
[ வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1 - செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி. ]
1. வ.ந.கிரிதரன் பாடல் - ஊர் திரும்புதல்!
இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
https://www.youtube.com/watch?v=t8mZmnb0Pig
யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.
மண்ணை விட்டுப் பிரிந்த போது
எண்ணத்தில் பதிந்த நினைவுகள் விரிய
மீண்டும் மண்ணைப் பார்க்கும் ஆவலில்
எண்ணப் பறவைகள் சிறகடித்துப் பறந்தன.
யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.
என்னுடன் படித்த , என்னுடன் திரிந்த
என்னினிய நண்பர்கள் எங்கே. எங்கே.
என்னுடன் திரிந்த நண்பர் எவரும்
எங்குமற்ற மண்ணைக் கண்டேன்.
யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.
தலைமுறைகள் மாறிய மண்ணைக் கண்டேன்.
இளைய தலைமுறையோ வெளிநாட்டுக் கனவில்
இருந்திடும் ஊரைக் கண்டேன் அங்கே.
இருந்திட்ட என்னூரை எங்கே காண்பேன்.
யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.
இளமைக் கனவுகள் தந்த மண்ணில்
கனவுகள் தந்த காரிகையும் இல்லை.
கனவுகள் கண்ட திரை அரங்குகளுமில்லை.
கண்டதெல்லாம் புதியதோர் உலகம்.
யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.
காலம் விரைந்து தூரம் சென்றதைக்
கண்டது மனது. தந்தது பயணம்.
சொந்த மண்ணில் சொந்தமில்லை.
அந்நியனாகப் பவனி வந்தேன்.
யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.
உறைந்த காலத்தில் இருந்த நினைவுகள்
உருகின. உண்மை நிலையினைக் கண்டேன்.
நிறைவைத் தேடிச் சென்ற நெஞ்சிலோ
நிறைய நினைவுகள் மிஞ்சிக் கிடந்தன.
யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.
உறவுகள் உலாவிய தெருக்களோ
உறவுகள் அற்று வெறிச்சுக் கிடந்தன.
மண்ணின்மனிதர்கள் மாறி விட்டனர்.
எண்ணற்ற கனவுகளுடன் உலாவி வந்தனர்.
யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.
கனவுகள் நிறைந்த மனத்துடன் சென்றேன்.
நனவின் நிலையிலே உண்மை உணர்ந்தேன்.
சென்று வருகின்றேன் என்னினிய மண்ணே!
என்றுமே வளத்தில் நீ பூத்துக் குலுங்குக.
யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.
2. கல்லுண்டாய் நினைவுகள்!
இசை & பாடல் - SUNO AI ஓவியம் - Google AI
https://www.youtube.com/watch?v=jo7FvgVTjwg
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
நகருக்குப் படையெடுப்பர் தொழிலாளர்.
நானும் கூடவே சைக்கிளில் செல்வேன்.
அராலி வடக்கில் நான் வசித்தேன்.
அக்கால நினைவுகள் விரிகின்றன.
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
அராலிப் பாலத்தில் இறால் பிடிப்பர்
அதிகாலையில் தொழில் செய்யும் தொழிலாளர்.
அங்குதான் வழுக்கியாறு கடலுடன் சங்கமிக்கும்.
அதுவோர் அகத்தின் இனிய நினைவு.;
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
தொலைவில் நவாலி ம்ணற் குன்றுகள்.
தவமியற்றும் துறவிகள் போலிருக்கும்.
காற்றிலாடும் பசும் வயல்கள்.
கிளிகளும் கூட்டமாகப் பறக்கும்.
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
கல்லுண்டாய் வைரவர் தாண்டிச் செல்வேன்.
காக்கைதீவு கண் முன்னே விரியும்.
காலையில் மீன்சந்தை உயிருடன் விளங்கும்.
கண்களில் காட்சி இன்னும் தெரிகிறது.
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
கடலட்டை சூளைகளில் அவியும். அவிந்ததைக்.
காயப் போட்டிருப்பர் கடற் தொழிலாளர்.
கடற் பறவைகளோ நிறைந்து கிடக்கும்.
காட்சியை மறக்கத்தான் முடியுமா?
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
தொடர்ந்து பயணிப்பேன். நாவாந்துறை தெரியும்.
கடந்து சென்றால் பொம்மைவெளிக் குடியேற்றம்.
முஸ்லிம் மக்கள் வாழும் குடியேற்றம்.
மறக்க முடியாத காட்சிகள் அல்லவா.
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
3. பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
இசை & குரல் - Suno AI ஓவியம் - AI
https://www.youtube.com/watch?v=udibcoi0nt0
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.
மூடத்தனம் நிறைந்த உலகம் இது.
மூர்க்கம் நிறைந்த உலகம் இது.
போர்கள் நிறைந்த உலகம் இது.
பிரிவுகள் மலிந்த உலகம் இது.
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.
வாயுக் குமிழ் போன்றது நம் வாழ்வு.
ஓயும் வரையும் உணராமல் ஓடுகின்றோம்.
சாயும் வரையில் சரிபிழை தெரிவதில்லை.
மாயும் வரையில் சிந்திக்காமல் வாழுகின்றோம்.
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.
மண்ணைப் பங்கு போட ஆசை.
பொன்னைப் பெருக்கப் பேர் ஆசை.
ஆசைகளை பூர்த்தி செய்ய ஆடுகின்றோம்.
அல்லும் பகலும் ஓயாது பறக்கின்றோம்.
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.
சமத்துவம் அற்ற உலகம் இது.
சமநீதி அற்ற உலகம் இது.
பகுத்து அறிவோம் மேலும் உயர்வோம்
வகுத்து வைப்போம் நல்லதோர் அமைப்பை.
பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்
4. நல்ல நாள்!
இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
https://www.youtube.com/watch?v=i6U5tITxsb8
பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.
ஒவ்வொரு காலையும் புதுக்காலையே.
இவ்விதம் எண்ணி எழுந்தால்
நல்லநாள் எனவே விடியும்.
எல்லா இடரும் உலர்ந்துபோகும்.
பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.
நடந்தவற்றை ஒதுக்கிக் கடப்போம்.
நடப்பவற்றை துதித்து ஏற்போம்.
நடப்பவை எல்லாமே இனிதாய்
நடக்கும் என்பதை அறிவோம்.
பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.
புலரும் காலை புத்துணர்வால்
பொங்கி வழியட்டும். சிறக்கட்டும்.
நம்பிக்கை எண்ணமழை பெய்யட்டும்.
நாள் நன்னாளாகக் கழியட்டும்.
பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.
5. மனத்தை மயக்கும் இந்தநிலா!
இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
https://www.youtube.com/watch?v=ScfWI_dVoyw
உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.
ஆதி மானுடர் அண்ணாந்து பார்த்த இந்தநிலா
அரிஸ்டாட்டில் அன்று பார்த்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.
உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.
தண்ணொளி பொழிந்து மயக்கும் இந்தநிலா.
மண்ணகத்தார் வாழ்வில் நிறைந்த இந்தநிலா.
எண்ணத்தில் கற்பனை ஏற்றும் இந்தநிலா.
அண்ணாந்து பார்க்க வைக்கும் இந்தநிலா.
உயரத்தில் உள்ளது இந்தநிலா.
துயரத்தைத் தீர்ப்பதுவும் இந்தநிலா.
காதலுக்குத் தூது செல்லும் இந்தநிலா.
கண்களுக்கு விருந்தளிக்கும் இந்தநிலா.
சிந்தையைக் கொள்ளை கொள்ளும் இந்தநிலா.
எம்முன்னோர் களித்துக் கிடந்த இந்தநிலா.
உயரத்தில் உள்ளது இந்தநிலா.
துயரத்தைத் தீர்ப்பதுவும் இந்தநிலா.

6. நினைவுக் குருவிகள்
இசை & குரல் - AI Suno ஓவியம் - AI
https://www.youtube.com/watch?v=-Ac84oWu9Ww
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
உன் அன்பின் வலிமை ஆட்கொள்ள
என் நிலை குலையும் ஆனால்
இன்பத்தேன் குடிக்கும் தேனி ஆவேன்
அன்பே .அது போதும் எனக்கு.
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
எதிர்பார்ப்பு அற்றது தூய அன்பு.
எதிர்பார்ப்பில் தூய்மை எங்கே கூறு?
இருப்பில் இதுபோல் ஓருறவு வரப்பிரசாதம்.
இல்லையா அன்பே நீயே கூறு.
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
நிதிகொண்டு எதனையும் இங்கு வாங்கலாம்.
நிதிகொண்டு வாங்க முடியாதது அன்பு.
உண்மை அன்பு ஊற்றெடுக்கும் தானாக.
ஊற்று பெருகும் நீர் வீழ்ச்சியாக
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

7. எழுக அதிமானுடரே!
இசை & குரல் - SUNO AI ஓவியம் - Google AI
https://www.youtube.com/watch?v=G7wzzPH6PM4
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்!
'காங்ரீட்''காங்ரீட்'Concrete!
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்!
காணும் திசையெல்லாம்
'காங்ரீட்'காடுகள்.
'காங்ரீட்' காடுகள்.
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'
'காங்ரீட்''காங்ரீட்'Concrete!
'காங்ரீட்''காங்ரீட்'Concrete!
கதிர்களை உறுஞ்சும் சுவர்க்ள்.
கதிர்களை உறுஞ்சும் சுவர்க்ள்.
'காங்ரீட்' சுவர்கள்!
கனல் உதிர்க்கும் Concrete மரங்கள்
சீமெந்து சிரிக்கும் நடைபாதைகள்.
வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'!
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'!
தூண்களின் அரவணைப்பில்
துவண்டு கிடக்கும் காலவெளிகள்.
செயற்கையின் தாக்கங்கள்.
எங்கும்
செயலற்ற இயற்கையின் தேக்கங்கள்.
தலைகவிழ்ந்து தண் நிழலால்
அரவணைக்கும் விருட்சப் பெண்கள் எங்கே?
'காங்ரீட்''காங்ரீட்'Concrete!
'காங்ரீட்''காங்ரீட்'Concrete!
மரங்களில் புல்வெளிகளில் மந்தைகளாகக்
குழுக்களாகக் குகைகளில்
நடுங்கடிக்குமிருண்ட இராவினில்
நடுங்கி மின்னிடுமொளியினில்
மருண்டு கொட்டிடும் மழையினுள்
சுருண்டு
புரியாத பொழுதுகளில்
பதுங்கிக் குடங்கித் தொடர்ந்திட்ட
ஆதிப்பயணங்கள்.
இயற்கையின் தாக்கத்தினுள்
இலங்கிட்ட வட்டங்களில்
மயங்கிக் கிடந்த வாழ்க்கைச்
சக்கரங்கள்.
இனிய
அதிகாலைப் பொழுதுகளா அவை.
எழில் கொட்டிய இன்பப் பொழில்களா அவை.
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'!
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'!
விஞ்ஞானத்தின் இறுமாப்பில்
விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக்கிடக்கும் மானுடத்தின்
நெஞ்சினிலோ.......
ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!
எங்கே ? எங்கே ? அவையெல்லாம்
எங்கே ? ஐயோ..அவையெல்லாம்
எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ ?
பொறி கக்கும் புகையினில் சுவாசம் முட்டி
புகைந்திட்ட வர்க்கப் போர்களால்
நிலைகுலையும் ககனத்தில்
குண்டுகளின் தாண்டவம்.
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'!
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'!
அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே!
வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?
விரக்தி! அமைதியின்மை! ஆங்காரம்!
போர்! போர்!போர்!
போரென்றால்..போர்! போர்! போர்!
ஆ....
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வழுதானென்ன ? வழுதானென்ன ?
வழுதானென்ன ?
ஆ..அந்த
அமைதி!அமைதி!அமைதி!
அன்பு!அன்பு!அன்பு!\இனிமை!இனிமை!இனிமை!
அதி மானுடரே!
எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?
[ வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1 - செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி. ]



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









