படித்தோம் சொல்கின்றோம் : நடேசனின் "எக்ஸைல்" குறித்து ஒரு பார்வை! சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல்!
" ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்" இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன. அவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை - இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக்காக இலங்கையில் பணிபுரிந்த மேற்குலக வாசிகளும், ஆண்கள் - பெண்கள் உட்பட முன்னாள் போராளிகளும் , படைப்பாளிகளும் எழுதும் நூல்கள், ஆவணங்கள், ஆய்வுகள் வந்தவண்ணமிருக்கின்றன. நீடித்த உள்நாட்டுப்போரின் பெறுபேறாகவும் இவற்றை ஏற்கலாம்! அவ்வாறு எழுதியவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் நடேசன். இவரது தொழில் விலங்கு மருத்துவம். அது சார்ந்த உண்மையும் புனைவும் கலந்த கதைகளையே தொடக்கத்தில் எழுதியவர். அத்தகைய எழுத்துக்களின் ஊடாகவே சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியங்கள் என தனது பார்வையை விரிவுபடுத்திக்கொண்டவர்.
இவரது அத்தகைய படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. வடக்கில் சப்த தீவுகளில் ஒன்றென அழைக்கப்பட்ட எழுவை தீவில் பிறந்து, அங்கு ஆரம்பக்கல்வியைக்கற்று, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பை தொடர்ந்த காலத்தில் இலங்கை அரசியலின் அரிச்சுவடியும் தெரியாமல், அங்கு 1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கச்சென்றவர். அவர் தனது வாழ்நாளில் முதல் தடவையாக துர்மரணங்களை பார்த்து திகைத்துப்போனதும் அவ்வேளையில்தான். தமிழராய்ச்சி கண்காட்சி ஊர்தியால் மின்சார வயர் அறுந்துவிழுந்து அதன் தாக்கத்தினால் துடிதுடித்து இறந்தவர்களைப்பார்த்த திகைத்துப்போன ஒரு நேரடி சாட்சிதான் நடேசன். இவரது அந்த மாணவப்பருவம், அன்றைய அரசின் கல்வி மீதான தரப்படுத்தலையும் எதிர்கொண்டது. அக்காலப்பகுதியில் வடபகுதி மாணவர்களை அரசியல் எவ்வாறு ஆட்கொண்டது என்பதை இந்த நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார். " எனது வயதையொத்த இளைஞர்கள் அரசியல் சாயம் படாமல் தப்பமுடியாது. ஹோலி பண்டிகை காலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடாதவனும் வர்ணத்தை பூசிக்கொள்வதுபோல் அரசியல் வாடை என்னைத் தழுவியது."
பாடசாலைக்கு கல்லெறியத்தொடங்கிய மாணவர்கள் எவ்வாறு இ.போ. ச. பஸ்ஸிற்கு கல்லெறிந்து பிரச்சினையை மேலும் கூர்மையாக்கினார்கள் என்பதிலிருந்து தமிழ்த்தலைவர்கள் தொடங்கிய சிங்கள ஶ்ரீ கார் இலக்கத்தகடுகளுக்கு தார் பூசும் இயக்கம், மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் நினைவுபடுத்தியவாறு, தமிழகத்திற்கு தப்பிச்செல்லும் இரண்டு குழந்தைகளின் தந்தையான ஒரு இளம் குடும்பஸ்தன், எதிர்நோக்கும் சம்பவங்கள், அவலங்கள், சந்திக்கும் நபர்கள், அவர்களின் குணவியல்புகள் முதலான பல்வேறு தகவல்களை இந்த எக்ஸைல் பதிவுசெய்துள்ளது.
