”பாவையர் மலர்” வான்மதி!
தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தால் வாழ்க்கைப்ப் பாதையில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைக் கண்டு தளர்ச்சியடைந்து விடாமல் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கவேண்டும். சுய சிந்தனையுடன் முடிவெடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் நிலையிலிருந்து கீழிறங்கிவிடாமல் தக்க வைத்துக்கொள்ளவும் வேண்டும். அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கான வழிமுறைகளிலும் ஈடுபட வேண்டும். அப்படிப்பட்ட துணிச்சலும் திறமையும் கொண்டதொரு பாரதி விரும்புகின்ற புதுமைப் பெண்ணின் அறிமுகம் அண்மையில் கிடைத்தது. எழும்பூர் கென்னட் லேனில் உள்ள மதுரா ட்ராவல்ஸ் கலைமாமணி வீ.கே.டி. பாலனைப் பொது வாழ்க்கையில் சிறிதேனும் அக்கறை கொண்டோர் அனைவரும் அறிந்திருப்பர். ஏனெனில், அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையின் உச்சக்கட்ட நிலையை திட்டமிடுதலாலும், முயற்சியாலும் எய்தியவர். இந்நிலையில், அவர் ஆண்டுதோறும், தன் மகன், பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்ட்டாடி வருகின்றார்.

கவிஞர்கள் தங்களின் சிறந்த ஹைக்கூவிலிருந்து 3 ஹைக்கூ கவிதைகளை (இயற்கை சார்ந்தது) அனுப்பி வையுங்கள். முழு முகவரி, கைப்பேசி எண்ணோடு, கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ இலக்கணத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டியது அவசியம். இறுதி நாள் : நவம்பர் 30, 2012.
அமெரிக்காவிலுள்ள என்எக்ஸ்பீசெமிகன்டக்டர் நிறுவனத்தில் முதன்மைப் பொறிஞராகப் பணி புரியும் கதிரவன் கிருஷ்ணமூர்த்தி 'அடிப்படை ரேடியோ தொடர்பாடல்' (Fundamentals of Radio Communications) என்னுமொரு தமிழ் நூலொன்றினை இலத்திரனியற் துறையில் எழுதியுள்ளார். இந்நூல் தமிழகத்தில் அடையாளம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இத்துறையில் பயிலும் மாணவர்களுக்குப் பயன்மிக்க இந்நூலினை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
கம்பன் உறவுகளே வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் பதினொன்றாம் ஆண்டுக் கம்பன் விழாவை 11.11.2012 ஞாயிற்றுக் கிழமைப் பிற்பகல் 14.00 மணிமுதல் மாலை 20.30 மணிவரை L'espace Associatif des Doucettes, rue du Tiers, 95140 Garges les Gonesse என்ற இடத்தில் கொண்டாடுகிறது. உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். 
அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். இலங்கை தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக் குழுவானது, அகில இலங்கை ரீதியில் நடத்திய 'வியர்வையின் ஓவியம்' இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று 01.11.2012 பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை, மருதானை, டவர் அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறுகதை, கவிதை, பாடல், காவியம், புகைப்படம் ஆகிய பிரிவின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் முதற்பரிசு பெற்றவர்களுக்கு விருதுகளோடு, சான்றிதழ்களும், பரிசுகளும், ஏனையவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன. இந் நிகழ்வில், என்னால் எழுதப்பட்ட 'தாய்மை' எனும் சிறுகதையானது, முதலாம் இடத்திற்கான விருதையும், பரிசையும் வென்றது. அத்தோடு எனது கவிதைக்கு சிறப்புப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. எனது இலக்கியப் பயணத்தில் தொடர்ந்தும் என்னை எழுத ஊக்குவித்து வரும் உங்களிடம் இத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். என்றும் அன்புடன், - எம்.ரிஷான் ஷெரீப் - 
கடந்த வாரம் 12.10.2012 வெள்ளியன்று உயிரையும், தங்களது இழப்புகளையும் பொருட்படுத்தாது மற்றவர்களைக் காத்தற்பொருட்டு துணிச்சலுடன் அருஞ்செயல்களையும் , தியாகங்களையும் கனடிய மண்ணில் புரிந்தவர்களைக் கௌரவிக்கும் 40 ஆவது வருட தேசிய நிகழ்வு கனடிய ஆளுநர் டேவிட் ஜோன்சனின் ஒட்டாவோ "றிடோ" வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. விழாவில் முதலாவாதாகக் கௌரவிக்கபட்டு விருது வழங்கப்பட்டவர்களில் காலம் சென்ற "இளம் வீரன்" பிருந்தன் முதன்மையாக இருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் ஸ்காபுறோ (கனடா) நகரில் குளிர் நீர் நிறைந்திருந்த ஒரு குளத்தில் மூழ்கிய பாடசாலை நண்பன் ஒருவரை காப்பாற்றுவதற்காகக் குளத்தில் பாய்ந்து தனது உயிரை பலி கொடுத்த செல்வன் பிருந்தன் முரளிதரனை கௌரவிக்கும் வகையில் கனடாவின் ஆளுனர் நாயகம் சிறப்புப் பதக்கம் ஒன்றை அவரது பெற்றோரிடம் கையளித்தார். பிருந்தனது தந்தையான நடராஜா முரளிதரனும் , தாயாரான சத்தியசிறியும் (றஞ்சி) நிகழ்வில் பங்குபற்றி பிருந்தன் சார்பில் விருதினைப் பெற்றுக் கொண்டார்கள்.

தோழமை மிகு நண்பர்களே! இரண்டு விரிந்த தலைப்புகளில் இந்த உரையாடல் அரங்கினை நடாத்த ஆலோசிக்கிறோம்.
திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் குழந்தைகளை மையமாகக் கொண்ட குறும்படங்கள் திரையிடல் வெள்ளியன்று நடைபெற்றது.புதுவை யுகபாரதி, திருப்பூர் திருநாவுக்கரசு, கோத்தகிரி தவமுதல்வன் உட்பட பல குறும்பட இயக்குனர்கள் இயக்கிய குழந்தைகளின் கல்வி, சுற்றுசூழல் பாதுகாப்பு, குழந்தைத்தொழிலாளர்கள் நிலைமை, குழந்தைகளுக்கான கல்வி உரிமைகள் போன்றவற்றை மையமாகக் கொண்ட குறும்படங்கள் காட்டப்பட்டன. தாய்த்தமிழ்ப்பள்ளி அறக்கட்டளைத் தலைவர் மருத்துவர் முத்துசாமி, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் , தலைமை ஆசிரியை கிருஸ்ணகுமாரி,பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். குறும்படங்கள் பற்றி சிறந்த விமர்சனக் கட்டுரைகளை வழங்கிய மாணவர்கள் நர்மதா,தாரணி, வெங்கடேசுவரன், மீனாட்சி, அருண்குமார், ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு கோவை கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது (கே.சி.சி சாகித்யபுரஸ்கார் விருது) வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கும், மலையாள எழுத்தாளர் ஒருவருக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாண்டின் தமிழ் பிரிவிற்கான விருது சுப்ரபாரதிமணியனுக்கு வழங்கப்பட்டது. மலையாளத்தில் மினிமேன்னுக்கும். அவ்விழாவில் முன்னாள் கேரளா கலாச்சார அமைச்சர் பேபி, மலையாளத் திரைப்பட நடிகை கிருபா, திரைப்பட நடிகர் மேகநாதன், பாலக்காடு எம்.பி. ராஜேஸ், கோவை எம்.பி. நடராஜன், கேரள சாகித்ய அகாதமி செயலாளர் கவிஞர் ராமுன்னி, விஜயகுமார் குனிச்சேரி, ஸ்டான்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.எழுத்தாளர்களும் வாசகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
256-பக்கங்களுடன் 2010 ஆகத்தில் வெளி வந்த இந்நூல், இதன் ஆசிரியை நிலா எனும் பரமலிங்கம் உதயகுமாரியால் ஒக்தோபர் 2012ல் எனக்கு அனுப்பப் பட்டுள்ளது. இன் நூலின் பின்னணியையும் நூலாசிரியையின் 30-சொச்சம் வருட கால உடம்பியல் இயலாமை, அவரின் பிரச்சனைகள், வாழ்க்கையின் குறிக்கோள்கள் முதலியவற்றையும் முதலில் உற்று நோக்கிப் படித்தபின் அதன் உள்ளுடனை அங்கும் இங்குமாகத் தட்டிப் பார்த்துச் சுவைத்தேன். இப்பானையிலுள்ள பற்பல சோறுகளைப் பதம்பார்த்து ரசித்தபின் கீழ்வரும் கருத்துகளை எனக்கு மனமார்த்தமாக எழுந்து வந்த முறையில் பதிக்கிறேன். உண்மையில் 'நிலாவின் இந்திய வைத்திய உலா' என்றே தலையங்கம் கொடுக்கப்பட்டு இருக்கவேண்டிய நூல். ஏனெனில் அந்த அம்சமே இந்த நூலை நான் முதலில் படிக்க உந்திச் சென்றது.
அனைவருக்கும் வணக்கம், கடந்த 19-10-2012 அன்று என்னுடைய கவிதைநூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கவிஞர் திரு. வதிலைபிரபா அவர்களும், திரு. உதயகண்ணன் அவர்களோடும் நான் பகிர்ந்து கொண்ட நினைவுகள். தொடர்ந்த மழை. மறக்க முடியாத அனுபவம். பசுமையான நினைவுகள். மின்னஞ்சல் ஊடாக பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். நானும் நன்றி தெரிவித்தேன். விடுபட்டவர்களுக்கும் சேர்த்தும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
சென்ற ஞயிற்றுக்கிழமை கனடாவில் உள்ள ஸ்காபரோ விலேச் கொம்யுனிற்ரி மண்டபத்தில் ((Scarborough Village Community Center) குரு அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு தலைக்கோல் விருது வழங்கும் வைபவம் அரங்கம் நிறைந்த பார்வையாளர் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் அதைத் தொடர்ந்து பாலச்சந்திரனின் வரலாற்றுப் பதிவான ‘பாலச்சந்திரன் என்றொரு கலை ஆளுமை’ என்ற பாராட்டு நூலும் சோக்கல்லோ சண்முகத்தால் தொகுத்து, மொன்றியல் இரா. நடராஜா அவர்களின் அனுசரனையோடு வெளியிடப்பட்டது. பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற தலைக்கோல் விருது வழங்கும் விழாவை மொன்றியல் இரா. நடராஜா, தா. சண்முகநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அன்புடையீர், அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

‘ஆனைக்கோட்டைக்கு புகழ்பூத்த ஒரு இசைமரபும், இசைக்கலைஞர்களும் உள்ளனர். அந்த இசை மரபில் முற்போக்கு எழுத்தாளரும், மிருதங்கக் கலைஞருமான எஸ்.அகஸ்தியருக்கு தனித்த இடம் ஒன்று உண்டு. அந்த இலக்கியப் பெருமகனின் பேரனார் அகஸ்ரி ஜோகரட்னம் ஆனைக்கோட்டை இசைமரபின் இளம் வாரிசாக லண்டனில் மிருதங்க அரங்கேற்றம் நடத்தியிருப்பது குறித்து நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்’ என்று லண்டனில் நடைபெற்ற அகஸ்ரி ஜோகரட்னத்தின் மிருதங்க அரங்கேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையில் பிரபல மிருதங்க வாத்திய விசாரத் பிரம்மஸ்ரீ ஏ.என். சோமஸ்கந்த சர்மா அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் ‘அண்மைக் காலத்தில் நான் கலந்துகொண்ட மிருதங்க இசை நிகழ்ச்சிகளில் அகஸ்ரி ஜோகரட்னம் போல இத்துணை இளவயதில் அபூர்வமான இசை ஞானத்தைக் காட்டிய ஒரு இளவலை நான் கண்டது கிடையாது. அவருக்கு இந்த இசைஞானம் இறைவன் அளித்த கொடையாகும். தாளம் தவறாமல், சுருதி பிசகாமல் சங்கீத வித்துவான் மணிபல்லவம் கே. சாரங்கனின் வாய்ப்பாட்டிற்கு ஈடுகொடுத்து அவர் வாசித்த மிருதங்கம் பரவசமூட்டுவதாகும். இந்த அபூர்வமான மிருதங்க ஞானத்தை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு உண்மையில் பூரணமான இசைக்கச்சேரி போல அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். செல்வன் அகஸ்ரி தனக்கு வாய்த்திருக்கும் இந்த இசைத் திறமையை தொடர்ந்தும் பேணி இத்துறையில் கீர்த்தி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்’ என்றும் குறிப்பிட்டார்.
அன்பார்ந்த அண்ணா பற்றாளர்களுக்கு, வணக்கம்! அண்ணா பிறந்தநாளான 15.09.2012 அன்று முதல் அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் அண்ணா பற்றாளர்களும் உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் யாவரும் இலவசமாக படிக்கப் பயன்பெற
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து இலண்டனை வதிவிடமாக்கிக் கொண்ட டாக்டர் சிவ தியாகராஜா அவர்களின் 2008ஆம் ஆண்டின் 248-பக்க 'தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்' என்னும் 'ஒரு பேப்பர்' கட்டுரைத் தொடர் நூலுக்கு 2007க்கும் 2011க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த சிறந்த இலக்கிய ஆய்வு நூல் என தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கு. சின்னப்ப பாரதி அறக் கட்டளையினர் பரிசளிக்கத் தெரிவு செய்துள்ளனர். இதற்குரிய விருதைச் சென்ற 02-10-2012ஆம் திகதியன்று நாமக்கல்லில் நடை பெற்ற பரிசளிப்பு விழாவில் டாக்டர் சிவ தியாகராஜா அவர்களுக்கு வழங்கிப் பாராட்டப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார். இந் நூல் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் அணிந்துரையுடன் தமிழக மணிமேகலைப் பிரசுரத்தினால் வெளியிடப்பட்டது. சிவ தியாகராஜா கொழும்பு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இலண்டனில் தமிழ் மக்களின் நோயியல் தொடர்பான மரபியல் ஆய்வுகளுக்கு தத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றவர். மருத்துவத்துறையில் 40 ஆண்டுகளாக இலங்கையிலும் பிரித்தானியாவிலும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை இந்திய பிரித்தானியப் பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் கதைகளையும் தொடர் நாவல்களையும் எழுதியவர். இதுவரை 10 தமிழ் நூல்களும் நான்கு ஆங்கில நூல்களும் வெளியிட்டவர். லைலா-மஜ்னு, தேன் சிந்தும் மலர், கில்கமேஷ் காவியம், ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள், தமிழ் மக்களும் தழுவிய மதங்களும், மருத்துவக் களஞ்சியம், A Review of Ectopic Pregnancy, The King of Hearts, Peoples and Cultures of Early Sri Lanka, Siva Temples of Early Sri Lanka ஆகியன இவரது முக்கிய படைப்புக்கள். இவர் எமது பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். ஈழவர் இலக்கியச் சங்கமும் அவரைப் பாராட்டுகின்றது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









