நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் சிறுவர் இலக்கியத்துறைக்கான பரிசு பத்மா இளங்கோவன் பெறுகிறார்..!

இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளையின் 4 -ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர் இலக்கியத்துறைக்கான பரிசினைப் பெறுவதற்குப் பிரான்ஸ் நாட்டில் வதியும் பத்மா இளங்கோவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பத்மா இளங்கோவன் பல வருடங்களாகக் கவிதைகள், பாலர் பாடல்கள், கட்டுரைகள் எழுதி வருபவர். யாழ்ப்பாணம் 'ஈழநாடு" பத்திரிகை முப்பது வருடங்களுக்கு முன்பு நடாத்திய வெண்பா எழுதும் போட்டியில் வெற்றிபெற்றவர். 'தினபதி" கவிதா மண்டலத்திலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. தாயகத்திலும் ஐரோப்பாவிலும் வெளிவந்த சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. அன்று பிரான்சில் வெளியாகிய 'பாரிஸ் ஈழநாடு" 'ஐரோப்பா முரசு" ஆகிய பத்திரிகைகளிலும் வானொலி, தொலைக்காட்சியிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகின. பாலர் பாடல்கள் அடங்கிய நான்கு நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இந்நூல்கள்; புலம்பெயர்ந்த மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அத்துடன் 'பரிசு" என்ற பெயரில் சிறுவர்க்கான சஞ்சிகையொன்றையும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியிட்டுவந்துள்ளார். இவருக்கான பரிசு பத்தாயிரம் ரூபாää கேடயம், சான்றிதழ் என்பன அக்டோபர் மாதம் 2 -ம் திகதி நாமக்கல்லில் நடைபெறவுள்ள கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழாவில் வழங்கப்படவுள்ளன. இவர் ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் மனைவியாவார். தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தமிழ் ஸ்டுடியோ 'லெனின் விருது' வழங்கும் விழா - 2012
'எதுவரை' இணைய இதழ் வலையில்..

அன்பினிய நண்பரவர்கட்கு, வணக்கம். நான் எழுதிய நான்கு நூல்கள் வெளியீட்டுவிழா எதிர்வரும் ஏழாம் தேதி ஈரோடு மாநகரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வெளியிடப்படுகிறது. அழைப்பிதழை இணைத்துள்ளேன். வாய்ப்பிருப்பின் கலந்துகொள்ள வேண்டுகிறேன். மிக்க அன்புடன், - ஆல்பர்ட்.
நண்பர்களே, மாற்று திரைப்பட வளர்ச்சிக்காகவும், மாற்று திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தவும் தமிழ் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட "லெனின் விருது" இந்த ஆண்டு ஆவணப்பட / திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். திரையரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில்.. அம்ஷன் குமார் அவர்களுக்கு லெனின் விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு அவரது படைப்புகள் தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், புதுவை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் திரையிடல் நடைபெறும்.

