எகிப்தில் சில நாட்கள் - 1

உலகத்தில் முதன்முதலாக ஆணுறையைப் பாவித்தவர்கள் யார் தெரியுமா? எகிப்தியர்கள். எகிப்திலிருந்து முதலாவது ஆணுறை எப்படி உருவாகியது? அறிய ஆவலாக இருக்கிறீர்களா? செம்மறி ஆட்டின் குடலின் வெளிப்பக்கத்தில் உள்ள மெல்லிய லைனிங்கில் இருந்து செய்தது. இந்த குடல் லைனிங்தான் இப்பொழுது சொசேச் செய்வதற்கு பயன்படுகிறது. சத்திர சிகிச்சை வைத்தியத்துறையில் ஆரம்ப உபகரணங்கள் எகிப்தில் பாவிக்கப்பட்டதாக மருத்துவ சரித்திரம் கூறுகிறது. எழுத்து வடிவம் பப்பரசி இலையில் எழுதப்பட்டது. பப்பரசி பேப்பர்தான் இப்பொழுது பேப்பர் ஆகியது. இந்த பப்பரசி செடிகள் நைல் நதிக் கரையோரம் விளைகின்றன. உலகத்தின் முதல் நாகரீகம் நைல் நதிக்கரையில் தொடங்கியது எனப் பாடப்புத்தகங்கள் வாயிலாகப் படித்தேன். இதே போல் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் யூதமக்கள் மோஷசால் எகிப்திய மன்னர்களிடம் இருந்து இறைவனின் கட்டளைப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்கிறது. இதன்பின்பு குரானைப் படிக்கும்போது அங்கும் எகிப்திய மன்னர்களையும் யூதர்களைப் பற்றியும் அவர்களை அழைத்து சென்ற மோஷசை பற்றியும் பல வாக்கியங்கள் பேசப்படுகிறது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









