பதிவுகள் முகப்பு

இளம் பாரதி பற்றி மேலும் சில சிந்தனைகள்! - எல்.ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
19 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

23-24 வயதே நிரம்பியிருக்கக்கூடிய இவ்விளைஞனின், சாதியம் பற்றிய உணர்வும், பெண்களின் அடிமைத்தனம் பற்றிய எண்ணமும், இதைவிட மேலாக எலும்பும் தோலுமாய் அன்று தோற்றமளித்திருக்கக்கூடிய தன் மக்கள் பொறுத்த சிந்தனையும், நாடு காலனித்துவ ஆங்கிலேயரிடம் இப்படி அடிமைப்பட்டு போயிருக்கின்றதே என்ற ஆதங்கமும் மேலோங்கி வீசுவதாய் இருந்தது. ஆனால், இவற்றை விட, தம் இன்னுயிரை தியாகம் செய்து வெஞ்சிறையினுள்ளும் தம்மை இருத்திக் கொள்ள துடிக்கும் தன்னிகரற்ற சிங்கங்களையும் அவன் தன் வாழ்நாளில் தரிசிக்க வேண்டி வருகின்றது. இருப்பினும் இவ்விளைஞனின் உணர்வலைகளுக்கு கடிவாளம் போட்ட இரு பெரும் அலைகளும் அன்று வீசாமல் இல்லை.

ஒன்று, நாட்டில் சூல்கொண்டு முளைத்துள்ள விடுதலை இயக்கத்தின் முதிர்ச்சியின்மை. இரண்டாவது, இந்திய சமூகத்தில் அன்று காணப்பட்ட பிற்போக்குத்தன அல்லது ஒரு ஆசிய உற்பத்தி முறை ஏற்படுத்துகின்ற எண்ணற்ற முரண்களின் ஒட்டு மொத்தம்.

இவ்விரு அலைகளும் அவனை ஓயாது திணறடிக்கின்றன. அவனது எழுத்துக்களை அவை ஆழமாக தாக்க முற்படுகின்றன. இவற்றுக்கு எதிராகவெல்லாம், அவன் தன்னையும், தன் எழுத்தையும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்குள் தள்ளப்படுகின்றான். உலக செழுமைகளையெல்லாம் உள்வாங்க முனையும் அவனது உணர்ச்சி பிழம்பான இளம் மனம், சாதியம் பொறுத்தும், பெண்களை உயிருடன் கொளுத்தும் சதி முறைமைகள் பொறுத்தும், இக் கொடுமைகள் யாவற்றையும் மிக கவனமாக காப்பாற்றி வரும் மதம் குறித்தும் கொந்தளிக்கின்றது.இப்புயலின் பின்னணியில்தான் அவன் “துளசிபாயி” (நவம்பர் 1905) என்றும் “பாரத குமரிகள்” (ஜனவரி 1906) என்றும் அற்புதமான சிறுகதைகளை தன் இளவயதில் தீட்டுபவனாக இருக்கின்றான். (1905-1906). ஆனால், இவை அனைத்துமே இவன், சுதேச மித்திரனில், சுப்ரமணிய ஐயரின் ஆசிர்வாதத்துடன் இணைந்த பின்பே நடந்தேறுகின்றது. இதற்கு சற்று முன்னதாக, அவன் ‘இந்துவுக்கு’ எழுதிய கடிதம் மிகவும் அர்த்தமுடையது மாத்திரமல்லாமல், அவனது இளம் மனதில் அன்று முகிழ்த்திருக்கக்கூடிய உயரிய சிந்தனை வீச்சையும் புலப்படுத்துவதாய் இருக்கின்றது (டிசம்பர் 1904).  சாதிய ஏற்றத்தாழ்வு குறித்து மேற்படி கடிதம் பின்வருமாறு பேசுகின்றது:

மேலும் படிக்க ...

பாதுகாக்கப்பட வேண்டிய மந்திரிமனை! இன்னும் காலம் கடந்து போய்விடவில்லை! பாதுகாப்போம்! வரலாற்றைப் பேணுவோம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
19 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஏற்கனவே  போதிய பராமரிப்பற்ற நிலையில் இருந்த யாழ் மந்திரிமனைக் கட்டடம் அண்மைக்காலப் பெருமழையினால் மேலும் சிதைவுகளுக்கு உள்ளாகியுள்ளது.. அதன் நிலையினை வெளிப்படுத்தும் காட்சிகள் இவை. மந்திரிமனைக்கு இந்நிலை ஏற்படாமல் தடுத்திருக்கும் வல்லமை எமக்கிருந்தது. ஆனால் அதனை நாம் செய்யவில்லை. இது வருந்தத்தக்கது.

கட்டடங்கள் பல காரணங்களால் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஒரு குறிப்பிட்ட காலக் கட்டடம் என்னும் வகையில், கட்டடக்கலைப் பாணிகளை வெளிப்படுத்துகின்றன என்னும் வகையில், வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை என்னும் வகையில்,  இனமொன்றி ன் வரலாற்று அடையாளம் என்னும் வகையில் கட்டடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அவ்வகையில் இக்காரணங்கள் அனைத்தும் மந்திரிமனைக்குப் பொருந்தும். 

இக்கட்டடத்தின் கட்டடக்கலை அம்சங்கள் திராவிட , ஐரோப்பியக் கட்டடக்கலை அம்சங்களை உள்ளடக்கியது. பாவிக்கப்பட்ட  கட்டட மூலப்பொருட்கள். கட்டடக்கலை அம்சங்கள், கட்டப்பெற்ற காலகட்டம் எல்லாம் இக்கட்டடம் வரலாற்றுச் சின்னங்களிலொன்றாகக் கருதப்பட்டு பேணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.   இக்கட்டடத்தின் முகப்பிலுள்ள தகவல்களின்படி இக்கட்டடம் 1890இல் கட்டப்பட்ட விபரம் தெரியவரும். 

இக்கட்டடத்துக்குரிய சுருங்கை வழியொன்று இருந்ததாகவும், அது தற்போது அடைக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. அது பற்றிய மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

இக்கட்டடம் அமைந்துள்ள காணியின் பெயர் 'சங்கிலித்தோப்பு', இதனை நான் இப்பகுதிக்குரிய நிலஅளவைத்திணக்கள வரைபடங்களை அவதானித்தபொழுது அவதானித்துள்ளேன். தற்போது  இக்கட்டடம் அமைந்துள்ள காணியின் பெயர் சங்கிலித்தோப்பு என்றிருப்பதும், இங்குள்ள கட்டடம் மந்திரிமனை என்றிருப்பதும் இதன் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.  இப்பகுதிக்கண்மையில் பண்டாரக்குளம், சங்கிலியன் வீதி, அரசகேசரி வளவு போன்ற பல அரச முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இருப்பதால் இக்கட்டடம் அமைந்துள்ள பகுதியானது தமிழரசர் காலத்தில் பின்வரும் வகைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்திருக்கலாமென்றே எனக்குத் தோன்றுகின்றது.

