அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலகச்சிறுகதைப் போட்டி 2015
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.
போட்டிகள் பற்றிய பொது விதிகள்
1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
2. ஒருவர் ஆகக்கூடியது மூன்று சிறுகதைகளை அனுப்பலாம். அவை போட்டியாளரின் சொந்தப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும்.
3. சிறுகதைகள் தமிழ் ஒருங்குகுறி(Unicode) அல்லது பாமினி எழுத்துருவில் - மின்னஞ்சல் இணைப்பாக (Microsoft Word) அல்லது பீடிஎவ் (pdf) வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’எஸ்.பொ நினைவுச் சிறுகதைப் போட்டி- 2015’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் சிறுகதையின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும்.
4. அனுப்பப்படும் சிறுகதை ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
5. இப்போட்டியில் பங்கேற்க வயதெல்லைகள் இல்லை.
6. போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும், வானொலியில் ஒலிபரப்பவும் அல்லது காட்சிக்கிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
7. அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
8. சிறுகதைகள் 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 750 சொற்களுக்கு உட்படாமலும் அமைதல் வேண்டும்.
ப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பின்வருமாறு:\
முதலாம் பரிசு - 300 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
இரண்டாம் பரிசு- 200 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
மூன்றாம் பரிசு - 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
முடிவுத்திகதி: 30.11.2015. இத்திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக ஆக்கங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
போட்டி முடிவுகள் 2016 தை மாதம் முதல் வாரம் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.



கீழ்வரும் திருக்கோவிலூர் சுற்றியுள்ள பகுதிகள்


அவுஸ்திரேலியாவில் வதியும் மிருகவைத்தியரும் எழுத்தாளருமான டொக்டர் நடேசன் கனடாவுக்கு வருகைதந்துள்ளார். சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள் முதலான துறைகளில் சில நூல்களையும் வரவாக்கியிருக்கும் நடேசனுடனான சந்திப்பு கலந்துரையாடல் எதிர்வரும் 20 -09-2015 ஆம் திகதி ஞாயிறு கனடாவில், 430 Mayfair on the Green..,Mclivin Avenue , Scarborough , Ontario முகவரியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும். இந்தக் கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்கள் திருவாளர்கள் தேவகாந்தன், என். கே. மகாலிங்கம் ஆகியோர் கலந்துகொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கலை இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு: திரு. சபேசன் 4168011654 | e mail:
ஒருங்கிணைப்பு: சின்னையா சிவநேசன்
‘தேடல்களின் வெளிப்பாடாகவும்,சொந்த அனுபவங்களின் வெளிப்பாடாகவும் ‘கட்டைவிரல்’ கட்டுரைகளைப் படிக்க முடிந்தது . இலங்கை வீரகேசரியில் வெளியான பல கட்டுரைகள் கட்டை விரலுக்கு அழகு சேர்ப்பதாகவும், ‘தடுத்திடுவார்கள் இன அழிப்பை’,‘போர்க்காலக் காதல்’ போன்ற கவிதைகள் கடந்த கால,சமகால நிகழ்வுகளையும் கோடிட்டுக் காட்டும் சிறந்த கவிதைகள்’ என முன்னாள் லண்டன் தெற்கு லண்டன் சதாக் பகுதியின் நகரசபை முதல்வரும்,தற்போதைய நகரசபை உறுப்பினருமான செல்வி எலிசா மன் அவர்கள் லண்டன் ஈஸ்ற்ஹாம் ரினிற்ரி மண்டபத்தில் மிக அண்மையில் பாரீசிலிருந்து வருகைதந்த திவ்வியநாதனின் நூல்; வெளியீட்டின்போது, தனது தலைமையுரையில் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் பேசுகையில்: ‘ கட்டைவிரல்’ தொகுப்பில் கவிதை, கட்டுரை,சமையற்குறிப்புகள் என விரிந்து கிடப்பது பாராட்டுக்குரியது. திவ்வியநாதனின் இத்தகைய உழைப்பு தமிழுலகுக்குச் செய்ய வேண்டிய அளப்பரிய செயற்பாடு. மேலும் இத்தகைய ஈடுபாடு; தொடரவேண்டுமென வாழ்த்துக் கூறினார்;.’
சென்ற சனிக்கிழமை 22-08-2015 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுகதைப் பயிலரங்கு ஒன்று ஸ்காபறோ சிவிக்சென்ரர் மண்டப அறையில் காலை 9:00 மணி தொடக்கம் மதியம் 12:00மணி வரை நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவரும் எழுத்தாளருமான திரு. குரு அரவிந்தன், மற்றும் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் ஆகியோரால் தமிழ் சிறுகதை ஆர்வலர்களுக்காக இந்த சிறுகதைப் பட்டறை வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது சிறுகதைகளையே உதாரணமாக எடுத்து சிறுகதை பற்றி எல்லோரும் புரிந்து கெனாள்ளும் வகையில் விளக்கங்களைத் தந்தார். பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தமிழ் நாட்டில் சிறுகதையின் தொடக்கம், அதன் வளர்ச்சி பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.

சென்ற வெள்ளிக்கிழமை யூலை மாதம் 24 ஆம் திகதி 2015 அன்று செல்வி அபர்னா செல்வராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கனடா றிச்மன்ஹில் சென்ரர் அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கலைமன்றத்தின் அதிபர் நர்த்தன நாயகி, மானித மாதங்கி ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு அவர்களின் மாணவியான செல்வி அபர்னாவின் அரங்கேற்றத்தில் பிரதம விருந்தினர்களாக எழுத்தாளர் திரு குரு அரவிந்தன், திருமதி மாலினி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருமதி. பூங்கோதை பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். சுதர்சன் துரையப்பா அவர்கள் அரங்கேற்ற நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார்.
காந்தளகம் வெளியீடாக 916 பக்கங்களில் வெளிவந்துள்ளது இலக்கியப்பூக்கள் தொகுதி இரண்டு தொகுப்பு நூல். இத்தொகுப்பு நூலில் 56 ஈழத்து இலக்கிய ஆளுமைகள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே இலக்கியப்பூக்கள் தொகுதி ஒன்று தொகுப்பு நூலினைத் தொகுத்தளித்த எழுத்தாளர் முல்லை அமுதனே இந்நூலின் தொகுப்பாசிரியராகவுமிருக்கிறார். அமரர்களான ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் விபரங்களைத் தொகுத்து இரு தொகுப்புகளை வழங்கியுள்ள முல்லை அமுதன் பாராட்டுக்குரியவர். இவ்விரு தொகுப்பு நூல்களும் ஆவணச்சிறப்பு மிக்கவை. இந்நூலில் இடம் பெற்றுள்ள இலக்கிய ஆளுமைகளின் விபரங்களும், அவர்களைப்பற்றி எழுதியுள்ள கட்டுரையாசிரியர்கள் பற்றிய விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளன. இந்நூலினை வாங்க விரும்புபவர்கள் காந்தளகம் பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளவும்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









