மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! – பகுதி 3 - ஜோதிகுமார் -

1
உலகமே நடு நடுங்கிய, அமெரிக்காவின், தேசிய செயலாளர், அந்தனி பிளிங்கன் (2021-2025), ரஷ்ய வெளிநாட்டமைச்சர் லெப்ரோவை, சந்திக்கக் கோரியபோது, லெப்ரோவ் அதனை மறுத்து விட்டார் என்ற செய்திகள் வெளிவந்திருந்தன. உலகத்தைத் திகில்கொள்ளச் செய்த விடயம் இது. கிட்டத்தட்ட முதல் தடவையாக, இவ்வித மறுப்பானது, இவ்விரு நாடுகளுக்குமிடையே எழுவதாய் இருந்தது. “காசா-உக்ரைன்” படுகொலைகளுக்குத் தலைமை பொறுப்பு வகித்தவர் அந்தனி பிளிங்கன் என நியுயோர்க் டைம்ஸ் கோடிட்டிருந்தது (18.01.2025).
பிரதம மந்திரிகளை, தான் நினைத்தாற்போல் தனது பிரமாண்ட விமானம்தாங்கிக் கப்பல்களுக்குள் தள்ளி, அவர்களை அப்படியே முக்கி எடுத்து, பயமுறுத்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்த அமெரிக்காவின் வரலாற்றில், இப்படி ஒரு அவமானமா என விமர்சகர்கள் போர்க்கொடி உயர்த்தி நின்றனர். ஆனால், லெப்ரோவும் இதனுடன் நிறுத்தினார் இல்லை: “அணுவாயுத பிரயோகிப்புக்கான, சிவப்புப் பொத்தானை அழுத்த வேண்டிய தருணத்தில் நாம் யாருடனும் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை” என அவர் கூறியது ஒருபுறம் முகத்தில் அறைந்தது போல் இருந்தாலும், மறுபுறம், உக்ரைன் போரின் அல்லது உலக முகத்தின் மாறுதல்களை இது எமக்கு எடுத்துரைப்பதாக இருந்தது. (21.09.2024).
2
இதேதினங்களில்தான், ரஷ்ய ராணுவமானது, உக்ரைனிய போர்முனையில் பெருமளவு வெற்றி பெற்று முன்னேறியும் இருந்தது. இந்நாளிலிருந்து, கிட்டத்தட்ட, நான்கு மாதங்களுக்குள்ளாகவே, (மூன்று வருட காலப் போரில்) 97,000 உக்ரைனிய போர் வீரர்களை, கர்க்ஸ் பகுதியில் வைத்து, கொன்றொழித்து இருக்கின்றோம் என புட்டினும் அறிவிக்க நேர்ந்தது. மறுபுறம், ரஷ்யாவுக்கு எதிராக, பொருளாதார தடையானது, மேற்படி தினங்களில் (Sanctions) முற்றாகச் செயலிழந்த நிலையும் தோன்ற தொடங்கியிருந்தது. அதாவது, ஒருபக்கம் பொருளாதார தடையின் எடுபடாமை. மறுபக்கம் போர்முனையில் உக்ரைனும் நேட்டோவும், அடைந்த படுதோல்வி.






'மயிலியப்புலக்குளம் பற்றிய நினைப்பு ' மனதில் வட்ட அலைகளை ஏற்படுத்த , ஏக்க மூச்சுக்கள் புகையாய் எழ அந்த செந்தாமரைக் கிராமம் ...சித்திரமாக விரிகிறது . அவ்விடத்து வெற்றிக்கழகம் , சட்ட கோப்புகளை வைத்துக் கொண்டு பல விசயங்களை சாதித்து வருகிறது , கோவில் வளவுக்குள் கலை நிகழ்ச்சிக்கான மேடை ஒன்றை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக உப அரசாங்க முறையிலான சிரமதானம் நடைபெற்றது , அந்த குளத்தில் சிறிதளவு கனமண்ணை வெட்டிய போது , செவ்வேலும் வேல்முருகு , பரமானந்தம் ... அவன் என வகுப்பு தோழர்கள் பலருடன் கூடையில் மண்ணை ஒருத்தர் ,மாறி ஒருத்தரிடம் கொடுத்து குளத்து அணையில் கொட்டியது நினைவுக்கு வந்தது . அலுவலகர்கள் வந்து வெட்டியதை பார்வையிட்டு அதற்கான தேனீர்ச்செலவை கொடுப்பர் , அவ்வலுவலகத்தில் வேலை பார்க்கிற கிராமத்தைச் சேர்ந்த தவபாலண்ணரின் புத்தியில் உதித்த புத்திசாலித்தனம் . தேனீர் , வடை ...போன்றவற்றை ஊர்க்காரர்களே வீடுகளிலிருந்து கொண்டு வந்து வழங்கினர் . கிடைக்கிற பணத்துடன் வெளிநாட்டிலிருக்கிறவர்களும் அதற்கு நிதியளிக்க சம்மதித்திருந்தார்கள் . கூட்டு முயற்சி இல்லாமல் இப்படியான திட்டங்கள் வெற்றி பெற முடியாது . கிராமத்தின் தலையாய கால்பந்துக்குழுவும் அவர்களுடையது தான் .

ஏப்ரில் 26 சனிக்கிழமையன்று மறைந்தார் நாவலாசிரியர், திருப்பூரின் மூத்த எழுத்தாளர் தி. குழந்தைவேலு அவர்கள், அவருக்கு வயது 89. திருப்பூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். மின்சார தொழிலாளர்கள் சார்ந்த சிறந்த நாவல்களை உருவாக்கினார். புகழ்பெற்ற எழுத்தாளர் நீல பத்மநாபன் அவர்கள் எழுதிய ’மின் உலகம்” போல் பல பரிமாணங்கள் கொண்ட நாவல்கள் அவை. விளிம்புநிலைமக்களுடைய வாழ்க்கையை, சிரமங்களை பல சிறுகதைகளாக எழுதினார். சமீபத்தில் பல ஆண்டுகளாக ஒரு மாதிரி கோமோவில் இருந்தார. சுயநினைவு இல்லாமல் இருந்தார். அவருடைய படைப்புகள் எல்லாம் திரும்பத் திரும்ப மறுபடியும் மறுபிரசுரம் செய்யப்பட வேண்டும் என்று வாசகர்கள் விரும்பினார்கள்.

அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பு அறிவுலகத்தில் ஒரு பெரும் புரட்சியைச் செய்தது. கருத்துப் பரவலுக்கு நூல்கள் - பத்திரிகைகள் முதன்மைக் கருவிகளாயின. ஈழத்தி;ல் அமெரிக்க மிசனரிமார் முதன்முதலாக 1841 -ல் (07 - 01 - 1841) 'உதயதாரகை" (Morning Star) என்னும் பத்திரிகையை ஆரம்பித்தனர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இது வெளிவந்தது. இதன் ஆசிரியராகக் கரோல் விசுவநாதபிள்ளை விளங்கினார் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஈழத்தின் மூத்த கவிஞரும், பாப்புவா நியுகினி, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து, கடந்த 2024 ஆம் ஆண்டு சிட்னியில் மறைந்தவருமான அம்பி அவர்களின் செல்லப்பேத்தி அஷ்வினி சிவக்குமரன் அம்பிகைபாகர் , கடந்த மே 03 ஆம் திகதி நடந்த அவுஸ்திரேலியா நாடாளுமன்றத் தேர்தலில் சிட்னி Barton தொகுதியில் தொழில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்று தெரிவாகியுள்ளார். எமது மனமார்ந்த வாழ்த்துக்களை அஷ்வினி அம்பிகைபாகருக்கு தெரிவிக்கின்றோம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த புதிய வரவு புனை கதைகளாகும். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் இதன் வளர்ச்சி பல பரிணாமங்களைப் பெற்றது. சிறுகதை வளர்ச்சியால் கன்னித்தமிழ் மறுமலர்ச்சியடைந்தது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டில் எடுத்துக் கொண்ட முயற்சியால் சிறுகதைத் துறை மேலும் வளர்ச்சியடைந்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியமும் முக்கிய அடித்தளமாக அமைந்திருக்கின்றது. இப் புலம்பெயர் இலக்கியம் விசைகொள்ள பலவகைப்பட்ட ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட, பரந்துபட்ட வாசகர்களின் எழுத்தாளர் குரு அரவிந்தனின் பங்களிப்பு தனித்துவமானது. இவர் எழுதிய புல்லுக்கு இறைத்த நீர், நங்கூரி, பனிச்சறுக்கல், உறவுகள் தொடர்கதை ஆகிய நான்கு சிறுகதைகள் மட்டும் இவ் ஆய்வுக்காக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் நோக்கமானது மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளைத் திறனாய்வு செய்வதுடன் இவரது சமூகம் பற்றிய பிரக்ஞையையும் வெளிக்கொணர்வதாகும். பண்புநிலை அடிப்படையில் விபரண ஆய்வு முறையினூடாக இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாய்வுக் கட்டுரைக்குரிய தரவுகள் ஆசிரியருடைய சிறுகதைகள், நூல்கள், இணையத்தளங்கள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளன.











பாரதி வந்தார் பற்பல பாடினார்

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