மேலும் படிக்க ...

முகநூலில் தொடரும் விவாதம் : எழுத்தாளர் மாலனின் இந்தித்திணைப்பு பற்றிய கருத்துகளும், எதிர்வினைகளும்

விவரங்கள்
Administrator
வ.ந.கிரிதரன் பக்கம்
18 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மாலன் நாராயணன்

நீங்கள் கூறியுள்ளவற்றிற்கான பதில்கள் என்னுடைய பதிவிலேயே இருக்கிறது உதாரணமாக, இந்தி ஆட்சி மொழி என்பது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல, அது சுதந்திர இந்தியாவின் அரசு அமைந்த போதே அரசமைப்பு அவையால் எடுக்கப்பட்டது, அந்த 15 ஆண்டு கெடு அப்போதே எடுக்கப்பட்ட முடிவு, 1958லிருந்து தமிழ் தமிழ் நாட்டில் ஆட்சி மொழியாக இருந்தது அது தமிழ்நாட்டில் ஆட்சிமொழியாக நீடிப்பதில் 1965 ல் ஆபத்து ஏதும் நேர்ந்துவிடவில்லை, 1965 போராட்டத்தை தொடங்கி முன்னெடுத்தது திமுக மாணவர் அணி . இவை பற்றி விரிவாகவே என் பதிவில் ஆதாரங்களோடு தகவல் கொடுத்திருக்கிறேன் அதையேதான் நீங்கள் உங்கள் பதிவில் எழுதியிருக்கிறீர்கள் அவற்றில் ஏதும் பிழை இருக்கிறதா? 2. நீங்கள் கீழ்க்கண்டவற்றை மறுக்கிறீர்களா? 1. 1965 போராட்டத்தின் கோரிக்கை தமிழை மத்திய அரசின் ஆட்சிமொழி ஆக்கு என்பதல்ல, ஆங்கிலத்தை அகற்றாதே என்பது 2. இந்தி ஆட்சி மொழி என்ற நிலையை 1965 போராட்டம் மாற்றியிருக்கிறதா? 3. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றிருந்தால் தமிழுக்கு பதில் மாணவர்கள் இந்தி படித்திருப்பார்கள் என்கிறீர்கள் சரி ஆங்கிலமும் ஆட்சிமொழி என்பதால் ஆங்கிலம் படிக்கவில்லையா? ஆங்கிலம் நம் தாய்மொழியா? அதுவும் அயல்மொழிதானே? இந்தி திணிப்பு கூடாது ஆனால் ஆங்கிலத் திணிப்பு சரியா? 3.திமுக மத்தியில் ஆட்சியில் இருந்த போது கூட தமிழை ஆட்சிமொழி ஆக்க முடியவில்லை ஏன்? கீழ்கண்ட இதனை விளக்குங்கள்: 1963ல் ஆங்கிலம் தொடரும் என்று சட்டம் வந்துவிட்டால் 1965 ல் போராட்டம் ஏன்? மற்ற மாநிலங்களில் நடந்த போராட்ட்ம் நடந்ததா என்பது பற்றி தனியாக எழுதுகிறேன் நீங்கள் ஒரு தரப்பான அரசியல் பிரசுரங்களை மட்டும் படிக்காமல் அரசமைப்புச் சட்ட விவாதங்களையும் படிப்பது நல்லது அங்கு எல்லா தரப்பினரும் இருந்தார்கள். ஒருவர் கூட தமிழை ஆட்சிமொழியாக்க கோரவில்லை உணர்ச்சி களை மட்டுப்படுத்திக் கொண்டு யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

மேலும் படிக்க ...

நினைவுக் குளியல் 2 - வாசிப்பின் நெறிப்படுகை! - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
16 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பெரும்பாலும் பத்து வயதளவில் பள்ளியில் படிப்பவர்களுக்கு பள்ளிப் புத்தகங்களல்லாத வாசிப்புக்கு ஈர்ப்பு ஏற்படுமென்று எண்ணுகிறேன். அந்த வயதளவில்தான் அது எனக்கும் ஏற்பட்டது.

வளர்ந்தவர்கள் வாசிப்பில் காட்டும் சிரத்தை, அதன் ஆழ்நிலைத் தியானம்போன்ற சலனமற்ற இருப்பு, அவர்களது வாசிப்பு ஸ்திதியின் கவர்ச்சிகளென எதுவும் அதற்கு விசை கொடுத்திருக்கலாம்.

அனேகமாக, ஒவ்வொரு நாள் மாலையிலும் எங்கள் பள்ளியில் பெரிய வகுப்பு படிக்கும் ஒரு அண்ணன் வயற்கரையை நோக்கி ஒரு பசுமாட்டைச் சாய்த்துக்கொண்டு, ஆறுதலான நடையில் புத்தகமொன்றை வாசித்தபடி ஒழுங்கையில் நடந்துபோவதை பலமுறையும் நான் கண்டிருக்கிறேன். அவர் வாசித்தபடி நடக்கும் வேகத்திற்கேற்ப பசுமாடு மேய்ந்துகொண்டு போகுமா, அல்லது, மாடு மேய்ந்தபடி செல்லும் வேகத்துக்குத் தக அந்த அண்ணன் நடப்பாராவென அறுதியாய்ச் சொல்ல என்னால் முடியாது. ஆனால் அது எனக்கு பெரும் வியப்பாக அப்போதெல்லாம் இருந்துகொண்டிருந்தது.

பக்கத்து வீட்டு மலரக்கா வெய்யில் சாய்ந்த வேளையில் புத்தகமொன்றோடு கிணற்றடியில் சாய்ந்து நின்ற கொய்யா மரக் கிளையில் ஏறியிருந்து, லேசாக மேலும் கீழுமாய் அசைந்தபடி வாசித்துக்கொண்டிருப்பார். அவ்வேளை தாயார் செய்யும் எந்த அழைப்புக் குரலும் அவர் செவியில் விழுந்ததேயில்லை. அதுவும் எனக்கு வியப்புத் தந்த இன்னொரு விஷயம்.

அவ்வாறு, அண்ணன்போல் நடந்துகொண்டும், மலரக்காபோல் மேலும் கீழுமாய் ஆடிக்கொண்டும் வாசிப்பதற்காகவே எனக்குள்ளும் வாசிக்கும் எண்ணம் தோன்றியிருக்கலாம்தான். ஆனாலும் புத்தகமொன்று என் வசமாகியபொழுது நடந்துகொண்டும், மேலும் கீழுமாய் ஆடிக்கொண்டும் வாசிக்க நானெடுத்த முயற்சிகளெதுவும் எனக்கு பொசிப்பாய் அமையவில்லை.

மேலும் படிக்க ...

