என்.சரவணனின் இரு நூல்கள்: உரையாடல் அரங்கு!
- தகவல்: எம்.பெளசர் -

- தகவல்: எம்.பெளசர் -
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.
கருத்துரை
இலங்கையிலிருந்து வருகைதந்துள்ள எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் செங்கதிர் கலை, இலக்கிய இதழின் ஆசிரியருமான திரு. 'செங்கதிரோன்' த. கோபாலகிருஷ்ணன் "கிழக்கிலங்கை கலை, இலக்கியச் செல்நெறி" என்னும் தலைப்பில் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து அவருடனான கலந்துரையாடல் இடம்பெறும்.
வாசிப்பு அனுபவப்பகிர்வு
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கம் தொடர்ச்சியாக நடத்திவரும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் இம்முறை நான்கு நூல்கள் இடம்பெறுகின்றன.
1. வானத்தைப்பிளந்த கதை ( செழியன் எழுதியது) ஈழப்போராட்ட நாட்குறிப்பு - விமர்சனஉரை: எஸ். கிருஷ்ணமூர்த்தி.
2. நைல்நதிக்கரையோரம் ( நடேசன் எழுதியது) பயண இலக்கியம் - அறிமுகவுரை சாந்தி சிவக்குமார்.
3. பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - (பெருமாள்முருகன் எழுதியது ) நாவல் - மதிப்பீட்டுரை : நடேசன்.
4. காட்டில் ஒரு மான் - (அம்பை எழுதியது) சிறுகதைத்தொகுப்பு அறிமுகவுரை: விஜி இராமச்சந்திரன்
திருப்பூர் குமரன் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் “ சூழல் அறம் “ என்றத் தலைப்பில் கருத்தரங்கம் புதன் அன்று நடைபெற்றது. பேரா. கண்ணகி ( தமிழ்த்துறைத்தலைவர் ) தலைமை வகித்து திருப்பூர் குமரன் பிறந்த தினத்தையொட்டி குமரன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். முன்னதாக அவரின் படத்திற்கு மாலை அணிவித்து நினைவு கூறப்பட்டது. கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் “ சூழல் அறம் “ – சுற்றுச்சூழலும் உணவும் என்றத் தலைப்பில் பேசினார் . அப்போது இளைய தலைமுறையினரை பாதிக்கும் துரித உணவும், உடல் நலமும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவர் தனதுரையில் குறிப்பிட்டவை:
"இளைய தலைமுறையினரை பாதிக்கும் துரித உணவும் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை. துரித, ஜங்க் உணவுகள் உடல் ரீதியான பாதிப்புகளையும், உளவியல் பாதிப்புகளையும் தொடர்ந்து தருகின்றன. மூளையும், நாக்கும் அதே வகை சுவை உணவை தொடர்ந்து வேண்டுகின்றன. நல்ல சுவைக்காகச் சேர்க்கப்படும் அதிக அளவிலான ரசாயன உப்பு, செயற்கை இனிப்பு, செயற்கை நார்சத்து, ரசாயன கலவைகள், கொழுப்பு வகைகள் என்று அவை உணவில் கலந்து விட்டன. இவ்வகை அதீத சுவைப் பொருட்கள் ரத்தத்தில் குளுகோசின் அளவைக் கூட்டியும் குறைத்தும் விளையாட்டு காட்டுவதுண்டு. இது மன அழுத்தம், மனச் சிதைவிற்கும் உடல் உபாதை மீறி கொண்டு செல்கிறது. இவ்வகை உணவுகளைத் தொடர்ந்து உண்ணும் ஒருவர் மிக எளிதாக சக்கரை நோய், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்.
பெரும் சந்தையும், வணிக அம்சங்களும் கொண்ட இவ்வகை உணவு பரிமாறலில் பல நூற்றாண்டின் தமிழர்களின் வாழ்வியல் முற்றிலும் மறுக்கப்பட்டு வருவதை காண இயலும். தமிழகத்தின் பண்டைய ஐவகை நிலப் பிரிவில் குறிஞ்சி (கனி, கிழங்கு, தேன், தினை, விலங்குகளின் ஊன்), முல்லை (பால், தயிர், நெய்), ஆட்டிறைச்சி சோளம்), மருதம் (நெல்லரிசி, வாழைப்பழம் ஆடு கோழி இறைச்சி, பத நீர், கள்), நெய்தல் (மீன், ஆமை, நண்டு இறால்) குறிஞ்சி (தேன்), முல்லை (பால் நெய்). பாலை இவற்றை விற்கும் சந்தையானது.ஆகியவற்றில் கிடைத்த வெவ்வேறு பொருட்கள் மக்களுக்கு தினசரி உணவாகவும், இவற்றை பண்டமாற்றாக்கி வேறு உணவுகள் பெறவும் ஏதுவாகின.
சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் 'கடவுச்சீட்டு' மலேசியப்பின்னணி நாவலை பெ.இராஜேந்திரன் (தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்) அவர்கள் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கக்கட்டிடத்தில்- கோலாலம்பூர் ஜலான் ஈப்போவில் - நடைபெற்ற விழாவொன்றில் வெளியிட்டார். எழுத்தாளர்கள் அர்ஜினன், ஈப்போ முல்லைச் செல்வன் போன்றோர் பெற்றுக்கொண்டனர். நாவலை வெளியிட்டு பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் அவர்கள் பேசினார். அவர் தனதுரையில் "சுப்ரபாரதிமணியன் தன் தொடர்ந்த நாவல் செயல்பாடுகளில் அவரின் 15 வது நாவலாக 'கடவுச்சீட்டு' மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது. அவரின் மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இதைத் தந்திருக்கிறார்.அதுவும் கோலாலம்பூர்-செந்தூல் பகுதியில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையை இந்நாவல் சொல்லுகிறது. ஒரு வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணின் கனவு சிதைந்து போவதை இந்நாவல் காட்டுகிறது. மலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின் யதார்த்ததை இதில் வெளிக்காட்டியிருக்கிறார். அகிலனின் 'பால் மரக்காட்டினிலே' அறுபதில் இருந்த மலேசியா தமிழ்ச்சமூகத்தை பிரதிபலித்தது என்றால் சுப்ரபாரதிமணியனின் நாவல் இப்போதையச் சூழலில் எழுதப்பட்டிருக்கும் படைப்பு என்ற சிறப்பு பெறுகிறது ” என்றார். சுப்ரபாரதிமணியன் ஏற்புரை வழங்கினார்.

தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அவுஸ்திரேலியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 29 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 11-11-2017 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் நடைபெறும். நிதியத்தின் தலைவர் திரு.விமல். அரவிந்தன் தலைமையில் நடைபெறவுள்ள 29 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் நிதியத்தின் உறுப்பினர்களின் ஒன்றுகூடலும் தகவல் அமர்வும் இடம்பெறும். இலங்கையில் நீடித்த போரில் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிதியம், இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவியுள்ளது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிதியத்தின் உதவியினால் பல்கலைக்கம் பிரவேசித்து, பட்டதாரிகளாகியிருப்பதுடன் மேலும் பல மாணவர்கள் அரச மற்றும் தனியார் துறைகளிலும் பணியாற்றுகின்றனர். மேலும் பல மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிதியம் உதவவேண்டியிருப்பதனால் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்வதற்காகவும் 29 ஆவது ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் தகவல் அமர்வும் ஓழுங்கு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு: இக்கூட்டத்தில் இராப்போசன விருந்தும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதால் கலந்துகொள்ள விரும்பும் நிதியத்தின் உறுப்பினர்களும் அன்பர்களும் தமது வருகையை தயவுசெய்து தாமதமின்றி உறுதிப்படுத்தவும். இந்த ஒன்றுகூடல் இராப்போசன விருந்தில் கிடைக்கப்பெறும் நன்கொடைகள், கல்வி நிதியத்தின் வளர்ச்சிக்கு வழங்கப்படும்.