நடேசன், ஆயுதம் ஏந்திய எந்தவொரு தமிழ் இயக்கத்திலும் இணைந்திராதுவிட்டாலும், அவற்றின் தலைவர்கள், தளபதிகள், மற்றும் போராளிகளுடன் உறவைப்பேணியிருப்பதும் தெரிகிறது. இந்த நூலில் ஒவ்வொரு அங்கத்தையும் இலங்கை தமிழர் அரசியலில் ஈடுபட்டவர்களை சுயவிமர்சனம் செய்யத்தூண்டும் விதமாகவே எழுதியிருப்பதுடன் எமது சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாக்கு நீரிணை பிரித்தாலும் சினிமாவும், கடத்தல் சாமான்களும் எவ்வாறு நிரந்தரமாக இணைத்துவைத்தன என்பதை மிகவும் சுவாரஸ்யமாக ஒரு கதை சொல்லியாக பகிர்ந்துள்ளார். இராமேஸ்வரத்தில் இந்தியக்கரையில் இறங்கும்போது,கையில் பணம் இருந்தாலும் அதனை செலவிடாமல், எடுத்துச்சென்ற சிங்கப்பூர் குடை, லக்ஸ் சோப் முதலானவற்றைக்கொடுத்து சமாளிக்கும் காட்சியை அக்காலப்பகுதியில் இராமானுஜம் கப்பலில் பயணித்தவர்களுக்கு நினைவூட்டுகின்றார். பல இடங்களில் நடேசன், படிம உத்தியோடும், உவமான உவமேயங்களுடனும், அங்கதமாகவும் காட்சிகளை சித்திரிப்பதனால், இந்த நூலை வாசகர்கள் புன்னகையுடன் நகர்ந்து செல்ல முடியும்.

புத்தர் வந்த திசையிலிருந்து, காந்தி பிறந்த தேசத்திலிருந்து அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு இடப்பட்ட நாமம் " அமைதிப்படை" ! மக்கள் அவர்களை நம்பினார்கள். ஏற்கனவே, சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் போரிட்டு, தங்கள் தேசத்தின் எல்லைகளை பாதுகாத்தவர்கள் எங்களையும் காப்பாற்றுவார்கள் என போற்றினார்கள்.
பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள், மெல்பனில் எனது வீட்டுக்கு வந்தார். சிட்னியில் வசிக்கும் அவரது மகளிடம் வந்திருந்த சந்தர்ப்பத்தில் அவரை மெல்பனுக்கு அழைத்திருந்தேன். ஒருநாள் இரவுப்பயணமாக பஸ்ஸில்தான் வந்தார். அவரது கையிலிருந்தது ஒரு ஆங்கில துப்பறியும் நாவல். தந்திரபூமி, குருதிப்புனல், காலவெள்ளம், சுதந்திரபூமி முதலான பல நாவல்களும் பல கதைத்தொகுப்புகளும் சிறந்த நாடகப்பிரதிகளும் எழுதியிருக்கும் அவர் எனது அபிமான எழுத்தாளர். இவருக்கு எப்படி துப்பறியும் நாவல்களில் ஆர்வம் வந்தது எனக்கேட்டபோது, தான் பயணங்களில் விறுவிறுப்பான அத்தகைய நூல்களைத்தான் படிப்பது வழக்கம் என்றார். பயணக்களைப்பை அது போக்கிவிடுமாம். தேர்ந்த வாசகர்களினால் விரும்பிப்படிக்கப்படும் பல எழுத்தாளர்களிடத்தில் இவ்வாறு விசித்திரமான இயல்புகளும் இருக்கின்றன. ஜெயகாந்தனிடம், "நீங்கள் சரித்திர நாவல்கள் படிப்பதில்லையா?" என்று, கல்கியையும் சாண்டில்யனையும் , அகிலனையும் மனதில் வைத்துக்கொண்டு யாரோ கேட்டார்களாம். அதற்கு ஜெயகாந்தன், " நான் அவற்றை படிப்பதில்லை. அதனைவிட தனக்கு அம்புலிமாமா கதைகள்தான் விருப்பம்" என்றாராம்.
கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்த தினம் இன்றாகும். வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசு, இலக்கிய உலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர். தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியான் மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல நாவல்கள் உட்பட சில விமர்சனக்கட்டுரைத் தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணம் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
பழங்காலம் (600 - 1200)
"யேசுபாலகன் அவதரித்த நாளன்று பிறந்தவர்கள் யேசுவைப்போன்றே சாந்தமானவர்கள். அமைதியின் உறைவிடமாக இருப்பவர்கள்" என்று எனது பாட்டி சின்னவயதில் எனக்குச்சொல்லியிருக்கிறார். சிலவேளை நான் பாட்டி வாழ்ந்த காலத்தில் பெரிய குழப்படிகாரனாக இருந்திருக்கவேண்டும். எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் யேசு பாலகன் தோன்றிய நாளில் பிறந்து, பாட்டி சொன்னவாறு அமைதியாகவும் நிதானமாகவும் வாழ்ந்திருப்பதை எனது வாழ்நாளில் பார்த்திருக்கின்றேன். அந்த வரிசையில் ஒருவர்தான் எனது நீண்ட கால இலக்கிய நண்பர் புலோலியூர் இரத்தினவேலோன். அவருக்கு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி 60 வயது பிறக்கிறது. மானசீகமாக அவரை வாழ்த்திக்கொண்டு இந்தப்பதிவை எழுதத்தொடங்குகின்றேன்.
முன்னுரைக்குறிப்பு
Letchumanan Murugapoopathy <
" படைப்பாளிகளையும் பத்திரிகையாளர்களையும் கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பதிப்புத்துறையில் இருப்பவர்களையும் மிரட்டிக்கொண்டிருக்கும் ஒரு பிசாசு இருக்கிறது. கண்களுக்குத் தெரியும் பிசாசுதான்! ஆனால், எப்படியோ கண்களுக்குத்தப்பிவிடும்! எங்கே எப்படி காலை வாரிவிடும் என்பதைச் சொல்லமுடியாது. மானநட்ட வழக்கிற்கும் தள்ளிவிடும் கொடிய இயல்பு இந்தப்பிசாசுக்கு இருக்கிறது. அதுதான் அச்சுப்பிசாசு. மொழிக்கு ஆபத்துவருவதும் இந்தப்பிசாசினால்தான். 1990 ஆம் ஆண்டு மறைந்த எங்கள் கல்விமான் இலக்ஷ்மணன் அய்யாவை நினைக்கும் தருணங்களில் அவர் ஓட ஓட விரட்டிய இந்த அச்சுப்பிசாசுதான் எள்ளல் சிரிப்போடு கண்முன்னே தோன்றுகிறது."
பூமித்தாயை கற்கவும் அவளது உணர்வுகளை கேட்கவும் முடியுமா? ஆம்! முடியும் என்பவர்கள்தான் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான அபோர்ஜனிஸ் இனத்தவர்கள். இயற்கையை நேசித்து அதற்கியைந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தினரிடமிருந்து, வந்தேறு குடிகளால் அபகரிக்கப்பட்ட பெருநிலப்பரப்பிலிருந்து குரல்கள் தொடர்ந்தும் ஒலிக்கின்றன. அங்கு இசையும் அவலமும் கண்ணீரும் இழப்பும் பண்பாட்டுக்கோலங்களும் வரலாற்றுச்செய்திகளும் வெளிப்படுகின்றன. அந்த மக்கள் குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் ஆய்வு செய்தும் வந்திருப்பவர் அவுஸ்திரேலியா கன்பரா மாநில நகரத்தில் வதியும் கவிஞர் ஆழியாள் மதுபாஷினி.
- விரைவில் வெளிவரவிருக்கும் முருகபூபதியின் இலங்கையில் பாரதி என்னும் ஆய்வு நூலின் இறுதி அங்கத்தில் இடம்பெறும் ஆக்கம் -
பொன்னுத்துரை இலங்கையிலிருந்து நைஜீரியாவுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற காலகட்டத்தில் அங்கு ஆபிரிக்க இலக்கியங்களை ஆழ்ந்து கற்றார். பின்னாளில் பல ஆபிரிக்க இலக்கியங்களையும் அதேசமயம் அரபு இலக்கியங்களையும் மொழிபெயர்த்து நூலுருவாக்கினார். ஆபிரிக்காவில் ஒரு தவம் என்ற விரிவான கட்டுரையின் முதல் அத்தியாயத்தை வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அனுப்பினார். இதர அத்தியாயங்களும் அவரிடமிருந்து கிடைத்தபின்னர் வெளியிடுவதற்கு வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால் தீர்மானித்திருந்தார். எனினும் பொன்னுத்துரை அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தமையினால் அந்தத் தொடர் வெளியாவது சாத்தியப்படவில்லை. முதலாவது அத்தியாயத்தின் மூலப்பிரதி பொன்னுத்துரையிடமும் இருக்கவில்லை. வீரகேசரிக்கு அனுப்பிய பிரதியும் காணாமல்போனது. காலம் கடந்து பின்னாளில் பல ஆபிரிக்க இலக்கியங்களையும் அதேசமயம் அரபு இலக்கியங்களையும் மொழிபெயர்த்து நூலுருவாக்கினார். இவற்றுக்காக அவர் செலவிட்ட நேரம் மிகப்பெறுமதியானது.
சுமதி என்னும் இயற்பெயரைக்கொண்டிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். விருதுநகரில் ஆரம்பக்கல்வியையும் மதுரையில் கல்லூரிப்படிப்பையும் நிறைவுசெய்துகொண்ட சுமதி, இளம் வயதிலிருந்தே கலை , இலக்கிய ஆர்வலராகவும் சமூகச்செயற்பாட்டாளராகவும் வளர்ந்தவர். கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், நடனம், ஆய்வு முதலான துறைகளில் ஈடுபாடுகொண்டிருந்தவர். தனக்கு தமிழச்சி என்ற புனைபெயரையும் சூட்டிக்கொண்டவர். சிறுகதைகளும் எழுதத் தொடங்கியிருக்கும் இவரது பாடல்கள் திரைப்படங்களிலும் ஒலிக்கின்றன. சுமதி, தமிழச்சி என்ற பெயருடன் எழுதத் தொடங்கியதும் இந்தப்பெயரையே ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. சென்னையில் ராணி மேரி கல்லூரிக்கு ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணி நிமித்தம் இடம்பெயர்ந்தவர். தான் பிறந்த கிராமத்து மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்துவருபவர். கட்டிடக்காட்டுக்குள் வாழத்தலைப்பட்டாலும், தான் வாழ்ந்த கரிசல் காட்டின் மணத்தை தனது கவிதைகளில் தொடர்ந்து பரப்பிவருபவர். தமிழக இலக்கிய உலகில் நிரம்பவும் பேசப்படும் தமிழச்சி, ஈழத்தமிழ் மக்கள் குறித்தும் கரிசனை கொண்டிருப்பவர். இவரது சில படைப்புகளில் ஈழத்தின் மீதான நேசமும் பதிவாகியிருக்கும். 
"பல மொழிகளிலும் ஒருவரது படைப்பு மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவில் வெளியாவதும் ஒரு வகையில் படைப்பாளிக்கு கிட்டும் அங்கீகாரம்." எனச்சொன்னார் நாமக்கல் கு. சின்னப்பபாரதி. என்னருகில் அமர்ந்திருந்த யுகமாயினி சித்தன் உடனே அதனை மறுத்துரைத்தார். “மொழிபெயர்ப்பில் ஒரு நாவல் வெளியானால் அதனை இலக்கிய அங்கீகாரம் என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு நாவல் சர்வதேச தரத்தில் எழுதப்பட்டால் மாத்திரமே அதற்கு அங்கீகாரம் தரமுடியும். ஒரு நாவல் இந்திய மொழிகளிலும் அய்ரோப்பிய மொழிகளிலும் வெளியாகிவிட்டால் , அந்தப்படைப்பு உன்னதமானது, தரமானது, உலக அங்கீகாரம் பெற்றது என்ற முடிவுக்கு வந்துவிடலாமா?” எனக்கேட்டார் சித்தன். சின்னப்ப பாரதி நிமிர்ந்து அமர்ந்தார்.
அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் மெல்பனில், Keysborough Secondary College மண்டபத்தில் நடந்த இவ்விழ, மண்டபத்தின் வெளியரங்கில் இடம்பெற்ற கண்காட்சிகளுடன் தொடங்கியது. பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த தென்கிழக்காசிய நாடுகளின் அமைப்புகளின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மருத்துவர் சாபாஷ் சவுத்ரி கண்காட்சிகளை திறந்துவைத்தார். விக்ரோரியா பல்தேசிய கலாசார ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு. சிதம்பரம் ஶ்ரீநிவாசன் விழா நிகழ்ச்சிகளை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார். விழாவின் தொடக்க நிகழ்ச்சிகளாக கண்காட்சிகள் இடம்பெற்றன. ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி, விமல் அரவிந்தனின் இயற்கை எழிலை சித்திரிக்கும் ஒளிப்படக்காட்சி மற்றும் மறைந்த தமிழ் வளர்த்த முன்னோர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்புகளுடன் அவர்களின் ஒளிப்படங்களின் காட்சி மற்றும் அவுஸ்திரேலியாவில் இதுவரையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளியான தமிழ் இதழ்கள் - பத்திரிகைகள் - நூல்களின் கண்காட்சி என்பன இடம்பெற்றன.
- லண்டனில் வதியும் இலக்கிய நண்பர் பத்மநாப அய்யரிடமிருந்து 12.10.2018 அன்று எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அச்சமயம் அவரது லண்டன் நேரம் அதிகாலை 3.30 மணி. நாம் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி நடத்தவிருக்கும் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகளில் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகளின் கண்காட்சியும் நடத்தவிருக்கும் தகவல் அறிந்து அவர் தொடர்புகொண்டார். நூலகம் ஆவணக்காப்பகத்திலும் கண்காட்சியில் இடம்பெறும் ஆவணங்களை பதிவேற்றுவதற்கு ஆக்கபூர்வமாகச் செயற்படுமாறும் பத்மநாப அய்யர் விநயமாகக் கேட்டுக்கொண்டார். எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்த அவரது தொடர்ச்சியான அக்கறை முன்னுதாரணமானது. அவுஸ்திரேலியா நிகழ்வு பற்றி அறிந்ததும் தனது உறக்கத்தையும் பொருட்படுத்தாமல் அவர் துயில் எழுந்து உரையாடியது எனக்கு நெகிழ்வூட்டியது. இறுதியாக அவருடைய முயற்சியும் சம்பந்தப்பட்ட தவில் மேதை லயஞான குபேரபூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி - ஆவணப்படம் - இசைத்தொகுப்பையும் ரசித்திருக்கின்றேன். பத்மநாப அய்யரின் பவள விழா 2016 ஆம் ஆண்டில் நடந்தவேளையில் நான் எழுதிய பதிவை இங்கு மீண்டும் பதிவேற்றுகின்றேன். அவரது வாழ்வையும் பணிகளையும் மீண்டும் தெரிவிக்கவிரும்புகின்றேன்" - முருகபூபதி -
இந்திரா பார்த்தசாரதி எழுதிய சுதந்திரபூமி நாவலை படித்திருக்கிறீர்களா?
"திருமதி ஸஹானாவின் 'ஒரு தேவதையின் கனவு' சிறுகதைத்தொகுதி வெளிவருவது குறித்து பெரு மகிழ்ச்சியடைகிறேன். தெளிவுற அறிந்திடவும், தெளிவுபெற மொழிந்திடவும், சிந்திப்போர்க்கு அறிவுவளர, உள்ளத்தே ஆனந்தக்கனவு பல காட்டலும் கைவரப்பெற்றவர்கள் எழுதும் படைப்புகள் காலத்தால் என்றென்றும் போற்றப்படும். அவை என்றும் புதியவை. அத்தகு இலக்கியவரிசையில் தேவதையின் கனவும் இடம்பெற வாழ்த்துகின்றேன்" என்று 22-01-1997 ஆம் திகதி சென்னையிலிருந்து ஜெயகாந்தன் வாழ்த்தியிருந்த, ஈழத்தின் இலக்கியப்படைப்பாளி கெக்கிராவ ஸஹானாவும் கடந்த மாதம் எங்கள் இலக்கிய உலகிலிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார். "அற்பாயுள் மரணமும் மேதா விலாசத்தின் அடையாளமோ? " என்று ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் சுந்தரராமசாமி எழுதியிருந்ததுதான் நினைவுக்கு வருகிறது. 1968 இல் பிறந்து 2018 இல் மறைந்துள்ள கெக்கிராவ ஸஹானா, குறுகிய காலத்தில் ஈழத்து இலக்கிய வானில் சுடர்விட்டு பிரகாசித்த நட்சத்திரம். எங்கள் மத்தியில் உதிர்ந்துள்ள இந்த நட்சத்திரம் எம்மிடம் விட்டுச்சென்றுள்ளவை அவருடைய அருமைக்குழந்தைகளும், இலக்கியப்பிரதிகளும்தான். இனி எம்முடன் பேசவிருப்பவை கெக்கிராவ ஸஹானவின் ஆக்க இலக்கியப்படைப்புகளும் ஆய்வுகளும் மொழிபெயர்ப்பு பிரதிகளும்தான். 
உருவம், உள்ளடக்கம், படைப்புமொழி, பாத்திர வார்ப்பு, காட்சி சித்திரிப்பு முதலான பல அம்சங்களை உள்ளடக்கியது சிறுகதை வடிவம். இலங்கையில் இந்த இலக்கியம் தோன்றிய காலத்தில், எழுத முன்வந்த எழுத்தாளர்கள் பலர், தென்னிந்திய சிற்றேடுகளில் வெளியான கதைகளின் பாதிப்பில், சென்னை மவுண்ட் ரோட்டையும் மெரீனா பீச்சையும் பின்புலமாகக்கொண்டு கதை பண்ணினார்கள்! அதற்குப்பின்னர் மறுமலர்ச்சிக்காலம் இலக்கியத்தில் பதிவானபோது இலங்கையர்கோன், சி. வயித்திலிங்கம், சம்பந்தன் ஆகியோரின் கதைகள் பரவலான வாசிப்பிற்குட்பட்டு பிரதேச மொழி வழக்குகளும் அறிமுகமாயின. இலங்கையில் இடதுசாரிகளின் இலக்கியப் பிரவேசத்தையடுத்து, முற்போக்கான சிந்தனைகளை அடியொற்றியும், சமூக ஏற்றதாழ்வு - சாதிப்பிரச்சினைகள் - வர்க்கப்போராட்டம் பற்றியும் கதைகள் தோன்றின. இக்கால கட்டத்தில் அறிமுகமான பல விமர்சகர்கள் மார்க்ஸீயப் பண்டிதர்களாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் விளங்கினர். இவர்கள் நமது ஆக்க இலக்கியப்பிரதியாளர்களிடம், சோஷலிஸ யதார்த்தப்பார்வையை எதிர்பார்த்தனர். இதனால் அந்தப்பார்வைக்கு ஏற்பவும் அதே சமயத்தில் அழகியல் அம்சத்துடனும் பலர் ஈழத்து இலக்கிய உலகில் தமது படைப்புகளை அறிமுகப்படுத்தினார்கள். இந்தப்பின்னணியில் தமிழகப்படைப்புகள் கலைத்துவத்தில் முன்னின்றன. ஈழத்து படைப்பு இலக்கியம் இலக்கிய விமர்சன பிதாமகர்களின் ஆசீர்வாதத்தையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து அழகியலை இழக்கநேர்ந்தது. எனினும் குறிப்பிட்ட சில அழகியல் சார்ந்த படைப்புகள் வெளிவந்தன.
நீடித்த போரினால் வலிசுமந்த மக்களின் கதைகளைச்சொல்லும் தாமரைச்செல்வியின் " வன்னியாச்சி" பெரும் கதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 37 கதைகளையும், ஜீவநதியில் இம்மாதம் வெளியான அவனும் அவளும் என்ற சிறுகதையையும் சேர்த்து மொத்தம் 38 கதைகளையும் படித்து முடித்த தருணத்தில், தமிழ் ஊடகங்களில் " அரசின் மகா வலி - தமிழருக்கு மன வலி " என்ற தலைப்பிலும் தொனியிலும் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மக்கள் வலிசுமந்த மேனியராகவே கடந்த மூன்றரை தசாப்த காலமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை, தனது கதைகளின் ஊடாக பதிவுசெய்துவருபவர் தாமரைச்செல்வி. இவரது எழுத்துக்களை இலங்கையில் நான் இருந்த காலப்பகுதியில் படித்திருந்தாலும், நேரில் சந்தித்துப்பேசியது வெளிநாடான தற்போது நான் வாழும் அவுஸ்திரேலியாவில்தான்.
இலங்கையின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், வடபுலத்தில் ஆனைக்கோட்டையில் சவரிமுத்து - அன்னம்மாள் தம்பதியருக்கு 1926 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி பிறந்தவர். தனது இளம் பராயத்திலேயே இலக்கிய உலகில் பிரவேசித்து, இலங்கையில் வெளியான பல பத்திரிகைகள், இதழ்களில் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், கட்டுரை, உணர்வூற்று உருவகம், நாடகம், இலக்கிய வரலாறு முதலான சகல கலை, இலக்கியத்துறைகளிலும் தொடர்ச்சியாக அயர்ச்சியின்றி எழுதியவர். தமிழக இலக்கிய இதழ்களிலும் அவரது பல படைப்புகள் வெளியாகின. இலங்கை மல்லிகை, தமிழ்நாடு தாமரை ஆகிய இதழ்கள் முகப்பில் அகஸ்தியரின் படத்துடன் சிறப்பிதழ் வெளியிட்டுள்ளன. அவரது நூல்கள், இலங்கையிலும் தமிழ்நாட்டிலும், பிரான்ஸிலும் வெளியாகியுள்ளன. 

"தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர். முஸ்லிம் என்பது ஒரு மதத்தவரின் பெயர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் மொழிவாரியாக நோக்கின் தமிழரே. எனவே தமிழரென்ற பெயரை மொழிவாரியாக மட்டும் உபயோகப்படுத்தினால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் மட்டுமல்ல அம்மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட அனைவருமே தமிழராகின்றனர். அதேபோன்று இஸ்லாத்தைப் பின்பற்றும் எவ்வினத்தவராயினும் அவர்கள் முஸ்லிம்களே. ஆகவே, தமிழரென்பது எவ்வாறு ஒரு தனிப்பட்ட இனத்தவருக்குமட்டும் சொந்தமான பெயராக இருக்க முடியாதோ அதேபோன்று முஸ்லிம் என்பதும் ஒரு தனிப்பட்ட இனத்தவரின் பெயராக இருக்க முடியாது. " என்று கடந்த ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்ற 'தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தில் எழுத்தாளர்களின் வகிபாகம்' என்னும் தலைப்பில் உரையாற்றிய கலாநிதி அமீர் அலி தெரிவித்தார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