பதினெட்டாம் திருப்பூர் குறும்பட விருது வழங்கும் விழா 11/1/26 - தகவல் - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- தகவல் - சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
16 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதினெட்டாம் திருப்பூர் குறும்பட  விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை தாராபுரம் சாலை   சேவ்அலுவலக அரங்கில் சுசீலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சமூக ஆய்வாளர் வியாகுல  மேரி அவர்கள் விருதுகளை வழங்கினார். அவர் உரையாற்றும் போது இப்படி குறிப்பிட்டார்  : 

“ இளைஞர்கள் தங்களுடைய சமூகம் சார்ந்த உறவுகளையும் விமர்சனங்களையும் வெவ்வேறு வகையில் படைப்புகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இலக்கிய படைப்புகள் அதில் முதன்மை வைக்கின்றன. இப்படி குறும்படங்கள் சார்ந்தும் நிறைய இளைஞர்கள் இயங்குகிறார்கள் .இது திரைப்படத்திற்கு ஒரு படிக்கட்டாக இருக்கிறது.  சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற கைபேசி மூலம் திரைப்படங்கள் தயாரிக்கும் ஒரு நாள் பயிற்சியில் நிறைய  இளைஞர்கள் பங்கு பெற்றார்கள் அவர்களிடமிருந்து நல்ல  குறும்படங்களும் திரைப்படங்களும் வெளிவரும் என்ற  நம்பிக்கை இருக்கிறது  “

 திருப்பூர் சந்தோஷ் கிருஷ்ணன் இயக்கிய களிறு ஆவணப்படம் , ஈரோடு பெண் இயக்குனர்  வைசியா தமிழ் இயக்கிய கொல்லம்மாள் , குறும்படம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து எட்டுக் குறும்படங்களை தேர்வு செய்து விருதுகள் தரப்பட்டன. 

மேலும் படிக்க ...

சிறுகதை: வெட்டுப்பட்டவை! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
16 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

இன்றைய பிரார்த்தனை நிகழ்வுக்கு லாரன்ஸ் பாதிரியார் ஐந்து பேர்களை எதிர்பார்த்தார். அவர்கள் வந்திருக்கிறார்களா என்று அவரின் கண்கள் விசாலமாகித் தேடின. 

1.   ஹெலன் இளம் விதவை.அவரது கணவர் சமீபத்தில் இறந்து விட்டார். மாரடைப்பு காரணமாக.  ஹலனுக்கும் அவருக்கும் பதினைந்து ஆண்டுகள் வயது வித்யாசம்.. கணவர் ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். நல்ல உடல் கட்டுடன் இருப்பவர் ஹெலன் 

2.  மருத்துவர் ரகுராமன். மனோதத்துவ மருத்துவர். சமீபத்தில் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால் ஞாயிறில் அவர்களின் கூட்டத்திலிருந்துத் தப்பிப்பதற்காக   பிரார்த்தனைக்கு வருவதாக ஒரு பேச்சில் சொல்லியிருந்தார். நன்கு .புல்லாங்குழல் வாசிப்பார்..

3.  தோழர் கே. குப்புசாமி.எண்பதுகளில் பொதுவுடமை இயக்கத்தில் உறுப்பினராகவும் தீவிரமானவராகவும் இருந்தவர். அப்போது கொஞ்சம் தெரு நாடகங்களில் நடித்திருப்தை பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.அதுவும் அயனஸ்கோவின் த லீடர், சங்கரப்பிள்ளையின்  கழுதையும் கிழவனும் நாடகங்கள் தமிழில் நடத்தப்படபோது அதில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தது.. இப்போது ரியல் எஸ்டேட் வியாபாரம். பொதுவுடமைக்கட்சிகளுக்கு தாரளமாக நன்கொடை தருவது அவர் வழக்கம். பழக்க விசுவாசம் என்பார். ஆளும்கட்சிகளுக்கு அதிகம் தருவார். அவர் தேவ சங்கீதம் கேட்க இங்கு வருவார்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் மாலனின் இந்தித்திணிப்புக்கெதிரான போராட்டம் பற்றிய கருத்துகள் பற்றி... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                            - எழுத்தாளர் மாலன் -

எழுத்தாளர் மாலன்  1965இல் தமிழ்நாட்டில் நடந்த இந்தித்திணிப்புக்கெதிரான போராட்டம் பற்றி ஒரு முகநூற் பதிவிட்டிருந்தார். அதில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்:

"அந்தப் போராட்டம் ஆங்கிலம் அகற்றப்படுவதை எதிர்த்த போராட்டம்  தமிழுக்கானது அல்ல. தமிழுக்கு அப்போது ஆபத்தில்லை.   தமிழைக் காக்க  நடந்த போராட்டம் என்பது கட்டமைக்கப்பட்டது. ஆங்கிலத்தை அகற்றுவதை எதிர்த்த போராட்டம் என்றால் மக்களிடையே பெரிய எழுச்சி இருக்காது என்பதால் (அன்று தமிழ்நாட்டில் ஆங்கிலம் அறியாத மக்கள் பலர்) கிளர்ச்சியை திமுக தமிழோடு சம்பந்தப்படுத்தி முன்னெடுத்தது"

இவை  திராவிடத்தை எதிர்க்கின்றோம் என்னும் பெயரில் மாலனால்  இந்தித்திணிப்புக்கெதிராகத்  தமிழக மக்களால் நடத்தப்பட்ட நியாயமான போராட்டத்தின் முக்கியத்தைக் குறைப்பதற்காகக் கூறப்பட்ட  கூற்றுகளாகவே கருத வேண்டியுள்ளது. இந்தித்திணிப்புக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டம் அண்ணா தலைமையிலான திமுக மாணவர்கள், பொது மக்கள் என அனைவருடனும்  இணைந்து நடத்திய போராட்டம்.  இதற்காக மாணவர்கள் தீக்குளித்திருக்கின்றார்கள். பொதுமக்கள் காவற் துறை, இந்திய இராணுவத்தால்  தாக்கப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் போராடியது தமிழ் மொழிக்காக, இந்தித்திணிப்புக்கெதிராக.  மாலன் அதனை வெறும் ஆங்கில மொழியினை நீடிப்பதற்காக என்று மலினப்படுத்தியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. 

மேலும் படிக்க ...

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்! - பதிவுகள் -

விவரங்கள்
Administrator
கவிதை
14 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அனைவருக்கும் பதிவுகள் சஞ்சிகையின் 
அன்புப் பொங்கல் வாழ்த்துகள்!

அகிலத்தின் ஆணிவேர் 
அயராதுழைக்கும் கதிர்தன் ஒளி.
அகிலத்தின் உயிர்நாடி உழவு.
காக்கும் கதிருக்கும், 
கடுமுழைப்பால் எம்மிருப்பின் 
காரணகர்த்தாக்களான 
உழவருக்கும், அவர்க்கு
உதவிடும் ஆவினத்துக்கும்
நாம் மானுடர்  ஆற்றும்
நன்றிக் கடனே
நம் தமிழர் பொங்கல்
நன்னாளாம்! இன்னாளாம்!
பொங்கட்டும் இன்பம் எங்கும்.
தங்கட்டும் மங்கலம் எங்கும்.
பொங்கலோ! பொங்கல்!
பொங்கலோ! பொங்கல்!

* டிஜிட்டல் ஓவியம் கூகுள் நனோ பனானா வழியாக வ்நகி.


மங்கலமாய் மலருவதே பொங்கல் திருநாளே ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
14 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பொங்கலை நோக்கி நிற்கின்றார் யாவரும்
காத்திருப்பார் கவலை போக்கிடட்டும் பொங்கல்
களிப்புப் பெருகட்டும் கண்ணீர் மறையட்டும்
கலகலப்பாய் யாவருமே பொங்கியே மகிழட்டும்

நாளும் பொழுதும் நாடிவரும் துன்பம்
நமையண்ட விடாமல் நாமிறையை வேண்டிடுவோம்
பொங்கலைப் பொங்கிப் போக்கிடுவோம் அனைத்தையும்
மங்கலமாய் பொங்கி மகிழ்ந்திடுவோம் வாருங்கள்

பொங்கலை நினைத்தால் புத்துணர்வு பெருக்கெடுக்கும்
புத்தாடை மத்தாப்பு நினைப்பிலே வந்தமரும்
பச்சரிசி சர்க்கரை பாலோடு கரும்பும்
பருப்போடு தேனும் பதிந்திடுமே மனமெங்கும் 

காலையிலை நீராடி கோலமிட்டு வாசலிலே
கும்பமும் வைத்து குத்துவிளக் கேற்றிடுவோம்
அடுப்பினை மூட்டி ஆண்டவனைக் கும்பிட்டு
பொங்கற் பானையினை பக்குவமாய் வைத்திடுவோம்

மேலும் படிக்க ...

வேலாயுதம் இராமரின் “மலையக வாய்மொழி பாடல்களில் கண்காணிகளின் இருப்பு" என்னும் 'எழுநா'க் கட்டுரை குறித்துச் சில கருத்துகள்! - ஜேம்ஸ் விக்டர் -

விவரங்கள்
- ஜேம்ஸ் விக்டர் -
ஜோதிகுமார்
13 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் எழுநா மின்னிதலிழ் நண்பர் வேலாயுதம் இராமர் “மலையக வாய்மொழி பாடல்களில் கண்காணிகளின் இருப்பு! மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் பேசும் வாழ்வியல்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் ஆதங்கத்தோடு மக்கள் கவிமணி சி.பி வேலுப்பிள்ளை குறித்து ஒரு  குறிப்பை பின்வருமாறு கோடிட்டு காட்டியிருந்தார். அதாவது.

"மலையக மக்களின் வாழ்வியலை இலக்கியத்தின் ஊடாக உலகறியச் செய்த சீ.வி வேலுப்பிள்ளை கூட, பெரியகண்காணிகள் தமது மக்களுக்கு செய்த கொடுமைகளை எந்த இடத்திலும் விமர்சிக்கவோ, தொட்டு காட்டவோ செய்யவில்லை. இதற்கான காரணமாக அவர் ஒரு பெரிய கண்காணியின் வாரிசாக இருந்ததையும் அதனால் நேர்திருந்த கடப்பாடுகளையும் குறிப்பிடலாம்."

மேற்படி பந்தியில் வேலாயுதம் இராமர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் குறித்து எந்த தள்ளாட்டமும் இல்லாமல் பின்வரும் விடயங்களை பட்டியிலிடுகிறார்.

1. பெரிய கங்காணிகள் மலையக மக்களுக்கு செய்த கொடுமைகளை சீ.வி. வேலுப்பிள்ளை தொட்டுகாட்டவில்லை.
2. பெரிய கங்காணிகளை சீ.வி வேலுப்பிள்ளi விமர்சிக்கவில்லை.
3. இவ்வாறு விமர்சிக்கவோ, தொட்டுகாட்டவோ அவருக்கு முடியாது போனதுக்கு அவர் ஒரு பெரிய கங்காணியின் வாரிசாக இருந்ததே காரணம்.
4. சீ.வி வேலுப்பிள்ளை அவர்கள் பெரிய கங்காணிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு அவர்களுக்கு கடமைப்பட்டவராகவும் இருந்தார்.

உண்மையில் வேலாயுதம் இராமர் அவர்களின் இந்த ஆதங்கள் எந்தளவிற்கு யதார்த்தமானது என்பதை கண்டறிய வேண்டியுள்ளது.

மேலும் படிக்க ...

ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின் 'நெய்தல் நடை' நூல் வெளியீட்டு நிகழ்வு உரை! - பவானி சிவகுமாரன் -

விவரங்கள்
- பவானி சிவகுமாரன் -
நூல் அறிமுகம்
13 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தலைப்பிற்கேற்ப கடலும்,கடல் சார் நிலமும் - கடற்கரையுமாய் - மங்கிய மாலையில்,மஞ்சள் நிறப் பின்னணியில், மங்கலகரமான அட்டைப் படத்துடன் ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் 'நெய்தல் நடை' எனும் அவரின் முதற் படைப்பான இச் சிறுகதைத் தொகுப்புப் பற்றிய எனது பார்வையை மகிழ்வுடன் இங்கு பதிவு செய்ய விழைகின்றேன்.

ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதுகளில் ஆரம்பமான எம் ஈழத்துச் சிறுகதை வரலாறு தன் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் தடம் பதித்தவர்கள், ஐம்பது ஆண்டுகளிற்கு மேலாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். இது எப்படிச் சாத்தியமாயிற்று என்றால், தம் இருபது வயதுகளிலேயே இவர்கள் எழுத ஆரம்பித்தது தான்.

மருத்துவத் துறையில் முப்பத்து மூன்று ஆண்டு காலச் சேவை நிறைவின் பின்னும், காலந் தாழ்த்தியே எழுத ஆரம்பித்தவர் ரஞ்ஜனி அவர்கள். Better late than never. என்ன தான் தாமதித்திருந்தாலும், குறுகிய காலத்தில் சிறுகதை, திறனாய்வு,கட்டுரை எனப் பல தளங்களில் எழுதிப் பலரின் கவனத்தைத் தன்பால் ஈர்த்தவர் என்றால் அது வெறும் புகழ்ச்சியல்ல.