தோழர் கு. சின்னப்ப பாரதி நீண்ட நேரம் உரையாடலில் ஈடுபட்டார். இந்த உரையாடலில் தோழர் வி. ரி. இளங்கோவன்ää பேராசிரியர் பாலசுப்பிரமணியம் ஆகியோரும் கலந்துகொண்டனர். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி - இந்திய கம்யூனிஸ்ட்; கட்சி - மார்க்சிஸ்ட் - கட்சிகளுக்கிடையிலான நல்லுறவு, இலக்கியப் பரிமாற்றம், சர்வதேச நிலைமைகள், உலக மயமாக்கலின் விளைவுகள், இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் உட்படப் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. தமிழ் மொழியிலிருந்து முதன்முறையாக பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட கு. சின்னப்ப பாரதியின் 'Le Réveil' நாவலை பிரெஞ்சு மக்கள் மத்திக்கு பரவலாக எடுத்துச்செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாரிஸ் மாநகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்வையிட்டார். பாரிஸ் மாநகரில் வாழும் தமிழ் கலை இலக்கியப் படைப்பாளிகள் பலரும் அவரைச் சந்தித்துப் பேசினர். ஒரு வாரத்தின்பின் நெஞ்சம் நிறைந்த தோழமை உணர்வுகளைச் சுமந்தவாறு தோழர் கு. சின்னப்ப பாரதி தமிழகம் திரும்பினார். பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் சார்பில் தோழர் வி. ரி. இளங்கோவன் ஒழுங்குசெய்த, பாரிஸ் மாநகரில் கடந்த 15 -ம் திகதி (15 - 07 - 2012) நடைபெற்ற 'இலக்கிய மாலை" நிகழ்விலும் கு. சின்னப்ப பாரதியின் 'Le Réveil' நாவல் வெளியிடப்பட்டது. தோழர் பியர் மார்சி (Pierre Marcie) இந்நாவல் குறித்து இங்கு சிறப்புரையாற்றினார். தோழர் கு. சின்னப்ப பாரதியின் பாரிஸ் பேச்சுவார்த்தைகள் யாவற்றுக்கும் தோழர் வி. ரி. இளங்கோவன் உடனிருந்து உதவியளித்தமை குறிப்பிடத்தக்கது.
- Black July Remembrance Vigil will be held in front of 10 Downing Street on Monday 23 July 2012 between 5-8pm. Please gather (clad in black) at a vigil opposite 10 Downing Street on Monday 23rd July 2012 from 5pm to 8pm. -
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கும். இந்த விருது பாராட்டுக் கேடயமும், 1500 கனடிய டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வருடம் நடைபெறும் உரைத்தொடருடன் இணைந்து இந்த விருது விழாவும் அரங்கேறும். விருது பெற்றவர் பெயர், வழங்கும் இடம், காலம், நேரம் போன்ற விவரங்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அறிவிக்கப்படும். உலகளாவிய அங்கத்தினர்களைக் கொண்ட விருது நடுவர் குழுவின் முடிவு அறுதியானது. விண்ணப்பம் அனுப்புவதற்கான முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2012.
திரையிடப்படும் படம்: அக்ரஹாரத்தில் கழுதை (இயக்கம்: ஜான் ஆப்ரகாம்)
'டொக்டர்' எஸ்.சிவதாஸ் மருத்துவ உலகிலும், இலக்கிய உலகிலும் நன்கு அறியப்பட்டவர். ஆரவாரமின்றி அமைதியாக மனநலத் துறையில் தன்னலற்ற அளப்பரிய பணிசெய்பவர். ஆழமான இரசனையுணர்வு கொண்டவர், கவித்துவமிக்க படைப்பாற்றலும் கைவரப் பெற்றவர். சிறந்த புகைப்பட நிபுணருமாவார். 'நலமுடன்' என்ற இவரது நூலின் வெளியீட்டு விழா ஞாயிறு 15.07.2012 மாலை 5 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந் நிகழ்வின் சிறப்பு அம்சமாக இடம்பெற இருப்பது மனநலம் சம்பந்தமான ஒரு சிறப்புரையாகும். 'மனநலம் மன் உயிர்க்கு ஆக்கம்' என்ற தலைப்பில் உளநல மருத்துவத்துறைப் பேராசிரியர் மு.திருநாவுக்கரசு உரையாற்ற இருக்கிறார். SRM பல்கலைக் கழகத்தில் உளநல மருத்துவத்துறைத் தலைவரான இவர் இந்திய உளமருத்துவ சங்கத்தின் அண்மைக் காலத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் உலக உளமருத்துவ சங்கத்தின் தென்னாசிய வலயத்தில் பிரதிநிதியாகவும் இருக்கிறார். எமது சூழலில் நிறைந்திருக்கும் மனநலப் பிரச்சனைகள் பற்றிய எமது அறிவை வளர்ப்பதற்கும் அத்தகையவர்களுடன் புரிந்துணர்வுடன் நடப்பதற்குமாக அவசியம் கேட்க வேண்டிய உரையாக இது இருக்கும் என நம்பலாம்.
யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைப் பிறப்படமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, 'ரொறான்ரோ' கனடாவில் வாழ்ந்து வந்தவரும், கட்டடக்கலைஞர், கட்டடப்பொறியியலாளர், பதிப்பாளர் எனப் பல்துறைகளில் தன் பங்களிப்பை நிலைநாட்டியவருமான அண்மையில் மறைந்த 'தமிழர் மத்தியில்' நந்தா (நந்தகுமாரன் இராஜேந்திரம்) அவர்களின் அந்திரட்டி நிகழ்வு ஸ்கார்பரோவில் அமைந்துள்ள "The Queen Palace" விருந்து மணடபத்தில் 14.7.2012 சனிக்கிழமை, பிற்பகல் 12.00 மணியிலிருந்து 3.00 மணிவரை நடைபெற்றது. நிகழ்வில் நீண்ட நாட்களின் பின் மொறட்டுவைப் பல்கலைக்கழகக் கட்டடக்கலை, பொறியியற்துறைப் பட்டதாரிகளைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சிவகுமார், கலாஈஸ்வரன், கனகவரதா, யசோதரன், ஜோதிகுமார் மற்றும் கடற்றொழிற் பொறியியலாளரான வரதீஸ்வரன் எனப் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு. நந்தகுமார் மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. 'தமிழர் மத்தியில்' வர்த்தகக் கைநூல் மூலம் கனடாத் தமிழர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவொருவர் என்பதால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பாக TVI தொலைக்காட்சியின் அரசியல் ஆய்வாளரான சிவதாசன், 'தமிழன் வழிகாட்டி' செந்தி, 'மோட்கேஜ்'துறையில் பணியாற்றும் சுரேந்திரன், 'ரியல் எஸ்டேட்' துறையில் பணிபுரியும் லோறன்ஸ் பிரின்ஸ், 'Monsoon' ஆங்கிலப் பத்திரிகை வெளியீட்டாளர் லோகன் வேலாயுதம் எனப் பலரை அங்கு காணக்கூடியதாகவிருந்தது.

சென்ற முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை 01-07-2012 மாலை 6:00 மணியளவில் சொப்கா (SOPCA) என்றழைக்கப்படும் பீல்குடிமக்கள் ஒன்றியத்தின் கனடா பிறந்த தினக் கொண்டாட்டம் கலை நிகழ்ச்சிகளோடு மிசசாகாவில் உள்ள ஸ்குயர்வண் முதியோர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மௌன அஞ்சலியைத் தொடர்ந்து கனடிய தேசிய கீதம் ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் பாடப்பட்டு கனடிய தேசியக் கொடி மகாஜனாக்கல்லூரி பழைய மாணவரும் விளையாட்டு வீரருமான திரு. கே. நவரட்ணம் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்துப் பாடலும், சொப்கா மன்றத்தின் கீதமும் இடம் பெற்றன. தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மகாஜனாக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் கனடா பிறந்த தினக்கொண்டாட்டத்தை சொப்பா அங்கத்தவர்களோடு ஒன்று சேர்ந்து பிறந்ததினக் கேக் வெட்டித் தொடக்கி வைத்தார். அந்த நிகழ்வைத் தொடர்ந்து சொப்கா மாணவி ஜெனிற்ரா ரூபரஞ்சனின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









