திரும்பிப்பார்க்கின்றேன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் குத்துவிளக்கு திரைப்படம் வெளியிட்ட கட்டிடக்கலைஞர் வி.எஸ். துரைராஜா தென்னிந்திய தமிழ் சினிமாவின் இராட்ச ஒளிவெள்ளத்தால் மங்கிப்போன ஈழத்தின் அகல்விளக்குகள்.

குத்துவிளக்கு திரைப்படம் 1970 களில் உருவான சூழல் மிகவும் முக்கியமானது. டட்லி சேனா நாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வியடைந்து ஸ்ரீமா ( ஸ்ரீலங்கா .சு.க) - என். எம். பெரேரா (சமசமாஜி) - பீட்டர் கெனமன் (கம்யூனிஸ்ட்) கூட்டணியில் அரசு அமைந்த பின்னர் பல முற்போக்கான திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. உள்நாட்டு உற்பத்திக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது. வடக்கில் வெங்காயம் - மிளகாய் பயிர்செய்கையாளர்களின் வாழ்வில் வசந்தம் வீசியது. உள்நாட்டு ஆடைத்தொழிலுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து தரமற்ற வணிக இதழ்கள் மீதான கட்டுப்பாடு வந்தது. உள்நாட்டுத்திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காக திரைப்படக்கூட்டுத்தாபனம் தோன்றியது.
அதுவரைகாலமும் இந்திய திரைப்படங்களை இறக்குமதி செய்து கோடி கோடியாக சம்பாதித்த இலங்கையில் திரைப்படங்களின் இறக்குமதிக்கு ஏகபோக உரிமை கொண்டாடிய பெரும் தனவந்தர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கப்பட்டது. பதுக்கிவைக்கப்பட்ட கள்ளப்பணத்தை வெளியே எடுப்பதற்காக புதிய ஐம்பது - ரூபா நூறு ரூபா நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்நிய செலாவணி மோசடிகளில் ஈடுபட்ட சில பெரும் புள்ளிகள் கைதானார்கள். கொழும்பு தெற்கில் வோர்ட் பிளேஸில் முன்னாள் அதிபர் ஜே. ஆர் .ஜெயவர்தனாவின் வாசஸ்தலத்திற்கு அருகாமையில் தமது கட்டிடக்கலை பணியகத்தை நடத்திக்கொண்டிருந்த துரைராஜா அவர்களுக்கு தாமே ஒரு தமிழ்த்திரைப்படம் தயாரிக்கவேண்டும் என்ற எண்ணம் உருவானது தற்செயலானது என்று சொல்ல முடியாவிட்டாலும் அன்றைய காலப்பின்னணியும் அவரை அந்தப்பரீட்சைக்கு தள்ளியிருந்தது எனச்சொல்லலாம்.

















இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பிரேம்ஜி ஞானசுந்தரன் நேற்று மாலை கனடாவில் காலமானார். அச்சுவேலியில் 17-11-1930 ஆம் திகதி பிறந்த பிறந்த ஞானசுந்தரன் தமது ஆரம்பக்கல்வியை அச்சுவேலி கிறீஸ்தவ கல்லூரியிலும் பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். 1947 இல் தமது 17 வயதிலேயே சுதந்திர இளைஞர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அன்றிலிருந்து ஞானசுந்தரன் தீவிரமான வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும் ஈடுபடத்தொடங்கினார். தமிழகம்சென்று மூத்த அறிஞர்கள் நாமக்கல் கவிஞர் -வி.க. வா.ரா- சுவாமிநாத சர்மா - குயிலன், - பேராசிரியர் ராமகிருஷ்ணன் - தமிழ் ஒளி முதலானோரின் தொடர்பினால் இடதுசாரிக்கருத்துக்களை உள்வாங்கி இடதுசாரியாகவும் முற்போக்கு எழுத்தாளராகவும் இயங்கிய ஞானசுந்தரன் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி இதழிலிலும் பணியாற்றினார். தயாகம் திரும்பிய பின்னார் கே.கணேஷ் மற்றும் கே. ராமநாதன் ஆகியோரின் தொடர்புகளினால் இலங்கை கம்யூனிஸ்ட கட்சியின் தேசாபிமானி - மற்றும் சுதந்திரன் முதலான இதழ்களிலும் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.
வல்லமை என்ற இணைய இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை காட்சிப்பிழை. அவுஸ்திரேலியாவில் வதியும் சுதாகரன் இலங்கை பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. முன்னர் நியூசிலாந்தில் வாழ்ந்துவிட்டு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்தவர். பல வருடங்களாக சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்துக்கள் எழுதுபவர். இலங்கையிலும் தமிழகத்திலும் மற்றும் வெளிநாடுகளிலும் நடந்த பல சிறுகதைப்போட்டிகளில் பரிசில்கள் பெற்றவர். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் பல பதவிகளிலிருந்து சிறந்த பங்களிப்பு செய்துவருபவர். சq;கத்தின் 10 ஆவது எழுத்தாளர் விழாவை (2010) முன்னிட்டு நடத்தப்பட்ட சர்வதேச சிறுகதை, கவிதைப்போட்டிகளை திறம்பட நடத்தியிருப்பவர். தற்பொழுது சங்கத்தின் செயற்குழுவில் இதழாசிரியராக பணியாற்றுபவர். குறிப்பிட்ட வல்லமை இணைய இதழின் சிறுகதைப்போட்டிக்கு வந்த கதைகளை தேர்வு செய்தவர் தமிழகத்தின் பிரபல இலக்கியவிமர்சகர் வெங்கட்சாமிநாதன். குட்டுப்பட்டாலும் படவேண்டும் மோதிரக்கையினால் என்பார்கள். வசிட்டவர் வாயால் பிரம்மரிஷிப்பட்டம் என்பார்களே அதேபோன்றதுதான் வெங்கட்சாமிநாதனின் தேர்வு. சுதாகரனின் காட்சிப்பிழை வல்லமை தொகுத்த பரிசுக்கதைகளின் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. பாலகிருஷ்ணனுக்கும் கனடாவில் வயது முதிர்ந்தவர்கள் தஞ்சமடையும் இல்லத்திலிருக்கும் தெமட்டகொட அங்கிளுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சினை?





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









