பதிவுகள் முகப்பு

தமிழில் நூலாக வெளியான முதலாவது சரித்திர நாவலை எழுதிய பெண் எழுத்தாளர் சிவநயனி முகுந்தன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
30 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழக எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் 'பாண்டிய  நெடுங்காவியம்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதியிருக்கின்றார். மூன்று பாகங்களை உள்ளடக்கிய இந்நாவலின் மூன்று பாகங்களும் வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. முதற் பதிப்பு வெளியான ஆண்டு 2015.  இந்நூலின் பின்னட்டையிலும், உள்ளே விமர்சகர் ஒருவரின் திறனாய்விலும் தமிழில் சரித்திர நாவல் எழுதிய முதலாவது பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இது உண்மையா?

2012ற்கு முன்பே இவர் சரித்திர நாவல் அல்லது நாவல் எழுதியிருந்தால் அக்கூற்றினை ஏற்றுக்கொள்ளலாம். அப்படி நடந்த மாதிரித்தெரியவில்லை.  உண்மையில் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் சிவநயனி முகுந்தன் தற்போது கனடாவில் வசிக்கின்றார்.  இவர் ஒரு 626 பக்கங்களைக் கொண்ட சரித்திர நாவலொன்றை எழுதியிருக்கின்றார். இவர்  கனடாவில் 'வேல்விழியாள் மறவன்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்.  வெளிவந்த ஆண்டு 2012. வெளியிட்ட பதிப்பகம் - 'வித்தக விருட்சம்'. இதன் படி தமிழில் நூலாக வெளியான  சரித்திர  நாவல் எழுதிய பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் அல்லர். பின் யார்? எழுத்தாளர் சிவநயனி முகுந்தனே.  [அனுஷா வெங்கடேஷ் என்னும் பெண் பெயரிலும் 'காவிரி மைந்தன்' என்னும் சரித்திர நாவலும், வேறு சில நாவல்களும் வெளியாகியுள்ளன. இவற்றை எழுதியவர் ஆண் எழுத்தாளரான ஆர்.வெங்கடேஷ்]

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் அணுவியல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி -
ஆய்வு
29 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



* கட்டுரையாசிரியர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -



முன்னுரை

அணுவினைப் பற்றி கூறும் இயல் 'அணுவியல்' ஆகும். இயற்பியலின் ஒரு பிரிவாக விளங்குகிறது. 'அணு' என்ற சொல்லிற்கு 'நுண்மை' என்று பிங்கல நிகண்டு பொருள் கூறுகிறது. இன்றையக் காலத்தில், அறிவியல் உலகில் பல அற்புத வளர்ச்சிகளைப் பெற்று விளங்குவது அணுவியலேயாகும். கம்பராமாயணத்தில் அணு பற்றியச் செய்திகள் குறித்து கூறப்பட்டுள்ளவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

அணுக் கொள்கையின் தந்தை

ஒரு பொருளைப் பிரித்துக் கொண்டேப்போனால், பிரிக்க முடியாது நிற்கும் பொருளே அடிப்படையாகும். அதற்கு 'அணு' என்று பெயரிட்டு மேலைநாட்டில் அணுக்கொள்கையை முதன் முதலாக எடுத்துக்கூறியவர் 'டெமாக்டிரிடஸ்' (Democritus) என்பவர். இவரே மேலைநாட்டு அணுக்கொள்கையின் தந்தையாவார்.

அணு:

அணு ஆற்றல் தொடர்பான அறிவியல் இருபதாம் நூற்றாண்டில்தான் நவீன அறிவியல் வளர்ச்சியாகக் காணப்பட்டது. இது பற்றிய சிந்தனைப் பண்டைத் தமிழரிடத்தில் இருந்தது என இதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன.

அணு என்பது மிகச் சிறிய மூலக்கூறு, கண்ணால் காண இயலாத அணுத்துகள். அணுவைப் பிரிக்க முடியாது என்பது தொடக்கக் கால அறிவியல் கூற்று. அணுவினை உடைக்க இயலும் என்பது அண்மைக் கால கண்டுபிடிப்பாகும். 'சைக்கிளோட்ரோன்' என்னும் கருவியின் உதவியால் அணுவைப் பிளக்க முடியும் என்பதனை 1932-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 'லாரென்ஸ்' என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். 1938- ஆம் ஆண்டு ஜெர்மன் விஞ்ஞானிகள் அணுவின் உட்கருவை, நியூட்ரான் உதவியால் பிளந்து, நியூட்ரான்களை வெளிப்படுத்தி, தொடர்வினைக்குத் தக்க நிகழ்ச்சிகளை உண்டு பண்ணினார்கள். இவ்வாறு அணுப்பிளவுடன் ஏற்படும் அணுக்கருத் தொடர் இயக்கத்தை அணுகுண்டுகள் வெடிப்பதற்குப் பயன்படுத்துகின்றனர்.

மேலும் படிக்க ...

எல். ஜோதிகுமாரின் 23ஆம் வயதில் பாரதி : புதிய முளைகளின் முகங்களை வரைதல்! - எம்.எம். ஜெயசீலன் -

விவரங்கள்
- எம்.எம். ஜெயசீலன் -
நூல் அறிமுகம்
29 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழியலாய்வு வளர்ச்சியில் இடதுசாரி முற்போக்கு ஆய்வாளர்களின் பங்களிப்புகள் பெருந்திருப்பத்தை ஏற்படுத்தின. வரலாற்று நோக்கு, சமூகப் பார்வை முதலானவற்றின் பின்னணியில் தர்க்கபூர்வமாக ஆய்வுகளை முன்னெடுத்துள்ள அவர்கள், கலை இலக்கியங்களுக்கும் சமூக இயக்கத்துக்கும் இடையிலான தொடர்புகளையும் கலை இலக்கியங்களில் வர்க்கக் குணாம்சங்கள் அமைந்துள்ளவாற்றையும் கண்டறிந்து விளக்கினர். அக்குழுவினர் கையாண்ட அணுகுமுறையினால் கலை இலக்கியங்களின் உருவ – உள்ளடக்க அமைவில் சமூக வாழ்வு செலுத்திய தாக்கங்கள் கண்டறியப்பட்டதுடன் கலை இலக்கியங்களைக் கொண்டு சமூக வரலாற்றை மீட்டெடுத்தலும் சாத்தியமாயிற்று. 1950களில் தனித்துவமுடைய செல்நெறியாக வளர்ந்துவந்த அவ்விமர்சனமுறைமை, 1980களின் பிற்பகுதி முதல் தன் முதன்மையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியது. அத்தேய்வு வெவ்வேறு தளங்களில் இடம்பெற்று வருகின்றபோதிலும், முற்போக்கு விமர்சகர்கள் வளர்த்தெடுத்த செழுமையான ஆய்வுமரபின் தொடர்ச்சியைப் பேணும் முயற்சிகளைச் சிலர் மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுள் தனித்துச் சுட்டிக்காட்டத்தக்க ஒருவராக எல்.ஜோதிகுமார் விளங்குகிறார்.

மார்க்சிய மூலவர்கள் முன்வைத்த சித்தாந்தங்கள், அவற்றின் பிற்கால வளர்ச்சி மற்றும் திரிபுகள், மார்க்சிய விரோத சக்திகளின் நகர்வுகள், தமிழக மற்றும் இலங்கைச் சூழலில் இடதுசாரி அமைப்புகளின் இயக்கம் முதலானவை குறித்த விரிந்த புலமைகொண்டுள்ள ஜோதிகுமார் படைப்பு, இதழியல், ஆய்வு, பதிப்பு, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் கருத்தியல் வலுவுடன் சமரசமற்று இயங்கி வருகிறார். வரலாற்று நோக்குடனும் சமூகப் பார்வையுடனும் கலை இலக்கியங்களையும் சமகால அரசியல் அசைவுகளையும் நுட்பமாக ஆராய்ந்து வரும் அவர், மேலாதிக்க வர்க்கத்தின் பிற்போக்கு நிலைபாட்டையும் அதனை ஆதரிக்கும் கலை இலக்கியங்கள் விதைக்கும் நச்சுத் தன்மையையும் அம்பலப்படுத்தி வருவதுடன் இடதுசாரி இலக்கியத் தளத்தில்நின்று, அவ்விலக்கிய மரபு பேணவிளையும் இலக்கிய நாகரிகத்தையும் அந்நாகரிகத்தை வெவ்வேறு தளங்களில் வளர்த்தெடுத்தவர்களையும் அதன் தொடர்ச்சியாக இயங்கியவர்களையும் ஆழமாக அறிமுகப்படுத்தும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் முற்போக்கு இலக்கியக் குழுவினர் வளர்த்தெடுத்த செழுமையான ஆய்வு மரபின் சமகால அடையாளங்களுள் முதன்மையான ஒருவராக அவரை முன்நிறுத்தலாம். அதற்கு ‘23ஆம் வயதில் பாரதி’ என்ற இந்நூலும் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க ...

மெல்பேர்ன் நகரத்து நூலகத்தில்... -இந்து.லிங்கேஸ்-

விவரங்கள்
-இந்து.லிங்கேஸ்-
கவிதை
27 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



நேற்று மெல்பேர்ன் நகரத்து 
Victorian state Library இற்குச் 
சென்றிருந்தேன்.
இதுவே என் வீடு. என் வாழ்வு 
இங்கே நிலைத்திருந்தால்.
நித்தம் ஒரு மணி நேரமாவது 
வாசிப்பில் என்னைத் தொலைத்திட 
இத்தாய் 
அவள் மடிதந்து என்னை 
அரவணைத்திருப்பாள். 

யாழ்.நூலகத்திற்கு முன் 
அமர்ந்திருக்கும் சரஸ்வதி... 
நினைவுகள் என் மனசை
 உருக வைத்த தருணமது. 

மேலும் படிக்க ...

" ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்" பாடலைப் பாடிய பாடகி திருமதி கனகாம்பாள் சதாசிவம் மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
27 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாகவிருந்த இசைக்குழுக்கள் பலவற்றில் பாடிப்புகழ் பெற்றவர் பாடகி கனகாம்பாள் சதாசிவம். கண்ண்ன் - நேசம் இசைக்குழுவில் தன் இசைப்பயணத்தை ஆரம்பித்தவர்.  நான் அக்காலகட்டத்தில் என் பால்ய, பதின்மப் பருவத்தில் பல இசைக்குழுக்களின் இசை நிகழ்வுகளை ஆலயத்திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளில்  நண்பர்களுடன் கேட்டு இரசித்திருக்கின்றேன்.  ஆனால் அப்போதெல்லாம் அங்கு பாடிய பெண் பாடகிகளின் பெயர்கள் நினைவிலில்லை. இவரும் பாடியிருந்திருக்கலாம். பெயர் அறியாமல் இவர் பாடலை இரசித்திருப்பேன். ஆனால் இவரது பெயரை நான் முதன் முதலில் அறிந்து கொண்டது 'கோமாளிகள்' திரைப்படத்தில் இவர்  பாடிய " ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்' என்னும்  பாடல் மூலம்தான்.

மேலும் படிக்க ...

சீவகசிந்தாமணியில் அகப்பொருள் மரபுமாற்றங்கள்! - முனைவா் பா.பொன்னி -

விவரங்கள்
- முனைவா் பா.பொன்னி -
ஆய்வு
27 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- கட்டுரையாசிரியர்: சீவகசிந்தாமணியில் அகப்பொருள் மரபுமாற்றங்கள்!  - முனைவா் பா.பொன்னி,,இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், இளங்கலைத்தமிழ்த்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி( தன்னாட்சி ), சிவகாசி -


இலக்கியங்கள் அவை தோன்றும் காலத்தின் பின்புலத்திற்கு ஏற்ற மாற்றங்களைத் தன்னுள் ஏற்கும் தன்மை உடையவை. ஆகவே இலக்கியங்கள் வரலாறுக்கு அடிப்படையாகவும், வரலாற்றை அறிவதற்கு ஆதாரமாகவும் அமைகின்றன. குறிப்பிட்ட காலச்சூழலில் தோன்றும் இலக்கியங்கள் அவை காலத்திய சூழலுக்கு ஏற்ப அமைகின்றன. இலக்கியங்களில் ஒரு காலத்தில் மரபாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருண்மைகள் பின்னா் வரும் காலத்தில் மாற்றங்களைப் பெறுவதும் கூட   மரபாகவே அமைகின்றன. அவ்வகையில் சீவகசிந்தாமணியில் மாற்றம் பெற்ற அகப்பொருள் மரபுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

மரபு :

முன்னோா்கள் மொழிந்த பொருளினை அவ்வாறே பின்பற்றுவதை மரபு என்று சுட்டுவா். மரபு என்பதற்குக் கழகத் தமிழ் அகராதி “பழமை, முறைமை, வழக்குமுறை, இலக்கணம், இயல்பு”1 ( கழகத் தமிழ் அகராதி, ப.742 ) என்று பல பொருள் தருகிறது. தமிழ் மொழி அகராதியானது“குணம்,பழமை,முறைமை” (தமிழ் மொழி அகராதி, ப. 126 ) எனச் சுட்டுகிறது.

மேலும்,“மரபு என்பது இலக்கணம் மட்டும் அல்ல. மரபு என்பது இலக்கியத்திற்கு மட்டும் அல்ல. மரபு என்பது முந்தைய தலைமுறை சோ்த்து வைத்திருக்கும் அனுபவம், அறிவு, முடிவு ஆகிய அனைத்தும் சோ்ந்தது. குலநீட்சியில் மானுட வா்க்கம் தன் அறிவுத் தோட்டத்தில் அனுபவத்திளைப்பில் உணா்ந்து தெளிந்து உருவாக்கிய முடிவுகள். அவை வருங்காலத்திற்கென்று இலக்கியமாக, சமயமாக, அறநெறியாக, பிற அறிவுத்துறைகளாக முந்தைய தலைமுறை விட்டுச் சென்ற அனுபவத் திரட்டு தான் மரபு. அறிவுத் தோட்டத்தில் கிடைத்த செல்வம் தான் மரபு” ( பாலா, புதுக்கவிதை ஒரு பாா்வை, பக்.22-23 ) என்பா். இவற்றின் வாயிலாக முன்னோா்கள் வகுத்துள்ள வரைமுறைப்படி அமைவதே மரபு எனலாம்.

மேலும் படிக்க ...

நெதர்லாந்தின் நீர் மேலாண்மை! -பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
-பவானி சற்குணசெல்வம் -
சுற்றுச் சூழல்
27 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நெதர்லாந்து, அதன் நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதி கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளதால், நீர் மேலாண்மை மிகவும் முக்கியமானது. நீர் மேலாண்மையின் முக்கிய பங்குகள்:

1. கால்வாய்கள்

நெதர்லாந்தின் நீர் மேலாண்மையில் கால்வாய்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன; அவை வெள்ளக் கட்டுப்பாடு, நீர் வழிப் போக்குவரத்து, விவசாய நீர்ப்பாசனம் மற்றும் நில மீட்பு (polder systems) ஆகியவற்றிற்குப் பயன்படுகின்றன; காலநிலை மாற்ற சவால்களைச் சமாளிக்க, நீரின் மீது மிதக்கும் பண்ணைகள் போன்ற புதிய

முறைகளுக்கும் கால்வாய்கள் உதவுகின்றன, நாட்டின் புவியியல் அமைப்பில் நீரை திறம்பட நிர்வகிக்கவும், விவசாயம், போக்குவரத்து மற்றும் வாழ்க்கை முறையை ஆதரிக்கவும் இந்த நீர்வழிகள் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. 

கால்வாய்களின் முக்கியப் பணிகள்:

வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வடிகால்:

கடல் மட்டத்திற்கு கீழே உள்ள பல பகுதிகளைப் பாதுகாக்கவும், உபரி நீரை வெளியேற்றவும் கால்வாய்கள் உதவுகின்றன.

Delta Works » போன்ற பெரிய திட்டங்கள், வெள்ளத்தைத் தடுக்கவும், கடலில் இருந்து நிலத்தைப் பாதுகாக்கவும் கால்வாய்கள் மற்றும் அணைகளைப் பயன்படுத்துகின்றன.

மேலும் படிக்க ...

ஈழக்கவி கவிதைகள்!

விவரங்கள்
- ஈழக்கவி -
கவிதை
27 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

நீலத்தின் இறுதிப் பிரதி


வானத்தின் ஞாபக அடுக்குகளில்
உருகிக் கொண்டிருக்கிறது
ஒரு காகிதப் படை.


திறக்கப்படாத தபால் உறைகளாகின்றன
என் சுவாசங்கள்;
நீலத்தின் அடர்த்தியில்
வாக்குறுதிகளும் கனத்த மௌனங்களும்
பரிமாணங்களை இழந்து சிதறுகின்றன.


காற்று காகிதங்களைச் சுழற்றும்போது
மறைந்துபோன சொற்களின் இடைவெளியில்
யாரோ ஒருவரின் தூக்கத்தைக் கலைக்கிறது
ஒரு வான்-குரல்.


நமது பெயர்கள் அச்சிடப்படவில்லை;
அவை வெறும் சத்தங்களாக—
துருப்பிடித்த பழைய அலைக்கற்றைகளில்
இன்னும் அலைந்து கொண்டிருக்கின்றன.


தோல் மீது விழும் வெளிச்சம்
ஒரு கடிதத்தைத் திறக்கிறதா?
அல்லது, யாரோ எழுதி முடித்த
ஒரு பதிலின் முடிவற்ற தொடர்ச்சியாக
நாம் மாறுகிறோமா?

மேலும் படிக்க ...

தமிழர்களின் திருமண சடங்குளும் அதன் விளக்கங்களும்! - த.சிவபாலு B.Ed.Hons, M.A.in Ed. -

விவரங்கள்
- த.சிவபாலு -
இலக்கியம்
26 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழர் ஆரியச் செல்வாக்குக்கு உட்படமுன்னரே ஊரறிய திருமணச் சடங்குகளை நிறைவேற்றியுள்ளனர். உறவினர்கள், ஊரவர்கள் கூடி மிகச்சிறப்பாக கொண்டாடியுள்ளனர். ஆரம்ப காலத்தில் காதலர் இருவர் கருத்தொருமித்துக் காதல் திருமணம் செய்யும் முறையும் பெற்றோர் மணம்பேசு திருமணம் செய்துவைக்கும் முறையும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. காதலன் காதலியைக் கண்டு மனம்விரும்பி தாய் தந்தையார் உறவினர் யார் என்று தெரியாத நிலையில் காதல் வயப்பட்டு மணம் முடித்துள்ளனர். இருவர் ஓரிடத்தில் ஒருவரை ஒருவர் எதிர் கொள்கின்றனர். தங்கள் மனதைப் பறிகொடுக்கின்றனர். கண்டதும் காதல் சங்ககாலத்திலும் இருந்துள்ளது. உனது தாய் தந்தை யார் என்று அறியேன், உனது ஊர் எதுவென அறியேன் எனது தாய் தந்தையருக்கு அவர்கள் என்ன உறவோ என்றும் அறியேன் ஆனால் உன்மீது காதல் பிறந்துவிட்டதே எங்கள் இருவரது நெஞ்சளும் கலந்துவிட்டனவே பார்வையில் என செம்புலப் பெயல் நீரார் என்னும் புலவர் பாடடிய பாடலைப் பார்த்தால் காதல் மணம் அன்றே நடந்துள்ளதை அறியமுடிகிறது:

