புதிய பண்பாட்டுத் தளம் அங்குரார்பண நிகழ்வு!
எதிர்வரும் 14.10.2012 (ஞாயிறு) அன்று ஹட்டனில் உள்ள கிறித்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில்(ஹைலன்ஸ் கல்லூரிக்கு அருகாமையில்) காலை 10.00 மணிக்கு "புதிய பண்பாட்டுத் தளம்" (புதிய பண்பாட்டுக்கான வெகுஜன அமைப்பு) பிரகடனப்படுத்தப்படவுள்ளது. திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைப்பெறவிருக்கும் இந்நிகழ்வில், அங்குரார்பண உரையை கலாநிதி. ந.இரவீந்திரன் நிகழ்த்த உள்ளார். இவைத் தவிர புதிய பண்பாட்டு அமைப்புக்கான தேவைக் குறித்து திரு. மோகன் சுப்பிரமணியம், கவிஞர்.சு. முரளிதரன், திரு. அ.ந. வரதராஜ், சிறுகதையாசிரியர் கொ. பாபு, கலைஞர் பிரான்ஸிஸ் ஹெலன், திரு. சு உலகேஸ்பரா முதலானோர் உரையாற்ற உள்ளனர். இந்நிகழ்வில் மூத்த இடதுசாரி தோழர்களான கே. சுப்பையா, நீர்வை பொன்னையன் முதலானோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இன்றைய உலகமயமாதல் சூழலில் பன்னாட்டுக் கொம்பனிகளின் வேட்டைக்காடாக எமது மண் மாற பண்பாட்டுச் சிதைவுகள் முனைப்பாக்கப்பட்டு வருகிறது. சொந்தப் பண்பாட்டை இழக்கும்போது பிறர்க்குப் பூரண அடிமையாதல் தவிர்க்க முடியாது என்றவகையில் பண்பாட்டுத் தளத்திலான இந்தத் தாக்குதல்கள் என்பதறிவோம். இத்தகைய இருள் சூழ்ந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

காலம் - 06.10.2012 சனிக்கிழமை
[நூலகத் திட்டத்தின் முக்கிய பங்களிப்பாளர்களிலொருவரான புவனேந்திரன் ஈழநாதனின் மறைவுச் செய்தி கேட்டுத் துயருற்றோம். அவருடன் நேரடித் தொடர்பில்லாவிட்டாலும் , ஆரம்ப காலகட்டத்தில் மின்னஞ்சல் மூலம் தொடர்புகள் கொண்டிருந்தோம். இவரது இழப்பு நூலகத் திட்டத்தைப் பொறுத்தவரையில் பேரிழப்பே. அவரது அகால மறைவால் துயருறும் நூலக அறக்கட்டளைக் குழுவினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் 'பதிவுகள்' தனது ஆழ்ந்த அநுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவு பற்றிய நூலக அறக்கட்டளையினர் வெளியிட்ட செய்தியினையும் பதிவுகள் தனது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்]
தமிழர்விடுதலைக் கூட்டணியின் முக்கிய உறுப்பினரும், தமிழ் மகளீர் பேரவையின் முன்னாள் உப தலைவியும், இலங்கை காந்திய அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளருமான திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்களின் நினைவு நிகழ்வு ; எதிர்வரும் 07.10.2012 ஞாயிறு பி.ப 3.00மணிக்கு பாரீசில்( பிரான்ஸ்) நடைபெற இருக்கின்றது. இந் நினைவு நிகழ்வில் பிலோமினா லோறன்ஸ் அவர்களின் அரசியல் - சமூகப் பயணங்களின் ஒளிப்படத் தொகுப்பான "நினைவின் யாத்திரை "யும், "நினைவுத் திசை " என்னும் நினைவுப் பகிர்வுகளின் தொகுப்பு நூலும் வெளியிடப்பட இருக்கின்றன. இந் நினைவு நிகழ்வில் திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்களோடு சமகாலத்தில் பயணித்த அரசியல் - சமூக செயல்பாட்டாளர்கள், நண்பர்கள் பலரும் கலந்துகொண்டு தங்கள் அனுபவ பகிர்வுகளையும் கருத்துக்களையும் வழங்கவுள்ளனர். இந் நிகழ்வு பின்வரும் முகவரியில் நடைபெறுகின்றது.
வணக்கம், மூத்த கலைஞர் - தணியாத தாகம், அண்ணை ரைட் புகழ் கே.எஸ். பாலச்சந்திரனுக்குப் பாராட்டு விழா. எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் 'பாலச்சந்திரன் என்றொரு கலை ஆளுமை' வரலாற்று நூல் வெளியீடும் பாராட்டு விழாவும்.
[பதிவுகள் வாசகர்களுக்கு எழுத்தாளரும், இலக்கிய ஆய்வாளருமான திரு. நுணாவில் கா.விசயரத்தினத்தை அறிமுகப்படுத்தத் தேவையில்லை. அவரது கட்டுரைகள் பல பதிவுகளில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவரது 'பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்' என்னும் நூலுக்கு இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (மட்டக்களப்பு) வழங்கும் 2011ஆம் ஆண்டுக்குரிய மிகச்சிறந்த இலக்கிய ஆய்வு நூலுக்கான விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகிறோம். - பதிவுகள்] இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (மட்டக்களப்பு) அனைத்துலக ரீதியில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் இலக்கிய நூல்களுக்குப் பல பரிசுகளை வழங்கி வருகின்றனர். அதில் 2010இல் வெளிவந்த சிறந்த தமிழ் நூல்களாக இருபது (20) ஆசிரியர்களின் நூல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இந்த வகையில் லண்டன் எழுத்தாளரும், இலக்கிய ஆய்வாளருமான நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களின் 'பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்' என்ற நூல் தமிழ் மொழியில் வெளிவந்த மிகச் சிறந்த இலக்கிய ஆய்வு நூலெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந் நூலின் ஆசிரியர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் கொழும்புக் கணக்காய்வுத் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராக (Superintendent of Audit) கடமையாற்றி ஓய்வு நிலை பெற்றவர். அரசு, சபை, கூட்டுத்தாபன சேவைகளின் கணக்குகளைக் கணக்காய்வு செய்து, அறிக்கைகளைச் சிறீலங்கா நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து, நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுக் கூட்ட விவாதங்களிற் பங்கேற்றிய அனுபவமும் உடைய இவர், ஒரு பட்டதாரியும் பட்டயம் பெற்ற கணக்காய்வாளரும் ஆவார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியூசெஞ்சரி புத்தக நிறுவனமும் இணைந்து ஆண்டு தோறும் சிறந்த படைப்புக்களை தேர்வுசெய்து விருது வழங்கிவருகிறது. சென்ற ஆண்டு வெளியான பதின்னான்கு நூல்கள் இவ்விருதுக்கு தகுதியானவையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அவற்றுள் கனடாவாழ் எழுத்தாளர் அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுப்பிற்கு சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமிவிருது கிடைத்துள்ளது. அகிலின் இச்சிறுகதைத் தொகுப்பிற்கு ஏற்கனவே பல விருதுகள் கிடைத்துள்ளன. மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர்விருது, கவிதை உறவு சஞ்சிகையின் சிறந்த சிறுகதை நூலுக்காக அமரர் சு.சமுத்திரம்விருது, புதுவை நண்பர்கள் தோட்டத்தின் இலக்கியவிருது, கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் சிறந்த நூலுக்கான விருது போன்றன கிடைத்த நிலையில் எதிர்வரும் அக்டோபர் 2ஆம் திகதி கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் இலக்கியவிருது கிடைக்கவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி - 2012 இல் இந்நூலுக்கு சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமிவிருது கிடைத்துள்ளது. பெருமைக்குரிய இப்படைப்பாளிகள் திருவண்ணாமலை கலை இலக்கியப் பெருமன்ற கலைவிழாவில் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய் பீம் காம்ரேட் - ஆவணப்படம் திரையிடல் & டி.வி.டி. வெளியிடல்

தமிழில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் முளைத்துவருகின்றன. அது தமிழ், சீரிளமைத்திறம் வாய்ந்த மொழிதான் என்பதற்கான ஓர் அடையாளம். ஆனால் பதிப்பகங்களின் எண்ணிக்கையில் பாதி அளவுகூட தமிழில் சிறந்த புனைவுசாரா (non-fiction) எழுத்தாளர்கள் இன்று இல்லை. இந்த நிலையில் மாற்றத்தைக் கொண்டுவர ஆழி பப்ளிஷர்ஸ் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குகிறது. அதன் மூலம் புதிதாக நூல் எழுத ஆர்வமுள்ளவர்கள், தொழில்முறை நூலாசிரியர்களாக ஆவதற்கான பயிற்சியை அது வழங்கவுள்ளது. நம்மில் பலருக்கு பல்வேறு துறையில் நிபுணத்துவமோ, தீராத ஆர்வமோ அல்லது ஆழ்ந்த அனுபவ ஞானமோ இருக்கலாம். அது அரசியல், நாட்டு நடப்பு, வரலாறு, வாழ்க்கை வரலாறு, மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், சமூகம், கலாச்சாரம், இயற்கை, சுற்றுச்சூழல், உளவியல், வாழ்வியல் என எந்தவிதமான அறிவுத்துறை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம்.
தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி நல்ல இலக்கியங்களின் வரவுகளை வரவேற்று தமிழ் நாட்டிலுள்ள நாமக்கல் கு.சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை, கடந்த 4 ஆண்டுகளாக சிறந்த நூலகளுக்குப் பா¢சு அளித்து வருகிறார்கள். போட்டியில் கலந்துகொள்ளும் நூல்களை நடுநிலையான நீதிபதிகளைக்கொண்டு தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில் இவ்வாண்டு நமது உள்ளூர் எழுத்தாளரும் கவிமாலை பொறுப்பாளருமான புதுமைத்தேனீ மா. அன்பழகன் எழுதி சென்ற ஆண்டு வெளியிட்ட 6 குறு நாவல்களைக் கொண்ட "என் வானம் நான் மேகம்" என்கிற நூலுக்கு முதல் பரிசு கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பா¢சளிப்பு விழாவில் அன்பழகனுக்கு 10,000 ரூபாய் ரொக்கமும், கேடயத்துடன் சான்றிதழும் கொடுத்துச் சிறப்பிக்க இருக்கிறார்கள். உள்ளூர் எழுத்தாளர் மா.அன்பழகனை தமிழ்முரசு பாராட்டுகிறது. தகவல்: 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









