ரொறன்ரோ தமிழ்ச்சங்க மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்: 'தமிழ்க் கவிதை அன்றும் இன்றும்"




இறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை நினைவுகூர்ந்து ‘தமிழர் தேசியப்பெருந்துயரை உலகுக்கு பறைசாற்றுவதற்காக மே 18 புதன்கிழமை அன்று வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுதொடர்பில் முல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டங்களின் வர்த்தக சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறீலங்கா அரசின் மாபெரும் தமிழினப்படுகொலைக்;கு நேரடியாக இரையாக்கப்பட்ட இவ்விரு மாவட்டங்களின் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற உணர்வு ரீதியாகவும்,
வன்முறைகள் - படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த எமது உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை எமது தேசியக்கடமையாகக்கொண்டும்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர், முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையத்தினர், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - Tamil Homeland) ஆகியன எம்மிடம் கடிதம் மூலமும் - நேரில் சந்தித்தும் விடுத்த தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலுக்கு உளத்தூய்மையுடன் ஆதரவு தெரிவித்தும், மே 18 புதன்கிழமை அன்று முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும்.

'உயில் மற்றும் சித்தம் அழகியார்' ஏற்பாட்டில் வ.ந.கிரிதரன் எழுதிய “குடிவரவாளன்” என்ற நாவலின் அறிமுக நிகழ்வு 15.05.2016 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. நிகழ்வுக்கு குப்பிழான் ஐ.சண்முகன் தலைமை வகித்தார். அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும் நூல் தொடர்பான உரையை வேல் நந்தகுமார், ஜி.ரி கேதாரநாதன் ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையை சித்திராதரன் நிகழ்த்தினார். கடும்மழையின் காரணமாக நிகழ்ச்சிக்கு வருவதாக வாக்களித்திருந்த பல நண்பர்கள் வரமுடியாதநிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் நன்றிக்குரியவர்கள். இந்நிகழ்வின் மூலம் பெறப்பட்ட பணம், விரைவில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலரின் கல்வித்தேவைக்கு வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விபரங்களும் பின்னர் பதிவேற்றப்படும்.
நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்களைக் கீழுள்ள இணைப்பில் அறிந்துகொள்ளலாம்:
https://www.facebook.com/skuneswaran/media_set?set=a.1110449548977752.1073741906.100000381515714&type=3&pnref=story
படங்களும் பதிவும் : சு.குணேஸ்வரன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

- இன்று , மே 15, 2016, பருத்தித்துறை ஞானாலயத்தில் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலின் அறிமுக நிகழ்வும், கலந்துரையாடலும் நடைபெற்றது. அதனை மருத்துவர் திரு. எம்.கே.முருகானந்தன் தனது வலைப்பதிவில் பதிவு செய்திருந்தார் ( http://suvaithacinema.blogspot.ca/?view=classic ). அதனைப் 'பதிவுகள்' வாசகர்களுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். - பதிவுகள் -
பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் வ.ந.கிரிதரன் அவர்களது புதிய நூலான குடிவரவாளன் நாவலுக்கான அறிமுக நிகழ்வு இன்று ஞாயிறு மாலை (15.05.2016) பருத்தித்துறை ஞானாலயத்தில் நடைபெற்றது. நீண்ட கடும் வெக்கையின் பின்னரான மழை காரணமாக 3.30 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய கூட்டம் சற்று தாமதமாகவே ஆரம்பித்தது.
குப்பிளான் சண்முகம் அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மௌன அஞ்சலியின் பின் கூட்டம் ஆரம்பமானபோது திரு.சு.குணேஸ்வரன் நூல் அறிமுகவுரையை நிகழ்த்தினார்.

தகவல்: த.சிவபாலு
இலங்கையில் வ.ந.கிரிதரனின், தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'குடிவரவாளன்' நாவலின் வெளியீட்டு நிகழ்வு பற்றி...
நண்பர்கள் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம். எதிர்வரும் 15.05.2016 , ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு, ஞானாலயம், பருத்தித்துறை என்னும் முகவரியில் என்னுடைய நாவலான 'குடிவரவாளன்' நாவலின் வெளியீடும், கருத்தரங்கும் நடைபெறவுள்ளன.
எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில், எழுத்தாளர் அறிமுகவுரையினை சு.குணேஸ்வரனும், அவரைத்தொடர்ந்து நூல் மதிப்பீட்டு உரைகளை திரு.ஜி.ரி. கேதாரநாதன் , வேல். நந்தகுமார் ஆகியோரும் ஆற்றுவார்கள். நிகழ்வின் முடிவில் நன்றியுரையினை சித்திராதரன் ஆற்றுவார்.
அதற்கான அழைப்பிதழினை இத்துடன் இணைத்துள்ளேன். கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரினதும் ஆக்கபூர்வமான பங்களிப்பில் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்ததற்காக 'உயில் & சித்தம்' குழுவினருக்கும், எழுத்தாளர் சு.குணேஸ்வரனுக்கும், மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் எழுத்தாளர்கள் குப்பிளான் ஐ.சண்முகன், ஜி.ரி.கேதாரிநாதன், வேல்.நந்தகுமார் மற்றும் சித்திராதரன் ஆகியோருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
இந்நிகழ்வில் நூல் விற்பனையில் கிடைக்கப்பெறும் பணம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விச்செலவுக்கு வழங்கப்படும்.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி!
'குடிவரவாளன்' நாவலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் இலங்கையிலும் விற்பனைக்குள்ளன. நூலின் பிரதிகளை வாங்க விரும்புபவர்கள் எழுத்தாளர் குணேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அவருடைய அலைபேசி இலக்கம்: +94776120049
கனடா நண்பர்கள் கவனத்துக்கு: இந்நாவலை வாங்க விரும்பும் நண்பர்கள் முகநூலின் தகவல் பெட்டி மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். எனது மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தமிழகம் மற்றும் ஏனைய நாடுகளில் வசிக்கும் , நூலினை வாங்க விரும்பும் நண்பர்கள் ஓவியா பதிப்பகத்தாருடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் வருமாறு:
வதிலைப்பிரபா: Oviya Pathippagam, 17-16-5A, K.K.Nagar, Batlagundua - 642 202 Tamil Nadu, India. Phone: 04543 - 26 26 86 | Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52. email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தகவல்: த.சிவபாலு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் பலர் சர்வதேசரீதியாகப் கல்வி சார்ந்த பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வருவது யாவரும் அறிந்ததே. அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையிலும் சர்வதேசரீதியாகக் கவனம் பெற அவர்கள் தொடங்கியிருப்பதை வரும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன.
சிங்கப்பூரில் மே 4 தொடக்கம் மே 8 வரை நடைபெறவுள்ள 'ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றுவதற்கு யாழ்ப்பாண உதவிக்கல்விப்பணிப்பாளர் சண் தயாளன் தகுதி பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தயாளன் யாழ் இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல் கனடாவில் வசிக்கும் யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவரான ரூபானந்தசிவம் சிவனடியான் அவர்கள் சர்வதேசக்கிரிக்கட் சபையின் அமெரிக்கத்துணைக்கண்டத்துக்குரிய நடுவர்கள் குழுவில் அங்கம் வகிப்பது பெருமைக்குரியது. இவரது விளையாட்டுத்துறைச் சாதனைகளுக்காக 30.04.2016 டொராண்டோ, கனடாவில் நடைபெற்ற யாழ் இந்துக்கல்லூரியின் இராப்போசன நிகழ்வில் கெளரவிக்கப்பட்டபோதுதான் இவரது இந்தச்சாதனை பலருக்குத்தெரிய வந்தது.
விளையாட்டுத்துறையில் தம் பங்களிப்பினைச்சர்வதேசரீதியாக வழங்கி தொடர்ந்தும் சாதிக்கும் சண் தயாளனையும், ரூபானந்தசிவம் சிவனடியான் இருவரையும் வாழ்த்துவோம்!

