பதிவுகள் முகப்பு

காலத்தை ஊடறுத்துப் பாயும் நதி – நடேசனின் தாத்தாவின் வீடு நாவல் - சி. ரமேஸ்

விவரங்கள்
- சி. ரமேஸ்
இலக்கியம்
18 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையின் வட மாகாணத்தின் எழுவைதீவு என்ற பிரதேசத்தில் அம்பலவாணர் சின்னத்தம்பி - ஆனந்தராணி நமச்சிவாயம் இணையருக்கு டிசெம்பர் 23,1954 அன்று மகனாகப் பிறந்த நோயல் சின்னத்தம்பி நடேசன்ஆரம்பக் கல்வியை எழுவைதீவு முருகவேள் பாடசாலையிலும் நயினாதீவு மகாவித்தியாலத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பேராதனை பல்கலைக்கழத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவில் சிட்னி நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணி (முதுகலை) பட்டம் பெற்றவர் நோயல் நடேசன், 1984 - 1987 காலப்பகுதியில் தமிழகத்தில் தங்கியிருந்தபோது, தமிழர் மருத்துவ சேவை என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அந்த நிறுவனத்தில் நோயல் நடேசனுடன் மருத்துவரான அவரது மனைவியும் பணியாற்றினார். 1987-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 40 வருடங்கள் விலங்கு மருத்துவராக பணிபுரிந்து, ஓய்வு பெற்று, தற்போது மெல்பேர்னில் வசித்து வருகிறார். நோயல் நடேசன் ஏப்ரல் 1984-இல் 'உதயம்' மாத இதழை மெல்பேர்னில் ஆரம்பித்தார். 13 வருடங்களாக நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு வரை 'உதயம்' பத்திரிகை ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக வெளியானது. 'உதயம்' பத்திரிகையில் பல பத்திகள், சிறுகதைகள், தொடர்கள், தான் பணிபுரிந்த மிருக வைத்தியத்துறைசார் அனுபவங்கள் என்பவற்றை நோயல் நடேசன் எழுதினார். 1980-1983 ஜூலை வரையான காலத்தில், இலங்கையின் - மதவாச்சி பகுதியில் மிருக வைத்தியராக பணிபுரிந்த காலப் பின்னணியில் எழுதப்பட்ட நடேசனின் வண்ணாத்திக்குளம் என்ற முதலாவது நாவல் 'மித்ர 'பதிப்பகத்தினால் வெளியானது. இந்நாவல் பின்னர் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.

1980-83 கால கட்டத்திலே இலங்கை மக்களின் வாழ்க்கை முறைகளையும் இலங்கையின் அரசியல் பொருளாதார – சமூக நிலை மாற்றங்களையும் எடுத்துரைக்கும் நாவலே வண்ணாத்திக் குளம்.நடேசன் நாவலில் வரும் பதவியாக்குளம் எனப்படுகின்ற வண்ணாத்திக்குளம் தற்போது. இது ஒரு சிங்களக் குடியேற்றப் பிரதேசமாக மாறிப்போயுள்ளது. நடேசனின் சொந்த அனுபவங்களின் பிரதிபலிப்பே இந்நாவல். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் மிருக வைத்தியர் ஒருவர் தொழில் நிமித்தமாக மதவாச்சி சென்று தான் தங்கியிருக்கும் விடுதியில் கூடவே தங்கியிருக்கும் பதவியாவைச் சேர்ந்த சிங்கள இளைஞனின் தங்கையைக்; கண்டு, காதல் கொண்டு பதிவுத் திருமண மூலம் கணவன் மனைவியாக வாழ முற்படும் போது நாட்டு நிலை அவ்விருவரையும் நேர்ந்து வாழ இடமளிக்காது புலம்பெயர்ந்து செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளுகிறது. இதன் வெளிப்பாடே வண்ணாத்திக் குளம்.

மேலும் படிக்க ...

கனடா - ரொறன்ரோவில் நூல் வெளியிட்டு விழா! - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
17 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 12-4-2026 கனடாவில் ரொறன்ரோவில் உள்ள இஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் பண்டிதர் ம.செ. அலெக்ஸாந்தர் அரங்கில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், கனடா கவிஞர் கழகம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரான கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை குமரகுரு கணபதிப்பிள்ளை, ஜோதி ஜெயகுமார் ஆகியோர் கொண்டு நடத்தினர். முதலில் மங்கல விளக்கேற்றல், கனடாப்பண், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. தொடர்ந்து ‘அகணி விருதுகள்’ அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, சயனிகா சுரேஸ் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: "முன்வரலாற்றுக் கால தமிழகம் ; இடம் - மனிதர்கள் - மொழி. அண்மைக் கால உரையாடல்கள்."

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
17 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                            Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

சிறுகதை: கைக்குள்… -பாலமுருகன்.லோ -

விவரங்கள்
-பாலமுருகன்.லோ -
சிறுகதை
15 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜிம்னாஸ்டிக் அரங்கின் உள்ளே ஒளிரும் மின் விளக்குகள் அழகாக அலங்கரித்திருந்தன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு—எல்லாத் திசைகளிலும் இருக்கைகள் அணிவகுத்திருந்தன. அவை கீழிருந்து மேல்நோக்கி படிநிலைகளாக அமைந்திருந்தன.

அரங்கின் மையப்பகுதியில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கேற்ற இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரிவைச் சார்ந்த உபகரணங்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன. முழு அரங்கும் குளிர்சாதன வசதியுடன் முறையாக இருந்தது.

குளிர் இருந்தாலும், விளையாட்டில் பங்கேற்பவர்களின் முகத்திலும் கைகளிலும் வியர்வைத் துளிகள் காணப்பட்டன. ஆனால் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அந்தக் குளிர் உடலில் ஊசி ஏறுவது போல இருந்தது.

நான்கு திசைகளிலும் பல நாடுகளின் கொடிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அரங்கின் மையப்பகுதியில் இந்தியாவின் கொடி மிகவும் அழகாகவும் பிரம்மாண்டமான முறையிலும் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த அரங்கில் கிழக்கு பகுதியில் வரதனும் மஞ்சுலாவும் அமர்ந்திருந்தனர்.

அரங்கிலிருந்த ரெஃபரியின் விசில் ஒலி கேட்டது. விளையாட்டு வீரர்களின் ஓடும் சப்தம் கேட்டது. மெத்தையில் கால்கள் பதியும் “தப்” சத்தமும், ரிங்ஸின் மெல்லிய “கீச்” சுழற்சி சத்தமும் சேர்ந்து ஒரு சூழலை உருவாக்கின. இவை அனைத்தும் பார்ப்பவர்களின் மனதில் ஏதோ ஒரு உற்சாகத்தை எழுப்பின. அவர்களே விளையாட்டில் பங்கேற்கும் மாதிரி தோன்றச் செய்தது அந்த அரங்கு.

மேலும் படிக்க ...

பதிவுகள் இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பும் எழுத்தாளர்களுக்கு!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
14 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

பதிவுகளுக்குப் பலர் படைப்புகள் அனுப்புவதால் , எல்லாப் படைப்புகளையும் விரைவாகப் பிரசுரிப்பதில் சிறிது காலதாமதம் ஏற்படலாம். நிச்சயம் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பதிவுகள் இணைய இதழில் பிரசுரமாகும்.  அனுப்பிய படைப்புகளை நினைவூட்டிக் கடிதங்கள் அனுப்பத்தேவையில்லை. படைப்புகள் அனுப்பும் அனைவருக்கும் நன்றி.

ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பும்போது  அவற்றின் இறுதியில் உசாத்துணைப் பட்டியலும் இடம் பெறுவது அவசியம். உசாத்துணைப் பட்டியலற்று வரும் படைப்புகள், பதிவுகள் இணைய இதழின் ஏனைய பிரிவுகளில் பொருத்தமானதொன்றில் பிரசுரமாகும்.

இரங்கல் செய்தி - டாக்டர் தி. ஞானசேகரன்! – குரு அரவிந்தன் -

விவரங்கள்
– குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
14 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்து மூத்த படைப்பாளியும், இனிய நண்பருமான தி.ஞானசேகரன் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது (12-4-26) ஈழத்தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும்.

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் பிறந்த இவர் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். ஆயுள்வேத வைத்திய கலாநிதியான இவர், இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் என்ற மாதாந்த இதழின் முதன்மையாசிரியராகப் பணியாற்றினார். இலக்கியத்திற்காக சாகித்யரத்னா விருது பெற்றவர். ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்களை மட்டுமல்ல, புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் வெளியிட்டு அவர்களின் இலக்கிய ஆளுமையை உலகறியச் செய்தவர்.

திரு ஞானசேகரன், திருமதி ஞானம் ஆகியோர் கனடா நாட்டுக்கு வருகை தந்தபோது, அவர்களுடன் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து உரையாடியிருக்கின்றேன். எங்கள் அழைப்பை ஏற்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்குபற்றி இருந்தார்கள். உதயன் பத்திரிகைக்காக அவரை ஒரு நேர்காணலும் செய்திருந்தேன்.

‘தமிழ் நாட்டில் என்னை அறிந்த அளவிற்கு ஈழத்து வாசகர்கள் என்னை அறிந்திருக்கவில்லை’ என்று சொல்லி, எனது ஆக்கங்களை இலங்கையில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று என்னை ஒருமுறை அழைத்திருந்தார்கள். அதனால் அவர்களின் அழைப்பை ஏற்றுச் சென்றிருந்தேன்.

மேலும் படிக்க ...

சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள்!! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
14 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வசந்தம் வீசிட மனமெலாம் மகிழ 
சித்திரைத் திருமகள் சிறப்பாக வந்திடுவாள்
அவளை வரவேற்க ஆனவற்றைச் செய்திடுவோம்
அனைவருமே வாருங்கள் அகமகிழ வரவேற்போம் 

தையினை அடுத்துச் சித்திரை வருகிறது
தைபிறந்தால் வழிபிறக்கும் தமிழரது நம்பிக்கை
உழவரை உயர்த்திடும் உன்னதத் திருநாளாய்
உயர்வாக மலருவதே தைப்பொங்கல் திருநாளே

உழவினை உயர்த்தும் உன்னதத் திருநாள்
தையோடு மட்டும் தடைபட்டு நிற்கவில்லை
சித்திரையும் இணைகிறது சிறப்பான உழவோடு
அத்தனையும் பண்பாட்டின் அடித்தளமாய் அமைகிறது

தையிலும் பொங்கல் சித்திரையிலும் பொங்கல்
பொங்கலைப் பொங்கினால் பூரிப்பே கிடைக்கும்
மாவிலை தோரணம் வாசலை அலங்கரிக்கும்
மனமகிழச் சித்திரையை வரவேற்று மகிழுவோம்

பங்குனி தன்பின்னே சித்திரையைக் கூட்டிவரும்
சித்திரை பிறந்தாலே கெட்டிமேளம் ஒலித்துவிடும்
திருமணங்கள் தொடங்கும் திருவிழாத் தொடங்கும்
சிறப்பாக வசந்தம் ஊஞ்சலாய் ஆடிநிற்கும்

மேலும் படிக்க ...

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
13 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலானா 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24 அன்று 'டொரோண்டோ'வில் நடைபெறவுள்ளது. அது பற்றிய ஓராயம் அமைப்பின் அறிவித்தலை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
மேலும் படிக்க ...

ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் - படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
12 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[எழுத்தாளரும், ஞானம் சஞ்சிகையின் பதிப்பாளரும், ஆசிரியருமான திரு.தி.ஞானசேகரனின் மறைவையொட்டி,  எழுத்தாளர் முருகபூபதி ஞானசேகரன் அவர்களின் எண்பதாவது வயதையொட்டிப் பதிவுகள் இணைய  இதழில் அன்று எழுதிய கட்டுரையின் முக்கிய பகுதிகள் மீள்பிரசுரமாகின்றன.]

”கிழக்கு வானில் சூரியன் தங்கப்பாளமாக ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான். சூரியோதயத்தை நான் முன்னர் கடற்கரையோரங்களில் நின்று பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால், உயரத்தில், பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து, புதிய கோணத்தில் வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும் மேகங்களினூடாக அந்த அழகிய காட்சியைப்பார்த்தபோது நான் மெய்மறந்துபோனேன். ஆதவனின் ஒளிப்பிழம்புகள் கணத்துக்குக்கணம் புதிது புதிதாய் கொள்ளை அழகை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன.”

இலங்கையிலிருந்து சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வானத்தில் பறந்து வரும்பொழுது அவுஸ்திரேலியா சிட்னியில் இறங்கும் தருணத்தில் விமானம் தரைதட்டுவதற்கு முன்னர் அந்த அதிகாலைப்பொழுதின் உள்ளங்கவர் காட்சியை தரிசித்த இலக்கியப்படைப்பாளி ஞானசேகரனின் அன்றைய வர்ணிப்புத்தான் அந்த சூரிய உதயக்காட்சி. அன்று காலை அவருக்கு அவுஸ்திரேலியாவில் விடிந்தது. அன்றைய அவரது வருகையே பின்னாளில் இலக்கியவானில் ஞானம் கலை, இலக்கிய மாத இதழின் பரிமாணத்துடன் அவருக்கு பேருதயமாகியது.

மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளர் ஞானசேகரன் மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந,கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ஞானசேகரன் மறைந்தார் என்னும் செய்தி எதிர்பாராதது. இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர்.  நாவல், சிறுகதை, கட்டுரை (பத்தி  எழுத்துகள், பயணக் கட்டுரைகளுட்பட) ,இதழியல் (ஞானம் சஞ்சிகை), பதிப்புத்துறை (ஞானம் சஞ்சிகையின் சார்பில் பல நூல்கள் வெளியாகியுள்ளன)  என  இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது.

புதிய சுவடுகள், குருதி மலை ஆகியவை இலங்கை அரசின் சாகித்திய விருதினையும், லயத்துச் சிறைகள் மத்திய மாகாண அமைச்சின் சாகித்திய விருதினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 'ஞானம்' சஞ்சிகை எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய சஞ்சிகை. பலருக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் சஞ்சிகை. அது வெளியிட்ட போர்க்கால இலக்கியச் சிறப்பிதழ், புலம்பெயர் தமிழர் இலக்கியச் சிறப்பிதழ் உட்பட, எழுத்தாள ஆளுமைகள் சிலரின் சிறப்பிதழ்கள் முக்கியமானவை.

மேலும் படிக்க ...

அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய குறிப்புகள்! - வ.ந,கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந,கிரிதரன் -
அறிவியல்
12 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'காலம்' செல்வத்தின் ஏற்பாட்டில் இன்று டொரோண்டோ, கனடாவில் நடந்த 'வாழும் தமிழ் நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் ' 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றி ,நேரக்கட்டுப்பாடு காரணமாக நான் கூறவிருந்த் எல்லா விடயங்களையும் என்னால் கூற முடியவில்லை. அதனால் கூற விருந்த ஏனைய விடயங்களையும் ஓரளவு முழுமையாக்கி இப்பதிவில் தந்திருக்கின்றேன்.


அறிவியல்  நூல்களின் அவசியம் ஏன்?  அறிவை மக்களைச் சென்றடைய, தவறான தகவல்களைத் தடுக்க,  அதாவது சரியான தகவல்களை அறிய, அறிவியல் சிந்தனையை வளர்க்க, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த, மூட நம்பிக்கைகளைக் குறைக்க, அரசின் முடிவுகள் சரியாக ,அறிவு பூர்வமாக அமைய, மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த, சிந்தனையைத் தூண்ட, ஏன் என்று கேள்விகளைக்  கேட்கும் ஆற்றலை வளர்க்க,  அறிவியல் தொழில் நுட்பத்தை , அதன் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள  அறிவியல் கட்டுரைகள் , நூல்கள்  எழுதப்பட வேண்டும்.  அறிவு பகிரப்பட வேண்டும்.  அதனைச் சாத்தியமாக்குபவை அறிவியல் எழுத்துகள். 

எனக்கு அறிவியல் துறையில்  வானியல், வானியற்பியல்  மிகவும் பிடிக்கும். என் பால்ய பருவத்தில் , வவுனியாவில், வீட்டு முற்றத்தில் அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கி, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானைப்பார்த்ததிலிருந்து என் ஆர்வம் தொடங்கியது என்பேன். அக்காலகட்டத்தில் கல்கியில் 'பொன்னியின் செல்வன்'  நாவலும் மீண்டும் தொடராக வெளியாகத்தொடங்கியிருந்தது. ஓவியர் வினுவின் அழகான ஓவியங்களுடன்  வெளியான  நாவலில் அப்போது அடிக்கடி வானில் தோன்றிக்கொண்டிருந்த தூமகேது பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் அவ்விதம் குறிப்பிடப்பட்டிருப்பது வால்வெள்ளி  என்பதை அறிந்தேன். நாவல் நடைபெறும் காலத்தில் நடக்கப்போகும் துர்ச்சம்பவமொன்றினை எதிர்வு கூறுவதாகத் தூமகேது சித்திரிக்கப்பட்டிருக்கும். அதே காலகட்டத்தில் கல்கியில் வாண்டுமாமாவின் 'ஓநாய்க்கோட்டை' என்னும் சித்திரக்கதையொன்றும் வெளியாகிக்கொண்டிருந்தது.அதில் வரும் தூமகேது பாத்திரமும் பயங்கரமானதோர் ஆளுமையாகச் சித்திரிக்கப்பட்டிருந்த பாத்திரம். அதனால் தூமகேது என்னும் பெயரும் எம்மைப் பயப்படுத்துமொரு பெயராக அக்காலகட்டத்திலிருந்தது. அத்துடன் அக்காலகட்டத்தில் அடிவானில் தென்பட்டுக்கொண்டிருந்த வால்வெள்ளியும் நினைவுக்கு வருகின்றது. 

அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூலின் 'என்னுரையில்' தன் சிறுவயதில் பூதக்கண்ணாடியுடன் அலைந்து திரிந்த  அனுபவத்தை விபரித்திருப்பார். அதை வாசித்தபோது எனக்குப் பழைய நினைவுகள் மீள் எழுந்தன. கலகி சஞ்சிகையின் அளவில் சிறுவர்களுக்கான  அறிவியல் புத்தகமொன்று 'நீங்களும் விஞ்ஞானியாகலாம்' என்னும் பெயரில் அல்லது அது போன்றதொரு பெயரில் வெளியாகியிருந்தது. யாழ்  பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்த நூல்களிலொன்று. பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவில் திரியும் சிறுவனொருவனின் சித்திரம் போன்ற சித்திரங்களுடன் வெளியாகியிருந்த அந்த நூலை அடிக்கடி எடுத்து வாசித்திருக்கின்றேன். மிகவும் எளிய தமிழ்லில் எழுதப்பட்டிருந்த நூலும், சித்திரங்களும் நெஞ்சில் கிளர்ச்சியை ஏற்படுத்தின.  அதனைக் கலைக்கதிர் நிறுவனம் வெளியிட்டிருக்கலாம். சரியாக நினைவிலில்லை. அதை வாசித்து விட்டு , வெங்கட்ரமணன் போல் நானும் பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவு முழுவதும், என்னை ஓர் அறிவியல் அறிஞராகக் கருதிக்கொண்டு அலைந்துதிரிந்தேன். 

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனுக்கு இவ்விதமான ஆர்வத்தை, அவரது பால்ய பருவத்தில்  அறிவியல்பால் தூண்டியது அவருக்கு மாமாவோ , சித்தப்பாவோ கொடுத்த திசையறி கருவி , கொம்பாஸ் என்று வாசித்தது நினைவுக்கு வருகின்றது. 

மேலும் படிக்க ...

நீலகிரி படகர்களின் ‘சுத்துக் கல்லு மொரா’ எனும் கடவுள் முதுமரமும் சங்கக் கூறுகளும்! - முனைவர்.கோ.சுனில்ஜோகி , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை -

விவரங்கள்
முனைவர்.கோ.சுனில்ஜோகி , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை -
ஆய்வு
11 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


தனித்த வாழ்வியலிற்காக யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட படகர்களின் தொல்சடங்குகள் தனித்துவமானவை. சுமய சார்பற்றவை. இவர்களே உருவாக்கிய தொல் பண்பாட்டினைக் கட்டியங் கூறுபவை. இவர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வியலின் உறுதிபாடாகத் தொடர்பவை. அந்தச் சடங்குகளில் சில சங்கக் கூறுகளின் தொடர்ச்சியாகத் திகழ்பவை. இன்றும் இவர்களின் இயற்கை வாழ்வின், வழிபாட்டின் எச்சங்களாத் தொடர்கின்றன. அதில், இவர்களின் மரவழிபாடு இன்றியமையானதாகும்.

நீலகிரிக்கே உரிய மரங்களைப் பாதுகாப்பதையும், தமது வாழ்வியல் தகவமைப்பில் பெருந்துணை நல்கியமையும், நமது மூதாதையர்கள் மற்றும் முன்னோர்களின் நம்பிக்கையின் திரட்சியாக விளங்கியமையும், இயற்கைப் பேணலைத் தக்கவைத்து தலைமுறைக் கடத்துதலையும் உட்செறித்த இவர்களின் மரவழிபாட்டில் ‘நேரி’, ‘பிக்கெ’ உள்ளிட்ட மரங்கள் இடம்பெறுகின்றன. அதில் ‘நேரி’ மரத்தினைக் கொண்டமையும் இவ்வழிபாட்டின் தொன்மையினை இக்கட்டுரை விளக்குகின்றது. நேரி மரத்தினைக் கொண்டு நீளும் ‘சுத்து கல்லு மொரா’ எனும் குறிஞ்சி நிலம் சார்ந்த வழக்காறினைச் சங்கக் கூறுகளோடுப் பொருத்தி இக்கட்டுரை ஆய்கின்றது.

படகர்களின் கடவுள் முதுமரம் நேரி - சுத்தக் கல்லு மொரா

ஆதிமுதல், எருமை மந்தை பேணலையும் மலைப்புல வேளாண்மையினையும் தமது வாழ்வியலாகக் கொண்டிருக்கும் படகர்களின் மரபில், பண்பாட்டில் ‘நேரி’ எனும் நாவல் மரம் அடிப்படையானவொன்றாகும். படகர்களின் தாய்மொழியான ‘படுகு’ மொழியில் வழங்கப்படும் ‘நாடு, சீமெ, பெட்டா, அக்க – பக்க, ஊரு, அட்டி’ எனும் அவர்களின் வாழ்க்களப் பரப்பில், ‘அட்டி’ என்பது அம்மக்கள் வாழ்கின்ற ஊராகும். பெரும்பாலும், மலைகளின் கோடுகளிலும், அதன் சரிவினையொட்டியும் அமைந்திருக்கும் இக்குடியிருப்பினை இவர்கள் “அட்டி அணெ” என்று வரையறுப்பதுண்டு. இதில் ‘அணெ’ என்பது மலையில் அமைந்துள்ள புல்வெளியாகும். இதை, இவர்கள் ‘மந்தா’ என்றும் அழைப்பதுண்டு. இந்த இடங்களெல்லாம் நீர்நிலைகளை அடிப்படையாக வைத்தே அமைக்கப்பட்டவையாகும்.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல்: குழையல் சோறு! - இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
-இந்து.லிங்கேஸ்-
இலக்கியம்
11 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


வேப்ப மரம் பெரும்பாலும் பங்குனி தொடங்கி வைகாசி மாதங்களில் பூக்கும்.நன்றாக வைகாசியில் வேப்பம்பூ  பூத்துக்குலுங்க எங்கள் வீட்டு வேப்பம்பூவில் வடகத்தைத்தட்டிப் பாயில் போட்டுக் காயவைக்க  அப்பாவும், அம்மாவும் தங்களைத் தயார்படுத்துவார்கள். அதுவே அன்று எமக்கு பெரும் செயல்முறையாக இருந்தது.முற்றத்தில் பாய்விரித்து வடகத்தைத் தட்டி பாயில் காயவைக்கும்போது,காற்று புழுதியையும் மண்ணையும் சேர்த்து அள்ளிக்கொண்டு வந்து ஈரப் பதத்திலிருக்கும் வடகத்தில் விழுந்துவிட்டால்போதும்,அந்த வடகங்களை உண்ணவே முடியாது. கர கரவென்று வாய்க்குள் மண்தான் கடிபடும்.ஓரிரு நாட்களின் உழைப்பு முழுவதும் வீணாய்ப்போய்விடும். மனமும் கலங்கும்.காயப்போட்ட இடத்திற்கு நாயோ, பூனையோ,அணிலோ, காகமோ எதுவுமே வந்து கொத்தியோ, மிதித்தோவிடக்கூடாது என்பதற்காகவே பாய்களுக்குப் பக்கத்திலேயே கிளுவம் தடியுடன் அன்று அரைக்காற்சட்டை போட்ட  இளசுகள் நாம் காவலிருந்தோம்.

ஒன்று  தட்டை வடகம், அடுத்தது காம்பு வடகம் என இரண்டு வகையாக எம் வீட்டு வடகங்கள் இருந்தன. காம்பு வடகமானது காலப்போக்கில் காணாமல் போனது.காம்புடன் இருக்கும் பூக்களை, அரைத்துப் பினைந்து குளைத்த உழுந்துக்குள் அப்படியே முழுமையாக தோய்த்து எடுத்துக் காயவைப்போம். காய்ந்ததும் பாக்கு வெட்டியால் துண்டு துண்டுகளாக நறுக்கி எடுத்தால் அதுவே காம்பு வடகம்.அது கூடச் சுவைதான். "அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்டால், 'காம்பு வடகம் தட்டை வடகம்போல மென்மையாய்  இருக்காது'. காம்பிலிருந்து முழுமையாகப் பூக்களை உருவி எடுத்துச் செய்வது தட்டை வடகம்.விரத நாட்களுக்கு மரக்கறிகளுடன் வடகமும் சேர்ப்பதுகூட நம் பாரம்பரியம்தான்!

இது மட்டுமல்ல,இந்த திட்டம்  முடிய அடுத்ததாய், கூட்டி அள்ளி குப்பைகளை அகற்றியபின் சாணி தெளித்த முற்றத்தில் பாய்விரித்து அடுக்கி மோர் மிளகாய்த் திட்டமும் வெந்து தணியும்.குசினிக்குள்ளே உறிகள் தொங்க, அங்கே பானைகளுக்குள் வெண்ணெயும், தயிரும்,மோரும், பானைக்குள் அடைத்த புளியும் கூடியிருந்து எம்மோடு ஒன்றாய்க் கலந்து பண்பாட்டைக் கட்டிக்காத்த பொற்காலச் சுவடது. இப்படித்தான் எம் வாழ்விருந்தது. வாழ்விற்குள்  எப்போதும் ஓர் நேசமிருந்தது.

மேலும் படிக்க ...

அமெரிக்கப் பயணத்தொடர்: மேற்கு அமரிக்கா (3 & 4) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
09 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

அமெரிக்கப் பயணத்தொடர்: மேற்கு அமரிக்கா (3) 

மொன்யூமென்ட் வாலி (Monument Valley) எனப்படும் பகுதி உத்தா, அரிசோனா என்ற இரு மாகாணங்கள் இடையே உள்ள பிரதேசமாகும். தற்போது இந்தப் பிரதேசம் அமெரிக்க ஆதிகுடிகளின் வசம் உள்ளது. அவர்களில் முக்கியமாக நவகோ (Navajo Nation) என்ற ஆதிகுடிகளின் ஆட்சியிலும் தன்னாட்சியிலும் உள்ளது. தற்போது இவர்களே இப்பேகுதியில் வாழும்  பெரிய இனக்கூட்டமாகியுள்ளனர். அவர்களது அனுமதியுடனே மொன்யூமென்ட் வாலிக்கு நாம் செல்ல முடியும்.

இந்த மொன்யூமென்ட் வாலி என்பது மிகவும் பெரிதான கற்கள்,  சிறிய குன்றுகள் போல் பல வடிவங்களில் அமைந்திருக்கும் இடமாகும். ஒவ்வொன்றின் வடிவத்திற்கும் பெயரிட்டு, அவற்றில் அவர்களது தெய்வங்கள் குடியிருப்பதாக நவகோ மக்கள் நம்புகிறார்கள். இதனால் இந்த இடங்கள் புனிதமானவை.

இந்த இடங்களே பல ஹாலிவுட் கவ்போய் படங்களில் வரும் இடங்களாகும். சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ள இந்த பாறைகளில் செப்பு, இரும்பு, யுரேனியம் போன்ற கனிப்பொருட்கள் உள்ளன. அமெரிக்காவில் யுரேனியம் இருந்தும்,  வருடாவரும் 800 மில்லியன் டாலருக்கு ரஸ்சியாவிலிருந்து யுரேனியம் வாங்குவதன் காரணம் என்ன தெரியுமா? இந்த இடம் புனித பிரதேசமாக இருப்பதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

பல உருவங்களில் உயர்ந்து நிற்கும் இந்தப் பாறைகள் ஒருவித உயிருள்ள உருவங்களைப் போன்றே தோன்றுகின்றன. இந்தப் பகுதியின் மேற்பார்வை நவகோ ஆதிவாசிகளிடம் இருப்பதால், அவர்கள் தங்கள் ஜீப்புகளில் எங்களை அழைத்துச் சென்றனர். பல இடங்களை அவர்கள் தங்கள் மூதாதையர்களின் தெய்வ வடிவங்களாகவும், வாழ்க்கையின்  வழிகாட்டிகளாகவும் கருதுகிறார்கள் என்றும் கூறினர். அவர்களின் நம்பிக்கைகள்,  இன்னும் நிறுவனப்படுத்தப்படாதது  வரவேற்கத்தக்கதாய் இருந்தது. நிறுவனமயப்பட்டால் அதை வைத்து ஒரு வர்க்கம்  உருவாகி இருக்கும். அதே வேளையில் இவர்களது இந்த நம்பிக்கையே,  அவர்களுக்கு அரசிடமிருந்து நில உரிமையைப் பெறவும் அதன் பொருளாதாரத்தில் பயன்பெறவும் உதவியுள்ளது. 

மேலும் படிக்க ...

எமிலியின் ‘கோண்டல்’ எனும் புனைவுலகம்! - முனைவர் பத்மா ஸ்ரீ்தர் (நாங்குநேரி வாசஸ்ரீ்) -

விவரங்கள்
- முனைவர் பத்மா ஸ்ரீ்தர் (நாங்குநேரி வாசஸ்ரீ்) -
நூல் அறிமுகம்
08 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கோண்டல் என்பது எமிலி பிரான்டே மற்றும் அவரது சகோதரி ஆன்னே ஆகிய இருவரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு கற்பனை உலகம். அவ்வுலகத்தை மையமாகக் கொண்டே அவர்கள் இருவரும் கவிதைகள் மற்றும் கதைகள் எழுதி வந்தனர். இவ்வுலகத்தை உருவாக்குவதற்கு முன் அவர்கள் தங்களின் மூத்த சகோதர சகோதரிகளான சார்லட் மற்றும் பிரான்வெல்லுடன் இணைந்து ‘ஆங்க்ரியா’ என்ற இராச்சியத்தை உருவாக்கி விளையாடி வந்தனர். அந்த இராச்சியத்தின் கதாநாயகர்களாக ‘டியூக் ஆப் வெல்லிங்டன் மற்றும் அவரது மகன்கள் இருந்தனர். இப்போது அந்த இராச்சியம் உருவான கதையைப் பார்ப்போமா.

ஒரு நாள் சகோதரன் பிரான்வெல்லுக்கு அவரது தந்தையான பாட்ரிக் பிரான்டே 12 மரத்தால் செய்யப்பட்ட வீரர்களைப் பரிசளித்தார். அதன்பிறகு தோன்றியதே இக்கற்பனை இராச்சியமென சார்லட் தனது குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார். அந்த நாள் 5 ஜூன் 1826.

“பிரான்வெல் எங்களது அறைக்கு பொம்மைகள் இருந்த பெட்டியோடு வந்தான். நானும் எமிலியும் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தோம். நான் ஒரு பொம்மையைப் பிடுங்கி எடுத்து இது ‘டியூக் ஆப் வெல்லிங்டன்’ எனக் கூறி மகிழ்ந்து இனி இது என்னுடையது என்றேன். (வெல்லிங்டன் அப்போதைய ஐக்கிய நாடுகளின் பிரதம மந்திரி. அவர் புகழ் பெற்ற வாட்டர்லூ போரில் பிரெஞ்சுத் தலைவர் நெப்போலியன் போனபார்டேவைத் தோற்கடித்தவர்). நான் இதைச் சொன்னபோது எமிலியும் தன் பங்கிற்கு ஒன்றை எடுத்துக் கொண்டாள். மேலிருந்து இறங்கி வந்த ஆன்னேவும் ஒன்றை எடுத்தாள். மற்றனைத்தையும் விட என்னுடையது அழகாக இருந்தது. எமிலி எடுத்துக் கொண்டவனுக்கு பிரேதத் தோற்றம் இருந்ததால் ‘கிரேவி’ (Gravey) எனப் பெயரிட்டோம். ஆன்னே எடுத்துக்கொண்டதோ விசித்திரமான உருவம் கொண்ட பொம்மை. அதனை waiting boy என்றோம். பிரான்வெல் தனது பொம்மையை ‘போனபார்டே’ என்று அழைத்தான்.”

மேலும் படிக்க ...

23-24 வயதுகளில் பாரதியின் வர்க்கச் சிந்தனைகள் (4)! - எல்.ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
08 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

5

இதேபோல், பழமையின் செழுமைகளில் இவன் ஆழ ஈடுபாடு கொண்டிருந்தாலும் அது நவீன அரசியலில் இவன் கால்பதிப்பதை தடுப்பதாக தோன்றவில்லை. அதாவது, பண்டைய அரசியல் சிந்தனைகளில் இருந்தும், மரபுகளில் இருந்தும் ஒப்பீட்டளவில் விடைபெற்ற   இளைஞனாகவே இவன் தனது 23-25 வயதில் தோற்றம் தருபவனாக காட்சியளிக்கின்றான்.

இந்திய அறிவு சிந்தனைகளை ஆழ பாதித்த இரு சிந்தனை வட்டங்களை நாம் குறிப்பிடலாம். ஒன்று, தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம் (1824-1883). மற்றது ராம் மோகன் ராய் போன்றோர்களால் தோற்றுவிக்கப்பட்ட பிரம்ம சமாஜம். இது தாகூராலும் (1817-1905) பின்னர் சென்னாலும் (1838-1884) செழுமைப்படுத்தப்பட்டதாயிற்று. ஆர்ய சமாஜமானது உருவ வழிபாடுகளை நிராகரித்தும் உபநிடதங்களை ஏற்று சாதிபிரிவினைகளை நிராகரித்தும் பெண்களின் ஒடுக்குமுறையான-உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை எதிர்த்தாலும் தாகூர் போன்றவர்கள், இஸ்லாமிய, கிருஸ்தவ கருத்துக்கள் சமாஜத்தில் உட்புக கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர். இதேவேளை, வேதங்கள் கூறியபடி பண்டை ஆரிய சமூகத்தை கட்டியெழுப்பிட வேண்டும் என தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் அபிப்பிராயப்பட்டனர். பாரதி இவ்விருவரில் இருந்தும் ஒருவகையில் வேறுபட்டு நின்றான், எனலாம்.

பங்கிங்காமின், (ஆனந்தமடம்) நாவலால் அவன் ஈர்க்கப்பட்டு, ‘வந்தே மாதரத்தை’ அவன் மொழிப்பெயர்த்திருந்தாலும் கூட, நாவலில் காணப்படும் சன்னியாசிகள் சார்பாகவும் மகமதிய சார்பின்மையுடனும் இயங்கியவன் அல்ல, அவன். அவனது பார்வை நாவலில் காணப்பட்ட பிரிட்டிஷாரின் எதிர்ப்புடன் ஒன்று சேர கூடியதாகவே இருந்தது. இருந்தும், ஒரு கட்டத்தில் பாரதி அப்பாதையை நிராகரித்து நவீன காலத்துக்குள் பிரவேசிக்கின்றான். (சன்னியாசிகள் மாத்திரம் காட்டுக்குள் கூடும் அரசியல் என்பதை நிராகரித்து).

மேலும் படிக்க ...

அமெரிக்காவின் மேலாதிக்கப் போரும், உலகளாவிய பொருளாதார வாழ்வியல் நெருக்கடிகளும்: ஒரு புவிசார் அரசியல் பகுப்பாய்வு! - ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -

விவரங்கள்
- ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -
ஆய்வு
04 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையின் கட்டமைப்பு (Outline)

1. ஆய்வுச் சுருக்கம் (Abstract)

அமெரிக்காவின் ஒற்றைத்தருவ உலக ஆதிக்கம் (Unipolar Hegemony), அதன் இராணுவத் தலையீடுகள் மற்றும் அவை எவ்வாறு உலகளாவிய விநியோகச் சங்கிலி (Global Supply Chain), பணவீக்கம் மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன என்பது குறித்த ஒரு சுருக்கமான அறிமுகம்.

2. அறிமுகம் (Introduction)

    மேலாதிக்கக் கோட்பாடு (Hegemonic Stability Theory): இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் எழுச்சி.

    ஆய்வுப் பிரச்சினை: இராணுவச் செலவினங்களுக்கும் (Military Spending) உலகளாவிய பொருளாதார வீழ்ச்சிக்கும் இடையிலான தொடர்பு.

3. அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்கமும் புவிசார் அரசியலும்

    நேட்டோ (NATO) விரிவாக்கம் மற்றும் பனிப்போர் காலத்திற்குப் பிந்தைய மோதல்கள்.

    மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பியப் பகுதிகளில் நடக்கும் போர்களில் அமெரிக்காவின் பங்கு.

    டாலர் அரசியல் (Petrodollar) மற்றும் பொருளாதாரத் தடைகளைப் (Economic Sanctions)  போர்க்கருவிகளாகப் பயன்படுத்தப்படுதல்.

மேலும் படிக்க ...

