பதிவுகள் முகப்பு

பெண்களில் வெளிச்சமானவள்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
கவிதை
08 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* டிஜிட்டல்  ஓவியத்  தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG

பெண்களாகப் பிறந்த யாவருக்கும் - ஏதோ ஒரு விதத்தில் சாதனை என்ன என்று கூறி - சாதித்த பெண்களுக்கும் இக்  கவிதை காணிக்கை.
     
அழகான உடை பெண்ணின்
ஆளுமையை மாற்றும் என்பார்
அழகான நடத்தைதான் பெண்ணே உன்
 வாழ்க்கையையே மாற்றும்!
பெண்ணே!
புரிதல் இல்லாத இடத்தில் - நீ
பரிந்து பேசினாலும் - இல்லை
பாசத்தில் பேசினாலும் - அது
பலவந்தமாகத்தான் தோன்றும்
இசை மொழியான தமிழ் மொழியால்
இனிதே அழகாக்கி பண்படுத்திவிடு அதனை!

பெண்ணே!
கோபம் வந்தாலும் உன்
நிதானத்தை இழக்காதே!
கோபத்தின் பின்னால் உன் நியாயத்தைவிட
பெரிதாக நீ எறிந்த
வாத்தைதான் பேசப்படும்
கடைசித் துளியும் உதிர்ந்த பிறகும்
பொறுப்புடன் சித்திரமாக்கிவிடும்  
உன் சிந்தனையை பேனாக்குச்சியால்
பொறித்துவிடு!

பெண்ணே உனக்குள்
வட்டமிட்டுக்கொண்;டிருக்கும்
வலிகள் தான் ஏளராளம்
சத்தம் போட்டுச் சொல்ல முடியாமல்
மனசுக்குள்ளே குமையும்
பேசாப் பொருளை என்னிடம் பேசு
துணிந்து பேசு
 உன் பாதை  
 சரியானதாகவும் இருக்கலாம்.

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம் (இசை, நடனம்)

விவரங்கள்
- பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
08 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 835 7605 6586 | Passcode: 245552

* அறிவித்தலைத் தெளிவாகப் பார்க்கப் படத்தை ஒரு தடவை அழுத்தவும்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்கு இதழ்களின் பங்களிப்பு - நவீன தமிழ் ஆய்விதழ்ச் சூழலை மையப்படுத்திய அவதானிப்புகள் ”

விவரங்கள்
- பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
08 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting  |  Meeting ID: 847 7725 7162 |  Passcode: 554268    

* அறிவித்தலைத் தெளிவாகப் பார்க்கப் படத்தை ஒரு தடவை அழுத்தவும்.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத ஐந்து எம்ஜிஆர் படப் பாடல்கள்! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
06 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இங்குள்ள பாடல்களுக்கான 'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG -

1. காலத்தால் அழியாத கானம் ; 'காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது'

விவசாயி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் திரைப்படப் பாடல்களிலொன்று. கவிஞர் உ டுமலை நாராயணகவியின் வரிகளும், திரையிசைத்திலகத்தின் இசையும், டி.எம்.எஸ் & பி;சுசீலாவின் குரலினிமையும், எம்ஜிஆர் & கே.ஆர்.விஜயாவின் நடன அசைவுகளும், நடிப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை.

என் பால்ய வயதில் வவுனியா றோயல் திரையரங்கில் பார்த்த படங்களிலொன்று தேவரின் 'விவசாயி'.

பாடலைக் கேட்க 

மேலும் படிக்க ...

'ஒரு பாய்மரப்பறவை' வாசிப்பு அனுபவம்: - பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் -
நூல் அறிமுகம்
06 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



 நூல்: 'ஒரு பாய்மரப் பறவை' | ஆசிரியர்:   பொ. கருணாகரமூர்த்தி ,ஜேர்மனி  | பதிப்பகம்: காலச்சுவடு, இந்தியா 2024


வாழ்க்கை வாழ்வதற்கே!. ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வை வாழ்ந்து முடிக்கத்தான் வேண்டும். ஆனால் அதை எழுதுவது என்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. எழுதுதல் என்பது ஒரு படைப்புத்திறன் மிக்க கலை வடிவம் ஆகும். இது வாழ்க்கையின் அனுபவங்களை ஆழ்ந்து உணர்ந்து, அதனைச் சிறந்த மொழியில் வெளிப்படுத்தி, அதன் மூலம் வாசகர்களையும் பாதிக்கும் ஒரு ஆற்றல் வாய்ந்த செயல். எழுத்தாளர் கருணாகரமூர்த்தி அவர்கள் இந்தக் கலையை வரமாகப் பெற்றவர் என்பது இந்தப் புத்தகத்திலிருந்து புலனாகிறது.

எழுத்தாளர் இந்தக் கதைகளினூடாக வாழ்க்கையின் அனுபவங்களையும், எண்ணங்களையும், உணர்வுகளையும் வார்த்தைகளாக வடித்து, அதனை ஒரு கலை வடிவமாக மாற்றுவதை நான் ஒவ்வொரு கதைகளிலும் காணக்கூடியதாக இருக்கிறது. இவர் தனது கதைகளில் வெறுமனே தகவல்களைப் பதிவு செய்யாமல், சொற்களின் மூலம் ஒருவரின் வாழ்வை வாசகர்களுக்குப் புரியவைத்தும், அந்த அனுபவங்களைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் கலாச்சாரப் பிறழ்வுகளின் மத்தியிலும் நகர்த்திச் செல்லும் பாங்கு அற்புதம்.

கதைகள் சிறப்படைய நல்ல முறையில் பாத்திரங்கள் அமைய வேண்டும். கதையின் உயிரோட்டம் பாத்திரங்களே

ஆகும். பாத்திரங்கள் மூலம்தான் கதாசிரியர் வாசகனைக் கவருகிறார். இந்தக் கதைகளில் வருகின்ற தனித்தனி மனிதனின் பண்புகளையும், செயல்பாடுகளையும் கதாசிரியர் தனது செம்மையான பாத்திரப் படைப்பு மூலம் வெளிக்கொண்டு வருகிறார். பாத்திரங்கள்தான் கதையை நடத்திச் செல்கின்றன. இவர் தனது ஒவ்வொரு கதையிலும் பாத்திரங்களின் வாழ்க்கையை முழுமையாகவோ, அல்லது அதில் சுவையான ஒரு பகுதியையோ விளக்கமாக எடுத்து உரைக்கும் விதம் தனித்துவமானது.இவரின் முதல் இரு கதைகளையும் வாசிக்கும்போது நான் முற்றிலுமாக ஒரு புனைகதையினை வாசிக்கிறேன் என்ற உணர்விலிருந்து பிரிக்கப்பட்டு, எழுதப்பட்டிருக்கும் ஒரு வரலாற்றைப் படிக்கிறேன் என்ற உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன்.

மேலும் படிக்க ...

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுப் பெயர் மாற்றம் - 'அ,முத்துலிங்கம் இயல் விருது'!

