இலங்கையில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு


அவுஸ்திரேலியாவில் இயங்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின்றன. இரண்டு தமிழ்நாவல்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாவதுடன் தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட சில சிறுகதைகளைக்கொண்ட தொகுப்பு நூலும் வெளியிடப்படவிருக்கின்றன. அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக வதியும் இலங்கையர்களான டொக்டர் நொயல் நடேசன் மற்றும் லெ.முருகபூபதி ஆகியோரின் புத்தம் புதிய மொழிபெயர்ப்பு படைப்புகளே இந்த வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகின்றன. ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பில் பணடாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாலை 5 மணிக்கு செயற்குழுக்கூட்ட அறை F இல் வெளியிடப்படும் குறிப்பிட்ட மூன்று நூல்களின் விபரம் வருமாறு:

- ஞாயிறு, டிசம்பர் 30, 2012 - உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் ‘ஞானம்’ 150 வது சிறப்பிதழுக்கான அறிமுகநிகழ்வு 30.12.2012 ஞாயிறு காலை 9.30 மணிக்கு யா/தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு எழுத்தாளர் சீனா உதயகுமார் தலைமை வகித்தார். சிறப்பிதழ் பற்றிய அறிமுகவுரையை ஞானம் நிர்வாக ஆசிரியர் ஞா. பாலச்சந்திரன் நிகழ்த்தினார். தொடர்ந்து உரைகள் இடம்பெற்றன. கட்டுரைகள் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளரும் எழுத்தாளருமாகிய இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார். கவிதைகள் பற்றிய உரையை கவிஞர் கருணாகரனும்; சிறுகதைகள் பற்றிய உரையை சின்னராஜா விமலனும்; நேர்காணல், கருத்தாடல், இதழ்வடிவமைப்பு பற்றிய உரையை தானாவிஷ்ணுவும் நிகழ்த்தினர். சிறப்பிதழின் முதற்பிரதியை கலாபூஷணம் மா. அனந்தராசன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. ஏற்புரையை ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனும் நன்றியுரையை சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர்.
கருத்தாடல் அரங்கு என்ற நிகழ்வை புதிய பண்பாட்டுக்கான வெகுஜன தளம் ஒழுங்கமைத்துள்ளது. இந்நிகழ்வு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 06- 01-2013 அன்று மாலை: 4.00 மணிக்கு கலாநிதி ந. இரவீந்திரன் தலைமையில் நடைப்பெறும். வுpமர்சனக் கருத்தாடலில் திருவாளர்கள் . தி.ஸ்ரீதரன் (சுகு), மல்லியப்புசந்தி திலகர், சட்டத்தரணி மர்சூம் மௌலானா, கொ. பாபு, லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக்கொள்வார்கள். இந்நிகழ்வில் சிறப்பம்சமாக சபையோர் கருத்தாடல் நடைப்பெறும்.
அனைவருக்கும் வணக்கம், வரும் ஜனவரி 3 2012 அன்று திருவல்லிக்கேணி பெரியதேருவில் உள்ள நூலகத்தில் என்னுடைய இரண்டாவது நூல் (முதல் ஹைக்கூ நூல்) 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்' வெளியிடப்பட உள்ளது. நூலின் பெயர்: 'குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்'; ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்; விலை: ரூ.60; பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்; நூலின் வகை: ஹைக்கூ கவிதைகள். முழுக்க முழுக்க குழந்தைகளைப் பற்றிய ஹைக்கூ கவிதைகள் மட்டுமே மட்டுமே இந்த நூலில் இடம்பெறுகின்றன. வாங்கிப் படியுங்கள். உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள். கவிதை நூல் வெளிவரப்போகும் விடயத்தைத் தெரியப்படுத்துங்கள். அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் என்னுடைய கீழ்க்கண்ட இரண்டு கவிதை நூல்கள் சென்னைப் புத்தகத் திருவிழாவில் இருவாச்சி இலக்கியத் துறைமுகம் சார்பில் கடை எண் 554 ல் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை 23-12-2012 காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி கனடா பழைய மாணவர்களின் குளிர்கால ஒன்றுகூடல் ஸ்காபரோ, சீவெல் வீதியில் உள்ள தேவாலய மண்டபத்தில் மாலை 6:00 மணியளவில் நடைபெற்றது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், கல்லூரிக் கீதம் ஆகியன இடம் பெற்றன. அவற்றைத் தொடர்ந்து எம்மினத்தின் விடுதலைக்காகத் தம்முயிர் தந்தவர்களுக்காக ஒருநிமிட மௌன அஞ்சலி இடம் பெற்றது. அடுத்து சிறுவர் முதல் பெரியோர் வரை பங்குபற்றிய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. முன்னாள் நடேஸ்வராக் கல்லூரி ஆசிரியை எழுத்தாளர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம், கல்லூரி ஆரம்பமான காலத்து வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு விரிவாக எடுத்துச் சொன்னார்.