'ஈரான் - அமெரிக்க' யுத்தம் பற்றியதோர் அலசல்! - எல். ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல். ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
02 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


சீனா, திபெத் பீடபூமியில், ஓர் 540 அடி உயரமான அணையை, கட்டி முடித்துள்ளதாக தகவல். இதன், நிலப்பரப்பானது, செங்குத்தான மலை தொடர்களையும், மிக மிக ஆழமான பள்ளத்தாக்குகளையும் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதைவிட, சுவாசத்திற்கு தேவைப்படும் ஒட்சிசனின் அளவும் குறைவாகவே இங்கு காணப்படுகின்றது.

இக் காரணிகளை கவனத்துள் கொண்ட சீனா, முற்றும் முழுதாய் தானியங்கி ட்ராக்குகளையும் தானியங்கி புல்டோசர்களையும், மற்றும் தேவைப்படும் ஏனைய அனைத்து தொழில் முறைகளையும், தானியங்கி முறையில் (AI, 5G) Auto ரோபோக்களின் உதவியோடு, மனித கை சம்பந்தப்படா வகையில் அணையை கட்டி முடித்துள்ளதாக தகவல். மனிதர்களின் சம்பந்தமில்லாமல் இம்மாபெரும் அணையை நிர்மாணிப்பதில் சீனாவின் விஞ்ஞானிகள் வெறுமனே அலுவலக மேசையில் வரைபடங்களை கீறி, திட்டங்களை தீட்டுவதுடன் மட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சீனா அறிவித்துள்ளது.

இதனை போன்றே, நவீன விஞ்ஞான தொழிநுட்பங்களை முற்றும் முழுதாய் பயன்படுத்தி, சீனா Guangz Hou  எனும் கப்பல் துறைமுகத்தையும் கட்டி முடித்துள்ளது. அமெரிக்காவின், மாபெரும் துறைமுகங்களை ஒன்றாக சேர்த்தாலும் இதன் கொள்ளளவு, அவற்றை மீறியதாக இருக்கும் என கூறப்படுகின்றது.

லட்சக்கணக்கான, மாபெரும் கன்டெய்னர்களை ஏற்றுவதும் இறக்குவதும், அவற்றை ஒரு கச்சிதமான முறையில் வரிசை தவறாமல் அடுக்கி வைப்பதும், மீண்டும், AI தொழிநுட்பத்துடனும் தானியங்கும் நவீன விஞ்ஞான வசதிகளுடனும் சீனா உருவாக்கியுள்ளது. இரண்டொருவர் மாத்திரமே கம்பியூட்டர் மூலமாக இத்துறைமுகத்தை இயக்க செய்ய போதுமானவர்கள் எனவும் சீனா அறிவித்துள்ளது. இதனை போலவே, இன்னும் 52 துறைமுகங்களை நாடு முழுவதும் சீனா அமைத்திருப்பதாக கூறியுள்ளது.

மேலும் படிக்க ...

நீலகிரிப் படகர்களின் தொல்மரபில் சங்கக் கூறுகள் (நாகு – நெலிகோலு – ஒக்கலு)! - முனைவர்.கோ.சுனில்ஜோகி -

விவரங்கள்
- முனைவர்.கோ.சுனில்ஜோகி -
ஆய்வு
01 ஏப்ரல் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

நீலகிரி படகர் இன மக்கள் யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள். தனித்துவமான வாழ்வியலைக் கொண்டவர்கள். அதிலும், சடங்கியல் சார்ந்த பல்வேறு தனித்த தொல்கூறுகளைக் கொண்டவர்கள். ஆதியிலிருந்து எருமை மந்தைப் பேணலைத் தமது வாழ்வியலாகக் கொண்டுள்ள இவர்களின் தொல்சடங்குகள் எருமைகளை மையமிட்டதாகவே அமைந்திருப்பது நோக்கத்தகுந்தன. அதோடு, வேட்டை சமூகம், ஆநிரை வாழ்வு மற்றும் மலைப்புல வேளாண்மை எனும் முப்பரிமாண வாழ்வியல் கூறுகளைக் உட்தறித்திருக்கும் படகர்களின் நெடிய வாழ்வியல் பரப்பில் வெளிப்படும் சில தொல்சடங்குகளின் மையச் சரடாகச் சங்க இலக்கியக் கூறுகள் விரவியுள்ளமையும் அவை இன்றும் வழக்கிலுள்ளமையும் குறிப்பிடத்தகுந்தவை. அதில், சிலவற்றை இக்கட்டுரை ஆய்கிறது.

படகர்களின் ஆநிரை வாழ்வு, மலைப்புல வேளாண்மை எனும் இரண்டு நிலைகள் சார்ந்த மூன்று சங்கக் கூறுகளை இக்கட்டுரை விளக்குகின்றது. ‘நாகு ஏதோது’, ‘கோலு கடவோது’ மற்றும் ‘ஒக்கலு இக்கோது’ எனும் மூன்று பெயரிலிலேயே சங்கக்கூறுகளைக் கொண்டிருக்கும் இந்தச் சடங்குகளை ஆராய்வது அதன் தொல்நிலைக்கு வழிகோலும்.

மேலும் படிக்க ...

23-24 வயதுகளில் பாரதியின் வர்க்கச் சிந்தனைகள் (3)! - எல்.ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
31 மார்ச் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

“தான் கூறிய ஒவ்வொன்றையும் தானே மறுதலித்த பெருமை கொண்டவன் இவன்” எனக் கைலாசபதி ஒருமுறை கூற நேர்ந்தது. உண்மைத்தான். கவனமாக பார்க்குமிடத்து, மாற்றங்களும் மறுதலிப்புகளும் இவனுக்கே உரித்தானதோ எனும் கேள்வி எழத்தான் செய்கின்றது. ஆனால், இம்மாற்றங்கள் எதன் அடிப்படையில், எதனால், பிறப்பெடுக்கின்றன என்பது கேள்வியாகின்றது. மறுபுறம், இவனது அகநிலை மாத்திரமே இங்கே சம்பந்தமுறும் விடயம் எனில், இதனை “வளர்ச்சி” என்று வரையறுக்கலாம். (வெறுமனே, மறுதலிப்பு என்பதனை விடுத்து).

இதனை போலவே, அழுத்தங்களும் இங்கே சம்பந்தமுறும் என்றால், “வையத் தலைமை கொள்” எனும் கருத்தாக்கத்திற்கு பாரதி வந்து சேர ஆளாக நேரிடுகின்றது என்பதும் தர்க்கப்பூர்வமானதே. இவற்றில், எது எப்படியிருப்பினும், இவனில் விகசிக்கும் இம்மாற்றங்கள் மிக மிக, ஆழமானவை. இலகுவில் எத்திக் கடக்க முடியாதவை. ஒரு சிறு உதாரணமாக அன்னி பெஸான்டை இவ் இளைஞன் அன்று, கையாண்ட முறைகள் யாதென பார்க்கலாம்:

எழுதுவான்:
“பிரம ஞான சங்கம் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் தியஸாபிகல் பிரசிடென்டாகிய கர்னல் ஆல்காட் இப்போது மரணமடையும் ஸ்திதியிலிருக்கின்றார்… இவர் இறந்து போன பிறகு, இந்த சபைக்கு மிஸிஸ் அன்னி பெஸான்ட் பிரசிடென்டாக வரப்போகிறாரென்ற செய்தி அனேக தியஸாபிகாரர்களுக்கு சந்தோ~ந் தருமென்பதில் சந்தேகமில்லை… ஆனால், இந்த வி~யத்தின் சம்பந்தமாக ஒரு ரஸமான செய்தி இருக்கின்றது. அதாவது, ஜனவரி மாதம் 06ந் தேதி மஹாத்மா மோர்யா, மஹாத்மா கூட்ஹ{மி என்று சொல்லப்படும் இரண்டு ஸித்தர்களும் தமது சூக்சும வுடலை நீங்கி, ஸ்தூல வுடல் கொண்டு சென்னை அடையாற்றிலே, கர்னல் ஆல்காட் படுத்திருக்கும் இடத்திற்கு வந்தார்களாம். வந்து, மிஸிஸ் பெஸன்ட் அம்மையையே சங்க தலைமை வகிக்கும்படி செய்ய வேண்டுமென்று கட்டளை கொடுத்தார்களாம். இந்த சித்தர்கள் எத்தனையோ ஆயிரம் வரு~ங்களாக ஹிமாலயச் சாரலிலே வசித்து வருவதாக நம்பப்படுகின்றது. இவர்களே தியாஸபிகல் சபைக்கு மூல பூதர்களாக இருப்பவர்கள்…”
(சீனி.விஸ்வநாதன்: தொகுப்பு:2 பக்கம்:397: 1097)

மேலும் படிக்க ...

தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகன்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
இலக்கியம்
30 மார்ச் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ஜெயமோகனை நெருங்கவைத்தது அவரது இரண்டு கட்டுரைகள்தான். அதற்கு முன்பாக அவரது கதைகளையோ நாவல்களையோ நான் வாசித்ததும் இல்லை. ஏன் அவரைக் கேள்விப்பட்டதும் இல்லை.

திண்ணை இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட அவருடைய இரண்டு கட்டுரைகள் எனக்கு முக்கியமாயிருந்தது.அதில் ஒன்று, இஸ்லாமிய எழுத்தாளர்கள் தமிழுக்குச் செய்த சேவை பற்றியது. மற்றது பாசிசம் பற்றிய கட்டுரை.முதல் கட்டுரை வெளிவந்த காலத்தில் இலங்கை வடக்கில் இஸ்லாமியரை விடுதலைப்புலிகள் வெளியேற்றிய காலம். அப்பொழுது இஸ்லாமியத் தமிழர்களின் தமிழ்ச் சேவையை இவரது கட்டுரை எனக்குப் புரியவைத்தது.அதேபோல் இரண்டாவது கட்டுரை எமது இலங்கை மண்ணில் பாசிசத்தின் கரிய நிழல் படர்ந்திருந்த காலத்தில் வெளியானது.

1987 இற்கு முன்பு இலக்கியம் என்பது எனக்குத் தூரத்துப் பச்சையாக இருந்த காலத்தில், நான் அவுஸ்திரேலியாவில் தொடங்கிய “உதயம்” இதழின் பொறுப்பாசிரியராக விடயங்கள் தேடவேண்டியிருந்தது. உதயம் மாத இதழாகியதால், கட்டுரைகள் தேவை என்பதால் இணையத்தில் தேடியபோது எனக்குக் கிடைத்தவை இவை . பாசிசம் பற்றிய கட்டுரை நமது நாட்டில் நடப்பது போல இருந்தது. உதயத்தில் பிரசுரிப்பதற்கு ஜெயமோகனைத் தொடர்பு கொண்டு அனுமதி பெற்றேன். அதன்பின் அவருக்கு உதயம் பத்திரிகையைத் தபாலில் அனுப்பிவைத்தேன்.அப்பொழுது அவரிடமிருந்து “ ஏன் அதிக அளவு ஆங்கிலத்தில் பிரசுரிக்கிறீர்கள்? “ என்ற கேள்வியுடன் மின்னஞ்சல் வந்தது. “தமிழில் எழுதுவதற்கு ஆட்களில்லை, பணம் கொடுத்து எழுத எங்களிடம் வசதியில்லை “ என்றதும், தான் எழுதுவதாக முன்வந்தார் .ஆறு வருடங்கள் மாதம் தவறாமல் உதயத்திற்கு எழுதினார்.

மேலும் படிக்க ...

செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இளைய சமூகத்தினரிடையே மின்னணு அடிமையாதலும், மரபு மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவமும்! - பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
-பவானி சற்குணசெல்வம் -
சமூகம்
30 மார்ச் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்றைய உலகம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறை அதிகமாக மின்னணு சாதனங்களின் பயன்பாட்டில் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக “மின்னணு அடிமையாதல்” (Digital Addiction) என்ற பிரச்சினை தீவிரமாக உருவாகியுள்ளது. இதே சமயம், மரபு மற்றும் பண்பாட்டு மதிப்புகள் பின்தள்ளப்படுகின்றன என்பது கவலைக்குரிய நிலையாகும்.

மின்னணு அடிமையாதல் – பொருள் மற்றும் பரவல் (விரிவான விளக்கம்)

மின்னணு சாதனங்கள் மனித வாழ்வின் அவசியமான பகுதியாக மாறிவிட்டன. குறிப்பாக இன்றைய இளைஞர்கள் கைத்தொலைபேசி, கணினி, இணையம், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் மூலம் கல்வி, தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த பயன்பாடு அளவுக்கு மீறி, கட்டுப்பாடற்ற நிலையில் சென்றால் அது “மின்னணு அடிமையாதல்” (Digital Addiction) ஆக மாறுகிறது.

1. மின்னணு அடிமையாதலின் தன்மை

மின்னணு அடிமையாதல் என்பது ஒரு பழக்கமல்ல; அது மனநிலையைப் பாதிக்கும் ஒரு உளவியல் சார்பு.

ஒருவர் தினசரி பல மணி நேரங்கள் கைத்தொலைபேசி அல்லது இணையத்தில் செலவிடத் தொடங்குவார்
சாதனங்களைப் பயன்படுத்த முடியாதபோது சோர்வு, கோபம், பதற்றம் போன்ற உணர்வுகள் தோன்றும்
வாழ்க்கையின் பிற பொறுப்புகளை விட டிஜிட்டல் உலகத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்
இது போதைப் பழக்கத்தைப் போன்றே மெதுவாக வளர்ந்து, கட்டுப்படுத்த முடியாத நிலையை உருவாக்கும்.

மேலும் படிக்க ...

எட்டுத்தொகை அக நூல்களில் காணலாகும் வணிகவியல் தொடர்புகள்! - முனைவர் சா. சதீஸ் குமார் -

விவரங்கள்
- முனைவர் கு.வளர்மதி -
ஆய்வு
30 மார்ச் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்  - முனைவர் சா. சதீஸ் குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல், கல்லூரி , கோயம்புத்தூர் -641105. -
தமிழ் சங்க இலக்கியங்களில், குறிப்பாக எட்டுத்தொகை அகநூல்களில், காதல் மற்றும் மனித உணர்வுகளோடு இணைந்த சமூக–பொருளாதார வாழ்க்கையின் தடங்கள் காணப்படுகின்றன. அந்தக் கால சமூகத்தின் வணிக வாழ்க்கை, கடல் வணிகம், வணிகர் வர்க்கம், பொருளாதார உறவுகள் ஆகியவை இலக்கியத்தில் இயல்பாகப் பிரதிபலிக்கின்றன. இக்கட்டுரை, அகநூல்களில் காணப்படும் வணிகவியல் சுட்டுமொழிகளையும், அவை சங்ககாலத்தின் பொருளாதார நிலையைக் காட்டும் விதத்தையும் இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.

முன்னுரை

தமிழ் இலக்கிய மரபில் சங்ககாலம் பொருளாதார, கலாச்சார வளர்ச்சியின் பொற்காலமாகக் குறிப்பிடப்படுகிறது. எட்டுத்தொகை அகநூல்கள், தமிழரின் உணர்ச்சி, பண்பாடு, சமூக வாழ்வு ஆகியவற்றை ஆழமாக வெளிப்படுத்துகின்றன. அகநூல்கள் பெரும்பாலும் காதல் சார்ந்தனவாக இருந்தாலும், அந்தக் காதல் நிகழ்ச்சிகளின் பின்னணியில் சமூக வாழ்க்கை, தொழில், வணிகம், பொருள் பரிமாற்றம் போன்றவை தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.

அந்தக் காலத்தில் வணிகம் தமிழரின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. உள்நாட்டு மற்றும் கடல் வழி வணிகம் இரண்டும் செழித்திருந்தன. இதனை பல அகநூல் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

மேலும் படிக்க ...

சிறுகதை: இல்லத்திற்கு அவள் அரசி - தாருணி பாலேசன், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- தாருணி பாலேசன், அவுஸ்திரேலியா -
சிறுகதை
30 மார்ச் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யமுனா அனைத்து வேலைகளையும் முடித்து தூக்கத்திற்குப் போக மணி சாமம் 12:30 ஆகிவிட்டது. அவளுக்கோ குளிர் வேறு எலும்புகளூடு ஊடுருவி உடம்பு எல்லாம் குத்துவது போல உணர்வு. அதிகாலை எழவேண்டும், மகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். 6:00, 6:15, 6:30 என மூன்று அலாரங்களை கையடக்கத் தொலைபேசியில் வைத்துவிட்டு அயர்ந்து தூங்கிப்போனாள். ஒரு மணி நேரம் கூட தூங்கியிருக்க மாட்டாள் சுருண்டு படுத்திருந்த மகனின் இருமல் அவளை மீண்டும் எழச் செய்தது. இந்தக் குளிர் ஆரம்பித்தது முதல் எந்நேரமும் குழந்தைக்கு இருமலும் தடிமனும் தான். பாவம் குழந்தை தொடர்ந்து இருமிக் கொண்டிருக்க இளஞ்சூடான தண்ணீர் கொடுத்து மீண்டும் அவனைத் தூங்க வைக்க மணி இரண்டு ஆகி விட்டது. அவளுக்கோ குழம்பிய தூக்கம் மீண்டும் வர மறுக்கின்றது. புரண்டு புரண்டு படுக்கின்றாள் . அவ்வப்போது இடைக்கிடை மீண்டும் குழந்தையின் இருமல். குழந்தையின் முதுகைத் தடவிவிட்டபடியே ஒருவாறு மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தாள் யமுனா . 

அவளுக்கு கனவுகள் கூட நல்லதாய் வருவது இல்லை. ஆறுமணி அலாரம். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவளுக்குக் கேட்கவில்லை. 6:15 ஊஹும்... அதுவும் கேட்கவில்லை. 6:30 அலாரச் சத்தத்திற்கு அவளின் செல்ல மகள் தூக்கம் விட்டு எழும்பி அவளையும் எழுப்ப அந்தச்சத்தத்திற்கு மகனும் எழும்ப எப்படியோ கண்களைக் கசக்கிய வண்ணம் எழும்பி நேரத்தைப் பார்த்தாள். மணி 6:35. குளிர் தாங்க முடியவில்லை. மகனோ தூக்கச் சொல்லி அடம் பிடிக்கின்றான். பாவம் இரவு முழுவதும் இருமிய வண்ணம் இருந்தவன் அம்மாவின் அரவணைப்பைத் தேடுவான் தானே!. இரவிரவாக அலுவலக வேலை செய்து அதிகாலை மூன்று மணிக்கு படுக்கைக்குச் சென்ற நந்தனையும் எழுப்ப மனமில்லை. காலைக் கடன்களை முடிக்க வேண்டும். மகனோ இறங்க மறுத்து யமுனாவின் கழுத்தை இறுகப் பற்றிக் கொள்கிறான். அவனை மடியில் இருத்தியவண்ணமே காலைக் கடன்களை முடிக்க வேண்டிய நிலைமை அவளுக்கு . மகளோ குளிர் தாங்க முடியாமல் உடலைக் குறுக்கியபடி குந்தியிருக்கின்றாள். ஒருவாறு அவளைத் தூக்கியெழுப்பி, பல் துலக்கி, முகம் கழுவி முடித்தாயிற்று. இனி காலை உணவு. ஒன்றும் சமைத்தபடி இல்லை. குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து வெறுமையாய் இருக்கும் தட்டுக்களையே ஏக்கத்துடன் பார்த்த வண்ணம் நிற்க “குளிர், குளிர்” என யமுனா இன்னமும் தூக்கி வைத்திருக்கும் மகனின் மழலைக்கு சுயநினைவிற்கு வந்து பாலை எடுத்து வெளியில் வைத்து குளிர்சாதனப் பெட்டியை மூடுகின்றாள். 

மேலும் படிக்க ...

நான் பாடகரானால்..... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 மார்ச் 2026
Empty
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



எனக்கு நீண்ட நாட்களாகப் பாட வேண்டுமென்ற ஆசை உண்டு. ஆனால் அதற்கு நிறையப் பயிற்சி தேவை. அதனால் பாடகர்களின் குரலினிமையை, இசையை இரசிப்பதுடன் நின்று விட்டிருந்தேன்.

ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவு என் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளது. என் குரலில் , எனக்குப் பிடித்த பாடலொன்றை, இசையமைத்து என் குரலில் பாட வைத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு இசையமைப்பாளரான SUNO 5.5 AI  இவ்விதம் சொந்தக் குரலில் பாடும் வசதியைச் செய்து தந்துள்ளது.
ஒரு காலத்தில் நான் இந்நாட்டின் ஜனாதிபதியாகவிருந்தால் என்ன செய்வேன் போன்ற கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன். இப்போது நான் பாடகராகவிருந்தால் எப்படிப் பாடியிருப்பேன் என்பதைச் சுனோ செயற்கை நுண்ணறிவு இசையமைப்பாளர் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் காட்டியிருக்கின்றார். பாடகர் வ.ந.கிரிதரனின் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கம்பராமாயணத்தில் பல சொல் ஒரு பொருள் – அரசன்! - முனைவர் க.மங்கையர்க்கரசி -
  2. 'காலம்' இலக்கிய நிகழ்வு! இரு நூல்களின் அறிமுகமும் , உரையாடலும்! காலம் 63 வெளியீடு!
  3. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “கனடாவில் தமிழ் மரபுக் கவிதைகள் - உள்ளடக்கங்களும் உணர்த்துமுறைகளும்”
  4. நனவிடை தோய்தல்: மறக்கமுடியாத 'ஏரோகிராம்'! -இந்து லிங்கேஸ்-
  5. ' வ.ந.கிரிதரனின் பாடல்களும் & பார்வைகளும் ' 'யு டியூப் சானல்': மகாகவி பாரதியார் பாடல்கள் நான்கு!
  6. நினைவின் நெறியியல் மற்றும் காலத்தின் சிதைவு (The Ethics of Memory and Temporal Fracture) அல்லது உடைந்த காலத்தின் சாட்சியம் (The Refined Foreword)! - ஈழக்கவி -
  7. முருக வெறியாட்டும் கேரள தெய்யமும்! - முனைவர் பீ. பெரியசாமி -
  8. எழுத்தாளர் அகணி சுரேஷ் நூல் வெளியீட்டு விழாவும், 50 இசைப்பாடல்களின் நிறைவு விழாவும்!
  9. எழுத்தாளர் மனுவல் ஜேசுதாசன் மறைவு! - வ.ந.கி -
  10. ஈரானின் கற்றல் பாடம்: இருபது ஆண்டுகால போர் ஆய்வு! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
  11. மகாகவி பாரதியார் பாடல் - திக்குக்கள் எட்டும் சிதறி
  12. 23 - 24 வயதில் பாரதியின் வர்க்கச் சிந்தனைகள் (2) - எல்.ஜோதிகுமார் -
  13. எழுத்தாளர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது! - வ.ந.கி -
  14. சிறுகதை: குருதியின் சாட்சி - பவானி சற்குணசெல்வம் -
பக்கம் 1 / 125
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி