'அன்னையர் தினக்கவிதை': அகத்தில் வைத்துப் பூசிப்போம்
மே 8 - அன்னையர் தினம்!

பெற்றவளோ தவித்திருக்க பெருஞ்செலவில் ஊரழைத்து
நற்றமிழும் மறந்துவிட்டு நாகரிகம் தனிலமர்ந்து
சுற்றமெலாம் சூழ்ந்திருக்க சுவையாக விருந்தளித்து
வெற்றிக் களிப்பிலவர் வீற்றிருந்து மகிழ்ந்திடுவார் !
தான்சுமந்து பெற்றபிள்ளை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு
தனக்குவரும் வலியனைத்தும் தாயேற்று நின்றிடுவாள்
ஊனுறக்கம் தனைப்பாராள் ஒருகணமும் தனையெண்ணாள்
தான்பெற்ற பிள்ளைதனை தரமாக்கத் துடித்துநிற்பாள் !
பள்ளிசெல்லும் பிள்ளைபார்த்து துள்ளிநிற்கும் அவள்மனது
கள்ளமில்லா மனத்துடனே கன்னமதில் கொஞ்சிடுவாள்
பள்ளிவிட்டுப் பிள்ளைவரும் பாதைதனில் நின்றுஅவள்
துள்ளிவரும் பிள்ளதனைத் தூக்கிடுவாள் அன்பொழுக !


இம்முறை 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகும் கவிதைகளின் விபரங்கள் வருமாறு:
தமிழ்
நம்பிக்கையை
மழை வெளி நிலத்தின் பட்சிகள்









பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









