நடேசனின் 'நைல் நதிக்கரையோரம்! - சுனிதாகணேஸ் குமார் -

'நைல் நதிக்கரையோரம்' - நடேசன் | எதிர் வெளியீடு (152 பக்கங்கள்)
உலக வரலாற்றில் பல போர்களையும் பல படையெடுப்புகளையும் எதிர்கொண்ட எகிப்து தேசத்தை பற்றிய சிறிய வரலாற்று முன்னுரையுடன் “நைல் நதிக்கரையோரம்” என்ற பயணக் கட்டுரை மிக அருமையாக தொடங்குகிறது. இந்த புத்தகத்தின் எழுத்தாளர் நடேசன் அவருடைய குடும்பம் மற்றும் நண்பரின் குடும்பத்துடன் எகிப்து பயணம் மேற்கொண்ட குறிப்பு இது.
முதல் கட்டுரை எகிப்தின் தலைநகர் கெய்ரோவை பற்றியது. தற்போதைய எகிப்து இஸ்லாமியத்தையும் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதால் இஸ்லாமிய மதம் எகிப்திய வருகையிலிருந்து அதன் வரலாற்றை சிறுகுறிப்பாக கொடுத்திருக்கிறார்.
புராதன எகிப்தின் தலைநகரம் மெம்பிஸ், கிரேக்கர் ஆண்டபோது அலெக்ஸாண்டிரா மற்றும் பிற்காலத்தில் கெய்ரோ என எகிப்து நிறைய தலைநகரங்கள் கொண்டதாக இருந்திருக்கிறது. ஏ டி 969இல் எகிப்தை கைப்பற்றிய ருசினியர்கள் அல் – கயிரோ என்று பெயரிட்டு அது பின் கெய்ரோவாக திரிபடைந்துள்ளது. இங்கே வாழ்ந்த மக்கள் சுனி இஸ்லாமியர்கள் மற்றும் கொப்ரிக் கிறிஸ்தவர்கள். இவர்கள் எகிப்தை சிலுவை யுத்தம் வரை ஆண்டிருக்கிரார்கள். அதன் பிறகு சுமார் 200 ஆண்டுகள் நிகழ்ந்த சிலுவை போருக்கு பிறகு ஜெருசலத்தை ஐரோப்பியர்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றிய சலாதின் எகிப்தை சிரியாவின் ஒரு மாகாணம் ஆக்கினார். காகேசிய இனத்தை சார்ந்த மாமலுக்கர்கள் சில காலம் ஆண்டிருக்கிறார்கள். அடுத்து பிரான்ஸை சேர்ந்த நெப்போலியன், ஓட்டமான் பேரரசு (துருக்கியர்கள்) என எகிப்தின் வரலாறு சுருக்கமாக விளக்கி இருக்கிறார்.
ஐரோப்பாவிற்கும் ஆசியாவுக்கும்ம் இடையே நடந்த வணிகப்பாதை “சில்க் ரூட்”. பல்வேறு போர்களினால் இந்த பாதை அடைபட்ட போது பெரும்பாலான வாணிகம் எகிப்தின் மூலமாகத் தான் நடந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.



சுண்ணாம்புத்திண்ணையில் கால்கள் சுகமாய் நேராய்க்கிடக்கின்றன.காலங்களைக்கடந்துவந்த அனுபவங்கள் ஆச்சியின் பாதங்களில் தெரிகின்றன.அந்தப்பாதங்களில் விடைபெறுகின்ற வெயில் கொஞ்சிவிட்டுப்போகுது. உடலில் கொழுப்பென ஒன்றையும் காணமுடியாமல் பாலைவனப்பாறைகளாய் உடல் சதிராடுது. ஆச்சிக்கு எந்த ஆசைகளும் கிடையாது.






மதியத்துக்குப் பின்பாக , பஹல்காம் நகரின் மத்தியப் பகுதியில் வாகன நெரிசலில் நாங்கள் வந்த வாகனம் நத்தையைப் போல் மெதுவாக நகர்ந்தது. அச்சமயம், பாதையோரத்தில் ஒருவரின் குரலும் சைகைகளும் என் கவனத்தை ஈர்த்தன. உயரமான பெண் ஒருவர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது வெள்ளைச் சட்டை, சேற்றில் உழுது வீடு வந்த விவசாயியின் தோற்றத்தை நினைவூட்டியது. அந்தக் காட்சி என்னுள் ஒரு கலவர உணர்வை உருவாக்கியது— இங்கு ஏதோ அசாதாரணமான ஒன்று நடந்திருக்க வேண்டும்.





ஊரின் வாசம்


ஏனைய இலக்கியப் படைப்புகளுடன் ஒப்பிடும்போது சிறுகதைக்கு வீரியம் அதிகம்; குறைந்த பக்க எண்ணிக்கைக்குள் ஆழமான மனப் பதிவை ஏற்படுத்தக்கூடியது. ஒரு கதையைப் படிக்கும்முன் இருந்த மனநிலையிலிருந்து அக்கதையைப் படித்து முடித்தப்பின் வேறொரு மனநிலைக்கு மாற்றக்க்கூடியது; கதைக்கும் வாசகனுக்கும் இடையே சொல்லால் சொல்லப்படாத இடைவெளியை விட்டு அவனோடு உறவாடிக்கொண்டே இருப்பது; அமைதியாய் இருக்கும் வாசகனின் சிந்தனையைக் கிளர்ந்தெழச் செய்வது; கிளர்ந்து கிடக்கும் வாசகனின் சிந்தனையை அமைதியுறச் செய்வது. இவ்வாறாக படைக்கப்படும் சிறுகதை பொழுதுபோக்கு அம்சம் குன்றியும் பொதுபுத்தியில் ஊறிக்கிடக்கும் ஒரு சிந்தனைக்கு மாற்றாக இன்னொரு சிந்தனையை விதைக்கும் தன்மை கொண்டது.

உயிர் சுருட்டி கனிமொழி செல்லத்துரை என்பவரால் எழுதப்பட்ட நாவல். 2025 இல் வெளியான இந்நாவல் இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைக் கதைக்களமாகக் கொண்டு அமைந்துள்ளது. கதைக்களம் என்று சொல்லுவதை விட வேதாரண்யத்தின் நிலவியல் வரைபடமாக இந்நாவல் உள்ளது என்றால் அது மிகப் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில், வேதாரண்யம் பகுதியில் உள்ள மக்களின் ஒரு குறிப்பிட்ட காலகட்ட பண்பாட்டு எச்சங்களை ஆவணப்படுத்துவதாக அமைந்துள்ளது இது.
அவனுடைய பார்வை கனகவல்லிக்குப் பிடிக்கிறதில்லை . '' அதிலே இருக்கிற ஒரு வெறி சுடுகிறது ,. எதையும் கூறுகிற அம்மாவிடம் வந்து கூறினாள் . '' எடியே ! நான் உங்க அப்பரைப் பார்க்கிறதுக்கும் , நீ பார்க்கிறதும் வேற மாதிரி இருக்கிறது அல்லவா , திட்டி , புறு புறுத்தாலும் என்னுடையதில் என்ன இருக்கும் சொல்லு ..'' என்று உணர்ச்சிப்படாமல் கேட்ட்டார். ''அன்பு இருக்கும் '' என்று இழுக்க , '' அதில்லையடி ,நாம ஒரே பட்ஜ் ! . நமக்குள் ஒரு சமநிலை இருக்கும் . உனக்கும் அவனுக்கும் பல வயசு .வித்தியாசம் , அதனால் குழப்பமடைகிறாய் . நல்ல வேலை , வாழ்க்கைக்கு ...அத்திவாரம் . அதன் மேலே தான்டி கனவுகள் வரையிறது நடக்கிறது . இப்பத்தைய பெடியள் நீரிலே மூழ்கிற படகுகள் மாதிரி பாலையிலே நிற்கிறாங்கடி . வெளியேற முடியாத முடக்கு, சந்திகள் அனேகம் . . உன்னிலே ஒரு விருப்பம் வந்திருக்கிறது .கிடைக்க மாட்டாய் எனத் தெரியும் . எனவே வெறித்துப் பார்க்கிறான் .. இந்த இனப்பிரச்சனை .. அவனையும் பாதிக்கிறதடி ‘’ என்கிறார் .
ஒருவகையில் சிறுகதையை இவ்வுலகைப் பார்க்கும் ஜன்னல் என்றும் கூறலாம். அந்த ஜன்னலூடு வெளியே விரிந்து கிடக்கும்
5.09.04 அன்று காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. திலகபாமாவின் “நவீன இலக்கியத்தின் சமீபத்திய போக்குகள் பற்றிய” ஆரம்ப உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அவரது உரையில் “வாழ்வோடுதான் என் எழுத்து என வாழ்ந்து கொண்டிருந்தவள் நான். முதன் முறையாக2000த்தில் தான் எழுத்துலகை நின்று கவனிக்கத் துவங்குகின்றேன். இனிமேலும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்கின்ற சூழலில் தான் எழுத்து பற்றிய என் விமரிசனங்களை வெளியிடத் துவங்குகின்றேன். இந்த 4 வருட அவதானிப்பு நிறைய எனக்குள் கேள்விகள்: எழுப்பியிருக்கின்றது.. மனிதத்துள் நுழைய முடியாது தவிப்பவர்கள்,சமுகப் பொறுப்புணர்வு அற்றிருப்பவர்கள் எல்லாம் இலக்கியம் செய்ய வந்திருப்பதும், செய்து கொண்டிருப்பதும் தாங்கள் செய்து கொண்டிருந்தவற்றை பலரும் பின் பற்றும் படி செய்ய தொடர் பழக்க வழக்கமாக்கி அதை நிலை நிறுத்துவதும் தொடர்ந்து நடந்த படி இருப்பது இலக்கியத்துள் குறிப்பாக கவிதைகளில் ஒரு ஆரோக்கியமற்ற போக்கை உருவாக்கி வைத்திருக்கின்றது.
புகலிடத்தில் வாழும் பெண்கள் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளும் முகமாக 1990இல் ஜேர்மனியில் உள்ள சில பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப் பெண்கள் சந்திப்பு ஜேர்மனியின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற அதேநேரம், அது தனது எல்லைகளை விஸ்தா¢த்து சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சந்திப்புகளை நடாத்தி வருகின்றது. ஜரோப்பாவில் வாழும் பெண்கள் மட்டுமன்றி இலங்கை, இந்தியா அவுஸ்திரேலியாவிலிருந்தும்கூட பெண்கள் வந்து கலந்து கொள்ளும் சந்திப்பாக வளர்ந்திருக்கிறது. சுவிஸில் மூன்றாவது தடவையாக நடைபெறும் பெண்கள் சந்திப்பின் 22வது தொடர் ஒக்டோபர் மாதம் 11ம் திகத§ சுவிஸ் சூ¡¢ச் நகா¢ல் நடைபெற்றது. இச் சந்திப்பு தனது 13வது வருடத்தை பூர்த்தி செய்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஓரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இச் சந்திப்பில் பெண்ணியச் சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள், அனுபவப் பகிர்வுகள், விமர்சனங்கள் என்பன இடம்பெற்றன. 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