பன்னிரெண்டு சிறுகதைகளுடன், ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளி வந்துள்ளது இச் சிறுகதைத் தொகுப்பு. இச் சிறுகதைகள் அனைத்தும் 2022 முதல் 2025 வரையான காலப் பகுதியில் ஞானம், ஜீவநதி, பதிவுகள் இணையத்தளம், சிறுகதை மஞ்சரி, வெற்றிமணி போன்ற சஞ்சிகைகளில் வெளி வந்தவை. ஞானம் சஞ்சிகையில் 'அன்றொரு நாள்' எனும் தனது முதற் சிறுகதை மூலம் சிறுகதை இலக்கிய உலகில் கால் பதித்த ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின் ஆறு சிறுகதைகள் ஞானம் சஞ்சிகையிலேயே வெளி வந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன் பதின்ம வயதின் இறுதியில், தான் கற்பித்த ஊரைப் பார்க்க விளையும், அறுபது வயதுகளின் விளிம்பில் நிற்கும் பெண் பற்றியது இவரின் முதற் சிறுகதை 'அன்றொரு நாள்'. எதற்காக அங்கே செல்கிறாள் என்பது அந்தப் பெண்ணிற்கே தெரியவில்லை என்பதை 'கார்க் கண்ணாடியில் பதிந்த புகைமூட்டம் போல் தெளிவில்லாமல் இருந்தது' என்னும் வரி வெளிக் கொணர்கிறது. அந்த ஊர் பற்றிய விபரிப்பும்,வர்ணனைகளும், உளம் கிளர்ந்த உணர்வுகளும் கதையைப் பின் தள்ளிக் கோலோச்சுகின்றன.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்: நீல நிறத்தில் நெஞ்சம் இழப்பேன்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரன் பாடல்:  நீல நிறத்தில் நெஞ்சம் இழப்பேன்!

இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI

பாடலைக் கேட்க - https://youtu.be/TC1p_RwuQfM?si=4prp7eXoh0SSclA_

[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]

நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.

நீல நிறம், மெல்லிய நீல நிறம்
நெஞ்சுக்கு நெருக்கமானது. என் 
நெஞ்சுக்கு நெருக்கமானது.
அடி, கண்ணம்மா அந்த நிறம்
அடியே உனக்குக் கூடப் பிடித்த நிறம்தான்.
அடிக்கடி நீ கூறுவாய் 
அதுதான் உனக்கும் பிடித்த நிறமென்று.
இல்லையா கண்ணம்மா! நீயே கூறு!

நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.

மேலும் படிக்க ...

'ரவி அல்லது' கவிதைகள்! - ரவி அல்லது (பட்டுக்கோட்டை) -

விவரங்கள்
- ரவி அல்லது (பட்டுக்கோட்டை) -
கவிதை
12 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அதீத நிதர்சனம்

அநேகமாக
இந்தச் சூரியன் இன்றோடு நின்றுவிடப்போவதில்லை.
அந்த
நிலவுக்கு மேகத்தில் மறைதல்
கால நீடிப்பானாலும்
ஒளிவதற்கு உகந்த இடமெனக் கொள்ள முடியவில்லை.
ஆடு கடித்தாலும்
அந்தப் பூ
அடுத்தடுத்த நாளில்
பூக்கத்தான் போகிறது.
அவளைக் காதலிக்கத்தான்
வேண்டுமென்ற
அவசியங்கள் எதுவுமில்லை.
எப்படியும் கல்யாணம் செய்யத்தான் போகிறார்கள்.
இம்முறை
அடை வைத்த முட்டைகள்
பொறிக்காமல் போனாலென்ன
மறுமுறை முட்டைகள் போடும் கோழி இருக்கத்தான் செய்கிறது.
எனக்குத் தெரிந்தவரை
என் தாத்தாவும்
அவர் தாத்தாவும் செத்துத்தான் போனார்கள்.
இங்கு
இப்பொழுதென
எதார்த்தத்தை
ஏற்று
இயல்பில்
இணங்கியவனுக்கு
நாளை பற்றிய
நம்பிக்கைத் தேவையில்லை
தருணப் புரிதலில் லயிப்பதற்கு.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: எழுத்தாளர் கந்தையா அருந்தவராஜாவின் 'புலம் பெயரும் மண்வாசம்'! நூல் பற்றியதொரு பார்வை! - வாசுகி விமலராஜ் -

விவரங்கள்
- வாசுகி விமலராஜ் -
நூல் அறிமுகம்
12 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழர் கண்ட நகர்வில் தொடங்கி புலம் பெயர் வாழ்வின் புதிய தேவைகள் வரை எட்டுத் தலைப்புக்களில், நூற்றியொன்பது பக்ககங்களில் புலம் பெயர் தமிழர்களின் உணர்வுகளையும் , அவர்தம் வாழ்க்கையையும் மிகச்சிறப்பாக உணர்வுபூர்வமாக நூலாசிரியர் இந்நூலில் சித்திரித்துக் காட்டியுள்ளார் .

இந்நால் வெளிவந்து பல வருடங்கள் கடந்து இறுதியாக எதிர்பாராமல் என் கையில் கிடைத்தது .இத்தனை வருடங்கள் கடந்த பின்னர்தான் இந்நூலை வாசிக்க முடிந்தது என்ற ஆதங்கம் என் மனதில் எழுந்தாலும் , இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நான் வாசிக்கும்போதும் புவியியல் கற்றேன்! அரசியல் கற்றேன் ! வரலாறு கற்றேன்!அறிவியல் கற்றேன் !விஞ்ஞானம் கற்றேன் ! இலக்கியம் கற்றேன்! அத்துடன் அருந்தமிழையும் அள்ளிப்பருகினேன்!

புலம் பெயர்ந்த வாழ்வின் அனுபவங்கள் குறித்து எழுத முற்பட்ட இந்நூலாசிரியர் புலம் பெயர் தமிழராக இருப்பது , இந்நூலை எழுதுவதற்கு முக்கிய தகுதியாக நான்  கருதினாலும் அவர் தான் அனுபவித்த புலம் பெயர் வாழ்க்கை அனுபவங்களை அறிவினால் மட்டுமன்றி உணர்வு பூர்வமாகவும் உணர்ந்திருக்கின்றார் என்பதை இந்நூலிற்கு அணிந்துரை நல்கிய அமர ர் லெனின் மதிவாணன் மிக அழகாக குறிப்பிட்டிருந்தார் . இந்நூலில் உள்ள எட்டுக் கட்டுரைகளும் இவற்றை ஆதாரங்களுடனும்,மேற்கோள்களுடனும் எமக்குத் தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளன.

அகன்ற வான்வெளியில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியச் சுடர்  மட்டுமே இருந்ததாகவும் பின்னர் அச்சுடரில்  ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக வெடிப்புக்கள் ஏற்பட்டு பல துண்டங்களாக வீசப்பட்டு, பின்னர் கட்டித்து இறுதிக் கோளாக மாறி புவிக்கிரகமாக உருப்பெற்றது என்றும் இதுவே “பஞ்சியாக் கண்டம் “ என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் புவியோடு வெடிப்புக்குள்ளாகி ஏழு கண்டங்களாக பிளவுபட்டு இடப்பெயர்வுக்கு உள்ளாகியிருக்கின்றன. இதுவே புவியில் ஏற்பட்ட முதலாவது இடப்பெயர்வு என பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்கள்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி. ]


1. வ.ந.கிரிதரன் பாடல் - ஊர் திரும்புதல்!


இசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI
https://www.youtube.com/watch?v=t8mZmnb0Pig


யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.

