தமிழ்த்திரையுலகின் 'பொம்பிளை சிவாஜி' மனோரமா ஆச்சி.
திரையுலகில் நடிக்கும்பொழுது தான் இணைந்து நடிக்கப்பயந்த மூன்று கலைஞர்களைப்பற்றி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். அம்மூவரும்: நடிகையர் திலகம் சாவித்திரி, நடிகவேள் எம்.ஆர். ராதா, சகலகலா ஆச்சி மனோரமா. இன்று இவர்கள் அனைவரும் திரையுலகை விட்டு விடைபெற்றுவிட்டனர். இறுதியாக கடந்த 10 ஆம் திகதி சென்றவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனைகள் பல நிகழ்த்திய மனோரமா. தமிழ்சினிமா மிகைநடிப்பாற்றலுக்கு பெயர் பெற்றது. நாடக மேடைகளிலிருந்து அந்தக்காலத்தில் வந்த நடிகர், நடிகைகளும் அவர்களுக்கு உணர்ச்சியூட்டும் வசனம் எழுதிக்கொடுத்தவர்களும் சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் - இருக்கவேண்டும் என்ற கற்பிதம் தந்தவர்கள். அதனால் யதார்த்தப்பண்புவாத தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை தமிழ் சினிமாவில் குறைந்தது. இந்தக்கருத்தை இலங்கைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களும் கனடா மூர்த்தி சிவாஜி கணேசன் மறைந்தபொழுது தயாரித்த 'சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டுக்குறிப்பு' என்ற ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.
மனோரமா 1937 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் மன்னார்க்குடியில் பிறந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் கற்றது ஆறாம் தரம் வரையில்தான். வறுமையில் வாடிய இவருடைய குடும்பம் காரைக்குடிக்கு அருகில் பள்ளத்தூர் என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்தது. கோபி சாந்தா என்ற இயற்பெயர்கொண்டிருந்தவருக்கு கற்றலில் ஆற்றல் இருந்தபோதிலும், மேலும் கற்பதற்கு குடும்பத்தின் பொருளாதார நிலைமை இடம்கொடுக்கவில்லை. சிறுமியாக இருக்கும்பொழுதே துடிப்போடு பேசும் ஆற்றல் இவருக்கிருந்தமையினால் அவருடை 12 வயதில் நாடக சபாக்களின் நிகழ்ச்சிகளில் தோன்றினார். பள்ளத்தூரிலிருந்து நாடக சபா மேடைகளுக்கு இவர் வந்தமையால் அந்த வட்டத்தில் இவர் பள்ளத்தூர் பாப்பா என்றே முதலில் அழைக்கப்பட்டார். பின்னர் இவருக்கு - இவர் ஆரம்ப காலங்களில் நடித்த நாடக இயக்குநர் ஒருவர் மனோரமா என்ற புதிய பெயரைச்சூட்டினார். இவர்போன்று தமது இயற்பெயர்களை தமிழ் சினிமாவில் மாற்றிக்கொண்ட நடிக, நடிகையர் ஏராளம்.


கவியரசு கண்ணதாசன் பற்றி ஒருசமயம் கலைஞர் கருணாநிதி கவிதை எழுதியபொழுது " யார் அழைத்தாலும் ஓடிப்போகும் செல்லப்பிள்ளை " என்று வர்ணித்தார். எனக்கும் இலக்கியத் தோழன் வி.ரி. இளங்கோவன் குறித்து நினைக்கும்தோறும் அந்த வரிகள் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாதது. கவிஞர்கள் இயல்பிலேயே மென்மையானவர்கள்தான். அதனால் அவ்வப்பொழுது எவருக்கும் செல்லப்பிள்ளையாகிவிடுவார்கள். இளங்கோவனை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்த காலப்பகுதியில் அவர் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் முகாமிலிருந்தார். கொழும்பிலிருந்த தோழர் சண்முகதாசன், யாழ்ப்பாணத்திலிருந்த மூத்த எழுத்தாளர் கே. டானியல் மற்றும் கட்சித்தோழர் இக்பால் ஆகியோருடன் மிக நெருக்கமான தோழமையுடன் இயங்கிக்கொண்டிருந்தார். இத்தனைக்கும் இவர் ஆயுர்வேதம் படித்தவர். அத்துடன் பிலிப்பைன்ஸில் நடந்த ஆயுர்வேத வைத்தியர்களின் மாநாட்டிலும் கலந்துகொண்டவர். இயற்கை வைத்தியத்துறையில் பல நூல்களையும் எழுதியிருந்தவர். மூலிகைகள் பற்றிய நுண்ணறிவு கொண்டிருந்தவர். அத்துடன் சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்துக்கள், விமர்சனங்கள் எழுதியவர். கட்சியின் தொண்டனாகவே தோழர்களுடன் ஊர்சுற்றி பணியாற்றியவர். தனக்கென ஒரு கிளினிக்கை அவர் யாழ்ப்பாணத்தில் தொடங்கியிருந்தாலும் பெரும்பாலன நேரங்களில் அவர் நோயாளருடன் நேரத்தை செலவிடவில்லை. அவரது வாழ்க்கை கட்சி சார்ந்த தோழர்களுடனும் இலக்கியவாதிகளுடனுமே நகர்ந்தது.

கொழும்பில் கலை இலக்கிய நண்பர்கள் கழகம் என்ற அமைப்பு 1970களில் இயங்கியது. இதில் எழுத்தாளர்கள் சாந்தன், மாவை நித்தியானந்தன், குப்பிழான் சண்முகன், யேசுராசா, இமையவன், நெல்லை க.பேரன் உட்பட சில நண்பர்கள் அங்கம்வகித்து அடிக்கடி கலை, இலக்கிய சந்திப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்கள். சில நிகழ்ச்சிகளை வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்திலும் நடத்தி மூத்த எழுத்தாளர்களை அழைத்து அவர்களின் இலக்கிய அனுபவங்களை பேசவைத்தார்கள்.

சமகாலத்தில் இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தினமும் பேசப்படும் ஊராக விளங்கிவிட்டது புங்குடுதீவு. இந்தத்தீவுக்கு இதுவரை சென்றிராத தென்னிலங்கை சிங்கள மக்களும் மலையக மக்களும், இந்த ஊரின் பெயரை பதாதைகளில் தாங்கியவாறு வீதிக்கு வந்தனர். இலங்கைப்பாராளுமன்றத்திலும் இந்தத்தீவு எதிரொலித்தது. ஜனாதிபதியை வரவழைத்தது. இலங்கையில் மூவினத்து மாணவர் சமுதாயமும் உரத்துக்குரல் எழுப்பும் அளவுக்கு இந்தத்தீவு ஊடகங்களில் வெளிச்சமாகியது. இத்தனைக்கும் அங்கு ஒரு வெளிச்சவீடு நீண்ட நெடுங்காலமாக நிலைத்திருக்கிறது. பதினைந்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள், 20 இற்கும் மேற்பட்ட குளங்களின் பெயர்களுடன் இடங்கள். 20 இற்கும் மேற்பட்ட சனசமூகநிலையங்கள் ( வாசிகசாலைகள் உட்பட) பல கோயில்கள் எழுந்திருக்கும் புங்குடுதீவில், இதுவரையில் இல்லாதது ஒரு பொலிஸ் நிலையம்தான்.
ஒருவர் மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம், ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது கடிதங்களும் நாட்குறிப்புகளும் உலகப்பிரசித்தம் பெற்றவை என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம். காந்தியடிகளின் நாட்குறிப்பு, நேரு சிறையிலிருந்து தமது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் என்பன உலகப்பிரசித்தம். தினமும் நிகழும் சம்பவங்களை குறித்து வைப்பதற்காக அறிமுகமான Diary ( Daily record of event) தமிழில் மட்டுமன்றி பிறமொழிகளிலும் அவ்வாறு அழைக்கப்படுகிறது. உலகப்பிரசித்தி பெற்றவர்களின் டயறிகள் பிற்காலத்தில் அதிக விலையில் ஏலம்போயிருப்பதையும் நூதன சாலைகளில் இடம்பெற்றிருப்பதையும் அறிவோம்.
இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார். அவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும். அவர் தொழுநோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள் மூத்த தமிழ் அறிஞர் கி. இலக்ஷ்மண அய்யரின் துணைவியார் பாலம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். மெல்பனுக்கு அவர் வந்தபொழுது எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி பாலம் லக்ஷ்மணன். சார்வாகன் அவரது இயற்பெயரல்ல. அந்தப் புனைபெயரின் பின்னாலிருந்த கதையை தமிழக சார்வாகனே சொன்னார். மகாபாரதத்தில் குருஷேத்திர களத்தில் கௌரவர்களை அழித்து வெற்றிவாகைசூடிய பாண்டவர்கள், தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில் அந்தச் சபையிலிருந்து எழுந்து அந்த வெற்றியின் பின்னாலிருக்கும் பேரழிவை சுட்டிக்காண்பித்து கடுமையாக விமர்சித்தவர் சார்வாகன் என்ற முனிவர். அவரது கூற்றால் வெகுண்டெழுந்த மக்கள் அவரை அடித்தே கொன்றுவிட்டார்களாம். சார்வாக மதம் என்ற புதிய கோட்பாடு உருவானது என்றும் பாஞ்சாலியும் அந்த மார்க்கத்தை பின்பற்றியதாக கதை இருப்பதாகவும் சார்வகன் என்ற புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர் ஸ்ரீனிவாசன் சொன்னபொழுது மகாபாரதத்தின் மற்றுமொரு பக்கத்தை தெரிந்துகொண்டேன். 
"அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உன்னைத்தானே.? " எனக்கேட்ட கமலினி செல்வராசன் அத்தானிடமே சென்றார். திருமதி கமலினி செல்வராசன் கொழும்பில் மறைந்தார் என்ற செய்தி இயல்பாகவே கவலையைத்தந்தாலும், அவர் கடந்த சில வருடங்களாக மரணத்துள் வாழ்ந்துகொண்டே இருந்தவர், தற்பொழுது அந்த மரணத்தைக்கடந்தும் சென்று மறைந்திருக்கிறார் என்றவகையில் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் எனப்பிரார்த்திப்போம்.

கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகின்றது. இலங்கையில் மேற்குக்கரையில் இந்து சமுத்திரத்தை அணைத்தவாறு விளங்கும் கடற்கரை நகரம் நீர்கொழும்பு. ஐதீகக்கதைகளும் வரலாற்றுச்சிறப்பும் மிக்க இந்நகரில் வாழ்ந்த மூத்தகுடியினர் தமிழர்கள். அவர்களினால் 1954 இல் விஜயதசமியின்பொழுது 32 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட பாடசாலையே இன்று வடமேற்கில் கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் மத்திய கல்லூரியாக விளங்கும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி. இதன் ஸ்தாபகர் எஸ்.கே. விஜயரத்தினம் நீர்கொழும்பில் நகரபிதாவாக (மேயர்) விருந்த தமிழராவார். தமிழ் மக்களின் பண்பாட்டுக்கோலங்களுடன், வரலாற்றுச்சுவடுகளுடன் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளையும் கவரும் இந்நகருக்கு அருகாமையிலேயே சர்வதேச விமான நிலையம் கட்டுநாயக்காவில் அமைந்துள்ளது. கல்லூரி 1954 இல் ஆரம்பப் பாடசாலை தரத்திலிருந்தபொழுது முதல் மாணவனாக இணைத்துக்கொள்ளப்பட்டவரும் தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான லெ. முருகபூபதி விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் 60 வருட நிறைவு வைரவிழாவை முன்னிட்டு தொகுத்து வெளியிட்டுள்ள நெய்தல் - நீர்கொழும்பு வாழ்வும் வளமும் நூல் நீர்கொழும்பில் அண்மையில் சிறப்பாக வெளியிடப்பட்டது.







பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