‘நடனத்திற்கு மிகவும் பொருத்தமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து வார்த்தைகளை உணர்ந்து அந்த மனநிலைகளை அபிநயத்தால் வெளிக்காட்டுவது குருவுக்கும் சீடருக்குமான மரபுசார் நுட்பமாகும். இத்தகைய சாஸ்திரீய முறைகளை மிக அழகாகவே குருவிடமிருந்து பயின்று புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், கீர்த்தனம், பதம், அஷ்டபதி, தில்லானா போன்ற அத்தனை உருப்படிகளிலும் செல்வி பிரீத்தி பவித்திரா மகேந்திரன் வித்தியாசமான தனது கலை நுட்பங்களை வெளிக்காட்டியிருந்தார்’ என்று அண்மையில் லண்டன் ‘பெக் தியட்டரில இடம்பெற்ற பரதநாட்டிய அரங்கேற்றத்தின்போது பிரதம விருந்தினாராக வருகை தந்திருந்த ஸ்ரீமதி கீதா உபத்தியா அவர்கள் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் பேசுகையில் ‘நளினமும் உடல்வாகும் நிரம்பப்பெற்ற நாட்டியக் கலாஜோதி பிரீத்தி மகேந்திரனின் நடன வெளிப்பாடுகள், ஸ்ரீ மாணிக்கம் யோகேஸ்வரனின் ராகத்துடனும் சாகித்தியத்துடனும் கச்சிதமாகவே பொருந்தி, பக்கவாத்தியக் கலைஞர்களான ஸ்ரீ பிரதாப் ராமச்சந்திரனின் மிருதங்கத்தோடும், ஸ்ரீ ஞானசுந்தரத்தின் வயலின் இசையோடும், ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதனின் புல்லாங்குழல் இசையுடனும் இணைந்து பார்வையாளர்களை கட்டிப்போட்டது என்றால் மிகையாகாது எனத் தெரிவித்தார். சர்வதேச ரீதியாக அறியப்பட்ட புகழ்பெற்ற நடன ஆசிரியையான ஸ்ரீமதி உஷா ராகவனை குருவாகப் பெற்ற செல்வி பிரீதி மகேந்திரனின் நடனம் வர்ணிக்கத் தக்க வசீகரமான முறையில் அவரது முதலில் அரங்கேறும்; அரங்கேற்றம் போன்றல்லாது, நாட்டியத்தில் நீண்ட அனுபவம் கொண்ட நர்த்தகியாகத் திகழ்ந்தார் என்றும் பாராட்டினார். பிரீதி மகேந்திரனின் சில நடனங்களுக்கு அவரின் அண்ணன் டாக்டர் மேவின் மகேந்திரனும் மிருதங்கத்தை வாசித்து மெருகூட்டியமை மிகவும் சிறப்பைக் கொடுத்தது’ என்றும் மேலும் வியந்து பேசியிருந்தார்.

நான்கு நூல் அறிமுக நிகழ்வு: Scarborough Civic Centre, 150 Borough Dr, Scarborough, ON, M1P 4N7 முகவரியில் ஒக்ரோபர் 28, 2017 சனிக்கிழமை, பி.ப. 2:30 முதல் பி.ப. 5:02 வரை இடம்பெறவுள்ளது.
தகவல்: நவம் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இடம்: 08 Shadlock St. Unit 5A Markham, On. L3S 3K9 (On Steels Ave E between Middlefield Rd and Markham Road)
திகதி: ஞாயிறு, ஒக்டோபர் 22, 2017
நேரம்: பி.ப 3.00 – 5.30
ஆர்வமுள்ள அனைவரையும் நூல் வெளியீட்டு நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து தேனுகாவுடனான கருத்துரையாடலிலும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நூலுக்கான குறைந்தபட்ச அன்பளிப்பு: $ 40.00
யாழ். இந்துக் கல்லூரிச் சங்கம் - கனடாவும் நூலக நிறுவனமும்
தொடர்பு: அருண்மொழிவர்மன்: 416 854 6768; தயாநிதி: 647 298 1894; பிரேமச்சந்திரா 647 779 3502
நிகழ்ச்சி நிரல்
(1) உலகம் பலவிதம் நூல் அறிமுகமும் வெளியீடும் (ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் இந்து சாதன எழுத்துக்கள், பதிப்பாசிரியர் சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார், யாழ் இந்துக் கல்லூரி 125ம் ஆண்டுவிழா வெளியீடு)
வரவேற்புரை: அருண்மொழிவர்மன்
தலைமை உரை: பேராசிரியர் சேரன்,
நூல் வெளியீடு
பேச்சாளர்கள்:
1.பேராசிரியர்,நா.சுப்பிரமணியன்: ம .வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் நாவல்களும் தமிழ் உரைநடையும்
2. க.சண்முகலிங்கம். சமூகவியலாளர், முன்னாள் தமிழ் விவகார,,இந்து கலாசார அமைச்சின் செயலாளர், இலங்கை:
சமூகவியல்,,பார்வையில் ம .வே .திருஞானசம்பந்தப்பிள்ளையின் படைப்புகள்
3.,கலாநிதி மைதிலி தயாநிதி: காலனியம்,காலனிய எதிர்ப்பு பின்னணியில் ம.வே.,திருஞானசம்பந்தப்பிள்ளையின் பத்திகளில் பெண்குறித்த கருத்துக்கள்
4. ஆ. சிவநேசச்செல்வன். முன்னாள் ஆசிரியர்,வீரகேசரி,தினக்குரல்: பழைய இந்து சாதனம் இதழ்களை எவ்வாறு காப்பகப்படுத்தினோம்?
5. வ.ந.கிரிதரன். எழுத்தாளர், ஆசிரியர் ,பதிவுகள் இணைய இதழ்: இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி(ம .வே . திருஞானசம்பந்தப்பிள்ளை படைப்புகளை முன் வைத்து)
6. எஸ்.கே.விக்னேஸ்வரன். முன்னாள் முகாமைத்துவ ஆசிரியர், சரிநிகர் வார இதழ்: பத்திரிகையாளராகவும் , பத்தி எழுத்தாளராகவும் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை
கருத்துப் பரிமாற்றம்
நன்றி உரை,–,அருண்மொழிவர்மன்

-toronto tamilsangam <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>

தகவல்: பிறேமச்சந்திரா

எனது அன்பின் தமிழ் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ள தமிழ் எழுத்தாளர்களே. இந்த தொகுப்பில் நீகள் எழுதிய முதுமையோடும் உங்கள் வாழக்கை அனுபவத்தோடும் இனைந்த சிறு கதைகள் இருப்பின் ஒரு சிறந்த கதையை எனக்கு அனுப்பவும். கதை 500 வார்த்தைகளுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. இது பீல் முது தமிழர் சங்கதின் அனுமதியோடு வெளிவரும். இந்த நூல் விற்று வரும் நிதி வெளயீட்டு செலவு போக 50 விகிதம் சங்கததின் நூலகத்துக்குப் போகும்
Pon Kulendiren
3927 Beacham Street
Mississauga, ON, L5N 6S9
Canada
289 652 9185
647 937 1527
www: CretorPon.com | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கவிதைகள் சார்ந்து தமிழ் மொழியிலும், பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் தொடராக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை கவிதைகளாக, கவிதை பற்றிய ஆய்வுகளாக, கவிஞர்கள் சேர்ந்த தொகுப்புகளாக, கவிஞரின் தனி நூலாக என பல்வகைத் தளங்களில் உலாவருகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்மொழிக்கு இன்னொரு புதிய வரவாக '1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூல் கிடைக்கின்றது. பல்வேறு நாடுகளினைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான கவிஞர்களின் கவிதைகளினை ஒரே நூலில் காணும் வாய்ப்பினை வழங்கும் நூலே '1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூலாகும்.
2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த நூலுக்கான கவிதைகள் பெறுவது தொடர்பான செய்திகள் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றில் வெளிப்படுத்தப்பட்டன. உலக அளவில் ஆகக்குறைந்தது 25 நாடுகளின் கவிஞர்களையாயினும் இணைப்பதே இப்பணியின் முதல் இலக்கு எனினும் பணி தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே பாரிய வரவேற்பு உலகெங்கிலும் இருந்து கிடைத்தது. ஒவ்வொரு தேசங்களில் இருந்தும் கவிதைகளினை பெறும்பொருட்டு அந்தந்த தேசங்களுக்கு 'செயலாற்றுநர்' எனும் பணியில் பலர் ஈடுபட்டனர். இலங்கை, இந்தியா போன்ற தேசங்களுக்கு மாவட்ட ரீதியாகவும், மாநில ரீதியாகவும் செயலாற்றுநர்கள் இயங்கினர். செயலாற்றுநர்களின் தீவிரமான முயற்சியினால் விரைவாகவே கவிஞர்கள் நூலுடன் இணைந்துகொள்ளத் தொடங்கினர். குறிப்பாகச் சொல்வதென்றால் இந்தியா தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களின் கவிஞர்களும் இப்பெருநூலில் இடம்பெறுகின்றனர். இலங்கையின் அனைத்துப் பிரதேச கவிஞர்களும் பெருநூலுக்கு கவிதை அளித்துள்ளனர்.
'1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூலில் 32 நாடுகளின் 1098 கவிஞர்கள் இடம்பெறுகின்றனர். நூலின் மொத்தப் பக்கங்கள் 1861 ஆகும். இப்பக்கங்கள் ஏ4 தாள் அளவு கொண்டவை. நூலொன்றின் மொத்த நிறை 04.415 கிலோகிராம் ஆகும். நூலினை வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகம் வெளியிடுகின்றது.
இலங்கையின் மூத்த கவிஞர்கள் என சொல்லத்தக்கவர்கள் பலரும் பெருநூலினை அலங்கரிக்கின்றனர். சேரன், சோ.பத்மநாதன், எம்.ஏ.நுகுமான், அனார் என இப்பட்டியல் நீள்கின்றது. இந்திய அளவில் மூத்த, இளைய, சினிமாசார் கவிஞர்கள் என பலரும் நூலில் உள்வாங்கப்பட்டனர். அப்துல் ரகுமான், வைரமுத்து, கலைஞர் கருணாநிதி, கமல்ஹாசன், அறிவுமதி, பா.விஜய், தாமரை என யாவரும் இப்பெருநூலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். நூலின் பின் அட்டைக்குறிப்பினை தமிழுலகு அறிந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வரைந்திருக்கின்றார்.
நூலில் 12 வயதுடைய பிள்ளைக்கவி முதல் தொண்ணூறு வயது கடந்த கவிஞர்கள் வரையும் இடம்பெற்றுகின்றனர். இந்தியா தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தவிர புதுடில்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களின் கவிஞர்களும் நூலில் இடம்பெறுகின்றமை சிறப்பு.

இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு விழாவும் முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.15 மணிக்கு அவுஸ்திரேலியா மெல்பனில், பிரஸ்டன் நகர மண்டபத்தில் ( Preston City (Shire) Hall - Gower Street, Preston 3072) நடைபெறும். 'சொல்லவேண்டிய கதைகள்' யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழின் புதிய வெளியீடாகும். இந்நூல் முருகபூபதியின் 21 ஆவது நூல் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரஸஞானி ஆவணப்படம் - எண்ணமும் எழுத்தும் : எழுத்தாளர் செல்லமுத்து கிருஷ்ணமூர்த்தி. ஒளி, ஒலிப்பதிவு, தயாரிப்பு: கலை, இலக்கிய ஆர்வலர் மூர்த்தி. பின்னணிக்குரல் வானமுதம் வானொலி ஊடகவியலாளர் நவரத்தினம் அல்லமதேவன்.
முருகபூபதி வீரகேசரியில் பணியாற்றிய காலப்பகுதியில் வாரவெளியீட்டில் ரஸஞானி என்ற புனைபெயரில் இலக்கியப்பலகணி என்ற பகுதியில் தொடர்ந்து பத்திக்கட்டுரைகள் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. திருமதிகள் ஜெஸி ரவீந்திரன், சாந்தநாயகி கிருஷ்ணமூர்த்தி, பவானி கிருஷ்ணமூர்த்தி, சித்ரா லயனல் போப்பகே, கமிலா ஹனிஃபா, யாழ். இந்துக்கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் விக்ரோரியா கிளையின் தலைவர் திரு.' லயன்' சக்தி கிருஷ்ணபிள்ளை, மூத்த கல்விமான் யூசுப் முஸ்தபா, கலாநிதி மு. ஶ்ரீ கௌரிசங்கர் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைப்பர். இலங்கையின் மூத்த எழுத்தாளர் (அமரர்) மருதூர்க்கனியின் மகள் மருத்துவ கலாநிதி (திருமதி) வஜ்னா ரஃபீக், தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழா, செல்வி மோஷிகா பிரேமதாசவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும். செல்வி ஹரினி ஶ்ரீதரன் தமிழ்வாழ்த்துப்பாடுவார். திருமதிகள் கலாதேவி பாலசண்முகன், ரேணுகா தனஸ்கந்தா, சாந்தி சிவக்குமார், கலாநிதி கௌசல்யா அந்தனிப்பிள்ளை ஆகியோர் நூல் விமர்சனவுரை நிகழ்த்துவர்.

