அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்!
அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் இயங்கிவருகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடந்த தெரிவில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தது. மீண்டும் இந்த பரிசளிப்புத் திட்டம் இம்முறையும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.
1. கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய நான்கு துறைகளில் வெளியான தமிழ் நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.
2. ஒவ்வொரு துறையிலும் சிறந்ததாகத் தெரிவுசெய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும் தலா 50 ஆயிரம் இலங்கை ரூபா பரிசாக வழங்கப்படும்.
3. நூலாசிரியரின் முழுப்பெயர், வயது, முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை அடங்கிய சுயவிபரக் குறிப்பொன்றினையும் நூலுடன் இணைத்தனுப்புதல் வேண்டும்.