பயணத்தொடர் : கரிபியன் கடற்பயணம் (1) - நடேசன் -

சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஆங்கிலேயருக்கு சொந்தமான (Princess Elizabeth) பயணக் கப்பலில் ஏறினோம். இது எங்களுக்கு கரிபியன் தீவுகளுக்கான ஒரு மாதக் கடற் பயணம். அடிமனத்தில் முதல் பயணமாதலால் எப்படி பயணம் இருக்கும்?
போரடிக்குமா?
புத்தகங்கள் மற்றும் கம்பியூட்டர் இருந்தால் எனது பொழுது போகும் ஆனால் சியாமளாவின நிலைவேறு. கடல் குருஸ் என்பது இதுவரை வயதானவர்களுக்கு உள்ள பயணம் என்ற நினைவே மனதில் இருந்தது. பல நினைவுகளை சுமந்தபடி பொதிகளுடன் கப்பலில் ஏறினோம். ஆரம்பத்தில் கப்பலில் ஏறுவது, விமானத்தில் ஏறுவது போல் பாஸ்போர்ட், விசா மற்றும் பல சோதனைகள் இருந்தன.
கப்பலில் எந்த குடிப்பானங்களும் கொண்டு செல்ல முடியாது என்று விதி இருப்பது நான் அறிந்ததே. ஆனாலும், சான் பிரான்சிஸ்கோ ஹோட்டலில் தங்கியபோது வருபவர்களுக்கு இரண்டு இலவசமாக குடிப்பானம் உள்ளது – அதை “வெல்கம் ரிங்” என்று சொல்லலாம். நான் அதைக் குடிக்கவில்லை, பிறகு மறந்தே போய்விட்டேன்.
இரண்டாவது நாள் அதை அங்குள்ள வரவேற்பில் உள்ள இளம் பெண்ணிடம் வெல்கம் ரிங்கை நினைவுபடுத்திபோது, அவள் சிரித்துவிட்டு ‘அது காலாவதியாகிவிட்டது’ என்று சொல்லிவிட்டு, பின்பு உள்ளே போய் ஒரு புதிய வைன் கொண்டு தனது அன்பளிப்பாக வழங்கினாள். இளம் பெண்கள் நம்மை சட்டை செய்யும் வயது கடந்த போதிலும், ‘என்ன செய்கிறாய்?’ என்று கேட்டேன். படிப்பதாக கூறினதும், அவளது கையில் பத்து அமெரிக்க டாலர்கள் வைத்தேன். அன்று இரவு ஒரு கிளாஸ் குடித்து, முக்கால் போத்தல் மீதி இருந்தது.




கோடை காலத்தில்,மத்தியானம் ஆனதும் ஊர்போல வெயில் கொளுத்தி எரிக்கும். உடல் முழுக்க வேர்த்து, வேர்வை ஒட்டிக்கொள்ளும்.தேகம் பிசுபிசுக்கும்.‘நா'வரண்டுபோகும். காற்று வராதா? வந்து எம்மை வருடாதா? என்று ஒவ்வொரு மனசும் எதிர்பார்க்கும்.சிலவேளைகளில் அதுவும் சாத்தியமாகும்.























பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