- தகவல்: க.பாலேந்திரா

வணக்கம், தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.
கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம். ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம். கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம். போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும். மொத்தம் மூன்று படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மூன்றும் எங்களது நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவது. அனைத்திற்கும் தலா 1000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தகவல்: முனைவர் மு.இளங்கோவன்

இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டுநிகழ்வும் முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும் 30-09-2017 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மெல்பனில், பிரஸ்டன் நகர மண்டபத்தில் ( Preston City (Shire) Hall - Gower Street, Preston 3072) நடைபெறும். கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு:
திருமதி மாலதி முருகபூபதி , திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
0404 659 983
0402 418 304
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அன்புடையீர், வணக்கம்! எழுத்தாளர் கி. ரா.வின் 95-ஆவ்து பிறந்த நாள் விழா 16 செப்டெம்பர் 2017, சனிக்கிழமை அன்று காலை 9 முதல் இரவு 9 வரை புதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் நடைபெறவுள்ளது. அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.அனைவரும் வருகை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
அன்புடன்,
பா.செயப்பிரகாசம் | க.பஞ்சாங்கம்,| சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
‘திருநாவுக்கரசு சிறிதரன் (சுகு) அவர்களின் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக...’ என்ற நூல் விடுதலை சுவர்க்க பூமிக்காக ஏங்கும் அவரது கனவின் வெளிப்பாடாகும். ஒரு வன்முறையற்ற பூமியைநோக்கி, படுகொலைகளைக் களைந்து சமூக சௌஜன்யத்துடன் வாழும் சூழலை அவாவிய கனவு அவருடையது. இனப்பிரச்சினைக்கான தீர்வினை நடைமுறையில் நின்று நிதானமாய்ப் பரிசீலிக்கும் சிறிதரன் தொடர்ந்தும் தன் இலட்சியப்பாதையில் தொய்வின்றிப் பயணம் செய்து வருகின்றார். கடந்த முப்பது ஆண்டு கால யுத்தப் பேரழிவினை, மனத்தடைகளைக் களைந்து பார்ப்பதற்கான ஒரு கைவிளக்காக இந்த நூல் திகழ்கிறது.
இலங்கை அரசும், இராணுவமும், விடுதலைப்புலிகளும் ஏற்படுத்திய அவலங்களை அவர் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இத்துணை மனிதப் பலிகளை நிறுத்தி, 13ஆவது சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், தமிழர்கள் பெற்றிருக்கக்கூடிய நன்மைகள் அதிகமாகவே இருந்திருக்கும் என்பதை இந்த நூல் தெளிவாக வெளிப்படுத்துகிறது. போலியான பிரகடனங்களின் பின்னால் செல்வதைவிடுத்து சிறிதரன் நெறிப்படுத்தியிருக்கும் அரசியல் பாதை நடைமுறை சார்ந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை’ என்று அரசியல் விமர்சகர் மு.நித்தியானந்தன் லண்டனில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்தார்.
‘திரு. சிறிதரனின் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக ... என்ற தலைப்பு எங்கள் தமிழ் சமுதாயத்தின் மிகப் பிரமாண்டமான மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒரு நம்பிக்கையில் பிறந்த கருத்துக்களின் தொகுப்பே என்று நினைக்கிறேன். இந்த நூலில் இலங்கையில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் இழந்துவிட்டவற்றை சொல்லியடங்காத துயருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஒரு புதிய முற்போக்கான தலைமுறையை எதிர்பார்ப்பதுää தமிழ் மக்களின் அரசியலுடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக்கொண்ட சுகுபோன்ற தன்னலமற்றவர்களிடம் இருந்து துளிர்ப்பது யதார்த்தமானதாகும்’ என்று பிரபல நாவலாசிரியை ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தனது உரையின்போது தெரிவித்தார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.