நூல் வெளியீடு: "எழுதித்தீராப் பக்கங்கள்!"

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இலங்கையின் பிரபல எழுத்தாளரும் கல்வியாளருமான கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் (10.03.2016 ) வியாழக்கிழமை கண்டியில் காலமானார். கடந்த ஆண்டிறுதியில் புனித உம்ராஹ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஹஜ் யாத்திரையை, துணைவியார் மஸீதா புன்னியாமீனுடன் மேற்கொண்டிருந்த இவர், புனிதக்கடமையை நிறைவுசெய்தபின் நாடு திரும்பும் வேளையில் 29.12.2015 அன்று திடீர் சுகவீனம் காரணமாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டு துபாய் ராஷீட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஒரு மாத தீவிர சிகிச்சைகளின் பின்னர் 29.1.2016 அன்று இலங்கை திரும்பிய அவர், மேலதிக வைத்தியத்துக்காக மீண்டும் பல்லேகல ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நீரிழிவு நோயினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த புன்னியாமீன், அதன் தீவிர பாதிப்பினால் இறுதியில் தாயக மண்ணிலேயே எம்மை விட்டுப் பிரிந்தமை அவரது சுற்றுவட்டத்தினரை கடும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
ஆசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும், நூல்வெளியீட்டாளராகவும், ஊடகவியலாளராகவும் பல்வேறு பரிமாணங்களிலும் அறியப்பெற்ற பீர்முகம்மது புன்னியாமீன் 11.11.1960 இல் பிறந்தவர். கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தொட்ட பிரசேத்தில் உள்ள உடத்தலவின்ன என்ற சிற்றூரில் பிறந்து, வளர்ந்து, செழிப்புற வாழ்ந்து மறைந்தவர்.
அங்கு அவர் நிறுவிய சிந்தனை வட்டம் என்ற அறிவுசார் நிறுவனத்தின் மூலம் பல நூல்களை எழுதியும் பலரது நூல்களை வெளியிட்டும், புலமைப்பரிசில் பரீட்சை சார்ந்த பல கல்விப் பணிகளையாற்றியும் சிறப்புற்ற அவர், உடத்தலவின்ன என்ற சிற்றூரின் பெயரை உலகளாவிய ரீதியில் பலரையும் உச்சரிக்க வைத்ததுடன், ஈழத்து இலக்கியத் தோட்டத்திற்கு மௌனமாகப் பொழிந்த மாமழையாக நின்று பணியாற்றியவர்.
2004 முதல் 2009 வரை இவர் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்தொகுப்பொன்றை கட்டுரைகளாக எழுதித் தொகுத்து 15 தொகுதிகளில் அவற்றை வெளியிட்டுவைத்திருக்கிறார். புகலிடப் படைப்பாளிகளின் வாழ்வும் பணிகளும் பற்றிய தனியானதொரு தொகுப்பை வெளியிடும் நோக்கில் லண்டன் வந்திருந்த புன்னியாமின் ஒரு மாதம் அளவில் எமதில்லத்தில் தங்கியிருந்து புகலிடப் படைப்பாளிகளைச் சந்தித்துத் தகவல் பெற்று சிந்தனை வட்டத்தின் 236 ஆவது நூலாக அதனை 2006 இல் வெளியிட்டிருந்தார்.

நிகழ்ச்சி நிரல்
பிரதம பேச்சாளர் உரை:
"தமிழ்ச் சித்தர் இலக்கியம்: ஒரு பார்வை" - முனைவர் மைதிலி தயாநிதி
சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
"தமிழ்ச் சித்தர் இலக்கியங்களை வகைப்படுத்தல் - ஒரு அணுகுமுறை"- வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
"சூபிஸம் என்னும் இறையனுபவ வாதம் - குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களினூடாக சிறப்புப் பேச்சு " - பெரும்புலவர் மொஹமட் ஹன்ஸீர்
"சித்தர் இலக்கியப் பாரம்பரியம் - எனது மனப்பதிவுகள்" - கலாசூரி ஆ.சிவநேசச்செல்வன்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 26-03-2016
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
3A, 5637, Finch Avenue East,
Scarborough,
M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'மெல்லிசைத் தூறல்கள்' பாடல் நூல் வெளியீட்டு விழா 2016, மார்ச்; 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கொழும்பு பல்கலைக் கழக உளவளவியலாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர் அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு. திருமதி. சிரிசுமண கொடகே, அல்ஹாஜ் வை.எம். இப்ராஹிம், கலாநிதி யூசுப் மரிக்கார், டாக்டர் புரவலர் அல்ஹாஜ் ஏ.பீ. அப்துல் கையூம் (ஜே.பி.), ஜனாப். இல்ஹாம் மரிக்கார் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் எம்.எம். சப்ரி நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்வார்.
வரவேற்புரையை ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம் அவர்களும், தலைமை உரையை தெளிவத்தை ஜோசப் அவர்களும், கவி வாழ்த்தை ஊடக அதிகாரி திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுஸைனும் நிகழ்த்த, நயவுரையை சட்டத்தரணி இரா. சடகோபன் அவர்களும், நூல் பற்றிய கருத்துரையை கவிஞர் என். நஜ்முல் ஹுஸைனும், ஏற்புரை மற்றும் நன்றியுரையை நூலாசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும் நிகழ்த்தவுள்ளனர்.
இந்நூல், நூலாசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 09 ஆவது நூல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பிரபல ஆவணப்பட இயக்குநர் அம்சன்குமார் இயக்கத்தில் உருவான ஆவணப்பட வெளியீடும் தவில் மேதை தெட்சணாமூர்த்தி அறக்கட்டளை பதிப்பித்த தவில் மேதை லய ஞான குபேர பூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி புத்தக வெளியீடும் இணைந்த நிகழ்வு சிட்னி தூங்காபியில் நடைபெறுகிறது.
25 மார்ச் 2016 (பெரிய வெள்ளி)
காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை
தவில் இசையில் உலகின் பேராற்றல் என்று புகழ்பெற்ற அமரர் தட்சிணாமூர்த்தியின் நினைவுகூரலில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினர் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.
இந்த இறுவட்டு மற்றும் நூலின் பிரதிகளை மண்டபத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவற்றுக்காக நீங்கள் தரும் அன்பளிப்புகள் தாயகத்தில் மங்கள இசை வளர்க்க அவர் பெயரிலான அறக்கட்டளை எடுக்கும் நன்முயற்சிகளுக்கு உதவும்.
மேலதிக தகவல்களுக்கு:
திரு (0403 534 458)
கானா பிரபா (0416 141 792)
ஜெகன் (0405 167 993)
தர்மா (0413 595 589)
பாலா (0404 404 777)
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தகவல்களுக்கு - 07817262980 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா காரைக்குடி, கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் வரும் 21.3.2016 முதல் 23.3.2016 வரை நடை பெற உள்ளது. 24.03.2016 அன்று கம்பன் அருட்கோயில் (கம்பர் சமாதி) உள்ள ஊரான நாட்டரசன் கோட்டையில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக. அழைப்பிதழ் விபரம் பின்வருமாறு
காரைக்குடி கம்பன் கழக நிகழ்ச்சி நிரல் (2016)
21.3.2016 திங்கட்கிழமை மாலை 5.00 மணி திருவிழா மங்கலம்
தலைவர்- தமிழக அரசு அறிவியல் நகரத் துணைத்தலைவர் திரு. உ. சகாயம் . இ. ஆ.ப. அவர்கள்
இறைவணக்கம்- திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி,
மலர் வணக்கம் - திருமதி ராதா ஜானகிராமன்
கம்பன் அடிப்பொடி அஞ்சலி - செல்வி எம். கவிதா
கம்பன் அருட்கவி ஐந்து- திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி மாணவ மாணவியர்
வரவேற்புரை- திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரை- பேராசிரியர் தி, மு. அப்துல் காதர்
இசைத்தமிழறிஞர் திரு அரிமளம் சு. பத்மநாபன் எழுதி உமா பதிப்பகம் வெளியிடும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கம்பனில் இசைத் தமிழ் வெளியீடு - மதுரை தியாகராசர் கல்லூரி செயலர் திரு. ஹரி தியாகராஜன்
[
மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு நூல் அண்மையில் யாழ் பொதுசன நூலகக்கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றதாக எழுத்தாளர் குணேஸ்வரன் அறியத்தந்திருந்தார். அத்துடன் நிகழ்வுக்காட்சிகள் சிலவற்றையும் புகைப்படங்களாக அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி. அவற்றை 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'மறுமலர்ச்சி' இதழ்களின் தொகுப்பு நூலானது முக்கியமானதொரு மைல் கல்லாகும். இது போன்று ஏனைய சஞ்சிகைகளின் தொகுப்பு நூல்களும் வரவேண்டும். இதன் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்த முடியும். இது போல் இலங்கையில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் மற்றும் திறனாய்வுக்கட்டுரைகள் போன்றவையும் பல்வேறு தொகுப்புகளாக வெளிவருவது நல்லது. அவ்விதம் வெளியிடுவதற்கு மிகுந்த பொருட்செலவாகுமென்பதால், அவற்றை முதலில் மின்னூல்களாகத் தொகுத்து வெளியிடலாம். இவ்விதம மின்னூல்களாக அவை இருப்பது இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் வரலாற்ற முறையாகப்புரிந்து கொள்வதற்கு உறுதுணையாகவிருக்கும்.
தற்போது தொகுப்பு நூலாக வெளிவந்த 'மறுமலர்ச்சி' இதழ்களின் தொகுப்பும் மின்னூலாக இணையத்தில் 'நூலகம்' போன்ற தளங்களில் சேகரித்து வைக்கப்பட வேண்டும். இவ்விதம் இணையத்தில் மின்னூல்களாக இவை இருப்பது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இவற்றைப்பற்றி பல்வகை ஆய்வுகளை, திறனாய்வுகளைப்புரிவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். - பதிவுகள் - ]
ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தகவல்: 'காலம்' செல்வம் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 6 ஆம் திகதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்தவிருக்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழாவில் கவியரங்கு, விவாதஅரங்கு, கருத்தரங்கு, கலையரங்கு, மறைந்த பெண்ணிய படைப்பாளிகள் இருவரின் நினைவரங்கு மற்றும் தமிழினியின் சுயசரிதையான ஒரு கூர்வாளின் நிழலில் நூலின் அறிமுகம் என்பன இடம்பெறவுள்ளன. சங்கத்தின் துணைச்செயலாளர் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கும் அனைத்துலகப்பெண்கள் தின விழா, சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் தலைமையில் 6 ஆம் திகதி மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.
நிகழ்ச்சிகளை திரு, திருமதி கணநாதன் தம்பதியர் மங்கள விளக்கேற்றி தொடக்கிவைப்பார்கள். திருமதி சகுந்தலா கணநாதன் ஆங்கிலத்தில் படைப்பு இலக்கியம் எழுதும் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தகுந்தது. திருவாளர்கள் அ. நாகராஜா, சந்திரசேகரம் ஆகியோரின் தமிழ்ப்பெண் வாழ்த்து, தமிழ்த்தாய் நடனம் என்பனவற்றுடன் அரங்குகள் ஆரம்பமாகும். கவிஞர் கல்லோடைக்கரன் தலைமையில் இவர்களின் பார்வையில் பெண் என்ற தலைப்பில் நடைபெறும் கவியரங்கில், அறவேந்தன், வெள்ளையன் தங்கையன், நந்தகுமார் இராமலிங்கம், சகீம் மாத்தயஸ், கேதா ஆகியோர் பங்குபற்றுவர்.
‘தமிழ் மக்களின் வேர்களைச் சாகவிடாமல் பாதுகாக்கும்பணி புலம்பெயர் தமிழ் மக்களின் முன்னுள்ள முக்கிய பணியாகும். எமது பாரம்பரியக் கலைகளையும் இசைää கூத்து போன்ற கலை நிகழ்வுகளையும் மீட்டெடுத்தும் பேசியும் எமது அடுத்த சந்ததியினருக்கு கையளிக்கும் முயற்சிகள் எல்லாத் தளங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பறை போன்ற எமது பாரம்பரிய இசைமரபினை தமிழரின் தொன்மை இசைமரபாக நாம் முன்னெடுக்க வேண்டும். பரதநாட்டியம் போன்ற நடனங்களில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு அக்கறை காட்டினாலும் இந்த நடனங்கள் எமது பாரம்பரியக் கலாச்சார மரபை பிரதிபலிக்கின்றன என்று கூறுவதற்கில்லை. எமது பாரம்பரிய கூத்துமரபு பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று கனடாவிலிருந்து வருகை தந்திருந்த கலாநிதி பார்வதி கந்தசாமி கடந்த வாரம் மாசி மாதம் 6ஆம் திகதி ‘ஹரோ தமிழ் சந்தி’ அமைப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
‘புலம்யெயர் தமிழர்களின் அடையாளம் எது என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. புலம்பெயர் தமிழர்களில் அடுத்தடுத்த தலைமுறையினர் எவ்வளவுதூரம் எமது தாய்மொழித் தமிழை பயில்வார்கள் என்பது கேள்விக்குரிய விடயமாகும். அமெரிக்காவில் யூதமக்கள் அவர்களின் தாயக மொழியான கீபுறு மொழியைத் தெரியாத சமூகமாக வளர்ந்திருப்பதைப்போன்றே புலம்பெயர் தமிழர்களின் எதிர்காலச் சந்ததியினர் தமிழ்த் தெரியாத தமிழ்ச் சமூகமாக உருப்பெறும் நிலை உருவாகலாம்’ என்று விமர்சகர் மு. நித்தியானந்தன் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.
‘புலம்பெயர் நாடுகளில் அமைந்துள்ள ஊர்ச்சங்கங்கள் சாதி மேலாண்மையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. 1960 களில் இருந்த நிலையைவிட இன்று தாயகத்தில் சாதிய வேறுபாடுகள் கூர்மையுற்று வருவதை அறிய முடிகிறது’ என்று ஒளிபரப்பாளர் இளையதம்பி தயானந்தா கருத்துத் தெரிவித்தார்.

Uyirppu: Progressive Tamil Women Artistic Organization, 1250 Brimley Road Unit #92 Scarborough ON, M1P 3G1
Introducing ‘Niyoga’ to the Media
‘Niyoga’ is a Tamil Canadian movie, which is to be premiered at York Cinemas on Saturday, April 2, 2016. In order to facilitate media reporters in joining and reporting this premier event, I would like to introduce the movie with its trailer and the artists who are willing to share their experience. As the producer and director of the movie, I am pleased to invite you to join us and provide media coverage for the premiere show and kindly request you to officially assign reporters as representatives for your organization to this introductory event that takes place at the
Markham Convergence Centre, 7271 Warden Ave, Markham, ON L3R 5X5 on Friday,
February 26, 2016 from 7:00 pm to 8:30 pm.
Refreshment will be served and there will be a short Q & A session at end of the event.
I do hope that you will be able to confirm your attendance to this invitation and I look forward to your presence at this introductory event.
Yours Sincerely
Sumathy Balaram
Event Co-ordinator
T.P: 647 500 3496
E mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Abstract of the Story: Malar’s marriage to a journalist in Sri Lanka only lasted three days when an unknown group of men abducted him. In fear of their own lives, Malar and her family move to Canada and settle in the suburbs of Toronto. Her brother and her wife come forward to provide refuge to her. Malar lives as a shadow in her own house. Even after twenty years of displacement, her family not only believes that one day her husband would come back but also attempts to convince Malar that happiness in her life is in the near future. The movie explores whether she believes so or whether there was any dramatic change in her life?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வரவேற்புரையை நூலக நிறுவன இயக்குநர் சேரன் சிவானந்தமூர்த்தியும், வெளியீட்டுரையை கோப்பாய் சிவமும், அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும், ஆய்வுரையை பேராசிரியர் துரை மனோகரனும் நிகழ்த்துவர். ஏற்புரையை செல்லத்துரை சுதர்சன் நிகழ்த்துவார். நூலின் முதற்பிரதியை தொழிலதிபர் எஸ்.பி நாகரத்தினமும் இணைப்பிரதிகளை யாழ்ப்பாணம் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் பிரம்மஶ்ரீ க. இலட்சுமணசர்மாவும் பருத்தித்துறை பிரதேச செயலர் த. ஜெயசீலனும் யாழ் பொதுநூலக பிரதம நூலகர் திருமதி சுகந்தி சதாசிவமூர்த்தியும் பெற்றுக்கொள்வர். 1946 முதல் 1948 வரை வெளிவந்த 23 மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பாக அமையும் இந்நூல் கலை இலக்கிய வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
உயிர்ப்பு பெண்கள் நாடகப் பட்டறையின் ஜந்தாவது மேடையேற்றம் மார்ச் மாதம் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உயிர்ப்பு பெண்கள் நாடகப் பட்டறை இதுவரையில் நான்கு நிகழ்வுகளை நடாத்தி முடித்திருக்கின்றது. ”உயிர்ப்பு” நிகழ்வுகள் விழிம்பு நிலை மக்களின் குரலாய் நாடகங்களின் மூலம் ரொரொன்டோவில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. புதிய இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு நாடக அமைப்பாக உயிர்ப்பு நாடகப்பட்டறை அமைந்துள்ளது . சீரிய நாடகங்களை எழுதித் தயாரிப்பதற்கு ஆர்வமுள்ளவர்களை தம்முடன் இணைத்துக் கொள்ள உயிர்ப்பு ஆர்வமாக உள்ளது. மார்ச் மாதம் 5ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் உயிர்ப்பின் 5ஆவது நிகழ்வில் மூன்று நாடகங்கள் மேடையேற உள்ளன.
மீராபாரதியின் எழுத்து இயக்கத்தில் - ”கங்கு”
தணலாய்த் தகித்து கொண்டிருக்கும் மனித மனங்கள், உணர்ச்சிகள், உணர்வுகள் என்பவற்றின் பிரதிபலைப்பாய்த் தோற்றம்பெற்றிருப்பதே கங்கு என்னும் இந்த அரங்க அளிக்கை. 'ஒடுக்கப்பட்டவருக்கான அரங்கு' என்ற அரங்க அணுகுமுறையின் அடிப்படையில், பங்களிப்போர் எல்லோரினதும் கூட்டு முயற்சியில் உருவாகியதே இந்தப் படைப்பு. ஈழத் தமிழ் சமூகம் பல்வேறு ஒடுக்குமுறைகளை புறவயமாக எதிர்கொண்டபோதும் அது தனக்குள்ளும் பல்வேறு அக அடக்குமுறைகளை கொண்டிருக்கின்றது. இந்த முரண்பாடுகளின் சிறு துளியாய்க் கனல்கிறது கங்கு.
இளங்கோவின் எழுத்து இயக்கத்தில் - ”சாம்பல் பறவைகள்”
இருப்பிற்கும் இழப்பிற்கும் இடையில் ஒரு பறவையைப் போல அலைகிறது வாழ்வு. வாழ்க்கையின் அர்த்தங்களைக் கண்டுபிடித்துவிடும் எத்தனிப்பில் கழிகிறது காலம். வானமெங்கும் உலாவித்திரியும் பறவையொன்று உதிர்த்துவிடும் சிறகொன்றை வைத்து பறவையின் வாழ்வை அளந்துவிடமுடியாதோ அவ்வாறே மனிதர்களுக்குள் சுழித்தோடும் எண்ணங்களையும் அவ்வளவு எளிதில் கணித்துவிட முடிவதில்லை. இறுதியில் வாழ்வில் எதுவுமே எஞ்சுவதே இல்லையெனினும் ஏன் இவ்வளவு வெறுப்பையும் துயரத்தையும் காவிக்கொண்டு திரிகின்றோம். நேசிக்க மனிதர்களும், நேசிப்பதற்கு இயற்கையையும் இருக்கும்போது கூட நாம் ஏன் இன்னும் தனிமைப்பட்டுப் போனதாய் உணர்கின்றோம். வாழ்க்கையிற்கு உண்மையில் அர்த்தம் ஏதும் இருக்கவேண்டுமா? இலக்குகளை நோக்கி எப்போதும் ஓடிக்கொண்டிருக்க வேண்டுமா? நாம் நம்முடைய வாழ்வை வாழ்கின்றோமா அல்லது யாரோ ஒருவரின் வாழ்க்கையைத்தான் வாழத்தான் எல்லாவற்றையும் தொலைத்து அலைந்து கொண்டிருகின்றோமா? நம் வாழ்வில் ஒருகாலத்தின் குறுக்கு வெட்டிலிருந்து தம் சிறகுகளை அசைத்துப் பறப்பதிலிருந்து விரிகிறது, சாம்பல் பறவைகள் என்கின்ற நாடகம்.
சென்ற வாரம் ரொறன்ரோவில் கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தின் கவிச்சரம் என்ற இதழ் வெளியிடப்பட்டது. சிறப்புப் பிரதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற, கவிஞர் கழகத்தின் தற்போதைய தலைவர் நண்பர் மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா அவர்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். மலர் வெளியீட்டுக் குழுவில் பெரும்புலவர் முஹமத் ஹன்ஸீர், அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன், கனி விமலநாதன், இராஜ்மீரா இராசையா, அகணி சுரேஸ், பவானி தர்மகுலசிங்கம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பொங்கல் விழாவுடன் சேர்த்து நூல் வெளியிடப்பட்டதால் எல்லோருக்கும் பொங்கல் பரிமாறினார்கள். தமிழ் மரபுத் திங்கள் என்பதால் தைமாதம் முழவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ரொறன்ரோவின் பல இடங்களிலும் கொண்டாடப்பட்டது.
பல கவிஞர்களின் மரபுக் கவிதைகள் இந்த இதழில் இடம் பெற்றிருந்தன. கனடாவில் மரபுக் கவிதையை வளர்த்து எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக நான் இருந்த போது எனக்குள் அந்த ஆர்வம் ஏற்பட்டது. ஆர்வத்தை விதைத்தவர் எனது தொடக்க காலத்தில் தலைவராக இருந்த கவிஞர் கந்தவனமாகும். இதைப்பற்றி நான் அதிபர் பொ. கனகசபாபதி அவர்ளுடன் கதைத்த போது பண்டிதர் ம.செ. அலக்ஸாந்தர் அவர்களும் மரபுக்கவிதையில் சிறந்தவர் என்ற பரிந்துரையைத் தந்தார். எனது தேடலில் வள்ளிநாயகி இராமலிங்கத்தின் பெயர் இடம் பெற்றாலும் போக்குவரத்து வசதியீனம் காரணமாக அதைத் தவிர்த்திருந்தேன். எனவே ஒரு நாள் அதிபரின் வீட்டில சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தினேன். அந்த சந்திப்பு பற்றி கவிச்சரம் என்ற இதழில் அவர் அதைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்த போது இதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. இதோ கவிச்சரம் இதழில் உள்ள பண்டிதர் ம. செ. அலெக்ஸாந்தரின் குறிப்பில் இருந்து:
‘அந்த வகுப்பு இங்குள்ள கல்விமான்களும், தமிழார்வலர்களும், கவிஞர்களும், புதுக்கவிதைக் கவிஞர்களும் சேர்ந்த வகுப்பாக அமையவேண்டுமென மகாஜனக்கல்லூரி முன்னைநாள் அதிபர் பொன். கனகசபாபதி அவர்களின் வீட்டிலே அப்போதைய கனடா தமிழ் எழுத்தாளர் இணையச் செயலாளர் குரு அரவிந்தன் (2004) என்னைக் கேட்டார். அப்போதைய தலைவர் திருவாளர் சின்னையா சிவநேசன், கல்வியாளர் அ.பொ. செல்லையா, கவிஞர் இராசேந்திரம், திரு. சிவபாலு ஆசிரியர், பகிரதன், சண்முகராஜா போன்றோரும் கவிஞர் கந்தவனத்தையும், என்னையும் அழைத்துக் கேட்டதற்கிணங்க ஸ்காபுரோ சிவிக் சென்ரறில் கலந்துரையாடல் வகுப்பாகத் தொடங்கியது.’
கனடா சமவுரிமை இயக்கம் முன்னெடுத்த இலங்கையில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்யக் கோரும் போராட்ட நிகழ்வின் முதல் நிகழ்வாக அமைந்த ஊடகவியலாளர் மகாநாடு ஸ்காபுரே சிவிக் மண்டபத்தில் மாசி மாதம் 27ம் திகதி மாலை மூன்று மணியளவில் நடாத்தப்பட்டது. இலங்கையிலும் புலம்பெயர் ஜரோப்பிய நாடுகளிலும் இப்போராட்ட நடவடிக்கைகள் தெடர்ச்சியாக நடத்தப்பட்டுகொண்டிக்கும் இவ்வேளையில் புலம்பெயர் இலங்கையர் பெரும் தொகையாக வாழ்ந்து வரும் ரொறொன்ரோ நகரில் நடைபெற்றது.
கனடா சமஉரிமை இயக்கம் கனடாவில் ஒன்றரை வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வசந்தகாலத்தில் "யாவரும் கேளிர்" என்ற கலை நிகழவினை வெற்றிகரமாக நடாத்திய அமைப்பினர் தொடர்ச்சியாக உலகளாவிய முஸ்லிம் மக்கள் மேல் வலுத்துவரும் வெறுப்புணச்சியை எதிர்த்து பொதுகூட்டம் ஒன்றையும் நடாத்தியது. இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் இணையத்தள ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் பல சமூகசெயற்பாட்டாளரும் பங்குபற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் பல கேள்விகளை கேட்டு சமஉரிமை இயக்கத்தின் கொள்கைகளையும் புரிந்து கொண்டனர்.

கடந்த காலத்தின் உன்னதங்களுக்கு அல்லது நம்மால் உணரமுடியாத ஒன்றை நமக்காக பாதுகாத்து வைக்கும் எல்லாமே நமக்கு பொக்கிஷங்கல்தான். வரலாறு அந்த வகையில்தான் நமக்கு பொக்கிஷமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் பவா செல்லதுரை என்னிடத்தில் இப்படியான சில பொக்கிஷங்களை கொடுத்து வைத்தார். அதாவது தமிழ், மலையாளத்தின் முன்னணி எழுத்தாளர்கள் பலர் திருவண்ணாமலை முற்றம் நிகழ்வில் பங்கேற்ற ஒலிப்பேழைதான் அது. அதனை நவீன டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி முன்னமே தமிழ் ஸ்டுடியோவில் பதிவேற்றி இருந்தேன். சுராவின் குரலை அப்படித்தான் தமிழகம் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இடையில் பல்வேறு சிக்கல்களால் அது தொடர்ந்து நடக்காமல் போனது. தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று அத்தகைய ஒலி வடிவிலான எழுத்தாளர்களின் சந்திப்பை, அவர்களின் பேச்சை உங்களுக்கு கொடுக்கிறோம். இதனை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்ற நண்பர் தவநெறி செல்வன் பொருளாதார உதவி செய்தார். அவருக்கு தமிழ் ஸ்டுடியோவின் நன்றி.
முதலாவதாக எஸ். ராமகிருஷ்ணன், திலகவதி ஐபிஎஸ். அம்பை பங்கேற்ற முற்றம் நிகழ்வை கேட்டு மகிழுங்கள்.
கேட்க: http://thamizhstudio.com/Koodu/mutram_1.php
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அரசியல் கைதிகள் தமது விடுதலை கோரி போராடி வருகின்றனர். அவர்களது குடும்பத்தினரும் பல இடங்களில் போராடி வருகின்றனர். தேர்தல் காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையே தமது முதற் செயற்பாடா இருக்கும் என வாக்குறுதி அளித்து வாக்குகளை பெற்ற கூட்டமைப்பு முதல் மைத்திரி - ரணில் கூட்டு வரை அது பற்றி இன்று வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் கைதிகளின் விடுதலையினை பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாலும், விடுதலை செய்ய முடியாதவர்களாலும் எப்படி நாட்டில் எரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டடைய முடியும்?
அரசியல் கைதிகளின் உடனடி விடுதலைக்காக கனடாவில் சமவுரிமை இயக்கம் கனடா ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினையும், மக்கள் பகிரங்க கூட்டம் ஒன்றினையும் நாளை 27-2-2016 சனி அன்று ஒழுங்கு செய்துள்ளது. மிக அதிகளவிலான இலங்கைப் புலம்பெயர் சமூகம் ரொறன்ரொவில் இருப்பதால், இலங்கையிலுள்ள அனைத்து அரசியற்கைதிகளினதும் விடுதலையை வெற்றிகரமாகக் கோருவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பைக் கொண்டுள்ளது.

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் சினிமாவிற்கான இணைய மாத இதழின் பிப்ரவரி இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய கட்டுரைகள் ஆவணப்படுத்துதல் அடிப்படையில் பதிவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தவிர சிவாஜி பத்மினி போன்றோர்களுக்கு மேக்கப் மேனாக இருந்த தனக்கோட்டியின் நேர்காணல், நடிப்பிற்கான ஆர்வம் எப்படி வந்தது என்பது பற்றிய சிவாஜி எழுதியுள்ள கட்டுரை, சென்னை பிலிம் சொசைட்டி நடத்திய திரைப்பட ரசனை வகுப்பு குறித்த கட்டுரை, மருதநாயகம் படம் தொடக்க விழா பற்றிய கட்டுரை, இவையின்றி தொடர்களான ஜான் பெர்ஜரின் காணும் முறைகள் (தமிழில் யுகேந்தர்), வருநின் ஹாலிவூட் படங்கள் பற்றிய கட்டுரை, இலங்கை தமிழ் சினிமாவின் கதை ஆகிய கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. நண்பர்கள் அவசியம் கட்டுரைகளை வாசித்துவிட்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_38.html
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் சினிமாவிற்கான இணைய மாத இதழின் பிப்ரவரி இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய கட்டுரைகள் ஆவணப்படுத்துதல் அடிப்படையில் பதிவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தவிர சிவாஜி பத்மினி போன்றோர்களுக்கு மேக்கப் மேனாக இருந்த தனக்கோட்டியின் நேர்காணல், நடிப்பிற்கான ஆர்வம் எப்படி வந்தது என்பது பற்றிய சிவாஜி எழுதியுள்ள கட்டுரை, சென்னை பிலிம் சொசைட்டி நடத்திய திரைப்பட ரசனை வகுப்பு குறித்த கட்டுரை, மருதநாயகம் படம் தொடக்க விழா பற்றிய கட்டுரை, இவையின்றி தொடர்களான ஜான் பெர்ஜரின் காணும் முறைகள் (தமிழில் யுகேந்தர்), வருநின் ஹாலிவூட் படங்கள் பற்றிய கட்டுரை, இலங்கை தமிழ் சினிமாவின் கதை ஆகிய கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. நண்பர்கள் அவசியம் கட்டுரைகளை வாசித்துவிட்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_38.html
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இலங்கை - இந்தியா - பாக்கிஸ்தான் - பங்களாதேஷ் - நேபாளம் - பூட்டான் - மாலைதீவு - ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public Affairs) என்னும் தென்னாசிய விவகாரங்களுக்hகன அமைப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெல்பனில் தொடங்கியது.
பல்லின கலாசார நாடாக விளங்கும் அவுஸ்திரேலியாவில் இதுபோன்ற பல தேசிய அமைப்புகள் இயங்குகின்றன. பொருளாதாரம் - விளையாட்டு - வர்த்தகம் - அயலுறவு - ஒருமைப்பாடு - கல்வி - வர்த்தகம் - கலாசாரம் முதலான துறைகளில் மேற்குறித்த எட்டு தென்னாசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் பரஸ்பரம் கலந்துரையாடுவதற்கும் ஒன்றிணைந்து கருத்தரங்கு தகவல் அமர்வுகள் நடத்துவதற்காகவும் தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. இந்நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடியேறியிருப்பவர்கள் மத்தியில் இருக்கும் கலை இலக்கிய ஊடகத்துறை ஈடுபாடு மிக்கவர்களுக்காக முதல்தடவையாக ஒன்றுகூடலை நடத்த முன்வந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் எதுவித இலாபநோக்கமுமமற்ற அமைப்பாக பதிவுசெய்யப்பட்டுள்ள தென்னாசிய விவகாரங்களுக்கான இந்த அமைப்பு, எதிர்வரும் 27 ஆம் திகதி (27-02-2016) சனிக்கிழமை மெல்பனில்; இலக்கிய நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துள்ளது.
மெல்பனில் - Stirling theological college மண்டபத்தில் (40-60 Jackson Road, Mulgrave 3150 ) மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சி, நூல்களின் கண்காட்சியுடன் தொடங்கி கவிதா நிகழ்வுடன் இரவு 9.00 மணிக்கு நிறைவுபெறும். குறிப்பிட்ட எட்டுநாடுகளுக்கும் கலை இலக்கிய கவிதைப்பாரம்பரியம் இருக்கிறது. தமிழ் மக்கள் ஏனைய நாடுகளின் கவிதை முயற்சிகளை அறிந்துகொள்வதற்கும் அந்த நாடுகளைச்சேர்ந்தவர்கள் தமிழர்களின் கவிபுனையும் ஆற்றலை அறிந்துகொள்வதற்கும் ஏற்றவாறு நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அனைத்துலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் எதிர்வரும் மார்ச் 06 ஆம் தேதி (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு மெல்பேர்ண் பிரஸ்டன் நகர மண்டபத்தில் (Preston City Hall, Gower Street, Preston 3072) விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் முதல் முறையாக நடத்தவிருக்கும் அனைத்துலகப் பெண்கள் தின விழாவில் கருத்தரங்கு - கவியரங்கு - விவாத அரங்கு - நினைவரங்கு மற்றும், பெண்ணியச் சிந்தனையைத் தூண்டக்கூடிய வகையிலமைந்த “அசோகவனத்தில் கண்ணகி” என்ற நாடகமும் - அண்மையில் மறைந்த பெண்ணிய ஆளுமைகளான படைப்பாளிகள் அருண் விஜயராணி, தமிழினி சிவகாமி ஆகியோரின் ஞாபகார்த்த நினைவுரையும் இடம்பெறவுள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சயந்தனின் 'ஆதிரை' நாவல் பற்றிய உரையாடல் நிகழ்வு பற்றிய தகவலை அனுப்பியவர் நடராஜா முரளிதரன்.

'அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் - சொ. அ. டேவிட் ஐயா என்னும் டேவிட் ஐயா பற்றிய அறிமுக நூலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் திரு. அலெக்ஸ் வர்மா அவர்களிடமுள்ளன. நூலின் விலை $10 (கனடியன்). நூலினை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு:
அலெக்ஸ் வர்மா:
தொலைபேசி எண்: 416 857 9773
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அலெக்ஸ் வர்மாவுடன் (Alex Varma) முகநூலில் நட்பு பேணுவோர் அவரது உட்பெட்டி வாயிலாகவும் அவருடன் தொடர்பு கொள்ளலாம்.
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:
*டேவிட் ஐயா மற்றும் காந்தீயத்துடனான அனுபவப் பகிர்வு - மு. பாக்கியநாதன்
*காந்தீயத்தில் எனது நினைவுப் பதிவு (1979-1983) -ஜென்னி ஜெயச்சந்திரன்
*மனித நேயன் டேவிட் ஐயா! நினைவுகளும் பதிவுகளும் - பீ. ஏ. காதர்
*டேவிட் ஐயாவின் பக்கங்களில் ஒன்று -பீமன்
*நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்! - வ. ந கிரிதரன்
*டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவரின் செய்தியா? - நிலாந்தன்
*நினைவு மீட்டல் - இ. பூபாலசிங்கம்
*David Envisaged Human Emancipation Through Tamil Struggle - K. Sachithananthan
தகவல்: அலெக்ஸ் வர்மா

நிகழ்ச்சி நிரல்
பிரதம பேச்சாளர் உரை: "ஆவணப்படுத்தல்: ஓர் அறிமுகம் " அருண்மொழிவர்மன்
சிறப்புப் பேச்சாளர்கள் உரை: "எண்ணிம ஆவணப்படுத்தல்" - நற்கீரன்
"தமிழ்ச்சூழலில் ஆவணப்படுத்தலும், ஆவணப்படுத்தலின் அவசியமும்" - பொன் பாலராஜன்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 27-02-2016
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
3A, 5637, Finch Avenue East,
Scarborough,
M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.