மண்ணை விட்டுப் பிரிந்த போது
எண்ணத்தில் பதிந்த நினைவுகள் விரிய
மீண்டும் மண்ணைப் பார்க்கும் ஆவலில்
எண்ணப் பறவைகள் சிறகடித்துப்  பறந்தன.

யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.

மேலும் படிக்க ...

ஈழக்கவி கவிதைகள்!

விவரங்கள்
- ஈழக்கவி -
கவிதை
11 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



1

முகில்களின் மூன்றாம் பருவம்
(மௌனத்தால் பேசும் சூஃபி நிழல்)


புதைந்திருக்கும் ஒலி ஒன்று,
தொலைந்து போன ஓர் இனிமை போல
மேகத்தின் மடியில் கனவு காண்கிறது.
அது மெல்ல
தன் கருப்பு வெள்ளைப் பட்டங்களை விரித்துக்கொண்டு
புதிய சாயலை இழைக்கிறது —
நம்முள் பிறக்காத வார்த்தைகளுக்குள்.


வானத்தின் உச்சியில்,
ஒரு புறா பறந்தது
அது தூது அல்ல,
நம்மை நம்மிடம் கொண்டு சேர்க்கும்
ஒரு கோணக்கண்ணாடி.


மேகங்கள் மட்டும் பேசத் தெரிந்திருந்தால்
நம் கண்ணீர் குறித்து என்னவெல்லாம் சொல்வது?
பொழிந்ததும் போலவே,
அது எப்போதும் எங்கும் இல்லை.
தோன்றுவதும் மறைவதும்
அவைபோல் நாமும்.

நாம் ஒரு உறவின் இரு முனைகளில்
வசிக்கும் மழைதுளிகள் —
ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும்
ஓர் ஆழம் மாறுகிறது.

மேலும் படிக்க ...

தமிழரின் அறவியல் சிந்தனைகளும் பொது அறக் கூறுகளும்! - முனைவர் ஆ.முத்தையன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சு-2), தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர். -

விவரங்கள்
- முனைவர் ஆ.முத்தையன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சு-2), தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர். -
ஆய்வு
10 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

இன்று ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே ஓராண்டிற்கும் மேலாகப் போர் நடைபெற்று வருகிறது. இதேபோல இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்குமான போரையும் குறிப்பிட்டாக வேண்டும். இவைமட்டுமில்லாது உலகின் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போர்களும் பிராந்திய மோதல்களும் நடைபெற்று வருகின்றன. இவை எவற்றை முன்வைக்கின்றன என்பதே கேள்வி. இவ்விடத்தில்தான் அறம் (நீதி) குறித்தான கேள்வியையும் கேட்க வேண்டியிருக்கிறது.

போர் குறித்தான சிந்தனை நம்முடைய சங்க இலக்கியங்கள் தொடங்கி பார்க்கிறோம். நீதிநூல்களில் ஒன்றான திருக்குறளில் போருக்கான அறத்தையும் காண்கிறோம். சங்க இலக்கியங்கள் தொடங்கி அற இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பிற்கால நீதி நூல்கள், தற்கால இலக்கியங்கள் வரை அனைத்தும் பல்வேறு அறங்களை (நீதிகளை) முன்வைக்கின்றன. ஆனாலும், ஏன் எல்லாக் காலங்களிலும் போர்கள் உருவாகி வருகின்றன என்பது விளங்காமலே இருக்கின்றன. இவர்களுக்குள் அறம் என்பது இல்லையா? அல்லது அறம் போதிக்கப் படவில்லையா?.

மேலும் படிக்க ...

என் நினைவில் எழுத்தாளர் கலா சிறீரஞ்சன் (பூங்கோதை) - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நவஜோதி ஜோகரட்னம்
09 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



[பெண்கள் சந்திப்பினூடாக இடம்பெற்ற நினைவுப் பகிர்தலில் எனது உரை. - நவஜோதி ஜோகரட்னம்- ]

    லண்டனில் ‘விம்பம’ நடாத்தும் இலக்கியக் கூட்டங்களின் போதுதான் கலாவை நான் முதன் முதலில் சந்தித்தேன். முதற்சந்திப்பின்போதே ‘பூங்கோதை’ எனத் தனது எழுத்துலகப் பெயரைக்கூறி தன்னை அறிமுகஞ்செய்து அன்பாகப்பேசி அழகு சேர்த்த பாங்கு என்னைக் கவர்ந்தது. பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளின் மூலமாக மட்டுமே எமது உறவு தொடர்ந்து நீடித்தது.

     இலக்கிய விடயங்கள் சம்பந்தமான விடயங்கள் தவிர சொந்த விடயங்கள் எதுவும் எமக்கிடையில் பரிமாறப்படுவதில்லை. இருந்தும் 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் பாமுகம் பா ரிவியில் நான் தயாரித்து வழங்கும் ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலை மேற்கோள்ள வேண்டும் எனக் கேட்டிருந்தேன். பூங்கோதை மிகவும் மகிழ்ச்சியுடன் அதனைச் செய்ய ஒப்புக்கொண்டார். அவ்வேளைகளில் தான் அவர்பற்றிய சிறு விபரங்களை அவருடன் உரையாடிப் பெற்றுக்கொள்ள முடிந்தது. மிகவும் நல்ல தகவல்களோடு அந்த நேர்காணலை என்னுடன் மேற்கொண்டார். அந்த வேளையில்தான் தனக்கு இரு மகன்மார் இருக்கிறார்கள் எனக் கூறினார். எனக்கும் இரு மகன்மார் உள்ளனர் எனக்கூறி நாமிருவரும் ஒருவித  ஒற்றுமையில் பூரிப்படைந்தோம். அத்தோடு கலா  ஆசிரியைக்குரிய பண்போடு எனது இளைய மகனின் ஓவியத்தை ‘It's so beautiful well done to his artistic hands!’  என்று பாராட்டியிருந்தமையை என்னால் மறக்க முடியவில்லை.

மேலும் படிக்க ...

கணேஷின் கவிதைத் துளிகள்!

விவரங்கள்
- கணேஷ் -
கவிதை
07 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1.

கனவுகளில் தோய்ந்து
நினைவுகளை இழந்தவன்
திகைப்பாளி
நினைவுகளில் தோய்ந்து
கனவுகளை இழந்தவன்
ஏமாளி
கனவுகளையும், நினைவுகளையும்
இணைத்து  செல்பவனே 
வெற்றியாளன் .

சுதந்திரத்தை துர்ப்பிரயோகம் 
செய்யும் சிலரைக் காட்டி
இன்றும் சுதந்திரக் காற்றை
சுவாசிக்க​ துடிப்பவர்களை சந்திக்க​
வைக்கிறோம் என்று
ஆற்றை அல்லவா வற்ற​ வைத்து 
விடுகிறீர்கள் .
நானும் . நீயும் ஒரே வலுவுள்ள​
கைபேசிகளை வைத்திருந்தாலும்
அவற்றை பாவிக்கும் விதத்தில்
தானே வேறுபட்டு நிற்கிறோம் .

