சிறுகதை : போகம் - கடல்புத்திரன் -
' ஒரே பயிர்ச் செடியில் , ஆண் பூக்கள் பூத்து , பெண் பூக்களும் பூக்கின்றன ' என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும் ? . சிறிமாவின் காலத்தில் , அதிசயமாக இலங்கையில் கல்வி முறையை மாற்றி இருக்கிறார்கள் . அதில் , விவசாயப் பாடமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது . அப்பாடத்திட்டத்தை இன்னும் சீர் படுத்தி இருக்க வேண்டும் . அதிலேயும் இந்த எளிய கருத்துக்கள் எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படவில்லை . அசேதன பசளைப் பாவிப்பு இருந்தளவுக்கு சேதன பாவிப்பும் சொல்லிக் கொடுக்கப் படவில்லை . அது , சீனக் கல்வி முறை . ஒருவேளை அங்கே இருந்த புத்தகத்தையே அப்படியே ......தமிழ்படுத்தி , நடைப்படுத்திஇருப்பார்களோ ? .
முதல் நிலவிய கல்வியிலும் அப்படித்தான் நடைபெற்றிருந்தது . ஒரே காலனி சிந்தனை , மயக்கம் . இலங்கையின் அறுபது வீத உணவை.... வழங்குகிற ...தமிழர்களின் ஒத்துழைப்பையும் ( தமிழர் விவசாய முறைகளை ) கெளரவத்துடன் பெற்றிருக்க வேண்டாமா ? . விவசாய அறிவு அவர்களை விட இவர்களிடமே அதிகமாகவே இருக்கிறது . எதிலும் , இன அலட்சியம் தொடர்க்கிறது . தமிழர் பசளை முறைக்கு முற்றாகவே கல்தா ! மொழிக்கு அவமரியாதை . நிலம் பறிப்பு . ஒற்றையாட்சி என்ற பம்மாத்துப் போர்வையிலே பயங்கரவாதச் சட்டங்கள் , அந்த போலி நாட்டைக் காப்பாற்ற அவசரகாலச் சட்டங்கள் வேற . நச்சுக்களை உற்பத்தி செய்கிற பார்ளிமெண்ட் மிலேச்சத் தனமாக ஆண்டு வருகிறது . காலனிக் (படுத்திய நாடுகளின் ) கூட்டம் , இலங்கையையும் ஒரு இஸ்ரேலாக்கும் ஒரு முயற்சியில் எடுப்பார் கைப் பிள்ளையாக்கி விட்டிருக்கிறது . நேரு , இந்தியா வல்லரசாகி விடும் என மனக்கணக்கு போட்டார் . அதனால் ஏற்பட்ட தவறு தான் இலங்கையை ஒரு நாடாக இயங்க விட்டது . இன்று உக்ரேன் ரஸ்யாவின் மார்பில் உதைக்கிற ஒன்றாக மாறியது போல இந்த நாடும் இந்தியாவிற்கு .மாறி விட்டிருக்கிறது .
இரண்டாம் உலகப் போருக்குப் பின் , இன்று வரையிலும் ஜேர்மனியிலும் , யப்பானிலும் அமெரிக்கா பெரிய இராணுவத்தளங்களைப் போட்டு ( வெளியேறாமலே ) தன் கைப்பாவைகளாகவே வைத்திருக்கின்றது . இவ்விருவருமே அவர்களது அமைப்பிலே இருக்கின்றன . நாகரிக அடிமை நிலைகள் . இந்த கதை , இந்த முயற்சி விடுதலைக் காலத்தில் நடக்கிறது .