து ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எந்த ஒரு செய்தியும் மாநிலம் தாண்டி நேஷனல் மீடியாவில் ஒலிபரப்பாகுவரை அந்தச் செய்திக்கான தாக்கம் இந்தியாவின் பிறமாநிலங்களில் இருப்பதில்லை என்கிற யதார்த்த நிலையை நாம் புறம்தள்ளிவிட முடியாது. ஏற்கனவே பார்த்தவர்களும் இதுவரைப் பார்க்காதவர்களும் தயவுச்செய்து நிகழ்ச்சியைப் பார்ப்பதன் மூலம் மேன்மேலும் பிற தொலைக்காட்சிகளும் இச்சம்பவத்தை முன்னெடுத்து செல்லும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் குரு அரவிந்தன், எழுத்தாளர் அகில் ஆகியோருக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டு விழா ஒன்றை 26-06-2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 7:00 மணியளவில் ரொறன்ரோ பேர்ச்மவுண்ட வீதியில் உள்ள பார்வையாளர் அரங்கத்தில் நடத்தினர். அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த கனடிய தமிழ் இலக்கியத்தோட்டத்தில் விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை, தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த சஞ்சிகைகளில் ஒன்றான கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன், இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர் அகில் சாம்பசிவம் ஆகியோர் இவ் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
விஎம்.பவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை இணைந்து கணினித்தமிழ் கற்போம்! தமிழ் இணைய பயிலரங்கு 25-6-2011 சனிக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் சாந்தி திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிலரங்கம் கலை 10 மணிக்கு திரு செலவமுரளி வரவேற்பு மூலம் தொடங்கியது. 10.15 மணிக்கு தமிழ் உலகம் அற்க்கட்டளையின் தலைவர் திரு பழனியப்பன் சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் வந்திருந்த மாணவர்கள்,மாணவிகள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுடன் உரையாடினார். 10.30 மணிக்குத் தமிழும் தமிழ் இனையமும், தமிழில் தட்டச்சு முறை எனற தலைப்பில் முதலில் நான் உரை நிகழ்த்தினேன்.இதில் இணையத்தின் தோற்றம், தமிழ் இணையத்தின் தோற்றம், பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் பங்களிப்பு, தமிழ் இணையமாநாட்டின் பங்களிப்புகள், உத்தமத்தின் செயல்பாடுகள், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுசெல்வத்தின் பயன்பாடுகள், தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் பற்றிப்பேசினேன்.மேலும் ஒருசில தமிழ் இணையதளங்கள் பார்வைக்கு காட்டப்பட்டன.(திண்ணை, முத்துக்கமலம்,பதிவுகள்,வார்ப்பு,) தமிழின் தட்டச்சு முறைகள், முரசு, இ-கலப்பை, தமிழ்99, nhm, போன்ற தட்டச்சு எழுதிகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்து காட்டப்பட்டது.
கொடகே வெளியீடாக வந்துள்ள வதிரி சி.ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா யா/தேவரையாளி இந்துக்கல்லூரி க.மூ.சின்னத்தம்பி அரங்கில் மூத்த எழுத்தாளர் தெணியான் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் மங்களவிளக்கேற்றலைத் தொடர்ந்து செல்வி மயூரி விவேகானந்தன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசைத்தார். வரவேற்புரையை ராஜ சிறீதரன் நிகழ்த்தினார். நிகழ்வில் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி சிறீநிதி நந்தசேகரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்பு அதிதியாக தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பாளர் திரு உபாலி லீலாரட்ன கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். நிகழ்வில் வாழ்த்துரையை ஓய்வுபெற்ற அதிபர் செ.சதானந்தனும், வெளியீட்டுரையை கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணியும், நூல் அறிமுகவுரையை எழுத்தாளர் திக்குவல்லை கமாலும் நிகழ்த்தினர். நயப்புரைகளை சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணனும் கவிஞர் மேமன்கவியும் நிகழ்த்தினர். நூலின் முதற்பிரதியை ‘சிதம்பரப்பிள்ளை புத்தகசாலை’ திரு சிதம்பரப்பிள்ளை சிவம் பிரதம அதிதி அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
இன்று தமிழிலும், ஆங்கிலத்திலும் 24 மணிநேர தொலைக்காட்சிச் செய்தி அலைவரிசைகள் மாநிலங்கள் அளவிலும், தேசிய அளவிலும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், இவை இயங்கும் விதம், இவற்றின் செயல்பாடுகள் ஆகியவை அத்தனை திருப்திகரமாக இருக்கிறது என்று சொல்லமுடியாத நிலை. 24 மணிநேரச் செய்திகள் என்கிறார்களே தவிர பெரும்பாலும் திரும்பத்திரும்ப நான்கு செய்திகளைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய ‘சுடச்சுடச் செய்திகளுக்குப் பழைய புகைப்படங்களை சகட்டுமேனிக்கு வெளியிடு கிறார்கள். தலைவர்களின் படங்கள் போன்றவையென்றால் பரவாயில்லை. ஆனால், இன்றைய வெள்ள அபாய நிலைமை குறித்த செய்திக்குக் கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கைக் காட்டினால்...? இன்றைய ரயில்விபத்தில் இறந்தவர் குறித்த செய்தியின்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களைக் காட்டினால்...? தற்போதைய பேரிடர் குறித்து ஒரு தலைவர் அக்கறையோடு கருத்துரைத்திருக்கும் செய்திக்கு அவர் என்றோ வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் காண்பிக்கப்படுகிறது. இவை ஒன்றிரண்டு உதாரணங்கள் மட்டுமே.
எழுத்துவடிவத்திற்கு முன்பாய் மனிதர்களைப் பிணைக்கும் விஷயமாக இருந்துவருவது பேச்சு. உரையாடலினூடாய் ஒரு மனிதரை அவர் மனவோட்டத்தைப் புரிந்துகொள் வதும், பரிச்சயப்படுத்திக் கொள்வதும் என்றுமே அலுக்காத ஒன்று. ஒரு ஆளுமையின் மூலத்தை அறிந்துகொள்ளவும் சரி, சாதாரண மனிதர்களுக்குள் உறைந்துகிடக்கும் அசாதாரணங்களை அடையாளங்கண்டுகொள்ளவும் சரி உரையாடலாய் விரியும் நேர்காணல்கள் பெரிதும் உதவுகின்றன. இத்தகைய பல காராணங் களால் நேர்காணல்கள் பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. நேர்காணலின் அவசியம் பற்றி, அரசியல் பற்றி, நேர்காணல் அமையவேண்டிய விதம் குறித்து, அமைகின்ற விதங்கள் குறித்து என நேர்காணல் என்ற எழுத்துவகையின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் களமாக ஜூன் மாத புதுப்புனல் வாசகவட்டம் அமைந்தது. எழுத்தாளர்கள் வேட்டை கண்ணன், கிருஷாங்கினி, திரு, பாலைநிலவன், லதா ராமகிருஷ்ணன், மு.ரமேஷ், தவசி(இவர்கள் இருவரும் தொலைபேசி மூலம் வாசகவட்டத்தில் பங்கேற்றார்கள்), புதுப்புனல் ஆசிரியர் ரவிச்சந்திரன், நிர்வாக ஆசிரியர் சாந்தி கலந்துகொண்டு நேர்காணல் குறித்த பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். பேட்டிகள் தனிநபரைக் குறித்ததாக மட்டும் இருக்கவேண்டுமா? அல்லது, முக்கிய சமூக நிகழ்ச்சிகள் குறித்ததாக இருக்கவேண்டுமா? சிறுபத்திரிகைகளில் யார் பேட்டிகாணப் பட வேண்டும்? யார் பேட்டிகாண வேண்டும்? இவற்றிற்கான அளவுகோல்கள் என்னென்ன? என பல்வேறு கோணங்களில் நேர்காணல் குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவற்றிலிருந்து சில இங்கே தரப்படுகின்றன:
Toronto/June 17, 2011/ - Unable to become employed in their field, internationally trained immigrants are finding satisfaction in helping other newcomers to navigate their way through their new life in Canada, according to a report to be released on Monday June 20, 2011. The report, “Rebuilding Professional Lives: Immigrant Professionals Working in the Ontario Settlement Sector”, looks at the experience of internationally trained immigrants who found employment in the field of immigrant settlement services.


கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் சாகித்திய அகாதமிப்பரிசை இரு முறை -கவிதைப்படைப்பிற்காகவும், மொழிபெயர்ப்பிற்காகவும்- பெற்றவர். சாகித்திய அகாதமியின் தமிழ்குழு ஒருங்கிணைப்பாளர். அவரின் பவள விழா 30.,31.07.2011, தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. அவ்வமயம் கவிஞர் சிற்பி பவள விழா மலர் ஒன்று சிறப்பான முறையில் வெளியிடப்பட உள்ளது. அம்மலரில் தங்களின் வாழ்த்துச் செய்தி மேலான படைப்பு ஒன்று வெளிவர தங்களது கட்டுரை/கவிதை/நினைவுக்குறிப்பு மற்றும் தங்களிடம் இருக்கும் கவிஞர் பற்றிய அரிய செய்திகள்/ புகைப்படங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறோம். தங்களது படைப்புகள், நன்கொடைகள் வருகிற 30.06.2011 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டிகிறோம்.
தொலைக்காட்சிகள் பெருகியதன் காரணத்தினால் நாடகங்களும், நாடக அரங்குகளும் குறைந்து வீட்டினுள் இருந்து தொலைக்காட்சி நாடகங்களைப் பார்ப்பது கலை ரசிகர்களினால் வழக்கமாகிக் கொண்டு வருகின்ற இன்றைய சூழ்நிலையில், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்துத் தமிழ் நாடகத்துறையில் தொடர்ந்து பணியாற்றிவரும் ‘தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின்’ நாடக விழா – 2011 இலண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் அண்மையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. மொழிபெயர்ப்பு நாடகங்களை மேடையேற்றுவதில் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகம் கூடுதலாகக்கவனம் செலுத்துகின்றது என்ற கருத்து பலரால் முன்வைக்கப்பட்டபோதும், இம்முறை நாடக விழாவில் ‘தர்மம்’ (மனோ மனுவேற்பிள்ளை), ‘அயலார் தீர்ப்பு’(பேராசிரியர் சி. சிவசேகரம்), ‘படிக்க ஒரு பாடம்’(மாவை. தி. நித்தியானந்தன், ‘என் தாத்தாவுக்கு ஒரு குதிரை’(செழியன்) ஆகிய ஈழத்துப் படைப்பாளிகளின் எழுத்துருவாக்கத்தில் அமைந்த நாடகங்களை மேடையேற்றியிருந்தமை சிறப்பு அம்சமாகும். 


கவிஞரும் எழுத்தாளருமான திரு.வண்ணை தெய்வத்தின் ஏற்பாட்டில் எஸ். அகஸ்தியரின் ‘லெனின் பாதச் சுவடுகளில்…’ என்ற நூல் அறிமுகம் பாரீசில் கவிஞை லினோதினி சண்முகநாதன், திருமதி. நவமணி அகஸ்தியர் ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது. தனது இறுதிக்காலம் வரை மார்க்சிய சித்தாந்தங்களோடு தன் இலக்கியங்களை முன்னெடுத்துச் சென்ற முற்போக்கு எழுத்தாளரான எஸ்.அகஸ்தியரின் ‘போராடுங்கள்’என்ற வீரகேசரி வார இதழில் 2011 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி வெளிவந்த சிறுகதையுருவத்தினைச் சுட்டிக் காட்டிய மூத்த பத்திரிகையாளர் திரு. காசிலிங்கம் எந்தக் காலகட்டத்திலும் அகஸ்தியர் தன் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டிருப்பார்; என்பதனைக் குறிப்பிட்டார். பதினைந்து வருடங்களுக்கு முன்னர்; அகஸ்தியர் பாரீசில் வாழ்ந்த காலங்களில் அவரின் நூல் வெளியீடுகளுக்குத் தலைமை தாங்கியதை நினைவு கூர்ந்த திரு.காசிலிங்கம் இன்று அவரது ‘லெனின் பாதச் சுவடுகளில்…’என்ற இந்த நூலுக்குத் தலைமை தாங்குவதைப் பெருமையாகக் கருதுவதாகத் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார். 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