மேலும் படிக்க ...

தமிழரின் அறவியல் சிந்தனை – துறவறம்! - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -

விவரங்கள்
- முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
ஆய்வு
07 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

உலகில் உள்ள தொன்மையான இனங்களில் தமிழினமும் ஒன்று. ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி’ என்று சிறப்பித்து அழைக்கப்படும் தமிழினத்திற்கு என்று தனித்த பண்பாட்டு அடையாளமும், வரலாற்றுப் பின்புலமும் உண்டு. நாடோடி மக்களாக வாழ்க்கையைத் தொடங்கிய தமிழர் நிலையான குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு என்று தனித்த அடையாளத்தை உருவாக்கினர். தங்களுடைய வாழ்க்கை முறைகளைச் செழுமையானதாக வடிவமைத்துக் கொண்டனர். இந்த நிலை ஈராயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்னரே நடந்தேறியுள்ளது. நிலத்தின் அடிப்படையில் அமைந்தது அவர்களின் அந்த வாழ்க்கை முறை. அது மலை, காடு, வயல்வெளி, நீர்நிலை, வறண்ட நிலப்பரப்பு என்பதாக அமைந்திருந்தது. அதைப் பண்டைத் தமிழ் இலக்கியப் பாடல்களும் பதிவு செய்துள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பெயர்களில் அமைந்த அவ்வாழ்வியல் அகம் – புறம் என இரு பிரிவாக அமைந்திருந்தது.

மிகப் பழமையான நாகரீகத்தைக் கொண்ட சமூகங்களில் ஒன்றாக விளங்கும் தமிழினத்தின் வாழ்வியல் தொடர்ந்து ஒவ்வொரு காலத்திலும் மென்மேலும் செழுமை பெற்று வந்துள்ளது. தொடக்கத்தில் காதல் / வீரம் என்றிருந்துள்ளது. அதன் பின்னர் அறம், பக்தி, பகுத்தறிவுச் சிந்தனை எனப் பல சிந்தனைகள் தொடர்ந்து உருவாகியுள்ளன. பல்வேறு அரசியல், சமூக நெருக்கடிகள் நிலவியிருந்த பின்னணியிலும், தொடர்ந்து காலச்சூழலுக்கு ஏற்பச் சிந்தனைகளைச் செழுமைப்படுத்தி வந்துள்ளனர். பிற இனத்தவரால் (பிற மொழி, பண்பாட்டுப் பின்னணி) அதிக காலம் ஆளபட்டிருந்தாலும், தமிழ்ச் சமூகத்தில் தம் இனத்தின் தனித்த அடையாளங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. இன்றும் தொடர்ந்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க ...

இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர் பாலு மகேந்திரா! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
06 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



இந்தியச் சினிமா உலகில் இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவுக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர் இவர். இவர் இயக்கத்தில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள் மூன்று தடவைகள் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன.  ஆறு  தடவைகள் சிறந்த இயக்குநருக்கான பிலிம்ஃபெயர் விருதினைப் பெற்றவர். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இப்பொழுது இவர் யாரென்று அறிந்திருப்பீர்கள். ஆம்! இவர்தான் பாலு மகேந்திரா.

இவர் இயக்கத்தில் வெளியான  வீடு, சந்தியாராகம், வண்ணவண்ணப் பூக்கள் இந்திய மத்திய அரசின் தேசிய விருதுகள் பெற்றிருக்கின்றன.  சிறந்த ஒளிப்பதிவாளருக்காக மூன்றாம் பிறை , கோகிலா (கன்னடம்) ஆகிய திரைப்படங்களுக்காக விருதுகள் பெற்றவர். சிறந்த இயக்குநருக்காக ஆறு  தடவைகள் பிலிம்ஃபெயர்  விருது பெற்றிருக்கின்றார். மேலும் கேரள, கர்நாடக மாநில அரசுகளின் விருதுகள், பிலிம்ஃபெயர் விருதுகள், நந்தி விருதுகள் பெற்றிருக்கின்றார்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்- நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே!

விவரங்கள்
வ.ந.கிரிதரன்
கலை
05 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி. 


நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே!
( இசை & குரல் - AI Suno  ஓவியம் - AI)

 பாடலைக் கேட்டுக் களிக்க


நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே

சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

உன் அன்பின் வலிமை ஆட்கொள்ள
என் நிலை குலையும் ஆனால்
இன்பத்தேன் குடிக்கும் தேனி ஆவேன்
அன்பே .அது போதும் எனக்கு.

நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

எதிர்பார்ப்பு அற்றது தூய அன்பு.
எதிர்பார்ப்பில் தூய்மை எங்கே கூறு?
இருப்பில் இதுபோல் ஓருறவு வரப்பிரசாதம்.
இல்லையா அன்பே நீயே கூறு.

மேலும் படிக்க ...

இந்தியப் பயணத்தொடர்: சாஞ்சியின் தூபிகள் – அசோகனின் கதை, புத்தரின் கலைச்சின்னங்கள்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
04 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


போபால் நகரத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாஞ்சியில், மன்னன் அசோகனால் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த தூபி அமைந்திருக்கிறது. இதைச் சுற்றிப் பல தூபிகள் உள்ளன  இந்த தூபி புத்தரின் எச்சங்களுடன் கட்டப்பட்டதோடு, அதன் ஆடம்பரமான கூம்பு (கிரீடம் போன்ற அமைப்பு) பார்வையாளர்களை கவர்கிறது. தூபியின் நான்கு பக்கங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாசலிலும் வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய சிற்பங்கள், குறிப்பாகப் புத்தரின் ஜாதகக் கதைகள், பிறப்பு முதல் பரிநிர்வாணம் வரை உள்ள நிகழ்வுகள் மற்றும் அசோக மன்னரின் வாழ்க்கைச் சம்பவங்கள் கல்லில் காவியமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

ஒரு சிற்பத்தில், சுத்தோதன மன்னருக்கு வாரிசு கிடையாது என்ற எண்ணத்தில் அவரது மனைவி மாயாதேவி, தங்கையான கவுதமியை மணம் செய்யுமாறு வற்புறுத்துகிறாள். மன்னர் சம்மதிக்காமலிருந்தாலும், பட்டத்துக்கு வாரிசு தேவை என்பதாலேயே அந்த திருமணம் நடைபெறுகிறது. அதன் பின்னர் மாயாதேவியின் கனவில் வெள்ளை யானை தோன்றியதும் , ஜோதிடர்கள் அதனை நல்ல அறிகுறியாக அரசனிடம் கூறுகிறார்கள். இத்தகைய பல புராணக் கூறுகள் தூபியில் சிற்பமாகக் காணப்படுகின்றன.

இந்த தூபியின் வாசல் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதைகள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் புத்தரின் முற்பிறவிக் கதைகள் பிரதானமாக இடம் பெற்றுள்ளன. இவை இந்தியச் சிற்பக் கலையின் தொடக்கமாகவே கருதப்படுகின்றன. அதாவது  மாமல்லபுரத்து சிற்பங்களிலும் 900 வருடங்கள் தொன்மையானது.

தூபியின் சில தூண்களில் அசோக சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிற்பங்களில் இந்தியரல்லாதவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் உடைகள் மற்றும் பாத அணிகளிலிருந்து அவர்கள் கிரேக்கர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். இது கிரேக்கர்களும் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டிருப்பதை காட்டுகிறது. இவற்றின் மூலம், ஒரு கால கட்டத்தில் மவுரியச் சாம்ராஜ்யம் எப்படி இயங்கியது என்ற  வரலாற்றைச் சிற்பங்களினாலேயே நமக்கு அறிய முடிகிறது.

மேலும் படிக்க ...

கவிதை: எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தியாறே வா! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் .... அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் .... அவுஸ்திரேலியா -
கவிதை
04 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

    வெள்ளத்தின் வேதனை போக்கிடவே வா
    பள்ளத்தில் வீழ்ந்தோரை எண்ணியே வா
    உள்ளத்தால் உடைந்தோர்க்கு உயர் மருந்தாய்வா
    எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தி யாறேவா

    மண்ணுக்குள் புதையுண்டு மாண்டோரை நினைக்கும்
    மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா
    மழையாலே அள்ளுண்டு வீடிழந்து நிற்பாரின்
    மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா

    கும்பிட்ட கோவிலெங்கும் குளமாகி நிற்கையிலே
    நம்பிக்கை இழக்காமல் நாடினார் இறையிடமே
    இறைதூதர் வடிவிலே எங்கிருந்தோ வந்து
    உதவினார் குணம்போற்ற ஓடிவா புத்தாண்டே

    விளம்பரம் தோடாமல் விரைந்தோடி வந்து
    வீழ்ந்திருப்பார் இடம்பார்த்து தேவையினை அறிந்து
    உளமுவக்க உவந்திட்டார் உச்சிதொட்டு வாழ்த்துதற்கு
    புத்தாண்டே நீயும் புறப்பட்டு வந்துவிடு

மேலும் படிக்க ...

இளைய பாரதி பற்றி மேலும் சில சிந்தனைகள்! - எல்.ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல்.ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
03 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



அறிமுகம்

தனது, 23ம் வயதில் சேதுபதி தமிழாசிரியனாய் இருந்த பாரதியை, ஜி.சுப்ரமணிய ஐயர் அழைத்து செல்கின்றார் (பத்திரிகை தொழிலில் ஈடுபடுத்தும் பொருட்டு). இரண்டு வருடங்களில், அவனோ புதுமையாக வலம் வருகின்றான். அவனது வியக்க வைக்கும் மொழிபெயர்ப்பு திறனும், பெண்கள் பொறுத்தும் சாதிய கீழ்நிலையில் ஜீவிக்க கூடியவர்கள் பொறுத்தும், இன ஒற்றுமை பொறுத்தும் அவனுள் கொந்தளிக்கும் எண்ணக்கருக்கள் அறிஞர்களையும் திகைக்க வைக்கின்றது. ஆங்கிலேயரின் ஆட்சியின்பால் சமரசமற்ற வெறுப்பணர்வை உமிழும் அவன், அவர்களின் ஆதிக்கத்தின் சூட்சுமங்களை கண்டுணரும் கூர்மதி படைத்தவனாகவும் இருக்கின்றான். மக்கள் சைன்யத்தை வாஞ்சையுடன் நெருங்கும் அவன், தனது எழுத்தை அவர்களுக்காகவே அர்ப்பணிக்க முடிவு செய்கின்றான். இவ்வளவுமாய் இல்லை என்றால், இல்லை என்பதே உறுதியான விடையாகின்றது. கைலாசபதியின் வார்த்தைகளில் கூறுவதானால்:     “அவனது பார்வை பாயாத இடமே இல்லை” எனலாம்.

 24 வயது இளைஞனாய் பாரதி, பின்வருமாறு எழுதுகின்றான்:

“அனேக நூற்றாண்டுகளாக நித்திரை போய்க் கொண்டிருந்த ஓர் பெருந் தேசமானது இப்போது கண் விழித்து ஏற முயற்சி பண்ணும் சமயத்தில் அமுக்கி விடுவது இலேசான காரியமாகுமா”
(பக்கம்: 280)

இங்கே, மூன்று விடயங்கள் காணக்கிட்டுகின்றன:

1. அனேக நூற்றாண்டுகளாய் நித்திரை கொண்டிருந்த ஒரு தேசம்
2. அது, இப்போது, கண் விழித்து எழும் (அரசியல் உணர்வு பெற்றதாய்).
3. அதனை அமுக்கி விடுவது, அத்தனை இலேசான காரியமாக போவதில்லை என்பது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. ஆய்வு: பெரியாரியம் : மார்க்சியம் - ஒப்பீடு! - செ. சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் – 636011 -
  2. பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்! - வ.ந.கிரிதரன் -
  3. அறிமுகம்: 'வ.ந.கிரிதரனின் பாடல்கள் ' (V.N.Giritharan Songs) 'யு டியூப் சானல்'!
  4. சிறுகதை: நிவாரணம்! - டீன் கபூர் -
  5. சிறுகதை: கனவு மெய்பட வேண்டும்… -பாலமுருகன்.லோ-
  6. அஞ்சலி: ஓவியர் ரமணி ஆற்றல் மிக்க ஓவியக் கலைஞர்! சிற்பியும் கூட! - வ.ந.கிரிதரன் -
  7. காரல்யுங்கின் ஆளுமைவகைப்பாடு! - முனைவா் பா.பொன்னி, இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி ( தன்னாட்சி ), சிவகாசி. -
  8. நினைவுக் குளிப்பு: பொன்னம்மா ரீச்சர்! - தேவகாந்தன் -
  9. “விமர்சனத்தை ஒடுக்கி, பலவீனங்களை ஆயுதமாக்கும் உள்-வட்ட சர்வாதிகாரங்கள்: சமூகத்தை வீழ்த்தும் நவீன அதிகார நிழல்கள்”! - பவானி சற்குணசெல்வம் -
  10. கனடாவில் எழுத்தாளர் விமல் பரம் அவர்களின் 'தீதும் நன்றும்' சிறுகதைத்தொகுப்பு வெளியீடு!
  11. செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தமிழில் (Gemini AI முன் வைத்து) - முனைவர்பீ. பெரியசாமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர்எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம்கலைக்கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317, தமிழ்நாடு, இந்தியா -
  12. புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முக பகுப்பாய்வு! (2) - ஈழக்கவி -
  13. கல்விக் கண் திறத்தல்! - நடேசன் -
  14. 'ஒருமுனை'யிலிருந்து 'பன்முனை' நோக்கி - சரவதேச அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்திய 2025! - எல்.ஜோதிகுமார் -
பக்கம் 2 / 121
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி