பயணத்தொடர்: நதியில் நகரும் பயணம் (2) - நடேசன் -

- இரண்டாவது உலகப்போரில், மரணமடைந்த 6,845 சோவியத் போர் வீரர்களுக்கான , பிரட்ரிஸ்லாவா நகரின் சிலாவின் என்ற இடத்திலுள்ள நினைவுச் சின்னம. -
புடாபெஸ்டில் எங்களது படகில் ஏறியதும் வரவேற்பு விருந்துடன், கப்பலில் வேலை செய்பவர்களுடன் எமக்கு அறிமுகம் நடந்தது. இந்த உல்லாசப்படகு போகும்போது அதாவது டானியுப்பையும் ரைன் நதியையும் இணைக்கும் நதி மெயின் நதி (main River) என்பார். இது பல இடங்களில் மிகவும் அகலமற்ற கால்வாய்கள் இருப்பதால் படகின் அகலம் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். சில இடங்களில் டொக் எனப்படும் பகுதிகளைக் கடக்க அரை மணி நேரம் செல்லும். நதி நீரை அடைத்து நீர்மட்டத்தை உயர்த்துவார்கள். ஜேர்மன்- பவேரியா பிரதேசத்திலே இந்த ஆறு உள்ளது . பல காலமாகக் கப்பல் போக்குவரத்து இந்த வழியாக நடப்பதால் இந்த நீர்ப்பாதை கவனமாக பராமரிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நதிகள் மிகவும் சுத்தமானவை. மிகவும் கடுமையான சட்டங்கள் இங்கு உள்ளது. நதிகளில் படகுகள் தரித்து நிற்கும்போது பயணிகளது கழிவுகள் தரித்து நிற்கும் இடங்களில் அகற்றப்படும். அதற்கான கொந்தராத்து நிறுவனங்களால் அதேபோல் உணவுகளும் புதிதாகக் கொண்டு வரப்படுவதை பார்க்கக் கூடியதாக இருந்தது
நாங்கள் சென்ற நதிப் படகில் மூன்று தட்டுகள் உள்ளன. அங்கு வேலை செய்பவர்களை விட 200 பயணிகள் இருந்தார்கள். இவர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளன.
அவுஸ்திரேலியாவின் படகுக் குழுமம் என்றபோதும் படகின் கெப்டன் உக்ரேனை சேர்ந்தவர். உணவுக்குப் பொறுப்பாக இருந்தவர் ரஸ்சிய நாட்டையும், பயணிகள் நலத்திற்குப் பொறுப்பாக இருந்த விக்ரோரியா என்ற இளம் பெண் பெலரூஸ் நாட்டையும் சேர்ந்தவள். படகின் பொறுப்பிலிருந்தவர் ஒரு போர்த்துக்கல் நாட்டவர். சமையல், பரிமாறல் , சுத்தப்படுத்தல் போன்ற வேலைகளில் கிழக்கு ஐரோப்பா, பிலிபைன்ஸ் நாட்டினர் வேலை செய்தார்கள். கப்பலில் வேலை செய்தவர்களைப் பார்த்தபோது ஒற்றுமையான ஒரு ஐக்கிய நாடுகள் சபைபோல் தெரிந்தார்கள். பயணிகளில் பெரும்பான்மையானோர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். மிகுதியானவர்கள் கனடா, அமெரிக்கா, பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள். இங்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் எங்களைப்போல் அறுபதைத் தாண்டியவர்கள், அத்துடன் பலருக்கு இதுவே முதல் பயணமாக இருந்தது.




நான் ஆப்பிரிக்காவில் 17 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். அதில் 16 ஆண்டுகள் போட்ஸ்வானாவில். எனது வாழ்க்கையின் வசந்த காலம் அது. எனது இளமைக்காலமாக அமைந்தது மட்டுமல்லாது குறிப்பிடத்தக்க சேமிப்பு, நல்ல ஓய்வு நேரம், உயர்ந்த வாழ்க்கைத்தரம், நட்புறவான மக்கள், சட்டம் ஒழுங்கோடு கூடிய அரசியல் ஸ்திரத்தன்மை, மோசமில்லாத காலநிலை என்று நாம் வாழ்ந்த சூழலும் அதற்கு பெரும் பங்கு வகிக்கிறது. எமக்கே இந்த நிலைமை என்றால், ஐரோப்பியர் பற்றி சொல்லத் தேவையில்லை. அங்கு அவர்கள் முதல்தர குடிமக்கள் என்பதோடு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு போட்ஸ்வானா ஒரு சொர்க்கபூமி. அவர்களைப் பற்றி உள்ளூர் வாசிகள் சுவாரசியமாக ஒன்று சொல்வார்கள். குறிப்பிட்ட காலம் வேலை செய்த பின் "ஊருக்கு போகப்போகிறேன், இனியும் உங்களோடு இருந்து மாரடிக்க என்னால் முடியாது" என்று கூறி விட்டு செல்லும் அவர்கள், இரண்டு மாதத்தில் பெட்டி படுக்கையுடன் திரும்ப வந்து நிற்பார்கள் . ஏன் எனக் கேட்டால், "இங்கு வாழ்ந்த எம்மால் அங்கே போய் வாழ முடியாது" என்பார்களாம். 



பெருநகரங்கள் நமது காதலிகள் போன்றவை. காதலியின் அகத்தையும் புறத்தையும் முழுமையாகத் தெரிந்து கொண்டோம் என நினைத்து திருமணத்திற்குத் தயாராகும் பொழுது அவர்கள் புதிதாக மாறிவிடுவார்கள். 


தான்ஜீரில் பழைய ரீயாட் (Riyad) ஒன்றை தங்கும் விடுதியாக மாற்றிய இடம் ஒன்றில் தங்கினோம். மிகச் சிறிய அறை. ஒரு ஈரோ 10 டினார்கள். ஒரு கனேடியன் டொலர் 7 டினார்கள். இலங்கை இந்தியாவை விட பண மதிப்பு கூடிய நாடு. இருப்பினும் ஐரோப்பாவின் விடுதி விலைகளுக்கு சரிசமனாகவே இங்கு அறவீடுகின்றார்கள். நாம் எதிர்பார்த்ததைவிட விடுதி விலைகள் அதிகம். ஆனால் மரக்கறிகள் மிக மலிவு. சமைத்து சாப்பிட இடமில்லாதது பெரும் குறையாக இருந்தது.

ஸ்பிங்ஸ் பக்கத்தில் கவ்றியின் பிரமிட் ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்படவில்லை என சொல்வார்கள்.அதே போல் எகிப்திய அரசர்கள் உடனடியாகவே கிசா என்னும் உலக அதிசயமான பிரமிட்டை கட்டிவிடவில்லை. இந்த பிரமிட் அமைப்பு முறை ஒரு கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியுடனேயே வருகிறது. பழைய அரசர்கள்(Old Kingdom) காலத்தில்தான் இந்த பிரமிட்டுகள் கட்டப்பட்டன. இந்தக்கால கட்டத்தில் பல அரச வம்சங்கள் தோன்றி கடைசியில் பெப்பி 2 என்ற மன்னன் 94 வருடங்கள் அரசாண்டபின் பழைய அரசர் காலம் முடிவுக்கு வருகிறது.இன்னமும் அவ்வளவு நீண்ட காலம் அரசர் எவரும் உலகத்தில் அரசாளவில்லை என்பதால் அந்த ரெக்கோட் முறியடிக்கப்படவில்லை. எகிப்திய வரலாற்றில் சுதேச மன்னர்கள் ஆண்டகாலத்தை பழைய , மத்திய, பிற்காலம் என மூன்றாக வகுத்திருக்கிறார்கள் எகிப்திய வரலாற்று ஆசிரியர்கள். அத்துடன் இடைப்பட்ட காலங்களில் எகிப்து நலிவடைந்த வேளையில் வேற்று நாட்டவர்கள் ஆண்டிருப்பது பற்றி ய குறிப்புகள் சரித்திரத்தில் இருந்து மறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். சாதாரண மனிதர்கள் போல் வெற்றிகளை கொண்டாடுவதும் தோல்விகளை மறைக்க நினைப்பதுமான போக்கு எகிப்திய அரசவம்சத்தில் இருந்ததால் நலிவடைந்த காலங்களை அறிவதற்கு இலக்கியங்களைத் தேடி அறிய வேண்டியிருப்பதாக சொல்கிறார்கள்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









