ஜோர்ஜ் அழகையா: புதிய தலைமுறையினர் தங்கள் வேர்களைத் தேடவேண்டும் என்றவர் இன்;றில்லை (22.11.1955 – 24.7.2023) .நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
பி.பி.சி யின் தொலைக்காட்சியில் ஜோர்ஜ் அழகையா என்ற ஆங்கிலச் செய்தியாளர் தோன்றும்போது அவர் இலங்கையர் என்ற ஆர்வத்தோடும் பெருமையோடும் அவருடைய செய்திகளை அக்கறையோடு நான் பார்ப்பதுண்டு. இலங்கைத் தமிழர் ஒருவர் பி.பி.சியின் தொலைக்காட்சியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றுவது என்பது மிக மிக அபூர்வமான நிகழ்வாகும்.
இலங்கையில் 1958 ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டம் அமுலுக்கு வந்தபோது இந்த நாடு தமிழர்களுக்குப் பாதுகாப்பானதல்ல என்று கருதி ஜோர்ஜ் அழகையாவின் தந்தை பொறியியலாளராக கானாவில் தொழில் தேடிச் சென்றார். ஆறு வயதில் தனது ஆரம்பக் கல்வியை கானாவிலே பயின்ற ஜோர்ஜ் அழகையா போட்ஸ்மவுத்திலுள்ள சென்.ஜோன்ஸ் கல்லூரியில் தனது இரண்டாம் நிலைக் கல்வியைத் தொடர்கிறார். அங்கு கூடைப்பந்தாட்டக் குழுவின் தலைவராகவும், பாடசாலைச் சஞ்சிகையின் பத்திராதிபராகவும், இல்ல மாணவர் தலைவராகவும் அவர் சிறப்புப் பெற்றிருந்தாலும் உயர் தரத்தில் போதுமான தகுதியைப் பெற்றிருக்கவில்லை. ‘உனது பெற்றோர்கள் உன்னை இங்கே அனுப்பி வைத்திருப்பது நீ கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காகவே’ என்று தனது கல்வி குறித்துச் சுட்டிக் காட்டிய பிறதர் டேமியன் அவர்களை தான் மறப்பதற்கு இல்லை என்கிறார் அழகையா. அக்கல்லூரியில் தனக்கு ஆங்கில ஆசிரியராக இருந்த டேவிட் செப்மான் (னுயஎனை ஊhயிஅயn) சிபார்சு செய்ததையடுத்தே அவர்; டேர்ஹார்ம் (னுரசாயஅ) பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறார். பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றபின் ‘ளுழரவா’ என்ற தீவிர அரசியல் கருத்துக்களைக் கொண்ட ஆங்கிலப் பத்திரிகையில் தென்னாபிரிக்கப் பத்திரிகையாளராக அவர் ஏழு ஆண்டு காலம் பணியாற்றியிருக்கிறார்.