பதிவுகள் முகப்பு

ஒரு டொரோண்டோ நகரவாசியின் 'கோல்டென் மைல் மீளமைப்பு' (ReNew Golden Mile) திட்டம் பற்றிய அக்கறை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
16 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டொரோண்டோ மாநகரசபை அண்மையில் ReNew Golden Mile திட்டம் பற்றிய சுற்றுச் சூழல் மதிப்பீட்டை முடித்திருந்தது. அது பற்றிப் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டிருந்தது. அது பற்றிய எனது ReNew Golden Mile திட்டம் பற்றிய அக்கறைக்குரிய கருத்துகள் இவை. இவை இத்திட்டம் பற்றி எண்ணியதும் எழுந்த எண்ணங்களின் தொகுப்பு.

நகரத் திட்டமிடலின் முக்கிய தத்துவம்

நவீன நகராட்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டின் அடிப்படை நோக்கம், தற்போது வாழும் நகர மக்களின் வாழ்க்கையை மேலும் மகிழ்ச்சியானதாகவும், மலிவானதாகவும், நிதி ரீதியாக நிலையானதாகவும் மாற்றுவதாக இருக்க வேண்டும். ஒரு நகரத்தின் வடிவமைப்பு மனித மகிழ்ச்சி, சமூக ஸ்திரத்தன்மை மற்றும் கட்டமைப்பு நல்வாழ்வைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டுமே தவிர, அது வெறும் கட்டுமான நிறுவனங்களின் லாபத்திற்காகவோ அல்லது நகராட்சி வரி வருவாயை அதிகரிப்பதற்காகவோ கட்டுப்பாடற்ற வணிக இயந்திரமாகவோ இருக்கக்கூடாது.

மேலும் படிக்க ...

ஆன் கார்சன்: செவ்வியல் மரபின் மறுவாசிப்பும், சமகால இலக்கியத்தின் புதிய வடிவங்களும்! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
16 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பண்டைய கிரேக்கத்தின் சிதைந்த சொற்களிலிருந்து சமகால மனிதனின் உடைந்த உள்ளம் வரை; கவிதையிலிருந்து மெய்யியல் வரை; மொழிபெயர்ப்பிலிருந்து புதிய இலக்கிய வடிவங்கள் வரை—ஆன் கார்சனின் படைப்புலகம் இலக்கிய வகைமைகளின் எல்லைகளை மறுபரிசீலனை செய்ய நம்மை அழைக்கிறது.

2026 ஆம் ஆண்டு அக்டோபர் 8 அன்று கனடியக் கவிஞரும், கட்டுரையாளரும், செவ்வியல் அறிஞரும், மொழிபெயர்ப்பாளருமான ஆன் கார்சன் (Anne Carson) இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றிருப்பது, சமகால இலக்கியத்தின் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதற்கான மைல்கல்லாகும். ஸ்வீடிஷ் அகாடமி, அவருடைய படைப்புலகம் செவ்வியல் மரபுடன் விளையாட்டுத்தனமான உரையாடலில் ஈடுபட்டு, சமகால இலக்கியத்திற்குப் புதிய வடிவங்களை உருவாக்கிய துணிச்சலான, புதுமையான படைப்பாக்கம் எனப் பாராட்டியுள்ளது.

இந்த விருது ஒரு தனிப்பட்ட நூலின் வெற்றியை மட்டும் அங்கீகரிக்கவில்லை.  கவிதை, உரைநடை,  இலக்கிய விமர்சனம், செவ்வியல் மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் காட்சிக்கலை ஆகியவற்றின் எல்லைகளைத் தாண்டி, இலக்கியம் எவ்வாறு தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள முடியும் என்பதைச் சோதித்துவரும் நீண்டகாலப் படைப்புச் செயல்பாட்டிற்கான அங்கீகாரமாகவே இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “வ. அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு : இந்தியவியல் — திராவிடவியல் குறித்த உரையாடல்கள்..” - ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்ச்சி
15 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு 62 - யுகங்களின் குரல் "கவிஞர் மீரா" பதிவும் பகிர்வும்

விவரங்கள்
- இலக்கியவெளி -
நிகழ்ச்சி
15 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 |Passcode: 12345

மேலும் படிக்க ...

கனவுகளின் வரைபடம்: சிதைந்த கனவுகளும் தொடரும் வாழ்வும்! பொ. கருணாகரமூர்த்தியின் நாவல் குறித்த ஓர் இலக்கியத் திறனாய்வு! - பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் -
நூல் அறிமுகம்
15 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு மனிதன் தனது வாழ்க்கைக்கான கனவுகளைத் தானே உருவாக்குகிறானா? அல்லது வரலாறும் அரசியலும் சமூகமும் பொருளாதாரச் சூழலும் அவனுக்கான வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கின்றனவா? இந்தக் கேள்வியை மையமாகக் கொண்டு, ஈழத்திலிருந்து கனடா வரையிலான ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை மட்டுமல்லாமல், போர், இடப்பெயர்வு, புகலிடம், அடையாளத் தேடல், மனித உறவுகள், இலட்சியங்கள் ஆகியவற்றின் சிக்கலான ஊடாட்டத்தையும் பதிவு செய்யும் நாவலாகப் பொ. கருணாகரமூர்த்தியின் ‘கனவுகளின் வரைபடம்’ அமைகிறது.

இந்நாவலை ஒரு தனிமனிதனின் வாழ்க்கை வரலாறாக மட்டும் அணுகிவிட முடியாது. அது ஒரு காலத்தின் சமூக அரசியல் அனுபவங்களையும், போரினால் திசைமாறிய ஒரு தலைமுறையின் கனவுகளையும், புகலிட வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்கொள்ளும் அகப்புற முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் புனைவுப் படைப்பாக விரிகிறது. தனிமனித வாழ்வின் வழியாக ஒரு சமூகத்தின் வரலாற்றையும், சமூக வரலாற்றின் வழியாகத் தனிமனிதனின் மனப்போராட்டங்களையும் வெளிப்படுத்துவதிலேயே இந்நாவலின் முக்கியத்துவம் தங்கியுள்ளது.

யோகபுரம்: இயற்கையும் மனிதர்களும்

நாவலின் தொடக்கம் வன்னிப் பிரதேசத்தின் யோகபுரம் என்ற கிராமத்திலிருந்து விரிகிறது. அங்குள்ள அத்திமரம், நீர்ப்பாசனம், மரவகைகள், இயற்கையின் இயல்புகள், பாலியாற்றங்கரையோர மக்களின் வாழ்க்கை எனப் பல்வேறு கூறுகளின் வழியாக அந்த மண்ணின் வாழ்வியல் வாசகருக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இயற்கையை வெறும் பின்னணியாகப் பயன்படுத்தாமல், அது மனிதர்களின் வாழ்க்கையோடு எவ்வாறு இணைந்திருக்கிறது என்பதை எழுத்தாளர் நுணுக்கமாகப் பதிவு செய்கிறார்.

