‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தலும், எழுச்சியும்! - வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் அழைக்கின்றனர்.
காலம்: 18.05.2015 திங்கள் கிழமை, காலை 10.00 மணிக்கு | இடம்: வவுனியா நகரசபை மண்டபம்
கூட்டுப்படை பலம் - கூட்டுச்சதியை பிரயோகித்து, ‘ஒன்றரைக்கிலோமீற்றர்கள்’ நீரேந்து நிலப்பரப்புக்குள் ‘ஐந்தரை இலட்சம்’ மக்களை முடக்கி, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களுடனும், மனிதகுலப் படுகொலைகளுடனும், மனித உரிமை மீறல்களுடனும் சிறீலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட வன்முறைப்போரில் ‘ஒன்றரை இலட்சம் உறவுகள்’ கொல்லப்பட்டுள்ளார்கள்.
‘2009 மே 18 படுகொலைகள்’ தமிழ் தேசிய இனத்தின் ஆத்மாவில் விழுத்தப்பட்ட மிகப்பெரிய வடுவாகும். ஈழதேசத்தின் வரலாற்றில் கறை படிந்த மறக்க முடியாத பெருத்த துயர நிகழ்வாகும். ‘தமிழினத்தின் தேசிய துக்க நிகழ்வாக’ இந்நாளை பிரகடனப்படுத்தி, ‘இனப்படுகொலை’ நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சி,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடியலையும் சங்கத்தின் பங்களிப்புடன் வவுனியா நகரசபை மண்டபத்தில் 18.05.2015 (திங்கள் கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. மிகவும் நெருக்கடியான கடந்த ஐந்துவருட காலத்தில், மிகவும் மோசமான ‘அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு’ மத்தியில் போரில் உயிர் குடிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு ஆத்மசாந்தி பிரார்த்தனை மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளை உணர்வுபூர்வமாக அனுஸ்டித்ததைப்போலவே, இம்முறையும் ‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சியை அனுஸ்டிக்கின்றோம்.

07-06-2015 ஞாயிறு மாலை 5 மணி ; மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி சாலை, திருப்பூர் | 

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழி இந்த மாதம் ஜெயகாந்தன் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சினிமாவில் ஜெயகாந்தன் ஏற்படுத்திய மாற்ற்னகள், தாக்கங்கள், ஜெயகாந்தனையும் விட்டுவைக்காத சினிமாவின் வரலாறு, ஜெயகாந்தனின் அரசியல் தெளிவின்மை உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளது. ஜெயகாந்தன் இயக்கிய படங்கள், ஜெயகாந்தனின் சினிமா பற்றிய பார்வை போன்றவற்றை பதிவு செய்து, அவற்றை ஆவணமாக்கியுள்ளோம். அவசியம் நண்பர்கள் படித்துவிடுங்கள். 
இலங்கையில் வீரகேசரி, சிந்தாமணி, தினகரன் பத்திரிகைகளில் தமிழ் சினிமா தொடர்பான ஊடகவியலாளராக பணியாற்றியவரும் சினிமா தொடர்பான செய்திகளை தொடர்ந்து எழுதிவருபவருமான திரு. ச. சுந்தரதாஸ் எழுதிய மறக்கமுடியாத வில்லன்கள் நூலின் வெளியீட்டு அரங்கு சிட்னியில் நடைபெறவுள்ளது.




25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் Tuesday, April 14, 2015 @ 7:11 PM



நாவல் - அவளுக்குத் தெரியாத ரகசியம்

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