பிரான்ஸ் நாட்டில் வதியும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவன் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கௌரவிக்கப்பட்டார். இவரது 'இளங்கோவன் கதைகள்" சிறுகதைத் தொகுதி 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" என்ற பெயரில் புதுடில்லியிலுள்ள பிரபல இந்தி மொழிப் பதிப்பகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டது. அண்மையில் (27 செப்டம்பர் 2012) புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'புலச் சிதறலுக்குள்ளானோரின் குரல்கள்" என்ற தலைப்பிலான கருத்தரங்கில்ää 'இளங்கோவன் கதைகள்" இந்தி மொழிப் பதிப்பான 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. இந்நூல் குறித்து இந்தி மொழிப் பேராசிரியர்கள் ஆய்வுரை நிகழ்த்தினர். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் கலாநிதி என். சந்திரசேகரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இந்தி மொழிப் பேராசிரியரும் நூலினை இந்தியில் மொழிபெயர்த்தவருமான பேராசிரியர் எச். பாலசுப்பிரமணியம் அறிமுகவுரை நிகழ்த்தினார். 'ஈழத்து இலக்கியத்தில் சிறுகதை வளர்ச்சி" குறித்து நூலாசிரியர் வி. ரி. இளங்கோவன் சிறப்புரையாற்றிச் சபையோரின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டார். பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ரங்கம்மாள் விருது இவ்வாண்டு தமிழ்மகனுக்கு அவரின் “ வெட்டுப்புலி “ நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.25,000 ரூபாய் பரிசுத்தொகை கொண்டது அப்பரிசு ( உயிர்மை வெளியீடு. பதிப்பாளருக்கும் பரிசு உண்டு ) இரு ஆண்டுகளுக்கு ஒரு நாவலாசிரியருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. பிரபஞ்சன், சிவசங்கரி, சுப்ரபாரதிமணீயன், நாஞ்சில்நாடன், சி.ஆர். ரவீந்திரன் , வே சபாநாயகம், மோகனன், நீலபத்மநாபன் போன்றோருக்கு இவ்விருது இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது. கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளைக்கு இது வெள்ளிவிழா ஆண்டு.நிரந்தரமான ஓவியக்கூடம், நூட்பாலைக்கண்காட்சி, ஆண்டுதோறும் பதினைந்து கூட்டுக் கண்காட்சிகள், ஓவியப்பட்டறைகள், ஓவிய பயிற்சி முகாம்களை இது நடத்துகிறது. இதன் வெள்ளி விழா கொண்டாட்டம் டிசம்பரில் தொடங்கியது.அவ்விழாவில் தலைமை விருந்தினராக்க் கலந்து கொண்ட கிருஸ்ணராஜ் வாணவராயர் “வித்தியாசமாக இருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். எழுத்தாளர்களும் கலைஞர்களும் வித்தியாசமானவர்கள். நான் வித்தியாசமாக இருப்பதை பார்த்து சிரிக்கிறீர்கள். நாம் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்துச் சிரிக்கிறேன். என்றார் விவேகானந்தர். ஆன்மீகமும் அறிவுவியலும், பகுத்தறிவும் கலந்த சிந்தனை மிக முக்கியம். நாளைய உலகில் நல்ல பண்பு கொண்ட மனிதர்கள்தான் அதிகம் இருக்கமாட்டார்கள்.அவர்களை உருவாகுவதில் கலைக்கும், எழுத்துக்கும் பங்கு உண்டு” என்றார்.
- 14 டிசம்பர் 2012 - கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, இவ்வருடம் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஜி.சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன், பம்பாய் தமிழ் சங்கம் வெளியிட்டு வந்த 'ஏடு' இதழில் தன் இலக்கியப்பணியைத் தொடங்கினார். 1975-ம் ஆண்டு வெளிவந்த 'விரதம்' சிறுகதையில் தொடங்கி, முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருகிறார். இருபத்தைந்து வயதிலேயே வேலை நிமித்தமாக சொந்த ஊரை விட்டுச் சென்றிருந்தாலும் இவரது படைப்புகளில் நாஞ்சில் நாட்டு மக்களும், மொழியுமே பிரதானமாக வெளிப்படுகின்றன. இவர் சங்க இலக்கியங்களிலும் கம்பராமாயணத்திலும் நல்ல பயிற்சியும் ஈடுபாடும் கொண்டவர். இதுவரை 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுப்புகள் என வெளியிட்டுள்ளார்.


லண்டன் மேடைகள் கடந்த சில மாதங்களாக பரதநாட்டியம், பாட்டு, மிதங்கம், வயலின், வீணை, புல்லாங்குழல் என்று களை கட்டி கலைப் பூரிப்புடன் பிரகாசித்துக் கொண்டிருந்தன. ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளான சர்ப்பதனா நாகேஷ்வரன், சஜந்தனா நாகேஷ்வரன் சகோரதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் லண்டன் வெயர் வில்ட் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. ‘புஷ்பாஞ்சலி, விநாயகர் ஸ்துதி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், கணபதி தலாட்டு, கீர்த்தனம், சிவ தாண்டவம், தில்லானா என்ற ஒழுங்கில் விறுவிறுப்பு, கவர்ச்சி, கர்ச்சிதம் நிறைந்த நடன உருப்படிகளோடு பார்வையாளர்களை கட்டி வைத்த பெருமை ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளான சர்ப்பதனா நாகேஷ்வரன், சஜந்தனா நாகேஷ்வரன் சகோதரிகளை பெருமையாக நோக்க வைக்கிறது என்று பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த London Oriental Examination Board இன் Director கானபூஷணம் ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் தெரிவித்திருந்தார். திறமையான பக்கவாத்தியக் கஞைர்களாhல் அரங்கு சிறப்படைந்திருந்ததையும் மேலும் அவர் பாராட்டியிருந்தார்.
தனித் தமிழ் பெயர்களுக்கு 1500 வெள்ளிகள் பரிசு: தனித்தமிழ் பெயர்களுக்கு ஆயிரம் வெள்ளிப் பரிசுத் திட்டத்தில் பங்குபற்ற விரும்பும் பெற்றோர்களிடம் இருந்து அதற்கான விண்ணப்பங்கள் கேட்கப்படுகின்றன. 2007 - 2012 ஆம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்கள் யாவும் 2013 தைத் திங்கள் (சனவரி) 10 ஆம் நாளுக்கு முன் கீழ்க் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். அதன் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் தகுதிபெறும் போது குடவோலை மூலம் பரிசு பெறுபவர் தேர்ந்தெடுக்கப் படுவர். விழா நாளன்று நேரில் கலந்து கொள்பவர் மட்டும் பரிசுக்கு உரித்துடையவர் ஆவர். கழகத்தின் முடிவே இறுதியானது. கனடா முருகன் (கந்தசாமி) கோயில் அரங்கில் நடைபெற இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு 2044, தைப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவில் (சனவரி 14, 2013 (திங்கட்கிழமை) மாலை 5.30 மணி) பரிசு வழங்கப்படும்.
தோழமையுடன், "எதுவரை" இணைய இதழ்-06 பதிவேற்றப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்! இதழ் 07க்கு படைப்புகள்,கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் டிசம்பர் 06ம் திகதிக்கு முன் எமக்கு கிடைக்கக் கூடியதாக 
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் இவ்வருடத்திற்கான சிறுகதைப் பட்டறையின் முதலாவது நிகழ்வு ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் சென்ற வெள்ளிக்கிழமை 09-11-2012 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப உரையில் எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. சின்னையா சிவநேசன் அவர்கள் அடுத்த ஆண்டு எழுத்தாளர் இணையத்தின் 20வது ஆண்டு நிறைவைக் குறிப்பிடும் முகமாக மலர் ஒன்றும் வெளியிட உத்தேசித்திருப்பதாகவும், அதற்குரிய ஆயத்தங்கள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் இன்றைய காலக்கட்டத்தில் நம்மவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் வெகுவாக அருகி வருவதாகவும், இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இத்தகைய பட்டறைகளைத் தொடர்ந்தும் நடத்த இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
வணக்கம், இன்று (16-11-2012) கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஏற்பாடுசெய்திருந்த ஜீவநதி கனடா சிறப்பிதழ் குறித்த கலந்துரையாடலின்போது, பல ஆக்கபூர்வமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஜீவநதியின் தொடர்ச்சியான வருகைக்கு உதவப் பலரும் முன்வந்துள்ளமை ஒரு நல்ல அறிகுறியாகும். குறிப்பாக, வருடாந்த சந்தாவான 50 டொலர் ஒரு பெரியதொகை என்பதால், ஆறுமாத சந்தாவான 25 டொலரைக் கொடுப்பது பலருக்கும் வசதியாக இருக்கும் என கவிஞர் திருமாவளவன் அவர்கள் ஆலோசனையை ஒன்றை முன்வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட பலரும் உடனடியாக டொலர் 25 வழங்கி இன்றே தம்மை ஜீவநதியின் சந்தாதாரராக இணைத்துக்கொண்டனர். இந்த ஏற்பாடு உங்களுக்கும், உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் சிலருக்கும் வசதியாக இருக்கும் என நம்புகிறோம். அவ்வாறு ஆறுமாத சந்தாவைச் செலுத்தி, சந்தாதாரராக நீங்களோ உங்கள் நண்பர்களோ சேர விரும்பினால் அதற்குரிய பணத்தையும் உங்கள் தபால் முகவரியையும் என்னிடம் சேர்ப்பித்தால் எல்லோரதும் பணத்தையும் திரட்டி அனுப்பிவைத்து, மாதாமாதம் தபாலில் ஜீவநதி உங்கள் முகவரிக்கு வந்துசேர வழிசெய்ய முடியும். உங்கள் சம்மதத்தை இந்த மின்னஞ்சல் வழியாகவோ அல்லது எனது தொலைபேசி வழியாகவோ (416 - 627 6583) என்னோடு தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள். அது, ஈழத்திலிருந்து தமிழ் மீதும், தமிழிலக்கியத்தின் மீதும், தமிழ்ச் சமூகத்தின் மீதும் கொண்ட பற்றுதல் காரணமாக, இந்தத் தீக்குளிப்பு முயற்சியில் துணிந்து ஈடுபாடுள்ள அந்த இளம் ஆர்வலர்களுக்கு நீங்கள் செய்யும் ஒரு பெரிய உதவியாக இருக்கும்.
யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அம்பிகைபாகன் பற்றி யாழ். கல்வியல்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் முருகேசு கௌரிகாந்தன் எழுதிய 'அம்பிகைபாகன் ஆளுமைத்தடம்' என்னும் நூல் வெளியீடும், அவரது துணைவியார் திருமதி நகுலாம்பிகை அம்பிகைபாகனின் 90ஆவது பிறந்த நாள் விழாவும் அக்டோபர் 19, 2012 அன்று யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் மகேந்திரம் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம அதீதியாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கலந்துகொண்டார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நூலை வெளியிட்டு வைக்க, நூலின் முதற்பிரதியை அம்பிகைபாகனின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருமதி நகுலாம்பிகை அம்பிகைபாகன் மற்றும் நூலாசிரியர் முருகேசு கௌரிகாந்தன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். மேற்படி நூலில் திரு.அம்பிகைபாகன் அவர்கள் ஆற்றிய எழுத்துலக, சமய, பதிப்பு , கல்வி மற்றும் நிர்வாகப் பணிகள் மற்றும் அவரது வரலாறு பற்றிய விபரங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. மேலும் அவரது ஆளுமையினை நன்கு புரிந்துகொண்ட அறிஞர்கள் பலரின் அவர் பற்றிய கட்டுரைகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நூலின் பின் இணைப்பாகத் திருமதி நகுலாம்பிகை அம்பிகைபாகன் பற்றிய குறிப்புகளும், அம்பிகைபாகன் அவர்களது வாழ்வினை வெளிப்படுத்தும் நிழற்படங்களும், வாழ்த்துரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
நூலகம் நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் முயற்சியில் ‘ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல்’ என்ற செயற்பாடும் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வு 01.10.2012 அன்று சுன்னாகம் பொதுநூலகத்தில் இடம்பெற்றது. சோதிடம் மற்றும் மருத்துவம் சம்பந்தமான குறிப்பிட்ட தொகைச் சுவடிகள் முதற்கட்டமாக மின்வடிவத்திற்கு மாற்றப்பட்டன. இவ்வாறு 1385 சுவடிகளும் 75 வரையான பண்டைக்கால நாணயங்களும் மின்னூல் வடிவத்தில் ஆவணப்படுத்தப்பட்டன. ஓலைச்சுவடிகள் ஆவணமாக்கல் தொடர்பான பயிற்சி ஒன்றினை அண்மையில் பாண்டிச்சேரியில் நிறைவுசெய்து கொண்டு திரும்பிய நூலக நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சிவானந்தமூர்த்தி சேரன் அவர்களுடன், முனைவர் ஜெ. அரங்கராஜ், சுன்னாகம் நூலகர் கே. சௌந்தரராஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர், இதுபோன்ற தொடர் செயற்பாட்டில் ஈடுபட நூலகம் நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்புடையவர்கள் இம்முயற்சிக்கு உதவவேண்டும் என்பதும் நூலகத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது. 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