மேலும் படிக்க ...

ஆய்வு: மரப்பசு புதினத்தில் பாலியல்சிக்கல்கள்! - முனைவா் பா.பொன்னி -

விவரங்கள்
- முனைவா் பா.பொன்னி -
ஆய்வு
15 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: முனைவா் பா.பொன்னி, இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், இளங்கலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம், மகளிா் கல்லூாி ( தன்னாட்சி ), சிவகாசி. -


பாலுணர்வு மனித வாழ்வில் இன்றியமையாத இடம் வகிக்கின்றது. பாலுணர்வு சமூகத்தால் மிகுதியும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகையால் மனிதன் பல்வேறு சூழல்களில் தன்னுடைய பாலியல் வேட்கைகளை முழுவதுமாக நிறைவேற்றிக் கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்படுகிறான். அவ்வாறு மனதில் தோன்றிய இன்ப உணர்வு நிறைவேறாத நிலையில் மனிதன் பலவகையான உணர்வுகளுக்கு ஆட்படுகின்றான் என்பா். அவ்வகையில் தி.ஜானகிராமன் அவா்களின் மரப்பசு புதினம் மனிதா்களின் மனதில் ஏற்படும் பாலியல் தொடா்பான சிக்கல்களை விளக்குவதாக அமைகிறது. அவற்றுள் அம்மணி பாத்திரத்தின் பாலியல் தொடர்பான உளச்சிக்கல்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

மேலும் படிக்க ...

'சாந்தா குருஸ் தேவதை'! - கிறிஸ்டி நல்லரெத்தினம், மெல்பேர்ன் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம், மெல்பேர்ன் -
நூல் அறிமுகம்
12 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கியம் என்பது காலத்தின் அசைவுகளுக்கேற்பத் தன்னைத் தொடர்ந்து தகவமைத்துக் கொள்ளும் ஒரு ஜீவநதி. அது தேங்கி நிற்கும் தேக்கமன்று; புதிய நதிகள் வந்து சங்கமிக்கும் போதெல்லாம் தனது ஆழத்தையும் அகலத்தையும் பெருக்கிக் கொள்ளும் ஓயாத பெருவெள்ளம். மனித குலத்தின் ஆதி மொழியிலிருந்து இன்றைய மின்னனு யுகத்தின் கணினி வரிகள் வரை, கதையாடலின் வடிவம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றும் புதிய இலக்கிய வடிவங்களும், உத்திகளும், அழகியல் கோட்பாடுகளும் மொழியை உயிர்ப்புடன் வைப்பதுடன், மனித மனத்தின் விவரிக்க முடியாத ஆழங்களை அளந்தறியும் கருவிகளாகவும் செயல்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூக, அரசியல், மனோபாவ மாற்றங்கள், நிலவும் கதை சொல்லல் முறைகளில் போதாமையை உருவாக்கும் போது, எழுத்தாளன் புதிய வெளிப்பாட்டு வடிவங்களை நோக்கி நகர்கிறான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுக்கமான யதார்த்தவாதம் (Realism) மனிதனின் புற உலகை, அவனது அன்றாட வாழ்க்கையைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியது உண்மைதான். ஆனால், மனிதனின் அக உலகம், அவனது கூட்டு நனவிலி மனம் (Collective Unconscious), நினைவுகளின் பிம்பங்கள், வரலாற்றின் கண்ணுக்குத் தெரியாத வடுக்கள், ஆன்மீகத் தவிப்புகள் ஆகியவற்றை வெறும் புறவய யதார்த்தவாதத்தால் முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. இந்த வரலாற்றுத் தேவையின் விளைவாகவே, யதார்த்தத்தின் எல்லைகளை விரிவுபடுத்தும் புதிய கதை சொல்லல் உத்திகள் உலகெங்கும் தோன்றின.

மேலும் படிக்க ...

பயணத்தொடர் (4): அஜர்பைஜான் 4 : ஷமகியிலிருந்து ஜோர்ஜியா எல்லை வரை! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
12 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

    [ஷமகியின் ஜும்மா பள்ளிவாசல் ]

அஜர்பைஜானின் தலைநகர் பாகுவிலிருந்து எங்கள் அடுத்த பயணம் ஷமகி (Shamakhi) என்ற பழமையான நகரத்தை நோக்கி இருந்தது.

ஷமகி, இன்றைய அஜர்பைஜானின் முன்னாள் தலைநகர் அல்ல; மத்தியகாலத்தில் இப்பகுதியை ஆண்ட “ஷிர்வான்ஷாக்களின் (Shirvanshahs) முக்கிய தலைநகரமாக” விளங்கிய நகரம். பலமுறை ஏற்பட்ட கடுமையான பூகம்பங்களாலும் போர்களாலும் நகரம் அழிவுக்குள்ளாகி மீண்டும் மீண்டும் எழுந்திருக்கிறது. 1191-இல் ஏற்பட்ட அழிவுக்குப் பின்னர் ஷிர்வான்ஷாக்களின் ஆட்சிமையம் ஒரு காலத்திற்கு பாகுவுக்கு மாற்றப்பட்டது.

மலைப்பகுதியை நோக்கி அமைந்துள்ள ஷமகியின் இயற்கைச் சூழல், கஸ்பியன் கடற்கரையில் அமைந்துள்ள பாகுவின் வறண்ட நிலப்பரப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது.

கடந்த ஐந்து நாட்களாக நாங்கள் தங்கியிருந்த பாகுவே உலகின் மிகத் தாழ்வான உயரத்தில் அமைந்த தேசியத் தலைநகரமாகக் குறிப்பிடப்படுகிறது. அது கடல் மட்டத்திலிருந்து சுமார் 28 மீட்டர் கீழே அமைந்துள்ளது.

பாகுவிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷமகியை நோக்கிச் செல்லும் வழியில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிட்டோம்.

மேலும் படிக்க ...