‘நாட்டியத்திற்குரிய உடல்வாகும் நளினமும் நிரம்பப்பெற்ற நாட்டியக் கலாஜோதி பிரதிஷ்ரா ஞானரட்னசிங்கம் ஓம்கார வந்தனம்; முதற்கொண்டு அலாரிப்பு, ஜதீஸ்வரம், ஜானகி கௌத்வம், வர்ணம், ஸ்ரீ ஆண்டாள், சிவ ஸ்துதி, அஷ்தவித நாயகிகள், தில்லானா போன்ற அத்தனை உருப்படிகளையும் ஈடுபாட்டுடன் தனக்குள் இருக்கும் ஜீவனின் வெளிப்பாடாக கொண்டுவந்தமை பாராட்டுக்குரிய விடயம். ஜானகி கௌத்வம் போன்ற வித்தியாசமான உருப்படிகளை, பல நாட்டிய நூல்களை எழுதி வெளியிட்டவரும், பிரதிஷ்ராவின் குருவுமான நாட்டிய விசாரத் ஜெயந்தி யோகராஜாவே உருவாக்கி, வடிவமைத்து வித்தியாசமான முறையில் நர்த்தகி பிரதிஷ்ரா ஆடலால் பார்வையாளர்களின் மனதைக் கொள்ளைகொண்ட பாங்கு குருவின் நாட்டிய ஆளுமையை வெளிக்காட்டி நிற்கின்றது’ என சிறப்பு விருந்தினராக சென்னையில் இருந்து வருகை தந்திருந்த நாட்டிய செல்வம் ஸ்ரீ சண்முக சுந்தரம் அவர்கள் தனது சிறப்புரையில் தெரிவித்திருந்தார். ‘சென்னை ஸ்ரீமதி ரோசினி; கணேஷின் பாடல், ஸ்ரீ. எம். பாலச்சந்தரரின் மிருதங்கம், சென்னை ஸ்ரீ முடிகொண்டான ரமேஷ் அவர்களின் வீணை இசை, ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதனின் புல்லாங்குழல் இசை, ஸ்ரீ பாலு ரகுராமனின் வயலின் இசை, ஸ்ரீ தணிகவேல் அண்ணாமலையின் தவில் வாத்தியம், ஸ்ரீ சம்பத்குமார் பாலசுப்ரமணியத்தின் நாதஸ்வர இசையென பிரபல்யமான பக்கவாத்தியங்களின் கூட்டு முயற்சியுடன் பிரதிஷ்ராவின் நாட்டியம் பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தமை மிகச்சிறப்பானது’ என மேலும் அவர் தெரிவித்தார்.
ETA Tamil Competition 2016 – Information Pack
அன்பான மாணவர்களே / பெற்றோர்களே, ஈழத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற முத்தமிழ் விழாவை ஒட்டிய பேச்சு, இசைப் போட்டிகள் எதிர் வரும் ஆனி மாதம் 4ம் திகதி சனிக்கிழமை Wesley College, 620, High Street Road, Glen Waverley, 3150 ல் நடைபெற உள்ளது. 18 வயதிற்குட்பட்ட தமிழ்ச் சிறார்களும் இளைஞர்களும் ஏழு வயதுப் பிரிவுகளில் அமைந்த பேச்சு இசை போட்டிகளில் பங்குபற்றலாம். விண்ணப்பங்களை http://competition.etatamilschool.org/#/home அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். எனும் மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். விண்ணப்பமுடிவுதிகதி: 8th May 2016. போட்டி குறித்த மேலதிக விபரங்க ளிற்கு இணைப்பைப் பார்க்கவும். இப்போட்டி குறித்த செய்தியை, உங்கள் நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
நன்றி
ஈழத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் பாடசாலைகளின் கூட்டமைப்பு Email:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
Janaa (Jananthan) இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அண்மையில் இலங்கையில் அடுத்தடுத்து மறைந்தவர்களான படைப்பாளி செங்கை ஆழியான், நூலியல் பதிவு ஆவணக்காப்பாளர் புன்னியாமீன், ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கே. விஜயன் ஆகியோரின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் நிகழ்ச்சியும் இலக்கியச்சந்திப்பும் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 14 ஆம் (14-05-2015 ) திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (1, Karobran Drive - Vermont South, Vic - 3133) மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒழுங்குசெய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து மெல்பனுக்கு வருகை தரும் மூத்த