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

இப்பாடலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. ஆயினும் இதில் உள்ள "செம்புலப் பெயனீர்" என்ற உவமையின் சிறப்பின் காரணமாக "செம்புலப் பெயனீரார்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறார், நம் காலத்தில்  Mr. Bitcoin என்று பிற்கொயின் காசு முறையை கண்டுபிடித்தவரை அழைப்பதைப் போல. குறிஞ்சித் திணை, புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறித்த பாடல்களைக் குறிப்பது.

மேலும் படிக்க ...

நாடக அரங்கக்கலையில் நவீனத்துவத்தை உட்புகுத்திய நாடகர்! - த. நரேஸ் நியூட்டன் -

விவரங்கள்
- த. நரேஸ் நியூட்டன் -
இலக்கியம்
26 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என்றும் அழியாத நல்ல நாமத்தோடும் புகழோடும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருந்கக் கூடியவர்கள் கலை இலக்கியத்தினூடக தமது ஆற் றல்களை எப்போதும் புதிய பரிணாமங்களுடன் வெளிப்படுத்தி வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்களே என்றால் அது மிகையாகாது.

கலை இலக்கித்துறையில் சாதனைகள் புரிந்து மக்களால் போற்றப்பட்டு வந்த சில ஆளுமைகளின் இழப்பு செய்தி அண்மைக்காலத்தில் அடுத்தடுத்து வந்து கலை இலக்கிய ஆர்வலர்களை கலக்கமடையச் செய்திருக்கிறது. அந்த வகையில் வந்த செய்திகளுக்குள் ஒன்றுதான் நாடகர் என அநேகரால் போற்றப்படும் சர்வதேச மட்டத்தில் நாடக அரங்கக் கலையால் தனது பெயரை வலம்வரும்படியாக நாடகக்கலையில் பல சாதனைகளைப் புரிந்த மதிப்புக்குரிய கலைஞர் நாடகர் கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் மறைவுச்செய்தி.

யார் இந்த நாடகர்? இதை நான் சொல்வதால்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை காரணம் ஈழத் தமிழ் மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்  இவர். சர்வதேசமட்டத்தில் அநேகமான தமிழ் மக்களின் மனதில் ஆழமாக பதிந்த மனிதர்தான் இவர். மண் சுமந்த மேனியர் என்ற மேடை நாடகத்தின் மூலம் மிகப்பெரிய ஆர்வத்தை நாடகக் கலைஞர்களிடத்தில் உருவாக்கியவர் என்பது மட்டுமல்ல மேடை நாடக கலையிலும் நவீனத்துவம் மிக்க மாற்றத்தை உருவாக்கியவர்.

மேலும் படிக்க ...

கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க உரை! - ஊர்க்குருவி-

விவரங்கள்
- ஊர்க்குருவி-
அரசியல்
26 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் இந்த உரை வரலாற்றில் நிலைத்து நிற்கபோகும் உரை! தற்போதுள்ள சூழலில் , டொனால்ட் ட்ரம் அமெரிக்க அதிபராக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்த உரை முக்கியத்துவம் மிக்கது.

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி

இந்தியப் பயணத்தொடர்: நர்மதை நதியின் ஓசை! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
26 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மத்தியப் பிரதேசத்தின் யபல்பூரில் (Jabalpur) நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். அங்கு இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நர்மதா நதி ஓடிக்கொண்டிருந்தது. வழிகாட்டி கூறியபடி, இந்த நதி இந்திய உபகண்டத்தின் பழமையான நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதைக் கேட்டு நான் ஆச்சரியத்துடன் சிந்திக்கத் தொடங்கினேன்.

கங்கை, யமுனா, பிரமபுத்திரா போன்ற இந்தியாவின் பிரசித்தி பெற்ற நதிகள் அனைத்தும் இமயமலையிலிருந்து தோன்றியவை. இமயம் உருவானதே இந்திய உபகண்டம் தெற்கிலிருந்து நகர்ந்து ஆசியப் கண்டத்துடன் மோதியதில் ஏற்பட்ட புவியியல் விளைவாகும். இந்த மோதல் சுமார் 50 மில்லியன் வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. அதன் விளைவாக இமயமலை மற்றும் திபெத்தியப் பீடபூமி உருவாயின. பின்னரே இந்தியாவின் முக்கிய நதிகள் தோன்றின. ஆனால் நர்மதா பாயும் பகுதிகள், இதைவிடச் சுமார் 100 மில்லியன் வருடங்களுக்கு முன்பே நிலமிருந்த பாறைத்தட்டுகளில் அமைந்தவையாகும். அங்கு கிடைக்கும் தொல்லியல் (fossil) எச்சங்களும் பாறைகளும் இதற்குச் சாட்சியாய் உள்ளன என்று வழிகாட்டி விளக்கினார்.

இதனை விளக்குவதற்காக அவர் நர்மதா நதிக்கரையிலுள்ள( Narmada Marble Valley) ஒரு இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். அங்கு ஒரு புறத்தில் கறுப்பு கற்கள், மற்றொரு புறத்தில் சுண்ணாம்பு படிவ பாறைகள் காணப்பட்டன. சுமார் ஆறு கிலோமீட்டர் நீளத்திற்கு, நர்மதா நதியின் இரு கரைகளிலும் உயரமாக பளிங்குப் பாறைகள் உயர்ந்து தெரிந்தன. வழிகாட்டி, முழுநிலவின் ஒளியில் இக்கற்கள் பளிச்சிடும் எனக் கூறினார். நாங்கள் சென்றது மதிய நேரம். எழுத்தாளரானதால் நிலவை கற்பனையில் பார்த்தேன். நடுப்பகலான போதிலும் வள்ளத்தில் அரைமணி நேரம் பயணித்தபோது பாறைகளின் இயற்கை அமைப்பு கண்கவர் அழகாக இருந்தது.

மேலும் படிக்க ...

கவிஞர் தாமரையின் 'தொலைந்து போனேன்' கவிதையில் பெண் மன வெளிப்பாடுகள்! - முனைவர் மூ.சிந்து -

விவரங்கள்
- முனைவர் மூ.சிந்து -
இலக்கியம்
26 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


* கட்டுரையாசிரியர் - முனைவர் மூ.சிந்து, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோவை  


முன்னுரை

பெண்ணிய எழுத்தாளரான தாமரையின் 'கதவும் கள்ளிப்பாலும்'  எனும் கவிதையின் தொகுப்பில் 'தொலைந்து போனேன்'  கவிதையில் பெண்ணின் மனவெளிப்பாட்டினை வெளிப்படும் நோக்கில் அமையப் பெற்றதாகும்.

‘திருவிழா’ அல்லது ‘உற்சவம்’ என்பது, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவது. திருவிழா அல்லது ஊர்வலம் அல்லது வலம் என்பதே சரியான தமிழ்ப் பதமாகும். உற்சவம் என்பது பிற மொழிச் சொல்லாகும். திருவிழாவின் போது கிராமங்களில் மக்கள் ஒருமாதத்திற்கு முன்பே தன் இல்லங்களில் திருவிழாவிற்காக தன்னை தயார் செய்யும் நிலையைக் காண முடியும். அப்புாது தம் சுற்றங்களோடு ஒன்றாகத் திரண்டு இன்புற்று இருக்கும் நிலையில் அந்த நிகழ்வு மனதிற்கு இன்பம் தரக்கூடியதாகவும் பசுமையான நினைவுகளாகவும் அமைந்தமையைக் காணமுடிகிறது.

கவிதையின் போக்கு

இல்லத்தில் கடைக்குட்டியான மகள் எல்லோருக்கும் செல்லமாக வளரும் சூழலில் ஒரு திருவிழாவில் காணமல் போக தன் சுற்றம் முழுதும் அவளைத்தேடிப் பிடிக்கையில், அதே பெண் தான் வளர்ந்து திருமணவிழாவில் தன் சுற்றம் அனைவரும் முன் இருக்க தான் அந்த இடத்தில் எல்லோரும் இருக்க தொலைந்து போகும் தருணத்தில் பெண்ணின் மன உணர்வு எத்தகையது என்பதையும், சமூகச் சூழலில் பெண் தன் உணர்வினை தொலைத்து வாழும் நிலைப்பாட்டினையும் ஆசிரியர் படம் பிடித்துக் காட்டிச் செல்கிறார் என்பது கண்கூடத்தக்கது.

தொலைந்து போதல்

பெண் தனக்கான சுயத்தை வெளிப்படுத்துவது என்பது சிக்கலானதாகும். சிறு வயது முதல் இறப்புவரை ஏதோ ஒரு கட்டுக்குள் வாழும் வாழ்க்கையில் அவளது அனைத்து அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன. பெண் சமூகத்தில் வளர வளர அவர்களுக்கான கட்டுப்பாடுகளும் வளர்ந்து விடுகின்றன. காலப்போக்கில் அவர்களின் அடையாளங்களைத் தன் குடும்பத்திற்காக இழந்து நிற்கின்றனர். ஒரு பெண் தனது திருமண வாழ்க்கையில் எப்படி “தொலைந்து போகிறாள்” என்பதை தன் கவிதையில் பெண்ணின் மன உணர்வாகவே தாமரை எடுத்துரைத்துரைக்கிறார்.

மேலும் படிக்க ...

அலெக்ஸ் பிரிட்டியின் மானுட நேயத்திற்காகத் தலை வணங்குவோம்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



மின்னியாபொலிஸ் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடிவரவாளர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்கிறது. அவரது தலைமையிலான ICE குண்டர்களின் அட்டகாசம் தொடர்கிறது. எவ்வித மானுட நேயமுமற்று பெண்களை, முதியவர்களைம் குழந்தைகளை அவர்கள் அவமானப்படுத்தும் வகையில் கைது செய்வதும், அவர்கள் மேல் தேவைக்கு அதிகமான அளவில் பலாத்காரம் புரிவதும் தொடர்கிறது. 

மேலும் படிக்க ...

சிறுகதை : சாத்துபவர்கள் சாத்தான்கள்! - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
25 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[இக்கதையில் ஆசிரியர் கழுகு, தாமரை என்று குறிப்பிடுவது அக்காலகட்டத்தில் இலங்கையில் இயங்கிய தமிழ் அமைப்புகளில் இரண்டை. - பதிவுகள் -]

''அருள், இந்த​ உக்ரேன் பிரச்சனை...என்ன​, ஒன்றுமே விளங்க​ மாட்டேன் என்கிறதே? '' கட்டடியிலே  சபேஷ்,  கேட்க கூடி இருந்த​ உமா,யோகி, நாகேஷ்...எல்லார் மூஞ்சியிலும் அறியும் ஆர்வம் சுடர் விட்டது. அருளர் பழைய​ தொழில்சங்க​ அமைப்பில் இருந்தவர்.   அவனுடைய​ காலத்தில்  அவர் ஒன்றாய்  ஒரே விடுதலைக்குழுவில் புழங்கியவர் .மற்றவர்களுக்கு தான் புதியவர் . யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்த​ பிறகு   எவரும் தெரிந்தவர் எனக் காட்டிக் கொவள்தில்லை. கழுகால் தடை செய்யப்பட்டு ,  பல  வருசங்கள் ஓடி விட்டன​ . யாரும் எவரையுமே இப்பவெல்லாம் தெரிந்து கொள்ளவும்​ முயல்வதில்லை .  

அன்று , மானிப்பாய்யில் அவரவர் கிராமத்திற்க்குப் போக​ தீர்மானமின்றி தேனீர்கடை ஒன்றில் சைக்கிளைச் சாத்தி விட்டு நின்ற​ போது எதேச்சையாக​ வந்த​ குலம் இவர்களை கண்டு விட்டு இறங்கி வர​ '' அண்ணே இன்னொரு தேனீர் '' என்று அவனை வரவேற்றார்கள் . '' எப்படியடா இருக்கிறீர்கள் ? உயிரோடு உங்களைக் காண்கிறதில் ரொம்ப​ சந்தோசமடா ,எங்கடா இங்கே? ''எனக் கேட்க​ ''எங்கட​ இடத்தை ஒருக்கா ​எட்டிப் பார்த்து விட்டு வருவோமா என​ நினைக்கிற​ போது நீ வருகிறாய்'' என்று உமா கூறினான் . '' டேய் ,கடைசி வரையில்  போகாதீங்கடா , பொறுப்பாளர்களைத் தான் அவங்கள் பிடிக்கிறாங்கள் . ''என்று எச்சரித்தான் . பக்கத்திலே தான் திரிந்த​ நிலம் , உயிர்  கிராமம் இருக்கிறது . 'போக​ முடியவில்லை என்ற​ மனவருத்தம் ' உள்ளே வெகுவாக​ அரித்தது . '' உனக்கொன்றும் பிரச்சனை  இல்லையா குலம் ? ''என்று சபேஷன் கேட்டான் . '' நான்  கல்யாணம் கட்டியவன் . சங்க​  வேலைகளை அப்பையே நிறுத்தி விட்டோம்​ . குழுவைச் சேர்ந்தவனில்லை , தொழில்ச்சங்கம் வேற​ என்பது அவங்களுக்கு தெரியும் . தப்பித்திருக்கிறேன் '' என்றவன் இரண்டொரு மாதங்களிலே முடிந்து போனான் .கிராமத்துத் தோழர்கள் ,'இவர்கள் கொழும்புக்கு  எப்பவோ போய் வெளிநாடும் போய் விட்டார்கள் ' என்றே பதிலளித்து வருகிறார்கள் . சாடைமாடையாய்  தெரிந்திருந்தாலும் மூச்சு விடுவதில்லை .ஒருமுறை பயணித்த​ பஸ் வயலில் இறங்கிய​ போது சபேஷன் முகத்தில் ஏற்பட்ட​ காயத்திற்க்கு இழை பிடித்ததுடன் ,குலத்தின் அபாயக்குரல் நினைவில் வர​​ 'தலைவாறலையும் கொஞ்சம் மாற்றி , உடையையும் ​மாற்றி விட்டிருந்தான் . முன்பெல்லாம் யூனிபோர்ம் போல​ ஒரே சாரத்துடன் திரிந்தவன் . தாடியும் , சாரமுமே   அவன் அடையாளங்கள் .கல்யாணமாகிய பின் முதலில்  செய்தது தாடியை வழித்தது தான் .மாறிய​  முகம் .மீசையை நரைக்கும் வரையில் காத்திருந்து இப்பத்தான் எடுத்திருக்கிறான் . தெரிந்தவர் கூட​ மட்டுக்கட்டுவது சிரமம் தான் .

மேலும் படிக்க ...

மெய்நிகர் நிகழ்வு: இரவி பொன்னுத்துரை ( வைகறை ரவி ) அவர்களின் ஒரு வருட நினைவேந்தல்!

விவரங்கள்
யோகா வளவன்
நிகழ்வுகள்
23 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

நந்தலாலா வழங்கும் எல்.ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: ஜோதிகுமார் -
நிகழ்வுகள்
23 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கிய வானில் நீங்களும் ஒரு தாரகையாய் ----- கலா சிறிரஞ்சனின் நினைவாக ----- - வாசன்-

விவரங்கள்
- வாசன் -
இலக்கியம்
23 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கலா சிறிரஞ்சனின் மரணச்செய்தி காதை வந்து எட்டியது. மனம் துணுக்குற்றது. ஒரு சிறிய காலப் பகுதியில் மட்டுமே பழகியிருந்தாலும் மனதில் ஏதோ ஒரு துயரம் அப்பிக் கொண்டது. 'வாழ்க்கை என்பதே மரணத்தை நோக்கிய ஒரு பயணமே! ' என்பது ஒரு நிரந்தரமான உண்மையாயினும் எல்லா மரணங்களையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

முதன் முறையாக அவரை மறுநிர்மாணம் அமைப்பினர் நடத்திய கௌரிகாந்தனின் 'அறமும் போராட்டமும்' நூல் வெளியீட்டு நிகழ்விலேயே பார்த்திருந்தேன். அன்று அந்நிகழ்வினை அவரே நெறிப்படுத்தியிருந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசக்கூடியவர் என்பதினையும் கல்விப்புலமையில் தேர்ச்சி பெற்றவராக இருப்பார் என்பதினையும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் அன்று எனக்கு அவரிடம் எந்தவித அறிமுகமும் ஏற்பட்டிருக்கவில்லை.

பின்பொருநாள் விம்பம் அமைப்பினர் ஒரு கவிதை விமர்சன நிகழ்வொன்றினை நடாத்தியிருந்தனர். அதற்கு பா.அகிலனின் 'அம்மை ' நூல் குறித்து உரையாற்ற என்னை அழைத்திருந்த படியால் போயிருந்தேன். அங்கு அவரும் வருகை தந்திருந்தார். நெற்கொழுதசனின் 'வெளிச்சம் என் மரணகாலம்' நூல் குறித்து உரையாற்ற வந்திருந்தார். தானாக அறிமுகப்படுத்திக் கொண்டார். தனக்கு இந்தக் கவிதைத்தொகுப்பு மிக நெருடலாக இருந்ததாகவும் ஒரே புலம்பல் என்றும் முறைப்பாடு செய்தார். நெற்கொழுதாசன் படைப்புக்கள் மீது எனக்கு ஏற்கனவே நல்ல பரிச்சயம் இருந்ததினால் அது குறித்து அவருடன் சிலாகித்தேன். தொடர்ச்சியான உரையாடலில் இருந்து அவர் தற்கால நவீன இலக்கியங்களில் இருந்து கொஞ்சம் தூரமாகவே இருக்கின்றார் என்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அதனை அவரும் என்னிடம் தெரிவித்தார். தான் தொண்ணூறுகளில் 'ஈழபூமி' பத்திரிகையில் தொடர்ந்து எழுதியதாகவும் பின்பு தனது பட்டப்படிப்பு, குடும்பம், வேலைப்பளு போன்ற காரணங்களினால் இலக்கிய உலகுடன் ஒரு இடைவெளி ஏற்பட்டிருந்ததாகவும் ஆனால் சில வருடங்களுக்கு முன்பு தமயந்தியின் 'ஏழு கடற்கன்ன்னிகள்' நூல் வெளியீட்டின் மூலம் மீண்டும் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையே அவர் அன்றைய தனது உரையிலும் வெளிப்படையாகவே தெரிவித்துக் கொண்டார். பாரதியார், பாரதி தாசன் கவிதைகளில் இருந்து ஹைக்கூ கவிதைகள் வரையே தனக்கு பரிச்சயம் உள்ளதாகவும் இந்தக் கவிதைகள் தனக்கு கொஞ்சம் புதிராக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டார். அவர் தனது உரையில் 'தமிழனென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா!' என்ற பாடலை பாரதியாரின் பாடல்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு நான் 'மன்னிக்கவும் அதனை பாரதி எழுதவில்லை. அது நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதிய பாடல் ' என்றதும் ஒரு முறை முறைத்தார். பின் சிரித்துக் கொண்டே "நீங்கள் எல்லாம் கொஞ்சம் வில்லங்கமான ஆட்கள்தான் " என்று சொல்லிப் போனார்.

மேலும் படிக்க ...

சிலப்பதிகாரக்காப்பியத்தில் நாடகக் கூறுகள்! - முனைவர் சா. சதீஸ் குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோயம்புத்தூர் -641105. -

விவரங்கள்
- முனைவர் சா. சதீஸ் குமார் -
ஆய்வு
23 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாசிரியர்: - முனைவர் சா. சதீஸ் குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோயம்புத்தூர் -641105. -

முன்னுரை

தமிழ் இலக்கிய மரபில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்வது சிலப்பதிகாரம். இளங்கோ அடிகள் இயற்றிய இக்காப்பியம், கோவலன்–கண்ணகி–மாதவி ஆகிய பாத்திரங்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அறம், அரசியல், சமூகம், காதல், பழிவாங்கல் போன்ற பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்துகிறது. இதனை ஒரு காப்பியமாக மட்டுமன்றி, நாடகக் கூறுகள் நிறைந்த இலக்கியமாகவும் ஆராய முடியும். சிலப்பதிகாரத்தில் காணப்படும் நிகழ்ச்சித் தொடர், உரையாடல்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள், காட்சியமைப்பு ஆகியவை அனைத்தும் நாடகத் தன்மையுடன் அமைந்துள்ளன. இதனால் இக்காப்பியம் வாசிப்பிற்கும் மேடைக்காட்சிக்கும் ஏற்ற வடிவத்தைப் பெற்றுள்ளது. சிலப்பதிகாரக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள நாடகக் கூறுகளில் உள்ள ஆடல் ஆசான் , இசையோன், புலவன், அறங்காமைப்பு மற்றும் ஆடல் நிகழ்ச்சி பற்றி அறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிலப்பதிகாரம்:

சிலம்பிலே உள்ளத்தை வயப்படுத்தும் கதை அமைப்பு உள்ளது. உள்ளத்தோடு ஒன்றி கலந்து விடும் உயிர்ப்புள்ள கதை மாந்தர்களையும் ஏழிசை இனிதாக இயங்குகின்ற குரவைகள் ஒலிக்கின்ற பண்கள் பயின்று வருகின்றன.தமிழிசையின் தண்ணீகரற்ற உயர்வையும் தமிழகத்திற் கூத்தும் குரவையும் குலாவிய பாங்கையும் தமிழர் மறமேம்பாட்டின் செவ்வியையும் சிலம்பிலே நாம் கண்டு மகிழலாம். நாடக வழக்கு, கூத்து, அவைக்குழாம்என்னும் சொல்லாடல்கள் சிலம்பிலே காணப்படுகின்றன.

மேலும் படிக்க ...

நம்பிக்கை நந்தவனம் 2026! - ம.ஆச்சின் -

விவரங்கள்
- ம.ஆச்சின் -
கவிதை
20 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

​

புதிய விடியல் பூக்கட்டும் இன்று
பழைய கவலைகள் மறையட்டும் நன்று
இனிய மாற்றங்கள் நிகழட்டும் ஒன்று
இளைய பாரதம் உயருமே அன்று

​நம்பிக்கை விதைகள் மண்ணில் தூவுவோம்
நாளைய கனவை நெஞ்சில் ஏந்துவோம்
கடின உழைப்பை என்றும் போற்றுவோம்
வெற்றிச் சிகரம் விரைந்து ஏறுவோம்

மேலும் படிக்க ...

ஓவியர் ரமணி அஞ்சலி: ராகமாய் நிறங்கள் பாடும்! - செ.சுதர்சன் -

விவரங்கள்
- செ.சுதர்சன் -
கவிதை
20 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


தூரிகை ஏந்தி வாழ்வைத்
துலங்கிடச் செய்து; வண்ணப்
பேரிகை கொட்டி மண்ணின்
பெருமையைப் பெய்து காட்டி;
மாரி கை கொடுத்தாற் போல
மணிமணிப் படங்கள் தந்து
காரிகை கற்ற எந்தன்
கவியிலும் பொருளாய் ஆனாய்!

மேலும் படிக்க ...

உன்னைத் தடுக்க முடியாது! - சு. இசை -

விவரங்கள்
- சு. இசை -
கவிதை
20 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


உன்னை நிறுத்த வந்த  ஒவ்வொரு நிழலும்
உன் வெற்றியைப் பார்த்ததும்
பின்வாங்கி விடும். 

மேலும் படிக்க ...

பாரிஸ் இலக்கிய மாலை நிகழ்வில் பத்து நூல்கள் வெளியீடு: வி. ரி. இளங்கோவன் - பத்மா இளங்கோவன் நூல்கள்! - இளநிலா -

விவரங்கள்
- இளநிலா -
நிகழ்வுகள்
20 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'ஈழத்;து வரலாற்றில் 1940-கள் முதல் 1970-கள் வரையான காலகட்டம் அரசியல்இ இலக்கியத்துறைகளில் குறிப்பிடத்தக்க காலமாகும். மார்க்சிசச் சிந்தனைப் பரவலும் நவீன இலக்கிய விழிப்பும் ஏற்பட்ட காலமாகும். அன்று புதிய எழுச்சி ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டிலும் அத்தகைய எழுச்சி - மாற்றத்தை நோக்கிய பாய்ச்சல் ஏற்பட்டது. இலங்கையில் அன்று முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்; தோற்றமும்இ இலக்கியச் செழிப்பும்இ முன்னோக்கிய பாய்ச்சலும் நடந்தது. அந்தக் கருத்துகளை உள்வாங்கியதாலும்இ குடும்பச் சூழ்நிலையும்இ எழுத்தாளர் கே. டானியலுடன் ஏற்பட்ட தோழமையும்;இ சமூகத்தில் உறவாடிப் பெற்ற அனுபவங்களும் இளங்கோவனை இலக்கியத்துறையில் விருட்சமாக வளர உதவியிருக்கிறது. அவரிடம் நிறைந்துள்ள அனுபவப் பொக்கிஷங்களைப் படைப்புகளாக அவர் மேலும் எழுத்தில் பதிந்திட வேண்டும்."

மேலும் படிக்க ...

மொழிபெயர்ப்புக் கவிதை: ஓ! உறக்கமே! - ஆங்கில மூலம்: ஜோன் கீற்ஸ் (John Keats) | தமிழில் : நாங்குநேரி வாசஸ்ரீ்

விவரங்கள்
- ஆங்கில மூலம்: ஜோன் கீற்ஸ் (John Keats) | தமிழில் : நாங்குநேரி வாசஸ்ரீ்
கவிதை
20 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

ஓ!  உறக்கமே! 

முடியா இரவினை மென்மையாய்ப் பதப்படுத்துபவரே!
மூடிடும், கவனமாய் விரல்களால் அன்புடன்
தெளிவிலா மறதியுடன் தெய்வ சிந்தனை நிழலாட
ஒளியால் மயங்கிய எம்மின் இருள்சூழ் கண்களை,
ஓ! இனிமையான உறக்கமே!

மேலும் படிக்க ...

தமிழ் இலக்கியத்தில் நூல் விமர்சனத்தின் பொறுப்பும் வரையறையும்! - பவானி சற்குணசெல்வம் (நெதர்லாந்து ) -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் (நெதர்லாந்து ) -
இலக்கியம்
20 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ் இலக்கிய மரபில் நூல் விமர்சனம் என்பது ஒரு தனித்துவமான அறிவுச் செயல்பாடாகக் கருதப்படுகிறது. அது வெறும் தனிநபரின் விருப்பு–வெறுப்புகளை வெளிப்படுத்தும் முயற்சியாக அல்ல; வாசக சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புள்ள பணியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு நூலைப் பற்றி சொல்லப்படுகின்ற கருத்துகள், அந்த நூலின் மதிப்பை மட்டுமல்லாது, இலக்கியச் சூழலையும் சமூகச் சிந்தனையையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியவை என்பதால், விமர்சனத்திற்கு தெளிவான வரையறைகளும் ஒழுங்குகளும் தேவைப்படுகின்றன.

தமிழ் இலக்கியத்தில், ஒரு நூல் விமர்சனம் எவ்வாறு இருக்க வேண்டும், எதைக் கூறலாம், எதைக் கூறக்கூடாது என்பதற்கான அடிப்படைகள் காலங்காலமாக வகுக்கப்பட்டுள்ளன. ஒரு நல்ல விமர்சனம் நூலின் கருத்து ஆழம், மொழிநடை, வடிவமைப்பு, இலக்கிய மரபுடன் அதன் தொடர்பு, சமூகப் பயன் போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டு அமைய வேண்டும். ஆசிரியரின் உழைப்பு, நோக்கம் மற்றும் படைப்பின் முழுமை ஆகியவை நியாயமான முறையில் மதிப்பிடப்பட வேண்டும்.

அதே நேரத்தில், ஆசிரியரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவருடைய அரசியல் நிலைப்பாடு, அல்லது விமர்சகரின் சொந்த விருப்பு–வெறுப்புகள் விமர்சனத்தில் இடம் பெறக் கூடாது. அவை விமர்சனத்தைத் திசைதிருப்பி, வாசகனை தவறான முடிவுகளுக்குக் கொண்டு செல்லும். விமர்சனம் என்பது குற்றம் சாட்டும் மேடையாகவோ, புகழ்ச்சி மட்டும் செய்யும் முயற்சியாகவோ மாறினால், அதன் அடிப்படை நோக்கம் முற்றிலும் சிதைந்து விடும்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. இளம் பாரதி பற்றி மேலும் சில சிந்தனைகள்! - எல்.ஜோதிகுமார் -
  2. பாதுகாக்கப்பட வேண்டிய மந்திரிமனை! இன்னும் காலம் கடந்து போய்விடவில்லை! பாதுகாப்போம்! வரலாற்றைப் பேணுவோம்! - வ.ந.கிரிதரன் -
  3. முகநூலில் தொடரும் விவாதம் : எழுத்தாளர் மாலனின் இந்தித்திணைப்பு பற்றிய கருத்துகளும், எதிர்வினைகளும்
  4. நினைவுக் குளியல் 2 - வாசிப்பின் நெறிப்படுகை! - தேவகாந்தன் -
  5. பதினெட்டாம் திருப்பூர் குறும்பட விருது வழங்கும் விழா 11/1/26 - தகவல் - சுப்ரபாரதிமணியன் -
  6. சிறுகதை: வெட்டுப்பட்டவை! - சுப்ரபாரதிமணியன் -
  7. எழுத்தாளர் மாலனின் இந்தித்திணிப்புக்கெதிரான போராட்டம் பற்றிய கருத்துகள் பற்றி... - வ.ந.கிரிதரன் -
  8. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்! - பதிவுகள் -
  9. மங்கலமாய் மலருவதே பொங்கல் திருநாளே ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  10. வேலாயுதம் இராமரின் “மலையக வாய்மொழி பாடல்களில் கண்காணிகளின் இருப்பு" என்னும் 'எழுநா'க் கட்டுரை குறித்துச் சில கருத்துகள்! - ஜேம்ஸ் விக்டர் -
  11. ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின் 'நெய்தல் நடை' நூல் வெளியீட்டு நிகழ்வு உரை! - பவானி சிவகுமாரன் -
  12. வ.ந.கிரிதரன் பாடல்: நீல நிறத்தில் நெஞ்சம் இழப்பேன்!
  13. 'ரவி அல்லது' கவிதைகள்! - ரவி அல்லது (பட்டுக்கோட்டை) -
  14. நூல் அறிமுகம்: எழுத்தாளர் கந்தையா அருந்தவராஜாவின் 'புலம் பெயரும் மண்வாசம்'! நூல் பற்றியதொரு பார்வை! - வாசுகி விமலராஜ் -
பக்கம் 1 / 121
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி