கவிதை: மனிதனைத் தேடி அலைகிறேன்.

பனி கழுவிய
பூக்களைப்போல்
சிரித்திருக்கும் பிள்ளைகள்
நிலம் பிடிக்கவென
புகுந்த ஆயுததாரி போல்
பிரம்போடு நுளையும் நான்


பனி கழுவிய
பூக்களைப்போல்
சிரித்திருக்கும் பிள்ளைகள்
நிலம் பிடிக்கவென
புகுந்த ஆயுததாரி போல்
பிரம்போடு நுளையும் நான்
காலநீட்சியின் பின்
எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது.
மூத்தோருக்கும்
காலிழந்த… இடுப்பொடிந்த நண்பருக்கும்
மற்றோருக்கும்
இயலாதபோது கைகொடுக்கும்
ஊன்றுகோல் அல்ல இது.
உடையாருக்கு குடை பிடிக்கவும்
பக்கப்பாட்டுப் பாடவும்
என் முதிர்ச்சிக்கு முன்னரே
விசேடமாகக் கிடைத்த ஊன்றுகோல்.
இதை நன்றாகப் பற்றிக்கொள்ள வேண்டும்.
சித்திரத்தாள் சிரித்தாள் எனைப் பார்த்து. எம் சுவரின்
மத்தியிலே தூக்கி, மறைந்து சென்று மறந்து வரும்
சித்திரத்தாள், இன்று சிரித்தாள். என் சென்றவளின்
முத்துப் போல் பல் வரிசை மிளிர்ந்து முகம் மலர்ந்து
சிரித்தாள், இதழ் பிதுக்கி, இடக்கண்ணைச் சிறுக்கவைத்து.
புன்னகித்துக் குறும்பினளாய் என் மனதைத் துள்ள வைக்க
இன்பம் குவிந்து நான், இருந்தாப் போல் குதூகலித்தேன்.
என்னவளின் அவ்வுருவம் எம் திருமணத் தினமின்று
தன் நினைவைத் தூண்டித் தனிமையினைத் துரத்தியது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- குறிப்பு - அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும். -
கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில்
உடைந்து தெறித்தது மலையின் சிரசு
இடையறாது குருதியோடும் சதுப்பு நிலமாய் இதயம்
புதைந்தது குளிர்ந்த பள்ளத்தாக்கினிடையே
அருளும் பாதுகாப்பும் தரும்படி நாம்
உருவச் சிலைகளுக்கு மலர் வைக்கும்போதும்
நேசித்த மலை பற்றியே முணுமுணுத்தோம்
1. உயிர்ப்பு .
- சுப்ரா (திருநெல்வேலி) -

கழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்
சாவல் குருவிக்கு என்ன திரை
அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்
அடித்த சாரலில்
வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று
நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே
பிறகென்ன
வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்
துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட
நங்கூரங்களின் கயிற்றோடு
உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள்
அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து
வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன்
பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி
உணவு தயாரிக்கும் இளம்பெண்
நிலவொளியில் புயல் சரிக்க
போராடி அலையும் பாய்மரக் கப்பல்
அழிந்த மாளிகை
அசையாப் பிரேதம்

ஒளிரும் தீப ஒளியில்
கருகும் தீய எண்ணங்கள்
மிளிரும் இந்த வேளையில்
பொழியும் ஆனந்த உணர்வுகள்
விடியும் பொழுதோடு ஒரு
மலையுச்சிப் பூவின் தியானம்
- எம்.ரிஷான் ஷெரீப் -

கைக்குழந்தை உள்ளங்கையென மொட்டவிழ்கிறது
பறிக்கப்படாத கனிகள் வீழ்ந்தழியும் மலைத் தரைகள்
வனப்பு மிக்க காடுகளைச் சுமக்கின்றன தம்மில் அவைஅந்திப் பறவைகள்
கறுப்புத் திட்டுகளாகப் பறந்து மறையும்
மாலை நேரங்களில் வனங்கள் என்ன செய்யும்
மணிபாரதி (அம்பாசமுத்திரம்) கவிதைக்ள்!
1. கூடு
மேய்ச்சலுக்கு போன
மாடுகள் கொட்டடி திரும்பின,
உணவு தேடியலைந்த
பறவைகள் கூடு திரும்பின,
பணி முடித்த
மனிதர்கள் வீடு திரும்பினர்,
1. மரப்பாச்சி
தங்கக்கடைகளிலும் குழந்தைகள்
விரும்புவது வண்ணமயமான பலூன்களைத்தான்.
பொருட்காட்சி மைதானத்தில் சின்னவனுக்கு
சோட்டாபீம் பொம்மை பிடித்துப்போனது.
பெரியவனுக்கு அத்தனை
வெளிநாட்டுக்கார்ப்பெயர்களும் அத்துப்படி
நிசான் வாங்கவேண்டுமென்றான்
நிசமாக ஓர் நாளேன்றான்.
குழந்தைகள் விளையாடவென்று
முன்பே அம்மா சேர்த்துவைத்த
மரப்பாச்சியும் செப்புச்சாமான்களும்
சாக்குக்குள் விளையாடிக்கொண்டிருக்கின்றன
ஒன்றோடொன்று.

1. நகரம்-நரகம்
நகரத்தில் நாங்கள்
தொலைந்து கொண்டிருக்கிறோம்
சன்னல் திறவா
ஐப்பானிய கார்களில்
பறக்கும் சிங்கப்பூரர்களுக்கு
முகங்கள் முக்கியமில்லை
ரசித்தல் அகராதியில்
அகப்படாத வார்த்தை
*எம். ஆர். டி. கதவுகள்கூட
எங்களுக்கு அவசியமில்லை
இடைவெளி குறைந்தும்
தனிமை பழகிவிட்டது
மாயா ஏஞ்சலோ (1928 - 2014)
1928 ஆம் ஆண்டு கறுப்பின அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த மாயா ஏஞ்சலோ (மாகிரட் ஆன் ஜான்சன்), வட கரோலினாவிலுள்ள தனது வீட்டில் இருதய நோயின் காரணமாக, கடந்த மே 26 ஆம் திகதி, தனது 86 வயதில் காலமானார். சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், தனது எட்டு வயதில் தாயாரின் காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காரணத்தால் அதிர்ச்சியில் பேசும் திறனிழந்து பல வருடங்களை துயரத்தோடு கழித்தவர். வறுமையினாலும், இனப்பாகுபாட்டின் காரணத்தாலும் பல துயரங்களை அனுபவித்தவர். எழுதுவதோடு நிற்காமல், நடைமுறை வாழ்க்கையில் சிறந்த முறையில் சாதித்துக் காட்டியவர் இவர். தனது வாழ்நாள் முழுவதும் காத்திரமானதும், பிரபலமானதுமான பல கவிதைகளை எழுதியுள்ள இவர், திரைப்படத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார். ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்ட இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றில்லாத போதிலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள முப்பதிற்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன.
1
யார் எத்தனை கேலி செய்தாலென்ன…? ஜோல்னாப் பையின் அழகே தனி தான்!
என்னவொரு உறுதி! என்னவொரு நளினம்!
எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் அதில்அடுக்கிவிட முடியும்; அடைத்துவிட முடியும்.
தோளில் மாட்டித் தூக்கிசென்றால் பாரந் தாங்கலாகாமல்
கையுங் கழுத்தும் இற்றுவிழக் கூடுமே தவிர
‘பை’யின் பிடி யறுந்துபோகாது.
‘ஆள் பாதி; ஜோல்னாப் பை மீதி’ என்பதும்
அர்த்தமுள்ள பொன்மொழிதான்!
2
ஆனால் ஒன்று _ சமீபகாலமாக ஜோல்னாப் பைக்குள்
புத்தகங்கள் குறைந்து தராசுத்தட்டுகள் நிறையவாகிவருகின்றன.
விதவிதமான அளவுகளில் துலாக்கோல்கள் இருக்கமுடியும்.
ஆனால், எடைக்கற்கள் கூடவா?
அதாவது, ஒரே எடையளவை ஒவ்வொருவருக்கும், இல்லை, வேண்டும்போதெல்லாம், வெவ்வேறு எடையாக்கிக் காட்டுபவை!
சபிப்பு
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
சமரின் ஆயுதங்கள்
நித்தம்
எழுப்பும் ஒலி
ஒரு புறமாய்
இதயத்துள் வலிக்கிறது...
ரகசியமாக
அன்பை எடுக்கவும்
கொடுக்கவும்
உரிமை பறிபோகாமல்
உலகம்
காதலும் புரிகிறது...
புன்னகை மலர்ந்து
கவிதை படைக்க
மனது துணியும்போது...
இரு குருவிகளின் காட்சி
கனத்து
களைக்கிறது நரம்பு
வார்த்தைகளை மீறுகின்றது
துயரம்..
மழைக் காலநிலையென்ற போதும்
தெளிவானதும் அமைதியானதுமான அந்தி நேரம்
வாசிகசாலை முற்ற சீமெந்து வாங்கின் மீது
நாங்கள் அமர்ந்திருந்தோம்
எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்
இறந்த காலத்துக்கு மீளச் செல்ல இயலாத
கதைத்துக் கொள்ளாத போதிலும்
இதயங்களில் ஒன்றே உள்ள,
கவிதைகள் எழுதிய போதிலும்
வாழ்க்கையை விற்கச் செல்லாத
நட்புக்கள் இடைக்கிடையே வந்து அமர்ந்துசென்ற
சீமெந்து வாங்கும் கூட ஆறுதலைத் தரும்
கடற் திராட்சைகள்
மூலம்: டெரெக் வால்காட்
தமிழில்: ரா பாலகிருஷ்ணன்
ஒளியில் சரியும் அப்பாய்மரம்
தீவுகளால் களைப்புற்றுள்ளது
இரு பாய்மரப் படகொன்று கரிபியனை நோக்கி
வீடடைய ஏஜியன் வழி இல்லம் நோக்கி
ஓடிசியுஸ் செல்லலாம்
திராட்சைக் கொத்துகளின் கீழ்
தந்தையும் மகனும் கொண்ட பேராவல்
கல் பறவையின் ஒவ்வொரு ஓலத்திலும்
நசிக்கவின் பெயரை உணரும் காமுகன் போல்
உன்னிடமொன்றைச் சொல்லும்
தேவை எனக்கிருக்கிறது
எனினும் நான் வாய் திறக்கும்வரை
பார்த்திருந்த அவர்கள் எனது நாவைச் சிதைத்தனர்
உன்னைப் பார்க்கவென
நான் விழிகளைத் திறக்கையில் அவர்கள்
அவற்றைப் பிடுங்கி எறிந்தனர்
அச்சமானது தாய்த் தேசத்தைச் சூழ்கையில்
உனை நான் இதயத்தில் உருவகித்தபடி
போய்க் கொண்டிருந்தேன்
எனைப் பிடித்துக் கொண்ட அவர்கள்
இதயத்தைத் துண்டம் துண்டமாகச் சிதைத்து
உனை என்னிடமிருந்து பறித்துக் கொண்டனர்
(1)
பார்க்கும்போதெல்லாம் ஆசிரியர் கையில் பிடித்திருக்கும் குச்சி
வெவ்வேறாய் காட்சியளிக்கிறது குழந்தைக்கு….
ஒரு சமயம் பாம்பு _ ஒரு சமயம் சாட்டை _
ஒரு சமயம் ‘பெல்ட்’ _ ஒரு சமயம் முதலை _
ஒரு சமயம் சூட்டுக்கோல் _ இன்னும்…..
கற்பனையும் நிஜமும் கலந்ததோர் வெளியில்
வாழவேண்டியிருப்பதில்
குழந்தையின் உள்ளமெங்கும் ஊமைரணங்கள்.
(2)
”வணக்கம் சொல். பணிவு வேண்டாம்?”
என்று உறுமும் ஆசிரியரின் கண்களிலிருந்து பாய்ந்துவரும் காட்டெருமைக் கொம்புகள்.குத்திக் கிழிக்க
குருதி பெருகும் குழந்தை மனதை
மிச்சம் மீதியில்லாமல் கவ்வுகிறது குகையிருட்டு.
அன்னையின் கருணை அமுதம் போன்றது
அன்பே தாயென வடிவம் பெற்றது
உயிரைக் காத்திடும் பண்பில் உயர்ந்தது
உறவே நிறையென உள்ளம் நிறைந்தது
இர.மணிமேகலை (பூ.சா.கோ.அர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி.,கோயம்புத்தூர்.) கவிதைகள் இரண்டு!
1. பூலோக வாசிகள்
வானளாவி நிற்கும் கட்டிடக்கூரைகள்
பிரபஞ்சவெளிக்குச் செய்தியனுப்புகின்றன
தார்ச்சாலைகளில் பாய்ந்துசெல்லும் மகிழ்வுந்துகளில்
உறுமும் புலிகள் பயணிக்கின்றனவாம்
பலதரப்பட்ட மலைப்பாம்புகள் அவற்றைச்சாகசத்துடன்
ஓட்டுகின்றன என்பதும் குறிப்பு
கவனிக்க...
பயணத்தின்போது சில இடங்களில்
நாசுக்கும் அழகும் மிளிரும் மான்தென்படும்
பாம்பு அதனிடம்
கண்சிமிட்டிக் கரம் குலுக்கி நகரும்..
ஒதுக்கப்பட்ட தவளைகளைக்கண்டால்
பாம்புக்குக் கொண்டாட்டம்
வயிற்றை நிரப்பிக்கொள்ளும்
விழுங்கும் சிங்க ராஜாக்களைக்கண்டால்
கீழ்நோக்கிய பார்வையுடன் பாதம் பணியும்
(1)
கால்காசு கிடைக்க வழியில்லாதபோதிலும்
கவிதைமேல் காதலாகிக் கசிந்துருகி
காயங்களுக்கு வடிகாலும்,
மாயவுலகத் திறவுகோலுமாய்
காலங்காலமாய் எழுதப்பட்டவைகளிலெல்லாம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்
கால தேச வர்த்தமானங்கள்;
தேடப் பொருதியின்றி திட்டித் தீர்க்கிறீர்கள்.
பொருட்படுத்திப் படிக்கும் பெருந்தன்மையின்றி
உங்களுக்கு முன்னே எழுதிய கவிஞர்களை பிரச்னையற்றவர்களாக்கி
பெருந்தனக்காரர்களாக்கி
கவிதையைப் பொழுதுபோக்காக பாவிக்கும் பித்தலாட்டக்காரர்களாக்கி
பேட்டை தாதாக்களாக்கி
சோதாக்களும் பீடைகளும் பீத்தைகளுமாக்கி
சேறு பூசி, செம்புள்ளி கரும்புள்ளி குத்தி,
சிலுவையிலறைந்து முடித்து
குண்டாந்தடியை செங்கோலெனச் சுழற்றியபடி
பரிவாரங்களோடு பவனி வந்து
உங்களுக்கு நீங்களே விசுவரூப சிலைவடித்துக்கொள்கிறீர்கள்
உலக அரங்குகளில்.
உண்மையான கலகம் இதுவல்ல என்று
உணர்வீர்களோ என்றேனும்?
சித்திரைப் பெண்ணே சித்திரைப்பெண்ணே
சேதி தெரியுமா?
தமிழர் இனம் இங்கே
தடம் புரண்டு; தறிகெட்டு
பல்லாண்டுத் தரிசுகளாய்
வாழ்கின்றார் கொடுமைதன்னில்
மீட்டெடுப்பாரில்லை
கடைக்கண் பார்வை வேண்டுகின்றோம்
சித்திரைப் பெண்ணே
மடிதனிலே பால் வார்ப்பாய்
மாந்தராய் வாழவைப்பாய்
சிகரத்தில் வைத்தே அழகு செய்வாய்.......!