இந்திய இலக்கியங்களில் இராமாயணத் தொன்மம்! - ப. அமுதலட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர் -

விவரங்கள்
Administrator
ஆய்வு
12 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: - ப. அமுதலட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கழைக்கழகம்,காந்திகிராமம் -


முன்னுரை

இந்திய இலக்கியம் 3000 ஆண்டுகால பழமையான இலக்கிய வரலாற்றையுடையது. தமிழ், சமஸ்கிருதம், பிராகிருதம் போன்ற இந்திய மொழிகள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகால பழமையைத் தன்னகத்தே கொண்டது. மிகப் பரந்த நிலப்பரப்பில் தோன்றிய இந்திய இலக்கியம் பன்மொழி இலக்கியக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டது. பல்வேறு சமூக அரசியல் ஆட்சிமுறைகள் இருந்தாலும் கூட இந்தியச் சமூகத்தில் சாதிய அமைப்பு என்பதும் பொருளாதார அமைப்பு என்பதும் பண்பாட்டு அடிப்படையில் ஒரு பொதுத்தன்மையைக் கொண்டுள்ளன. இராமாயணம், பாரதம், 18 புராணங்கள் போன்றவை இந்தியா முழுவதும் நிலவுகின்றன. இவை இந்நாட்டு இலக்கியமாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

தற்போதைய இந்திய அரசியல் பண்பாட்டுச் சூழலில் இதிகாசங்களின் கதை நிகழ்வுகள் மொழி, இலக்கியம், ஆன்மீகம், சுற்றுலா, திரைப்படம் எனப் பல்வேறு துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மறுநிர்ணயம் செய்யப்படுகின்றன. மேலும் தாம் காண விரும்பும் சமூக மாற்றத்திற்கான அனைத்து மூலங்களும் புராணங்களிலிருந்தும் குறிப்பாக இதிகாசங்களிலிருந்தும் தேடப்படுகின்றன.

மேலும் படிக்க ...

ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவும் ,சட்டமும்! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
10 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என் முகநூல் நண்பர்களில் ஒருவரான அருந்ததி குணசீலன் தனது முகநூற் பதிவொன்றில் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உரையாடியது பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு கூறியிருந்தார்:

" நடைமுறையில் சட்டங்கள் இருக்கும் போது, 'இவ்வாறு செய்யுங்கள்' என்று கட்டளையிட நான் விரும்பவில்லை. அப்படியானால் சட்டம் ஒருபுறம் இருக்க, அது எனது சட்டமாக மாறிவிடும். எனது விருப்பம் சட்டமாக மாறக்கூடாது. சாதாரண அரசியலில் சட்டம் என்பது ஆட்சியாளரின் விருப்பமாகும். என்று கூறப்பட்டாலும், எனது விருப்பத்தைச் சட்டமாக மாற்றிக்கொள்ள நான் எக்காலத்திலும் விரும்பவில்லை என்று, மகா சங்கத்தினரிடம் ஜனாதிபதி கூறினார். 'சட்டம் தற்காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லாவிட்டால் , உரிய முறையில் சட்டத்தை இயற்றிக்கொள்வதைத் தவிர, நமது விருப்பத் தின்படி சட்டத்தைச் செயற்படுத்துவது உகந்ததல்ல' எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்."

இது உண்மையில் வரவேற்கத்தக்கது. இலங்கையில் உள்ள அனைத்து மக்களிற்கிடையிலான உரிமைப் பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமே நாட்டில் சட்டம் என்பது இதுவரை காலமும் இன, மத, மொழிப் பாகுபாடற்று நடைமுறையில் இருக்கவில்லை என்பதுதான். ஆட்சிக்கட்டிலிருந்த இனவாத அரசியல்வாதிகளினால் அமுல்படுத்தப்பட்ட சட்டத்தில் பாகுபாடிருந்தது. குற்றவாளிகள் இன,மொழி அடிப்படையில் தப்பிக்க விடப்பட்டார்கள். அல்லது ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப்பெற்று விடுதலை செய்யப்பட்டார்கள். மக்களுக்கு நீதி கிடைப்பதில் பாகுபாடு காட்டப்பட்டது.

மேலும் படிக்க ...

வாழ்த்துகள்: பவளவிழா காணும் எழுத்தாளர் முருகபூபதி!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
இலக்கியம்
10 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
அண்மையில் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் முருகபூபதியின் பவளவிழா நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது. அதனையொட்டி மேற்படி சங்கம் 'ஒரு பத்திரிகையாளனின் இலக்கியப் பயணம்' என்னும் தலைப்பில் பவளவிழா மலரையும் வெளியிட்டிருந்தது. 
மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் பாடல்; உயரத்தில் தெரியும் இந்தநிலா.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கலை
10 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரனின் பாடல்; உயரத்தில் தெரியும் இந்தநிலா
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடியது SUNO 5.5
ஓவியம் - சாட்ஜிபிடி
வ.ந.கிரிதரன் பாடல்: https://www.youtube.com/watch?v=YK_msYCAfkA

[வ.ந.கிரிதரன் 'யு டியூப் சானலு'டன் இணைந்து கொள்வீர். ஆதரவு வழங்குவீர்!

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

ஆதி மானுடர் அண்ணாந்து பார்த்த இந்தநிலா
அரிஸ்டாட்டில் அன்று பார்த்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.

தண்ணொளி பொழிந்து மயக்கும் இந்தநிலா.
மண்ணகத்தார் வாழ்வில் நிறைந்த இந்தநிலா.
எண்ணத்தில் கற்பனை ஏற்றும் இந்தநிலா.
அண்ணாந்து பார்க்க வைக்கும் இந்தநிலா.

மேலும் படிக்க ...

ஈழத்து சிறுகதை பகுப்பாய்வு (02): அதிகாரக் கூண்டும் ஆத்மார்த்த விழிப்பும் - மருதூர்க்கொத்தனின் ‘உத்தியோக நாற்காலி’ சிறுகதையில் மனசாட்சி, அழகியல் மற்றும் பிரதேச அடையாளங்களின் விமர்சனப் பகுப்பாய்வு! - ஏ.எச்.எம் நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம் நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
09 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

1. தோற்றுவாய் (Introduction)

ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில், கிழக்கிலங்கைப் பிரதேசத்தின் திணை நில அழகியலையும் இஸ்லாமியச் சமூகத்தின் அசல் பண்பாட்டு வாழ்வியலையும் தமிழ் சிறுகதை உலகிற்கு அறிமுகப்படுத்திய முதன்மை எழுத்தாளர்களுள் மருதூர்க்கொத்தன் (வி.எம். இஸ்மாயில்) குறிப்பிடத் தக்கவர். 1964-இல் ‘ஈழநாடு’ பத்திரிகையில் வெளியான இவரது ‘உத்தியோக நாற்காலி’ என்னும் சிறுகதை, மேலோட்டமான ஒரு சமூகப் பிரச்சினையோ அல்லது ஓர் அரசு அதிகாரியின் அன்றாட வாழ்வின் துணுக்கோ அன்று. மாறாக, அது கலை உணர்வுக்கும் (Aesthetic Sensibility) அதிகார வர்க்கத்தின் எந்திரத்தனமான கடமை உணர்வுக்கும் (Bureaucratic Duty) இடையிலான ஆழமான அகமுரண்பாட்டையும், மனித மனசாட்சியின் உன்னதமான மீட்சியையும் விசாரணை செய்யும் ஒரு முதன்மையான தத்துவார்த்தப் படைப்பாகும்.

இச்சிறுகதை, ஒரு மனிதனின் அகத்தினுள் இயங்கும் இரட்டை ஆளுமைகளை - அதாவது, காகிதத்தில் அழுது வடியும் ‘பூவினும் மெல்லிய இதயம் படைத்த எழுத்தாளனையும்’, அதிகார போதையில் எளிய மனிதர்களைக் கடிந்து விரட்டும் ‘காரியாதிகாரியையும்’ - நேருக்கு நேர் மோதவிடுகிறது. புனைவுலக அழகியலில் மூழ்கி நிஜ மனிதர்களின் துயரத்தைக் கவனிக்கத் தவறுகிறான் நாயகன். ஆனால், அவனது வார்த்தைகள் தந்த குற்றவுணர்ச்சி, அவனது அதிகார முகமூடியைக் கிழித்து, மனசாட்சியைத் தட்டி எழுப்புகிறது.

சர்வதேச இலக்கியத் தளத்தில், ஜெர்மன் சமூகவியலாளர் மேக்ஸ் வேபரின் (Max Weber) ‘அதிகார வர்க்க அந்நியமாதல்’ (Bureaucratic Alienation), பிரான்ஸ் காஃப்காவின் (Franz Kafka) அதிகாரக் கட்டமைப்பு, ஜேம்ஸ் ஜோய்ஸின் (James Joyce) ‘திடீர் உண்மை விழிப்பு’ (Epiphany) மற்றும் அரிஸ்டாட்டில் முன்வைக்கும் ‘ஆன்மீகக் கத்தார்சிஸ்’ (Spiritual Catharsis) ஆகிய மெய்யியல் (தத்துவக்) கோட்பாடுகளோடு உரையாடும் ஆற்றல் இக்கதைக்கு உண்டு. அதே வேளையில், கிழக்கிலங்கைக் கரையோரச் சூழலின் தாழை, அடம்பன் கொடிகள் மற்றும் எளிய மனிதர்களின் அசல் மொழி வழக்கைப் பதிவு செய்வதன் மூலம், ஈழத்துச் 'சமூக யதார்த்தவாத' அழகியலுக்கும் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.

மேலும் படிக்க ...

சமரழகிகள் சமர் புரியும் வகையில் விழிப்புணர்வு அவசியம்! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
08 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் சிறுவர் தினமான அக்டோபர் முதலாம் திகதி ,கிளிநொச்சி உருத்திரபுரத்தில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் தன் உயிரைப் போக்கியுள்ளார். மிகவும் வருந்தத்தக்கது. இது பற்றி முகநூல் நண்பர் 'தமிழ் ஜேர்னலிஸ்ட்' தனது பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளர்:

'"அண்மையில் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த 'சமரழகி' என்ற ஒரு பிஞ்சு உயிர், இணையவழி மிரட்டல்களுக்குப் பயந்து, உலக சிறுவர் தினமான அக்டோபர் 1ல் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சோகம் ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. .... இன்றைய டிஜிட்டல் உலகம் பெண்களுக்குப் புதிய வெளிகளைத் திறந்துவிட்டாலும், அதன் மறுபக்கம் வன்மமும் ஆபாசமும் நிறைந்த ஒரு நச்சுப் பாதையாகவே நீடிக்கிறது.... பெண்கள் தங்களுக்கு ஒரு அச்சுறுத்தல் வரும்போது பின்வாங்குவதை நிறுத்த வேண்டும். என் உடலையோ, என் புகைப்படத்தையோ வைத்து என்னை மிரட்ட நீ யார்? என்ற கேள்வியைக் கயவர்களின் முகத்திற்கு நேரே கேட்க வேண்டும். இணையப் புகார்களை அளிக்க சட்டரீதியான வழிகள் இலங்கை உட்பட உலகெங்கும் உள்ளன என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.... சமரழகி... என்று போர்க்களத்தின் கம்பீரமாகத் திகழ வேண்டிய பெயருடையவளின் தற்கொலை முடிவு துயரந் தருகிறது. ஆனால், டிஜிட்டல் உலகின் போலிக் கயவர்களுக்காக அவள் தன் அரிய உயிரை மாய்த்துக் கொண்டாள். இனி ஒரு சமரழகி கூட இந்த மண்ணில் இத்தகு முடிவுகளை எடுக்க வேண்டாம் என்பதை பிள்ளைகளுக்கு சமூகம் கற்றுக் கொடுக்க வேண்டும்"

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆட்ரி ஹெப்பேர்ன் , கிறகோரி பெக் நடிப்பில் ரோமன் ஹொலிடே!

ஆட்ரி ஹெப்பேர்ன் (Audrey Hepburn) புகழ்பெற்ற ஹாலிவூட் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர். பெல்ஜியத்தில் பிறந்தவர். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் இவரது குடும்பத்தினர் நெதர்லாந்தில் வாழ்ந்தபோது மிகவும் வறுமையில் வாடினர். அப்போது நாசிப்படையினர் அந்நாட்டை ஆக்ரமித்திருந்தனர். வறுமையில் வாடியபோது ஊட்டச்சத்துக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டார். சில சமயங்களில் துலிப் மலர்களின் கிழங்குகளை உண்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவரது ஆர்ம்பக்காலக் கனவு புகழ்பெற்ற பாலே நடினக் கலைஞராக உருவாக வேண்டுமென்பதுதான். ஆனால் இளமையில் ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்பட்ட பாதிப்பால் அவரால் அக்கனவை நிறைவேற்ற முடியவில்லை. மொடலிங் துறையில் புகுந்த இவரை ஹொலிவூட் இயக்குநர் வில்லியம் வைலர் (William Wyler) அடையாளங் கண்டு தனது ரோமன் ஹொலிடே (Roman Holiday, 1953) திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அதில் அவர் இளவரசி ஆன் ஆக நடித்தார். அப்பாத்திரம் ஒரு கற்பனைப்பாத்திரம். அக்காலத்தில் இங்கிலாந்தின் இளவரசி மார்கரெட்டின் வாழ்க்கையைத்தான் இத்திரைப்படமாக உருவாக்கினர் என்னும் குற்றச்சாட்டு எழுந்தபோது அதைத் தயாரிப்பாளர் மறுத்து , அத்திரைப்படம் ஒரு கற்பனைப்படைப்பு என்று கூற வேண்டி வந்தது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.

மேலும் படிக்க ...

தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனையும் சமூக விடுதலையும்! - முனைவர் அ ஸ்ரீதேவி & மு. கல்பனா -

விவரங்கள்
- முனைவர் அ ஸ்ரீதேவி & மு. கல்பனா -
ஆய்வு
08 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்கள்:
முனைவர் அ ஸ்ரீதேவி, தலைவர் தமிழ்த்துறை, தமிழ்த்துறை, தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
மு. கல்பனா, உதவிப்பேராசிரியர் , தமிழ்த்துறை, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்-6


ஆய்வுச் சுருக்கம் 

தமிழ் இலக்கிய வரலாற்றில் பெண்ணின் வாழ்வியல், உரிமை, தன்னுணர்வு, சமூகப் பங்களிப்பு, அடக்குமுறை மற்றும் விடுதலை ஆகியவை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களில் பதிவாகியுள்ளன. சங்க இலக்கியங்களில் தலைவி தன் காதல் உணர்வுகளையும் வாழ்க்கை நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்தும் தன்னுணர்வுடைய பெண்ணாகக் காணப்படுகிறாள். ஒளவையார் போன்ற பெண்பாற் புலவர்கள் அறிவும் சமூகப் பார்வையும் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். சிலப்பதிகாரத்தில் கண்ணகி அரச அதிகாரத்தையே எதிர்த்து நீதிக்குரல் எழுப்பும் பெண் ஆளுமையாக உருவாக்கப்படுகிறாள். பக்தி இலக்கியத்தில் ஆண்டாள் பெண்ணின் ஆன்மிக அனுபவத்தையும் தனித்துவமான விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார். நவீன காலத்தில் பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் பெண் கல்வி, சுயமரியாதை, சமத்துவம், சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை வலியுறுத்தினர். சமகாலப் பெண் எழுத்தாளர்கள் பெண்களின் உடல், உளவியல், குடும்பம், சாதி, வர்க்கம், பொருளாதாரம் மற்றும் சமூக அதிகாரம் சார்ந்த பிரச்சினைகளைத் தங்களது அனுபவக் குரலின் வழியாக வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு தமிழ் இலக்கியத்தில் பெண்ணியச் சிந்தனை தனிப்பட்ட பெண் உரிமையிலிருந்து சமூக சமத்துவம் மற்றும் மனித விடுதலை நோக்கிய பரந்த சிந்தனையாக வளர்ந்துள்ளது. இக்கட்டுரை இப்பரிணாமத்தை இலக்கியப் படைப்புகளின் வழியாக ஆராய்கிறது.

மேலும் படிக்க ...

தமிழ் இலக்கியங்களில் பெண்களின் உரிமைப் போராட்டமும் சமூகப் பரிணாமமும்! - முனைவர் அ ஸ்ரீதேவி & மு. நித்யா -

விவரங்கள்
- முனைவர் அ ஸ்ரீதேவி & மு. நித்யா -
ஆய்வு
08 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 கட்டுரையாளர்கள்: முனைவர் அ ஸ்ரீதேவி, தலைவர் தமிழ்த்துறை, தமிழ்த்துறை, தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் &  மு. நித்யா - உதவிப்பேராசிரியர், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்-6


ஆய்வுச் சுருக்கம் (Abstract)

தமிழ் இலக்கிய வரலாற்றில் பெண்களின் நிலை, உரிமை, சமூகப் பங்களிப்பு, தன்னுணர்வு, அடக்குமுறை மற்றும் விடுதலை ஆகியவை காலந்தோறும் பல்வேறு பரிமாணங்களில் பதிவாகியுள்ளன. சங்க இலக்கியங்களில் பெண்கள் தமது காதல், குடும்பம், உணர்வு, சமூகப் பொறுப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஆளுமைகளாகக் காணப்படுகின்றனர். காப்பியங்களில் கண்ணகி போன்ற பெண் பாத்திரங்கள் அதிகாரத்தையும் அநீதியையும் எதிர்த்துப் போராடும் நீதிக்குரலாக உருவாக்கப்படுகின்றன. பக்தி இலக்கியத்தில் ஆண்டாள் பெண்ணின் தனித்துவமான ஆன்மிகக் குரலை வெளிப்படுத்துகிறார். நவீனக் காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் பெண் கல்வி, சமத்துவம், சுயமரியாதை, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை வலியுறுத்தினர். சமகாலத் தமிழ் இலக்கியத்தில் பெண்கள் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களைத் தாங்களே பதிவு செய்து, சாதி, வர்க்கம், பாலினம், பொருளாதாரம், குடும்ப அதிகாரம் போன்ற சமூகக் கட்டமைப்புகளை விமர்சிக்கின்றனர். இவ்வாறு பெண்ணின் உரிமைப் போராட்டம் தனிப்பட்ட விடுதலையிலிருந்து சமூக மாற்றத்திற்கான பரந்த சிந்தனையாகப் பரிணமித்துள்ளது. இக்கட்டுரை சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான தமிழ் இலக்கியங்களில் வெளிப்படும் பெண்ணியச் சிந்தனைகளையும் பெண்களின் உரிமைப் போராட்டத்தின் சமூகப் பரிணாமத்தையும் ஆராய்கிறது.

மேலும் படிக்க ...

சுந்தரிமணியனின் ‘நெற்றிக்கண்’ சிறுகதைத் தொகுப்பு ஒரு பருந்துப்பார்வை! -தமிழ்மாமணி பழனி.சோ.முத்துமாணிக்கம் -

விவரங்கள்
-தமிழ்மாமணி பழனி.சோ.முத்துமாணிக்கம் -
நூல் அறிமுகம்
08 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிறுகதை தமிழுக்குப் புதுவரவு என்றிருந்த காலம் மாறிவிட்டது. சங்க இலக்கியப் பாடல்களில் ஊடுபாவாகக் கற்பனையின் உச்சம் தொடும் சிறுகதைகள் ஒளிந்திருக்கின்றன.

“சுனையில் இருக்கும் நீரோ மிகவும் கொஞ்சம். வேட்கை தணிக்க வந்தன ஆண்மானும் பெண்மானும். இருவர்க்குப் போதாத தண்ணீர். பெண்மான் குடிக்கட்டும் என எண்ணி, ஆண்மான் சுனைநீரைக் குடிப்பதுபோல் நடிக்கிறது. ஆண்மான் குடிக்கட்டும் எனப் பெண்மான் நீரைக் குடிப்பதுபோல் நடிக்கிறது“ இந்தக் காட்சிக்குச் சொந்தக்காரர் மாறன் பொறையனார். ஐந்திணை ஐம்பது என்ற நூலில் பாலைத் திணையில் வரும் பாடல் இது.

