(கனடா அரசியல்) பிரதமர் அலுவலக ஊடகத் தொடர்பு (PMO Media Relations) - கியூபெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை பிரதமர் கார்னி அறிவித்தார் - தமிழில் - செயற்கை நுண்ணறிவு-
[பிரதமர் அலுவலக ஊடகத் தொடர்பு ( PMO Media Relations:) : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். இந்த ஆவணம் பின்வரும் இணையதள முகவரியிலும் கிடைக்கிறது: https://pm.gc.ca ]
[ஆகஸ்ட் 24, 2026, லேவிஸ், கியூபெக்] வேகமாக மாறிவரும் இவ்வுலகில், கனடா ஒரு புதிய பாதையை வகுத்து வருகிறது. நாம் உள்நாட்டில் நமது வலிமையைக் கட்டமைத்து வருகிறோம், வெளிநாடுகளுடனான நமது வர்த்தக உறவுகளைப் பன்முகப்படுத்துகிறோம், மேலும் நமது எதிர்காலத்தைப் பாதுகாக்கும் உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்கிறோம். கனேடியப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்லும் துறைமுகங்கள் மற்றும் போக்குவரத்துப் பாதைகள் முதல், நமது வர்த்தகப் பாதைகளைத் திறந்து வைத்திருக்கும் கப்பல்கள் வரை, மிகவும் வலுவான, தற்சார்பு கொண்ட ஒரு நாட்டின் அடித்தளத்தை நாம் அமைத்து வருகிறோம்.
ஏற்கனவே உள்ள வர்த்தக உறவுகள் சோதிக்கப்பட்டு வருகின்றன, ஆனால் கனடா சும்மா இருக்கவில்லை. நாம் வேகமாகச் செயல்பட்டு, புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றி, எந்தவொரு தனிப்பட்ட கூட்டாளியையும் சார்ந்திருக்கும் நிலையைத் தனித்துக் குறைத்து வருகிறோம்.
அதனால்தான், பிரதமர் மார்க் கார்னி, கியூபெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை இன்று அறிவித்தார். சாண்டியர் டேவி கனடா (Chantier Davie Canada Inc.) நிறுவனத்துடன் இணைந்து கனேடிய கடலோரக் காவல்படைக்காக (Canadian Coast Guard) ஆறு புதிய பனி உடைப்புக் கப்பல்களை (Icebreakers) உருவாக்க கனேடிய அரசு 11 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீடு கனடாவின் உள்நாட்டுக் கப்பல் கட்டும் தொழிலை வளர்ப்பதுடன், முக்கியமான வர்த்தகப் பாதைகளைத் திறந்து வைத்திருக்கும் நமது திறனை வலுப்படுத்துகிறது, மேலும் நமது மூலோபாயத் தன்னாட்சியையும் (Strategic autonomy) உறுதிப்படுத்துகிறது.





கதவுகளைத் திறந்திருக்கவேண்டாமே.
இலங்கை இளைஞர்க்குச்
சவால்கள் கூடிப் போய் விட்டிருக்கின்றன .இயல்பாக வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் . யாழ் இளைஞர்களுக்கு 77 ம் ஆண்டிலேயே போர்ப்பிரகடனம் விடப்பட்டு விட்டது . திரவியத்திற்கு மங்கலாகத் தெரியத் தொடங்கியது 84ம் பகுதியிலே தான் . 'முடியுமா , சண்டியக்குழுக்களாக நிற்கிற இலங்கைப்படைகளை எதிர்த்து நிற்க முடியுமா? ' . சுய வட்டத்திலே நிற்க முடியாத அவன் போர்க்கோலம் பூண்டு தைரியமாய் நிற்க முடியுமா ? 'முடியாது' என்று சொல்வதை விட 'முடியும் !' என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்பது தான் தர்மம் . நிற்கிற போதே நிலமையை ஒரு அலசு அலச முடியும் . இலங்கை சபிக்கப்பட்ட படுகொலைகளின் தேசம் .
வணக்கம்! கனடாத் தொல்காப்பிய மன்றத்தினால் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 19, 20ஆம் தேதிகளில் 2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மார்க்கம் நகரின் பில் கோகர்த் மேல்நிலைப் பள்ளியில் (Bill Hogarth Secondary School) “தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க-கற்பிக்க கொண்டாட-பரவலாக்க வேண்டும்” என்னும் பொருண்மையில் நடாத்தப்படவுள்ளது.

“ஜி” என்ற எழுத்தானது, இங்கே, அழுத்தி கூறப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. காரணம் இதே காலப்பகுதியில் வாழ்ந்த எஸ்.சுப்ரமணிய ஐயர் என்பாரும் நீதியரசராக, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒருவராகும். அவரது வாழ்வு, ஜி.சுப்ரமணிய ஐயரின் வாழ்வோடு ஒப்பிடும் போது, ஒப்பிட கூடாத, பல்வேறு வித்தியாசங்களை காட்டுவதாய் இருந்துள்ளது.
கவிதை அறிமுகம்: இக்கவிதை கிரேக்கத்தின் பழம் பெரும் உறுதிப்பாட்டு வாதத்தை (Stoicism) அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நம்முடைய எண்ணங்கள், செயல்கள் மற்றும் எதிர்வினைகள் ஆகியவற்றை நம்மால் முறைப்படுத்த முடியும். நமது கட்டுப்பாட்டில் அடங்காத பிறர் கருத்துக்கள், காலநிலை, மற்றும் எதிர்காலம் போன்றவற்றை நம்மால் முறைப்படுத்த இயலாது. எனவே அவற்றைத் தக்க முறையில் புரிந்து அப்படியே ஏற்றுக் கொண்டு நடுநிலையோடு இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி ஆகிய அனைத்தையும் சமமாகப் பாவித்து வாழும் ஞானியின் மனநிலையைப் பெற முயற்சிக்க வேண்டும் என்பதே இத்தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு.
மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில், செங்குன்றம் என்ற மலைத்தொடரின் அரவணைப்பில் பூம்பாறை என்ற அழகிய சிற்றூர் அமைந்திருந்தது. இயற்கை அன்னையின் அரவணைப்பில் செழித்து விளங்கிய அந்த ஊர், அமைதி, அன்பு, ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்தது.



அடுத்த நாள் காலை பஸ்சில் லா ஸ்பீசியா(La Spezia) கால் மணி நேர ரயில் பயணத்தின் பின்பு ஐந்து கடற்கரை ஊர்களுக்கு (Monterosso, Vernazza, Corniglia, Manarola மற்றும் Riomaggiore) சென்றோம். இவை அக்காலத்தில் முக்கியமான நகரமான மான்ரெஸ்சோயை அடைந்தோம். உள்ளே பெரிய ஊர்: ரயில் நிலையத்திலிருந்து பாதை நேரடியாக கடற்கரைக்கு இறங்குகிறது. அழகான கடற்கரை தொடர்ச்சியாக நடந்தபோது என்னைக் கவர்ந்தது மலைப்பாறையில் செதுக்கப்பட்ட நெப்டியூன் சிலையாகும். ஆரம்பத்தில் கையிலுள்ள சூலத்துடன் நேப்டியூன், இரண்டாம் உலக யுத்தத்தில் குண்டுவீச்சில் சூலத்தையும், கையையும் இழந்த நிலையில், இன்னும் கம்பீரமாகக் காட்சியளித்தது.

சுதந்திரன் அவன் வசித்து வரும் தொடர்மாடிக்ட்டடத்தின் , அப்பார்ட்மென்டின் பல்கணியிலிருந்த சாய்வு நாற்காலியில் வந்தமர்ந்தபோது நன்கு இருண்டு விட்டிருந்தது. வானம் தெளிவாகவிருந்தது. நகரத்து ஒளி மாசிலிருந்து தப்பி நட்சத்திரக்கன்னியர்கள் சிலர் தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தனர். தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருக்கும் சுடர்க்கன்னியர்கள் வழக்கம்போல் அவனுக்கு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தினர். அவர்கள் ஓரிடத்திலிருந்து தன்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டுவதைப்போல் அவன் அப்போதெல்லாம் கருதிக்கொள்வான். அச்சிந்தனையே அவர்கள் மேல் அவனது ஈர்ப்பை மேலும் அதிகமாக்கியது. ஆனால் உண்மையில் அவர்கள் ஓரிடத்தில், ஒரே சமயத்திலிருந்து அவனை நோக்க்கவில்லையென்பதையும் உணர்ந்திருந்தான். காலத்தின் அடுக்குக்களின் வெவ்வேறு அடுக்குகளிலிருந்து அவர்கள் அவனை நோக்கிக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் அவர்கள் ஒவ்வொருவரையும் சுற்றி வெறுமை கலந்த விரி வெளி கவிந்திருந்தது. தனிமையின் வெறுமைக்குள் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதிலிருந்துகொண்டுதான் அவர்கள் உற்சாகம் மிக்கர்வகளாகக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். அதனால் அவனுக்கு அவர்கள் மேலான மதிப்பும், நாட்டமும் அதிகரித்தது.


இன்னும் கொஞ்ச நேரத்திற்குத் துணையாகவும் ஆறுதலாகவும் இருப்பாள் கணினி கற்பகம் அவனுக்கு.
ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கு ஒலி குறிப்பின் மூலம் தெரியப்படுத்தினான். காலப்போக்கில் மனித இனம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய பேச ஆரம்பித்தான். அப்பேச்சே மொழியாக உருவெடுத்தது. இத்தகைய மொழி மென்மேலும் வளர்ச்சி பெற்று இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு, வட்டார வழக்கு எனப் பல்வேறு வகைகளைத் தழுவியுள்ளது. இவ்வகையில் படைப்பிலக்கியங்கள் அமைந்துள்ளன. படைப்பிலக்கியங்களைப் படைக்கின்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என ஒரு உத்தியினைக் கையாளுகின்றனர். அவற்றில் பலரும் அவர்களுடைய சொந்த மண்வாசனையைக் கமலச் செய்கின்ற வகையில் படைக்கின்றனர். அவ்விதத்தில் கலைச் செல்வியின் முதல் படைப்பான சக்கை புதினமும் அவருக்கு உரிய மொழி நடை அமைப்பில் அமைந்துள்ளது. இதனைப் பற்றி ஆராய்வதாக அமைகின்றது.
இரவலன் என்ற சொல்லுக்கு ஏற்போர், பரிசிலர் என்று பொருள். புரவலன் என்ற சொல்லுக்குக் காத்துதவுவோன், கொடையாளன் என்று பொருள். தன்னை நாடி வருகிற புலவனை வள்ளலோ அல்லது மன்னனோ அன்புடன் எதிர்கொண்டு அழைத்து அவரது திறனுக்கு ஏற்ப பரிசில்களைக் கொடுப்பது சங்க கால மரபாக இருந்துள்ளது. புலவர்கள் அரசர்களிடம் அல்லது வள்ளல்களிடம் சென்று ஆடிப்பாடித் தங்களுடைய கலைத்திறனை வெளிக்காட்டுவர். அவ்வாறான ஆடல், பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த அரசர்கள் அல்லது வள்ளல்கள் அவர்களுக்குத் தேவையான அளவு செல்வங்களை வாரி வழங்குவர். இவ்வாறான இரவலர் - புரவலர் உறவு என்பது எட்டுத்தொகைப் பாடல்களிலும் பத்துப்பாட்டுப் பாடல்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. அவற்றில் பத்துப்பாட்டில் உள்ள இரவலர் - புரவலர் உறவு எவ்வாறு இருந்துள்ளது என்பது குறித்து மட்டும் ஆராய்கிறது இந்தக் கட்டுரை.
பெண்களை வரையறை செய்வதில்

எழுத்தாளர், கவிஞர் என பன்முகத்திறமைகள் பெற்றவர் கவிஜி அவர்கள். கவிதை, சிறுகதை, கட்டுரை, உலகசினிமா என பன்முகப் பரிமாணங்களில் தனது எழுத்துப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 25 நூல்கள் வெளியிட்டுள்ளார். அவற்றில் இந்நூல் 16ஆவது நூலாக வெளிவந்தது. தனித்துவமான இடத்தைப் பிடிக்கும் படைப்புகள் இவருடையது.







