ஆஸ்திரேலியாவில் பாலேந்திராவுடன் சந்திப்பும் கலந்துரையாடலும்
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நாடகத் துறைக்குப் பிரமிக்கத்தக்க பங்களிப்பைச் செய்துவரும் பிரபல நாடக இயக்குனர் க. பாலேந்திரா அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகம், லண்டன் தமிழ் நாடகப் பள்ளி ஆகியவற்றின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணமான பாலேந்திராவைச் சந்திக்கவும் அவருடன் கலந்துரையாடவும் ஒரு வாய்ப்பினைப் பாரதி பள்ளி ஏற்படுத்தித் தருகிறது.
தலைப்புகள்: தமிழில் சிறுவர் அரங்கம் | தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
நாள்: 4 ஜூலை 2015 (சனிக்கிழமை) | நேரம்: பி.ப. 3.௦௦ மணி
இடம்: EdX Centre, 203 Gladstone Road, Dandenong, Vic- 3175 (Near Lyndale Secondary) |(மேலதிக விபரங்களுக்கு 0411 114699)
நாடகப் பயிற்சிப் பட்டறை
பாரதி பள்ளி நடாத்தும் இளையோருக்கான விடுமுறைக்கால நாடகப் பயிற்சிப் பட்டறையில் பாலேந்திரா கலந்து கொண்டு நாடகப் பயிற்சி வழங்குவார். இது டான்டினோங்கில்நடைபெறும். பங்கு கொள்ள ஆர்வமுள்ளோர் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி மேலதிக விபரங்களைப் பெறலாம். இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். வயது, தொலைபேசி எண், முகவரி ஆகிய விபரங்களை அனுப்புதல் வேண்டும்... பங்குகொள்ள அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய மாத இதழான கூடுவின் மூன்றாவது இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இதழில் கவிஞர், இயக்குனர் லீனா மனிகேமலையின் சிறுகதை, தறியுடன் நாவல் ஆசிரியர் பாரதிநாதன் எழுதியுள்ள சிறுகதை, சு.ராவின் கவிதைகள் பற்றிய அரவிந்தனின் கட்டுரை, இயக்குனர் ருத்ரையா, எழுத்தாளர் ஜெயகாந்தன் இருவருக்குமான கவிஞர் விக்ரமாதித்தனின் அஞ்சலி கவிதை, தமிழ்மகன் எழுதியுள்ள வெ. நீலகண்டனின் தமிழ் பேரரசன் ராஜேந்திர சோழன் புத்தகம் பற்றிய திறனாய்வு, தமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சி பட்டறையின் இரண்டாவது கட்டுரை, சுஜாதா தேசிகன் தொடங்கியிருக்கும் புதிய தொடர், ரிஷான் ஷெரிப்பின் இரண்டாவது கட்டுரை, கடங்கநேரியன் கவிதை தொகுப்பு பற்றிய அறிமுகம், போன்ற கட்டுரைகள் வெளிவந்துள்ளது. தவறாமல் படியுங்கள். உங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள். நன்றி. படிக்க:

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாசார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினர் ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை ,கவிஞர்களை ,பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் ( கலாசூரி விருது ) கொடுத்து கௌரவித்து வருகின்றார்கள். அதன்மூன்றாவது கலாசூரி விருதினை பிரபல பெண்கவிஞர் பன்முக ஆற்றல் கொண்டவருமான சல்மா மாலிக் அவர்கள் பெறுகின்றார். திருச்சி மாவட்டதில் உள்ள துவரங்குறிஞ்சி என்னும் சிறிய கிராமத்தில் பெண்களை வெளியே அனுமதிக்கப்படாத ஒரு முஸ்லிம் சமூகத்தில் பிறந்தார் இவர். ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது படிப்பைப் பாதியில் நிறுத்த விட்டார்கள். அன்று தான் முதன்முதலாக தனிமைப்படுத்தப்பட்டார். அதனால்அவர் முதல் கவிதை அங்கு இருந்து தான் பிறந்தது.



கூட்டுப்படை பலம் - கூட்டுச்சதியை பிரயோகித்து, ‘ஒன்றரைக்கிலோமீற்றர்கள்’ நீரேந்து நிலப்பரப்புக்குள் ‘ஐந்தரை இலட்சம்’ மக்களை முடக்கி, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களுடனும், மனிதகுலப் படுகொலைகளுடனும், மனித உரிமை மீறல்களுடனும் சிறீலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட வன்முறைப்போரில் ‘ஒன்றரை இலட்சம் உறவுகள்’ கொல்லப்பட்டுள்ளார்கள். 

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழி இந்த மாதம் ஜெயகாந்தன் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சினிமாவில் ஜெயகாந்தன் ஏற்படுத்திய மாற்ற்னகள், தாக்கங்கள், ஜெயகாந்தனையும் விட்டுவைக்காத சினிமாவின் வரலாறு, ஜெயகாந்தனின் அரசியல் தெளிவின்மை உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளது. ஜெயகாந்தன் இயக்கிய படங்கள், ஜெயகாந்தனின் சினிமா பற்றிய பார்வை போன்றவற்றை பதிவு செய்து, அவற்றை ஆவணமாக்கியுள்ளோம். அவசியம் நண்பர்கள் படித்துவிடுங்கள். 
இலங்கையில் வீரகேசரி, சிந்தாமணி, தினகரன் பத்திரிகைகளில் தமிழ் சினிமா தொடர்பான ஊடகவியலாளராக பணியாற்றியவரும் சினிமா தொடர்பான செய்திகளை தொடர்ந்து எழுதிவருபவருமான திரு. ச. சுந்தரதாஸ் எழுதிய மறக்கமுடியாத வில்லன்கள் நூலின் வெளியீட்டு அரங்கு சிட்னியில் நடைபெறவுள்ளது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