”தோழி , தெருவில் நாம் மணலில் சிறுவீடு கட்டி விளையாடும்போது அதைக் காலால் எட்டி உதைத்துச் சிதைப்பானே, ஆமடி... நாம் விளையாடும் வரிப்பந்தை எடுத்துக் கொண்டு ஓடுவானே அவன், நானும் அம்மாவும் வீட்டில் இருக்கும்போது வந்தான். தாகமாக இருக்கிறது ; குடிக்கத் தண்ணீர் தாருங்கள் எனக் கேட்டான். அந்தப் பொன்பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டுபோய்க் கொடுத்துவா ‘என்று அம்மா சொன்னவுடன் நானும் நீர் எடுத்துக்கொண்டு வெளியில் சென்றேன். உடனே அவன் என் வளையணிந்த கையைப் பற்றினான். உடனே ‘அம்மா இவன் என்ன செய்கிறான் பாருங்கள்’ என அலறிவிட்டேன். உடனே அம்மா வந்து என்ன நடந்தது எனக் கேட்டாள். ‘ இவன் நீர் குடிக்கும்போது விக்கினான்‘ என்றேனா, அம்மா என்னைத் திட்டியபடி அவனுக்கு நீவினாள். அப்போது பார் தோழி, அந்தக் கள்வன் மகன் என்னைக் கடைக்கண்ணால் கொல்வதுபோல் நோக்கிச் சிரித்தான்” என்ற கதையை நமக்குச் சொல்வது கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் வரும் “சுடர்த் தொடீஇ! கேளாய் “ எனத் தொடங்கும் பாடல்.ஆகும்..

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் எந்திரப்பொறியியல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி -
ஆய்வு
07 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061


முன்னுரை

மனிதர்கள் செய்யும் வேலைகளை எந்திரங்களைக் கொண்டு செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. மனிதர்கள் பல நாட்கள் செய்யும் வேலையை, எந்திரங்கள் சில மணிநேரங்களிலேயே முடித்து விடுகின்றன. இதனால் நேரத்தைச் சேமிக்க முடிகிறது. எந்திரங்களுக்குச் சோர்வு இல்லை. தொடர்ந்து வேலை செய்வதால் உற்பத்தித் திறனை அதிகரிக்கமுடியும். எந்திரங்கள் ஒரே அளவிலும், துல்லியமாகவும் வேலைகளைச் செய்யும். உற்பத்தி செய்யும் அனைத்துப் பொருட்களும் ஒரே தரத்தில் இருப்பதை உறுதி செய்கின்றன.மனித உயிர்களைப் பாதுகாக்கிறது. செலவும் குறைகிறது. மனிதனால் செய்யமுடியாத மிகக் கடினமானப் பணிகளை (கடலுக்கு அடியில் ஆராய்வது, விண்வெளிப் பணிகள்) போன்றவற்றைச் செய்ய எந்திரங்கள் தேவைப்படுகின்றன.

சங்ககாலத்திலேயே எந்திரப் பொறியியல் குறித்து செய்திகள் காணப்படுகின்றன.

பொருள்வயிற் பிரிவதற்கு எண்ணிய தலைவன் தலைவியிடம் சொல்வதற்கு அவளுக்கு அருகில் செல்கிறான். அவனது பிரிவைக் குறிப்பால் உணர்ந்த தலைவி வருந்தி, அவன் மீது சாய்ந்து கலங்குகிறாள். நான் பிரிவதில் விருப்பம் இல்லாதவளாய் மெல்ல மெல்ல என் அருகில் வந்து நீ எங்கே போகிறாய் என்று கேட்க முடியாமலும், போக வேண்டாம் என்று தடுக்க முடியாமலும் இருப்பாள். அத்தகைய அவள் சித்திரத் தொழில் அமைந்த பாவையொன்று எந்திரமற்று விழுந்ததைப் போல கலங்கி என் மார்பின் மீது சாய்ந்து விழுவாள்.

மேலும் படிக்க ...

கனடிய அரசியல் செய்திகள்! தமிழில் நுண்ணறிவு எந்திரன் -

விவரங்கள்
பிரதமர் காரியாலய ஊடகச் செய்தி -
அரசியல்
06 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[இக்கனேடிய செய்திகள் செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவை.]

பிரதமர் காரியாலய ஊடகச் செய்தி! வர்த்தகம் மற்றும் முதலீடு, ஆற்றல், மற்றும் பாதுகாப்புத் துறைகளில் கூட்டாண்மையை மேம்படுத்த பிரதமர் கார்னி துருக்கி பயணம்!  

அக்டோபர் 6, 2026, ஒட்டாவா, ஒன்டாரியோ

வேகமாக மாறிவரும் இந்த உலகில், கனடா அரசு எதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே கவனம் செலுத்துகிறது: கனடியர்களுக்கு அதிக நிச்சயம், பாதுகாப்பு மற்றும் செழிப்பை உருவாக்குவதற்காக உள்நாட்டில் நமது வலிமையை அதிகரிப்பதிலும், வெளிநாடுகளில் நமது கூட்டாண்மைகளை பன்முகப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. ஒரு நேட்டோ (NATO) கூட்டு நாடு மற்றும் ஜி20 (G20) உறுப்பு நாடு என்ற வகையில், இந்த இலக்கில் துருக்கியே ஒரு முக்கியமான பங்காளியாகும்.

இந்தக் கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், பிரதமர் மார்க் கார்னி 2026 அக்டோபர் 21 முதல் 23 வரை துருக்கியின் அங்காரா மற்றும் இஸ்தான்புல் நகரங்களுக்குப் பயணம் செய்யவுள்ளதாக இன்று அறிவித்தார். கனடிய பிரதமர் ஒருவர் துருக்கிக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும்.

அங்காராவில், பிரதமர் கார்னி அதிபர் எர்டோகனைச் சந்தித்து, ஆற்றல் மற்றும் சுரங்கம், காலநிலை, பாதுகாப்பு மற்றும் அமைதி, மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையேயான உறவுகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கனடா-துருக்கிக்  கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து விவாதிப்பார்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் அவர்களின் மறைவு! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
06 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் அவர்களின் மறைவு குறித்து முதலில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மலையகத்தில் இருந்து ஒலித்த மூத்த எழுத்தாளரின் குரல் இன்று ஓய்ந்துவிட்டது. இவரது மறைவு மலையகத்திற்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் இழப்பாகும். இலக்கிய உலகில் இவரை ‘மூனாசீனா’ என்று சுருக்கமாக அழைத்தவர்கள் பலர்.

மலையகத்தில் தலவாக்கலையில் பிறந்த இவர் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். ‘கலாபூசணம்’ பட்டம் மற்றும் ‘சாகித்திய ரத்னா’ விருது பெற்றவர். மேலும் கனகசெந்திநாதன் விருது, சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது, தமிழியல் விருது, கரிகாற்சோழன் விருது, தமிழ்ச்சங்கத்தின் ‘சங்கச் சான்றோர் விருது’ போன்ற பலவற்றையும் பெற்றிருக்கின்றார். மலையகத் தமிழ் மக்களின் அரசியல், மற்றும் சமூக உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தவர். இலக்கியத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் ஈடுபாடு ஏற்பட்டதால், மத்திய மாகாணசபை உறுப்பினராகவும் பணியாற்றியவர். இலங்கையில் இருந்து வெளிவரும் ‘வீரகேசரி’ பத்திரிகையில் பத்திரிகையாளராகவும் சில காலம் பணியாற்றினார்.

பெரும்தோட்டத் துறையில் இந்திய வம்சாவழி மக்களின் பங்களிப்பு அளப்பரியது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் மலையகத்தில் பணியாற்றுவதற்காக பிரித்தானியர்களால் இவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். இலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலை, கோப்பி, இறப்பர் என்று இந்த மூன்றும் ஒரு காலத்தில் முக்கிய பங்கு வகித்தது. குறைந்த கூலியில் இவர்களது உழைப்பே அதற்கு முக்கிய காரணமாகும். மழை, குளிர், அட்டைக்கடி, தினக்கூலி, வீடில்லை, கல்வி வசதியில்லை என்று பல இன்னல்களை இவர்கள் சந்தித்தவர்கள். இன்றும் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

மேலும் படிக்க ...

கவிதை: படர்வரை எல்பே மேலுள எல்பேயின் ஆண்டவரே! (Lord of Elbe, on Elbe hill by Emily) - Brontë | தமிழில் முனைவர் பத்மா ஸ்ரீ்தர் (நாங்குநேரி வாசஸ்ரீ) -

விவரங்கள்
- Brontë | தமிழில் முனைவர் பத்மா ஸ்ரீ்தர் (நாங்குநேரி வாசஸ்ரீ) -
கவிதை
06 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ‘கோண்டல்’ எனும் புனைவுலகத்து அரசியான அகஸ்டா ஜெரால்டைன் அல்மெடா (A.G.A) வின் குரலாக இக்கவிதையை வடிவமைத்துள்ளார் எமிலி. இக்கவிதையில் அந்த அரசி தம்முடைய. காதலர்களுள் ஒருவரான அலெக்ஸாண்டரைப் பிரிந்த பிரிவுத் துயரை வெளிப்படுத்துகிறாள். கவிதையில் கூறப்பட்டுள்ள ‘எல்பே’ என்பது எமிலியின் புனைவுலகமான கோண்டலில் உள்ள ஒரு இடம். இவ்விடம் அன்பிற்குரியவரும் தற்போது அருகே இல்லாதவருமான அலேக்ஸாண்டருடன் தொடர்புடைய மேன்மையான இருப்பிடமாகக் (noble home) காட்டப்பட்டுள்ளது. இவ்விடத்தை, இருள்சூழ் மனநிலையுடன் வெறிச்சோடிய கடற் பகுதியில் இருப்பதாகக் கருதப்படும் அலேக்ஸாண்டருக்கும், பனிசூழ்ந்து வருத்தும் அரசியின் இருப்பிடத்திற்கும் மாறாக ஒளிமிகுந்த சுடர்களையும், அமைதியான பூங்காவையும் கொண்ட உயர்ந்த இடமாக வடிவமைத்துக் காட்டியுள்ளார் எமிலி. -

படர்வரை எல்பே மேலுள எல்பேயின் ஆண்டவரே!
படர்ந்திடு அடர்பனியொடு பரவிடும் வாடையும் விளங்கிட;
விரிகதிர் பரவிடு விரைந்தெழு விடிகாலை முதலே
பிரிவுத் துயரால் பெருமூச்செறியும் நின்காதலி (friend) உளம்.

எல்பேயின் ஆண்டவரே, நின் மகிழ்வான வருகையின்
ஒலி எமக்கு எவ்வளவு மகிழ்வைத் தரும்
தரிசுநிலத்தின் சலசலப்பாம் அது இப்போது
விரிந்து வீசிடு கடுங்காற்றால் புலம்புகிறது

மேலும் படிக்க ...

‘சொல்லாத கதைகள்’ — ஓர் இலக்கியப் பார்வை! - பவானி சற்குணசெல்வம் (நெதர்லாந்து ) -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் (நெதர்லாந்து ) -
நூல் அறிமுகம்
02 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர்: திருமதி கீத்தாராணி பரமானந்தன் ஜெர்மனியில் வசித்து வரும் எழுத்தாளர் கீத்தாராணி பரமானந்தன் அவர்கள் ஏற்கனவே கவிதைத் துறையில் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர். அந்தக் கவிதை அனுபவத்திலிருந்து சிறுகதை உலகிற்குள் அவர் மேற்கொள்ளும் முதல் முயற்சியே ‘சொல்லாத கதைகள்’.

பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பு, ஒரே கருப்பொருளில் சிக்கிக்கொள்ளாமல் போர், புலம்பெயர்வு, குடும்ப உறவுகள், பெண்ணியம், தலைமுறை இடைவெளி, தாய்மை, முதுமை, இழப்பு, தனிமை, தனிமனித ஆசைகள் போன்ற பல்வேறு வாழ்வியல் தளங்களைத் தொட்டுச் செல்கிறது.

சமூக வாழ்வைப் பதிவு செய்யும் சிறுகதைகள்

இத்தொகுப்பின் முக்கியமான இலக்கியப் பெறுமானம், ஆசிரியர் தன்னைச் சுற்றியுள்ள சமூக வாழ்விலிருந்து கதைக்கான கருக்களைத் தேர்ந்தெடுத்திருப்பதிலேயே உள்ளது. கற்பனையின் தனி உலகிற்குள் செல்லாமல், மனிதர்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளையும் உறவுகளுக்குள் மறைந்து கிடக்கும் முரண்பாடுகளையும் கதைகளாக்கியுள்ளார்.

மேலும் படிக்க ...

சிறுகதை: தரிசன மலர் - ஜெயா (மதுரை) -

விவரங்கள்
- ஜெயா (மதுரை) -
சிறுகதை
02 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அமைதி உறைந்திருந்த அந்தப் பழைய அம்மன் கோவிலில், பிரகாரத்துத் தூண்களின் மீது ராஜம்மாவின் நிழல்கள் சோகத்துடன் மெல்லச் சாய்ந்து கொண்டிருந்தன. அந்திப் பொழுதின் பொன்னிற வெளிச்சம், கோவிலின் வெளிப் பிரகாரத்தில் படிந்திருந்தது. சுற்றிலும் கற்பூரத்தின் நறுமணமும், சாம்பிராணிப் புகையின் மெல்லிய வாசனையும் கமழ்ந்தன. கோவில் கருவறையில் அம்மனுக்குச் தீபாராதனை காட்டி முடித்தாயிற்று. மணியோசை ஓய்ந்து, அமைதி பரவியிருந்த அந்தச் சூழலில், 60 வயதைத் தொட்ட அந்தப் மூதாட்டியின் முகத்தில் சுருக்கங்கள் நிறைந்திருந்தன. ஆனால், அந்தச் சுருக்கங்களை விடவும் அவளது கண்களில் படிந்திருந்த ஏக்கமும் சோகமுமே அதிகமாகக் தெரிந்தன. கைகளைத் கூப்பி அம்மனை நோக்கியபடி அமர்ந்திருந்த ராஜம்மாவின் நெஞ்சுக்குள், வீட்டின் நினைவுகள் நெருப்பாய்ச் சுட்டெரித்துக் கொண்டிருந்தன.

"ராஜம்மா... என்ன இங்க உக்காந்து யோசனை பண்ணிக்கிட்டு இருக்க?"

மென்மையான, ஆருயிரான அந்த உவப்பான குரல் கேட்டு ராஜம்மா நிமிர்ந்து பார்த்தாள். எதிரே லட்சுமி அம்மாள் நின்று கொண்டிருந்தாள். கையில் பூத்தட்டுடன், முகத்தில் எப்போதும் போல ஒரு சாந்தமான புன்னகையோடு நின்றிருந்த லட்சுமியைக் கண்டதும், ராஜம்மாவின் கண்களில் லேசாகக் கண்ணீர் துளிர்த்தது.

மேலும் படிக்க ...

ஈழத்து சிறுகதை பகுப்பாய்வு (01): உடற்கரையும் வர்க்க விளிம்பும் - கே. டானியலின் ‘வள்ளி’ சிறுகதையில் சாக்காட்டு அரசியலும் வர்க்க மறுவாசிப்பும் - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
02 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச்சுருக்கம் (Abstract)

ஈழத்து முற்போக்கு இலக்கிய உலகில் பஞ்சமர் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை அழகியல் மற்றும் கருத்தியல் தளங்களில் பதிவுசெய்த முதன்மைப் படைப்பாளி தோழர் கே. டானியல் (1926–1986) ஆவார். அவர்தம் ‘வள்ளி’ சிறுகதையானது, சாதிய அமைப்பு மற்றும் முதலாளித்துவ வர்க்க உணர்வு ஆகியவற்றின் சிக்கலான குறுக்குவெட்டு உறவை (Intersectionality) மிக நுட்பமாகத் தோலுரித்துக் காட்டும் அமைப்பியல் பிரதியாகும். இக்கட்டுரை, நவீனத்துவத்திற்கு பிந்தைய விமர்சனக் கோட்பாடுகள்,  தனடோபாலிடிக்ஸ்  (Thanatopolitics - மரண அரசியல்), இடவெளி அதிகாரக் கோட்பாடுகள் (Spatial Hegemony), மார்க்சிய அன்னியமாதல் (Alienation) மற்றும் உடலியல்-அழகியல் (Somatic Aesthetics) நுட்பங்களின் வழியே ‘வள்ளி’ சிறுகதையைச் சர்வதேச அளவிலான பேராய்விற்கு உட்படுத்துகிறது.

  1. அறிமுகமும் வரலாற்றுப் பின்னணியும் (Introduction & Historical Context)

1.1 தோழர் கே. டானியல்:

வரலாற்று இயங்கியலின் ஈழத்து இலக்கிய முகச்சாயல்

தென்னாசிய சமூக-அரசியல் வெளியில், விளிம்புநிலை (Subaltern) மக்களின் வாழ்வியலையும் அவலங்களையும் இலக்கியத்தின் மையப்பொருளாக மாற்றிய முன்னோடிகளுள் தோழர் கே. டானியல் முதன்மையானவர். 1960-களில் ஈழத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் (Anti-Untouchability Mass Movement) அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வீறுகொண்டு எழுந்த காலத்தில், அந்த வரலாற்றுச் சமூக மாற்றத்தின் கூரிய ஆயுதமாகத் தன் எழுத்தைப் பயன்படுத்தியவர் டானியல்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. திருவை மு.இரா கவிதைகள்!
  2. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் புதிய செயற்குழு – 2026 - 2027! - குரு அரவிந்தன் -
  3. அதிகார அரசியலும் நெறிசார் மெளனமும் -  ‘நசா’ (NAZA) ஆவணப்படத்தின் ஊடகவியல், நுட்பவியல் மற்றும் அரசியல்! -  ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
  4. சொல்லின் சுவை அறிந்த தமிழ்த் தேனீ – சாலமன் பாப்பையா! - பா.நூருல்லாஹ் -
  5. பாரதிராஜா – 3! - ஜோதிகுமார் -
  6. கனடாவில் 2வது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு! - சுலோச்சனா அருண் -
  7. தமிழ் பாடல் கல்வெட்டுகள் வழி அறியப்படும் சமூக வரலாறு! - மு. பழனிக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர் -
  8. பயணத்தொடர்: அஜர்பைஜான் (3) - கோபுஸ்தானிலிருந்து அக்கினிக் கோயில் வரை! - நடேசன் -
  9. மூலதனத்தின் மூலக்கூறுகள்: மார்க்சிய தத்துவமும் அதன் வரலாற்றுப் பயணமும்! - நுண்ணறிவு எந்திரன் -
  10.  நனவிடைதோய்தற் குறிப்புகள்: கிழக்குப் பல்லைக்கழக வேந்தராகும் பேராசிரியர் சி. மௌனகுரு!  -  முருகபூபதி -
  11. கனடா: ஸ்கார்பாரோவில் VIA Rail சேவை நிறுத்தப்படுவதற்குக் கடுமையான எதிர்ப்பு! மாணவர்கள் பெரும் பாதிப்பு! - நுண்ணறிவு எந்திரன் -
  12. மார்க்சியச் சிந்தனை மையம்: *மார்க்சிய தத்துவத்தின் சாரம்: "புனிதக் குடும்பம் (The Holy Family), என்னை கவர்ந்த நூல்" - தோழர் சிவநேசனின் உரை! - ஏ.பகலவன் -
  13. கனடாவில் தமிழ் முதியவர்கள்!
  14. 'மக்கள் எழுத்தாளர்' கே. டானியல் நூற்றாண்டு விழா! - வி.ரி.இளங்கோவன் -
பக்கம் 1 / 135
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி