பதிவுகள் முகப்பு

நனவிடை தோய்தல்: நினைவில் நிற்கும் தீபாவளி நினைவுகள்! - இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து.லிங்கேஸ் -
இலக்கியம்
21 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-ஊர் களைகட்டும்.மண் வாசனை  வாயூறும். அதுவே எங்களின் அன்றைய தீபாவளி! அம்மாவை இப்பவே அன்பாக நச்சரிக்கத் தொடங்கினால்தான் நான் விரும்பியது நடக்கும்."அம்மா இந்த முறைத் தீபாவளிக்கு 

புதுசா  'ரௌச'ரும் 'சேட்டு'ம் வாங்கவேணும் எப்ப காசு தருவீங்கள்?'சேட்‘எப்பவும் வாங்கலாம்.ஆனால்,ரௌசருக்கு துணியை இப்பவே வாங்கிக் கொடுத்தால்தான் ரெயிலர் தச்சுத் தருவார் அம்மா ".

' அப்பா மத்தியானம் சாப்பாட்டுக்கு வாற நேரத்தில,அதுவும் ஈர அடுப்பில கறியை வைச்சிட்டு அவதிப்பட்டு ஓடிக்கொண்டு நான் இருக்கேக்க,இப்ப என்னால முடிவு சொல்லேலாது.கொஞ்சம் பொறு'.

" என்னம்மா,நான் என்ன கேட்டாலும்,  உங்களுக்கு எப்பவும் அவசரம்தான்!கடைசியில நான்தான் ரெயிலர் தச்சு முடிக்க மட்டும்,அங்கேயே இருந்து சண்டைபிடிச்சு,அவரும் தச்சு முடிக்க இரவாகிவிடும்.அதற்குப்பிறகு வீடுவந்து சேர இரவு பத்து மணியாகிவிடும்.இப்படித்தான் போனவருசமும் "செல்ரன்"கடத்தி,கடத்தி என்ர ரௌசர கடைசியில அவர் தைச்சு முடிக்க நல்லா இருண்டுட்டுது."

' சரிசரி.எனக்கு எல்லாம் விளங்குது.அந்த மனிசன் நல்ல பசியில வரும்.கொஞ்சம் பொறுத்துக்கொள்.அவர் வந்து போன பிறகு எல்லாருமா சாப்பிட்டிட்டு கதைப்பம்.இந்தா உனக்குப் பிடிக்குமெண்டு இப்ப வடிச்ச கஞ்சியிருக்கு.அந்தச் சிரட்டையை எடுத்து,தலைப்பாலும் பிளிஞ்சு வைச்சிருக்கிறன்.அதிலயும் கொஞ்சத்தை விட்டுக்குடி'.

மேலும் படிக்க ...

என்னைக் கவர்ந்த வானொலி ஊடகவியலாளர் செந்தில்நாதனின் 'சொல்லாடல்' - 'கவரிமா' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
21 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் தொடர்ச்சியாகச் CMR 101.3 FM தமிழ் வானொலி நிகழ்ச்சியைக் கேட்பவன் அல்லன். ஆனால் ,அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது கேட்பதுண்டு. குறிப்பாகச் செந்தில்நாதனின் 'சொல்லாடல்' நிகழ்ச்சி என்னைக் கவர்ந்த ஒன்று. வெள்ளி இரவு 11 மணி தொடக்கம் நள்ளிரவு வரை நடக்கும் நிகழ்ச்சி. ஒரு சொல்லைப்பற்றிய பொதுவான விபரத்தைத் தந்து விட்டு , நேயர்களைக் இரண்டு கேள்வி கேட்க விடுவார்கள். நேயர்களின் கேள்விகள் மூலம் நிகழ்ச்சி முடியும் நேரத்தில் இறுதியாக வரும் நேயர்கள் பெரும்பாலும் விடையினை ஊகித்து  விடுவார்கள். 

இந்நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் பல தடவைகள் வேறு முக்கிய வேலை ஏதாவது குறுக்கிடும்.அதை முடித்து விட்டு வருவதற்குள் நிகழ்ச்சி முடிவுக்கு வந்திருக்கும். விடை எதுவாகவிருக்கும் என்று சிறிது நேரம் விடையை அறிய வேண்டிய ஆவலில் மனத்தைத் தவிக்க வைக்கும் நிகழ்ச்சி.

இச்சொல்லாடல் நிகழ்ச்சியில் பல தடவைகள்  அதிக பாவனையில் இல்லாத பழந்தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தும் வகையில் பல அரிய  பாவனையில் இல்லாத சொற்களைத் தேர்ந்தெடுத்திருப்பார் வானொலிக் கலைஞர் செந்தில்நாதன்.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் இராவணனும் கயிலாயமலையும்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
ஆய்வு
21 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

இராவணன், குபேரனுடன் போரிட்டு இலங்கை மற்றும் அவனுடைய புட்பகவிமானத்தையும் கைப்பற்றிக் கொண்டு அந்த விமானத்தில் ஏறி வெற்றிக் களிப்புடன் பறந்து வந்து கொண்டிருந்தான். அப்போது கயிலாயமலைக்கு அருகில் வரும்போது, நந்தியம்பெருமான் இராவணனிடம் இது சிவன் வாழும்பகுதி இங்கே பறக்கக்கூடாது என்று கூறினார். கோபம் கொண்ட இராவணன் சிவன்மேல் அதிக அளவு பக்தி கொண்டவன் என்றாலும், ஆணவத்தினால் அந்தக் கயிலாயமலை தனக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று எண்ணி, அதைப் பெயர்த்தெடுக்க முயன்றான். அதை அறிந்த சிவபெருமான் தன் கால் கட்டை விரலால் லேசாக அழுத்த, கைகளுடன் அவன் மலையின் கீழ் மாட்டிக் கொண்டான்.தன் தவறுஉணர்ந்த இராவணன் சாமகானம் பாட, அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு சந்திரகாசம் என்ற வாளும், ஆத்மலிங்கமும் பரிசளித்தார். சிவபெருமான் இருந்த மலையைப் பெயர்க்க எண்ணியதே தவறு. அந்த முயற்சியால் அவன் பல்லாண்டு காலமாகத் துன்பப்பட்டான். இறைவனின் பெருங் கருணையால் உயிரும் வாளும், ஆத்மலிங்கமும் பெற்றான் என்றாலும், ஊருக்குள் வந்து தான் கயிலாயமலையைப் பெயர்த்தேன் அதனை மெச்சியே சிவபெருமான் வாளும், ஆத்மலிங்கமும் தந்தார் என்று கூறி அனைவரையும் நம்ப வைத்தான்.என்ன நடந்தாலும் அதனை மறைத்து இது தான் நடந்தது என்றே சொன்னால் மக்கள் நம்புவர் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.கம்பராமாயணத்தில் இராவணனும் கயிலாயமலையும் என்பதைக் குறித்து ஆராய்வோம்.

கலித்தொகை

இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன் உமையாளுடன் கயிலையிலே வீற்றிருந்தான். அப்பொழுது 10 தலைகளை உடையவனான அரக்கர்களின் தலைவரான இராவணன் காப்புப் பொழியும் தன் வலிமையான கைகளை மலையின் கீழே புகுத்தி அதை எடுக்க முயன்றான். எடுக்க முடியவில்லை மலையின் கீழ் மாட்டிக் கொண்டு வருந்தினார்.

மேலும் படிக்க ...