விவரங்கள்
- வ.ந.கி -
இலக்கியம்
05 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேற்று நடந்த இயல்விருது 2024 நிகழ்வில் ஒரு முக்கியமான அறிவிப்பினை ஆரம்பத்தில் சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் விடுத்திருந்தார். அது இவ்வாண்டிலிருந்து தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கும் இயல் விருது , அ.முத்துலிங்கம் இயல் விருது' என்றழைக்கப்படும்.

இன்னுமொரு விடயமும் முக்கியமானது. அதனைத் தமிழ் இலக்கியத் தோட்டத்தை உருவாக்கியவர்களில் பிரதானமானவரான எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஆற்றிய உரையின் மூலம் அறிந்தேன். அவர் தான் இவ்வாண்டிலிருந்து தமிழ் இலக்கியத் தோட்டச் செயற்பாடுகளிலிருந்து ஓய்வு பெறுவதாகக் குறிப்பிட்டார். இயல்விருது மேல் தமிழக இலக்கிய ஆளுமையாளர்கள் பலருக்கும் ஆர்வம் இருப்பதற்குரிய காரணங்களில் முக்கியமானது அதன் பின்னால் இருக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ஈடுபாடும், பங்களிப்பும்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் பற்றியதோர் அறிமுகம்! - தமிழ் விக்கி -

விவரங்கள்
- தமிழ் விக்கி -
இலக்கியம்
05 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                    - எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் -

இம்முறை கனடாத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2024ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றவர்களில் ஒருவர் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். கவிஞராகி அறிமுகமாகி நாவலாசிரியராக உருமாறியவர்.  இவரது கானல்நதி, வெளியேற்றம்,  குள்ளச்சித்தன் சரித்திரம் ,பயணக்கதை , மணல் கேணி ஆகிய நாவல்கள் முக்கியமானவை.  வித்தியாசமான கதை சொல்லலில் நகர்பவை. அவரது தேடல் மிக்க நெஞ்சின் உணர்வுகளை வெளிப்படுத்துபவை.அவரது ஏதாவதொரு நாவலொன்றினை வாசித்தால்,ஏனைய் நாவல்களையும் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்துபவை. 

யுவன் சந்திரசேகரின் நாவல்கள் பற்றிய் அறிமுகத்தை தமிழ் விக்கியில் வெளியான எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் பற்றிய அறிமுகக் குறிப்பு தருகின்றது.  அக்குறிப்பினை இங்கு பகிர்ந்து கொள்கின்றோம்.

டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG


தமிழ் விக்கி - யுவன் சந்திரசேகர்

(பிறப்பு: டிசம்பர் 14, 1961) தமிழ் எழுத்தாளர், கவிஞர். பின்நவீனத்துவ அழகியல் கூறுகளைகொண்டு எழுதிய முக்கியமான படைப்பாளி. எம்.யுவன் என்ற பெயரில் கவிதை எழுதினார். மாற்றுமெய்மை என யுவன் சந்திரசேகர் வரையறை செய்யும் ஒருவகை மாய யதார்த்தத்தை அவருடைய படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

பிறப்பு, கல்வி

ஆர். சந்திரசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட யுவன் சந்திரசேகர் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள கரட்டுப்பட்டி என்ற கிராமத்தில் எம்.எஸ். ராமநாதன் - பி.எஸ். பர்வதம் அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 14, 1961-ல் பிறந்தார்.

மேலும் படிக்க ...

குறுந்தொகையில் எண்வகை மெய்ப்பாடுகள் - ஒரு பார்வை! - முனைவர் P.K. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி(தன்னாட்சி), ஆம்பூர் 635802, திருப்பத்தூர் மாவட்டம் -

விவரங்கள்
- முனைவர் P.K. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி(தன்னாட்சி), ஆம்பூர் 635802, திருப்பத்தூர் மாவட்டம் -
ஆய்வு
04 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG

முன்னுரை

மனிதனின் மெய்யில் தோன்றும் சில உணர்வுகளை அவரவர்களின் செயல்பாடுகள் மூலமாகவும் குறிப்புகள் மூலம் அறியலாம்.பேச்சுமொழித் தோற்றத்திற்கு முன்பே மனிதன் தன் உள்ளத்து உணர்ச்சிகளை உடலைசைவுகளால் வெளிப்படுத்தினான். உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாக உடலின் மேல் தோன்றும் புறக்குறிகள் மெய்ப்பாடுகள் என அழைக்கப்பெறுகின்றன. மெய்யின் படுதல் மெய்ப்பாடு, அதாவது, உணர்ச்சி மெய்யில்(புற உடலில்) வெளிப்படுதல் மெய்ப்பாடு எனப்படும். உண்மைத் தோற்றம் உண்மை நிகழ்ச்சி, உண்மை நிலை என்றெல்லாம் பொருள் விளக்கம் பெறுகிறது. மெய்ப்பாடுகள் என்பவை மிகவும் நுண்மையானவை.அத்தகைய மெய்பப்பாடுகளை குறுந்தொகையில் மூலம் காணலாம்.

நகை

உள்ளத்தோடு தொடர்பு கொண்டு தோன்றும் சிரிப்பின் வெளிப்பாட்டை நகை என்பர். மெய்ப்பாடுகளில் இன்றை இளைஞர்கள் பெரிதும் ஏற்பது நகைச்சுவையே ஆகும். இத்தகைய சுவைமிகுந்த இலக்கியங்கள் அதிகம் பாடப்பட்டுள்ளது நமது தமிழிலக்கியத்திலேயே ஆகும். வாழ்வும் வளம் சேர்க்கும் கருத்துக்களைத் தரும் இலக்கியங்களைத் தேடிப் படித்து வாழ்வை வண்ணமையமாக மாற்ற வழிவகுக்கும் தமிழிலக்கியம். அவ்வாறு வழிவகைசெய்வதில் முதன்மையாக காணப்படுவது குறுந்தொகையாகும். அதில் நகையை ஆலங்குடிவங்கனார் மருதத்திணைப் பாடலில் விளக்குகிறார்

“கழனி மா அத்து விளைந்து உகுதீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித், தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவை போல ,
மேவன செய்யும், தன்புதல்வன் தாய்க்கே” (குறுந்தொகை பாடல் -8)

ஒருவன் தகுதிக்கு ஏற்ற செயல்களில் ஈடுபடல் வேண்டும் அதைவிட்டு தகுதியற்ற செயல்களில் ஈடுபடுவது நகைக்கு உரியது.

மேலும் படிக்க ...

என் முகநூற் பதிவொன்று: மறக்க முடியாத பெண்கள் கல்லூரி அதிபர்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



இவரை என்னால் மறக்க முடியாது. என் எழுத்துலக வாழ்க்கையில் இவருக்கும் நிச்சயம் ஒரு பங்குண்டு. நான் சிறுகதைகள் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து என் எழுத்துகளை அவதானித்து வந்தவர். என் அம்மாவின் நெருங்கிய சிநேகிதிகளில் ஒருவராகவிருந்தவர்.  அம்மா யாழ்ப்பாணம் வரும்போதெல்லாம் மறக்காமல் சென்று சந்திக்கும் அவரது சிநேகிதிகள் சிலரில் ஒருவர்.

நான் எழுதிய முதலாவது சிறுகதை நான் யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கையில் சிரித்திரன் சஞ்சிகையில் வெளியான 'சலனங்கள்'. அதிலிருந்து இவர் என் வாசகர்களில் ஒருவராகவே இருந்திருக்கின்றார். இவருக்கு எப்படி நான் அவரது சிநேகிதியின் மகன் என்பது தெரிந்திருக்கும்? அம்மா அவரைச் சந்திக்கையில் கூறியிருந்திருக்க வேண்டும். 

என் எழுத்துகள் ஈழநாடு பத்திரிகையில், ஏனைய பத்திரிகைகளில் வெளியானபோதெல்லாம் வாசித்திருக்கின்றார். என் தங்கைமார் மூவர் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள். அவர்களிடம் அவ்வப்போது என்னைப்பற்றி, என் எழுத்துலக முயற்சிகளைப்பற்றி விசாரிப்பார். ஊக்குவிக்கும் வகையில் ஆலோசனைகள் கூறுவார். 

மேலும் படிக்க ...

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் 'இருபத்து மூன்றாம் வயதில் பாரதி' பற்றி..- வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



- எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் பற்றிய , கணையாழி சஞ்சிகையின் அக்டோபர் 2025 இதழில் வெளியான எனது கட்டுரை.- 

பகுதி ஒன்று

தன் குறுகிய வாழ்வில் மகாகவி பாரதியின் சிந்தனை வளர்ச்சியை வெளிப்படுத்தும் அவரது எழுத்துகள் (கவிதைகள், கட்டுரைகள்) என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்குபவை.  அவரது எழுத்துகள் மானுட பருவங்களின் வளர்ச்சிக்கேற்ப அர்த்தங்களிலும் புது அர்த்தங்கள் தருபவை.  குழந்தைக்கும் பாரதியைப்பிடிக்கும்.  சிந்தனை முதிர்ச்சியுற்ற , தேடல்மிக்க முதிய மானுடருக்கும் பிடிக்கும்.  இருப்பை நன்கு உணர்ந்து கொண்ட , முதிர்ச்சியுற்ற சிந்தனையாற்றல் மிக்க ஒருவரின் எழுத்துகளுக்கே காலத்துடன் ஈடுகட்டி, இவ்விதம் எழுந்து நிற்கும் வல்லமை உண்டு. ஏனைய ஒற்றைப்பரிமாணம் மிக்க தட்டை எழுத்துகள் மானுடப் பருவமொன்றுடன் தேங்கி, அப்பருவத்துக்குரிய அழியாக கோலங்களாக நிலைத்து நின்றுவிடும் பண்பு மிக்கவை. ஓர் எழுத்தாளராக, தேசிய, மானுட வர்க்க . சமூக விடுதலைப் போராளியாக அவர்தம் ஆளுமையின் பரிணாம வளர்ச்சியினைச் சாத்தியமாக்கியவை எவை, சாத்தியமாக்கிய ஆளுமைகள் எவர் என்ற் கேள்விகள் அடிக்கடி எனக்குள் எழுவதுண்டு.  

அண்மையில் பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி , நூலுருப்பெற்ற 'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின்  ' 23ஆம் வயதில்  பாரதி' (23 - 24ஆம் வயதில் பாரதி, இருபத்து நான்காம் வயதில் பாரதி, இருபத்து மூன்றாம் வயதில் பாரதி, '23-24 வயதில் பாரதி : வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் - கட்டுரையும்' என்னும் தலைப்புகளில் பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளை உள்ளடக்கிய நெடுங்கட்டுரை) கட்டுரையில் இக்கேள்விகளுக்கான சில  பதில்கள் இருப்பதை வாசித்தபோது அறிய முடிந்தது. இந்நெடுங் கட்டுரை ஜோதிகுமாரின் தர்க்கச்சிறப்பு மிக்க சிந்தனை முதிர்ச்சியின் வெளிப்பாடு என்பதைக் கட்டுரையை வாசிக்கும் எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.  பாரதியின் அனைவராலும் அறியப்பட்ட அவரது ஆளுமையின் அடிப்படைக்கூறுகளைந் நிர்ணயிக்கும் முக்கிய அவரது வயதாக 23 - 24 ஐக் குறிப்பிடலாம் என்பதை ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கின்றது இக்கட்டுரை. கூடவே அப்பருவத்தில் அவரது ஆளுமையில் , சிந்தனையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களைக் கவனத்திலெடுத்து ஆராய்கின்றது.

மேலும் படிக்க ...

இந்தியப் பயணத்தொடர் (2) : காஷ்மீர் செல்லும் முன்…டெல்லி தரிசனங்கள் - நடேசன். -

விவரங்கள்
- நடேசன். -
பயணங்கள்
01 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                 - மொஹெஞ்சதாரோவில்  நடனமாடும் செப்புச் சிலை -


காஷ்மீர் பயணத்தைத் தொடங்கும் முன், நாங்கள் மிகப் பல முறை யோசித்தோம். பயண முகவரிடம் எங்களுடைய சந்தேகங்களை வெளிப்படுத்தினோம். அவர் கூறிய பதில் நமக்குக் கொஞ்சம் நிம்மதியைத் தந்தது:

“இதுவரை நிகழ்ந்த எல்லா தாக்குதல்களும் இந்திய ராணுவத்திற்கே எதிரானவை . உல்லாசப் பயணிகள் எப்போதும் பாதுகாப்பாக இருந்துள்ளனர். காஷ்மீரின் பொருளாதாரம், விவசாயத்திற்கு அடுத்ததாக உல்லாசப் பயணமே! நீங்கள் பயப்படத் தேவையில்லை. ”

இந்தியப் பயணத்தின் தொடக்கம்

அந்த நம்பிக்கையுடன், நாங்கள் இந்தியப் பயணத்தைத் தொடங்கினோம்.

புதுடெல்லி விமான நிலையம் வந்ததும், வழக்கமான விசா, சுங்கச் சோதனைகளை அரைமணி நேரத்துக்குள் கடந்து வெளியே வந்துவிட்டோம்.

நான் சிந்தித்தேன்:

“இது அவுஸ்திரேலியப் பாஸ்போர்ட்டின் சக்தியா? அல்லது இந்தியா இப்போது மாற்றமடைந்துவிட்டதா?”

நண்பர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்பாகவே டெல்கி சென்றிருந்ததால்  திட்டமிட்டிருந்த லக்ஷ்மி நாராயணன் கோயிலுக்குச் சென்றோம்.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் தாரை! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -
ஆய்வு
01 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* 'டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - VNG -

முன்னுரை

தாரை என்ற சொல்லுக்குக் ’கண்ணின் மணி’ என்று பொருள் தருகிறது திவாகரம்.தாரை, கிட்கிந்தை நாட்டின் வானரகுல அரசன் வாலியின் மனைவி.சுக்ரீவனுக்குத் துணையாக இராமன் வந்துள்ளதையும், உன் உயிரை எடுப்பதற்காகவே அவன் வந்துள்ளான் என்று நம்மீது அன்புடையவர்கள் கூறினர் என்று சொன்னாள். இளையபெருமாள் கோபத்துடன் வருவதைக்கண்டு, தவறு செய்த வானரர்களைக் கடிந்து பேசிவிட்டு, தானே நேராக இலட்சுமணனிடன் சென்று இதமாகப்பேசி, அவன் கோபத்தைத் தணித்து, சுக்ரீவன் மீது பிழை இல்லை என்று புரியவைத்து, ஒரு ராசமாதாவாக நடந்துகொண்டாள். தாரையின் அழகு, புத்திசாலித்தனம்,அமைதி,தவறு செய்தவரிடத்து கண்டிக்கும் மனநிலை, வானர குலத்தைக்காக்க அவள் செய்யும் முயற்சி, வாலி இறந்ததால் கைம்மைத் தோற்றம் என்று பன்முகத்தன்மை கொண்ட தாரை குறித்துக் கம்பராமாயணம் கூறியுள்ள கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

தாரை

அமிழ்தம் போன்ற மூங்கிலின் இயல்பை தன்னிடத்தில் கொண்டவள். சுக்ரீவன் போருக்கு வா என்று அழைத்ததனால் வாலியின் வாயினின்றும் புகை உண்டாகக், கண்ணினின்றும் தோன்றுகின்ற தீயில் தன் கூந்தல் தீயப் பெற்றவளாய் போர் செய்வதற்குச் செல்லும் வாலியை இடையில் தடுத்து விளக்கினாள்.

வேறு பெருந்துணையைப் பெற்றமையைக் கூறல்

சுக்ரீவன் முன்னாளில் நின் தோள் வலிக்குத் தோற்று வருத்தமடைந்து ஓடினான். அத்தகையவன் இப்பொழுது பெரிய உடல் வன்மையைப் பெற்றானில்லை, அப்படி இருக்க, அவன் திரும்ப உன்னுடன் போர் செய்வதற்கு வந்த இச்செயலானது, வேறு பெருந்துணையைப் பெற்றமையாலாகும் என்று கூறினாள்.

துணையாக வந்தவன் இராமனே

வாலி தன்னுடன் யாரும் போரிட்டு வெல்ல முடியாது என்று பல காரணங்களைக் கூறிய போது தாரை, வாலியை நோக்கி அரசே, இராமன் என்பவன் அந்தச் சுக்ரீவனுக்கு இனிய உயிர்த் துணையாகப் பொருந்தி, உன் உயிரைப் பறிப்பதற்காக வந்துள்ளான் என்று நம்மிடம் அன்புடையவர்கள் கூறினார்கள் என்று சொன்னாள்.

மேலும் படிக்க ...

மரபுக் கவிதைகள் ! - நாங்குநேரி வாசஸ்ரீ்’-

விவரங்கள்
- நாங்குநேரி வாசஸ்ரீ்’-
கவிதை
01 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



1. நேரிசை வெண்பா (சிலேடை)
(இருபொருள் - பதினாறு வகைச் செல்வங்களும், ஈரும் பேனும்)

ஈரெட்டில் உண்டாம் அதுவது ஏதென
ஈரெட்டைத் தேர்ந்து தெளிவித்து – ஈரெட்டைப்
பாரெனச் சொன்ன பெரியோர்இல் இல்லெனின்
காரென வாழக்காண் பேன்.

2.  இன்னிசை வெண்பா

வாழ்வியல் தத்துவம்

காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிட
நட்டாற்றில் சிக்குண்ட நல்யானை போலவே
சட்டென்று மாறும் உலகத்து மாந்தரிடை
கட்டுண்டு வாழ்வோர் பலர் 

மேலும் படிக்க ...

அ.ந.கந்தசாமி (1924 -1968) நூற்றாண்டு நினைவு தினக்கட்டுரை! 'மதமாற்றம்' ! - அ.ந.கந்தசாமி -

விவரங்கள்
- அ.ந.கந்தசாமி -
அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
30 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                         - மதமாற்றம் நாடகக் காட்சி -

- இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' ஒரு மைல் கல். மதம் என்னும் கருத்தியலை அங்கதச் சுவையுடன் சாடும் வேறெந்த நாவலும் இலங்கையில் மேடையேறியதாக நான் அறியவில்லை. அப்படி இருந்தால் , அறிந்தவர்கள் அதனை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.
 
மதமாற்றம் முதலில் பேராசிரியர் கா.சிவத்தம்பியால் அறுபதுகளில் மேடையேற்றப்பட்டிருந்தாலும் அப்போது அது உரிய வரவேற்பைப் பெற்றதாகத் தெரியவில்லை. பின்னர் 1967இல் கொழும்பில் நாடகவியலாளர் லடீஸ் வீரமணியின் இயக்கத்தில், எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் தயாரிப்பில் , ஆனந்தி சூரியப்பிரகாசம், சில்லையூர் செல்வராசன் போன்ற பலரின் நடிப்பில் மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நான்கு தடவைகள் அடுத்தடுத்து மேடையேறிச் சாதனை நிலை நாட்டியது.
 
அப்போது அது பற்றி நாடகாசிரியர் அ.ந.கந்தசாமி செய்தி (2.7.1967)  பத்திரிகையில் சுய விமர்சனக் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். அதனையும், நாடகம் பற்றி வெளியான விமர்சனக் குறிப்புகளையும், நாடகம் நூலுருப்பெற்றபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசங்லிங்கன் எழுதிய முன்னுரையினையும் இங்கு நீங்கள் வாசிக்கலாம். - வ.ந.கி -


  'மதமாற்றம்' !  - அ.ந.கந்தசாமி -

சுய விமர்சனம் , எழுத்துத் துறைக்குப் புதிதல்ல. ஜவர்ஹலால் நேரு தன்னைப் பற்றித் தானே விமர்சனம் செய்து நேஷனல் ஹெரால்ட்ட் பத்திரிகையில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். பெர்னாட்ஷா தனது நாடகங்களுக்குத் தானே விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசம். அவர்கள் புனை பெயர்களுக்குள் ஒழிந்திருந்து எழுதினார்கள். நான் எனது சொந்தப் பெயரிலேயே இக்கட்டுரையை விளாசுகிறேன். காலஞ்சென்ற கல்கி அவர்களும் தமது சிருஷ்டியைப் பற்றித் தாமே விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'தியாக பூமி' சினிமாப் படத்தைப் பற்றி அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதி, நாடெங்கும் ஏற்படுத்திய பரபரப்பு எனக்கு ஞாபகமிருக்கிறது. 'கல்கி' கூடத் தமது சொந்தப் பெயரில் இவற்றை எழுதவில்லை. 'யமன்' என்ற புனை பெயருக்குள் புகுந்து கொண்டே அவர் இவற்றை எழுதியதாக நினைவு.

மேலும் படிக்க ...

அசை சிவதாசனின் 'குற்ற ஆலம்' சிறுகதைத்தொகுப்பு வெளியீடும் உரைகளும்!

விவரங்கள்
- தகவல்: பா.அ.ஜயகரன் (தேடகம்) --
நிகழ்வுகள்
30 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நடேசனின் 'நைல் நதிக்கரையோரம்! - சுனிதாகணேஸ் குமார் -

விவரங்கள்
- சுனிதாகணேஸ் குமார் -
நூல் அறிமுகம்
30 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

  'நைல் நதிக்கரையோரம்' -  நடேசன் | எதிர் வெளியீடு (152 பக்கங்கள்)

உலக வரலாற்றில் பல போர்களையும் பல படையெடுப்புகளையும் எதிர்கொண்ட எகிப்து தேசத்தை பற்றிய சிறிய வரலாற்று முன்னுரையுடன் “நைல் நதிக்கரையோரம்” என்ற பயணக் கட்டுரை மிக அருமையாக தொடங்குகிறது. இந்த புத்தகத்தின் எழுத்தாளர் நடேசன் அவருடைய குடும்பம் மற்றும் நண்பரின் குடும்பத்துடன் எகிப்து பயணம் மேற்கொண்ட குறிப்பு இது.

முதல் கட்டுரை எகிப்தின் தலைநகர் கெய்ரோவை பற்றியது. தற்போதைய எகிப்து இஸ்லாமியத்தையும் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதால் இஸ்லாமிய மதம் எகிப்திய வருகையிலிருந்து அதன் வரலாற்றை சிறுகுறிப்பாக கொடுத்திருக்கிறார்.

புராதன எகிப்தின் தலைநகரம் மெம்பிஸ், கிரேக்கர் ஆண்டபோது அலெக்ஸாண்டிரா மற்றும் பிற்காலத்தில் கெய்ரோ என எகிப்து நிறைய தலைநகரங்கள் கொண்டதாக இருந்திருக்கிறது. ஏ டி 969இல் எகிப்தை கைப்பற்றிய ருசினியர்கள் அல் – கயிரோ என்று பெயரிட்டு அது பின் கெய்ரோவாக திரிபடைந்துள்ளது. இங்கே வாழ்ந்த மக்கள் சுனி இஸ்லாமியர்கள் மற்றும் கொப்ரிக் கிறிஸ்தவர்கள். இவர்கள் எகிப்தை சிலுவை யுத்தம் வரை ஆண்டிருக்கிரார்கள். அதன் பிறகு சுமார் 200 ஆண்டுகள் நிகழ்ந்த சிலுவை போருக்கு பிறகு ஜெருசலத்தை ஐரோப்பியர்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றிய சலாதின் எகிப்தை சிரியாவின் ஒரு மாகாணம் ஆக்கினார். காகேசிய இனத்தை சார்ந்த மாமலுக்கர்கள் சில காலம் ஆண்டிருக்கிறார்கள். அடுத்து பிரான்ஸை சேர்ந்த நெப்போலியன், ஓட்டமான் பேரரசு (துருக்கியர்கள்) என எகிப்தின் வரலாறு சுருக்கமாக விளக்கி இருக்கிறார்.

ஐரோப்பாவிற்கும் ஆசியாவுக்கும்ம் இடையே நடந்த வணிகப்பாதை “சில்க் ரூட்”. பல்வேறு போர்களினால் இந்த பாதை அடைபட்ட போது பெரும்பாலான வாணிகம் எகிப்தின் மூலமாகத் தான் நடந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க ...

சிலப்பதிகாரத்தை தொடர்ந்து இராமாயணம். ஒஸ்ரேலிய நாடக ஆர்வலர்களுக்குப் பெரு விருந்து! - த. தில்லை, ஒஸ்ரேலியா -

விவரங்கள்
- த. தில்லை, ஒஸ்ரேலியா -
நிகழ்வுகள்
29 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாரதி பள்ளியின் இளைய தலைமுறையினர் மேடையேற்றிய சிலப்பதிகார நாடகத்தைப் பார்த்து மெய்மறந்த நாடக ஆர்வலர்களுள் நானும் ஒருவன். சிலப்பதிகாரக் காட்சிகளை தத்துரூபமாக எம் கண்முன்னே அரங்கேற்றி எம்மை எல்லாம் மெய்சிலிர்க்க வைத்த பெருமை பாரதி பள்ளியின் முதல்வர் திரு மாவை நித்தியானந்தன் அவர்களையே சாரும். சிலப்பதிகாரத்தின் பசுமையான நினைவுகளுடன் (ஒரு வருட காலத்துக்குள்) இராமாயண நாடகத்தை பார்க்கச் சென்றேன்.

இராமாயணத்தின் முதலாம் பாகம் இசை நாடகமாக அரங்கேறியது. நாடகத்தின் ஆரம்பக் கட்டத்தில் விசுவாமித்திர முனிவர் இராமனையும் இலக்குமணனையும் அழைத்துச் செல்கின்றார். விசுவாமித்திரராக வேடம் பூண்டு நடித்தவர் சினம் கொண்ட முனிவராக காட்சியளித்தார். இராமன் இலக்குமணனாக வந்தவர்களும் தமது கதாபாத்திரங்களை திறம்பட நடித்தனர் என்றால் மிகையாகாது.

மேலும் படிக்க ...

சிறுகதை -ஆச்சி பாய் இளைக்கிறா! - இந்து லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து லிங்கேஸ் -
சிறுகதை
28 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டிஜிட்டல் ஓவியத் தொழில்நுட்ப (Google Nano Banana)  உதவி - VNG

சுண்ணாம்புத்திண்ணையில் கால்கள் சுகமாய் நேராய்க்கிடக்கின்றன.காலங்களைக்கடந்துவந்த அனுபவங்கள் ஆச்சியின் பாதங்களில் தெரிகின்றன.அந்தப்பாதங்களில் விடைபெறுகின்ற வெயில் கொஞ்சிவிட்டுப்போகுது. உடலில் கொழுப்பென ஒன்றையும் காணமுடியாமல் பாலைவனப்பாறைகளாய் உடல் சதிராடுது. ஆச்சிக்கு எந்த ஆசைகளும் கிடையாது.

மாடி வீடு. கை நிறையக் காசு. பெட்டி நிரம்ப நகை. ஏன், சீட்டுக்காசைப் பற்றிய யோசனைகூடக்கிடையாது. ஆச்சியின் யோசினையெல்லாம் அந்தப்பெட்டியைப்பற்றித்தான். ஆசைப்பேரப்பிள்ளை கேட்டுவிட்டாள் என்பதற்காக அந்தப்பாசத்தை தனது கைகளால் கோர்த்துப்பின்னிப்பகிர்ந்துகொண்டிருக்கின்றா அந்த மூதாட்டி. அந்த அழகை ரசித்துக்கொண்டிருக்கின்றாள்.  அவரதுகடைசி மகளின் இரண்டாவது குட்டி. ஆச்சியைப்பார்க்கவேணும் என்று ஆசையாய்ப்பறந்துபோய் ஊரில நின்றவள் நாளைக்கு மீண்டும் ஜேர்மனிக்குத் திரும்பப்போறாள்.

போகும்போது "என்ர அம்மம்மாவுக்கு என்று நல்ல சாறி வாங்கினனான் அம்மா"என்று அந்த வடிவான 'முகதலை'யையும் விரித்துக்காட்டிச் சந்தோஷப்பட்டாள் தாரிணி.

இங்கிருந்து பறந்து, அந்தமண்ணில, ஆட்சியின்ர முத்தத்தில போய்நின்றவுடன் ஆச்சியை வெள்ளைக்கதிர்ச்சேலையுடன் பார்த்த அவளுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது..

மேலும் படிக்க ...

பைந்தமிழ்ச் சாரலின் மெய்நிகர் நிகழ்வு - 'எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
28 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                    - அ.ந.கந்தசாமி -

* அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி - வ.ந.கி

இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும், அவரது பன்முகத்திறமை காரணமாக அறிஞர் என்று அழைக்கப்பட்டவருமான எழுத்தாளர் 'அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம்' என்றொரு மெய்நிகர் வழியான நிகழ்வு மூலம் சிறப்பானதொரு நினைவு கூரலை நடாத்தியிருக்கிறது 'பைந்தமிழ்ச்சாரல்' அமைப்பு.  உடகவியலாளர்கள் ராஜ் குலராஜின் நெறிப்படுத்தலில், பவானி சற்குணச்செல்வம் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடந்த நிகழ்வின் முக்கியமான அம்சம் கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தனின் அ.ந.கந்தசாமி பற்றிய நீண்ட , விரிவான, முக்கியமான, ஆவணச்சிறப்பு மிக்க உரை. 

திரு. மு.நித்தியானந்தன் அவர்கள் அ.ந.க அவர்களைப் பதுளை ஊவாப் பாடசாலையில் மாணவனாக இருந்த சமயம் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தவர். அது பற்றிய தன் நினைவுகளை தனதுரையில் பகிர்ந்திருந்தார். மிகவும் முக்கியமான தகவல்கள் அவை. அ.ந.க அவர்களின் நாவல்கள், நாடகம், சிறுகதை, கவிதை  எனப் பல விடயங்களை உள்ளடக்கிய் அவரது உரை அவரது அ.ந.க.வின் படைப்புகள் மீதான வாசிப்பின் ஆழத்தை வெளிப்படுத்தின. உரை எழுத்து வடிவில் பதிவு செய்ய வேண்டியதொன்று. பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பி வைப்பாரென்று நம்புகின்றேன். நிச்சயம் பதிவுகளில் ஏனைய அ.ந.கந்தசாமியின் படைப்புகளுடன் அதுவும் ஆவணப்படுத்தப்படும்.

மேலும் படிக்க ...

சிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை
25 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI


கூட்டங்கூட்டமாகநின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘என்னையே இப்பிடி உலுக்கியிருக்கெண்டால் லக்கியாவின்ர குடும்பத்துக்கு எப்பிடியிருக்கும்?’ உள்ளங்கை வியர்த்துக்கொட்டுகிறது. பாடசாலைக்குள் காலடி எடுத்துவைத்தபோது, என் சப்பாத்துக்கள் போட்ட சத்தத்தைவிட என் இதயம் அதிக சத்தத்தில் அலறுகின்றது. யார், யார் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பீதி கடந்துசெல்வோரை நிமிர்ந்து பார்க்கவிடாமல் என்னைத் தடுக்கிறது.

“Instagram, twitter எண்டு எல்லாத்திலும் படம்போடுற, கருத்திடுற வேலை எல்லாத்தையும் நிப்பாட்டிப்போடு! ஆர் என்ன சொன்னாலும் சொல்லிப்போட்டுப் போகட்டும். பள்ளிக்கூடம் போறனா, வாறனா எண்டிருக்கவேணும். படிப்பைத்தவிர வேறையொண்டும் உன்ரை வேலையில்லை, விளங்கிச்சுத்தானே?” விடிந்ததிலிருந்து குறைந்தது ஐஞ்சு தடவையாவது அம்மா சொல்லியிருப்பா.

‘பீற்றரைப் பாத்தால், கொலைசெய்வான், அதுவும் துடிக்கத்துடிக்கக் கத்தியாலை வெட்டிக்கொலைசெய்வான் எண்டு சொல்லேலுமே?’ மீளமீள எனக்கு அதே நினைப்பாகவிருக்கிறது.

இலக்கியாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடியிருக்கிறோம். அவளின் படம் மேடையின் கரையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பப் பாடசாலை graduation உடுப்பில், தடித்த உதடுகள் மெல்லப் பிரிந்த புன்சிரிப்பும், இரு தோள்களிலும் படர்ந்திருந்த சுருட்டைத் தலைமயிருமாக இலக்கியா மிக அழகாக இருக்கிறாள்.

“நேற்றுவரை எங்களோடை இருந்த லக்கியா இண்டைக்கு உயிரோடை இல்லை எண்ட செய்தி எங்கள் எல்லாரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கு. உங்கடை சக மாணவி ஒருத்தி கொடூரமாய்க் கொலைசெய்யப்பட்டிருக்கிறா. கோரமான இந்தச் செய்தி தரக்கூடிய மன அழுத்தத்தையும் சோகத்தையும் சமாளிக்கிறது லேசான விஷயமில்லை.

இதைக் கடந்துசெல்கிறதுக்கு ஏதாவது உதவி தேவைப்படுறவை தயவுசெய்து எங்கட கவுன்சிலர் மிசிஸ். ஜோனோடை கதையுங்கோ. லக்கியான்ரையும் பீற்றரின்ரையும் குடும்பங்களுக்கு எங்கடை ஆழ்ந்த அனுதாபங்களைச் சொல்லுறதைத்தவிர வேறை என்னத்தைச் செய்யலாமெண்டு எங்களுக்கும் தெரியேல்லை.

இப்பிடியான கோரச் செயல்களின் விளைவுகள் எங்கட முழுச் சமூகத்தையும் பாதிக்குது…

மேலும் படிக்க ...

'லெப்ரோ'வும் மு.நித்தியானந்தனும் தமிழ் அரசியலும்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
24 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நெருக்கடி மிகுந்த இன்றைய காலப்பகுதியில், ரஷ்ய வெளிநாட்டு மந்திரியான, ‘லெப்ரோ’ என்ற மனிதரின் முக்கியத்துவம் பல மடங்குப் பெரிதாகின்றது. இதன் காரணமாகவே, பூமியில் வாழும், அரசியல் ஞானம் மிகுந்த ஜீவராசிகள் ஒவ்வொன்றும் இம்மனிதரை, தத்தம் பார்வையில், பார்க்க விழைவது இயல்பானதே. முக்கியமாக, உலகு இன்று வரலாறு காணாத இழுபறிகளுக்குள் சிக்கியுள்ள இந்நேரம், இது, பொதுவானதே. இதற்கு திரு. மு.நித்தியானந்தன் அவர்களும் விதிவிலக்கானவர் அல்ல என்பதனை, அவரது வீரகேசரிக் கட்டுரை வெளிப்படுத்துகின்றது.

ii

ஒருமுனை ஒழுங்கில் இருந்து, இன்று, பல்முனை உலக ஒழுங்கை நோக்கி உலகுப் பயணப்பட்டுக் கொண்டிருப்பதாய்க் கூறப்படுகின்றது. இவ் இழுபறி, வடக்குக்கும், தெற்குக்குமான இழுபறி என்றும் வர்ணிக்கப்படுகின்றது. அதாவது, அமெரிக்காவின் தலைமையில் காணக்கிட்டும் ஓர் ஐரோப்பிய யூனியனின் இழுபறி, தூய வெள்ளை நிறத்தவருக்கும், சீன-ரஷ்ய தலைமையிலான தூய வெள்ளை நிறம் அல்லாத அல்லது கறுப்பு அல்லது மாநிறத்தவர்களுக்கும் இடையே நடக்கும் இழுபறி என வரையறுக்கப்படுகின்றது. ஆனால், இது ஒரு பல்முனை ஒழுங்குக்கான முயற்சி அல்லது இதுவே இன்று வடக்கின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான முயற்சி என்றும் கூறப்படுகின்றது.

iii

சீனத்தின், SHELONG விண்வெளி விமானம், இப்போது அமெரிக்காவின் X-37B விண்வெளி விமானத்துக்குப் போட்டியாகக் குதித்துள்ளது என்றும், இது விண்வெளியில் இருக்கும் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யும் மர்ம சாகசத்தில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் உலாவுகின்றன. இச்செய்திகளில் உண்மையும் இருக்கலாம். பொய்யும் இருக்கலாம். ஆனால், விண்வெளி ஆதிக்கத்துக்காக ஓர் உக்கிரப் போர் இன்று ஆரம்பமாகி உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இதனாலேயே, இவ் உக்கிரப் போரினால் உந்தப்பட்ட நாடுகள், ‘நாளும்’ தத்தமது செய்மதிகளை விண்வெளியில் நிலை நிறுத்தத் தெண்டித்து வருவது இன்றைய நடைமுறையாகின்றது.

மேலும் படிக்க ...

தமிழக அரசியல் ஒரு பார்வை! - நந்திவர்மப் பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப் பல்லவன் -
அரசியல்
23 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல என்னும் வகையில் தன் திரைப்படங்களில்  திமுகவுக்காக எம்ஜிஆர் பிர்ச்சாரம் செய்து  வ்ந்தார். திமுகவின் சின்னமான உதயசூரியன், அதன் கொடி வர்ணங்களை மிகவும் திறமையாக அவர் தன் படங்களில் உள்ளடக்கியதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் திமுகவை எடுத்துச் சென்றார். தவிர அவரது வசீகரம் மிக்க ஆளுமை, திரைப்படக்கதாபாத்திரத்தின் ஆளுமைப்பண்பு, அவரது ஈகைச் செயற்பாடுகள், ஆரோக்கியமான கருத்துகளை விதைக்கும் பாடல்கள், இவை தவிர தமிழர் வரலாற்றுடன் , கலைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கும் காதல், வீரம், அறம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அவரது திரைப்படங்கள் இவையெல்லாம் எம்ஜிரை மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்தன. 

இவ்வாறானதொரு நிலையில் எம்ஜிஆர் சுடப்பட்டபோது மக்கள் அதிர்ச்சி அடைந்ததைப்போல், எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலக்கப்பட்டபோதும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏனென்றால் மக்களைப்பொறுத்தவரையில் எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல. எம்ஜிஆரை விலக்கியதானது அவருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றே மக்கள் கருதினார்கள். அதனால் எம்ஜிஆர் மீது அநுதாபம் பொங்கியெழுந்தது. அந்த அநுதாபமும், அவர் மீதான தனிப்பட்ட விருப்பமும் இணையவே அவருக்கு வெற்றி இலகுவானது. அவர் இருந்தவரை மக்கள் அவரையே ஆட்சிக்கட்டில் இருத்தினார்கள்.

மேலும் படிக்க ...

இந்தியப் பயணத்தொடர் (1) பஹல்காம் (Pahalgam) நினைவுகள்! - நடேசன். -

விவரங்கள்
- நடேசன். -
பயணங்கள்
23 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

2025 சித்திரை 22, புதன்கிழமை

மதியத்துக்குப் பின்பாக , பஹல்காம்  நகரின் மத்தியப் பகுதியில் வாகன நெரிசலில் நாங்கள் வந்த வாகனம் நத்தையைப் போல் மெதுவாக நகர்ந்தது. அச்சமயம், பாதையோரத்தில் ஒருவரின் குரலும் சைகைகளும் என் கவனத்தை ஈர்த்தன. உயரமான பெண் ஒருவர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது வெள்ளைச் சட்டை, சேற்றில் உழுது வீடு வந்த விவசாயியின் தோற்றத்தை நினைவூட்டியது. அந்தக் காட்சி என்னுள் ஒரு கலவர உணர்வை உருவாக்கியது— இங்கு ஏதோ அசாதாரணமான ஒன்று நடந்திருக்க வேண்டும்.

வழியோரமாக, ஒரு காவல்துறை அதிகாரி எதிரே நின்ற வாகனத்தின் கண்ணாடியை லத்தியால் தாக்கினார். சாரதி எதையோ விளக்க முயன்றபோதும், அவர் மீண்டும் வந்து அவரது முகத்தையே தடியால் அடித்தார். அந்தக் கோரக் காட்சியைச் சகிக்க முடியாமல் நான் முகத்தை வாகனத்துள் திருப்பிக்கொண்டேன்.

சில நிமிடங்களில் நாங்கள் ஹோட்டலுக்குச் சென்றடைந்தோம். பூட்டியிருந்த இரும்புக்கதவுகள் எங்கள் வருகைக்காகத் திறக்கப்பட்டன. உள்ளே நுழைந்ததும், வரவேற்பறையில் நின்றிருந்த பெண் ஒருவர் உடனே கவனத்தை ஈர்த்தார்—அவரது உடை ரத்தத்தில் தோய்ந்திருந்தது. இரு சிறிய குழந்தைகளைப் பிடித்தவாறு, திகைப்பும் துயரமும் கலந்து, “எனது கணவரைக் காணவில்லை!” என்று ஆங்கிலத்தில் அழுதுகொண்டிருந்தார்.

அவரது ஆங்கிலத்தில் ஒரு மலையாளச் சாயல் இருந்தது. அவளது முழுமையான கூற்றுகள் எங்களுக்குப் புரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது—அவளுக்கு நாம் எந்தவிதமான உதவியும் செய்ய முடியாது.

அழகாக அலங்கரிக்கப்பட்ட அந்த வரவேற்பறையில், அந்தக் காட்சியின் பயங்கரத்தன்மை எங்கள் மூச்சை முட்டியது. நாங்கள் அமைதியாகப் பார்போது,  உடையிலிருந்த ரத்தக் கறைகள் கழுவ, அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளியின் நீலாவணன் சிறப்பிதழ் அறிமுக விழா! - தகவல் - அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
22 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

பாத்திமுத்து சித்தீக்கின் ‘ஒற்றைப் பறவை சிறுகதை வாயிலாக வெளிப்படும் சமூக; நிலைகள்! - முனைவர் கோ. வெங்கடகிருஷ்ணன், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை , இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி. -

விவரங்கள்
- முனைவர் கோ. வெங்கடகிருஷ்ணன், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை , இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி. -
ஆய்வு
22 செப்டம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

முன்னுரை

இசுலாமியத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் பாத்திமுத்து சித்தீக் அவர்கள். இந்நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். இவருடைய எழுத்துக்கள் எளிமையானவை கருத்துக்கள் புதுமையானவை. இவருடைய எழுத்துக்களில் சமூகத்தில் நிலவும் அவலங்கள் முரண்பாடுகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். பாத்திமுத்து சித்தீக்கின் ‘ஒற்றைப் பறவை’ சிறுகதைகள் வழி அறியலாகும் சமூக நிலைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலக்கியமும்; சமூகமும்

மனிதர்களின் அறிவுத் தோட்டத்தின் களமாக இயற்கை இருப்பது போலவே அவர்கள் கூடிவாழும் சமூக அமைப்பும் ஒரு களமாக இருந்து வருகிறது. அந்தச் சமூக அமைப்பு குடும்பம்,மதம், அரசு, பொருளாதார உற்பத்தி, கலை, இலக்கியம், நாடு, மொழி, இனம் முதலிய பல உட்கூறுகளால் ஆனது.

இந்த உட்கூறுகளுக்கிடையே நிலவுகின்ற உறவுகளையும் அந்த உறவுகள் எந்த அடிப்படையில் இயங்குகின்றன என்பதையும் நெறிப்படுத்தப்பட்ட முறையில் வெளிக்கொணருவதுதான் சமூக இலக்கியமாகும்.

“மனிதர் நடத்தை அல்லது சமுதாய நிகழ்வுகளை அறிவார்ந்த முறையில் விளக்கி புதிய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியே சமூக இலக்கியமாகும்” என்பார் பாலின் யங் என்னும் சமூக இலக்கிய அறிஞர்.

“சமுதாயச் சூழ்நிலைகளில் மனித சமுதாயத்தை ஆராய்ந்து அதன் ஒழுங்குமுறை, நிறுவனங்கள், அறநெறி ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவுவதே சமூக இலக்கியமாகும்” என்பார் ரம்மல் என்னும் சமூக இலக்கிய ஆய்வாளர். இதனடிப்படையில் பாத்திமுத்து சித்தீக்கின் ஒற்றைப் பறவை சிறுகதைகள் வழி அறியலாகும் சமூக நிலைகளை ஆராய்வோம்.

பிள்ளை பேற்றிற்காக தர்கா வழிபாடு

இசுலாத்தில் ஒரு சில சாரார் இடையே தர்கா வழிபாடு இருந்து வந்தமையைப் பாத்திமுத்து சித்தீக் அவர்கள் தம் ‘ஒற்றைப்பறவை’ சிறுகதையின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு என்ன தேவையோ அதைத் தர்காவிற்குச் சென்று நேர்ந்து கொள்வதையும் தன் கதையின் வாயிலாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். பிள்ளைப் பேற்றிற்கான தர்கா வழிபாட்டை பின்வரும் கூற்றின் வாயிலாக அறியலாம்.

“இந்த வருஷம் கூட கோட்டைப்பட்டினம் ராவுத்தர் சாயபு தர்காவுக்கு நேர்ந்துகிட்டு இருக்கேன். பிள்ளை பொறந்தா அம்மியும் குழவியும் வாங்கிப் போடுகிறதா..” மனதில் பல்கீஸ் நன்னி நேர்ந்திருந்ததை வெளியே அறிவிப்புச் செய்து விட்டது.

“நன்னி, ஒன்னு கேக்குறேன்னு… கோவிச்சுக்காதே… போனவருஷம் நாகூர் காதர் அவ்லியா தர்காவுக்கு, கந்தூரி ஆக்குறதா நேர்ந்திருந்தியே அது கான்ஸலாயிருச்சா.. முத்துப்பேட்டை சேக்தாவூது அவ்லியா, கமுதி சகுபர் சாதிக் அவ்லியா தர்காவுக்குப் போய் இரண்டு, மூன்று நாளைக்கு டேரா போடுறேண்டு நேர்ந்தியே”1 என்ற கூற்றின் வாயிலாக பிள்ளைப் பேற்றிற்காக தர்கா வழிபாடு இருந்தமை அறியப்படுகின்றது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. மாக்சிம் கார்க்கியின் தாய்! - வ.ந.கிரிதரன் -
  2. வாசிப்பும் யோசிப்பும் : குந்தவையின் 'மாயை' - வ.ந.கிரிதரன் -
  3. கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் எழுதிய கடிதமொன்று - கொழும்புத் தமிழ் நாடகங்களைப்பற்றிய எனது நினைவுகள் ! - கே.எஸ்.சிவகுமாரன் -
  4. நெடுங்கவிதைகள் இரண்டு : சமர்ப்பணம்! & ஞாபகமழை! -இந்து.லிங்கேஸ் -
  5. யாழ் ' எங்கட புத்தகங்கள் இல்லத்தில்' இலக்கியமாலை! - தகவல்- வி.ரி.இளங்கோவன் -
  6. மூலதனக் குவியல்களுடன் உலகு அடைந்திருக்கக்கூடிய மாற்றங்கள்…(பகுதி 2) - ஜோதிகுமார் -
  7. எனது வாசிப்பு அநுபவம்: எழுத்தாளர்: ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் சிறுகதைத்தொகுப்பு 'நெய்தல்நடை' - பவானி சற்குணசெல்வம், நெதர்லாந்து -
  8. முற்றாத இரவில் முற்றாத காதலால் வாடும் மானுட உள்ளங்கள்! - வ.ந.கி -
  9. மூலதனக் குவியல்களுடன் உலகு அடைந்திருக்கக்கூடிய மாற்றங்கள்…(பகுதி 1) - ஜோதிகுமார் -
  10. உயிர் சுருட்டி - ஒரு நிலவியல் வரைபடம்! - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
  11. சிறுகதை : எய்யப்படும் அம்புகள் - கடல்புத்திரன் -
  12. துரைராஜா கணேஷ்வரன் கவிதைகள்!
  13. மானுட அவதானிப்பும், சமுதாயப் பிரக்ஞையும் மிக்க எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் கதைகள் .. - வ.ந.கிரிதரன் -
  14. 'பதிவு'களில் அன்று - எழுத்தாளர் திலகபாமாவின் (சிவகாசி) நிகழ்வுக் குறிப்புகள்!
பக்கம் 1 / 114
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி