அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்: ஆலோசனைக்கூட்டம் - வாசிப்பு அனுபவப்பகிர்வு

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 - 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neghbourhood House ( 36 - 42 Mackie Road, Mulgrave - Vic - 3170) மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், புதிய ஆண்டில் சங்கம் மேற்கொள்ளவுள்ள கலை - இலக்கிய நிகழ்வுகள் - மற்றும் இதர மாநில நகரங்களில் நடத்துவதற்கு உத்தேசித்துள்ள நிகழ்வுகள் பற்றிய ஆலோசனைக்கலந்துரையாடல் நடைபெறும்.
இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளில் வெளியான இரண்டு புதிய நாவல்கள் மற்றும் இரண்டு புதிய சிறுகதைத்தொகுதிகள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் இடம்பெறும். வாசிப்பு அனுபவப்பகிர்வில் இடம்பெறும் நூல்கள்
1. பொக்ஸ் -- Box ( நாவல்) ஷோபா சக்தி
2. நிலவு குளிர்ச்சியாக இல்லை - (சிறுகதைத்தொகுதி ) - வடகோவை
வரதராஜன்
3. ஆயுதஎழுத்து -- ( நாவல்) - சாத்திரி
4. கோமகனின் தனிக்கதை -- ( சிறுகதைத்தொகுதி ) கோமகன்
கருத்துரை -- போருக்குப்பின்பான ஈழத்து இலக்கியவளர்ச்சி - திரு. சி. வன்னியகுலம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


‘1824ஆம் ஆண்டுக்குப்பின் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்தபோது பட்ட துயரங்களை இன்று ஏழாவது தலைமுறையினரும் அனுபவித்துக்கொண்டிருக்கும் போக்கு மிகவும் கவலை தரும் விடயமாகும். மிகக் குறைந்த ஊதியத்தைப் பெறும் பிரஜைகளாக இன்றும் காணப்படும் அவர்களின் வாழ்க்கைநிலை இருப்பிடம், போசாக்கின்மை, சுகாதார வசதிகள், கல்வி போன்றவற்றால் மிகவும் பாதிப்படைந்து காணப்படுகின்றனர். ஆண்களைவிடப் பெண்களே உடற்பலத்தை இழந்து வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிகளில் முயற்சிசெய்து உழைக்;கும் சக்திகளாகத் திகழ்கின்றார்கள் ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் அவர்களுக்கு கிடைக்காததால் தமது குடும்பத்தை கவனிக்கவோ போசாக்கு நிறைந்த உணவை தமது குழந்தைகளுக்கு வழங்க முடியாது மிகவும் துன்பநிலையில் காணப்படுகின்றனர்’ என்று இலங்கை பண்டாரவளையிலிருந்து வருகை தந்திருந்த அருட்தந்தை கீதபொங்கலன் அவர்கள் ‘லண்டன் தமிழர் தகவல் நிலையத்தில்’ இடம்பெற்ற தமிழ்ப்பெண்கள் வலுவூட்ட ஒன்றுகூடலில் கலந்து பேசியபோது தனது ஆய்வுரையில் தெரிவித்தார்.



முன்னைநாள் யூனியன் கல்லூரி அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்களின் வன்னியில் இறுதிக்காலத்தில் நடந்து முடிந்த வரலாற்றை ஒட்டியதாகப் போர்க்கால நாவல் "வன்னி".
அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடைபெற்றுவரும் தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் ஒரே மண்டபத்தில் ஆறு அரங்குகளாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. படைப்பு இலக்கியம் - நடனம் - ஓவியம் - ஊடகம் - சமூகம் - பண்பாடு முதலான துறைகளில் தேடலையும் சிந்தனையையும் மேம்படுத்தும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள 15 ஆவது எழுத்தாளர் விழா அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் எழுத்தாளர் திரு. எம். ஜெயராம சர்மா அவர்களின் தலைமையில் மெல்பனில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலின் பீக்கொக் மண்டபத்தில் எதிர்வரும் 14-11-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகிறது. நூல்களின் கண்காட்சி அரங்கு - இலக்கிய கருத்தரங்கு - நூல் விமர்சன அரங்கு - கவியரங்கு - விவாத அரங்கு - மகளிர் அரங்கு முதலான தலைப்புகளில் நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.
இன்று நவம்பர் 7, 2015 அன்று தமிழ் இலக்கியத்தோட்டம் மற்றும் காலம் சஞ்சிகை ஏற்பாட்டில் அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகரான வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவாக அஞ்சலிக்கூட்டமொன்று நடைபெற்றது. எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முனைவர் நா.சுப்பிரமணியன், 'உரையாடல்' நடராஜா முரளிதரன், 'காலம்' செல்வம், முனைவர் வெங்கட்ரமணன், எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் மற்றும் தலைமை வகித்த என்.கே. மகாலிங்கம் ஆகியோர் வெங்கட் சாமிநாதன் பற்றிய தமது கருத்துகளை முன் வைத்தனர்.
கவிக்கோ அப்துல்ரகுமான் என்ற மாபெரும் கவிஞரின் பவளவிழா சென்னையில் சென்ற 26 & 27 ஆம் தேதிகளில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க
அனைத்துலக நீதிமன்ற குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப் போராட்டம் நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.



நண்பர்களுக்கு! எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி சனிக்கிழமை மாலை அண்மையில் மரணமடைந்த டேவிட் ஐயா, கவிஞர் திருமாவளவன் ஆகியோர் பற்றிய நினைவுப் பகிர்வும் நூல்கள் வெளியீடும் இலண்டனில் நடைபெற உள்ளது.
நண்பர்களே, அக்டோபர் மாத பேசாமொழி இணைய இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யா பற்றிய யமுனாவின் கட்டுரை, தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவில் பி.கே. நாயர் பேசியதன் தமிழ் வடிவம், இயக்குனர் புவனாவின் நேர்காணல், கோர்ட் திரைப்பட இயக்குனரின் முக்கியமான நேர்காணல், தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்ட 15 சிறந்த திரைப்படங்களின் பட்டியல் என இந்த இதழும் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளை பகிரவும்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









