கவிக்கோ பவளவிழா !
கவிக்கோ அப்துல்ரகுமான் என்ற மாபெரும் கவிஞரின் பவளவிழா சென்னையில் சென்ற 26 & 27 ஆம் தேதிகளில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க
நிகழ்வாக மிகச்சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அரசியல், இலக்கியம், சினிமா, கலை, இசை, சமயம், இயல், பத்திரிக்கை & ஊடகம் என அனைத்து துறைகளையும் சார்ந்த தலைவர்கள், பிரபலங்கள், படைப்பாளிகள், கலைஞர்கள். அறிஞர்கள், சமயத் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசை இயக்குனர்கள், திரைத்துறை படைபாளிகள் மற்றும் கலைஞர், துணைவேந்தர்கள், நீதியரசர்கள், பேராசிரியர்கள், பத்திரிக்கையாசிரியர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள், பிரபலங்கள் (இலங்கை முதல் அமெரிக்கவரை , மஸ்கட்டிலிருந்து நான்) என அனைவரும் ஓரு குடையின்கீழ் வந்து பங்கேற்று சிறப்பித்த நிகழ்வு என அனைவரும் பாராட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது.
மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் அனைத்து மதங்களின் பிரபலங்கள் ஆகியோரை ஒரேமடையில் அடுத்தடுத்து அமரவைக்க முடியும் என்கிற கற்பனைகெட்டாத சாதனையை நமது ‘தமிழ்’ அதாவது கவிக்கோ எனும் ‘கவிதைத் தமிழ்’ சாதித்திருக்கிறது.
கலைஞர், வீரமணி, வைகோ, தமிழிசை, காதர்முகைதீன், திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ், நல்லகண்ணு, பழகருப்பையா, டி.கே.ரங்கராஜன் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரபலங்களும் வந்து கலந்து சிறப்பித்த காட்சி உண்மையில் ஒரு அதிசயமும், அற்புதம் தான். அதேபோல் சுகி.சிவம், பாலமுருகனடிமை சுவாமிகள், கஸ்பர், தேங்கை ஷர்புதீன் என மும்மதத்தைச் சார்ந்த மதப்பெரியவர்களும் மேடைய அலங்கரித்து கவிக்கோவுக்கு வாழ்த்து தெரிவித்ததும் மற்றொரு அருமையான பதிவு,

அனைத்துலக நீதிமன்ற குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப் போராட்டம் நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.




நண்பர்களுக்கு! எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி சனிக்கிழமை மாலை அண்மையில் மரணமடைந்த டேவிட் ஐயா, கவிஞர் திருமாவளவன் ஆகியோர் பற்றிய நினைவுப் பகிர்வும் நூல்கள் வெளியீடும் இலண்டனில் நடைபெற உள்ளது.
நண்பர்களே, அக்டோபர் மாத பேசாமொழி இணைய இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யா பற்றிய யமுனாவின் கட்டுரை, தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவில் பி.கே. நாயர் பேசியதன் தமிழ் வடிவம், இயக்குனர் புவனாவின் நேர்காணல், கோர்ட் திரைப்பட இயக்குனரின் முக்கியமான நேர்காணல், தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்ட 15 சிறந்த திரைப்படங்களின் பட்டியல் என இந்த இதழும் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளை பகிரவும்.


அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.




அவுஸ்திரேலியாவில் வதியும் மிருகவைத்தியரும் எழுத்தாளருமான டொக்டர் நடேசன் கனடாவுக்கு வருகைதந்துள்ளார். சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள் முதலான துறைகளில் சில நூல்களையும் வரவாக்கியிருக்கும் நடேசனுடனான சந்திப்பு கலந்துரையாடல் எதிர்வரும் 20 -09-2015 ஆம் திகதி ஞாயிறு கனடாவில், 430 Mayfair on the Green..,Mclivin Avenue , Scarborough , Ontario முகவரியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும். இந்தக் கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்கள் திருவாளர்கள் தேவகாந்தன், என். கே. மகாலிங்கம் ஆகியோர் கலந்துகொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கலை இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு: திரு. சபேசன் 4168011654 | e mail: 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









