மலையக மக்களின் அடையாளமான காமன்கூத்தை, நூறுவது வருடம் அரங்கேற்றும் திருப்தியில் கினிகத்தேனை, சீத்தாலெட்சுமி தோட்டம் (பிளக்குவாட்டர்) - அருணாசலம் லெட்சுமணன் -
கட்டுரையாளர்: அருணாசலம் லெட்சுமணன், அமைப்பாளர், நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம், அதிபர்- ம.மா-கொத்- உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயம்.
தென்னிந்தியாவில் இருந்து வருகைத்தந்து இலங்கையின் பெருந்தோட்ட பொறிமுறையினை விருத்தி செய்வதில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்கேற்பு மிக முக்கியத்திற்குரியதாக விளங்குகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பூர்வீகத் தொடர்பு நிலைகள் குறித்த ஆதாரங்கள் பல உள்ளன. அவ் ஆதாரங்களை முன்வைப்பதில் இராமாயண சித்திரிப்புக்கள் குறித்த பார்வை மிகுந்த கவனத்தை பெறுகின்றன. இவ்வாறான தொடர்பு நிலைகள் பல இருந்த போதிலும் 1823ம் வருடத்தை பிரதானப்படுத்திய நகர்வு 'மலையக சமூக' உருவாக்கத்தில மிக முக்கிய கட்டமாக அமைகிறது. அப் பிரயத்தனத்தில் 'மலையகம் - 200' என்ற கோசத்தின் பின்னணியில் இடம்பெற்ற நிகழ்வுகள் அவதானத்திற்குரியதாக அமைந்தன. இவ் இருநூறு வருடகால அவதானிப்பில் மலையக மக்களின் வரவு, வாழ்வு, புலம்பெயர்வு, இருப்பின் ஆர்வம், புலம்பெயர்வின் நிர்ப்பந்தம், பிரயோக அரசியலின் பலம் பலவீனம், கலை பண்பாட்டு அம்சங்கள், கல்வி நிலைகள், பொருளாதார நகர்வுகள் போன்றவை பற்றிய அவதானங்களும் கவனத்தை பெறுகின்றன. மலையக மக்களின் இருப்பை தக்க வைப்பதிலும் அவர்களின் அடையாளத்தை பிரதிபலிப்பதிலும் கலைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அக் கலைகளுள் முத்தாய்ப்பாகவும், மலையகத்தின் முக்கூத்துக்களில் மூலமாகவும் அமையும் காமன்கூத்து மலையக மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய வகிபங்கை பெறுகிறது எனலாம்.
இந்திய வம்சாவளி தமிழர்களின் புலம்பெயர்வு இலங்கையின் வழிபாட்டு மரபிலும் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. பிரித்தானிய காலனித்துவ பொறிமுறையில் இலங்கையில் பெருந்தோட்டத்துறையை விருத்தி செய்யும் முனைப்பில் சொல்லெனா துயரங்களை அனுபவித்தவர்களாக இவர்கள் திகழ்கிறார்கள். இலங்கையில் 1823ம் வருடத்திற்கு முன்னர் வர்த்தக நோக்கம் கருதிய புலம்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான புலம்பெயர்வுகள் இலங்கையில் பூர்வீகத்தில் இருந்த முருக வழிபாட்டை மேலும் வலுப்படுத்தும் கைங்கரியத்தை ஆற்றியுள்ளது. மலையகம் உட்பட நாடுமுழுவதும் செட்டிமார்களின் வர்த்தக நடவடிக்கை நோக்கம் கருதிய வரவுகளால் சத்திரங்கள் உருவெடுத்தன. பின்னர் அச் சத்திரங்கள் முருகன் ஆலயங்களாக உருவெடுத்தன. அவ்வாறான ஆலயங்களுள் நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயமும் குறிப்பிடத்தக்கதாகும்.


வ.ந.கிரிதரனின் பாடல் : "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
- எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் மறைந்தார் என்னும் தகவலை அறிந்தோம், துயர் அடைந்தோம், அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரிலும் பதிவுகளும் பங்கு கொள்கின்றது. அவர் நினைவாக , கலைம், இலக்கியத்திறனாய்வாளர் மு.நித்தியானந்தன் மாத்தளை வடிவேலனின் சிறுகதைத்தொகுப்பு பற்றி எழுதிப் பதிவுகளில் வெளியான கட்டுரையை மீள் பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
நீர் வார்த்த அய்யனார்! - சுருளி காந்திதுரை (மதுரை) -
திரு முருகபூபதி அவர்கள் சமூகத்திற்கு செய்த பங்களிப்புகளை மூன்று முக்கியப் பிரிவுகளாகக் கூறலாம். எழுத்தாளர், சமூகப் பணியாளர், மற்றும் சமூகப் பதிவாளர். மெல்போர்ன் தமிழ்ச் சமூகத்தில் இம்மூன்று துறைகளிலும் ஒரே நேரத்தில் பணியாற்றியவர்களை காண்பது மிகவும் அரிது. முதலில் நான் பேச விரும்புவது எழுத்தாளர் என்ற அவருடைய பங்களிப்பைப் பற்றியே.
ஊழின்வலி பெறுஒரே உயிரினம் யான் மட்டுமே
முகத்தில்
தாகூரின் செல்வாக்கில் இருந்து, கழன்ற சி.வி.வேலுப்பிள்ளையின், நெடுங்கவிதையின் மூன்றாம் பகுதி இங்கே காணக்கிட்டுகின்றது. தமது காலத்தைய, அழுத்தமான மக்கள் குரலை வேலுப்பிள்ளை ஒலித்ததை போன்று, அவருக்கு பின்னால் வந்த எந்த ஒரு கவிஞனும் மலையக சமூகம் பொறுத்து ஒலித்தது கிடையாது எனலாம். ஆழ்ந்த சமூக பற்றுடன் இவரது குரல் ஒலித்தமைக்கான விலையை இவர் தம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொடுத்திருக்க கூடும். இவரது அக்காலத்தைய எழுத்துக்கள், அக்காலத்தைய மலையக அரசியல் சார்ந்த சிந்தனைக்கு மாத்திரமல்ல, பொதுவில் உழைக்கும் மக்களின் சிந்தனைக்குள்ளும் வலை விரிக்க கூடியதே. இனி மீண்டும் கவிதைக்குள் செல்லலாம்:



“ராகவியை நினைச்சா … அவளின்ர சிரிப்புத்தான் முதலில கண்ணுக்குத் தெரியும்,” ராகவியின் பாடசாலைச் சினேகிதி மாயா அவளின் அந்தியேட்டி நிகழ்வில் கண்ணீர்மல்க உரையாற்றிக் கொண்டிருந்தாள்.
மனித சமூகம் வளர்ச்சியின் பல அடுக்குகளை கடந்து வந்துள்ளது. அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், உலகமயமாக்கல் போன்ற பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும், மனித மனப்பாங்கில் பதிந்துள்ள சில பழமையான கட்டமைப்புகள் இன்னும் முற்றிலும் கலைந்து போகவில்லை. அவற்றுள் முக்கியமானது ஆணாதிக்கம். ஆணுக்கு மேலாதிக்கமும் பெண்ணுக்கு கீழாதிக்கமும் வழங்கும் இந்த சமூக அமைப்பு, காலத்தின் ஓட்டத்தில் பல வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை ஒழிக்க ஒரே ஒரு தீர்வு போதாது; பல்வேறு தளங்களில் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம். பெண்களுக்கு சமமான
பகுதி 2
இள வயதில் வாசிப்பை நெறிப்படுத்த மூத்தவர்கள் ஓரிருவருடைய உதவி எனக்கு இருந்திருந்தாலும், பின்னால் இலக்கியரீதியான வழிகாட்டலுக்கு யாரும் இருந்திருக்கவில்லை என்பது துர்பாக்கியமாகும். அந்த வெளியைக் கடந்தேனென்றாலும், அது சுலபத்தில் கைகூடியிருக்கவில்லை. பிழைவிட்டு திருந்தி, பிழைவிட்டு திருந்தி… ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கவேண்டி இருந்தது. காலமே, ஒரு சக்தியாகயிருந்து அந்த வெறுமையை நிவர்த்தித்தது என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது.
சர்வதேச மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் முதற்கண் இவ்வேளை நினைவுகூர்ந்து தலைசாய்த்து வணங்குகின்றேன்.

[எழுத்தாளர் மா.சித்திவினாயகம் 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க'த்தில் 'கனடாவில் நவீனத் தமிழ்க் கவிதை' பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்]
கனேடியப் பனி நிலத்தின்இந்தப் பெருங் குளிரிலும், நம் தமிழ்க் கவிதைப் பூந்தோட்டம் சீரோடு செழிக்கிறது. அது கொடிவிட்டுத் தழைத்துச் செழிக்கின்ற புனிதத்தைப் போற்றுகிற, இந்த தமிழ்க்கவிதை உரையாடலுக்கு வருகை தந்திருக்கும் அறிஞர்களே, கவிஞர்களே அன்பு உறவுகளே உங்கள் கரங்களை தமிழன்போடு இறுகப் பற்றுகின்றேன்.
கட்டுரையாளர் - முனைவர் கு.வளர்மதி, உதவிப்பேராசிரியர், இளங்கலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
எளிமையின் உருவமாக
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் முன்னாள் செயலாளருமான இரா. நல்லகண்ணு அவர்கள் பெப்ருவரி 25, 2026 அன்று, தனது நூறாவது வயதில் மறைந்தார். தனது பதினெட்டாவது வயதிலிரிந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டவர். இந்தியாவில் ஆங்கிலேயருக்கெதிராகப் போராடிய சுதந்திர வீரர். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது நெல்லை சதி வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுச் சிறை வாசம் அனுபவித்தவர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீங்கியபோது விடுதலை செய்யப்பட்டார். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர்.
முன்னுரை
'காந்தளகம்' மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களை இ துவரை பதிப்பாளராக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் சபையில் பணி புரிந்தவராக, எழுத்தாளராக, சூழலியலில் ஆர்வமுள்ளவராக , அண்மைக்காலமாக ஹிந்துத்துவா நோக்கில் செயற்படுவராக அறிந்திருக்கின்றேன். அண்மையில் இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்துக்காகக் குரல் கொடுத்துவரும் அருண் சித்தார்த் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்த காணொளியொன்றில் தென்பட்ட மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் நேர்காணலொன்று என் கவனத்தை ஈர்த்தது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