திருப்பரங்குன்றம் முருகத்திருத்தலம்! - முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317, -

விவரங்கள்
- முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317, -
ஆய்வு
21 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


முன்னுரை

திருப்பரங்குன்ற திருமுருகத் திருத்தல வரலாறும் அதன் சிறப்பும் குறித்து இக்கட்டுரை விரிவாக ஆராயவுள்ளது. இதில் சங்க இலக்கியங்களில் திருபரங்குன்ற முருகன் திருத்தல வரலாற்று ஆதாரங்கள், கல்வெட்டுகளின் வழியான ஆதாரங்கள், வரலாற்று ஆய்வாளர்கள் முன் வைக்கும் தொல்லியல் ஆதாரங்கள் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்ற வரலாறு

திருப்பரங்குன்றம் சங்க இலக்கியங்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சியில், தளிமழை பொழியும் தண் பரங்குன்றில்(மதுரை.263) தண்பரங்குன்று என்று சுட்டப்படுகிறது . இக்குன்றம் முருகன் குடியிருந்த இடமாக அகநானூறு,

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து (அகம்.59)

எனும் அகப்பாடல்கள் மருதன் இளநாகனாரின் பாடல் சூரபன்மனையும் அவன் சுற்றத்தையும் தொலைத்த ஒளி பொருத்திய வேலை உடைய முருகன் தண்பரங்குன்றில் உறைவதாகவும் சந்தன மரங்கள் மிக்க அந்தக் குன்றை நல்லந்துவனார் பாடியுள்ளதாகவும் கூறகின்றது. எருக்காட்டூர் தாயங்கண்ணனாரால் பாடப்பட்டுள்ள,

பல்பொறி மஞ்சை வெல்கொடி உயரிய
ஒடியாவிழவின் நெடியோன் குன்றத்து (அகம்.149)

எனும் பாடலில் மதுரைக்கு மேற்கிலுள்ள பரங்குன்று மயில் கொடியினை உயர்த்திய நெடியோனான முருகப் பெருமானின் இடமென்றும் அங்கு விழாக்கள் நிறைந்திருந்தன என்றும் தெரிவிக்கிறது.

பரிபாடலில் இடம்பெற்றுள்ள செவ்வேளைப் பற்றிய எட்டுப் பாடல்களில் ஏழு பாடல்கள் பரங்குன்றை முருகனின் உறை விடமாகக் எடுத்துரைப்பதுடன் அவர் கோயில் மலைமேல் இருந்ததையும் அதற்கு மதுரையிலிருந்து மன்னரின் பரிவாரங்களுடன் மக்கள் வந்ததையும் மலையின்மீது இருந்த முருகக் கோயில் வளாகத்தில் காமவேள் படைக் கொட்டில் ஒத்த எழுதெழில் அம்பலம் இருந்ததை,

எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின் (பரி.28)

என்று உரைக்கின்றது. மேலும், குன்றத்துக் காட்சிகளையும் (பரி. செவ்வேள் 30-39), குன்றத்தின் சிறப்பியல்புகளையும் (40-50) விரிவாகப் பேசுகின்றது. திருப்பரங்குன்றத்தில் மக்கள் நிகழ்த்திய முருக வழிபாட்டு முறைகள் ஆகியனவும் சொல்லப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

நாங்குநேரி வாசஸ்ரீ் கவிதைகள் !

விவரங்கள்
நாங்குநேரி வாசஸ்ரீ்
கவிதை
19 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மொழிபெயர்ப்புக் கவிதை:  நிறைத்திடு! எனக்காக விளிம்புவரை கிண்ணத்தை 9Fill For Me a Brimming Bowl)
ஆங்கிலத்தில் - ஜான் கீற்ஸ் (John Keats) | தமிழாக்கம் - நாங்குநேரி வாசஸ்ரீ் 

நிரப்பிடு! விளிம்புவரை நன்கு கிண்ணத்தை
நிறைந்த அதனுள்ளே நுழைந்தமிழ எனதுயிர்
கலந்திடு! மருந்தைக் கட்டமைத்து முறையாய்
விலக்கிட விரட்டிட வென்மனம் பெண்ணவளை

வேட்கையைத் தூண்டும் வேண்டாத காமத்தை 
ஊட்டிடு ஓடைநீரின் ஊக்கமதாய் வேண்டாம்
ஆழுலகில் லீத்நீரை அருந்திடு அமரர்தம்
பாழுலக எண்ணம் பறந்தழிதல்போல் வேண்டும்

மேலும் படிக்க ...

தீபாவளித் திருநாள் சிறப்புடை நாளே ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
19 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தீயவை அகன்றால் நல்லவை மலரும்.
தீபா வளியின் தத்துவம் ஆகும்.
ஆணவ அரக்கன் அழிந்த நன்னாளே.
ஆனந்தத் தீபா வளியாய் ஆனது.

அதிகாலை அனைவரும் எழுந்துமே விடுவார்.
அக மகிழ்வுடனே நீராடி மகிழ்வார்.
புத்தாடை அணிந்து புத்துணர் வடைவார்.
அத்தனை மகிழ்ச்சியும் வந்ததாய் நினைப்பார்.

தீபா வளியில் தித்திப்பு நிறையும்.
திரும்பிய திசையெலாம் மத்தாப்புச் சிதறும்.
பட்டாசு சத்தம் பரவியே நிற்கும்.
குடும்பங்கள் எல்லாம் குதூகலம் கொள்ளும்.

தீபாவளித் திருநாள்  சிறப்புடை நாளே.
இருப்பாரும் மகிழ்வர் இல்லாரும் மகிழ்வர்.
அவரவர் ஆனந்தம் அவரவர்க்கு உரியதே.
அகமகிழ் வுறுவுதே அனைவர்க்கும் பொதுவே.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் மற்றும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர் தமிழினியை நினைவு கூர்வோம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


 ['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 

தமிழினி ஜெயக்குமாரனின் நினைவு தினம் அக்டோபர் 18.  அதனையொட்டி முகநூலில் முன்பு எழுதிய பதிவொன்றினையும், அதற்கு எழுதப்பட்ட எதிர்வினைகள் சிலவற்றையும் அவர் நினைவாக இங்கு பதிவு செய்கின்றேன். 

பெண் போராளியான தமிழினியை யாருமே, அவருடன் இணைந்து போராடியவர்கள் உட்பட , அவர் மதிப்பு வைத்திருந்த எழுத்தாளர்கள் உட்பட , எவருமே நினைவு கூர்வதில்லை. எழுத்தாளர் ஒருவர் மட்டும் புகழ்பெற்ற தமிழகச் சஞ்சிகையொன்றில் அவரை மிகவும் கீழ்த்தரமாகச் சித்திரித்து புனைகதை எழுதியிருந்தார். இது துரதிருஷ்ட்டமானது.
 
ஆனால் தமிழினி அவரது எழுத்துகளூடு நினைவு கூரப்படுவார். அவரது எழுத்துகள் நிலையானவை. அவரது எழுத்துகள் அவருடன் போராடி மறைந்த வீராங்கனைகளை நினைவு கூர்பவை. அவர் ஈடுபட்ட போராட்ட வரலாற்றை நினைவு கூர்பவை. காலத்தின் கட்டாயமான சுயவிமர்சனத்தைச் செய்பவை அவரது எழுத்துகள். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கவை. சுயவிமர்சனமில்லாமல் மானுட இருப்பு ஒருபோதுமே முன்னேற்றம் அடைவதில்லை. வரலாற்றுப் பாதையில் கடந்த காலம் பற்றிய சுய விமர்சனங்களே மானுடரை அடுத்த நிலைக்கு உயர்த்திச் செல்பவை. அவ்வகையில் வரலாற்றுப்பங்களிப்பைச் செய்பவை. வரலாற்று முக்கியத்துவம் மிக்கவை.
 
இப்பதிவு நானறிந்த எழுத்தாளரும், சமூக,அரசியற் செயற்பாட்டாளருமான தமிழினியை நினைவு கூர்பவை.

தமிழினிக்கும் எனக்குமிடையிலான தொடர்பு அரசியல்ரீதியிலானதல்ல. சக எழுத்தாளர்களுக்கிடையிலான தொடர்பு, இணைய இதழ் ஆசிரியருக்கும், எழுத்தாளருக்குமிடையிலான தொடர்பு. உண்மையில் அவருடன் தொடர்பு ஏற்பட்டதற்குக் காரணம் இணையம் மற்றும் முகநூலே. அவரது கணவர் ஜெயக்குமாரன் ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழுக்கு அறிமுகமானவர். அவரது ஆக்கங்கள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியிருக்கின்றன. முகநூலிலும் என் நண்பராக இருப்பவர். அவர்தான் தமிழினியின் கணவர் என்னும் விடயமே  தமிழினியின் மறைவுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.

தமிழினி ரொமிலா ஜெயன் என்னும் பெயரிலும் முகநூலில் கணக்கு வைத்திருந்தார். ஆனால் அது எனக்குத் தெரியாது. எனக்கும் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அந்தபெயர் எனக்கு அறிமுகமில்லாததால் நீண்ட காலமாக அந்த நட்பு அழைப்பினை ஏற்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. பின்னர் அந்தப்பெயரில் சிறுகதையொன்று 'அம்ருதா' (தமிழகம்) சஞ்சிகையில் வெளியான பின்னர்தான் அந்தப்பெயரில் கவனம் செலுத்தினேன். ரொமிலா ஜெயன் சக எழுத்தாளர்களிலொருவர் என்பது விளங்கியதால், அவரது நட்புக்கான அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தமிழினி தனது சொந்தப்பெயரிலேயே முகநூலில் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அப்பொழுதும் ரொமிலா ஜெயனும், தமிழினியும் ஒருவரே என்பது தெரிந்திருக்கவில்லை. அவரது மறைவுக்குப் பின்னரே இருவரும் ஒருவரே என்பதும் புரிந்தது.

மேலும் படிக்க ...

நெடுங்கதை - சுதந்திரபுரத்தில்.. (பகுதி 2) . - முல்லைஅமுதன் -

விவரங்கள்
- முல்லைஅமுதன் -
சிறுகதை
19 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana)  உதவி : VNG

2. 

அவளின் நினைவுமரம் துளிர்த்தது.

'சனியன்..சனியன்..' அம்மா புறுபுறுத்துக்கொண்டிருந்தாள்.

வழமையான நிகழ்வுதான்.

.மாமாவிற்குத் தான் பேச்சு விழுகுதுபோல..இண்டைக்கும் ஏதாவது சில்மிசம் செய்திருப்பார்..

மாமா பாவம்..அம்மாவின் கூடப்பிறந்த தம்பி.

பெயர் பாலசுப்பிரமணியம். பாலு என்றே யாவரும் அழைப்பார்கள்.

அவ்வளவாகப் படிக்கவில்லை.

எனினும் அவர் ஒரு தலையாகக் காதலித்த துளசி என்கிற பெண் தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று நினைத்தபடி குடித்துவிட்டு அவளின் வீட்டுக்கு முன் போய் நின்று சத்தமிட்டிருக்கிறார்.அவளால்தான் எல்லாம் என்று துளசியும் அவளது பெற்றோரால் தாக்கப்பட்டிருந்தாள்.

அவமானத்தால் அவளால் வெளியே வரவும் இல்லை..ஊர் கூடிய அவமானத்தில் துளசியின் பெற்றோர் ஊரை விட்டே போய்விடத் தீர்மானித்தார்கள்.எனினும் பாலு மாமாவின் மீதான கோபம் அதிகரிக்க ஒருநாள் இரவு தனியே குடித்துவிட்டு வரும் போது இரும்புக்கம்பியால் தாக்கியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க ...

பாஞ்சாலி சபதத்தில் வாழ்வியல் கூறுகள்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை(சுழற்சி – 2) ,குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -

விவரங்கள்
முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை(சுழற்சி – 2) ,குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
ஆய்வு
19 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


முன்னுரை

காலத்தைக் காட்டும் கண்ணாடியாகத் திகழ்வது இலக்கியங்கள் ஆகும். மனித வாழ்வியலுக்குத் தேவையான நல்லறங்களை இலக்கியங்கள் காட்டக் கூடியதாக அமைந்துள்ளது. வாழ்க்கை நெறிமுறைகளை விளக்கினால் தான் அவ்விலக்கியம் வாழும் இலக்கியமாகக் காலத்தையும் வென்று நிலைத்து நிற்கும். இத்தகைய காப்பியப் படைப்பே பாஞ்சாலி சபதம்,  பாரதியாரின் முப்பெருங் கவிதைகளில் ஒன்றான பாஞ்சாலி சபதம் வாயிலாக வாழ்வியல் நெறிகளாகப் பாரதியார் குறிப்பிடுவனவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு இம்மூன்றும் முப்பெரும் கவிதைகள் என போற்றப்படுகின்றன.

மகாகவி

பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய நாட்டின் அரசியல், சமுதாயப் பொருளாதார சமயச்சூழலில் அந்நியரின் வருகையாலும், ஆட்சி அதிகாரத்தாலும் கட்டுண்டு இருக்க வேண்டிய கட்டாயம் உருவானது என்பது வரலாறு. இக்காலச்சூழலில் உலகம் அதிரப்பாட வந்த பாவலன். புதிய அறத்தையும், வடிவத்தையும் இலக்கிய உலகிற்கு வழங்க வந்த அக்னிக் குஞ்சாய் எட்டயபுரத்தில் 'சுப்பையா' தோன்றினார். பாரதியார் பன்முக ஆளுமை புதிய யுகம் கண்ட புதுமை கவிஞன். பாரதியார் தேசவிடுதலை, சமூகம், தத்துவம், பக்தி என அனைத்து நிலைகளையும் பாடியுள்ளார். 

பாஞ்சாலி சபதம்

திருநெல்வேலியில் பாரதியும் அவரது நண்பர்களும், "துரோபதை துகிலுரிதல்" என்ற நாடகத்தைக் காணச் சென்றனர். துரோபதையாக வேடம் தரித்தவர் திரு. கவியாணராமன் அவர்கள். அவர் மிகவும் சாமர்த்தியம் வாய்த்தனர். கலியாண ராமனின் வாக்குச் சாதுரியம் துரோபதை பாத்திரத்தின் அழுத்தத்துக்கு மேலும் ஒரு சக்தி அளிக்கிறது. அண்ணனுக்காகத் தம்பியர் செய்யும் தியாகமும். பெண்மையின் சிறப்பை வெளியிடும் துரோபதையும் பாரதியாரின் நெஞ்சிலே ஆழப்பதித்தன. பிற்காலத்திலே உலகப்புகழ் பெற்ற பாஞ்சாலி சபதம் எழுதுவதற்கான வித்தாக அமைந்தது.

மேலும் படிக்க ...

தமிழ்ச் சொற் புணர்ச்சிக் குழப்பம் பற்றி , பேராசிரியர் எம்.ஏ.நுஃமானுடன் ஓர் உரையாடல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 ['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 

அண்மையில் நூல் பற்றிய விமர்சனமொன்றில் பாவிக்கப்பட்டிருந்த 'கூற்றை' என்னும் சொல் பற்றி எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி பின்வருமாறு தன் எதிர்வினையில் பதிவு செய்திருந்தார் "மனித வாழ்வின் ஒரு கூற்றை - என உள்ளது. மனித வாழ்வின் கூறு ஒன்றை எனச் சொல்லியிருக்கலாம்." என்று.

அதற்கு நான் "கூறு என்பதுடன் ஐ உருபினைச் சேர்த்து எழுதும்போது கூற்றை என்று எழுதலாம். இதுபோல் ஆறு + ஐ = ஆற்றை என்றுதானே எழுதுகின்றோம். ஆறு என்னும் எண் பெயருடன் மட்டும் ஆறை என்று எழுதுவதுண்டு. கூற்று என்னும் சொல்லையும் கூற்றை (நேற்று, நேற்றைப் போல) , கூற்றினை என்று எழுதுவதால் பொருள் மயக்கமுண்டுதான். இருந்தாலும் 'மனித வாழ்வின் ஒரு கூற்றை' என்பதில் எந்தக் கூற்றை அச்சொல் குறிக்கின்றது என்பதில் பொருள் மயக்கமில்லை." என்று எதிர்வினையாற்றியிருந்தேன். 

அதற்குப் பதிலளித்த ஶ்ரீரஞ்சனி "உருபன் இணைப்புச் சூழல் – ஆற்றை (ஆறு + ற்+ ஐ) ஆறை (ஆறு+ஐ) மேல் கூறப்பட்டதில் முதலாவது ஆறு ஆற்றினையும் இரண்டாவது ஆறு இலக்கத்தையும் குறிக்கின்றன. 'இதேபோல் கூறு வரின் 'கூறு' என்பது 'கூற்றை' அல்லது 'கூறை' என வருவது சரிதான். ஆனால்  'கூறு' என்பது ஒரு பொருளின்/விடயத்தின் ஒரு பகுதி அல்லது அம்சம், அதே சமயம் 'கூற்றை' என்பது ஒரு கூற்றின் செயப்படுபொருள் வடிவம். அவை வெவ்வேறு சொற்கள். அதுதான் குழப்பமாக இருந்தது. தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் கூறட்டும். கற்றுக்கொள்வோம்."  என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறியதுபோல்  'அடிப்படைத் தமிழ் இலக்கணம்' நூல் எழுதிய பேராசிரியர் எம்.ஏ நுஃமானுடன் இது பற்றி மெசஞ்சர் மூலம் உரையாடினேன்.அது வருமாறு:

நான்: "பேராசியருக்கு வணக்கம். பின் வரும் விடயம் பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவலாகவுள்ளேன். 

மேலும் படிக்க ...

கையொப்பக்கோட்பாட்டுப் பார்வையில் ஆனைவிழுங்கியும் சிலபெயர்களும்! - முனைவர் சி.தேவி, உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -

விவரங்கள்
கையொப்பக்கோட்பாட்டுப் பார்வையில் ஆனைவிழுங்கியும் சிலபெயர்களும்! - முனைவர் சி.தேவி, உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
18 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

மேலைநாட்டறிஞர்கள் இலக்கியக் கோட்பாடு என்பது மேலைநாடுகளில் தோன்றிய இலக்கிய ஆய்வுக் கோட்பாடுகளைக் குறிக்கும் பதம் ஆகும். இது இலக்கியத்தை பல்வேறு அணுகுமுறையில் பார்ப்பதற்கு வழிவகுக்கிறது. கோட்பாடுகள் இலக்கியப்படைப்புகளின் அமைப்பு, உணர்வுகள், சமூகப்பின்னணி, மற்றும் வரலாற்றுக் காவகட்டத்தின் செல்வாக்கு எனப் பல பரிமாணங்களை ஆராய்வதாக அமைகின்றனது. மேலைநாட்டு இலக்கியக்கோட்பாடுகள் பல அணுகுமுறைகளின் தொகுப்பு எனப்படுகிறது. இலக்கியத்தின் சமூகப்பின்னணி, இலக்கியத்தின் அமைப்பு போன்ற தன்மைகளை ஆயும் போக்கில் பல வகைகள் உள்ளன. இக்கோட்பாடுகள் தமிழ் இலக்கியச்சூழலில் புதிய அணுகுமுறைகளை அறிமுகம் செய்வதற்கும், உலக இலக்கியக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன. இலக்கியத்தின் கலைநுட்பம், படைப்பாளரின் படைப்பாற்றல் போன்றவற்றை எடுத்தியம்பும் வழியாக அமைகின்றது.

இவ்வகையில் கையொப்பக்கோட்பாடு பற்றி இங்கே காண்போம்.

கையொப்பக் கோட்பாடு

கையொப்பக்கோட்பாடு என்பது பண்டைய தத்துவமாகும். இது மனித உடலுறுப்புகளைப் பிரதிபலிக்கும் மூலிகைகளைக் குறிக்கும் தத்துவமாகும். அத்தாவரங்கள் மனித உறுப்பு போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பது, கடவுள் அந்த உறுப்புக்கான மருந்தாக அத்தாவரத்தை வடிவமைத்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க ...

கனடா ரொறன்ரோவில் நவராத்திரி விழா! - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
18 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 5-10-2025 அன்று கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினரால் நவராத்திரி விழா திஸ்ரில் நகர ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிராமத்துவதன நிர்வாகக் குழவினரால் வாசலில் விளக்கேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேடையில் செந்தமிழ்பேரொளி பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம், வதனம் முதன்மை ஆசிரியர் குரு அரவிந்தன், கவிஞர் அகணி சுரேஸ், செற்கோ திரு. வி. என். மதியழகன், விரிவுரையாளர் ஸ்ரீகுமரகுரு நாகேஸ்வரி, அம்மன் கோயில் முகாமையாளர் நவா கருணரட்ணராசா, திருமதி பத்மா கரு, திருமதி இராசம்மா இராசதுரை, பொறியியலாளர் திருமதி கேதா கிருபராஜன், திரு ஸ்ரீகுமரகுரு மகாதேவன், நிறுவுனர் கமலவதனா சுந்தா மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

மேலும் படிக்க ...

இவர்கள் மகாத்மாக்கள் - என் வாசிப்புப் பகிர்வு! - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
நூல் அறிமுகம்
16 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

‘அறிந்திரன்’ என்றொரு சிறுவர் சஞ்சிகை இலங்கையில் வெளிவருகின்றது என அறிந்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அறிந்திரன், எனச் சொல்லும் அந்தத் தலையங்கமும், சிறுவர்களுக்கு அறிவை ஊட்டவேண்டுமென்ற எழுத்தாளரின் தாகமும் என்னைக் கவர்ந்திருந்தன. ஏதாவதொன்று சிறப்பாக இருக்கின்றதெனக் கருதும்போது, அதை நேரடியாகப் பாராட்டும் என் இயல்பு, கணபதி சர்வானந்தா அவர்களை FB messenger ஊடாக அணுக வைத்திருந்தது. முகம்தெரியாத அவருடனான பழக்கம் அவ்வகையில்தான் எனக்கு ஆரம்பமாகியிருந்தது. ஒரு சில மாதங்களின் பின்னர், இலங்கைக்குச் சென்றிருந்த நண்பர் ஒருவருக்கூடாக 12 அறிந்திரன் சஞ்சிகைகள் என்னை வந்தடைந்திருந்தன. அதன் பெறுமதிக்கான பணத்தைக்கூட அவர் வாங்க மறுத்துவிட்டார். பொருளின் பெறுமதியை உணர்ந்தவர்களுடன் அதனைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பாக அது இருந்திருக்கலாம். நானும் அதை உணர்ந்திருக்கிறேன் என்பதால் சந்தோஷமாக இருந்தது.

அந்தக் கட்டத்தில், கொரோனாவின் பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் இருக்காததால், தமிழ் வகுப்புகள் (2021) மெய்நிகர் வழியில்தான் நிகழ்ந்து கொண்டிருந்தன. அது, மாணவர்களின் மொழி ஆற்றலுக்கேற்ப அவர்களைக் குழுக்களாகப் பிரித்துச் சுழற்சி முறையில் குறித்த குழுவினருக்கு மட்டும் எவ்வித கவனச் சிதறலுமின்றிக் கற்பிக்கும் வாய்ப்பினைத் தந்திருந்தது. அதனால், தமிழ் மொழி ஆற்றல் மிக்க மாணவர்களுக்கு அறிந்திரன் சஞ்சிகையையும் அறிமுகம் செய்யக்கூடியதாக இருந்தது. கணபதி சர்வானந்தா அவர்களுடன் அதனை நான் பகிர்ந்துகொண்டபோது, அறிந்திரனில் பிரசுரிப்பதற்கு என் மாணவர்களின் ஆக்கங்களையும் அனுப்பும்படி கேட்டிருந்தார். அப்படியே அறிந்திரனில், அவர்களின் படங்களுடன் அவர்களில் சிலரின் ஆக்கங்கள் பிரசுரமாகியிருந்தபோது, அவர்களுக்கு அது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருந்தது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் விமல் பரம் எழுதிய "தீதும் நன்றும்" சிறுகதைத்தொகுப்பு மீதான ஒரு திறனாய்வு! - பவானி சற்குணசெல்வம், நெதர்லாந்து -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம், நெதர்லாந்து -
நூல் அறிமுகம்
16 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மனித வாழ்வின் ஒரு கூற்றை, யாரேனும் ஒருவரின் பண்பை அல்லது செயலை, ஏதேனும் ஒன்றன் இயக்கத்தை அல்லது செயற்பாட்டை எங்கோ ஒரு மூலையில் மறைந்து கிடக்கும் ஒரு இரகசியத்தைக் கலைச்சுவை சிறிதும் குன்றா வண்ணம் வெளிப்படுத்துவதே சிறுகதையின் நோக்கம் எனலாம். இந்தச்சிறுகதைத் தொகுப்பின் சிறப்பம்சம் என்னவெனில்; இதில் இடம்பெற்ற பல கதைகள் மனிதவாழ்வில் நம்பிக்கை ஔி ஏற்றுவனவாக அமைந்துள்ளன. கதாபாத்திரங்கள் வாழ்க்கை எனும் பாதையில் செல்லும் வழியில் எதிர்ப்படும் தடைகளான  பூட்டிய கதவு,  எழும்பி நிற்கும் சுவர்,  தடுக்கி விட காத்திருக்கும் கல், திறந்திருக்கும் சாளரத்தையும் சாத்திவிடும் உள்நுழையும்  பெருங்காற்று, இன்னும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ தடைகளை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, இலகுவாக அல்லது தன் முழு வலிமையினால் திறந்தோ, உடைத்தோ, நகர்த்தியோ, தள்ளியோ, சுற்றிக்கொண்டோ, ஏறிநின்றோ கடந்து செல்வதாக பல கதைகள் முடிவு பெறுகின்றன.

அடுத்தது, இக்கதைகளின் ஓட்டம் எந்த இடத்திலும் தங்கு தடையின்றி போகிறது. இக்கதைகள் முறையாக எடுத்துத் தொடுத்து முடிக்கப்பட்டுள்ளன. அதற்குப் பக்கபலமாக அவருடைய எளிய சொல்லாடல்கள் வசன அமைப்புகள் அமைந்தமை சிறப்பு; வாசகன் எந்தச் சிரமமும் இன்றி கதாசிரியர் சொல்ல வந்ததைக் கிரகித்துக்கொள்ள முடிகிறது.

இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற பல கதைகள் "நம்பிக்கைதான் வாழ்க்கை" என்பதை வலியுறுத்தி நிற்கின்றன. இந்த நம்பிக்கை வாழ்வில் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் மற்றும் துயரங்களை கடந்து செல்ல உதவுவதுடன் எதிர்காலத்தில் நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும், வாழ்க்கையை முன்னேற்றிச் செல்ல தேவையான நம்பிக்கையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.  இந்த நம்பிக்கை, ஒரு நபரை செயலில் இறங்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், இறுதியில் வெற்றியை அடையவும் தூண்டுகிறது. இது ஒரு சக்திவாய்ந்த உந்துதல் சக்தியாக இங்கு வெளிப்படுகிறது.

மேலும் படிக்க ...

ரவி அல்லது (பட்டுக்கோட்டை) கவிதைகள்!

விவரங்கள்
- ரவி அல்லது (பட்டுக்கோட்டை) -
கவிதை
16 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



1. வண்ணத்தின் கரும்புகைகள்.

கொதி நிலையில்
கூடி இருக்கும்
இனிப்புக் கடைகளின் கூட்டம் 
கொய்து கொண்டிருந்தது
சுவையின்
பூசனங்களை.

அம்மாவும்
அக்காக்களும்
அடுப்படியில்
சுட்டவைகள்
நாட்பட
சுவைக்க முடிந்தது
வியாபிக்கும்
அன்பில்.

திசை மாறிப் போன
தீபாவளியை
சாளரத்தின்
வழியே
சற்றே ஏங்கிக் பார்க்கிறேன்

ஜாலம் காட்டும்
வானத்தில்
ஐய்யாவோடு
அச்சம் கொண்டு
வெடித்த
ஓலை வெடியின்
அணுக்கமும் மகிழ்வும்
வாய்க்கவே இல்லை
இப்போதானவர்களுக்கு
கைப்பேசிகளில்
காட்சிப் படுத்துவதாகவே
வாழ்க்கை
வாய்த்துப்போனதால்.

மேலும் படிக்க ...

தமிழ்நதியின் 'மெத்தப் பெரிய உபகாரம்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
15 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana )உதவி; VNG

அண்மையில் நான் வாசித்த சிறுகதைகளில் நினைவில் நிற்கும் சிறுகதைகளில் ஒன்று தமிழ்நதியின் 'மெத்தப் பெரிய உபகாரம்'.  அவரது 'மாயக்குதிரை' தொகுப்பிலுள்ள  இறுதிச் சிறுகதை. இந்தக் கதை ஏன் என்னை மிகவும் கவர்ந்திருந்தது? அதற்கான காரணங்களைக்  கூறுவதற்கு முன் கதை பற்றிய சுருக்கம்.  

கதை இதுதான். கதை சொல்லி  'டொரோண்டோ', கனடாவில்  வாழும் தமிழ்ப்பெண்.  தாயைப்பார்ப்பதற்காக ஊருக்குச் செல்லும் பெண். ஃபிராங்க்பேட் அல்லது இலண்டன் வழியாகச் செல்வதற்கு டிக்கற் கிடைக்காததால் , சூரிச் வழியாகச் செல்லும் பயணி. சூரிச்சில்  டிரான்சிட்டில் எயார் லங்கா விமானத்துக்காகக் காத்து நிற்கின்றாள். அப்போதுதான் அங்குள்ள விமான நிலைய அதிகாரியொருவர் மொழிதெரியாத ஒரு மூதாட்டியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பதைக்  காண்கின்றாள்.  அவ்வதிகாரி பல் மொழிகளில் அம்மூதாட்டியை அவளது கடவுச்சீட்டை, போர்டிங் பாஸைக்  கேட்டுக் கேள்விகள் கேட்டுக  களைத்துப் போயிருந்தார். அம்மூதாட்டியோ அவரது கேள்விகளுக்கெல்லாம்  'ஊருக்குப் போறன்' என்று பதிலிறுத்துக் கொண்டிருந்தார்.

கதை சொல்லியான கனடாப் பெண்ணுக்கு அம்மூதாட்டி தமிழ்ப்பெண் என்பது தெரியும். உதவியிருக்கலாம். ஆனால் உதவவில்லை. பிரயாணக்களைப்பு, உறக்கமின்மை, கவலை, பொறுப்பேற்றலின் மீதான பின்வாங்கல் போன்ற காரணங்களில் ஏதாவதொன்றுடன் அங்கு தமிழ்ச் சாயல் கொண்ட  இன்னுமோர் இளம் பெண் இருந்ததும் காரணமாகவிருக்கலாம்  கதை சொல்லியே தன் நிலைக்கான காரணத்தை இவ்விதம் சுய விமர்சனம் செய்கின்றாள்.

ஆனால் அங்கிருந்த இளம் பெண் தமிழ்பெண் அல்லர். குஜராத்திப் பெண். ஆனால் அவளுக்கு இவள் தமிழ்ப்பெண்ணாக இருக்கலாம் என்ற எண்ணமிருந்தது. விளைவு?  நீங்கள் தமிழ் நாட்டவரா என்று கேட்டு இவளது மொழியைக் கண்டு பிடித்து விட்டாள். கதை சொல்லிப் பெண்ணுக்கோ வெட்கமாகப்போய் விட்டது. 'வெட்கம். மோசமான ஆள்தான் நான்' என்று தன்னையே மீண்டும் சுயவிமர்சனம் செய்து கொள்கின்றாள். 

மேலும் படிக்க ...

சென்னையில் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா!

விவரங்கள்
- தகவல்: கன்னிக்கோவில் இராஜா -
நிகழ்வுகள்
15 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டில் அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு

நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீடு 12-10-2025 ஞாயிறு காலை தாம்பரம், வள்ளுவர் குருகுலம் பள்ளியில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை வாயிலில் நடைபெற்றது..

கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய ‘தன்முனைக் கவி ஐப்பசி’ தன்முனைக் கவிதைகள் நூலை கவிஞர் கவிநிலா மோகன் அவர்கள் வெளியிட முனைவர் வே.புகழேந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க ...

இந்தியப் பயணத்தொடர் (4) : காஷ்மீரில் ‘பீஸ்ட்’நினைவுகள்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
15 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காஷ்மீரின் இரண்டாவது நாள் எங்கள் பயணம், “சொன்மார்” (Sonamarg) எனப்படும் பிரதேசத்தை நோக்கி இருந்தது. ஶ்ரீநகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதி, பெரும்பாலும் பனிப்பாறைகளால் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கும். வெயில் காலத்தில் பனிமலைச் சிகரங்கள் சூரிய ஒளியில் தங்கம் போல் மின்னுவதால் இதற்கு “சொன்மார்” — தங்கத்தாலான இடம் ( Golden meadow)— என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழியாக லடாக்கின் தலைநகரான லீ (Leh) செல்ல முடியும்; இது தற்போது இந்தியாவின் யூனியன் பிரதேசம். அங்கிருந்து சில்க் ரோடின் வழியாக திபெத்திற்குப் போகலாம். மறுபுறம் கார்கில் மலைப்பகுதி பிரசித்தம்; அந்த மலையின் மறுபக்கமே பாகிஸ்தான் எல்லை. எனவே, காஷ்மீர் நிலப்பகுதி இந்தியாவிற்கு ஒரு சுற்று மதில் போல அமைந்துள்ளது. இதனால் பாகிஸ்தானுடன் இணைவதோ அல்லது தனிநாடாக மாறுவதோ சாத்தியமற்றது என நினைத்தேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்நிலம், முன்னர் இந்துக்கள், இப்போது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர் — காஷ்மீரின் வித்தியாசத்திற்கு மத ரீதியான காரணங்கள் தர்க்கரீதியாக அமைந்தவையா என்று சிந்தித்தேன்.

அன்று, மழை காரணமாக நாங்கள் அதிக தூரம் செல்ல முடியவில்லை. வானம் இருண்டு, தூரத்தில் பனி படர்ந்த சிகரங்கள் மட்டும் தென்பட்டன. பாதைகள் தெளிவாகத் தெரியாததால், அடிக்கடி பனிச்சரிவுகள் ஏற்படும் இப்பகுதியில் எங்கள் பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மதிய உணவுக்குச் சென்றோம்.

மழை இடைவெளியில் கார் இறங்கி சுற்றிப் பார்த்தபோது, பனிகரைந்த நீரால் வெண்மையாக ஓடும் சிந்து நதி (Sind River) கண்ணில் பட்டது. இது பின்னர் ஜீலம் நதியாக (Jhelum River) மாறுகிறது. இங்கிருந்தே அமரநாத் யாத்திரை தொடங்குகிறது என அறிந்தோம். மலையை வெட்டிப் பாதை அமைத்துள்ளார்கள் — இது எல்லைப் பாதுகாப்பிற்கும், பனிக்கால சுற்றுலாவிற்கும் முக்கியமானது.

மேலும் படிக்க ...

போர் இலக்கியம் , போர் பற்றிய இலக்கியம் , புகலிட இலக்கியம் பற்றி.... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
14 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

போர் இலக்கியம் , போர் பற்றிய இலக்கியம் , புகலிட  இலக்கியம் பற்றி....

                                              - கவிஞர் சேரன் -

அண்மையில் டொராண்டோவில் நடந்த எழுத்தாளர் தமிழ்நதியின் நூல்களின் வெளியீட்டில் கவிஞர் சேரன் ஆற்றிய உரையினைத்  தனது முகநூற் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் கவிஞர் போர் இலக்கியம் பற்றிப் பின்வருமாறு குறிபிட்டிருந்தார்:

" தமிழ்நதியினுடைய எழுத்துக்கள் அல்லது நான் எழுதுகிற கவிதைகள், எங்களுடைய போராட்டம் தொடர்பான அனுபவங்களுக்கூடாக வருகிற படைப்புகளை எல்லாம் போரிலக்கியம் அல்லது போராட்ட இலக்கியம் என்று என ஒருவகையாக எல்லைப்படுத்தப்பட்ட முத்திரை குத்திப் பார்க்கிற ஒரு விமர்சனப் போக்கு வந்திருக்கிறது. அது பொருத்தமானதன்று. போரிலக்கியம் என்று சொல்வது போதுமென்று சொன்னால் - உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள் - போர் நடந்துகொண்டிருக்கிறபொழுது ஒவ்வொரு அரசாங்கமும் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் போர்முனைக்கு அனுப்பும். வன்னியில், முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபொழுது 'The Hindu Group ', 'The Front line ஆகிய நிறுவனங்கள் இரண்டு, மூன்று பத்திரிகையாளர்களையும் எழுத்தாளர்களையும் அதை ஆங்கிலத்தில் Embedded Journalist, Embedded Writers என்று சொல்வார்கள். தமிழில் சரியாகச் சொல்வதென்று சொன்னால் (சிரிக்கிறார்) 'உடன்படு' எழுத்தாளர்களை அனுப்பியிருந்தன.  அதுபோல, ஆப்கானிஸ்தானில் சண்டை நடந்துகொண்டிருந்தபொழுது சில முக்கியமான கனடிய கவிஞர்களை கனடிய அரசாங்கம் அந்தப் போர்முனைக்கு அனுப்பியிருந்தது. சில கட்டுப்பாடுகள்... அங்கே இராணுவம் சொல்வதைத்தான் எழுதவேண்டும். அதையும் போரிலக்கியமென்றுதான் பார்க்கிறார்கள். அதுபோல, போரிலே கொடுமைகள் செய்த ஏராளமான படையினர், அவர்களை வழிநடத்தியவர்கள் எழுதிய கட்டுரைகளையும் கதைகளையும் போரிலக்கியம் என்றுதான் பார்க்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள், கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் எழுதுவதற்கும் பாதிப்பை நிகழ்த்தியவர்கள், கொலையாளிகள் எழுதுவதற்குமிடையிலான வித்தியாசத்தை நான் பார்க்கிறேன். எப்படிப் பார்க்கிறேனென்று சொன்னால், வெறுமனே போரிலக்கியம், போர்க்கால இலக்கியம் என்று சொல்லி எங்களுடைய படைப்புகளை முத்திரை குத்திவிட முடியாது. "

போர் இலக்கியத்தைச் சேரன் பொதுமைப்படுத்தியதாக உணர்கின்றேன். போர்களுக்கு மத்தியில் தம் உயிரைப்பணயம்  வைத்துப் பயணித்த ஊடகவியலாளர்கள் எல்லோருமே பிரச்சாரகர்களாக இருந்து விடுவதில்லை. பலர் அங்கு நிலவும் போர்ச்சூழலை, மாந்தரை, உயிரினங்களையெல்லாம் தம் எழுத்துகளூடு , புகைப்படங்களூடு, ஓவியங்களோடு பதிவு செய்திருக்கின்றார்கள். அவற்றுக்குகாக கலை, இலக்கிய உலகின் முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கின்றார்கள். சில போர்களை நிறுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளன.  உதாரணத்துக்கு இரசாயனக் குண்டினால் பாதிக்கப்பட்டு, உடம்பு எரிந்த நிலையில் நிர்வாணமாக ஓடிய வியட்நாமியச் சிறுமியின் புகைப்படத்தைக் குறிப்பிடலாம். அது போருக்கெதிராக அமெரிக்கர்களைத் திசை திருப்பியதில் முக்கிய பங்கு வகித்தது.

மேலும் படிக்க ...

இரங்கல் பா: தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன்! - ம.ஆச்சின் (முன்னாள் தமிழ் நாடு தொல்லியல் துறை மாணவர்) -

விவரங்கள்
- ம.ஆச்சின் (முன்னாள் தமிழ் நாடு தொல்லியல் துறை மாணவர்) -
கவிதை
14 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் 6 அக்டோபர் 202 அன்று  மறைந்தார். -

மண்ணின் மடியில் மறைந்தவரல்லர் அவர்,
மரபின் மடியில் நிலைத்த நினைவாகியவர்!Sign in to Online Banking | Capital One Canada
பாறை பேசும் மொழியை புரிந்தவர்,
பழமையைப் புதுமையாய் படைத்தவர்!

கல்லிலே உயிர் ஊட்டிய கலைஞர் அவர்,
சொல்லிலே சுவடு பதித்த சிந்தனையாளர்!
தொல்லியலின் தாய்மொழி தமிழென நம்பி,
அதை உலகம் அறியச் செய்த வீரர் அவர்!

நடன காசி நாதன் என்ற பெயர் தாங்கியவர்,
மண், முறை, மரபு என்ற மூன்று முத்துக்களில்
ஒளி வீசிய ஒப்பில்லா அறிஞர்!

இன்று அவர் உடல் அமைதியில் இருந்தாலும்,
அவரது பணி ஆய்வும் அர்ப்பணிப்பும்
நூல்களின் பக்கங்களில் நிலைத்திருக்கும்!

ஒவ்வொரு வரியிலும் அவர்தம் நிழல்,
ஒவ்வொரு ஆய்விலும் அவர்தம் ஒளி!
ஒவ்வொரு தமிழனின் மனதிலும்
அவர்தம் பண்பின் பாடல் ஒலிக்கின்றது!

நமக்குள் என்றும் உயிராய் வாழ்வார் ,
தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் அவர்கள்.!

மேலும் படிக்க ...

சிறுகதை: மனைவியர்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
சிறுகதை
14 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

             - டிஜிட்டல் ஓவியத்  தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG  -
1

சாலையோரம் நடந்த சென்று கொண்டிருந்தான்.  ஒரு  பதினாறு வயசு இருக்கும். பனி. அதிகாலை வேளையில் கொட்டி, வானம் இருண்டு போய் கிடந்தது. காரை நிறுத்தினேன். ஏற, உதவி செய்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறானாம். ஸ்டொக்ஹோம் செல்ல வேண்டும். நடந்தால், பஸ் காசும் மிஞ்சும். குறுக்கு வழியாக ஏறினால் நோர்வூட்டிலிருந்து பத்து நிமிசம்தான் எடுக்கும். விவரித்தான்: “அடியான அடி. எல்லோருமாய் சேர்ந்து தான்”. பஸ்ஸில் வரும் போது நடந்த அச் சம்பவம். “தூங்கும் போது, பக்கத்து சீட்டில், கையை விட்டு, - பதினஞ்சாயிரம். அப்படியே அடித்திருக்கிறான். அவனை அடியாய் அடித்து, நாவலபிட்டியில் இறக்கி விட்டார்கள்…”

“நீங்கள் அடிக்கவில்லையா? ”

“செத்துப் போனால்.”

காரை, மாதா கோவிலின் அருகே நிறுத்தினேன்: “இத்துடன் எமது கார் பயணம் முடிவடைகிறது.”

“நீங்கள் …” இழுத்தான். நானும்த்தான் நடக்கப் போகின்றேன். கிலர்ன்கன் வரைக்கும்.

“எதற்காக”

“நடைக்காக”.

“கிலன்கர்ன் சென்று திரும்பி விடுவீர்களா?.”

“ஆம்” என்றேன்.

“அப்படி எனில் சேர்ந்தே நடக்கலாம்”.

நானும் அவனுடன் இணைந்து நடந்தேன்.

வலப்புறமாய், ஏரி, கோபித்தப்படி உம்மென்று இருந்தது.

அதன் ஆழத்தையும் அமைதியையும் யார் படம் பிடிக்க கூடும். அமைதியை வேண்டுமானால்…

ஆனால் ஆழத்தை…

“காலை அஞ்சரை மணிக்கு தட்டுகளை கழுவத் தொடங்கனும். இரவு பன்னெண்டு மணிவரை.”

“சரிபட்டு வரல… ரெண்டே ரெண்டு கிழமை. அண்ணனே சொன்னார்  ‘நீ போ… போறதுத்தான் உனக்கு நல்லது’  அஞ்சாயிரம் தந்து பஸ்ஸிலும் ஏற்றிவிட்டான்…”

“துக்கமாக இருக்கிறது. இடைநடுவே வேலையை விட்டுவிட்டு வந்ததற்காய்” என்று வேதனைப்பட்டான். “வயது என்ன என்றேன்”, “பதினெட்டு”. ஏதாவது ஒரு தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என யோசனை தெரிவித்தேன். மோட்டார் திருத்துவது – சமைப்பது – ஏதோ ஒன்று. ஆனால், அதனை திறம் பட செய்ய தெரிந்து கொள்ள வேண்டும் என தேற்றினேன். ஒரு பிளேன்டீ குடித்தாக வேண்டும் என்றான், எதிர்பட்ட மூடியிருந்த கடையொன்றை பார்த்துவிட்டு. பணம் இருக்கின்றதா என்றேன். அஞ்சாயிரம் என்றான் பையன்.

இடை நடுவே, பெரியண்ணனுடன் தினமும் மாட்டுக்கு புல் அறுப்பவன், தனது வண்டியை, வழமைப் போல் பாதையோரமாக தள்ளி வருவதைக் கண்டேன். என்னை கண்டவுடன், வழமை போல் தலையிலிருந்த தொப்பியை வலக்கரத்தால் அகற்றிய படி தள்ளுவதை நிறுத்தினான். “எப்படி, கன்னுகுட்டி” என்று விசாரித்தேன்.

“நல்லா இருக்கு சார்”.

அவரது மாடு, நேற்றுத் தான், கன்று ஒன்றை ஈன்று இருந்தது. “ஆறரைக்கு துவங்கியது. முடிய இரவு பண்னெண்டு மணி.”

“குட்டி – காளையா, பசுவா” என்றேன். “தெரியவில்லை” என்றான். ஒரு கணம் விக்கித்து தடுமாறி போனேன். மாலை ஆறு மணி தொடக்கம், இரவு பண்னெண்டு மணி வரை மாட்டுடன் இருந்துள்ளான். போட்டது காளையா பொட்டையா என்று தெரியவில்லை. தெய்வமே – எத்தகு மனிதர்கள், பசுவின் வேதனையில் தன்னையும் மூழ்கடித்து… காளையா பொட்டையா என்று கூட பாராமல், மாட்டின் வேதனையுடன் இவர்களை இணைத்தது யார்? யார் உன்னை இங்கு கொண்டுவந்து இருத்தியது? தேவர்களா! இல்லையெனில் இந்த அமைப்புமுறைத்தானா – இப்படி பல்வேறு சிந்தனைகள் என்னை அலைக்கழிக்க, கேள்வி கேட்டதற்காக கூசி போனேன். “பெரியண்ணன் எங்கே”. “படுத்து இருக்கிறார். அசதி. சரி, தூங்கட்டும் என்று வண்டியை தனியாக தள்ளி வந்து விட்டேன். தூங்கி எழும்பி வருவார் அவர்”. “பெரியவர் தானே” என்றான், வண்டியை தள்ள தொடங்கிய படி. கிலர்ன்கனிலிருந்து திரும்பும் போது பெரியண்ணன் எனக்காக நிற்பதைக் கண்டேன்.

மேலும் படிக்க ...

உண்மை உரைக்கும் ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன! - நந்திவர்மப் பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப் பல்லவன் -
அரசியல்
13 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை சுதந்திரமடைந்து சென்ற ஆண்டு அநுர குமார திசாநாயக்க ஆட்சியில் அமரும் வரையிலான காலகட்டம் பாரம்பரிய இலங்கை அரசியல்வாதிகளால்  இனவாதம், மதவாதம், தேசியவாதம் ஆகியவற்றைப் பாவித்து  அதிகாரத்தைக் கைப்பற்றும் காலகட்டமாக இருந்துள்ளது.  பிரதான ஊடகங்களின் சூத்திரதாரிகளாக மேற்படி அரசியல்வாதிகளே இருந்து வந்தனர்.அதனால் நாட்டு மக்களுக்கு, குறிப்பாகத் தென்னிலங்கை மக்களுக்கு நாட்டின் வடகிழக்கில், மலையகத்தில் , தமிழ், முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட அரசியல் இவையெல்லாம் பற்றிய உணமை நிலை தெரியாததொரு சூழல் நிலவியது. இன்று முதன் முறையாக அந்தச் சூழல் மாறியுள்ளது. இது  வரவேற்கத்தக்க, ஆரோக்கியமானதொரு சூழல். இச்சூழல் தொடர்ந்தும் நிலைத்திருப்பதே நாட்டின் நல்லதோர் எதிர்காலத்துக்கு அவசியம். 

இதன் விளைவே முக்கியமான சிங்கள  ஊடகவியலாளர்களில் ஒருவரான நந்தன வீரரத்தினவின் , அண்மையில் வெளியான, இரு நூல்கள்: யாழ்ப்பாணத்தை தீயிடுதல் 1981 - ஒரு வன்முறை அரசின் ஆரம்பம், கறுப்பு ஜூலை - வன்முறை அரசின் ஏழு நாட்கள். இவை சிங்கள மொழியில் வெளியான நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள். தமிழ் மொழிபெயர்ப்பாளர் - செல்லையா மனோரஞ்சன்.

மேலும் படிக்க ...

கருத்தரங்கு: மாகாண சபை முறைமையும், அதிகாரப் பகிர்வும்!

விவரங்கள்
- தகவல்: யோகா வளவன் -
நிகழ்வுகள்
13 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நெடுங்கதை - சுதந்திரபுரத்தில்... - முல்லைஅமுதன் -

விவரங்கள்
- முல்லைஅமுதன் -
சிறுகதை
13 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana)  உதவி : VNG

1

அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் புரட்டிவிடப்போகிறதோ தெரியவில்லை.'

மனதுள் புழுங்கினான்.

மணியமென்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சுதந்திரபுரத்தில் பலசரக்குக் கடை வைத்திருப்பவன்..அவனின் மனைவி சுகந்தியைத் திருமணம் செய்து ஐந்துவருடங்கள் ஆகிவிட்டது.எனினும் குழந்தைகளில்லை.ஆனாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்துவந்தனர். ஊரிலும் அவர்களுக்கு நல்லபெயர்.

கடைக்கு பலரும் வந்து போவார்கள்.

சிறுசிறு பொருட்களைவாங்க வருபவர்கள்..உதவி கேட்டு வருபவர்கள்..ஒசிப்பேப்பர் வாசிக்கவருபவர்கள்...சுகத்தியுடன் அரட்டை அடைக்க வருபவர்கள்..எப்போதும் கடை கலகலப்பாகவே இருக்கும். கடையை மூடியபின்பே வீட்டிற்குப் போவதால் கடைக்குப் பின் புறமாகவே மதிய உணவை சமைத்துச் சாப்பிடுவார்கள்.

'எதற்கு வீடு..?அதை விற்றுவிட்டு கடையைக் கொஞ்சம் பெருப்பிக்கலாமே' சுப்பையா அண்ணரின் ஆலோசனையை முற்றாக இருவரும் மறுதலித்தனர்.

'இன்றைக்கு கடை நல்ல வருமானம் தருகிறது.அதற்காக வீட்டைவிற்ரு கடையைப் பெருப்பிக்கும் எண்ணத்தால் ஒருவேளை கடை நடத்தமுடியாமல்போனால் வீடாவது மிஞ்சுமே?கடைசிக் காலத்திலாதாவது எங்களுக்கு இருக்கட்டுமே..வீடு என்ற ஒன்று குடும்பத்திற்கு வேணும்'

சுப்பையா அண்ணர் மறு பேச்சு பேசவேயில்லை..தலையை ஆட்டினார்..

மேலும் படிக்க ...

நினைவலைகள்: 'டட்ட டாங்' - இந்து லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து லிங்கேஸ் -
இலக்கியம்
11 அக்டோபர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


- அக்டோபர் 10, 2025  'டொரோண்டோ,கனடாவில் மறைந்த , யாழ்  இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும், புகழ்பெற்ற துடுப்பெடுத்தாட்ட, உதைபந்தாட்ட வீரராகவும் விளங்கிய வேல்முருகு வசந்தகுமார் பற்றிய எழுத்தாளர் இந்து லிங்கேஸின் நினைவலைகள் இவை. - 


கல்லூரி வாழ்க்கையில்தான் எத்தனை ஆயிரம் கதைகள் இருந்தாலும்,மறக்கமுடியாத,மனசை விட்டுப் பிரிக்க முடியாத ஒரு கதைதான் இது. 1972 களில் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம்.கல்லூரி மைதானத்தில் துடுப்பாட்டப் போட்டி(Cricket Match)ஆரம்பித்துவிட்டால் போதும், மைதானத்தைச் சுற்றி ஆட்டத்தைப்பார்ப்போரின் எண்ணிக்கை நிறைந்து வழியும்.ஒரு மூலையில் கூட்டமாக இருந்து,Pongos ஐயும் வாசித்தபடி College College என்று ஒரு பகுதி ஓங்கி ஒலியெழுப்ப,மற்றைய பகுதி Hindu College என்று உரத்துக்கத்த,எங்களின் வேகப்பந்து வீச்சாளன் வசந்தனும் துள்ளிவந்து பந்தை வீச விக்கற்றும் பறக்க நாங்களும் துள்ளிக் குதிப்போம்.காற்றில் புழுதி கிளம்ப அரசமரத்தின் இலைகளும் சரசரக்க,நீலமும்,வெள்ளையும் கலந்த கல்லூரியின்கொடி காற்றில் அசைந்து, பெருமிதமாக வெட வெடத்துப் பறக்கும். நீலவர்ணம் நிறைந்த வானம்.வெக்கையைக் கக்கும் வெயில்.என்றாலும் கூட வசந்தனின் சிரிப்பின் ஒளிவீச்சு மைதானத்தை நிறைத்து நிற்கும்.இப்படித்தான் எங்களுடைய ‘டட்ட டாங்'எல்லோருக்கும் அறிமுகமானார்.

கல்லூரியைச் சுற்றி எங்கே,எப்போது பார்த்தாலும் வசந்தனின் சுறுசுறுப்பையும், சிரிப்பையும்,பேசும் அழகையும் கண்டு சிறியவர்களாக நாம் மகிழ்ந்த காலமது.அதற்காகவே மாலைப்பொழுதில் மைதானத்தில் பயிற்சி நடைபெற்று முடியும் தருவாயில் அங்கே காத்திருந்து அவரது பகிடிகளைக்கேட்டு ,மற்றவர்களுடன் நாமும் இணைந்து சிரித்த அந்தப் பொழுதுகளும் மறக்க முடியாதவை.காலம் மெல்ல மெல்ல கனியக்கனிய;ஒருத்தருக்குள் இத்தனை வல்லமையா என்ற வியப்பு எம்மையும் கட்டிப்போட்டது.ஒரு கால கட்டம் பார்த்தால்,கிரிக்கெட்டில் சாதனை.மறுபக்கத்தில் உதைபந்தாட்ட வீரனாக.மூத்த மாணவர் தலைவராக.கையெழுத்தும் அச்சிட்டாற்போல மிகவும் அழகாக.கணிதம்,பிரயோக கணிதம் இரண்டிலும் வல்லவராக மட்டுமன்றி,எமக்குக் கற்றுத்தந்த ஆசானாகவும் விளங்கினார் வசந்தன். 

Sean Conneryயின் ஜேம்ஸ் பொண்ட் 007 ஆக வெளிவந்த படங்களைப் பார்த்துவிட்டு; முக்கியமான சில காட்சிகளை அதன் பின்னணி இசையுடனே தொடுத்து,சுவாரஸ்யமாக சொல்வதுதான் வசந்தனின் கை வந்த கலை.இதைக்கேட்பதற்காகவே மாணவர் நாம் கூடியிருந்து கேட்டு மகிழ்ந்தவை பல.அப்படித்தான் வசந்தனிற்கு இன்னொரு புனைப்பெயராக 'டட்ட டாங்‘பிரபல்யமானது. 

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. 'டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழா' (2025) - கலைநிதன் கலைச்செல்வன் இயக்கத்தில், சுமதி பலராமின் நடிப்பில் 'கறுப்பி'! (குறுந்திரைப்படம் )
  2. இந்தியப் பயணத்தொடர் (3) : காஷ்மீர் பூந்தோட்டங்கள்! - நடேசன் -
  3. பெண்களில் வெளிச்சமானவள்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
  4. சிந்தனைக் களம் (இசை, நடனம்)
  5. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்கு இதழ்களின் பங்களிப்பு - நவீன தமிழ் ஆய்விதழ்ச் சூழலை மையப்படுத்திய அவதானிப்புகள் ”
  6. காலத்தால் அழியாத ஐந்து எம்ஜிஆர் படப் பாடல்கள்! - ஊர்க்குருவி -
  7. 'ஒரு பாய்மரப்பறவை' வாசிப்பு அனுபவம்: - பவானி சற்குணசெல்வம் -
  8. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுப் பெயர் மாற்றம் - 'அ,முத்துலிங்கம் இயல் விருது'!
  9. எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் பற்றியதோர் அறிமுகம்! - தமிழ் விக்கி -
  10. குறுந்தொகையில் எண்வகை மெய்ப்பாடுகள் - ஒரு பார்வை! - முனைவர் P.K. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி(தன்னாட்சி), ஆம்பூர் 635802, திருப்பத்தூர் மாவட்டம் -
  11. என் முகநூற் பதிவொன்று: மறக்க முடியாத பெண்கள் கல்லூரி அதிபர்! - வ.ந.கிரிதரன் -
  12. 'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் 'இருபத்து மூன்றாம் வயதில் பாரதி' பற்றி..- வ.ந.கிரிதரன் -
  13. இந்தியப் பயணத்தொடர் (2) : காஷ்மீர் செல்லும் முன்…டெல்லி தரிசனங்கள் - நடேசன். -
  14. கம்பராமாயணத்தில் தாரை! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -
பக்கம் 1 / 115
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி