எழுத்தாளர் சீர்காழி தாஜ் பற்றிய நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -

- எழுத்தாளர் சீர்காழி தாஜ் -
எழுத்தாளர் அமரர் சீர்காழி தாஜ் அவர்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தமிழக எழுத்தாளர்களிலொருவர். அவரது படைப்புகள் பல பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. 'தமிழ்ப்பூக்கள்' என்னும் பெயரில் வலைப்பதிவினை நடத்தி வந்தவர். அவ்வலைப்பதிவு தற்போதும் இயங்குகின்றது.
எழுத்தாளர் தாஜ், கலை,இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன், எழுத்தாளர் 'நடு' கோமகன், நுணாவிலூர் கா.விசயரத்தினம் (பதிவுகளில் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆக்கங்கள் பல எழுதியவர்) போன்றவர்களின் மறைவுகள் யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் நடந்தவை. அதனால் அவர்களின் மறைவுச் செய்திகள் வெளியானபோது அவற்றை உள்வாங்குவது சிரமமாகவிருந்தது.
எழுத்தாளர் தாஜுடனான தொடர்பு ஏற்பட்டது பற்றிச் சிறிது கூறவேண்டும். முதலில் அவர் என் படைப்புகளின் வாசகராகவே எனக்கு அறிமுகமானார். தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா' (சிறுகதைத்தொகுதி), நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு நூல்) ஆகியவற்றைத் தமிழக நூல் நிலையங்களிலிருந்து பெற்று வாசித்து எனக்கு அவை பற்றி நீண்ட கடிதங்களை எழுதினார். அக்கடிதங்களை இன்னும் பாதுகாப்பாக என் கைவசம் வைத்துள்ளேன்.
இவ்விதம் எனக்கு அறிமுகமான தாஜ் அவர்கள் வைக்கம் முகம்மது பசீரின் ' எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' நாவலை நான் தேடிக்கொண்டிருந்தபோது 'டொரோண்டோ'விலுள்ள அவரது நண்பர் ஒருவரினூடு அனுப்பி வைத்தார். அதனை இன்னும் அவர் நினைவாக வைத்துள்ளேன்.

 பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களுள் இன்று குறை நூலாய்க் கிடைத்துள்ளவற்றுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். புறத்திரட்டு நூலிலிருந்து தொகுக்கப்பட்ட நூற்றெட்டுப் பாடலோடு பழைய உரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட இருபத்திரண்டு பாடல்களும் சேர்ந்து தற்பொழுது வழக்கில் இருப்பது நூற்று முப்பது பாடல்களாகும். மூன்று, தொள்ளாயிரம் ஆகிய இரு சொற்களும் சேர்ந்து முத்தொள்ளாயிரம் எனப் பெயர் பெற்றது. இந்நூற்பாடல்கள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் வரலாற்றையும் சுட்டுகின்றன. ஒவ்வொருவருக்கும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட இந்நூல் கனலாலும், புனலாலும், காற்றாலும், காழ்ப்பாலும் அழிந்தன போக எஞ்சிய நூற்று முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது.

 புனைவிலக்கியம் என்பது வெறும் எண்ணங்களின் அழகியல் வடிவம் மட்டுமே சார்ந்ததல்ல. அதில் அறிவின் தேடுதலும் இணைந்தே அமைந்திருந்தால் வாசிப்பனுபவத்தின் பெறுமதியை நிச்சயம் மேலோங்கச் செய்யும். இவ்வகையான நியாயமான எண்ணங்கள் உள்மன ஓரத்தில் எட்டிப் பார்க்கும் போதெல்லாம், ஆசி கந்தராஜா அவர்களின் படைப்புகள் என் நினைவில் தோன்றும். அவரது கதைகளை நான் அதிகம் வாசித்திருக்கிறேன் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவ்வாறு வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அது நிச்சயம் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு வரலாறு ஆவணப்படுத்தலாக மட்டுமே முன்வைக்கப் படுவதை விட, புனைவின் சிறப்பும், சுவாரசியமும் சேரும் போது வாசகனின் உள்வாங்கல் அதிகரிக்கிறது, நினைவிலும் நிலைக்கிறது.

 நூறு நாட்களையும் கடந்து தொடர்ந்த காலிமுகத்திடல் போராட்டம் பல காட்சிகளை கண்டது. அதனை உள்நாட்டினர் மட்டுமல்ல சர்வதேச சமூகமே தினம் தினம் பார்த்தது. குறிப்பிட்ட காலிமுகத்திடல் பேராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 1981 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அன்றைய ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கினால், அரச கூலிப்படைகளே பொது நூலகத்தை எரித்து சாம்பராக்கியது. 41 ஆண்டுகள் கடந்த பின்னரும் புத்தகப்பிரியர்கள் அனைவரது மனதிலும் அந்த நெருப்பு கனன்றுகொண்டுதானிருக்கிறது. யாழ். பொது நூலக எரிப்பின் பின்னணியில் எங்கள் தேசத்தின் முன்னணிக்கவிஞரும் படைப்பிலக்கிய ஆளுமையும் எனத் பேராசிரியருமான எம். ஏ. நுஃமான் அவர்கள் எழுதிய “ நேற்று என் கனவில் புத்தர் பெருமான்… “ எனத்தொடங்கும் கவிதை உலகப்பிரசித்தம். இக்கவிதை தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், பின்னர் ஆங்கிலம் – சிங்களம் மொழிகளிலும் பெயர்க்கப்பட்டதை அறிவீர்கள். காலிமுகத்திடல் போராட்டத்தில் யாழ். பொது நூலக எரிப்பும் நினைவுகூரப்பட்டபோது நுஃமானின் குறிப்பிட்ட கவிதையும் பேசுபொருளானது. அந்த அரங்கில் அக்கவிதை மும்மொழியிலும் மக்களால் சொல்லப்பட்டது. இக்காட்சியை அவுஸ்திரேலியாவிலிருந்து நானும் காணொளியூடாக பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைய தினம் ஓகஸ்ட் 10 ஆம் திகதி தனது பிறந்த தினத்தை கண்டியில் அமைதியாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எமது நண்பர் நுஃமானும் அக்காணொளியை பார்த்திருப்பார்.
நூறு நாட்களையும் கடந்து தொடர்ந்த காலிமுகத்திடல் போராட்டம் பல காட்சிகளை கண்டது. அதனை உள்நாட்டினர் மட்டுமல்ல சர்வதேச சமூகமே தினம் தினம் பார்த்தது. குறிப்பிட்ட காலிமுகத்திடல் பேராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 1981 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அன்றைய ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கினால், அரச கூலிப்படைகளே பொது நூலகத்தை எரித்து சாம்பராக்கியது. 41 ஆண்டுகள் கடந்த பின்னரும் புத்தகப்பிரியர்கள் அனைவரது மனதிலும் அந்த நெருப்பு கனன்றுகொண்டுதானிருக்கிறது. யாழ். பொது நூலக எரிப்பின் பின்னணியில் எங்கள் தேசத்தின் முன்னணிக்கவிஞரும் படைப்பிலக்கிய ஆளுமையும் எனத் பேராசிரியருமான எம். ஏ. நுஃமான் அவர்கள் எழுதிய “ நேற்று என் கனவில் புத்தர் பெருமான்… “ எனத்தொடங்கும் கவிதை உலகப்பிரசித்தம். இக்கவிதை தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், பின்னர் ஆங்கிலம் – சிங்களம் மொழிகளிலும் பெயர்க்கப்பட்டதை அறிவீர்கள். காலிமுகத்திடல் போராட்டத்தில் யாழ். பொது நூலக எரிப்பும் நினைவுகூரப்பட்டபோது நுஃமானின் குறிப்பிட்ட கவிதையும் பேசுபொருளானது. அந்த அரங்கில் அக்கவிதை மும்மொழியிலும் மக்களால் சொல்லப்பட்டது. இக்காட்சியை அவுஸ்திரேலியாவிலிருந்து நானும் காணொளியூடாக பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைய தினம் ஓகஸ்ட் 10 ஆம் திகதி தனது பிறந்த தினத்தை கண்டியில் அமைதியாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எமது நண்பர் நுஃமானும் அக்காணொளியை பார்த்திருப்பார். பள்ளி இறுதி வகுப்பை முடித்து கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்த நண்பர்கள், மீசை முளைத்த, ஓட்டுப் போடும் வயது நெருங்கிய பரவசத்தில், வாழ்க்கை பற்றி அன்று பெரிய திட்டங்கள் வகுக்கத் தொடங்கினோம். ஒரு நண்பன் ஆவேசமாக சொன்னான். “சும்மா செங்கல்லை வைத்து ஒரு வீடு கட்டுவதற்காக மொத்த ஆயுளையும் வங்கியில் அடமானம் வைக்கும் சாதாரண வாழ்க்கையை நான் தேர்வு செய்யப் போவதில்லை”. உலகம் முழுக்க பயணம் செய்ய வேண்டும் என்பது அவன் கனவாக இருந்தது. மற்றவர்கள் கைத்தட்டி அவன் பேச்சை வரவேற்றோம். ஒரு தசாப்தம் கடந்து, இன்று திரும்பி பார்த்தால் சுற்றியுள்ள ஊர்களில் ஒவ்வொரு சதுர அடியும் என்ன விலை போகிறது என்கிற தகவலை அதே நண்பனிடம்தான் பலரும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். எந்த வீட்டை பார்த்தாலும் அதன் செலவு என்ன மதிப்பு என்ன என்பதை உடனடியாக கணக்கிட்டுவிடுகிறான். “கல்யாணம் முடிந்து கார் வாங்கியாகிற்று. அடுத்து வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் நண்பா” என்று அழுத்தமாக சொல்கிறான். தன் பழைய சூளுரையும் ஆக்ரோஷமும் இப்போது அவனுக்கே ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இது ஆச்சர்யமூட்டும் தனி நிகழ்வல்ல. இயல்பாக நம்மிடையே வந்து சேர்கிறது இம்மாற்றம். முதிரா இளமையில் வீட்டை விட்டு வெளியேற துடிக்கிறோம். உலகம் வீட்டுக்கு வெளியே இருப்பதாகத் தோன்றுகிறது. அப்புறம் சீக்கிரமே நமக்கென்று ஒரு வீடு கட்டி அமைந்துவிட விருப்பம் வருகிறது. அதன் பாதுகாப்பை நாடத் தொடங்குகிறோம்.
பள்ளி இறுதி வகுப்பை முடித்து கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்த நண்பர்கள், மீசை முளைத்த, ஓட்டுப் போடும் வயது நெருங்கிய பரவசத்தில், வாழ்க்கை பற்றி அன்று பெரிய திட்டங்கள் வகுக்கத் தொடங்கினோம். ஒரு நண்பன் ஆவேசமாக சொன்னான். “சும்மா செங்கல்லை வைத்து ஒரு வீடு கட்டுவதற்காக மொத்த ஆயுளையும் வங்கியில் அடமானம் வைக்கும் சாதாரண வாழ்க்கையை நான் தேர்வு செய்யப் போவதில்லை”. உலகம் முழுக்க பயணம் செய்ய வேண்டும் என்பது அவன் கனவாக இருந்தது. மற்றவர்கள் கைத்தட்டி அவன் பேச்சை வரவேற்றோம். ஒரு தசாப்தம் கடந்து, இன்று திரும்பி பார்த்தால் சுற்றியுள்ள ஊர்களில் ஒவ்வொரு சதுர அடியும் என்ன விலை போகிறது என்கிற தகவலை அதே நண்பனிடம்தான் பலரும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். எந்த வீட்டை பார்த்தாலும் அதன் செலவு என்ன மதிப்பு என்ன என்பதை உடனடியாக கணக்கிட்டுவிடுகிறான். “கல்யாணம் முடிந்து கார் வாங்கியாகிற்று. அடுத்து வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் நண்பா” என்று அழுத்தமாக சொல்கிறான். தன் பழைய சூளுரையும் ஆக்ரோஷமும் இப்போது அவனுக்கே ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இது ஆச்சர்யமூட்டும் தனி நிகழ்வல்ல. இயல்பாக நம்மிடையே வந்து சேர்கிறது இம்மாற்றம். முதிரா இளமையில் வீட்டை விட்டு வெளியேற துடிக்கிறோம். உலகம் வீட்டுக்கு வெளியே இருப்பதாகத் தோன்றுகிறது. அப்புறம் சீக்கிரமே நமக்கென்று ஒரு வீடு கட்டி அமைந்துவிட விருப்பம் வருகிறது. அதன் பாதுகாப்பை நாடத் தொடங்குகிறோம். கிளிம்மின், மாகாணத்தை நோக்கிய நகர்வு, முன்னரே குறித்தவாறு, மரீனாவால் ஏற்படுகின்றது.
கிளிம்மின், மாகாணத்தை நோக்கிய நகர்வு, முன்னரே குறித்தவாறு, மரீனாவால் ஏற்படுகின்றது. இந்தக்கிழமை முழுவதும் இரவு வேலை செய்யவேண்டும். இரவு நேரங்களில் வைத்தியசாலையின் அவசரபிரிவிற்கு வருபவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர்களும் இருப்பார்கள். வெறி முற்றியவர்கள், போதைவஸ்துக்கள் பாவித்து கிலி முற்றியவர்கள் என பல ரகம். சாதி மத இன பால் பாகுபாடுகளின்றி எல்லாநாட்டு மனிதர்களும் இதற்குள் அடக்கம். அவர்களை ஒரு கொன்ரோலுக்குள் கொண்டுவருவது மிகவும் கடினம். நான் ஒரு பெண் தாதி என்பதையும் மறந்து, என் கை கால்களையும் பிடித்துவிடுவார்கள்.
இந்தக்கிழமை முழுவதும் இரவு வேலை செய்யவேண்டும். இரவு நேரங்களில் வைத்தியசாலையின் அவசரபிரிவிற்கு வருபவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர்களும் இருப்பார்கள். வெறி முற்றியவர்கள், போதைவஸ்துக்கள் பாவித்து கிலி முற்றியவர்கள் என பல ரகம். சாதி மத இன பால் பாகுபாடுகளின்றி எல்லாநாட்டு மனிதர்களும் இதற்குள் அடக்கம். அவர்களை ஒரு கொன்ரோலுக்குள் கொண்டுவருவது மிகவும் கடினம். நான் ஒரு பெண் தாதி என்பதையும் மறந்து, என் கை கால்களையும் பிடித்துவிடுவார்கள். -  'மல்லிகை' சஞ்சிகையின் 15.10.67 இதழில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்' என்னும் இக் கட்டுரை வெளியாகியுள்ளது. அ.ந.க மறைந்தது 14.02.1968இல். ஆனால் இக்கட்டுரை அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரை. அந்த வகையில் அவரது கடைசிக்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளிலொன்றாக இதனைக் கருதலாம்.  1944இல் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட 'வில்லூன்றி மயானப்படுகொலை' பற்றி 1944 நவம்பர் 9ந் தேதி 'தினகரன்' தினசரியில் அ.ந.க வில்லூன்றி மயானம் என்றொரு கவிதையை எழுதியிருக்கின்றார். அப்பொழுது அ.ந.க.வுக்கு வயது இருபது. அதன் பின்னர் மல்லிகையில் இக்கட்டுரையை எழுதும்போது அவருக்கு வயது 43. அ.ந.க.வின் இக்கட்டுரை அவரது அந்திமக் காலத்தில் வெளியான அவரது படைப்புகளில் ஒன்று என்ற வகையிலும் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்.காம் -
-  'மல்லிகை' சஞ்சிகையின் 15.10.67 இதழில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்' என்னும் இக் கட்டுரை வெளியாகியுள்ளது. அ.ந.க மறைந்தது 14.02.1968இல். ஆனால் இக்கட்டுரை அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரை. அந்த வகையில் அவரது கடைசிக்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளிலொன்றாக இதனைக் கருதலாம்.  1944இல் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட 'வில்லூன்றி மயானப்படுகொலை' பற்றி 1944 நவம்பர் 9ந் தேதி 'தினகரன்' தினசரியில் அ.ந.க வில்லூன்றி மயானம் என்றொரு கவிதையை எழுதியிருக்கின்றார். அப்பொழுது அ.ந.க.வுக்கு வயது இருபது. அதன் பின்னர் மல்லிகையில் இக்கட்டுரையை எழுதும்போது அவருக்கு வயது 43. அ.ந.க.வின் இக்கட்டுரை அவரது அந்திமக் காலத்தில் வெளியான அவரது படைப்புகளில் ஒன்று என்ற வகையிலும் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்.காம் -
 நோயில்லா நெறியை உணர்த்துவது உணவு நெறியாகும். உடலுக்கு ஒவ்வாத உணவு என்னும் வகை உணவை நீக்கி விட்டு, உடலுக்கு மனத்துக்கும் ஏற்ற உணவை உட்கொண்டால் உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கும் குற்றம் உண்டாகாது என்பர். உணவே உயிர் வாழ்வதற்குத் தேவையாகவும், உணவே உடல் நோய்க்கு மருந்தாகவும், அவ்வுணவே பல சமயங்களில் உடல் நோயைக் கொடுக்கும் மருந்தாகவும் அமைவதுண்டு. நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக மிளகை வணிகத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனா். ஐரோப்பாவில் அந்த காலத்தில் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து சீதனமாக மிளகை தான் கொடுத்து வந்துள்ளனர். அந்த அளவிற்கு மிளகு மிகவும் விலை உயா்ந்த பொருளாக இருந்துள்ளது. இப்பொழுது ஒரு கிலோ தங்கத்தின் விலையை விட மிளகின் விலை அதிகமாக இருந்துள்ளது. மிளகுக்கு எப்பொழுதுமே உணவில் மிக முக்கிய இடம் உண்டு. உணவில் நஞ்சிருந்தாலும் அதனை முறிக்கும் திறன் மிளகுக்கு உண்டு. அதனால் தான் எதிரி வீட்டில் சாப்பிடுவிட்டு வந்து நாலு மிளகைச் சாப்பிட்டால் போதுமென இன்றும் கிராம பகுதியில் கூறுவார்கள்.

 UNSUNG HEROES என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படுபவர்கள் எல்லாத் துறைகளிலும் உண்டு. ஒரு துறையில் அவர்கள் ஆற்றிய சீரிய பணியும் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படாத நிலையில் இருப்பவர்கள். இந்த அங்கீகாரம் என்பதில் உள்ள ’அரசியல்’ காரணமாக ஓரங்கட்டப்படுபவர்கள் தமிழ் இலக்கியத் துறையில், குறிப்பாக கவிதைப் பிரிவில் நிறையவே உண்டு. காத்திரமாக தொடர்ந்து கவிதைவெளியில் இயங்கிவந்தாலும் இலக்கியத் திறனாய்வாளர்கள் என்ற அடைமொழியோடு அவ்வப்போது பட்டியலிட்டுக் கொண்டிருப்பவர்களுடைய கருணைவிழிகள் இவர்கள் பக்கம் திரும்புவதேயில்லை! அரசியல்துறையில் உள்ள, திரைப்படத்துறையில் உள்ள பிரபலங்களோடு தான் தோளோடு தோள்சேர்த்து நிற்கும் படங்களைத் திரும்பத்திரும்ப வெளியிட்டுக் கொள்ளாததனால் இருக்கலாம், கவிதைகள் எழுதுவதோடு நில்லாமல் தன் கவிதைகளைப் பற்றிப் பெரிதாகப் பேசிக்கொள்ளத் தெரியாததால் இருக்கலாம். சமூக சீர்திருத்தக் கண்ணோட்டங்களைக் கொண்டு வாழ்ந்துவருபவராயிருப்பினும் அதை வெளிச்சம்போட்டுக் காட்டத்தெரியாததாயிருக்கலாம்; சமூகத்தை உய்விப்பதே தன் கவிதைகளின் முழுமுதற்கடன் என்று உரத்து முழக்கமிடத் தெரியாததாயிருக்கலாம்.

 இலக்கிய உலகில் தன் எழுத்துக்களால் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருப்பவர் கே ஆர் டேவிட். . சிறுகதை, குறுநாவல், நாவல் எனும் தளங்களில் அறுபது வருடங்களுக்கு மேலாக பயணித்து வருபவர். தன்னுடைய எழுத்துக்களுக்காக பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருப்பவர். இலங்கையில் வசிக்கும் எழுத்தாளர்களுக்காக அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய போட்டியில் சிறுகதைகளுக்கான விருதை கே ஆர் டேவிட் சிறுகதைகள் எனும் தொகுதி பெற்றிருக்கின்றது. இப்படி ஒரு போட்டியை நடத்திய அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினருக்கு பாராட்டுகளையும் சொல்லிக் கொள்கின்றேன். பரிசு பெற்ற இந்நூலின் ஆசிரியருக்கும் என் வாழ்த்துக்கள்.
இலக்கிய உலகில் தன் எழுத்துக்களால் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருப்பவர் கே ஆர் டேவிட். . சிறுகதை, குறுநாவல், நாவல் எனும் தளங்களில் அறுபது வருடங்களுக்கு மேலாக பயணித்து வருபவர். தன்னுடைய எழுத்துக்களுக்காக பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருப்பவர். இலங்கையில் வசிக்கும் எழுத்தாளர்களுக்காக அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய போட்டியில் சிறுகதைகளுக்கான விருதை கே ஆர் டேவிட் சிறுகதைகள் எனும் தொகுதி பெற்றிருக்கின்றது. இப்படி ஒரு போட்டியை நடத்திய அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினருக்கு பாராட்டுகளையும் சொல்லிக் கொள்கின்றேன். பரிசு பெற்ற இந்நூலின் ஆசிரியருக்கும் என் வாழ்த்துக்கள். 'காலச்சுவடு' கண்ணனுக்குச் செவாலியர் விருது கிடைத்துள்ளதாக முகநூல் கூறுகின்றது. வாழ்த்துகள். இன்று பெரும்பாலும் விருதுகள் என்பது தொடர்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. அவ்வப்போது விருதுகள் சர்ச்சைகளை உருவாக்கி விடுவதுமுண்டு. காலச்சுவடு கண்ணனுக்குச் செவாலியர் விருது என்றதும் எனக்கு இவ்விருதினைப்பெற்ற நடிகர் திலகம் நினைவுக்கு வந்தார். நடிகர் கமலகாசன் நினைவுக்கு வந்தார். அவர்கள் தமிழ்த்திரையுலகின் சாதனையாளர்கள்.
'காலச்சுவடு' கண்ணனுக்குச் செவாலியர் விருது கிடைத்துள்ளதாக முகநூல் கூறுகின்றது. வாழ்த்துகள். இன்று பெரும்பாலும் விருதுகள் என்பது தொடர்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. அவ்வப்போது விருதுகள் சர்ச்சைகளை உருவாக்கி விடுவதுமுண்டு. காலச்சுவடு கண்ணனுக்குச் செவாலியர் விருது என்றதும் எனக்கு இவ்விருதினைப்பெற்ற நடிகர் திலகம் நினைவுக்கு வந்தார். நடிகர் கமலகாசன் நினைவுக்கு வந்தார். அவர்கள் தமிழ்த்திரையுலகின் சாதனையாளர்கள்.

 அன்று மதியம் பழைய புத்தகக் கொட்டகையில் இருந்தேன். மே மாதம் என்பதால் உள்ளே ஒரே வெக்கை. காற்றில்லாத புழுக்கத்தில் மர அலமாரிகளின் நடுவில், பழைய புத்தகங்களின் வாசனையில் என்னோடு சேர்ந்து, உள்ளே வேறு இரு வாடிக்கையாளர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.
அன்று மதியம் பழைய புத்தகக் கொட்டகையில் இருந்தேன். மே மாதம் என்பதால் உள்ளே ஒரே வெக்கை. காற்றில்லாத புழுக்கத்தில் மர அலமாரிகளின் நடுவில், பழைய புத்தகங்களின் வாசனையில் என்னோடு சேர்ந்து, உள்ளே வேறு இரு வாடிக்கையாளர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். எம் தலைமுறையைப் பொறுத்தவரை 1983 முக்கியமானதோர் ஆண்டு. குறிப்பாக ஜூலையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான கொடிய இனக் கலவரம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத களங்கம். இக்கலவரம் தமிழர்களை உலகின் நானா பக்கங்களுக்கும் அகதிகளாக ஓட வைத்தது. இக்கலவரம் தமிழர்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. இக்கலவரம் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. இக்கலவரம் தமிழர்களின் உடமைகளைச் சூறையாடியது. பல்வகை வன்முறைகளையும் தமிழர்கள் மேல் ஏவிவிட்டது.
எம் தலைமுறையைப் பொறுத்தவரை 1983 முக்கியமானதோர் ஆண்டு. குறிப்பாக ஜூலையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான கொடிய இனக் கலவரம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத களங்கம். இக்கலவரம் தமிழர்களை உலகின் நானா பக்கங்களுக்கும் அகதிகளாக ஓட வைத்தது. இக்கலவரம் தமிழர்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. இக்கலவரம் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. இக்கலவரம் தமிழர்களின் உடமைகளைச் சூறையாடியது. பல்வகை வன்முறைகளையும் தமிழர்கள் மேல் ஏவிவிட்டது. 'பெரிய இடத்துப் பெண்' ஆர்.ஆர்.பிக்சர்ஸின் வெற்றிப்படங்களிலொன்று. ஆர்.ஆர்.பிக்சர்ஸ் டி.ஆர்.ராஜகுமாரி தனது சகோதரர் ராமண்ணாவுடன் இணைந்து ஆரம்பித்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். குலேபகாவலி, பாசம் , பறக்கும் பாவை போன்ற திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனம். இப்படத்தில் எம்ஜிஆருக்கு இரட்டை வேடம். கிராமத்தவனாக வரும் எம்ஜிஆருக்கு மச்சாள்மாருடன் இணைந்து பாடும் சுவையானதொரு பாடல் 'கட்டோடு குழலோடு ஆட' பாடல். எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று. பாடல் வரிகள், இசை, நடிப்பு, ஒலிப்பதிவு எல்லாமே பிடித்திருக்கும் பாடல்களிலொன்று இப்பாடல். மச்சாள்மார்களாக மணிமாலா, ஜோதிலட்சுமி இருவரும் நடித்திருப்பார்கள். நடிகை ஜோதிலட்சுமியின் நடிப்பில் வெளியான முதற் திரைப்படம் 'பெரிய இடத்துப் பெண்' என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜோதிலட்சுமி, மணிமாலா இருவரும் இப்பாடற் காட்சியில் மிகவும் சிறப்பாக ஆடி, நடித்திருப்பார்கள். இசை மெல்லிசை மன்னர்கள். பாடல் வரிகள் கவிஞர் கண்ணதாசன். பாடியவர்கள்: டி.எம்.எஸ், பி.சுசீலா & எல்.ஆர்.ஈஸ்வரி. 'மாட்டுக்கார வேலன்', 'சகலகலா வல்லவன்' போன்ற பின்னாளில் வெளியான இரட்டை வேடப் படங்கள் பலவற்றுக்கும் தூண்டுகோலாகவிருந்த படம் 'பெரிய இடத்துப் பெண்'.
'பெரிய இடத்துப் பெண்' ஆர்.ஆர்.பிக்சர்ஸின் வெற்றிப்படங்களிலொன்று. ஆர்.ஆர்.பிக்சர்ஸ் டி.ஆர்.ராஜகுமாரி தனது சகோதரர் ராமண்ணாவுடன் இணைந்து ஆரம்பித்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். குலேபகாவலி, பாசம் , பறக்கும் பாவை போன்ற திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனம். இப்படத்தில் எம்ஜிஆருக்கு இரட்டை வேடம். கிராமத்தவனாக வரும் எம்ஜிஆருக்கு மச்சாள்மாருடன் இணைந்து பாடும் சுவையானதொரு பாடல் 'கட்டோடு குழலோடு ஆட' பாடல். எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று. பாடல் வரிகள், இசை, நடிப்பு, ஒலிப்பதிவு எல்லாமே பிடித்திருக்கும் பாடல்களிலொன்று இப்பாடல். மச்சாள்மார்களாக மணிமாலா, ஜோதிலட்சுமி இருவரும் நடித்திருப்பார்கள். நடிகை ஜோதிலட்சுமியின் நடிப்பில் வெளியான முதற் திரைப்படம் 'பெரிய இடத்துப் பெண்' என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜோதிலட்சுமி, மணிமாலா இருவரும் இப்பாடற் காட்சியில் மிகவும் சிறப்பாக ஆடி, நடித்திருப்பார்கள். இசை மெல்லிசை மன்னர்கள். பாடல் வரிகள் கவிஞர் கண்ணதாசன். பாடியவர்கள்: டி.எம்.எஸ், பி.சுசீலா & எல்.ஆர்.ஈஸ்வரி. 'மாட்டுக்கார வேலன்', 'சகலகலா வல்லவன்' போன்ற பின்னாளில் வெளியான இரட்டை வேடப் படங்கள் பலவற்றுக்கும் தூண்டுகோலாகவிருந்த படம் 'பெரிய இடத்துப் பெண்'. ஆளுமை வளர்ச்சிக்கு மனோபாவம் எந்தளவிற்கு உதவும் என்பதையும், நல்ல மனோபாவத்தை பெற என்னென்ன வழிகள் உண்டு என்றும் சில வழிகளை உங்களுக்கு சொன்னேன். இந்த இதழில், மனிதன் வெற்றி பெற முக்கியமான ஒரு ஆற்றல் பற்றி உங்களுக்கு எடுத்துரைக்கப் போகிறேன்.
ஆளுமை வளர்ச்சிக்கு மனோபாவம் எந்தளவிற்கு உதவும் என்பதையும், நல்ல மனோபாவத்தை பெற என்னென்ன வழிகள் உண்டு என்றும் சில வழிகளை உங்களுக்கு சொன்னேன். இந்த இதழில், மனிதன் வெற்றி பெற முக்கியமான ஒரு ஆற்றல் பற்றி உங்களுக்கு எடுத்துரைக்கப் போகிறேன்.

 பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்
 பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்  