படைப்பாளிகள் ஞானம் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரன், யாழ்ப்பாணம் சாந்திகம் அமைப்பின் திட்ட இணைப்பாளர் திரு. இர. சந்திரசேகரன், கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழுச்செயலாளர் திரு. இரகுபதி பாலஸ்ரீதரன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜா தலைமையில் இரண்டு அமர்வுகளில் இந்நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. முதல் அமர்வில் இடம்பெறும் நினைவரங்கில் அமரர் செங்கை ஆழியான் நினைவுரையை எழுத்தாளர் ஜே,கே. ஜெயக்குமாரன் நிகழ்த்துவார். புன்னியாமீன் தொடர்பான நினைவுரையை யாழ்ப்பாணம் சாந்திகம் திட்ட இணைப்பாளர் திரு. இர. சந்திரசேகரனும், கே. விஜயன் பற்றிய நினைவுரையை கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழுச்செயலாளர் திரு. இரகுபதி பாலஸ்ரீதரனும் நிகழ்த்துவர். இதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வில்
" கடந்த கால்நூற்றாண்டுகளில் - ஈழத் தமிழ் இலக்கிய தடங்கள் - இனிவரும் மாற்றங்கள் " என்னும் தலைப்பில் மூத்த படைப்பாளியும் ஞானம் இதழின் ஆசிரியருமான டொக்டர் தி. ஞானசேகரன் உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும்.
கலை இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அண்மையில் ரொறன்ரோ, கனடாவில் உள்ள பிரபல இசைக்கல்லூரியான பாரதி கலைக்கோயிலின் வருடாந்த இசைத் திறன் காண் போட்டி நடைபெற்றது. தமிழ் மொழி, தமிழ் இசை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் பேணிக்காப்பதற்காக சிறந்த நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த கலைக்கல்லூரி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணவர்களைக் கலைத்துறையில் இந்தப் புலம்பெயர்ந்த மண்ணில் உருவாக்கியிருக்கின்றது. மாலை நான்கு மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களும் வைத்திய கலாநிதி செந்தில்நாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் போட்டியில் சுமார் 250 மாணவ, மாணவிகள் பங்கு பற்றித் தமது திறமையை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது உரையில்,
‘புலம் பெயர்ந்த இந்த மண்ணில் கடந்த 25 வருடங்களாக நடக்கும் நிகழ்ச்சிகளை அவதானித்து வருபவன் என்ற முறையில், இந்த மண்ணில் எங்கள் தமிழ் மொழியையும், பண்பாடு கலாச்சாரத்தையும் பேணிக்காப்பதில் பல மன்றங்களும், கல்லூரிகளும் முன்னின்று பாடுபடுகின்றன என்பதையிட்டுப் பெருமைப்படுகின்றேன். அந்த வகையில் பவதாரணியின் பாரதி கலைக்கோயில் கனடிய மண்ணில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இசை என்பது வெறும் இசையல்ல, அது மனதில் ஆரோக்கியத்தை வளர்க்கின்றது. இங்கே இசைபயிலும் பிள்ளைகள் கல்வியிலும் சிறந்தவர்களாக மிளிர்வதை அவதானிக்க முடிகின்றது. தவறான வழியில் செல்லாமல் தங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் இசை, கலை, பண்பாடு, கலாச்சாரத்தைக் கற்பிக்கும் பெற்றோர்களாகிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள். எங்கள் தமிழ் மொழி இந்த மண்ணில் அழிந்து போகாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மட்டுமல்ல, அடுத்த தலைமுறையிடம் விட்டுச் செல்ல வேண்டிய கடமையும் பெற்றோர்களாகிய உங்கள் கைகளிலேதான் இருக்கின்றது. சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்த மண்ணில் கலையை மட்டுமல்ல மொழியையும் காப்பாற்ற வேண்டும். மொழி அழிந்தால் நம் இனம் அழிந்து விடும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். எமது இலட்சியங்களை நிறைவேற்ற முடிந்தவரை ஒன்றுபட்டு உழைப்போம்.’
காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு கால இழுத்தடிப்புகள் இன்றி ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, மூதூர் பிரதேச செயலகம் முன்பாக நாளை (11.04.2016) காலை 10.00 மணிக்கு கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
மூதூர் பிரதேச பிரஜைகள் குழுவின் தலைவரும், மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தலைவருமாகிய சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கவனவீர்ப்புப் போராட்டத்தில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் அவர்களது உறவினர்களும், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - (FSHKFDR - Tamil Homeland) தலைவி திருமதி ஜெ.நாகேந்திரன் (ஆஷா) தெரிவித்தார்.
நிகழ்ச்சிநிரல்
பிரதமபேச்சாளர்உரை: திரு.கந்தசாமிகங்காதரன்
சிறப்புபேச்சாளர்கள்உரை: “கனடாவில்தமிழ்த்திரைப்படத்தயாரிப்பு: பட்டதும்அறிந்ததும்" - திரு.எஸ்.ஶ்ரீமுருகன் |திரைப்படஇயக்குனராக என்அனுபவங்கள்" - திரு. லெனின்எம்.சிவம்" } "விமர்சகர் பார்வையில் கனடியத்தமிழ்த்திரை" –திரு .ரதன்
ஐயந்தெளிதல்அரங்கு
நாள்: 30-04-2016 | நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை | இடம்: ரொறன்ரோதமிழ்ச்சங்கம் | 3A, 5637, Finch Avenue East, Scarborough, M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில்- 416-822-6316
அனைவரையும்அன்புடன்அழைக்கிறோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், புதிதாக தொடங்கப்படவிருக்கும் ஒரு புத்தகக் கடை, பதிப்பக வேலைகள் என தமிழ் ஸ்டுடியோவில் மட்டும் நான்கிற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இருக்கிறது. நாட்டில் வேலை இல்லா பிரச்சனை தீர்ந்து பல வருடகள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். நானும் விதை இயற்கை அங்காடிக்கு நல்லதொரு பணியாளை இரண்டு வருடங்களாக தேடிக்கொண்டேதான் இருக்கிறேன். எத்தனையோ வேலைவாய்ப்புகள் இருந்தும், அதற்குரிய ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தாலும், அந்த வேலையை செய்வதற்கான மனித சக்திதான் இப்போது தமிழ்நாட்டில் இல்லை. நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் உள்ளிட்ட நான்கு பணிகளுக்கும் உடனடியாக பணியாளர்கள் தேவை. வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். தமிழ் ஸ்டுடியோ ஒரு நிறுவனம் அல்ல, இயக்கம். எனவே உங்களுக்கு உரிய அங்கீகாரமும் நிச்சயம் கிடைக்கும். எல்லாவற்றையும் தாண்டி, சமூக நலனில் அக்கறை கொண்ட ஒரு இயக்கத்தின் வளர்ச்சியில் உங்கள் பங்கும் இருக்க வேண்டியது அவசியம்.
தமிழ் ஸ்டுடியோவோடு சேர்ந்து பணிபுரிய விருப்பமுள்ள நண்பர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தகவல்: பாஸ்கரன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கண்காட்சி, சிறுவர் அரங்கு, கருத்தரங்கு, விமர்சன அரங்கு, கலையரங்கு
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்முறை தமிழ் எழுத்தாளர் விழாவை குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் ஒழுங்குசெய்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய மாநிலத்தலைநகரங்களில் தமிழ் எழுத்தாளர் விழா வருடம்தோறும் நடைபெற்று வந்துள்ளது.
இந்த ஆண்டு முதல் தடவையாக குவின்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழ் எழுத்தாளர் விழா நடைபெற ஏற்பாடாகியுள்ளது. நடைபெறும் இடம்: Auditorium, Helensvale Library, Helensvale Plaza (Corner of Lindfield Road And Sir John overall Drive) Helensvale 4212, Gold coast, QLD
காலம்: 27-08-2016 நேரம்: மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில்
மேலதிக விபரங்களுக்கு: பேராசிரியர் ஆசி. கந்தராஜா (02) 9838 4378
திருமதி வாசுகி சித்திரசேனன்: 0448 958 194
திரு. எம். முகுந்தராஜ் 0423 730 122
திரு. முருகபூபதி: 0416 625 766
தகவல்: முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
June 11, 2016 இல் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ்த் திரைப்;பட விழா – படைப்புகளுக்கான கோரல்
தாய் வீடு பத்திரிகையும் சுயாதீன கலை திரைப்பட மையமும் கனடாவின் ரொறன்ரோ நகரில், நடத்தும் சர்வதேச குறுந் திரைப்பட விழாவில் பங்குபற்றுவதற்கான குறுந்திரைப்படங்கள் வரவேற்கப்படுகின்;றன.
சிறந்த குழந்தை நட்சத்திரம், நடிகர், நடிகைக்கான விருதுகள்
சிறந்த கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்குநருக்கான விருதுகள்
சிறந்த குறும்படம், சமூக விழிப்புணர்வுக்கான சிறந்த குறும்படம்,
சிறந்த குறும்படத்துக்கான விமர்சகர் விருது என்பவற்றோடு
சான்றிதழும் C$200 - 1000 வரையிலான பணப்பரிசுகளும் வழங்கப்படும்.
படைப்புகள் ஆங்கிலத்தில் துணைத் தலைப்புகளைக் கொண்டிருத்தல்; விரும்பத்தக்கது.
• படைப்புகள் ஏப்பிரல் 30, 2016க்கு முன்னர் கிடைக்;கக்;கூடியதாக அனுப்பிவைக்கப்;படவேண்;டும்.
• படைப்புகள்; 20 நிமிடங்களுக்குட்பட்டதாக இருத்தல் வேண்டு;ம்.
• படைப்புகளின் மொழி தமிழாக இருத்;தல் வேண்;டும்.
• படைப்புகளுடன் அதில் பங்குபற்றிய தொழினுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் பட்;டியல் இணைக்கப்படல் வேண்;டும்.
• படைப்புகளின் தயாரிப்பாளரின் கையொப்;பத்;துடன் கூடிய கடிதம் இணைக்கப்படல் வேண்டு;ம்.
• தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
• படைப்புகள் அனுப்பப்படவேண்டிய முகவரி:
பரிசு பெற்றோர்:
1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
4. கவிதை: எல்லாளக்காவியம்- இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5. சிறுவர் நூல் : சொட்டுத்தண்ணீர் – இலங்கை ஓ.கெ.குணநாதன்
6. மொழிபெயர்ப்பு: விஜயலட்சுமி சுந்தர்ராஜன் – இந்தி மொழிபெயர்ப்புகள்
அயலகப்பரிசுகள் பெற்றப் படைப்பாளிகள்:
1.ஜெயந்தி சங்கர் ( ஜெயந்தி சங்கர் நாவல்கள்)
2.மாதங்கி (சிறுகதைத் தொகுப்பு )
3.சிங்கை டாக்டர் லட்சுமி ( ஆய்வு நூல் )
4. நடேசன் ( சிறுகதைத் தொகுப்பு )
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
உலகத் தொல்காப்பிய மன்றம் - கனடாக் கிளை. International Association for Tolkappiyam - Canada Branch 4 - 2800 Eglinton Avenue East, Toronto, ON. M1J 2C8
அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலகின் பல நாடுகளிலும் அமைக்கப்பெற்று வருகின்றன. கனடாவில் அமைக்கப்ட்டுள்ள உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இவ்வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இரண்டாவது கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்:
நாள்: சனிக்கிழமைää ஏப்ரல் 16, 2016
நேரம்: 3:00 மணி முதல் – 5:00 மணி வரை
இடம்: Unit 3A - 5637, Finch Avenue East, Scarborough, M1B - 5K9 (Finch & Taps court- (Toronto Tamil Sangam, Near to Dr. Lambotharan’s Clinic )
கருத்தரங்கில் உரை நிகழ்துபவர்;: திரு. பொன்னையா விகேகானந்தன்; அவர்கள் அண்ணாமலை கனடா வளாகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் - ரொறன்ரோ கல்விச் சபை அனைத்துலக மொழிகள் கல்வித் திட்ட அலுவலர்
பொருள்: “தொல்காப்பியத்தி;ல் களவியலும் கற்பியலும்; - ஒரு நோக்கு”
தொடர்ந்து கேள்வி நேரமும் - கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.
நிகழ்வு சரியாக பி.ப. 3: 00 மணிக்குத் தொடங்கும் என்பதை அறியத்தருகின்றோம்.